Pages

Wednesday, September 30, 2009

சிறப்பு நேயர் "நாடோடி இலக்கியன்"


ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடர்கிறது, றேடியோஸ்பதி சிறப்பு நேயர்.
இந்த வாரம் சிறப்பு நேயராக வந்து கலக்குபவர் நண்பர் நாடோடி இலக்கியன்.

வலையுலகிற்கு வந்த பின்னர் , ஒத்த சிந்தனையுள்ள பதிவர்களின் பதிவுகளைத் தேடிப் படிக்கும் வழக்கம் கொண்ட எனக்கு நாடோடி இலக்கியனின் பதிவுகளைப் படிக்கக் கிடைத்தது உண்மையில் ஒரு வரப்பிரசாதம் என்பேன். ஒரு குறிக்கப்பட்ட எல்லைக்குள் நின்று தன் எழுத்தை வைக்காமல் பரந்து விரிந்த அவரின் எழுத்தாற்றலுக்கு நானும் ஒரு விசிறி என்பேன். நாடோடி இலக்கியன் தந்த மலையாள சினிமாக்கள் தொடரை வைத்துக் கொண்டு தான் விடுபட்டுப் போன படங்களைத் தேடிப் பார்க்கின்றேன். நனைவிடை தோய்தலாகட்டும், சினிமா பார்வையாகட்டும் இவரின் பாணி தனித்துவமானது. பெரும் பிரபலமான பாடல்கள் மட்டுமன்றி, மலர்ந்தும் மலராத பாடல்களாக ஆனால் சிறப்பான இசையமைப்பில் வந்த அதிகம் ரசிகர் கவனத்தை ஈர்க்காத பாடல்களையும் தேடி எடுத்துச் சிலாகிப்பது இவரின் தனித்துவம். அதற்கு உதாரணமாக நாடோடி இலக்கியன் இந்த சிறப்பு நேயர் பகுதியில் தொகுத்துத் தந்திருக்கும் எல்லாப் பாடல்களுமே நல்லுதாரணங்கள். ஒரு காலத்தில் நான் விரும்பி ரசித்துக் கேட்ட அந்தப் பாடல்களை இவர் மூலம் பகிரும் போது மீண்டும் கேட்கும் போது புத்துயிர் பெறுகின்றேன்.

இதோ நாடோடி இலக்கியன் பேசுகின்றார் இனி.1.எஸ்.பி.பியும் கே.ஜே.யேசுதாஸ் அவர்களும் இணைந்து பாடிய பாடல்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும். இசைப் பிரியர்கள் பெரும்பாலானோருக்கு இவ்விரண்டு ஜாம்பவான்களும் இணைந்து பாடிய பாடல்கள் என்றால் சட்டென்று நினைவுக்கு வரக்கூடியது தளபதி படப்பாடலான “காட்டுக் குயிலு மனசுக்குள்ளே” பாடலாகத்தான் இருக்கும்.’ நட்பைக் கூட கற்பை போல எண்ணுவேன்’ என்ற வரிகளுக்காகவே நான் ரொம்பவும் சிலாகித்து ரசித்தப் பாடல் இது.

எனது விருப்பமாக நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பாடலும் கூட இவர்கள் இருவரும் இணைந்து பாடிய இன்னொரு பாடலே.இந்தப் பாடல் வெளிவந்த நேரத்தில் இலங்கை வானொலியில் நாள் தவறாது தேனருவி என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்புவார்கள்.அதன் பிறகு எங்குமே கேட்டு ரசிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.அப்பாடலை சமீபத்தில் பெரு முயற்சி எடுத்து ஒரு இணைய தளத்தில் இருந்து தரவிறக்கிக் கொண்டேன்.

இனியவன் இசையில் வைரமுத்துவின் வைர வரிகளில் கௌரி மனோகரி படப் பாடலான“அருவிகூட ஜதி இல்லாமல்” என்று தொடங்கும் பாடலைத்தான் முதல் தேர்வாக உங்களோடு கேட்டு ரசிக்க ஆவல்.2.அடுத்து ஒரு Female டூயட். இதோ இதோ என் நெஞ்சிலே, ஒரு கிளி உருகுது,ஏ மரிக்கொழுந்து, மணிக்குயில் இசைக்குதடி போன்ற பாடல்களிலிருந்து எந்த பாடலை கொடுப்பது என்ற குழப்பதின் நடுவே இங்கே நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் புதுப்பட்டி பொன்னுத்தாயி படப் பாடலான 'ஊரடங்கும் சாமத்தில'. சுவர்ணலதாவின் காந்தக் குரலையும்,உமா ரமணனின் கணீர் குரலையும் வைத்து அற்புதமான மெட்டில் விளையாடியிருப்பார் இளையராஜா.3.அடுத்து ஒரு Male solo, வானமழை போலே(இது நம்ம பூமி),சோலை மலரே(பாட்டு வாத்தியார்) போன்ற சில பாடல்களில் எதை தேர்வு செய்வதென்ற குழப்பத்தினூடே நான் பகிர விரும்பும் பாடல் கே.ஜே.ஏசுதாஸின் குரலில் தேனாக செவியை நனைக்கும் ”சோலைப் பூந்தென்றலில் ஊஞ்சலாடும் செல்ல பைங்கிளி” . படத்தின் பெயர் பூவே பொன் பூவே. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பாடல் இது.இதன் Female version ஜானகி பாடியிருப்பார். அற்புதமான இசையமைப்பு. இப்பாடல் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்தது,வேறெங்கும் இப்பாடலை கேட்க முடிவதில்லை.4.அடுத்து ஒரு Female solo, இதிலும் அடி ஆடிவரும் பல்லாக்கு,விளக்கு வைப்போம் போன்ற சில பாடல்கள் என மனதில் வரிசைக் கட்டி நின்று குழப்பியது மிகவும் மனதை சமாதானப் படுத்தி உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் படத்திலிருந்து ராஜாவின் இசையில் ஜானகியின் கொஞ்சும் குரலில் துள்ளலாய் இருக்கும், உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் திரைப்படப்பாடலான ’ஓஹோஹோ காலைக் குயில்களே’ பாடலை முடிவு செய்திருக்கிறேன். இந்த பாடலை ஊட்டியில் படமாக்கியிருப்பார்கள் எப்போது ஊட்டிக்கு போகும் போதும் அங்கு காணும் காட்சிகளை பார்க்கையில் இப்பாடலும் , “தூரி கிழக்குதிக்கின்” என்ற மலையாளப் பாடலும் தான் நினைவுக்கு வரும்.5.அடுத்து male,female இணைந்து பாடிய பாடலாக ஒரு பாடலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இங்கேயும் ’என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட’ (உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்), ’தென்றலிலே மிதந்து வந்த’(புதிய தென்றல்), ’காத்திருந்தேன் தனியே’(ராசா மகன்) என ஒரு பெரிய லிஸ்ட் மனத் திரையில்.
இறுதித் தேர்வாக வனஜா கிரிஜா படத்தில் இருந்து எஸ்.பி.பி யும் சுவர்ணலாதாவும் இணைந்து பாடிய ’உன்னை எதிர் பார்த்தேன்’ பாடல். எத்தனை முறைக் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புதமான மெட்டு.

Wednesday, September 23, 2009

நடிப்புக் குயில் எஸ்.வரலட்சுமி நினைவாக

என் சின்ன வயதில் வானொலியில் "இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூ தொட்டிலைக் கட்டிவைத்தேன்' பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் அம்மாவே வந்து பாடுவது போல ஒரு பிரமையை உண்டாக்கியிருக்கும் எஸ்.வரலட்சுமியின் அந்தக் குரல்.

நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் ஆண் குரலில் ஜேசுதாஸ் பாடிய பாடலை விட என் மனதுக்கு நெருக்கமாக வந்து உட்கார்ந்து இன்று வரை இடம்பிடித்தது அந்தப் பாடல். இன்று வரை அந்தப் படத்தை நான் பார்க்காவிட்டாலும் கற்பனையில் இன்றும் என் அம்மாவே பாடுமாற்போல ஒரு தாய்மை உணர்வை அந்தப் பாடல் உண்டு பண்ணும். அந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரக் குயில் எஸ்.வரலட்சுமி நேற்று தனது 84 வயதில் இவ்வுலகை விட்டு மறைந்திருக்கிறார்.

கந்தன் கருணை, வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், , பூவா தலையா, குணா போன்ற படங்களில் எல்லாம் எஸ்.வரலட்சுமியின் நடிப்புக்குத் தனியிடம் உண்டு. இன்னொரு நடிகையை அந்தப் பாத்திரங்களிலும் பொருத்திப் பார்க்க முடியாத சிறப்பைக் குறித்த படங்களில் தந்திருப்பார் இவர்.

கந்தன் கருணை படத்தில் வரும் "வெள்ளிமலை மன்னவா" பாடலைப் பக்தி ரசம் கனியக் கொடுத்திருக்கும் அதே வரலட்சுமி பின்னாளில் "குணா" படத்தில் நடித்ததோடு "உன்னை நானறிவேன்" என்ற வெறும் 36 செக்கன் மட்டுமே ஒலிக்கும் பாடலிலும் தன் தனித்துவக் குரலினிமையைக் காட்டிச் சென்றவர்.

எஸ்.வரலட்சுமி பாடிய பாடல்களில் சிலவற்றை இங்கே தருகின்றேன்

வரலட்சுமி என்ற குயில் பறந்தாலும் அவரின் ஓசை ஒலித்துக் கொண்டேயிருக்கும்

நீதிக்கு தலை வணங்கு திரைப்படத்தில் வரும் "இந்தப் பச்சைக்கிளிக்கொரு"கந்தன் கருணை திரைப்படத்தில் வரும் "வெள்ளிமலை மன்னவா"கவரிமான் திரைப்படத்தில் வரும் பாரதியார் பாடலான "சொல்ல வல்லாயோ கிளியே"குணா திரைப்படத்தில் வரும் 'உன்னை நானறிவேன்"

Get this widget | Track details | eSnips Social DNAஎஸ்.வரலட்சுமி மறைவு குறித்து தற்ஸ் தமிழ் இணையத்தில் வந்த செய்தி

சென்னை: பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 84. கடந்த ஆறுமாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் அவர்.

சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணிக்கு இறந்தார்.

1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் [^] கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் [^] பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எஸ். வரலட்சுமி. இவர் மிகச் சிறந்த பாடகியும் கூட.

சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.

இவர் பாடிய 'இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்....' என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது, கேட்போரை உருக வைப்பது.

அதேபோல குணா படத்தில் கமல்ஹாசனின் தாயார் வேடத்திலும் நடித்து ஒரு பாடலையும் பாடியிருந்தார் வரலட்சுமி.

திருடாதே, கந்தன் கருணை, சினிமா பைத்தியம் உள்ளிட்ட ஏராளமான படங்களின் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனின் மனைவி வரலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது [^] உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த எஸ். வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.

இவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் [^] சங்கம் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

Thursday, September 10, 2009

கலையுலகில் கமல் 50 - "குணா" இசைத்தொகுப்பு

இந்த ஆண்டு கலைஞானி கமல்ஹாசன் திரையுலகில் காலடி வைத்து ஐம்பது ஆண்டுகள் நிறைவையொட்டி சில சிறப்பு இடுகைகளைத் தரவிருக்கின்றேன். அந்த வகையில் ஓராண்டுக்கு முன் பதிவாக வந்து பலரின் அபிமானத்தைப் பெற்ற "குணா" திரைப்படத்தின் இசைத்தொகுபை வழங்கிச் சிறப்பிக்கின்றேன்.

கமல்ஹாசன், புதுமுகம் ரோஷிணி, ரேகா, வரலஷ்மி ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படம் சாப்ஜானின் கதை, திரைக்கதையிலும் சந்தான பாரதி இயக்கத்திலும் வெளிவந்திருந்தது.

குணா படத்துக்கான லொகேஷன் தேடியபோது கமலின் கண்ணிற்பட்டது கொடைக்கானலில் இருந்த குகையடிவாரம், அது குணா படத்தின் முக்கியமான காட்சிகளுக்குப் பயன்பட்டுப் பின்னாளில் குணா கேவ்ஸ் என்ற புகழோடு இப்போது சுற்றுலாப்பயணிகளின் கண் கவரும் இடமாக இருக்கின்றது.

இந்தப் படத்தைப் பற்றி அணு அணுவாக ரசித்து எழுதவேண்டும் என்பது என் வெகு நாள் ஆசை. அதற்கு முன் இந்தப் படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைப் கொடுத்து விடுகின்றேன். அபிராமியின் மேல் தீராத பக்தி கொண்டவர் அபிராமிப் பட்டர். இந்த அபிராமி மீது தீராக் காதல் கொள்கின்றான் குணசேகரன் என்னும் குணா. இப்படத்தின் பின்னணி இசையில் தெய்வீகம் கலந்ததொரு இசையைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.படத்தின் முகப்பு எழுத்தோட்ட இசைமுதன் முதலில் ஆலயத்தில் அபிராமியைக் காணல்
அபிராமியை கவர வரும் வில்லனிடம் இருந்து தப்பித்தல்
மலையுச்சி சமாதிப் புகலிடத்தைத் தேடிப் போதல்அபிராமி, குணாவை காரால் இடிக்கும் காட்சி
அவளை அபிராமியாக நினைத்து குணா உருகும் காட்சி
ஏகாந்த இரவில்
குணாவிடம் இருந்து மீண்டும் அபிராமி தப்பிக்கும் காட்சி
அபிராமியின் மனதில், தான் இருக்கிறேன் என்ற காதலோடு மெய்யுருகும் குணா. கலக்கல் இசை பரவ
காட்டுக்குள் காணும் நீரோடை, இசையால் குளிர்விக்கஎழுதி வைக்கப்பட்ட விதி "எனக்கு நீ உனக்கு நான்"
அபிராமி குணா மேல் கொள்ளும் காதல்


அபிராமியை குகைக்குள் வைத்து மணம் முடித்தல்
வைத்தியரைத் தேடிப் போகும் குணா
வில்லனால் தாக்கப்பட்ட குணா, அபிராமியிடம் ஆறுதல் தேடுதல்
அபிராமியும், குணாவும் இந்த உலகத்தை விட்டு நீங்கல். பிறவிப்பிணி என்னும் தளையால் கட்டுண்ட ஆன்மா இறைபதம் நாடி இறைமேல் பற்று வைத்து முத்தி நிலையை அடைதல் என்னும் உட்பொருளோடு அமைகின்றது இப்படத்தின் உட்பொருள்
போனசாக குணா குணா பாடல் ஒலிப்பதிவு வேளையில் நடந்த உரையாடல்
பகிர்வை இளையராஜா ஆர்குட் குழுமம் வழி பெற்றேன்.Tuesday, September 8, 2009

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அவுசப்பச்சன்

மலையாளத்தின் இரு முன்னணி நாயகர்களான மோகன்லால், மம்முட்டி இணைந்து நடிக்க பாசில் இயக்கிய "ஹரிகிருஷ்ணன்" திரைப்படம் தமிழுக்குத் தாவிய போது தான் "அவுசப்பச்சன்" என்ற இசையமைப்பாளர் குறித்த அறிமுகம் எனக்கு கிட்டியது, அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டதில் இருந்து. எண்பதுகளில் இளையராஜாவின் சாஸ்திரிய இசைப் பின்னணியில் வந்த படங்களில் வரும் இசையும், இன்னொரு மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் பாதிப்பும் இருப்பதாகவே அவுசப்பச்சனின் பாடல்களைக் கேட்கும் போது எனக்குத் தோன்றும். எண்பதுகளில் மலையாளத்தில் கொடி கட்டிப் பறந்த ரவீந்திரனின் சாயல் கலந்து கொடுப்பது தன்னை நிலை நிறுத்தும் என்று ஒரு காரணமும் ஆக அவுசப்பச்சன் நினைத்திருக்கலாம். அவுசப்பச்சனின் சில பாடல்களை அவர் இசையமைக்காதது தெரியாமல் கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு இது ரவீந்திரன் பாட்டு என்று சொல்லும் அளவுக்கும் இருந்திருக்கின்றன அவை. இதற்கு இன்னொரு காரணம் பெரும்பாலான மலையாளப் படங்கள் சாஸ்திரீய சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த போது ரவீந்திரன் அவற்றுக்குத் தனியானதொரு இலக்கணத்தை மலையாள சினிமாவில் போட்டிருந்தார் எனலாம்.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் "வடக்கும் நாதன்" திரைப்படம் வெளிவரத் தயாராகி பின்னணி இசை மட்டும் போட வேண்டிய நிலையில் அந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரவீந்திரன் இறந்து விட, அந்தப் படத்திற்குப் பின்னணி இசை கொடுத்தவர் அவுசப்பச்சன்.

உதிரிப்பூக்கள் போன்ற படங்களை இயக்குனர்கள் படங்கள் என்று சொல்வது போலவும், சில நடிகர்களை இயக்குனர்களின் நாயகன் என்பது போல இசையமைப்பாளர்களைக் கூட இயக்குனர்களின் இசையமைப்பாளர் என்று வட்டம் போட்டு விடலாம். உதாரணமாக பாரதிராஜாவோடு கூட்டுச் சேர்ந்த தேவேந்திரன் வேதம் புதிது வில் என்னமாய் இசையமைத்தார். ஒரு நல்ல பாடல் வருவதற்கோ அல்லது ஒரு நல்ல இசையமைப்பாளனாகப் புடம் போடப்படுவதற்கோ ஒரு திறமையான இயக்குனரின் வேலைவாங்கு திறனும் முக்கியமானது என்பது சினிமா வரலாறு கண்ட உண்மை.

அது போலவே ஒசப்பச்சனுக்கும் இயக்குனர்கள் சிலரின் கடைக்கண் பார்வை கிட்டியிருக்கிறது.
"உன்னிகளே ஒரு கத பறயான்" போன்ற பிரபல இயக்குனர் கமல் இயக்கிய படங்களும், "அனியத்தி பிறாவு" (தமிழில் காதலுக்கு மரியாதை" போன்ற பாசில் இயக்கிய படங்களும் அவுசப்பச்சனுக்கு பெரும் பலமாக இருந்தவை என்றால் மிகையில்லை. அந்த வரிசையில் இப்போது "ஒரே கடல்" திரைப்படமும் சேர்ந்திருக்கின்றது. தமிழ், தெலுங்கு மசாலா வைரஸ் பரவி "அண்ணன் தம்பி" என்று மம்முட்டியும், "சோட்டா மும்பை" என்று லாலேட்டனும் பயணப்பட, 80 கள் விளைவித்த நல்ல மலையாள சினிமாவை மீண்டும் கையகப்படுத்த வந்திருக்கும் இயக்குனர் ஷியாம பிரசாத்தின் கடைக்கண் பார்வையும் ஒசப்பச்சன் மேல் வந்திருக்கின்றது.

இந்தப் படத்தின் பாடலை வெறுமனே கேட்பதை விட "ஒரே கடல்" படத்தோடு அனுபவித்துப் பார்க்கும் போது தெரியும் இயக்குனரும் , இசையமைப்பாளரும் ஒரே கடலில் பயணித்து ஒரே அலைவரிசையில் சிந்தித்திருக்கின்றார்கள் என்று. அவுசப்பச்சனின் பாடல்களில் இருந்து விலகிய தனித்துவமான இசையையும் அங்கே காட்டியிருக்கிறார். அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கும் அவுசப்பச்சனை வாழ்த்துவதோடு ஏஷியா நெட்டின் Idea Star Singer இன் நீதிபதியாக இன்னும் தொடர்ந்து தன் இசைப்பணியை மழுங்கடிக்காமல் இசையில் முழுமையாக அர்ப்பணித்து இன்னும் விருதுகள் வாங்க வாழ்த்துவோம்.

ஒரே கடல் குறித்து என் பதிவு

"ஒரே கடல்" படத்தில் வரும் "நகரம் விதுரம்"
"ஒரே கடல்" படத்தில் "ஜமுனா வருதே" பாடகி சுஜாதா மகள் ஸ்வேதா பாடித் தோன்றும் காட்சி


தொடர்ந்து அவுசப்பச்சனின் சில இனிய மெட்டுக்கள்

"உள்ளடக்கம்" படத்தில் இருந்து "அந்தி வெயில் பொன்னுதிரும்". எனக்கு மிகவும் பிடித்த மலையாளப் பாடல்கள் பட்டியலில் விடுபட முடியாதது. தேவாவின் 90 களின் ஆரம்ப இசைப் பாணி இதில் இருக்கும்.


"உன்னிகளே ஒரு கத பறயான்" படத்திலிருந்து "பொன்னாம்பல்""ஹரிகிருஷ்ணன்" படத்தில் இருந்து "சமயமிதாபூர்வ சாயானம்"

Saturday, September 5, 2009

சிறப்பு நேயர் " சித்தை-பாசித்"

றேடியோஸ்பதி சம்பாதித்த நண்பர்களில் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான நண்பர் சித்தை பாசித் ஐ குறிப்பிடலாம். றேடியோஸ்பதியில் வரும் ஓவ்வொரு பதிவுகளையும் சிலாகித்து தன் தனிமடலில் தவறாமல் எழுதிவருபவர் இவர். இசை மீது இவருக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டையும், இவரின் ரசிப்புத் தன்மையையும் அந்த மடல்களில் இருந்து நான் கண்டு கொண்டேன். சிறப்பு நேயராக இவரை அழைத்த போது எழுதி அனுப்பிய கன்னி முயற்சி இது. ஆனால் பாடல்களைப் பாருங்கள். ஒவ்வொரு பாடல்களுமே தனித்துவமான ரசனை கொண்டவை. இனிய ரமலான் வாழ்த்துக்களை பாசித் மூலம் முன் கூட்டிய வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு அவரின் பாடல் தெரிவுகளைக் கேட்டு அனுபவியுங்கள்.


இளையராஜா இசை ஒரு மருந்து மாதிரி அதிலும் 80களில் அவர்தான் ராஜா.
1.படம் நண்டு
அள்ளி தந்த பூமி
இந்த பாடல் மலேசியா வாசுதேவன் பாடியது
இலங்கை வானொலி தமிழ்சேவை இருந்தபோது எங்கள் வீட்டு வால்வு ரேடியோவில் கேட்ட பாடல். இந்த ஹம்மிங் கூட வரும் இசை இரண்டுமே மனதை மயக்கும்2. படம் ராஜாத்தி ரோஜா கிளி
பாடல்: ஒடையின்னா நல்லோட
சமீபத்தில்தான் இப்படி ஒரு பாடல் இருப்பது தெரியும்.
கிராமத்துபாடல். இசை தாபேலா அப்படியே பாட்டோடு நடக்கும் புல்லாங்குழல் அழகு.
குருந்தகட்டில் பாடல் கிடைக்கவில்லை.
கோடை வானொலியில் அடிக்கடி நான் விரும்பி கேட்கும் பாடல்3. படம்:அம்மா
பாடல்: மழையே மழையே

பிரதாப் போத்தன் சரிதா நடித்த படம் இதுவும் ஒரு மென்மையான பாடல்தான்.
இந்த பாடலை என்னால் மறக்கமுடியாது.
ஒரு மழைநாளின் மாலையில் பேருந்து பயணத்தில் கேட்டது.
நானும் எனது நண்பர்களும் பாடலை கேட்டு ரசித்து படம் என்ன என்பதை கண்டுபிடிக்க படாதபாடு பட்டோம்! (இப்பதான் தல இருக்குல)4. படம்: மெல்.திற.கதவு
பாடல்: வா வெண்ணிலா (ஜானகி)
இது அதிகம் கேளாதா பொக்கிஷபாடல்.
இசைகூட மாறும்.
பள்ளி ஆண்டு விழா பாடல் இது. இப்படி ஒரு பாடலை தெரிவு செய்ததற்கே நிறைய பாராட்டு கிடைத்தது எனக்கு. கைதட்ட வைத்த பாடல்.5. படம்: தெற்கு தெரு மச்சான்
பாடல்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே
தேவா இசைத்த பாடல் இது.குரல் ஜானகி.
பாடல்கள் பதிய ஊர் ஊராக அழைந்து ஏதோ ஒரு ஊரில் ரிக்கார்டில் எடுத்து பதிந்த பாடல் இன்னும் எப்போது கேட்டாலும் அந்த ஞாபகம் வந்து போகும்.
ஜானகியின் குழைந்த குரல் உங்களையும் ரசிக்க வைக்கும்

Tuesday, September 1, 2009

றேடியோஸ்புதிர் 45 - ஓணம் ஸ்பெஷல்

முதலில் றேடியோஸ்பதி நேயர்களுக்கு இனிய திருவோணத் திருநாள் வாழ்த்துக்களை ஒரு நாள் முன் கூட்டியே தெரிவித்துக் கொள்வதில் என்னுடன் சின்னப்பாண்டி, நிஜம்ஸ் மற்றும் தல கோபி ஆகியோர் பெருமையடைகின்றோம் ;-)

முதலில் உங்கள் மூளைக்கு வேலையாக வருவது றேடியோஸ்புதிர்.
90களில் புதுவசந்தம் ஆரம்பித்து வைத்த நான்கு நண்பர்கள் செண்டிமெண்ட் தொடந்து இரண்டு டஜனுக்கு மேல் கூட்டணி ஹீரோக்கள் படங்களை கொடுத்து வந்தது. அப்போது மலையாளத்தில் இருந்தும் ஒரு படம் இறக்குமதியாகி தமிழில் மீள எடுக்கப்பட்டது. மலையாளத்தில் கூட்டணி இயக்குனர்களாக இருந்து பல வெற்றிப்படங்களை அளித்த சித்திக்-லால் இயக்கத்தில் 1990 இல் வெளிவந்த "In Harihar Nagar" என்ற படமே அவ்வாறு மீள தமிழில் எடுக்கப்பட்ட படமாகும். இந்த "In Harihar Nagar" படம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் '2 Harihar Nagar' என்று இந்த ஆண்டு அதே நண்பர்களை வைத்து லால் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டடித்தது. கேள்வி இதுதான். ஆரம்பத்தில் வெளிவந்த அந்த மலையாளப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட தமிழ்ப்படத்தின் பெயர் என்ன? ஏகப்பட்ட க்ளூக்கள் கொடுத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று நினைத்தாலும் பாழாய்ப் போன மனம் இந்தப் பண்டிகை நாளில் உங்களைத் தோற்கடிக்க விரும்பாமல் ஒரே ஒரு க்ளூ. இந்த தமிழ்ப்படத் தலைப்பில் தலைவர் ஒருவர் பெயர் ஒட்டியிருக்கிறது.

In Harihar Nagar படத்தில் வெளிவந்த "ஏகாந்த சந்த்ரிகே" இசை:பாலகிருஷ்ணன்2 Harihar Nagar படத்தில் வெளிவந்த "ஏகாந்த சந்த்ரிகே" ரீமிக்ஸ் இசை: அலெக்ஸ் பால்நேற்று கேட்ட கேள்விக்கு சரியான பதில்: எம்.ஜி.ஆர் நகரில்
ஆனந்த்பாபு, சுகன்யா, விவேக் போன்றோர் நடித்து வெளிவந்த அப்படத்தின் பாடல் இதோதொடந்து ஓணம் ஸ்பெஷல் பாடல்களாக, தமிழில் வெளிவந்த மலையாள வரிகளைத் தாங்கிய பாடல்கள்.

முதலில் வருவது, பூந்தளிர் படத்தில் இருந்து மலையாளக் குயில் ஜென்சி பாடும் "நன் நன் பாடணும்"அடுத்ததாக , இந்த ஆண்டின் பொன் விழா நாயகன் கமல்ஹாசனும் ஜானகியும் இணைந்து பாடும் "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" மைக்கேல் மதன காமராஜனில் இருந்துமந்தார மலரே மந்தார மலரே என்று பாட்டுக் கட்டுகிறார்கள் ஜெயச்சந்திரனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் "நான் அவன் இல்லை" படத்திற்காக"நெஞ்சினிலே நெஞ்சினிலே" என்று ஜானகி கொஞ்சும் தமிழ் பாட, இடையில் வந்து மலையாள வாசம் பரப்புகிறார் ஸ்ரீகுமார், உயிரே திரைப்படத்திற்காக"லாலா நந்தலாலா" பாட்டில் கேரளத்தின் கொள்ளை அழகை காட்டியது நரசிம்மா, பாடுகிறார் கவிதா சுப்ரமணியம்"பொன்னின் திருவோணத் திருநாளும் வந்தல்லோ" என்று நிறைவாக்குகிறார்கள் இளையராஜாவும், சுஜாதாவும் " கவலைப்படாதே சகோதரா திரைப்படத்தில் இருந்து.ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள நாடு