Thursday, June 21, 2007
நீங்கள் கேட்டவை 10
இன்றைய நீங்கள் கேட்டவை 10 பதிவில் பல நேயர்களின் விருப்பத்தேர்வோடு மலர்கின்றது.
பாடல்களைக் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாது உங்கள் விருப்பப்பாடல்களையும் நீங்கள் அறியத் தந்தால் அவை எதிர்வரும் காலங்களில் இடம்பெறும்.
இன்றைய நீங்கள் கேட்டவை 10 பகுதியில் பாடல்களைக் கேட்ட நேயர்களும் பாடல்களும் இதோ:
1. பொன்ஸ்ஸின் விருப்பமாக "தெய்வத்தின் தெய்வம்" திரைப்படத்தில் இருந்து பி.சுசீலா பாடிய "நீ இல்லாத உலகத்திலே என்ற பாடல். பாடலுக்கான இசை: ஜி.ராமநாதன்
2. வல்லி சிம்ஹனின் விருப்பமாக "வசந்த முல்லைப் போலே வந்து" என்ற பாடல் "சாரங்கதாரா" திரைக்காக டி.எம்.செளந்தரராஜன் பாடுகின்றார். பாடல் இசை: ஜி.ராமநாதன்
3. இந்து மகேஷின் விருப்பமாக கே.வி.மகாதேவன் இசையில் "நாலு வேலி நிலம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "ஊரார் உறங்கையிலே" என்ற பாடல், திருச்சி லோகநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் ஒலிக்கின்றது.
4. நக்கீரனின் விருப்பமாக "தென்றல் காற்றே" என்ற பாடல் மனோ, ஜானகி பாட, இளையராஜாவின் இசையில் "கும்பக்கரைத் தங்கையா" திரைக்காக இடம்பெறுகின்றது.
5. மழை ஷ்ரேயாவின் விருப்பத் தேர்வில் "கற்பூர முல்லை ஒன்று" என்ற பாடலை சித்ரா, இளையராஜாவின் இசையில் "கற்பூரமுல்லை" திரைப்படத்திற்காகப் பாடுகின்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
தலைப்பை பார்த்து இந்த பாடலை கேட்கலாம் என்று பார்த்தால்,முதல் பாட்டே பொன்ஸ் கேட்டிருந்த பாட்டு தான்.
நினைத்தவுடனே கிடைத்துவிட்டது.
நன்றி- இருவருக்கும்.
என் மகனுக்காக
சீர்காழிகாரரின்
"உலகம் சம நிலை பெற வேண்டும்".
//வடுவூர் குமார் said...
ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
தலைப்பை பார்த்து இந்த பாடலை கேட்கலாம் என்று பார்த்தால்,முதல் பாட்டே பொன்ஸ் கேட்டிருந்த பாட்டு தான்.
நினைத்தவுடனே கிடைத்துவிட்டது.//
இப்படியான பல ஆச்சரியங்களை அள்ளி வழங்கும் ஒரே தளம் உங்கள் றேடியோஸ்பதி (சும்மா பீலா தான் கண்டுக்காதீங்க ;-))
வடுவூர்க்காரரே,
நீங்க கேட்ட பாட்டு அகஸ்தியரில் இருக்கு, என் மகனில் இல்லை.
அல்லது உங்க மகனுக்காகக் கேட்டீங்களா ;-)
பாட்டு அடுத்த வாரம் வரும் ரும் ம்..
பத்தாவது நீங்கள் கேட்டவை வழமையான பாணியில்,மழைக்கால சன்னலோர இருக்கையில் பயணித்த சுகத்தை தந்தது.
நன்றி!
வாங்க வெயிலான்
உங்களுக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் பதிவளித்தது எனக்கும் மகிழ்ச்சியே, பாடலும் கேட்கலாமே?
songs are very nice. thank you. (fonts ille...athaan peter)
வாங்க குட்டி, மிக்க நன்றி
//fonts ille...athaan peter//
பீட்டரு அதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ;-)
நன்றி பிரபா.
இது போலப் பழைய பாடல்கள்
மீண்டும் கேட்கக் கொடுத்ததற்கு நன்றி.
புருசன் வீட்டில் வாழப்போற பொண்ணே பாட்டுக் கூட நல்லா இருக்கும்.வடிவுக்கு வளைகாப்புப் படம்னு நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் பிரபா.
அருமையான பாடல்கள். கேட்டவர்கள் தேர்ந்தெடுத்துக் கேட்டிருக்கின்றார்கள்.
சரி. என் பங்குக்குக் கேட்கிறேன். :)
1. இது மாலை நேரத்து மயக்கம் - தரிசனம் என்ற படத்திலிருந்து (முடிந்தால் மெயிலில் அனுப்பி வைக்கவும்.)
2. கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் - சிரித்து வாழ வேண்டும் படத்திலிருந்து
வணக்கம் வல்லிசிம்ஹன்
தொடர்ந்து இப்படி நல்ல பழையபாட்டுக்கள் கேளுங்க கட்டாயம் வரும், நன்றி
வணக்கம் ராகவன்
அருமையான தெரிவுகளைத் தந்திருக்கின்றீகள், கட்டாயம் அடுத்த பதிவில் வரும்.
1)செவ்வந்திப்பூக்களில் சிறுவீடு - மெல்லப்பேசுங்கள் என்ற படத்தில் இருந்து
2)அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா- நண்டு என்ற படத்தில் இருந்து
3)அடியேய் மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை
வணக்கம் சுதர்சன் கோபால்
உங்கள் தெரிவுகள் அனைத்தும் பொக்கிஷங்கள், இவை என்னிடம் உயர்தர ஒலித்தரத்தில் இருக்கின்றன. குறிப்பா அள்ளித்தந்த பூமி பாட்டு நல்ல ஒலித்தரத்தில் வேணும் என்று 2 நாள் முன்பாக HMV இசைத்தட்டு வாங்கியிருக்கின்றேன். உங்கள் தெரிவுகள் கட்டாயம் வரும்.
தம்பி கானா பிரபாவிற்கு
கொஞ்சம் இங்கேயும் எட்டிப் பாருங்க.அக்கா ஒரு வேலை சொல்லியிருக்கேன்.பாட்டு பொறவு படிக்கலாம்.கோச்சிக்கிட மாட்டீயதானே
அன்பு பிரபா!
வல்லிசிம்கனின் புண்ணியத்தில்
ஊரார் உறங்கையிலே பாட்டைத் தந்தமைக்கு நன்றிகள்.
(அவர்தான் அந்தப் பாட்டை விரும்பிக்கேட்டிருந்தார்.)
"ஆச்சரியத்திலும் ஆச்சரியம்
நாம விரும்பிக்கேட்க நினைக்கற பாட்டை வேறை யாராவது கேட்டு அதை நீங்கள் ஒலிபரப்பி விடுகிறீர்கள்!" என்று
வடுவூர் குமார் எழுதியிருந்ததும்
இதுதான் ரேடியோஸ்பதி என்று
நீங்கள் "பீலா" விட்டதும்
இரண்டுமே உண்மையான வார்த்தைகள்.
நான் சில பாடல்களை விரும்பிக்கேட்க நினைக்கும்போது
நீங்கள் அதை முதலிலேயே தந்துவிடுகிறீர்கள்.
இளையவர்களும் பழையபாடல்களின் பக்கம் ஈர்க்கப்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது.
(பொக்கைவாய்க் கிழவன் முறுக்குத்தின்ன ஆசைப்படுகிற கணக்கில் நான் முன்னொருக்கால் கேட்ட புதிய பாட்டை நீங்கள் போடவே போடாதீர்கள்)
தேடும் திறன்கொண்ட
பிரபாவிடம் இப்போது சமர்ப்பிக்கப்படும் எனது தேர்வுகள்:
பாடல்: தென்னங்கீற்று ஊஞ்சலிலே..
பி.பி.சிறீனிவாஸ்-ஜானகி
(படம் தெரியவில்லை)
பாடல்: உடலுக்கு உயிர் காவல்
பி.பி.சிறீனிவாஸ்
(படம்: மணப்பந்தல்?)
பாடல்: வருவேன் நான் உனது
ஏ.எம்.ராஜா - சுசீலா
பாடல்: பொன்னென்பேன்
பி.பி.சிறீனிவாஸ் - ஜானகி
படம்: பொலிஸ்காரன்மகள்
அன்புடன்
இந்துமகேஷ்
என் விருப்பங்களை மறக்கலையே?
அள்ளித் தந்த பூமிக்காக - வெயிட்டிங்.
//கண்மணி said...
தம்பி கானா பிரபாவிற்கு
கொஞ்சம் இங்கேயும் எட்டிப் பாருங்க.அக்கா ஒரு வேலை சொல்லியிருக்கேன்.பாட்டு பொறவு படிக்கலாம்.கோச்சிக்கிட மாட்டீயதானே //
என்னையும் அழைத்தற்கு நன்றி, இது ஒரு விஷப்பரீட்சை, உண்மையெல்லாம் சொன்னால் கலாய்க்க ஆரம்பிச்சுடுவாங்க, பார்க்கலாம், யோசிச்சு முடிவெடுக்கிறேன் ;-))
//தேடும் திறன்கொண்ட
பிரபாவிடம் இப்போது சமர்ப்பிக்கப்படும் எனது தேர்வுகள்:
அன்புடன்
இந்துமகேஷ் //
வணக்கம் அண்ணா
இப்படியான ஊடகம் மூலம் உங்களைப் போன்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில் எனக்கும் பரம திருப்தி. தென்னங்கீற்று சோலையிலே பாட்டு, பாதை தெரியுது பார் படத்தில் வந்தது.
உங்கள் தெரிவுகள் அனைத்தும் இருக்கின்றன. விரைவில் வரும்.
வணக்கம் அண்ணா,
என் விருப்ப பாடல் கார்த்திக் நடித்த " உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்" படத்திலிருந்து s.p.b மற்றும் சுவர்ணலதா பாடிய " உன்னை தொட்ட " என்ற பாடல் ..
சர்வேசன் மற்றும் சினேகிதன்
உங்கள் தெரிவுகள் கட்டாயம் வரும்
Hi
nandri.
பிரபா,
எட்டு போட உங்களை அழைத்துள்ளேன். பார்க்க நுனிப்புல்
வணக்கம் உஷா
கண்மணி அக்கா, சந்தோஷ் தம்பி, இப்ப நீங்களா, எஸ்கேப் ஆக முடியாது போல
Post a Comment