சிட்னியில் இசை நிகழ்ச்சி படைக்க வருகை தரும் இசையுலக ஜாம்பவான், பாடகர் டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை நமது ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானம் (ATBC) வானொலி சார்பில் பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்
Download பண்ணிக் கேட்க
என்னுடைய வானொலி வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத தருணம் அது. பேட்டி முடியும் போது "பிரபாங்கிற பேரைக் கேட்கும் போது சந்தோஷமா இருக்கு ஏன்னா என் மனைவி பேரும் பிரபா ஆச்சே" என்றார் சிரித்துக் கொண்டே.
வானொலிப் பேட்டிக்காக நேற்று நான் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைக்க நினைத்த போது கொஞ்சம் தயக்கத்தோடு தான் தொலைபேசியை அழைத்தேன். ஆனால் "ச்சொல்லுங்கோ ப்ரபா எப்பிடி இருக்கீங்க? பேட்டி அஞ்சு மணிக்குத் தானே நான் தயாரா உட்கார்ந்திருப்பேன்" என்ற போது என் மனதில் இன்னொரு படி உயர்ந்து நின்றார். நிறைகுடம் ஆச்சே.
சமீபகாலமாக இளம் பாடகர்கள் ஆஸி மண்ணுக்க் வரும்போது அவர்கள் செய்யும் இசை நிகழ்ச்சிகளுக்காக சிறப்புப் பேட்டிகளைச் செய்யும் போது சிலர் கொடுத்த அலும்பில் அசதியாகியிருந்த என் மனதுக்கு ஒத்தடமாக இருந்தது கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடனான உரையாடல்.
வானொலிப் பேட்டியில் சேர்த்துக் கொண்ட கேள்விகள் சிலவற்றை இங்கே தருகின்றேன். விரைவில் அந்தப் பேட்டியை ஒலி வடிவில் பகிர்கின்றேன்.
இசை உலகில் ஒரு நீண்ட வரலாற்றைச் சுமந்து நமக்கு முன்னால் இருக்கும் உங்களைப் பார்ப்பதே நமக்குப் பெரும் தவம், மீண்டும் ஆஸ்திரேலிய ரசிகர்களை நீங்கள் சந்திக்க வருகின்றீர்கள் என்பது எங்களுக்கெல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஜேசுதாஸ் அவர்களின் பாடல்களைக் கேட்கும் போது மனதில் அமைதி பிறக்கின்றது, சோகப்பாடல்களைக் கேட்கும் பொது எம்மை அறியாமல் அழுதுவிடுகின்றோம் இப்படியெல்லாம் ரசிகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம் இந்த மாதிரி அனுபவங்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
நீங்கள் நேசிக்கின்ற சாஸ்திரீய சங்கீதத்தை மகத்துவம் செய்து வந்த படங்களில் மலையாளத்தில் பரதம் உள்ளிட்ட ஏராளம் படங்கள், தமிழில் அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி தெலுங்கில் மேக சந்தேசம் போன்ற படங்கள் கிட்டிய போது உங்கள் உணர்வு எப்படி இருந்தது?
சினிமாவில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற போதும் சாஸ்திரீய சங்கீதமேடையை நீங்க விட்டுக் கொடுத்ததே இல்லை இசைக்கலைஞராக இந்த இரண்டு தளங்களிலும் இயங்குவதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
ஹரிவராசனம் என்ற பாடலைப் பாடும் போது நீங்க பயபக்தியோடு விரதமிருந்து பாடியதாக அறிகின்றோம். ஐயப்ப பக்தர்கள் என்ற அடையாளம் தாண்டி அந்தப் பாடல் எல்லா இசை ரசிகர்களுக்கும் ஒரு தெய்வீகச் சூழலுக்கு இழுத்துச் செல்லும், அந்தப் பாடல் பாடிய அனுபவம்?
திரையுலகில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இசைப்பயணத்தின் கெளரவ நிகழ்வில் இசைஞானி இளையராஜா வந்து கலந்து சிறப்புச் சேர்த்தார், திரையிசையில் இளையராஜாவின் பங்களிப்பு குறித்து உங்கள் பார்வை?
சாஸ்திரீய சங்கீதம் தழுவிய பாடல்களைத் தவிர நிறைய மேற்கத்தேய பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஆரம்ப காலத்தில் வச்ச பார்வை தீராதடி போன்ற பாடல்களில் ஆரம்பித்தது அந்த மாதிரிப் பாடல்கள் கிடைத்தபோது எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
வடக்கும் நாதன் படத்தில் கங்கே என்ற பாடலை நீங்கள் பாடிய அந்தக் கணத்தை திரையில் கண்ட போது கண்கள் கலங்கியது உங்க ஆத்ம நண்பர் ரவீந்திரனை நினைத்துக் கொண்டேன் அப்போது, இசையமைப்பாளராக அவர் இயங்கியபோது உங்க அனுபவம்?
ரவீந்திரன் மாஸ்டர் குறித்து நிறையப் பேசினார் ஆசை தீர. குறிப்பாக கங்கே பாடலின் உருவாக்கம் பற்றியும்.
இன்று காதலிக்க நேரமில்லை படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்வுக்கு திடீர் அழைப்பு வந்ததாக் குறிப்பிட்டு அந்தப் படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து "என்ன பார்வை உந்தன் பார்வை" போன்ற பாடல்களையும் பாடி நிறைவு செய்துகொண்டார் பெருமதிப்புக்குரிய கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள்.
Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts
Monday, August 18, 2014
Sunday, August 17, 2014
பாடகர் விஜய் ஜேசுதாஸ் வழங்கிய வானொலிப் பேட்டி
சிட்னியில் இசை நிகழ்ச்சி படைக்க வருகை தரும் பாடகர் விஜய் ஜேசுதாஸ் அவர்களை நமது ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானம் (ATBC) வானொலி சார்பில் கண்ட ஒலிப்பேட்டியினை இங்கே பகிர்கின்றேன்.
இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்
Download பண்ணிக் கேட்க
பேட்டியில் இடம்பெற்ற சில கேள்விகள்
சினிமாவில் வாரிசுகள் ஜெயிப்பது சவாலான காரியம் ஆனால் உங்களுக்கு என்று தனி இடம் கிடைச்சிருக்கு இதை எப்படிப் பார்க்கிறீங்க?
உங்க அப்பா மிகப்பெரும் பாடகர் என்பதோடு பாடும்போது எந்த சமரசமும் செய்யக்கூடாதுன்னு பேட்டிகளிலேயே சொல்லுமளவுக்கு கண்டிப்பானவர் பாடகரா நீஙக் சினிமாவுக்கு வந்ததை எப்படி ஆரம்பத்தில் எடுத்துக் கொண்டார் இப்போ உங்க வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்?
சமீபத்தில் மெமரிஸ் படத்தில் திரையும் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது அந்தப் பாடல் பாடிய அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்
நீங்க பாட ஆரம்பிச்சு குறுகிய காலத்தில் இசைஞானி இளையராஜாவிடம் பாடியிருக்கீங்க ராஜா சார் உடன் பணியாற்றிய அனுபவத்தை அறிய ஆவல்
சிவாஜி திரைப்படம் வழியாக ரஹ்மான் உங்களுக்கு ஒரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தார் அதன்பின்னான வாய்ப்புகள் பற்றி சொல்லுங்களேன்?
தாவணி போட்ட தீபாவளின்னு மெலடி பாடல்களையும் பாடுறீங்க, திடீர்னு மாமா மாமான்னு டப்பாங்குத்துப் பாட்டிலும் கலக்குறீங்க உங்களுக்கு எந்த மாதிரிப்பாடல்கள் பாடுவது மன நிறைவைக் கொடுக்குது?
மலையாளத்தில் உங்க அப்பா ஜேசுதாஸ் ஐ ஆண்டவனின் இசைத்தூதுவரா போற்றிப் பாராட்டும் சூழலில் உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல பல பாடல்கள் கிட்டியிருக்கு குறிப்பாக அங்கே பெரும் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில் உங்களோடு சிட்னி வரும் ஸ்வேதாவோடு பாடிய கோலக்குழல் கேட்டோ அந்தப் பாடலுக்கு அப்போது விருது எல்லாம் கிடைச்சிருக்கு ஜெயச்சந்திரன் எப்படி வேலை வாங்குவார்?
உங்க அப்பா கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சாஸ்திரீய சங்கீத மேடைக்கும் சரி சமமா பங்கு வச்சிருக்கிறார் அந்தத் துறையிலும் மேடை ஏறணும்கிற ஆவல் இருக்கா?
இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்
Download பண்ணிக் கேட்க
பேட்டியில் இடம்பெற்ற சில கேள்விகள்
சினிமாவில் வாரிசுகள் ஜெயிப்பது சவாலான காரியம் ஆனால் உங்களுக்கு என்று தனி இடம் கிடைச்சிருக்கு இதை எப்படிப் பார்க்கிறீங்க?
உங்க அப்பா மிகப்பெரும் பாடகர் என்பதோடு பாடும்போது எந்த சமரசமும் செய்யக்கூடாதுன்னு பேட்டிகளிலேயே சொல்லுமளவுக்கு கண்டிப்பானவர் பாடகரா நீஙக் சினிமாவுக்கு வந்ததை எப்படி ஆரம்பத்தில் எடுத்துக் கொண்டார் இப்போ உங்க வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்?
சமீபத்தில் மெமரிஸ் படத்தில் திரையும் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது அந்தப் பாடல் பாடிய அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்
நீங்க பாட ஆரம்பிச்சு குறுகிய காலத்தில் இசைஞானி இளையராஜாவிடம் பாடியிருக்கீங்க ராஜா சார் உடன் பணியாற்றிய அனுபவத்தை அறிய ஆவல்
சிவாஜி திரைப்படம் வழியாக ரஹ்மான் உங்களுக்கு ஒரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தார் அதன்பின்னான வாய்ப்புகள் பற்றி சொல்லுங்களேன்?
தாவணி போட்ட தீபாவளின்னு மெலடி பாடல்களையும் பாடுறீங்க, திடீர்னு மாமா மாமான்னு டப்பாங்குத்துப் பாட்டிலும் கலக்குறீங்க உங்களுக்கு எந்த மாதிரிப்பாடல்கள் பாடுவது மன நிறைவைக் கொடுக்குது?
மலையாளத்தில் உங்க அப்பா ஜேசுதாஸ் ஐ ஆண்டவனின் இசைத்தூதுவரா போற்றிப் பாராட்டும் சூழலில் உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல பல பாடல்கள் கிட்டியிருக்கு குறிப்பாக அங்கே பெரும் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில் உங்களோடு சிட்னி வரும் ஸ்வேதாவோடு பாடிய கோலக்குழல் கேட்டோ அந்தப் பாடலுக்கு அப்போது விருது எல்லாம் கிடைச்சிருக்கு ஜெயச்சந்திரன் எப்படி வேலை வாங்குவார்?
உங்க அப்பா கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சாஸ்திரீய சங்கீத மேடைக்கும் சரி சமமா பங்கு வச்சிருக்கிறார் அந்தத் துறையிலும் மேடை ஏறணும்கிற ஆவல் இருக்கா?
Friday, July 25, 2014
"தொட்டால் தொடரும்" படத்தின் இசை பிறந்த கதை
இன்னொரு நண்பர் கார்க்கி பவா உதவி இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்..
நண்பர் கேபிள் சங்கரின் வலைப்பதிவுகளை ஒன்றுவிடாமல் படித்த அனுபவத்திலும், நேரடியாகச் சந்தித்த விதத்திலும்
மிகவும் சுவாரஸ்யம் மிக்கவர், நேசத்தோடு பழகக்கூடியவர் என்பதை மனதில் பதிய வச்சாச்சு.
கேபிள் சங்கர் திரைத்துறையோடு இயங்கிக் கொண்டிருந்தாலும், தொட்டால் தொடரும் படமே அவரை முதல் தடவையாக இயக்குனராக எல்லாத்துறைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டிய பாரிய பொறுப்பு. அண்மையில் படத்தின் பாடல் வெளியிடு வரை தயாரிப்பு வேலைகளை நிறைவு செய்து நிற்கும் இவ்வேளை நண்பர்களின் இந்த முயற்சி சிறக்க என் வாழ்த்துகள்.
தொட்டால் தொடரும் திரைப்படத்தின் இசையமைப்பாளர் P.C.ஷிவன் அவர்களை நான் இயங்கும் ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக 20 நிமிடத்தைத் தொடும் பேட்டி ஒன்று கண்டேன்.
தான் இசையமைப்பாளராக வந்த பின்புலம், தொட்டால் தொடரும் படத்தின் பாடல்களின் உருவாக்கம், பின்னணி இசை குறித்த விரிவான சிறப்பானதொரு பகிர்வை P.C.ஷிவன் வழங்கியிருந்தது எனக்கும் மன நிறைவாக அமைந்தது.
தொட்டால் தொடரும் திரைப்படம் வெற்றிபெற என் வாழ்த்துகள்.
தொட்டால் தொடரும் திரைப்படம் வெற்றிபெற என் வாழ்த்துகள்.
இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்
Download பண்ணிக் கேட்க
YouTube வழியாக
Saturday, April 12, 2014
"காதில் அடைத்துக் கொள்ளப் பஞ்சும், தலைவலி மாத்திரையும் கொடுத்து இசை நிகழ்ச்சி நடத்தினோம்" - அபஸ்வரம் ராம்ஜி
எண்பதுகள் காலப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு "அபஸ்வரம்" ராம்ஜி அவர்கள் குறித்துப் பரவலான அறிமுகம் இருக்கும். திரையிசைப்பாடல்களை அரங்கேற்றும் பிரபல மெல்லிசைக் குழுக்களுள் இவருடைய அபஸ்வரம் குழுவும் வெகுஜன அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஈழத்தமிழகத்தில் வாழ்ந்திருந்தாலும், ராம்ஜி குறித்து நானும் அறியக் கூடிய சந்தர்ப்பங்கள் கிட்டியிருந்தாலும், பலவருடங்கள் கழித்து இவரைப் பேட்டி எடுப்பேன் என்றெல்லாம் அப்போது கனவிலும் எண்ணியிருக்கவில்லை.இசைத்துறையில் கடந்த நாற்பது வருடங்களாக இயங்கி வரும் அபஸ்வரம் ராம்ஜி அவர்கள், இப்போது அபஸ்வரம் என்ற இசைக்குழுவை நிறுத்தி வைத்து "இசை மழலை" எனும் புது வடிவ மேடை இசை நிகழ்ச்சிகளை இயக்கி வருகின்றார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ராம்ஜி அவர்களை வானொலிப் பேட்டி எடுத்திருந்தேன்.
ஏப்ரல் 1, 1976 ஆம் ஆண்டு முட்டாள் தினத்தில் "அபஸ்வரம் இசைக்குழு ஆரம்பித்த அந்த நாளில் காதில் அடைத்துக் கொள்ளப் பஞ்சும், இடைவேளையின் போது தலைவலி மாத்திரையும் கொடுத்து இசை நிகழ்ச்சி நடத்தினாராம். தனது அபஸ்வரம் இசை நிகழ்ச்சியை ஆரம்பித்ததில் இருந்து இசைஞானி இளையராஜா குறித்தும் குறிப்பாக ராஜாவின் பின்னணி இசைக்காக சிகப்பு ரோஜாக்கள் படம் பார்க்கப் போன கதை உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை இந்தப் பேட்டி வழியாகப் பகிர்கின்றார். தமிழத் திரையுலகம் கண்ட முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான கே.சுப்ரமணியம் அவர்களின் மகன் இவர்.
இன்று முன்னணிப்பாடகர்களாக விளங்கி வரும் பல இளம் பாடகர்களின் அத்திவாரம் "இசை மழலை" எனும் ராம்ஜியின் இசைக்குழு வழியாகப் போடப்பட்டது. இன்று இவரின் பிறந்த தினம் கூட. எனவே ராம்ஜி அவர்களின் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வாக இந்தப் பேட்டியைப் பகிர்கின்றேன்.
Download பண்ணிக் கேட்க
புகைப்படங்கள் உதவி: ஹிந்து நாளேடு
Monday, March 10, 2014
பாடலாசிரியர் மதன் கார்க்கியை வானலையில் நான் சந்தித்த போது

தமிழ்த்திரையிசையில் கண்ணதாசனுக்குப் பின் சகாப்தமாக விளக்கிவரும் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, தந்தை வழியில் தனயன் மதன் கார்க்கி அவர்களும் இன்று தமிழ்த்திரையிசையின் இன்றைய தலைமுறைப் பாடலாசிரியராகவிளங்கிவருகின்றார். பாடலாசிரியர் மதன் கார்க்கியை கடந்த 25 டிசெம்பர் 2011 ஆம் ஆண்டு நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வானலையில் சந்தித்திருந்தேன்.
நான் பேட்டி கண்ட போது குறுகிய காலத்திலேயே திரையிசையில் ஐம்பது பாடல்களை எழுதியதோடு கோ படத்தின் "என்னமோ ஏதோ" பாடல் மூலமாக மிகவும் பரவலாக அறியப்பட்டதொரு திரைக்கவிஞராக விளங்கியிருந்தார். இன்று சமீபத்தில் வெளிவந்த "புதிய உலகைத் தேடிப்போகிறேன்" பாடல் மூலம் இன்னும் தன்னை மெய்ப்பித்து வருகின்றார்.
ஆஸி நாட்டில் இவர் படித்துக் கொண்டிருக்கும் போதே வைரமுத்து அவர்களின் மகன் இங்கிருக்கின்றார் என்ற சேதியோடு மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழகம் சென்று தனக்கான கச்சிதமான பாடலாசிரியர் பணியோடு , தொழில் நுட்பத்தையும் ஒருங்கே அரவணைத்துத் தமிழோடு உறவாடி வருவதில் மகிழ்வு கொண்டு அவரைப் பேட்டி காணத் தருணம் காத்திருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கும் வாய்த்தது.
2012 ஆம் ஆண்டு நான் சென்னை போகின்றேன், எதிர்பாராத அழைப்பின் வழியாக மதன் கார்க்கியைச் சந்திக்க வேண்டியிருந்தது. நேரில் நானும் நண்பர் கேயாரெஸ் உடன் மதன் கார்க்கியைச் சந்தித்த அந்தக் கணங்கள் மறக்க முடியாதவை. இன்று மார்ச் 10 ஆம் திகதி மதன் கார்க்கியின் பிறந்த தினத்தில் அவரின் இந்தப் பேட்டியைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.
இதோ அவரிடம் நான் கண்ட பேட்டியின் முக்கியமான கேள்விகளும்
மிக முக்கியமாக
"இசைஞானி இளையராஜா - கவிப்பேரரசு வைரமுத்து இந்த இரண்டு இமயங்களும் இணைந்து காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்திருக்கின்றார்கள். ஒரு ரசிகராக இவர்களின் பிரிவை எப்படிப்
பார்க்கின்றீர்கள்?" என்ற கேள்விக்கு அவர் கொடுத்த சிறப்பான பதிலையும் கேளுங்கள்.
Download பண்ணிக் கேட்க
மேலும் இந்தப் பேட்டியில் முன் வைத்த கேள்விகளில்,

தமிழ்த்திரையுலகில் நடிப்பு, தொழில் நுட்பம், இசை என்று வாரிசுகள் தம் திறமையைக் காட்டிவருவது புதிதல்ல, ஆனால் என் அறிவுக்கு எட்டியவரை முதல் கவிஞராக தங்கள் தந்தை வழியில்
பாடலாசிரியராக வந்திருக்கின்றீர்கள் இந்த வாய்ப்பு எப்படி உங்களுக்கு அமைந்து கொண்டது?
2011 உங்களைப் பொறுத்தவரை மறக்க முடியாத ஆண்டு கோ என்ற மாபெரும் வெற்றிப்படத்தின் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்த "என்னமோ ஏதோ" உங்களுக்கு ரசிகர்களையும் விருதுகளையும்
அள்ளித்தந்தது அதைப் பற்றி?
2011 ஆம் ஆண்டில் இன்னொரு மைல்கல்லையும் நீங்கள் தொட்டிருக்கின்றீர்கள் அதாவது 50 பாடல்களை குறுகிய காலத்தில் எழுதிக் குவித்திருக்கின்றீர்கள், அதற்கு எமது வாழ்த்துக்களைப்
பகிர்வதோடு இந்த வெற்றிப்பயணத்தில் நீங்கள் கூடப்பயணித்த இசையமைப்பாளர்களையும் அவர்களின் வேலை வாங்கும் திறனையும் சொன்னால் சிறப்பாக இருக்கும்.
பாடல்களில் விஞ்ஞானக் கருத்துக்களைத் தம் உவமையில் கொண்டுவந்து சிறப்புச் சேர்த்தவர் உங்கள் தந்தை வைரமுத்து அவர்கள், உங்கள் அனுபவத்தில் உங்களை நீங்கள் வித்தியாசப்படுத்திக்
காட்ட எந்தெந்த வகையில் முனைந்திருக்கின்றீர்கள்?
பாடல்களுக்கு மெட்டமைக்கும் போது டம்மி வரிகளைப் போட்டு நிரப்புவது வழக்கம் இன்றோ அதுவே நிலைத்து முழுப்பாடலும் வரும்போது பாடலின் இலக்கியத் தரம் குறித்த கரிசனை எழுகின்றது
இதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
மதன் கார்க்கி முகப்புப் படங்கள் நன்றி
http://kobirajkobi.blogspot.com.au
http://www.myoor.com/tamil

Thursday, February 20, 2014
இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கிய வானொலிப்பேட்டி
மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் 2005 ஆம் ஆண்டு நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு கணேசன் மேகநாதனுடன் வழங்கிய செவ்வியை இங்கே பகிர்கின்றேன்.இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்த்ததில் இருந்து, கலைத்துறையில் அவரின் முக்கியமான படங்களைப் பற்றியும் பேசுகின்றார். குறிப்பாக அழியாத கோலங்களில் இருந்து சிவாஜி கணேசனை இயக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு சந்தியா ராகம் படத்துக்காக ஒப்பந்தம் செய்ய நினைத்ததையும், தனது "வீடு" படத்தை இலங்கையிலேயே படமாக்க நினைத்ததையும் சொல்கின்றார்.
சினிமா மொழி என்று ஒன்றில்லை, ஈழத்தமிழ் வழக்குசினிமாவுக்கு இதுதான் மொழி வழக்கு என்று எதுவுமில்லை ஈழத்தமிழில் கொடுத்தாலும் எடுபடும் ஆனால் ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும் என்றும் தொடர்கின்றார்.
முழுப்பேட்டியையும் கேட்க
பாகம் 1
00000000000000000000000000000000000000000000 பாகம் 2
Labels:
இயக்குனர் ஸ்பெஷல்,
நினைவுப்பதிவு,
பேட்டி
Saturday, November 30, 2013
A Gun & A Ring ஈழத்துப் புலம்பெயர் சினிமா இவ்வார இறுதியில் சிட்னியில்
ஈழத்துப் படைப்பாளிகளின் பேர் சொல்லும் படைப்பாக வெளிவந்து உலக அரங்கில்
ஷங்காய் திரைப்பட விழா உள்ளிட்ட பல உலகப்பட விழாக்களில் போட்டித்
திரையிடலிலும் அங்கீகரிக்கப்பட்ட பெருமையோடு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது A
Gun & A Ring திரைப்படம்.
போர் தின்ற ஈழத்தின் வடுக்களைக்
கதைகளாக இணைத்து, திரைக்கதையிலும் தொழில் நுட்பத்திலும் வெகு சிறப்பான
படைப்பாக வந்திருக்கும் இப்படைப்பு ஐரோப்பிய நாடுகளை முந்திக் கொண்டு
சிட்னி வாழ் தமிழர்களை நாடி விசேட காட்சிகளாக இவ்வார இறுதியில் Reading
Cinema Auburn இல் சனிக்கிழமை மாலை 6 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4
மணிக்கும் சிறப்புச் சலுகை விலை 15 டாலருக்கு காண்பிக்கப்படவிருக்கிறது.
இவ் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நம்மவரின் படைப்பை நீங்கள்
அங்கீகரிக்க வேண்டுகிறேன்.
போர் தின்ற ஈழத்தின் வடுக்களைக்
கதைகளாக இணைத்து, திரைக்கதையிலும் தொழில் நுட்பத்திலும் வெகு சிறப்பான
படைப்பாக வந்திருக்கும் இப்படைப்பு ஐரோப்பிய நாடுகளை முந்திக் கொண்டு
சிட்னி வாழ் தமிழர்களை நாடி விசேட காட்சிகளாக இவ்வார இறுதியில் Reading
Cinema Auburn இல் சனிக்கிழமை மாலை 6 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4
மணிக்கும் சிறப்புச் சலுகை விலை 15 டாலருக்கு காண்பிக்கப்படவிருக்கிறது.
இவ் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நம்மவரின் படைப்பை நீங்கள்
அங்கீகரிக்க வேண்டுகிறேன்.
A Gun & A Ring திரைப்படம்
குறித்து நான் பகிர்ந்திருந்த இடுகை
http://www.madathuvaasal.com/2013/11/a-gun-and-ring_17.html
A Gun & A Ring படத்தின் இயக்குனர் திரு லெனின் எம்.சிவம் அவர்களுடனான சிறப்பு வானொலிப்பேட்டி ஒன்றை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக எடுத்திருந்தேன். இதில் தன்னுடைய திரை அனுபவங்களைப் பகிர்கின்றார், ஒலி வடிவில் கேட்க
இந்தப் படம் குறித்த உருவாகப் பணிகளில் இருந்து சர்வதேச அங்கீகரங்கள்
வரையான அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார் நமது அவுஸ்திரேலியத்
தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக படத்தில் முக்கிய பாத்திரமேற்று
நடித்த திரு. கந்தசாமி கங்காதரன் அவர்கள். அதைக் கேட்க
http://youtu.be/pfD08BTLITs
இத் திரையிடலுக்கு சிட்னி வாழ் உறவுகளை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
Monday, November 11, 2013
வாத்திய விற்பன்னர் அனில் ஶ்ரீநிவாசன் அவர்களுடன் ஒரு வானொலிச் சந்திப்பு
அனில் ஶ்ரீநிவாசன் அவர்கள் இசையுலகில் நன்கு அறியப்பட்ட கலைஞர், இளவயது என்றாலும் அவரின் வயதை நிரப்பும் இசை அனுபவம் நிரம்பப் பெற்றவர். மேற்கத்தேய பியானோ வாசிப்பில் மூன்று வயதில் பயில ஆரம்பித்த இவர் தொல்லிசைக் கலைஞர்களது மேடை இசை நிகழ்ச்சிகளில் மட்டுமன்றி திரை சார்ந்த வெளிப்பாடுகளிலும் தன்னை நிலை நிறுத்தியவர் என்பதற்கு உதாரணமாக, இசைஞானி இளையராஜாவின் How to name it என்ற மேடை நிகழ்வின் நிகழ்ச்சித் தொகுப்பாளாராகவும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியின் மூல வாத்தியக்காரராகவும் இயங்கிய அவரது சமீபத்தில் அவரது பங்களிப்புகளில் முக்கியமாகச் சொல்லி வைக்கவேண்டியவை. மேடை வாசிப்புகள் தவிர, தன்னுடைய இசைப்பகிர்வுகளை சிக்கில் குருசரண், மேண்டலின் யூ.ஶ்ரீ நிவாஸ், மேண்டலின் யூ.ராஜேஷ் உள்ளிட்ட ஆளுமைகளோடு இசைவட்டுகள் வழியாக வெளிக்கொணர்ந்தவர்.
ஒரு இசைக்கலைஞர் என்ற வட்டத்தை மீறி, அடுத்த தலைமுறையினருக்குத் தான் கற்ற சங்கீதம் முறையாகச் சென்று சேரவேண்டும் என்ற முனைப்போடு இப்போது பல இசைப்பயிற்சிப் பட்டறைகளை முன்னெடுத்து வருகின்றார். இவரோடு கைகோர்த்து இந்தப் பணிக்காகத் தன் ஆதரவை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் தொடர்பும், அவரைப் பேட்டி எடுக்கவேண்டும் என்ற முனைப்பும் எனக்கு ஏற்பட மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, அவரும் நம்மைப் போலவே இசைஞானி இளையராஜாவின் இசை குறித்துத் தீரா வேட்கை கொண்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் ராஜா வழங்கிய இசையின் தாற்பர்யத்தைச் சொல்லி வருபவர், தன் பியானோவிலும் செய்து காட்டியவர். அந்த வகையில் மெல்பனுக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு கலை நிகழ்வுக்காக வருகை தந்த இவரை நண்பர் காமேஷ் அவர்களின் தொடர்பின் வழி ஒரு வானொலிப் பேட்டியை எடுக்க முடிந்தது. பேட்டி எடுக்கப்போகிறோம் என்பதையே ஒரு இருபது நிமிட அவகாசத்தில் அவருக்குத் தெரியப்படுத்தி எந்த வித முன்னேற்பாடுமின்றி அவரைப் பேச அழைத்தபோது மடை திறந்தது போலத் தன் இசையுலக அனுபவங்களில் இருந்து இசைஞானி இளையராஜாவின் இசையின் மகத்துவம் எவ்வளவு தூரம் அடுத்த தலைமுறையைச் சென்றடையவேண்டும் போன்ற மனவெளிப்பாடுகளையும் தன் இருபது நிமிடங்கள் கடந்த பேட்டியில் சொல்கிறார். கேட்டு ரசியுங்கள்.
Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்
இவர் வழங்கியிருந்த Rythms Roses & Raja என்ற இசைப் பகிர்வின் சில துளிகள்
அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் பிரத்தியோகத் தளம்
http://anilsrinivasan.com/
அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் காணொளிப்பக்கம்
http://www.youtube.com/user/TheMadrasPianist
ஒரு இசைக்கலைஞர் என்ற வட்டத்தை மீறி, அடுத்த தலைமுறையினருக்குத் தான் கற்ற சங்கீதம் முறையாகச் சென்று சேரவேண்டும் என்ற முனைப்போடு இப்போது பல இசைப்பயிற்சிப் பட்டறைகளை முன்னெடுத்து வருகின்றார். இவரோடு கைகோர்த்து இந்தப் பணிக்காகத் தன் ஆதரவை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் தொடர்பும், அவரைப் பேட்டி எடுக்கவேண்டும் என்ற முனைப்பும் எனக்கு ஏற்பட மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, அவரும் நம்மைப் போலவே இசைஞானி இளையராஜாவின் இசை குறித்துத் தீரா வேட்கை கொண்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் ராஜா வழங்கிய இசையின் தாற்பர்யத்தைச் சொல்லி வருபவர், தன் பியானோவிலும் செய்து காட்டியவர். அந்த வகையில் மெல்பனுக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு கலை நிகழ்வுக்காக வருகை தந்த இவரை நண்பர் காமேஷ் அவர்களின் தொடர்பின் வழி ஒரு வானொலிப் பேட்டியை எடுக்க முடிந்தது. பேட்டி எடுக்கப்போகிறோம் என்பதையே ஒரு இருபது நிமிட அவகாசத்தில் அவருக்குத் தெரியப்படுத்தி எந்த வித முன்னேற்பாடுமின்றி அவரைப் பேச அழைத்தபோது மடை திறந்தது போலத் தன் இசையுலக அனுபவங்களில் இருந்து இசைஞானி இளையராஜாவின் இசையின் மகத்துவம் எவ்வளவு தூரம் அடுத்த தலைமுறையைச் சென்றடையவேண்டும் போன்ற மனவெளிப்பாடுகளையும் தன் இருபது நிமிடங்கள் கடந்த பேட்டியில் சொல்கிறார். கேட்டு ரசியுங்கள்.
Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்
இவர் வழங்கியிருந்த Rythms Roses & Raja என்ற இசைப் பகிர்வின் சில துளிகள்
அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் பிரத்தியோகத் தளம்
http://anilsrinivasan.com/
அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் காணொளிப்பக்கம்
http://www.youtube.com/user/TheMadrasPianist
Saturday, December 22, 2012
"சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் டி.செல்வராஜ் பேசுகிறார்
முற்போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் அவர்களின் "தோல்" என்ற நாவலுக்கு இந்திய "சாகித்ய அகாடமி' விருது இந்த ஆண்டு கிட்டியிருக்கிறது. இந்த நிலையில் அவரை நான் பணிபுரியும் தமிழ் முழக்கம் வானொலி சார்பில் எடுத்திருந்த ஒலிவடிவத்தை இங்கு பகிர்கின்றேன்.
Monday, August 22, 2011
"ஏழுஸ்வரங்களுக்குள் இத்தனை பாடல் சிட்னியிலே"

இசை உலகில் நாற்பது ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கும் வாணி ஜெயராம் என்றதொரு பெரும் பாடகியை அவுஸ்திரேலிய மண்ணில் முதன் முதலில் கொண்டு வந்து அவருக்கான ஒரு சிறப்பானதொரு களத்தைக் கொடுப்பது என்பது வெறுமனே "வெறுங்கையால் முழம் போட முடியாது". இப்படியானதொரு இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்றதொரு கூட்டணியும் அதை அரவணித்துக் கொண்டு நடத்தக்கூடிய சிறப்பானதொரு ஒருங்கமைப்பாளர்களும் அமைய வேண்டும். இவையெல்லாம் சரியாக இயங்கினால் மற்றைய எல்லாவற்றையும் ரசிகர்கள் கவனித்துக்கொள்வார்கள். அதுதான் நேற்று சிட்னியில் நிகழ்ந்த இன்னிசை இரவு மூலம் வெளிப்பட்டது.
சிட்னியில் இயங்கும் Symphony Entertainers என்ற அமைப்பு முன்னர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைத்து வந்து ஒபரா ஹவுஸில் அவருக்கான உச்சபட்ச கெளரவத்தையும் நேர்த்தியானதொரு இசை நிகழ்ச்சியையும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியிருந்ததை இங்கே சொல்லியிருக்கின்றேன். அந்த நிகழ்வு கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுக்கு எப்படியொரு மணிமகுடமாக அமைந்ததோ அதேஅளவு கெளரவத்தை இசையுலகில் இத்தனை வருடங்களை ஊதித்தள்ளிய வாணி ஜெயராமுக்கும் நேற்றைய நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் இன்றைய தவிர்க்கமுடியாத பாடகர்களில் ஹரிச்சரண், சின்மயி, விஜய் ஜேசுதாஸ் கூட்டணியோடு வாணி ஜெயராமும் வருகின்றார் என்றபோது ஓடும் புளியம்பழமும் போட எட்ட நிற்குமே இந்தக் கூட்டணி என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பைப் பொய்க்க வைத்தது இந்த நிகழ்ச்சியை அமைக்கவேண்டும் என்று தயாரிப்புப் பணியில் முதன்மையாகச் செயற்பட்ட விஜய் ஜேசுதாஸின் சிறப்பான கூட்டணி.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சி என்றாலே கஷ்டப்பட்டுத் தான் காருக்குள் ஏறிப்போவேன். ஆனால் இது இஷ்டப்பட்ட நிகழ்ச்சி எனவே மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டே இசை நிகழ்வு நடந்த ஹில்ஸ் செண்டருக்குச் சென்றேன். நிகழ்ச்சி சம்பிரதாயப்படி 20 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. "கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்" என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலை கீபோர்ட்டும், சாக்ஸபோன், கிட்டார் சகிதம் சென்னை, கேரளா இசைக்குழுக் கூட்டணி இசைக்க ஆரம்பித்ததும் அந்த மூலப்பாடலில் மோகன் மனதில் நுழைந்த ராதிகா போல மனசு அப்படியே இசைக்கூட்டுக்குள் தாவித் தன்னைத் தயார்படுத்தியது. விஜயாள் என்ற குட்டிப்பிள்ளை வந்திருந்த பாடகர்களை தன் அளவில் குட்டியாக அழகு தமிழில் அறிமுகப்படுத்திவிட்டுப் போக சின்மயி அரங்கத்தில் நுழைந்தார். "ஈழத்தமிழர்களோட இசையுணர்வை நான் எப்பவுமே மெச்சுவேன்" என்ற தோரணையில் அவர் ஆரம்பிக்க "ஆஹா வழக்கமான பஞ்ச் டயலாக்கா" என்று நான் நினைக்க, "நான் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவள், எங்களுக்கும் இலங்கைக்கும் நிலத்தால் நெருக்கம் அதிகம், இலங்கையில் எங்க தமிழர்கள் கொல்லப்பட்டதையும், கஷ்டப்பட்டதையும் அறிந்து நாங்க வேதனைப்பட்டோம், பட்டுக்கிட்டிருக்கோம், என்னோட முதற்பாடலே இலங்கைத் தமிழர்களோட கதைக்கருவோடு வந்த "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தின் பாடல் என்று சொல்லியவாறே ஒரு நிமிட மெளன அஞ்சலியைப் பகிர்ந்தவாறே சின்மயி பாடியது நெகிழ வைத்தது. சின்மயி சிட்னிக்கு வருவது இது இரண்டாவது முறை, கடந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற தன்னுடைய முதற்பாடலைப் பாடாத ஆதங்கத்தில் இருந்தேன். அதை ஈடுகட்டவோ என்னமோ அவரை இரண்டாவது தடவை சிட்னி முருகன் இறக்கியிருக்கின்றான். வைரமுத்து நேசித்து இழைத்த வரிகளை சின்மயி வெறும் குரலைக் கொடுத்தா பாடினார் உணர்வைக் குழைத்தும் அல்லவோ.
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!
இந்த வரிகளைப் பாடும் போது சின்மயி கண்டிப்பாக உள்ளுக்குள் பொருளுணர்ந்து அழுதிருப்பார், பார்த்துக்கொண்டிருந்த நம்மைப் போல.
"என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்" என்று ஒரு குரல், அரங்கத்தின் இண்டு இடுக்கெங்கும் வந்திருந்த கூட்டம் அவரைத் தேட அரங்கத்தின் பின் வாயிலில் இருந்து "தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு" என்று பாடிக்கொண்டே வந்தார் விஜய் ஜேசுதாஸ். ஒபரா ஹவுசில் நடந்த இசை நிகழ்ச்சிக்குத் தந்தையோடு வந்து கொஞ்சம் அடக்கமாகவே இருந்த பையன் இந்த முறை தன்னோடு இரண்டு இளசுகளையும் கூட்டி வந்ததால் குஷி மூடில் இருந்ததை நிகழ்ச்சி தொடங்கி முடியும் வரை காண முடிந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளமைக்குரலின் எச்சம் எஸ்.பி.பி.சரணிடம் இருந்தாலும் அது மட்டுமே போதும் என்று அவர் இருந்து விட்டார். இதுக்கு இது போதும் என்றோ என்னமோ திரையிசையும் அவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பையே கொடுத்திருந்தது. ஆனால் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற மேதையின் மகன் என்பதை விட, கடுமையான விமர்சகரின் மகனாகப் பிறந்து விட்டுக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடமுடியாது என்பதை விஜய் ஜேசுதாஸ் உணர்ந்திருப்பார் என்பதை அவருக்கான பாடல்கள் மட்டுமல்ல, தந்தையின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவர் பாடிச் சிறப்பிப்பதிலும் உணரலாம். விஜய் ஜேசுதாஸுக்கு, சென்னை 28 இல் வந்த "உன் பார்வை மேலே பட்டால்" பாடலுடன் தனக்குக் கிடைத்த பாடல்கள் சிலவற்றைப் படித்தாலும் பெரும்பொறுப்புத் தன் தந்தை வராத வெற்றிடத்தை நிரப்புவது. அதை அவர் சிறப்பாகவே செய்தார்.
"ஹாய் சிட்னி" என்று ஆர்ப்பாட்டமாகக் களமிறங்கிய ஹரிச்சரண், சிட்னி என்றால் யுத்துக்கள் கொட்டிக் கிடக்கும் சீமை என்றோ என்னமோ முதலில் இளசுகளைக் குறிவைத்துத் தான் சிக்ஸர் அடித்தார், பின்னர் போகப் போக நிலமையை உணர்ந்திருப்பார். சிட்னிக்கு முதன்முதலில் வரும் பாடகர்கள் போடும் தப்புக்கணக்கு இதுதான், வெளிநாடு என்றால் ராப், பாப், பப்பரபப்ப வகையறாக ரசிகர்கள் தான் அதிகம் என்று (அல்லது எனக்குத்தான் வயசு போட்டுதோ ;-))
ஹரிச்சரணின் ஸ்பெஷாலிட்டி, கொடுத்த பாட்டை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிக்காமல், அந்தப் பாடலின் ஆரம்பத்தில் மெல்ல மெல்லத் தானே ஆலாபனைகளை இட்டுக்கட்டிப் பின்னர் மூலப்பாடலுக்குத் தாவி அங்கேயும் ஜாலம் செய்து பின்னர் செஞ்சரி அடித்து விட்டுக் களம் திரும்பும் ஆட்டக்காரன் போல நிதானமாகப் பாடலை இறக்கி முடிக்கும் வல்லமை கைவரப்பெற்றிருக்கின்றார்.
"கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்" என்று விஜய் ஜேசுதாஸ் பாட, அரங்கத்துக்கு வந்த வாணி ஜெயராம் கூப்பிய கரங்களுடன். வாணி ஜெயராமோடு ஜோடிகட்டிப் பாடியவர்களில் கே.ஜே.ஜேசுதாஸ் தான் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் என்பது என் கருத்துக்கணிப்பு. இன்னொரு அல்ல மேலும் இரண்டு ஒற்றுமையைக் கண்டேன். ஒன்று மனிதர்களை நேசியுங்கள் என்று மனித நேயக்கருத்தை அழகாக வெளிப்படுத்திவிட்டே தன் கச்சேரியை ஆரம்பித்தது, இன்னொன்று இப்படியானதொரு இசை நிகழ்ச்சி தன் நீண்ட நெடிய இசைவாழ்வில் பத்தோடு பதினொன்று என்று ஒப்புக்குப் பாட்டு நிகழ்ச்சி வைக்காமல், ஒரு அர்ப்பணிப்போடு பள்ளியில் கற்றதை வீடு வந்து ஆசையாகத் தன் பெற்றோரிடம் அழகாகப் ஒப்புவித்து முறுவலிக்குமே சின்னக்குழந்தை? அந்தப் பெரிய மனசு வாணி ஜெயராமிடம் இருந்ததை நிகழ்ச்சி முடியும் வரைக் காணமுடிந்தது. "இன்னும் வருவேன்" என்று சொல்லிக்கொண்டே ஐந்து மணி நேர இசை நிகழ்வில் இதைத் தொடர்ந்தார்.
"ஒரு காலத்தில் இலங்கை வானொலியைக் கேட்டுச் சங்கீதம் கற்றுக்கொண்டவள், Binaca Geet Maala என்ற ஹிந்தித் திரைப்பாடல் வரிசை நிகழ்ச்சியைப் பாடகியாக வருவதற்கு முன்னர் நேசித்துக் கேட்டவள், 1971 ஆம் ஆண்டு வஸந்த் தேசாயின் இசையில் Guddi என்ற ஹிந்தித் திரைப்படத்துக்காக முதலில் பாடி அந்தப் படத்தின் "Bole Re Papihara" என்ற பாடலை இதே Binaca Geet Maala திரைப்பாடல் நிகழ்ச்சியில் கேட்ட போது வாய்விட்டு அழுதேன்" என்று வாணி ஜெயராம் சொன்னபோது நெகிழ்வோடு உணர முடிந்தது. இந்தப் படத்தில் குல்ஸார் எழுதிய மொத்தம் மூன்று பாடல்கள் ஆனால் "Bole Re Papihara"மற்றும் Hum Ko Manki Shakti Dena ஆகிய பாடல்கள் தான் படத்தில் வந்தது என்று சொன்னதோடு நிகழ்ச்சியில் "Bole Re Papihara"பாடலையும் சேர்த்துக் கொண்டார். தென்னிந்தியாவில் இருந்து ஹிந்தித் திரையுலகம் போய்ப் பாடிய முதற்பாடகி வாணி ஜெயராம் என்று சின்மயி சொன்ன புகழாரத்தை ஏற்கிறோம், ஆனால் எனக்கென்னமோ முன்னரேயே தென்னகக் குயில்கள் சென்ற ஞாபகம்.
வாலி எழுதிய "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலோடு ஆரம்பித்தவர், "மேகமே மேகமே", "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" "நானே நானா" (வாலி எழுதியது) என்று அவரின் தனித்துவமான தனிப்பாடல்களை எல்லாம் அள்ளிச் சேர்த்த மகிழ்ச்சியை விட எதிர்பாராத பரிசு தானே எப்போதும் உச்சபச்ச சந்தோஷத்தைக் கொடுக்கும்? அப்படி அமைந்தது தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் அவர் பாடி "என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது" பாடலைப் பாடிய போது கிட்டியது. இப்படியான மேடைக்கு அந்நியமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடிய வகையில் கேளடி கண்மணி படத்தில் வந்த "தென்றல் தான் திங்கள் தான்" பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் முன்னர் ஒபரா ஹவுஸ் நிகழ்ச்சியில் பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
ஒவ்வொரு பாடல்களையும் எழுதியவர், இசையமைப்பாளர் என்று சொல்லி வாணி ஜெயராம் பாடியது இதுவரை நான் மேடை எதிலும் காணாதது. வாணி ஜெயராமே ஒரு நல்ல கவிஞர், அப்படி இருக்கையில் எப்படிப் பாடலாசிரியரைத் தவிர்ப்பார்? வாணி ஜெயராம் தான் கவிதை எழுதுவேன் என்றதோடு பகிர்ந்த கவிதைகளில் "கவிதை" இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் இப்படிக் கவிஞர் பெயர் சொல்லிப்பாடியவர் "என்னுள்ளில் எங்கோ" என்ற பாடலைக் கங்கை அமரன் எழுதினார் என்ற போது எனக்குப் பின் வரிசையில் இருந்தவர் உணர்ச்சிவசப்பட்டுப் பக்கத்தில் இருந்தவரிடம் "கங்கை அமரன் இளையராஜாவின்ர son" என்றபோது கங்கையைத் தேடினேன் குதிக்க.
ஒரு பாடகிக்கு ஏராளம் நல்ல நல்ல பாடல்கள் வாய்க்கலாம் ஆனால் பாடகி என்ற கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுக்கும் நல்வாய்ப்பு எத்தனை பாடகிகளுக்கு வரும்? அப்படி அமைந்த வாணி ஜெயராமின் முத்திரை "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" என்ற பாடலைப் பாடும் போது
"காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்"
என்ற வரிகளை அவர் அழுத்திப் பாடியபோது இத்தனை நாளும் இவ்வளவு தூரம் அனுபவிக்காமல் கற்பனை சந்தோஷத்தில் இருந்த உணர்வில் கண்ணதாசனை நினைக்க, வாணியோ கண்ணதாசனைப் பற்றிப் பேசினார்.
"நாளைக்கு உங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் நாளை பத்திரிகையில் வரும் "என்று குழந்தை உள்ளத்தோடு என்னிடம் சொன்ன கண்ணதாசன் பாடகிகள் என்றளவில் என்னைப் பற்றி மட்டுமே தனது "சந்தித்தேன் சிந்தித்தேன்" தொடர் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" இதை எங்கே கேட்டாலும் அங்கே நின்று முழுப்பாடலையும் கேட்டுத்தான் அங்கிருந்து விலகுவாராம் கண்ணதாசன். எனக்கு வாசிக்கப் பிடிக்கும் என்பதால் தான் எழுதிய 43 நூல்களைக் கொடுத்திருக்கின்றார் என்று கண்ணதாசனைப் புகழந்தார்.
"அபூர்வ ராகங்கள்" படத்தின் பாடல் ஒலிப்பதிவு நடக்கும் நாட்களில் காலையில் சீக்கிரமாகவே பாடற்பதிவு ஸ்டூடியோவுக்குப் போய் விட்டோம் என்று நினைத்தால் எங்களுக்கு முன்னார் வெகு சீக்கிரமாவே எம்.எஸ்.விஸ்வநாதன் வந்திருப்பார். அவ்வளவுக்கு பங்சுவாலிட்டி நிறைந்தவர்களோடு பணியாற்றியதெல்லாம் மறக்கமுடியாத காலங்கள், என்னோட முதல் இசையமைப்பாளர் வஸந்த் தேசாய் முதற்கொண்டு பணியாற்றிய இசையமைப்பாளர்கள் வெறும் இசையை மட்டுமே எனக்குப் போதிக்கல" என்று அந்தப் பொற்காலத்தை நினைவுபடுத்தினார் வாணி ஜெயராம்.
"அந்தமானைப் பாருங்கள் அழகு" என்று விஜய் ஜேசுதாஸோடு வாணி ஜெயராம், கொடுத்த ஜேசுதாஸ் - வாணி ஜெயராம் பாடல்கள் எல்லாமே முத்துக்கள். குறிப்பாக "சிவாஜி கணேசன் நினைவு நிகழ்வுக்காக வை.ஜி.மகேந்திரன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதன்முதலில் பாடிவிட்டு இப்போது படிக்கிறேன்" என்றவாறே விஜய் ஜேசுதாஸ் வாணியோடு பாடிய "கங்கை யமுனை இங்குதான் சங்கமம்" என்ற இமயம் படப்பாடல் சொர்க்கம். ஒருப்பக்கம் ஜேசுதாஸ் பாடல்களை தனயன் பாட, இன்னொரு பக்கம் "மழைக்கால மேகம் ஒன்று" (வாழ்வே மாயம்)," ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்" (நீயா) போன்ற பாடல்களை ஹரிச்சரணோடு பாடியதும் இணையாக ரசிக்க வைத்தது.
"உனக்கு கல்யாணம் ஆச்சா"என்று வாணி கேட்க
"இன்னும் இல்லை" என்று ஹரிச்சரண் சொல்ல
"இளமை ஊஞ்சலாடுகிறது" என்று சொல்லி நிறுத்தி விட்டு "அடுத்துப் பாடப்போற படம் பேர் சொன்னேன்" என்று குறும்பாகச் சொல்லி
"ஒரே நாள் உனை நான்" என்ற பாடலை வாணி ஜெயராம், ஹரிச்சரணோடு பாடியபோது அந்தச்
"சங்கமங்களில் இதம் இதம்" ஆக மனது இருந்தது.
"கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்" என்ற பாடலுக்கு ஹரிச்சரண் ஜதி சேர்க்க, வாணியின் வயதை மறைத்தது குரல்.
"மேகமே மேகமே பாடல் சிவாஜி கணேசன் சாருக்குப் பிடிச்ச பாட்டு, அந்தப் பாட்டு வந்த நாட்களில் இரவில் இந்தப் பாட்டைக் கண்டிப்பாகக் கேட்டுவிட்டுத் தான் தூங்குவார்" என்றார் வாணி.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, சங்கர்-கணேஷ், கங்கை அமரன் என்று தேடித் தேடி ஏறக்குறையத் தன்னுடைய எல்லாப்பாடல்களையும் பாடி அழகு சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்காகப் பாடிய "சுகம் சுகம்" (வண்டிச்சோலை சின்ராசு) பாடலையும் இணைத்திருக்கலாமோ?
விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் கூட்டணி சேர்ந்தால் அடிப்பொளி தான், கலகலப்பாகப் பேசும் கலையும் சபையோரோடு அந்நியப்படாத நிகழ்ச்சி வர்ணனையும் சின்மயி இன் சொத்து. ஹரிச்சரணுக்கு வரமாக அமைந்த யுவனின் பாடல்கள் சமீபத்திய "ராசாத்தி போல" பாடல்களில் இளசுகளோடு பழசுகளும் இணைந்து தாளம் தட்டி ரசித்தது.
"ஏ ஹே ஓ ஹோ லாலலா" என்று விஜய் ஜேசுதாஸ் பாட திடீரென்று சைக்கிளில் மேடையில் ஓடி வந்து "ஏ அது நான் பாடப்போகும் பாட்டு என்னோட பேஃவரிட்" என்று ஹரிச்சரண் விடாப்பிடியாக நிற்க விஜய் ஒதுங்க "பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்" பாடல் ஹரிச்சரணின் புது ப்ளேவரில். ஆனால் இந்தப் பாட்டை மட்டும் விஜய் ஜேசுதாசுக்கு இட ஒதுக்கீடு செய்திருந்தால் "பழமுதிர்ச்சோலை எங்களுக்கும் சேர்த்துத் தான்" என்று நானும் பாடியிருப்பேன் மனசுக்குள்.
"லேசாப்பறக்குது" என்ற வெண்ணிலா கபடிக்குழு பாடலின் ஹிட் ஐத் தொடர்ந்து கார்த்திக், சின்மயி காம்பினேஷன் இருக்கணும் என்று குள்ளநரிக்கூட்டம் படத்திலும்"விழிகளிலே விழிகளிலே" பாடலை கடம் புகழ்விக்கு விநாயக்ராம் மகன் செல்வகணேஷ் "விழிகளிலே விழிகளிலே" பாட்டுக்கொடுத்ததாகச் சொல்லி ஹரிச்சரணோடு பாடினார். "லேசாப்பறக்குது" பாடல் மேடையில் லேசாகப் பாடமுடியாத சங்கதி, சின்மயி அதை மூலப்பாடலில் மிகவும் சன்னமாகப் பாடிச் சிறப்பித்திருப்பார். அதை ஈராயிரம் பேர் கொண்ட சபையில் பாடுவது சவால், அதைச் சமாளித்துப் பாடினார்.
"சத்யம் தியேட்டரில் வைத்து எனக்கு ஒரு பாட்டு சான்ஸ் கொடுங்களேன்" என்று ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்க அவர் கொடுத்த "வாராயோ வாராயோ காதல் கொள்ள" ஆதவன் படப்பாடல் எனக்கு முதற்பாடல் கொடுத்த புகழுக்கு மேலாக விருதுகளைக் கொடுத்துப் புகழ் கொடுத்தது என்றவாறே ஹரிச்சரணோடு பாடினார், மேடையில் வைத்து இன்னொரு விருது கொடுத்திருக்க வேண்டும். அவ்வளவு அழகு, பாட்டைச் சொன்னேன் சார்.
விஜய் ஜேசுதாஸ் உடன் "சஹானா சாரல் தூவுதோ" பாடலைப் பாடுமுன் "நீங்க தலைவா என்று போடும் சத்தம் சென்னை வரை கேட்கணும்" என்று சின்மயி தன் தலைவர் பற்றை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கிளிமாஞ்சாரோ பாடலும் இதே கூட்டணியில். பெரியம்மா பையன் உதித் நாராயணணை விட விஜய் ஜேசுதாஸை வைத்தே அந்த சஹானா சாரல் தூவுதோ டூயட் பாடலையும் ரஹ்மான் கொடுத்திருக்கலாம் என்ற அளவுக்கு இருந்தது விஜய் ஜேசுதாஸின் குரலினிமை.
ஹரிச்சரண்-விஜய் ஜேசுதாஸ்- சின்மயி மூன்றுபேரும் சேர்ந்து அன்றிருந்து இன்றுவரை பாடல்களைக் கோர்த்துக் கொடுத்த unplugged என்ற தொகுப்பில் ஏதாவது ஒரு தீம் ஐ முன்னிலைப்படுத்தியிருக்கலாம். " தாய்க்கு நீ மகனில்லை"(உள்ளத்தில் நல்ல உள்ளம்) என்ற தியாகம் ததும்பும் பாடலோடு திடீரென முளைத்த "கனவில் வடித்து வைத்த சிலைகள்" (விழியே
கதையெழுது) பாடலும் "வாய்மொழிந்த வார்த்தை யாவும்" (சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என்ற கோர்வையும் பொருந்தாமல் தனித்துத் தெரிந்தன. அதிலும் "போறாளே பொன்னுத்தாயி" பாடல் ஸ்வர்ணலதாவுக்கு மட்டுமே எழுதி வைத்த ஆஸ்தி, சின்மயி இந்த unplugged தொகுப்பை அடுத்த மேடைக்குக் கொண்டு செல்லும் போது பாடல்களில் பரிசீலனை ப்ளீஸ்.
வழக்கமாக இந்தியாவில் இருந்து வரும் இசைக்குழு கையோடு நாலைந்து சீடிக்களையும் கொண்டு வரும். கீ போர்ட் வாசிப்பவரின் கையசைப்பு மட்டும் இருக்கும் ஆனால் என்ன அதிசயம் பின்னணியில் இசை இருக்கும். இப்படியான அற்புதங்கள் எதுவுமில்லாமல் தேர்ந்ததொரு இசைக்குழு கூடவே பயணித்தது சிறப்பு. குறிப்பாகப் புல்லாங்குழலையும் சாக்ஸபோனையும், இன்ன பிற குழல் வாத்தியங்களையும் நொடிக்கொரு தடவை மாற்றி மாற்றி வாசித்த அந்த சகலகலா இளைஞனுக்குப் பாராட்டுக்கள். இவ்வளவு இருக்கும் போது நாமும் நல்லா இயங்கணும் என்ற எண்ணத்தில் அரங்கத்தின் ஒலியமைப்பும் பங்கு போட்டுக்கொண்டது.
நிகழ்ச்சி இப்படிக் கலகலப்பாகப் போய்க்கொண்டிருக்கும் போது மேடையில் ஒரு சிறுமி மைக்குடன் தோன்றினாள். சின்மயி பாடும் போது பக்கத்தில் நின்று அவரைப் போலப் பாடுவது போலப் பாவனை, சின்மயி தன் குரலை மேலே உயர்த்தித் தலையை மேலே வானத்தை நோக்குமாற்போலப் பாட அதே மாதிரிப் பாவனையில் அவளும். குரு படத்தில் வந்த "மையா மையா"பாட்டை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே சின்மயியிடம் கேட்டு வைத்து விட்டாள் அவள். சின்மயி "மையா மையா" பாடலைப் பாட,
மைக்கை ஒருகையில் வைத்துக் கொண்டு மற்றக்கை அசைத்து தன் தந்தையை அழைக்கிறாள். அவரும் வருகிறார். தந்தை விஜய் ஜேசுதாஸ், அந்தக் குட்டி அவரின் மூன்று வயது மகள் அமயா. அந்தச் சுட்டிக் குழந்தைதான் இடைவேளைக்குப் பின்னான நிகழ்ச்சியின் ஹீரோயின். தன் தந்தையோடு "அன்னாரக்கண்ணா வா" பாடலைப்பாடுவதும் அவர் நிறுத்த தானும் நிறுத்துவதும், தந்தை பாட மகள் ஆடுவதுமாக ஒரே கொட்டம் தான். சும்மாவா புலிக்குப் பிறந்த பேத்தி ஆயிற்றே.
சிட்னியில் நடந்த இந்த நிகழ்ச்சி ஐந்து மணி நேரங்களைக் கடந்தது, வாணி ஜெயராம், விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் என்று வந்த பாடகர்கள் தம் முழுமைக்குமான வெளிப்பாட்டைக் காட்டிச் சிறப்பித்தது. அந்த வகையில் இது மறக்கவொண்ணா இசை விருந்து அவர்களுக்கும் எங்களுக்கும்.
Labels:
இளையராஜா,
எம்.எஸ்.வி,
நிகழ்வு,
பேட்டி
Monday, May 9, 2011
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசுகிறார்
நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சமீபத்தில் வானலையில் சந்தித்த மனிதர்களில் இயக்குனர் செல்வமணி மறக்கமுடியாதவர். பேட்டிக்கு அழைத்த கணமே எப்பவும் தயாரா இருக்கேன் என்று பண்பாகச் சொல்லிச் சொன்னது போல் பேட்டி நேரத்துக்குக் காத்திருந்தவர் அது நாள் வரை தன் மனதில் தேக்கியிருந்த நினைவுகளை வடிகாலாக்க இந்தப் பேட்டியைப் பயன்படுத்திக் கொண்டார். அந்த வகையில் என் ஊடக வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத மனிதராகப் பதிந்து விட்டார் செல்வமணி. இது நாள் வரை நான் கேட்கவேண்டும் என்று நினைத்த எல்லாக் கேள்விகளையும் அவரிடம் முன்வைக்கக் கூடியதாக இருந்தது. இந்தப் பேட்டிக்கான தொடர்பினை ஏற்படுத்தித் தந்த நண்பர் ரேகா ராகவனுக்கும் எனது இனிய நன்றியறிதல்கள்.
நேரடியாகக் கேட்க
Download பண்ணிக் கேட்க

கேள்வி- வணக்கம் செல்வமணி அவர்களே! ஆஸ்திரேலிய தமிழ் நேயர்கள் சார்பிலே உங்களை சந்திப்பதிலே மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
பதில்- ரொம்ப நன்றி பிரபாகர். எனக்கும் வந்து உங்கள் மூலமாக ஆஸ்திரேலிய தமிழர்களோட பேசுறதுக்கு வாய்ப்புகள் கிடைச்சதுக்கு முதல்ல என்னோட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னுடைய வணக்கங்கள்.
கேள்வி- எண்பதுகளிலே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவிலே நுழைந்து சாதனைகள் படைத்த ஒரு காலகட்டத்திலே இயக்குநர் ஆபாவாணனைத் தொடர்ந்து உங்களுடைய வரவு பெருமளவிலே கவனிக்கப்பட்டது. ஆனால் அந்த வரவு என்பது இலகுவானதாக உங்களுக்கு அமையவில்லை. பெரும் போராட்டங்கள் சோதனைக்கு பிறகு தான் நீங்கள் ஒரு இயக்குநராக உங்களை நிலைநிறுத்த முடிந்தது என்பதைப் பற்றி அறிந்து கொண்டேன். அந்த ஆரம்பத்தைப் பற்றி சொல்லுங்களேன்?
பதில்- எல்லா ஆரம்பமுமே வந்து கஷ்டமானதாகவே இருக்கும். போராட்டத்திற்கப்புறம் தான் வந்து எந்த வெற்றியையும் அடைய முடியும். சினிமாத் துறையும் வந்து அதே மாதிரித் தான். ஏறக்குறைய வந்து சினிமாவில நமக்கு வந்து அளவற்ற புகழும் பெரும்பாலான பணமும் ஒரு நல்ல தொடர்பும் ஏற்பட்டால் இதில வந்து மற்ற துறையை விட இதில அதிகமான போராட்டம் இருக்கத் தான் செய்யும். ஏன்னா இதனோட வெற்றி வந்து நிறையப் பேரால விரும்பப்படுறதால போராட்டங்கள் எனக்கும் அதிகமாகத் தான் இருந்தது. ஆனால் அப்ப இயக்குநர் ஆபாவாணன் வந்து முதல்ல வந்து ஊமைவிழிகள் என்று ஒரு படத்தை எடுத்து அது வந்து இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக பேசப்பட்டதுக்கு பிறகு தமிழ் சினிமாவில திரைப்படக் கல்லூரி மாணவர்களோட வரவும் அதனோட இருப்பும் வந்து கவனிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில தான் 1988இல் தான் நான் வந்து உதவி இயக்குநராக வெளிவந்தேன். அப்பத் தான் வந்து திரைப்படக் கல்லூரியில என்னோட பட்டப்படிப்பை முடிச்சிட்டு அப்போ இயக்குநர் மணிவண்ணனின் உதவி இயக்குநராக இணைந்து கொண்டேன்.
கேள்வி- எந்த திரைப்டத்தில அவரோட வந்து இணைந்தீர்கள்?
பதில்- பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் ரெண்டு படம் அப்ப வந்து அவரு இயக்கிட்டு இருந்தாரு. அப்ப அதில வந்து அவரோட உதவி இயக்குநராக சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன். அப்ப வந்து உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற படத்தில கூட அவரு இயக்குநராக இருந்தாரு. அந்தப் படத்தில வந்து திரு விஜயகாந்த் வந்து ஹீரோவாக நடிச்சாரு. அப்பத் தான் எனக்கும் விஜயகாந்த் சாருக்கும் ஒரு நல்ல நட்பு ஏற்பட்டிச்சு. அவர் என்னோட நட்புக்காக ஒரு வாய்ப்பளித்தாரு. ஒரு கதையை சொல்லச் சொன்னாரு. அவரே வந்து அப்ப ராவுத்தரும் அவரும் ரெண்டு பேரும் நண்பர்கள். அவங்களால தான் எனக்கு வந்து முதன்முதலில் வாய்ப்பு வந்திச்சு. அந்த வாய்ப்பு பற்றி
இப்ப நான் சொன்னால் ஒரு நாள் போயிடும். அந்த வாய்ப்பை எப்பிடி நான் பெற்றேன் என்டு சொன்னால் ஒரு நாள் போயிடும். அவ்வளவு கடினமான போராட்டத்தில தான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சது.
கேள்வி- அதாவது அந்த புலன் விசாரணை திரைப்படத்தினுடைய கதையை நீங்கள் இப்ராகிம் ராவுத்தர் அவர்களிடம் கொடுக்கும் பொழுது அவருக்கும் அந்த நேரத்திலே விஜயகாந்த்அவர்களுக்கு மிகுந்த வேலைப்பளு இருந்த காரணத்தினால் நீங்கள் அதை ஒரு சித்திரக்கதை மாதிரியாக எழுதிக் கொடுத்ததாகக் கூட அறிந்தேன். அப்படியா?
பதில்- வேலைப்பளு அதிகமாக இருந்தது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் வந்து என் மேல இருந்த நம்பிக்கை வந்து குறைவாக இருந்தது என்பது தான் அதனோட முக்கியமான காரணம். ஏன்னா அப்ப வந்து விஜயகாந்த் சாருட்ட கதை சொல்ல வாறது வந்து ஆயிரக்கணக்கான பேரு. அந்த ஆயிரக்கணக்கான பேர்ல வந்து ஒருத்தரை தேர்ந்தெடுக்கிறது வந்து ரொம்ப கஷ்டமான காரியம். அப்ப எனக்கு வந்து எந்தவிதமான பின்புலமோ இல்லை. என்னைப் பார்க்கும் போது கூட என் மேல ஒரு நம்பிக்கை ஏற்படுற மாதிரி எந்த அமைப்பும் இல்லை. அப்ப வந்து என் மேல ஒரு பெரிய நம்பிக்கை இல்லை.
அப்ப நான் கதை சொல்லி அவங்களை ஒத்துக்க வைக்க முடியும் என்டுற நம்பிக்கை கூட எனக்கு போய்டுச்சு. அதுக்கப்புறம் ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு எல்லாரும் கதை சொல்றாங்கன்னு நாமளும் சொன்னா நல்லாயிருக்காது என்டு அடுத்த கட்டத்தில என்ன சொல்லலாம்னு யோசித்திட்டு தான் வந்து நான் வந்து அந்த சொல்லப்போற கதையை அப்படியே வந்து ஒரு காட்சிகளாக மாற்றி அந்த காட்சியை வந்து படங்களாக மாற்றி அந்தப் படத்தைவந்து வர்ணப்படமாக மாற்றி அதை போட்டோகிராப் பண்ணி ஒரு மாடல் தயார் பண்ணி அவங்களிட்ட கொடுத்தப்புறம் தான் அவங்களுக்கு என் மேல ஒரு நம்பிக்கை வந்தது. ஏன்னா முதலில நம்பிக்கை ஏற்படுறது தான் சினிமாவில வந்து ஒரு கஷ்டமான காரியம். அதைப் பண்ணிட்டமா அடுத்து வந்து நம்மட வேலை சீக்கிரமாக வந்து முடியும்.
கேள்வி- உண்மையை சொல்லப் போனால் இன்றைக்கு வந்து உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் பலர் வித்தியாசமான சினிமா என்று சொல்லும் பொழுது அதாவது செல்வமணி என்கிற இயக்குநருடைய பாணி என்பது அதாவது நடைமுறை வாழ்க்கையிலே அல்லது பரபரப்பான ஒரு செய்தியினை அப்படியே எடுத்து அதற்குப் பின்னால் ஒரு பெரும் திரைக்கதையை உருவாக்கி அவற்றை சினிமாவாக்குவது என்பது செல்வமணி அவர்கள் தமிழ் சினிமாவுக்கு அமைத்துக் கொடுத்த புதிய பாணி என்று நான் சொல்வேன் ஏனென்றால் புலன்விசாரணை என்ற திரைப்படம் வந்த பொழுது அப்படியே அந்த ஆட்டோ சங்கருடைய கதையை நீங்கள் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு அதற்கொரு நல்ல திரைக்கதையை அமைத்து அந்தப் படத்தை உருவாக்கியிருந்தீர்கள்.
அதற்குப் பின்னால் எத்தனையோ இளம் இயக்குநர்கள் அல்லது இப்பொழுது இருக்கின்ற
சங்கர் போன்ற இயக்குநர்கள் சமுதாயப் பிரச்சினைகளை வைத்து எடுக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக நீங்கள் எண்பதுகளின் இறுதியிலே வந்திருந்தீர்கள். இப்படியான ஒரு பாணியினை அன்றைய காலகட்டத்திலே குறிப்பாக தமிழ் சினிமா என்பது கிராமியம் சார்ந்த அல்லது நகரத்திலும் ஒரு பழகிப் போன கதையம்சம் என்ற ஓட்டத்தோடு இருந்த ரசிகனுக்கு இப்படியான ஒரு வித்தியாசமான ஒரு பாணியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது?
பதில்- நான் முதன்முதலாக இயக்குநராக வரணும் என்று முடிவெடுத்தப் பிறகு எனக்கு கூட வந்து வெற்றின்னா எல்லாருக்கும் வந்து நிரந்தரமான ஒன்றில்லை. என்னை விட சாதனை படைச்சவங்க ஶ்ரீதர் பாலசந்தர் பாரதிராஜா பாக்கியராஜ் இது மாதிரி ஒவ்வொரு காலகட்டத்திலையும் ஒவ்வொரு இயக்குநர்கள் சாதனை பண்ணிட்டே தான் இருக்காங்க. இதை மாதிரி ஆயிரக்கணக்கான ஏறக்குறைய ஐயாயிரம் இயக்குநர்கள்தமிழ் சினிமாவில இருக்காங்க. ஆனால் வந்து ஒரு ஐம்பது இயக்குநர்கள் தான் தமிழ் சினிமாவில வந்து இன்னைக்கும் வந்து நினைவில நிறுத்தப்படுறாங்க. அப்ப நான் முதல்ல படம் பண்ணனும் என்று நினைச்சவுடனேயே என்னோட முத்திரை வந்து இருக்கணும். படம் பண்றதே வெற்றி பெறுவதில இருக்கிறதை விட என்னோட முத்திரை வந்து இருக்கணும் என்டு நான் முடிவு பண்ணினேன்.
அப்ப எது மாதிரியான படங்களை வந்து நாம இயக்கலாம் என்டு இருக்கிறப்போ தான் பொதுவாக நிறைய விசயங்களை நாம தேர்ந்தெடுத்தோம். அப்ப வந்து நகர்ப்புறம் அது சம்பந்தமான திரைப்படங்களை வந்து அதாவது மத்திய தர வர்க்கத்திற்கான குடும்பத்திற்குன்டான கஷ்டங்கள் அதனுடைய கலாசார பிண்ணனி உறவுமுறை இதெல்லாம் வந்து திரு பாலசந்தர் அவரால சொல்லப்பட்டது. அதற்கப்புறம் யார் படம் பண்ணினாலும் இது பாலசந்தர் படம் மாதிரி இருக்குன்னு சொல்வாங்க. பாலசந்தர் படம் பண்ணினால் அது வேற யாரோ படம்ன்னு சொல்வாங்க. அப்புறம் காதல். காதல் படங்களை ஶ்ரீதர் படம் என்பாங்க. அதைப் போல வந்து பாரதிராஜா வந்து தமிழ் கிராமப்புற இல்லை தமிழ் நாட்டோட மண் வாசனையான படங்களை வந்து தேர்ந்தெடுத்து இல்ல அதற்கான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை மாதிரியான படங்களை டைரக்ட் பண்ணுவாரு. அப்ப யார் படம் பண்ணினாலும் வந்து அது பாரதிராஜா படம் மாதிரியிருக்கு அப்பிடின்னு சொல்றது மாதிரியான ஒரு நிலையை உருவாக்கினாரு.
அப்ப நான் வந்து என்ன மாதிரியான படங்களை பண்ணலாம் அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் இல்ல நானே எனக்குள்ளே கேள்விகளை கேட்ட பொழுது அப்ப எது இதுவரைக்கும் தமிழ் சினிமாவில இல்ல இந்திய சினிமாவில இல்லாத ஒரு பாணியைக் கையாளணும். அதை வந்து தெரிவு செய்யணும்னா நிறைய ஏறக்குறைய ஒரு வருடமாக இருந்து யோசித்து வாழ்வியலில சமூகத்தில வந்து நாம கதைகளை உருவாக்கிறதை விட
சுற்றி நடக்கிற விசயங்களை நாம கதைகளாக மாற்றலாம். அது வந்து மக்களால பெரிதாக விரும்பப்படும். அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் தான் கதைகளை தேர்ந்தெடுத்தேன். நம்மளை சுற்றி நடக்கிற சிக்கல்கள் இல்லா நல்ல விஷயங்கள். கெட்ட விஷயங்கள். நல்ல விஷயங்களில இருந்து நல்லதை சொல்றது. கெட்ட விஷயங்களில இருந்து என்ன மாதிரி கெட்டது நடக்குது அதை எப்பிடி வந்து அதை எதிர்கொள்ளனும் என்ற விஷயத்தை வந்து சொல்றது. இது
மாதிரி தேர்ந்தெடுத்து நான் வந்து current affairs என்று சொல்றது ஒன்னு. அதை நான் வந்து தேர்ந்தெடுத்தேன்.
கேள்வி- உண்மையிலேயே அந்த புலன்விசாரணை என்பதின் அந்த திரைப்படத்தினுடைய வெற்றி வந்து ஒரு பரபரப்பான வெற்றி என்பது உங்களுக்கும் அல்லது எங்கள் மீதான நீங்கள் எடுத்துக் கொண்ட பாதையின் மீதான ஒரு நம்பிக்கையை ஒரு வலுவாக ஏற்படுத்தியிருக்கும் இல்லையா?
ஆமாம்
கேள்வி - அந்தப் படத்திற்கு பின்னர் உங்களுக்கு கிடைத்த ஒரு பெரும் பொறுப்பு அன்றைய காலகட்டத்திலே முன்னணி நட்சத்திரமாக இருக்க கூடிய விஜயகாந்த் அவர்களுடைய நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். அந்தத் திரைப்படத்தை இயக்கக் கூடிய பெரும் வாய்ப்பு. அந்த வாய்ப்பு கிடைத்த அனுபவம். அதைப் பற்றி சொல்லுங்களேன்?
பதில்- தமிழ் சினிமாவில மட்டுமல்ல வாழ்க்கையில வந்தும் முதல் வெற்றி தான் ரொம்ப கஷ்டம். முதல்ல பண்ணனும்கிறது தான் ரொம்ப கஷ்டம். அதுக்குப் பிறகு அந்த வெற்றி நிறைய வாய்ப்புகளை உருவாக்கும். நிறைய பணத்தையும் உருவாக்கும். அதைப் போலவே வந்து அந்த புலன்விசாரணையின் வெற்றி தான் எனக்கு வந்து ரொம்ப கஷ்டமான ஒரு வேலையாக இருந்திச்சு. அதுக்கப்புறம் அந்த ஒரு வெற்றி வந்து உடனே மிகப் பெரிய ரசிகர்களைத் தந்தது. எந்த உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் வந்து அன்னைக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில இருக்கிற எல்லா நட்சத்திரமும் வந்து என்னோட படம் பண்ணனும் என்று விருப்பப்பட்டாங்க. அதைப் போல வந்து மாபெரும் வெற்றிப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு புதுசான ஒரு பாதையை அந்த படம் உருவாக்கிச்சு. அப்ப நிறையப் பேர் வந்து நிறைய இயக்குநர்கள் நிறைய நட்சத்திரங்கள் வந்து என்னோட படம் பண்ணணும்னு விருப்பப்பட்டாங்க. ஆனால் நான் வந்து விஜயகாந்த் சாருக்கு தான் முதல் உரிமை கொடுத்தேன். ஏன்னா அவர் தான் வந்து ஒருத்தருக்குமே தெரியாத செல்வமணியை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில இருக்கிற அனைத்து தமிழர்களுக்கும் வந்து கொண்டு போய் சேர்க்கிறதுக்கு ஒரு காரணியாக இருந்தாரு.
அதனால அவர் படத்தை டைரக்ட் பண்றதுன்னு நான் முடிவெடுத்தப் பிறகு அப்ப வந்து என்னோட ரெண்டாவது படமும் பேமஸ்ஸா இருந்தது. அதுக்குப் பிறகு வந்து நூறாவது படமாக பண்ணலாம் அப்பிடின்னு முடிவு அவர் வந்து பண்ணினதுக்கப்புறம் தான் நான் அந்தப் படத்தை செலக்ட் பண்ணி கேப்டன் பிரபாகரனை இயக்குவதற்கு வந்து அந்த நன்றியுணர்ச்சி தான் காரணமாக இருந்திச்சு. அன்றைக்கு வந்து பெரிய படம் பண்ணணும்னா அதுக்கு வந்து கூட்டாக இருந்தால் தான் பண்ணமுடியும் என்ற நிலை .இருந்தது தான் நான் கேப்டன் பிரபாகரனை உருவாவதற்கு டைரக்ட் பண்ணுறதுக்கு ஒரு காரணமாக இருந்திச்சு.
கேள்வி- பொதுவாக இந்த நூறாவது படம் என்பது பல நடிகர்களுக்கு பெரும் வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு சில நடிகர்களுக்குத் தான் ஒரு தனித்துவமான பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த வகையிலே விஜயகாந்த்திற்கு கிடைத்த அந்த படம் என்பது ஒரு பெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது இல்லையா? பதில்- ஆமாமாம். யாருக்குமே வந்து நூறாவது படம் வந்து வெற்றிப் படமாக அமைந்ததில்லை. தமிழ் நட்சத்திரத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில இருக்கிற எந்த ஆர்ட்டிஸ்க்குமே நூறாவது படம் வெற்றியை தந்ததில்லை. ஏன்னா நூறாவது படம் வந்து பெருசா எதிர்பார்க்கப்படறதால பெருசா வந்து அந்த எதிர்பார்ப்பிற்கு யாருமே ஈடுசெய்றேல்ல. குறிப்பாக சொல்லனும்னா எனக்கு தெரிஞ்சு எல்லா படங்களையும்; அப்பிடி சொல்லுற மாதிரி தான் இருந்திச்சு. எனக்கு தெரிஞ்சு எல்லா நட்சத்திரத்தோட யாரோட நூறாவது படமும் வெற்றிப் படமாக அமைஞ்சதில்லை. ஆனால் முதல் நூறாவது வெற்றிப் படமாக அமைந்ததன்னா எங்களோட காம்பினேசன்ல அமைந்த கேப்டன் பிரபாகரனை முழு உறுதியாக என்னால சொல்ல முடியும். அதுக்கு வந்து தமிழ் ரசிகர்களுக்கும் விஜயகாந்த் சாருக்கும் இப்ராகிம் ராவுத்தருக்கும் நன்றியை இந்த நேரத்தில சொல்றதுக்கு கடமைப்பட்டிருக்கேன்.
கேள்வி- உண்மையிலேயே எண்பதுகளிலே ஒரு தங்கப் புதையலாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. அதாவது அவரிடம் இருந்து ஒரு ஐந்து பாடல்களை எடுத்துக் கொண்டாலே அந்தப் பாடல்களைச் சுற்றி ஒரு திரைக்கதை அமைத்து பெரும் வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் சினிமா உலகிலே அவரோடு இணைந்து நீங்கள் முதல் ரெண்டு படங்களிலே பணியாற்றிய போதும் கூட பாடல்கள் சிறப்பாக வந்தாலும் கூட அந்த முதல் படத்திலே மூன்று பாடல்கள் என்று நினைக்கிறேன். இரண்டாவது படத்திலே மூன்று பாடல்கள் என்று (இரண்டு படத்திலுமே இரண்டு பாடல்கள் தான் என்கிறார்) அதாவது காட்சியாக படமாக்கப்பட்டது இல்லையா?
பதில்- ஆமாம். அவரு கூட படம் பார்க்கிறதுக்கு முன்னாடி வந்து சொன்னாரு. செல்வமணி பாட்டே இல்லாமல் மியூசிக் பண்றதால என்ன லாபம் என்டாரு. வேற ஏதாச்சும் வைச்சு பண்ணலாமே என்று கேட்டார் நான் சொன்னேன், இந்தப் படத்திற்கு வந்து பாட்டு அவசியமில்லை சார், இந்தப் படத்திற்கு பின்னணி இசை தான் அற்புதமாக தேவைப்படுற விஷயம். அந்த இசையை வந்து சார் நீங்க சரியாக கொடுக்க முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதனால வந்து நீங்க இந்த படத்திற்கு இசையமையுங்க என்று ஏறக்குறைய நான் வற்புறுத்தி தான் சம்மதிக்க வைச்சேன்.
கேள்வி- உண்மையை சொல்லப் போனால் இசைஞானி இளையராஜாவினுடைய இன்னுமொரு பரிமாணம் தமிழ் சினிமா மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே பின்ணணி இசை என்பதற்கு தனி இலக்கணம் வகித்தவர் இசைஞானி இளையராஜா. அந்த பின்ணணி இசைக்கான ஒரு களத்தை இந்த இரண்டு படங்களையும் நீங்கள் கொடுத்து அதாவது அந்த படங்கள் வந்த பொழுது அதனுடைய பிரதிபலிப்பு எப்படி இருந்தது?
அதாவது அந்தப் படங்களை முழுமையாக நீங்கள் இயக்கிய பின்னர் அந்த பின்னணி இசையை கோர்த்த பொழுது அவர் தன்னுடைய கருத்தை வெளியிட்டு இருந்தாரா?
பதில்- ஆமாம். படம் பார்த்திட்டு வந்து அவர் சொன்னாரு. பாட்டில்லாம எடுக்கிறீயே ஏன்னா இளையராஜா பாட்டு இருந்திச்சுன்னா அதாவது இளையராஜா பாட்டு ஐந்திருந்திச்சுன்னா படம் ஓடிடும் நிலையில தான் தமிழ் சினிமா இருந்தது. அவர் கூட என்ன இது புதுசா ஒரு பையன் வந்திருக்கான் அவருக்கு கூட நம்பிக்கை இல்லாமல் தான் இருந்திருக்கும். படம் பார்த்திட்டு சொன்னாரு. செல்வமணி வந்து மிகப் பெரிய இயக்குநராக வர்றதுக்கான சாத்தியம் உன்னோட முதல் படத்திலேயே தெரியுது. வாழ்த்துக்கள். பாட்டில்லாட்டி இந்தப் படம் எப்பிடி இருக்கும்னு நினைச்சேன். இந்த ரெண்டு பாட்டில்லாட்டிக் கூட இந்தப் படம் ஓடக் கூடிய சாத்தியத்தை நீங்க ஏற்படுத்தியிருக்கீங்க என்று மனம் திறந்து அவர் பாராட்டினாரு.
கேள்வி- மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. அதன் பின்னர் அதிரடியாக இந்த இரண்டு படங்களிலையும் இருந்து விலகி முழுமையான புதுமுகம் என்று சொல்வதை விட பிரசாந்த் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் கூட ஒரு இளம் நாயகன். ரோஜா மற்றும் நாயகர்கள் அந்தப் படத்திலே ஒரு அறிமுகமாக வந்தவர்கள். இவர்களை வைத்து ஒரு இளமை ததும்புகின்ற ஒரு திரைப்படம் முழுமையான காதல் கதை. அந்தக் காதல் கதையோடு அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள். இவற்றை வைத்து செம்பருத்தி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தீர்கள். இப்படி ஒரு அதாவது பெரும் நட்சத்திரத்தை வைத்து படம் பண்ணக் கூடிய அளவிற்கு உங்களுக்கு ஒரு வலிமையும் மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கையும் வந்த காலகட்டத்திலே இப்படி இளம் நடிகர்களை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற அந்த நோக்கம் எப்படி வந்தது?
பதில்- நான் டைரக்டராக வர்றதுக்கு முன்னாடி வந்து அரவிந்தராஜ்ன்னு என்னோட சீனியர் அவர் வந்து பெரிய ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அவர மாதிரி பல இயக்குநர்கள் சீனியர் ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அப்புறமாக வந்து ஒரு காலகட்டத்திற்கு பிறகு மறைந்து போயிடுறாங்க அல்லது காணாமல் போயிடுறாங்க. இத நான் ஏன் சொல்றேன்னா
அவங்க வந்து பெரிய நட்சத்திரத்தை வைச்சுத் தான் பண்றாங்க. அப்ப அந்த வெற்றி வந்து ஏன் ஒரு நட்சத்திரத்தை மட்டும் போய் சேர்ந்திடுது ஏன் ஒரு இயக்குநரை போய் சேருவதில்லை. அப்ப வந்து ஒரு தோல்விப் படமோ இல்ல படங்கள் இல்லாத காலகட்டத்திலே அவங்க மறந்திடுறாங்க இல்லை மறக்கடிக்கப்படுறாங்க. அப்பிடிங்கிறது எனக்கு தெரிஞ்ச பிறகு தான் வந்து நான் ரெண்டாவது படம் கேப்டன் பிரபாகரன் பண்ண பிறகு அந்த படமும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்ச பிறகு ஏறக்குறைய எல்லாருமே என்னோட படம் பண்ணனும் என்றுஆசைப்பட்ட காலகட்டத்திலே
நான் வந்து எந்தப் படமும் இப்ப பண்ணக் கூடாது. அடுத்து நான் வந்து எந்த பிரபல நடிகர்களும் இல்லாம புதுமுகங்களோட படம் பண்ணனும். அப்பிடின்னு வந்து முடிவு பண்ணி நாம ஒரு வெற்றிப் படம் பண்ணும் போது ஐம்பது பர்சண்ட் நமக்கு வந்து சேரும். அதனால வந்து அப்பிடி பண்ண முடிவு பண்ணினேன்.
ஆனால் அதில கூட வந்து ஆபத்து கூட இருக்கு. ஒருவேளை வந்து அந்தப் படம் வெற்றிப் படமாக அமையலைன்னா அன்றைய காலகட்டத்திலே மறக்கடிக்கப்பட்டுக் கூட இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை. நம்மளால வெற்றி பெற முடியும்னு என்று சொல்லி அன்னைக்கு வந்து பிரசாந்த் புதிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட நான் அவரை வைச்சு படம் பண்ணும் போது அவர் படம் ஆரம்பிக்கக் கூட இல்லை. வைகாசி பொறந்தாச்சு படத்தில நடிச்சிட்டு இருக்காரு அது ரிலீஸாகக் கூட இல்ல. அவர் வந்து எனக்கொரு greeting அனுப்பி வைச்சாரு. அதில வந்து அழகான ஒரு குழந்தைத்தனமான முகம்
அவரிட்ட இருந்தது. அதனால வந்து அவரை choose பண்ணினன். அப்புறம் வந்து ரோஜாக்கு முதல்ல ஏறக்குறைய ஒரு இருபது இருபத்தைந்து ஹீரோயின்ஸை வைத்து shoot பண்ணினேன். ஷீட் பண்ணி அவங்க யாருமே சரியில்லாத போது தான் ஒரு பத்துப் பதினைஞ்சு நாள் ஷீட் பண்ணினாப்புறம் தான் ரோஜாவ வந்து செலக்ட் பண்ணினேன். அப்போ தேடி தான் அந்த படத்தை வந்து எல்லாருமே புதுசா வரணும்னு ஆரம்பிச்சு அந்தப் படம் வந்து ஒரு வெற்றிப் படமாக அமைஞ்சதால தான் இன்னைக்கு வந்து ஏறக்குறைய பதினைஞ்சு வருசமானாக் கூட தமிழ் சினிமாவில வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாக் கூட இன்னைக்கும் தமிழ் சினிமாவில் எனக்கு பேர் இருக்கிறதுக்கு காரணம் வந்து அன்னைக்கு எடுத்த முடிவு தான் ஒரு மிகப் பெரிய காரணம்.
கேள்வி- அந்தப் படத்திலே இசைஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தனித்துவமாக கவனிக்கப்பட்டதற்கு ஏதாவது ஒரு பின்னணி இருந்ததா? பதில்- நிச்சயமாக. நிச்சயமாக இருந்தது. அவர் ஏற்கனவே வந்து செல்வமணி உனக்கு வந்து என்னோட வால்யூ தெரியலை. நீ வந்து பாட்டே இல்லாம படம் எடுத்தாய். இப்ப பாரு இந்தப் படத்திலே ஒன்பது பாடல் வைச்சிருக்கேன். இப்ப பாரு இளையராஜா இளையராஜா என்டு சொல்ல வைக்கிறேன்னு சொல்ல வைக்கிறேன்னு சொல்லி அவர் சொல்லிலே அதை ஒரு பாட்டாக வைச்சு சொன்னாரு. ஆனால் இளையராஜா வந்து உலகத்திலேயே மிகப் பெரிய இசையமைப்பாளர்னு ஏற்றுக்கிட்டேன்னா இந்த ஒன்பது பாடல்களையும் காலை 6.45க்கு போட்டு start பண்ணினோம்;. எட்டு மணிக்கு வேற படத்தோட டியூன்ஸ்ல அவரு இருந்தாரு. அங்க அவங்களுக்கு ஒன்பது மணிக்கு பணி ஆரம்பிக்கும். அதுக்கு முன்னாடி எனக்கு டியூன்ஸ் கரெக்ட் பண்ணிட்டு போகணும். இந்த ஒன்பது பாட்டும் குறைஞ்சபட்சம் ஒரு முக்கால் மணி நேரம் ஒரு மணிக்குள்ள கொடுத்திட்டு அவரு டிபன் சாப்பிட்டு வேலைக்கு போனாரு. இந்த உலகத்தை கலக்கிய இந்த ஒன்பது பாட்டுமே ஒரு முக்கால் மணி நேரத்தில தான் டியூன் செய்யப்பட்டதுன்னா மிகப் பெரிய என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு உலக சாதனை தான்.
கேள்வி- கண்டிப்பாக. இப்போதெல்லாம் நாட்கணக்கில் எல்லாம் எடுக்கக் கூடிய பாடல் பதிவுகளென்பது...
இடையிலே குறுக்கிட்டு சொல்கிறார்...(நாட்கணக்கில் இல்ல வாரக்கணக்கில மாதக்கணக்கில இந்த கம்போஸ் வந்து அங்க போறாங்க இங்க போறாங்க வெளிநாடு போறாங்க ஊட்டி போறாங்க காஷ்மீர்
போறாங்க இல்ல தாய்லாந்து போறாங்க அமெரிக்கா போறாங்க எங்கேயும் போகாமல் பிரசாத் ரெக்காடிங் தியேட்டர்ல ஒரு சின்ன ரூம்ல எனக்கு வந்து ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்தாங்க.)
கேள்வி - நிச்சயமாக உண்மையிலே ஒரு சாதனை. அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சின்ன தேக்கம்.
பின்னர் மக்களாட்சி என்றொரு திரைப்படம். அந்த திரைப்படத்திலே வந்திருந்த கதாபாத்திரங்கள் எல்லாம் சமகாலத்திலே இருக்கக் கூடிய அரசியல்வாதிகள் அவர்களுடைய அந்த பரிமாணங்களாக இருந்தன. அந்தப் படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது உங்களுக்கு. ஆனால் அந்தப் படத்தை எடுத்ததன் மூலம் நீங்கள் பல சவால்களையும் சோதனைகளையும் சந்திருத்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அப்படியா?
பதில்- நிச்சயமாக. நிச்சயமாக வந்து ஒரு தமிழ்நாட்டிலே இல்ல இந்தியாவிலே வந்து ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கு. பொய்யை சொல்லி வாழலாம். உண்மையை சொல்லி வாழ முடியாது. இது தான் தமிழ்நாட்டினுடைய உலகத்திலையும் இருக்கலாம். ஆனால் இந்தியாவிலே கொஞ்சம் அதிகமாக இருக்கு. உண்மையைச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அப்ப நான் வந்து குற்றப்பிரிவு என்று எடுத்த பிறகு அது வந்து ஈழத் தமிழரை அவர்களோட மரணத்தை அந்த பின்ணணியை வைச்சு எடுத்தது தான் வந்து நான் பண்ணின தவறுன்னு நினைக்கிறேன். அது தவறு இல்ல. அது வந்து உண்மையை சொன்னதற்காக ஏற்பட்ட தவறு. பொய்யாக சொல்லி வாழ்ந்திட்டுப் போகலாம். உண்மையை சொல்ல முடியாது.
அப்புறமாக வந்து மக்களாட்சி வந்து ஏறக்குறைய தமிழ்நாட்டிலே நிலவின எல்லா உண்மைகளுக்கும் அது வந்து மிகப் பெரிய ஒரு வெளிச்சம் போட்டுக் காட்டிச்சு. அதனால என் சொந்த வாழ்க்கையில திரைப்படத்துறையிலே நிறைய சவால்களை நிறைய போராட்டங்களை எதிர்கொண்டேன். இருந்தாலும் நான் ஒரு படைப்பாளியாக வந்து அந்த
போராட்டங்களை எடுத்துக் கொண்டேன்.
கேள்வி- இந்த குற்றப்பத்திரிகை திரைப்படம் அந்த திரைப்படத்தை எடுத்து அதன் மூலம்
கிடைத்த சோதனைகளை அந்த திரைப்படத்தை எடுத்து அந்த திரைப்படத்தினுடைய வெளியீடு தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக. அப்படியான ஒரு சோதனைக்கு பின்னர் நீங்கள் உங்களுடைய பாணியினை மாற்றிக் கொண்டீர்களா? ஏனென்றால் இடையிலே சில படங்கள் வந்தன. ராஜஸ்தான் திரைப்படம் அது கூட நடைமுறைப் பிரச்சினை என்றாலும் கூட சில திரைப்படங்கள் வந்த பொழுது அந்த பாணி
என்பது செல்வமணி என்ற அந்த இயக்குநருடைய தனி முத்திரையாக இல்லாமல் போனதற்கு இப்படியான ஒரு படத்தினுடைய சோதனை கூட காரணமாக இருந்திருக்குமா?
பதில்- நிச்சயமாக இருந்திருக்கும். ஒரு குற்றப்பத்திரிகைக்கும் மக்களாட்சிக்கும் பின்னால் ஒரு உண்மை தெரிஞ்சுது. தமிழ்நாட்டிலே உண்மை சொல்லி வாழ முடியாது என்று தெரிஞ்சுது. அப்ப உண்மை சொல்றது வந்து கொஞ்சம் குறைச்சிட்டேன். ராஜஸ்தானில கூட ஒரு உண்மை இருக்கு. ஆனால் உண்மையை விட பொய்யும் கற்பனையுமாக கலந்து அந்த படம் பண்ணினதால வந்து என்னோட நான் தேர்ந்தெடுத்த பாதையில இருந்து நானே விலகிட்டேன். எது மேல வந்து உங்களுக்கு நம்பிக்கையும் வந்து ஆதிக்கமும் இருக்குமோ அதில படம் பண்ணினால் தான் வந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கே நம்பிக்கையில்லாத ஒரு விசயத்தில வந்து படம் பண்ணும் போது வெற்றி வர்றதுக்கு கொஞ்சம் கஷ்டம். அதனால வந்து என்னோட வெற்றிக்கும் தோல்விக்கும் வந்து இது தான் முழுமையான காரணம் என்டு நான் நினைக்கிறேன்.
கேள்வி- இன்றைக்கு வந்து உங்களுடைய பாணியை அடியொற்றி பல இயக்குநர்கள் வெற்றியை கண்டிருக்கிறார்கள். கண்டுவருகிறார்கள். மீண்டும் அந்த செல்வமணியை நாம் எப்பொழுது பார்க்கப் போகின்றோம்?
பதில்- அதற்கான முயற்சியைத் தான் இப்ப வந்து எடுத்திட்டு இருக்கேன். புதிய படம் புதிய பாணியிலான இந்தப் படமும் வந்து புதிய பாணியான ஆறு மாசம் யோசிச்சு இப்ப
தொடங்க இருக்கிறேன். அது வந்து பெப்ரவரி மாத என்ட்டில வந்து மார்ச்சில சூட்டிங் போறதா பிளான் பண்ணியிருக்கோம். இந்தப் படம் வந்து தமிழ் சினிமாவில இன்னொரு வாசலைத் திறந்து விடும். நான் தான் வந்து தமிழ் சினிமாவில பிரமாண்டத்தோட வாசலை திறந்து வைச்ச ஒரு இயக்குநர். அதைப் போல இப்ப ஒரு வாசலைத் திறக்க இருக்கிறேன். இந்த வாசல் வந்து தமிழ் சினிமாவில வந்து இன்னொரு புதிய பரிமாணத்தை தமிழ் சினிமாவிற்கு திறந்து விடப் போகும் என்டு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. அந்த் படம் வந்து மிக விரைவிலே தொடங்க இருக்கிறேன். அது வந்து ஒரு short time பிலிமாகக் கூட இருக்கும் அந்த பிலிம்.
கேள்வி- அந்த வாய்ப்புக்காக அந்த படத்தை பார்க்கக் கூடிய ஓர் ஆவலோடு நானும் ஓர் ரசிகனாக இங்கே காத்திருக்கிகேன். நிறைவாக எமது ஈழத் தமிழர்களுடைய போராட்டங்கள் அவர்களுக்காக குரல் கொடுத்தவர் என்ற வகையிலே இன்னுமொரு பரிமாணம். செல்வமணி என்கின்ற ஒரு மனிதநேயமிக்க மனிதரை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்றைய நிலையிலே அரசியல் அனாதைகளாக இருக்கக் கூடிய இந்த ஈழத் தமிழினம் பற்றி உங்களுடைய பார்வை என்ன?
பதில்- இது வந்து ஒரு கடினமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில வந்து ஒரு கடினமான கேள்வி. இருந்தாலும் இப்ப வந்து ஒரு தமிழீழத்திலே பிறந்த ஒரு சக்தியாக இல்ல ஒரு மனிதனாக ஒரு தமிழனாக பதில் சொல்ல வேண்டிய ஒரு காலகட்டம் இருக்கு.
எந்த சுதந்திரமும் பிறரால் வாங்கிக் கொடுக்கபடுறது இல்ல. அதாவது இன்னைக்கு இருக்கிற தமிழ் ஈழத் தமிழருக்கு ஈழச் சகோதரர்களுக்கு நான் ஒரேயொரு உண்மையைத் தான் சொல்ல விரும்புறேன். அதாவது எந்த சுதந்திரமும் பிறரால் பெற்றுத் தரப்படுறது
இல்ல. அந்த பிறரை நம்பினதால தான் வந்த இழப்பு தான் சோதனை தான் சுதந்திரத்திற்கும் ஈழப் போராட்டத்திற்கும் வந்த பின்னடைவு. இன்னொருத்தரை நம்பும் போது அவங்களோட ஆளுமை கூட வந்து அவங்க உதவும் போது வந்து அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதே மாதிரிப் பண்ண வேண்டிய சூழ்நிலை. உலகத்தில பார்தீங்கன்னா எல்லாப் போராட்டமும் சிறிலங்காவில இருந்து இல்ல இந்தியாவில இருந்து
சுதந்திரத்தை அடைஞ்ச எல்லா நாடுகளுமே அந்த நாட்டு மக்களால அந்த நாட்டு சக்திகளால வந்து அந்த சுதந்திரம் அடையப்பட்டிருக்கு. இன்னைக்கு ஈழச் சுதந்திரம் வந்து பெரும்பாலும் வந்து அது இந்தியாவினை சார்ந்திருக்கிறதால அதனோட இந்தியாவினை சார்ந்திருக்கு. தோல்வியும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. வெற்றியும் இந்தியாவை சார்ந்து அமையுறதால தோல்வியும் குரோதமும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. அது தான் வந்து இன்னைக்கு இந்த ஈழச் சுதந்திரம் வந்து பின்னடைவை எதிர்நோக்கியதற்கு மிகப் பெரிய காரணம். இந்தியாவை நம்பியதால தான். இந்திய அரசாங்கத்திடம் இருந்து மாறுதலான சாத்வீகமானதை மட்டும் எடுத்துகிட்டு சுதந்திரத்தை இவங்களே வந்து எடுத்திருந்தால் இன்னைக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காதுங்கிறது என்னுடைய கருத்து.
இன்னைக்கு அதை விட மிகப் பெரிய சோதனை, இப்ப வந்து அமெரிக்காவுக்கு போயிருந்து மற்ற நண்பர்களுடன் பேசும் பொழுது அன்னைக்கு வந்து ஏறக்குறைய நிறைய வெளிநாடுகளுக்கு போகும் போது எல்லா ஈழத் தமிழர்களுக்காக
பகுதி நேர வேலையாகவே வைச்சிட்டு இருப்பேன். அப்ப போகும் போது எனக்கு தெரிஞ்சது வந்து ஒரே தலைமை. ஒரே உணர்வு. ஒரே இலக்கு. ஈழத் தமிழர்களோட ஒரு பிரிவில தான் நான் அன்னைக்கு வந்து உட்கார்ந்தேன். ஆனால் இன்னைக்குப் போகும் போது ஒரு வெட்ககரமான ஒரு அவமானகரமான ஒரு உண்மையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. இப்ப போகும் போது நான் வந்து யாழ்ப்பாணத்தை தமிழனை நான் வந்து கிளிநொச்சி. நான் வந்து வவுனியா. நான் வந்து கொழும்பில இருக்கேன். இல்ல நான் இந்த ஜாதியில இருக்கேன். இப்ப இது தான் பின்னாடி இருக்கேயொழிய இந்த ஈழம் என்றதே பெரிய பகுதியா அதில வந்து பகுதி பகுதியாக வந்து என்னோட ஈழத் தமிழர்கள் பிரிஞ்சு நிற்கிறதைப் பார்க்கும் போது முள்ளிவாய்க்காலிலே ஏற்பட்ட வலியை விட மிகப் பெரிய வலியை வந்து நான் இப்ப அமெரிக்கா போய்ட்டு வந்த போது உண்மையாகவே அந்த வலியை உணர்ந்தேன். முள்ளிவாய்க்காலில தான் அன்னைக்கு மே 15, 17ல நடந்தது தான் என்னுடைய வாழ்க்கையில வந்து மிகப் பெரிய சோதனை அன்றைய நிகழ்வு தான்.
ஆனால் அந்த சோகத்தையும் மிஞ்சுகிற சோகமாக இன்னைக்கு வந்து உலக நாடுகளில இருக்கிற ஈழத்தமிழரை பார்க்கும் போது பல பகுதிகளாக பிரிந்து நிற்கிறார்கள். இப்பிடி இருந்தால் எப்ப ஒன்னு சேர்வார்கள். இவங்களை யார் சேர்ப்பாங்க? என்னைக்கு ஈழம் வந்து சுதந்திரமடையிறது? எப்பிடி ஈழத்தின் சுதந்திரத்தினை அடைவாங்க என்ட மிகப் பெரிய கேள்வி வந்து பயத்தை ஏற்படுத்துது. தயவுசெய்து உங்களுக்காக குரல் கொடுத்த
அதை விரும்பின உங்களுடைய உரிமையை நிலைநாட்ட போராடிய ஒரு சிறிய அணிலாக
ஒரு சிறிய சக்தியாக உங்கள் எல்லார்கிட்டேயும் கேட்கிற ஒரேயொரு விண்ணப்பம். ஒரு வேண்டுகோள். எதுவேணாலும் நீங்க வைச்சுக்கோங்க. தயவுசெய்து யாரும் ஜாதியால இனத்தால பகுதியால கூட பிரிஞ்சு போகாதீங்க, ஒரு இனமாக ஒன்று சேருங்க. அன்னைக்கு
தான் உங்களுக்கு சுதந்திரம்வந்து கதவைத் தட்டும் என்டு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. தயவுசெய்து ஒன்று சேருங்கள். எங்கள் சுதந்திரத்தை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் போராடுங்கள். நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள்.
கேள்வி- செல்வமணி அவர்களே! அவை ஜீரணிக்க கஷ்டமானவை என்றாலும் கூட அவை தான் இப்பொழுது நாம் காணுகின்ற நிதர்சனங்களாக இருக்கின்றன. உண்மையிலே எமது காலத்தில் அவை நல்ல அறுவடைகளை சந்திக்காவிட்டாலும் கூட எமது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த உணர்வாளர்களிலே நீங்கள் மறக்க முடியாதவர். அந்தவகைளிலே நாம் என்றும் உங்களை எம் நெஞ்சிலே வைத்திருப்போம். உங்களுடைய திரையுலகம் என்ற அனுபவத்தில் இருந்து இன்னொரு பரிமாணமாக இந்த பேட்டி நிறைவு பெறுகின்றது. அந்தவகையிலே நேயர்கள் சார்பிலே நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பதில்- நன்றி. நான் கூட வந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என்னுடைய வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் ஆஸ்திரேலியா வரும் சந்தர்ப்பம் அமையுமானால் எனக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய பரிசு ஒரே தமிழன். ஒரே பிரிவு. ஒரே ஈழம் என்டுற ஒரே சிந்தனையோட நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்பது தான். அந்தப் பரிசினை நீங்கள் கொடுக்கும் பொழுது நான் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
Saturday, March 19, 2011
"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு" இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கும் ஒலிப்பகிர்வு

கிழக்குப் பதிப்பகம் வழங்கி வரும் மொட்டை மாடிக் கூட்டத்தில் நேற்று இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் என்ற செய்தி வந்தபோது அந்த நிகழ்வு சென்று கொண்டிருக்கும் நேரம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரக்குக் கூட்டுத்தாபனத்தில் எனது வானொலி நிகழ்ச்சியும் சமகாலத்தில் இடம்பெறுவதால் ஒரு புதுமுயற்சியாக நேரஞ்சல் செய்வோமே என்று நினைத்தபோது கிழக்குப் பதிப்பகமும், நண்பர் ஹரன் பிரசன்னாவும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனது நேயர்களோடு நேரடி உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மறுமுனையில் ஒலித்தரம் குறித்த பரிசோதனையை ஹரன்பிரசன்னா முழு அர்ப்பணிப்போடு செய்து உதவினார் ;-)
50 நிமிடங்கள் வரை சென்ற இந்த நேரடி இந்த நிகழ்வை வெற்றிபெறச் செய்ய மறுமுனையில் இருந்து உதவிய நண்பர் ஹரன்பிரசன்னாவுக்கு இந்த வேளையில் எனது நன்றிகள். இந்த முயற்சியை சென்னையில் இருந்து சிட்னி, ஐரோப்பா வரை நேரடியாகக் கேட்டு மகிழ்ந்த நேயர்கள் பலர்.
"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு" (from writing to cinema) இதுதான் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் எடுத்துக் கொண்ட கருப்பொருள். இதனை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் மூன்று மாதங்களுக்குப் போதுமான சினிமாப் பாடத்தையே எடுத்து முடித்து விட்டார் இந்தக் கருத்தரங்கில். எழுத்து வடிவம் கொண்ட ஒரு படைப்பு எப்படி சினிமாவாக் மாற்றம் காண்கின்றது என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களையும் வாழ்வியல் அனுபவங்களையும் இணைத்து அவர் பேசுகின்றார். உண்மையில் சினிமாவை நேசிப்போருக்கும், முனைப்பில் இருப்போருக்கும் இந்தப் பேச்சு கண்டிப்பாகப் பயனளிக்கும். எனவே இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன்.
Download பண்ணிக் கேட்க
அங்கம் 1
அங்கம் 2
நேரடியாகக் கேட்க
அங்கம் 1
அங்கம் 2
Monday, February 28, 2011
குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷுடன் என் வானொலிப் பேட்டி



நான் வானொலி நிகழ்ச்சி படைக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் "முத்துமணி மாலை" என்னும் நிகழ்ச்சியை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகிர்வாக பல்வேறு ஆளுமைகளை வானொலி நேர்காணல் மூலம் அவர்களின் ஆரம்ப கால அனுபவங்களின் தொகுப்பாகக் கொடுக்க எண்ணியிருந்தேன். அந்த வகையில் வந்த வாய்ப்புத் தான் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுடனான பேட்டி. இந்தப் பேட்டியைச் சாத்தியப்படுத்த உதவியிருந்தவர் எனக்கும் டெல்லி கணேஷுக்கும் பொதுவான நண்பராக ரேகா ராகவன் அவர்கள். எனவே இந்த வேளை அவருக்கும் என் நன்றியைப் பகிர்கின்றேன். நண்பர் ரேகா ராகவன் சொன்னது போல எந்தவிதமான சிரமமும் இல்லாமல் பேட்டி செய்ய மகிழ்வோடு ஒப்புக்கொண்டார் டெல்லி கணேஷ்.
ஒரு நாள் காலை ஏழு மணி வாக்கில் வாக்கிங் போய் விட்டுத் திரும்பிய சூட்டோடு டெல்லி கணேஷின் பேட்டியும் ஆரம்பிக்கின்றது. எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் உடனேயே எதிர்ப்படும் கேள்விகளுக்குத் தன் ஞாபக இடுக்குகளில் இருந்து மழையாய்ப் பொழிந்தார் டெல்லி கணேஷ். கே.பாலசந்தரின் "பட்டினப் பிரவேசம்" திரைப்படத்தில் ஆரம்பித்து இந்த ஆண்டோடு 34 ஆண்டுகளைத் தொடும் டெல்லி கணேஷின் திரையுலக வாழ்வைக் குறிக்கும் இந்தப் பேட்டியும் 34 நிமிடங்களை நிறைக்கின்றது. நிறைவாக ரேகா ராகவன் அவர்கள் முன்னர் டெல்லி கணேஷ் ஹியூமர் கிளப்பில் பகிர்ந்த நகைச்சுவையோடு நிறைவு பெறுகின்றது.
பேட்டியைக் கேட்க
Download பண்ணிக் கேட்க
பேட்டியில் அவர் சொன்ன சுவாரஸ்யங்களில் சில
டெல்லியில் இந்திய விமானப்படையில் வேலை பார்த்தபோது தமிழ் நாடகங்களில் நடிக்க வாய்ப்புக் கிட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து தமிழகம் வந்து முழு நேர நாடக நடிகன் ஆனதும், பாலசந்தர் பட்டினப் பிரவேசம் திரைப்படத்தில் அறிமுகமானது.
பசி திரைப்படத்தில் சிறந்த நடிகராக 1980 ஆம் ஆண்டு கிட்டிய போது பரிசு நிகழ்வில் எம்.ஜி.ஆருடன் நிகழ்ந்த சந்திப்பு
சிந்துபைரவி படத்தில் குருமூர்த்தி என்ற மிருதங்க வித்துவான், அபூர்வ சகோதர்கள் படத்தில் வில்லன், அவ்வை சண்முகியில் நகைச்சுவை கலந்த வில்லத்தனப் பார்த்திரங்கள் கிட்டிய அனுபவங்கள்
டெல்லி கணேஷ் பார்வையில் பாலச்சந்தரின் ஆளுமை, தற்காலச் சினிமாவின் போக்கு என்று தொடர்கின்றது டெல்லி கணேஷின் பேட்டி. பேட்டி முடிவில் தன் 34 வருஷ அனுபவங்களைக் கொட்டித் தீர்த்த திருப்தியை அவரின் குரலில் தொனிக்கக் கண்டேன்.
Monday, January 31, 2011
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" - பாடல் பிறந்த கதை
கவிஞர் முத்துலிங்கத்துடனான என் வானொலிப் பேட்டியின் ஒரு பகுதியை முன்னர் தந்திருந்தேன். தொடரின் அடுத்த பகுதியில் "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" பாடல் பிறந்த கதையைச் சொல்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.பொன்மனச் செம்மல் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது வழிகாட்டலிலே நல்லதொரு அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவருடைய ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்திருந்தீர்கள், எம்.ஜி.ஆர் அவர்களுடனான அறிமுகம் உங்களுக்கு எப்படி அமைந்திருந்தது?
நான் அப்போது அலையோசை பத்திரிகையில் இருந்தேன். நான் அடிப்படையிலேயே எம்.ஜி.ஆர் ரசிகன். அப்போது அவர் கட்சி ஆரம்பித்திருந்த நேரம் , பேச்சாளனாகவும் இருந்தேன். பத்திரிகைப் பேட்டிக்காக நான் அப்போது அவரைச் சந்திப்பேன். அதற்கு முன்னரேயே நான் சினிமாவில் பாட்டு எழுதிட்டேன். பின்னர் அலையோசை பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதால் அந்தப் பத்திரிகையில் இருந்து விலகினேன். அந்த நேரம் அவரின் அலுவலத்துக்குச் சென்றபோது,
"நீங்க பத்திரிகையை விட்டு விலகிட்டிங்களாமே, கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக்குங்க" என்று சொன்னார்.
"இல்லை பணம் வேண்டாம் தலைவரே அதுக்குப் பதிலா வேலை கொடுங்க" என்றேன்.
"வேலை கொடுக்கும் போது கொடுக்கிறேன், இப்போ வாங்கிக்க" என்றார்.
"இல்லை வேண்டாம்" என்று மறுத்திட்டேன். அதுக்கப்புறம் தான் அவர் தன்னோட படங்களுக்குத் தொடர்ந்து பாட்டு எழுத வாய்ப்புக் கொடுத்தார். அப்படி அவருக்காக எழுதிய முதற்படம் உழைக்கும் கரங்கள்.
உழைக்கும் கரங்கள் திரையில் எம்.ஜி.ஆருக்காக முத்துலிங்க எழுதிய முதற்பாட்டு
"கந்தனுக்கு மாலையிட்டாள்" - பாடியவர் வாணி ஜெயராம்
உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் என்று எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எழுதியிருக்கீங்க, ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் "பிள்ளைத் தமிழ் பாடுகின்றேன்" அந்த அருமையான பாடல் பிறந்ததற்குப் பின்னால் சுவாரஸ்யமான தகவல் உண்டா?
அப்போல்லாம் எனக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுத வராது, மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து தான் பாட்டு எழுதுவோம். இப்பல்லாம் கேசட் கொடுத்து எழுதச் சொல்லிடுவாங்க.
முதலில் அந்தப் பாட்டின் சிச்சுவேஷனைச் சொல்லிடுறேன். எம்.ஜி.ஆர் பெண்களுக்குக் கணவராக நடிப்பார். அதாவது ஒரு பெண்ணின் உண்மையான கணவன், இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட நேரத்தில் சொந்த மனைவிக்குப் பிறந்த குழந்தை இறந்து போகும். அந்தப் பிள்ளையை அடக்கம் பன்ணி விட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிப்பாரே அந்த வீட்டுக்கு வருவார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்த நாள். அந்தக் குழந்தையை வாழ்த்திப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. தன்னுடைய சொந்தக் குழந்தை இறந்து போனதை நினைத்துப் பாடுவாரா, இல்லை இந்தக் குழந்தைக்குப் பிறந்த நாள் என்று சொல்லி வாழ்த்திப் பாடுவாரா அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலை, அதை மனதில் வைத்துக் கொண்டு இரண்டும் கலந்து வருவது போல் பாடல் வரவேண்டும்.
அதனால நான் முதலில் எழுதினேன்,
"நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது
நினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது
என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது
என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது
எது நடக்கும் எது நடக்காது இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது இது இறைவனுக்கும் புரியாது"
அப்படி ஒரு பல்லவி எழுதினேன், மியூசிக் டைரக்டர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆனால் எம்.ஜி.ஆரிடம் கொண்டு போகும் போது மூணு நாலு பல்லவி எழுதி அதுக்குத் தொடர்பா வர்ர மாதிரி சரணம் எழுதியும் காட்டணும். அதனால இரண்டு மூன்று பல்லவி எழுதிட்டேன்.
"ஆட்டி வைத்த ஊஞ்சல் அது முன்னும் பின்னும் ஆடும்" அப்படின்னு இன்னொரு பல்லவி.
இன்னும் மூணு பல்லவி வேணும் என்று எழுதச் சொன்னாங்க. நான் அதே இடத்தில் இருந்தா கற்பனை வராது வெளியே கொஞ்சம் நடந்து போட்டு வரேன் என்று மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணரிடம் சொல்லிவிட்டு சிவாஜி கணேசன் வீடு இருக்கும் தெற்கு போக்கு ரோடு இருக்கும் பக்கமா நடந்து போயிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்பவும் எனக்குச் சரியா ஒண்ணும் வரல. அந்த நேரம் எனக்குப் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது சடன் பிரேக் போட்டு. காரின் உள்ளே மறைந்த கவர்ச்சி வில்லன் கண்ணன், நடிகர் ஐசரி வேலன் உள்ளே இருந்தாங்க.
"உங்க பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்தது என்று தலைவர் கிட்ட (எம்.ஜி.ஆர்) பாவலர் முத்துசாமி சொல்லிக்கிட்டிருந்தாரு. முத்துசாமி தி.மு.க காலத்தில் அமைச்சரா இருந்தவரு பின்னர் அண்ணா தி.மு.க வைச் சேர்ந்திருந்தார். அவர் இப்படி உங்கள் பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்ததாக தலைவரிடம் சொன்னதாக அவர் சொல்லவும் எனக்கு உடனே பொறி தட்டியது. நான் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாக வைத்துத் தான் எம்.ஜி.ஆர் பிள்ளைத் தமிழ்ன்னு ஒரு குறுங்காப்பியம் எழுதியிருந்தேன். இங்கேயும் எம்.ஜி.ஆர் ஒரு பிள்ளைக்காகத் தான் பாடுவார். அப்படிப் பிள்ளைக்காகப் பாடுவதாக
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
என்று பல்லவியை எழுதி விட்டு விஸ்வநாதன் அண்ணனுக்கு பாடிக்காண்பிக்க அதுக்கு ட்யூன் போட்டார்.அதுக்கு லிங்கா வரக்கூடியமாதிரி சரணமும் அமைத்துப் பாடலாக்கி அதை எம்.ஜி.ஆரிடம் காண்பித்தோம். அப்போ சத்யா ஸ்டூடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங் நடந்துக்கிருந்துச்சு. அப்போது டைரக்டர் ஏ.பி.நாகராஜன், டைரக்டர் நீலகண்டன், டைரக்டர் கே.சங்கர் எல்லாரும் இருந்தாங்க. அப்போது போட்டுக் காமிச்சோம். அப்போது ஏ.பி. நாகராஜன் இந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பாட்டு நல்லாயிருக்கேன்னு "நெஞ்சுக்குள்ளே அன்பு" என்று தொடங்குற பாட்டைச் சொன்னார். இன்னொருத்தர் "ஆட்டி வைத்த ஊஞ்சல்" அப்படித் தொடங்குற பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னார். எல்லாத்தையும் கேட்ட எம்.ஜி.ஆர் "நீங்க சொல்றதெல்லாம் நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத் தான் பாப்புலராகும் ரொம்ப கேட்சிங்கா இருக்கு" என்று சொன்னார். அதாவது சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் எம்ஜிஆர் புரிந்தவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" - ஊருக்கு உழைப்பவன் திரைக்காக கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல்
Labels:
எம்.எஸ்.வி,
பாடலாசிரியர்,
பேட்டி
Subscribe to:
Comments (Atom)












