Pages

Showing posts with label பின்னணி இசை. Show all posts
Showing posts with label பின்னணி இசை. Show all posts

Wednesday, June 7, 2017

🍁 இசைஞானி இளையராஜா இசையில் 🍁 💚 மெளனம் சம்மதம் ❤️ 🎼 பின்னணி இசைத் தொகுப்பு



🌷
மெளனம் சம்மதம் படம் ஞாபகமிருக்குதா என்று கேட்டாலேயே "ஓ தெரியுமே" என்று விட்டுக் "கல்யாணத் தேனிலாஆஆஆ" என்று ஆலாபனை எடுத்துப் பாட ஆரம்பித்து விடுவார்கள் படத்தைப் பார்த்தவர்களும் சரி பார்க்காதவர்களும் சரி.
இந்தப் படத்தில் இன்னொரு மெட்டு சின்னக்குயில் சித்ரா குரலில் "ஒரு ராஜா வந்தானாம்" ஏக பிரபலம்.
தயாரிப்பாளர் கோவை செழியன் மம்முட்டையைத் தமிழுக்கு அழைத்து வந்து முறையே அழகன், மெளனம் சம்மதம், புதையல் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மெளனம் சம்மதம் பக்கா மலையாளத் துப்பறியும் கதைப் பின்னணி கொண்டது. மம்முட்டியின் இம்மாதிரிக் கதைகளின் துப்பறியும் கூட்டணி எஸ்.என்.ஸ்வாமி கதை எழுத, பிரபல இயக்குநர் கே.மது இயக்கிய படமிது.
மெளனம் சம்மதம் ஒரு சுவாரஸ்யம் கலந்த விறு விறுப்பான துப்பறியும் கதைப் பின்னணி கொண்டிருந்தாலும், காட்சி அமைப்பில் மலையாள சினிமாவுக்குண்டான அம்சத்தோடு இருக்கும். இந்தப் படத்தைப் பிரமாண்டம் ஆக்கியதே இதன் பின்னணி இசை தான் என்னுமளவுக்கு இசைஞானி இளையராஜா பின்னி எடுத்திருக்கிறார். அதை நீங்கள் இந்த முழு நீள இசைக் கோப்பில் உணர முடியும்.
இதே பின்னணி இசைக் கோப்பை வைத்துத் திகிலூட்டும் பெரும் பிரம்மாண்டத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாகப் படத்தில் இடம் பெறும் கொலை நிகழும் காட்சியில் கொடுக்கப்பட்ட பின்னணி இசை ஒரு சோறு பதம்.
https://soundcloud.com/kanapraba/ms10
மெளனம் சம்மதம் படத்தின் முகப்பு இசை "சிக் சிக் சா" பாட்டின் வாத்திய வடிவமாகவும் இறுதிக் காட்சியில் கல்யாணத் தேனிலாவுமாக நிறைக்கிறது. மம்முட்டி அமலா மேல் காதல் கொண்டு அதைச் சொல்லுமிடத்தும் கல்யாணத் தேனிலாவின் இசைக் கீற்று ஒலிக்கிறது.
இந்தப் படத்தை இத்தகு இசை நுட்பத்தோடு அனுபவித்துக் கேட்க இன்னொரு முறை திரையிடப்படாதா என்ற ஆசையும் ஊறுகிறது.
முழு இசையோட்டத்தையும் அனுபவித்துப் பாருங்கள் பின்னணி இசையின் நாயகன் இசைஞானி இளையராஜா என்று மீண்டும் நிரூபித்து நிற்கின்றது.

Thursday, April 20, 2017

உதய கீதம் பின்னணி இசைத் தொகுப்பு

☘️🌹 இசைஞானி இளையராஜாவின் 300 வது படம் 🌹☘️
🎸 உதய கீதம் 🎺 பின்னணி இசைத் தொகுப்பு 🎻

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு முழு நீளத் திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைப் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
றேடியோஸ்பதி http://www.radiospathy.com/ என்ற என்னுடைய இசை ரசனைப் பதிவுத் தளத்தின் பத்தாண்டு கடந்த பயணத்தில் இதுவரை 526 இடுகைகளைப் பகிர்ந்துள்ளேன். இவற்றில் பின்னணி இசைத் தொகுப்பு, பாடல் ரசனை, சிறப்பு நேயர், கலைஞர்களின் ஒலிப் பேட்டிகள், பல்வேறு இசையமைப்பாளர்களின் சிறப்புத் தொகுப்புகள் அமைந்துள்ளன.

இந்தப் பத்தாண்டுப் பயணத்தின் சிறப்புப் பகிர்வாக இசைஞானி இளையராஜாவின் 300 வது படமாக அமைந்த, வெளிவந்து 32 ஆண்டுகளைத் தொட்டிருக்கும்
 "உதய கீதம்"திரைப்படத்தின் முழு நீளப் பின்னணி இசையைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இசைஞானி இளையராஜாவின் தேனிசை தடவிய முத்தான பாடல்கள், எண்பதுகளின் வசூல் தயாரிப்பாளர் கோவைத் தம்பி, நடிகர் மோகன் இவர்களோடு ராஜாவின் இசையில் ஜனரஞ்சக வெற்றிகளைக் குவித்த கே.ரங்கராஜ் இயக்கம் சேர்ந்த வெற்றிக் கூட்டணி இது.

இதோ தொடர்ந்து உதய கீதம் படத்தின் பின்னணி இசையை அனுபவியுங்கள்.

YouTube வழி
https://youtu.be/dIIsYARF65E

Mixcloud வழி
https://www.mixcloud.com/kana-praba/udhaya-geetham-bgm/

Tuesday, January 7, 2014

"அக்னி நட்சத்திரம்" பின்னணி இசைத்தொகுப்பு

அக்னி நட்சத்திரம் திரைப்படம் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைந்து விட்டன ஆனால் இன்றும் ஏதாவது பண்பலை வரிசை வானொலியில் இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிக்கும் போது நவீனத்துவம் கெடாத இசையை மீண்டும் மீண்டும் மெய்ப்பித்துக்கொண்டே இருக்கின்றது. இசைஞானி இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில், நாயகன் படத்துக்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்போடு வந்த படம், நாயகன் அளவுக்கு உச்சத்தை எட்டவிட்டாலும் கூட அந்தக் காலகட்டத்தில் இந்தப் படத்தின் வித்தியாசமான உருவாக்கத்துக்காகப் பேசப்பட்டது. அப்போது நான் இடைநிலைப்பள்ளி மாணவன், எங்களூரில் அரிதாகத் தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களில் ஒன்றாக, இந்தத் திரைப்படம் மனோகரா தியேட்டரில் திரையிட்டபோது, சக நண்பர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு வந்து மதில் பாய்ந்து களவாகப் போய்ப் படம் பார்த்துவிட்டு வந்து, அப்போது அறிமுக நாயகியாக வந்த நிரோஷா குறித்துப் பகிர்ந்த சிலாகிப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல :-)

அக்னி நட்சத்திரம், பிரபு கார்த்திக் கூட்டணியில் வந்த படம், நாயகன் பிரபுவின் பெயர் கெளதம் பின்னாளில் கார்த்திக் மகனுக்கே பெயராக அமைந்ததும், இந்தப் படத்தின் வாகனச் சாரதியாக இயங்கிய லட்சுமிபதி என்ற பெயரே வி.கே.ராமசாமியின் சாரதியாக நடித்த ஜனகராஜ் இற்கும் அமைந்தது எதேச்சையான விடையமோ தெரியவில்லை. பிரபு, கார்த்திக் கூட்டணி பின்னாளில் ஆர்.வி.உதயகுமாரின் முதல் படம் உரிமை கீதம், இரும்புப்பூக்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ராவணன் வரை இருந்தாலும், இந்தப் படம் அளவுக்கு எந்தப் படமும் பேர் வாங்கவில்லை. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் கூட்டணியும் வருஷம் 16 படம் போல இந்தப் படத்திலும் சேர்ந்திருந்தார்கள் "பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" என்ற பிரபல வசனம் இந்தப் படம் மூலம் பரவலாகப் பேசப்பட்டது. ஜனகராஜ் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இதே போல் இன்னொன்று படிக்காதவன் படத்தில் வரும் "என் தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சுப்பா". நடிகர் விஜய்குமாருக்கு மீள் வரவாக அமைந்தது இந்தப் படம், அப்போது தந்தை பாத்திரம் ஏற்று நடிக்கக் கொஞ்சம் தயங்கினார் என்றும் சொல்லப்பட்டது, ஆனால் இந்தப் படம் தான் சமீப ஆண்டுகள் வரை விஜய்குமாரைத் தொடர்ந்து திரையுலகில் அடுத்த சுற்றில் நிலைத்து நிற்க வழிகோலியது. ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி.உமாபதி வில்லனாக நடித்திருந்தார்.

அமலா என்ற அழகுப்பதுமை, ஒரெலி, ரெண்டெலி, மூணெலி என்று சொல்லிக்கொண்டே அஞ்சலி என்று தன் பேரைச் சொல்லும் குறும்புக்காரி, அமலாவுக்கும் இந்தப் படம் மிகவும் பேர் சொன்ன படமாக அமைந்து விட்டது. நிரோஷா வந்த காட்சிகள் சொற்பம், அவரின் வசன உச்சரிப்பும் கொழ கொழ என்றாலும் அந்த சில்க் ரக கவர்ச்சிமுகம் மறக்க முடியுமா?
நாயகன் படத்துக்கு முன்பே அக்னி நட்சத்திரம் எடுக்கப்படவிருந்ததாகவும் பி.சி.ஶ்ரீராம் தான் மணிரத்னத்தைத் தாமதிக்குமாறு சொன்னதாகவும் பி.சி.ஶ்ரீராமே அண்மையில் சொல்லியிருந்தார்.இந்தப் படத்தைப் பொறுத்தவரை மணிரத்னத்தின் முந்திய படங்கள் அளவுக்கு இல்லாத ஒருவரிக்கதை, ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் அமைத்த காட்சிகளின் வடிவமைப்பும், இசைஞானி இளையராஜா கொடுத்த ஆறுபாடல்களும் தான் மிக முக்கிய பலம். குறிப்பாக இந்த ஆறுபாடல்களில் "ராஜா ராஜாதிராஜனெங்கள் ராஜா" பாடல் அந்தக் காலத்தில் பெற்ற உச்சமே தனி. அதே பாணியில் ஒரு பாடலை மெட்டமைத்துத் தருமாறு என்னப் பெத்த ராசா படத்தில் காட்சி அமைக்கும் அளவுக்குப் பிரபலம். பின்னர் ராஜாதி ராஜா படத்தில் "மாமா உன் பொண்ணைக் கொடு" பாடலில் வாத்திய இசையாகவும் இப்பாடல் ஒலிக்கும்.
சங்கர் கணேஷ் இரட்டையர்கள் கூட "வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா" என்று நியாய தராசு படத்தில் மெட்டமைத்திருக்கிறார்கள். அதை முன்னர் இங்கே பகிர்ந்திருக்கிறேன். http://www.radiospathy.com/2007/11/blog-post.html
இளையராஜாவின் அந்த ஒரு பாடல் தவிர மீதிப்பாடல்களை கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடல்களை எழுதும் பணியை வாலி கையாண்டார். என்னுடைய முதல் பத்து விருப்பத்தேர்வுகளில் "வா வா அன்பே அன்பே" என்றும் இருக்கும். எப்போது கேட்டாலும் மீண்டும் ஒருமுறை என்று மனசு கட்டளை இடும் வரை அலுக்காமல் கேட்பேன். நின்னுக்கோரி வர்ணம் பாடல் அந்தக் காலத்து கோயில் திருவிழா மெல்லிசை மேடைகளில் உள்ளூர்ப்பாடகர்கள் பாடியபோதே பிரமித்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

ஏனோ தெரியவில்லை இதே படத்தைத் தெலுங்கில் கர்சனா என்று மொழிமாற்றும் போது எஸ்.ஜானகிக்குப் பதில் வாணிஜெயராம் ஐப் பாடவைத்தது சுத்தமாக எடுபடவில்லை. கே.ஜே.ஜேசுதாஸ், இளையராஜா குரல்களுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியமே பயன்பட்டார், சித்ரா தன்னுடைய அதே பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இதோ தொடர்ந்து அக்னி நட்சத்திரத்தின் 34 இசைக்குளிகைகைக் கேட்டு இன்புறுங்கள்.

முதலில், கார்த்திக் - நிரோஷா தோன்றும் காதல்காட்சிகள் மூன்றை ஒன்றாக இணைத்துத் தரும் கோப்பு



888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

பிரபு, கார்த்திக் இருவரும் சேர்ந்து விஜய்குமாரை வேறு இடத்துக்கு மாற்றும் நீண்ட காட்சியில் வரும் நீண்ட பின்னணி இசை

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 ஜெயச்சித்ரா தன் மகன் கார்த்திக்கை தன்னுடைய தந்தையின் மூத்த சம்சாரம் வீட்டுக்குப் போகச் சொல்லும் காட்சியில் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் தன் தந்தையைத் தேடி அவரின் மூத்த சம்சாரம் வீட்டுக்கு வரும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் தன் தந்தை விஜ்யகுமாருடன் உரையாடல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 குடிபோதையில் இருக்கும் தந்தையை கார்த்திக் அவரின் வீட்டுக்கு அழைத்துச் சொல்லும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 அமலா அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு கார்த்திக் சந்திப்பு (பிரபலமாகப் பேசப்பட்ட இடிக்கும் ஓசை) 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமாரைக் கண்டு அவர் மகள் தாரா போக முனையும் போது, முத்த மனைவி சுமித்ரா காணும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, அமலா காதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிரோஷா அறிமுகக் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிரோஷா - கார்த்திக் சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு போலீஸ் பணியில் பதவியேற்றதை அறியும் கார்த்திக் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு,கார்த்திக் மோதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக், பிரபு வீடு வந்து தாக்கும் போது பிரபுவின் தாய் சுமித்ரா காயமடையும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திக் ஐக் கைது செய்யும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக்கை ஜாமீனில் எடுக்க, கார்த்திக் இன் தாய் ஜெயச்சித்ராவுடன் போலீஸ் நிலையம் வரும் சுமித்ரா 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 தன் தங்கையின் நிச்சயதார்த்தத்துக்குத் தந்தை விஜய்குமார் வரவில்லை என்ற கோபத்தில் கார்த்திக், கவலையில் ஜெயச்சித்ரா 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜ்யகுமார் தாய் இறக்கும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திக்கைக் கண்டு கோபமடைதல் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் இன் தங்கை தாராவை ரயில் நிலையத்தில் மிரட்டும் வில்லன் கோஷ்டி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக் ஐச் சந்தித்து நிரோஷா தன் காதலைப் பகிரும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 வில்லன் சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 கார்த்திக், வில்லன் வீடு தேடிப்போகும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 மருத்துவமனையில் தந்தை விஜய்குமாரைத் தேடிப்போகும் தாரா, சுமித்ரா சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 ஜெயச்சித்ரா, சுமித்ரா சந்திப்பு 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 வில்லன் மருத்துவமனை வந்து விஜய்குமாரைச் சந்திக்கும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமார் குணமடைந்த சேதி வரும் காட்சி 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமாருக்கான போலீஸ் பாதுகாப்பு விலகுவதாக பிரபு அறியும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 பிரபு, கார்த்திகை சேர்த்து வைக்கும் விஜய்குமார் 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 விஜய்குமார் பணிக்குத் திரும்பி வில்லனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 நிறைவுக்காட்சி இசை, ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா பாடலோடு

Monday, July 29, 2013

"ஒரு கைதியின் டைரி" பின்னணி இசைத்தொகுப்பு

 இசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணியின் நகர்ப்புறம் சார்ந்த கதைக்களனில் வந்து, அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்று ஒரு கைதியின் டைரி. 1985 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை உண்டு பண்ண இன்னொரு காரணம், இயக்குனர் கே.பாக்யராஜ், தன் குருநாதர் பாரதிராஜாவுக்காக "சிகப்பு ரோஜாக்கள்" படத்தின் கதை, வசனம் பொறுப்பை ஏற்று கமல்ஹாசனுக்கான இன்னொரு பெரு வெற்றிப் படம் ஆக்கிய பின்னர் இணைந்த படமாக இந்த நால்வர் கூட்டணியில் "ஒரு கைதியின் டைரி" அமைந்தது.  பின்னர் இதே படத்தை கே.பாக்யராஜ் ஹிந்தியில் "ஆக்ரி ராஸ்தா" என்ற பெயரில் மீளவும் அமிதாப் பச்சானை நாயகனாக்கி இயக்கி, அமிதாப்பின் திரையுலக வாழ்வில் இன்னொரு பெரும் வெற்றிப்படத்தைக் கொடுக்கக் காரணமாகியது இந்த டைரி. ஒரு கைதியின் டைரி படத்தில் கமல்ஹாசனுடன், ராதா, ரேவதி, ஜனகராஜும் முக்கிய வில்லன் பாத்திரத்தில் பாடகர் மலேசியா வாசுதேவனும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்று சொல்லும் போது சட்டென்று நினைவுக்கு வரும் படங்கள் அளவுக்கு இந்தப் படம் என் கவன எல்லைக்கு அப்பால் இருந்திருந்தது. ஆனால் ட்விட்டர் வழியாக நண்பர் சரவணன் தான் இந்தப் படத்தின் பின்னணி இசையைக் கொடுக்குமாறு ஒரு நேயர் விருப்பத்தை அளித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டு நாள் பணியாக, படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஓடவிட்டு பின்னணி இசையின் வாத்திய ஜாலங்கள் எனும் உறுமீன் வருமளவுக்குக் காத்திருக்கும் கொக்காகக் கவனித்து எடுத்த இசைக்குளிகைகளை மிகவும் திருப்தியோடு இங்கே பகிர்கின்றேன். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இசையை வெட்டி ஒட்டிக் கல்லா கட்டும் இன்றைய யுகத்தில, இங்கே நான் கொடுத்திருக்கும் இசைக்குளிகைகளின் வாயிலாக இசைஞானி இளையராஜா அவர்கள்,  படத்தின் மூல ஓட்டத்தை உணர்ந்து பின்னணி இசை என்ற ரத்தம் பாய்ச்சியிருப்பதை உணர்வீர்கள். இந்த இசைத்துளிகள் அவர் ஒரு படத்தின் பாடல்கள் மட்டுமன்றி மைய இசையாக அமையும் பின்னணி இசையில் எவ்வளவு தூரம் ஈடுபாட்டோடு பயணித்திருக்கிறார் என்பது புரியும். இப்படி எண்ணற்ற படங்கள் மலையாகக் குவிந்திருக்கின்றன,  நம் வாழும் காலத்தில் இயன்றவரை கைப்பிடி நெல்மணிகள் ஆதல் சேர்த்து உங்களிடம் அதைச் சிந்தாமல் சிதறாமல் கொடுத்துவிட்டுப் போய்விடவேண்டும் என்ற ஒரு கடைக்கோடி ரசிகன் என் ஆதங்கத்தின் இன்னொரு வெளிப்பாடே இந்த "ஒரு கைதியின் டைரி" பின்னணி இசைத்தொகுப்பு $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ தயாரிப்பு நிறுவனத்தின் பூஜைப்பாடலைப் பாடும் இளையராஜா $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ எழுத்தோட்ட இசை $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ சிறையில் இருந்து வெளிவரும் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ தேவாலயம் தேடிப்போய் தன் பழைய நினைவுகளில் மூழ்கும் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ பழைய நண்பர் ஜனகராஜை சந்திக்கும் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கமலை அடையாளம் காணும் ஜனகராஜ் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கமல் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடையும் ஜனகராஜ் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கமல் மனைவி ராதா மலேசியா வாசுதேவனால் பலாத்காரம் செய்யப்படும்போது $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ ஜனகராஜிடமிருந்து துப்பாக்கியைக் கைப்பற்றும் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ போலீஸ் கமல் அறிமுகக் காட்சி $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ ஜனகராஜிடம் ஆத்திரம் கொள்ளும் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ மகன் கமலை முதன்முதலில் காணும் தந்தை கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கமல்,ரேவதி சந்திப்பு $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ தேவாலயத்தில் நினைவுகளின் இளைப்பாறலில் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கொலை செய்யப்போகும் மர்ம நபர் (தந்தை கமல்)ஐத் தேட வலைவிரிக்கும் போலீஸ் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ போலீஸ் அதிகாரி வினுச்சக்கரவத்தியைப் பழிவாங்கும் காட்சி $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ வினுச்சக்கரவர்த்தியைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடும் நேரம் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ போலீஸ் கமல், கொலையாளி கமலைத் துரத்தும் வேளை $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ தன் தந்தை குறித்த உண்மையை அறிந்துகொள்ளும் போலீஸ் கமல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ படத்தின் இறுதிக்காட்சி,முக்கிய வில்லனை வீரசிவாஜி சிலையாக வேஷம் தரித்த கமல் வேட்டையாடுதல் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday, April 1, 2013

"கற்பூரமுல்லை" பின்னணி இசைத்தொகுப்பு

கற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில் கதை, இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் வசனங்களை வழக்கம் போல பாசிலின் தமிழ்ப்படங்களைக் கவனித்துக் கொள்ளும் கோகுல் கிருஷ்ணா வழங்கியிருந்தார். அமலா, ஶ்ரீவித்யா, ராஜா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம், எண்டே சூர்ய புத்ரிக்கு என்ற பெயரில் மலையாளத்த்திலும் வெளிவந்திருந்தது. மலையாளத்தில் நாயகன் ராஜாவுக்குப் பதில் சுரேஷ் கோபி. வழக்கமாக பாசிலின் மலையாளப்படங்கள் அவரால் தமிழுக்கு மீள இயக்கப்படும் போது மூலப்படத்தின் இசை வேறு ஒரு இசையமைப்பாளராக இருக்கும். விதிவிலக்கான ஒரு சில படங்கள் வரிசையில் கற்பூர முல்லையும் சேர்த்தி. இரண்டு படங்களின் இசையும் இசைஞானி இளையராஜாவே. கற்பூரமுல்லை படத்தின் பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்று நான் எண்ணியிருந்தாலும் அதை உடனடியாக அமல்படுத்தவேண்டிய அவாவை உண்டு பண்ணியது, சமீபத்தில் கைரளி மலையாளத் தொலைக்க்காட்சியில் வரும் கந்தர்வ சங்கீதம் என்ற இசை நிகழ்ச்சியில் இந்தப் படம் குறித்து, பாடகி பின்னி கிருஷ்ணகுமார் வழங்கிய பகிர்வு. இந்தப் படத்தை பாடகி பின்னி கிருஷ்ணகுமார் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அதில் வந்த முக்கிய பின்னணி இசையைக் கேட்டபோது இது என்ன ராகத்தின் வழிவந்தது என்று அவர் தேட, கிட்டியது "மாயா விநோதினி" என்ற ராகம். இந்தப் படத்தின் நாயகி அமலாவின் கதாபாத்திரத்தின் பெயரும் மாயா விநோதினி. எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை வைத்தே பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்ற இசைஞானி இளையராஜாவின் உழைப்பு மெய்சிலிரிக்க வைத்தது இதைக் கேட்டபோது. ஒவ்வொரு படத்திலும் இயக்குனருக்குச் சரிசமமாக, அல்லது அதற்கும்மேலாக காட்சிகளுக்கு உயிர்கொடுத்ததில் ராஜாவின் பங்கு அளப்பரியது. இயக்குனர் பால்கி சொன்னது போல, அந்தப் பின்னணி இசையே ஏராளம் பாடல்களைப் பிரசவிக்கும் வல்லமை கொண்டன. அதுதான் ராஜா. பாடகி பின்னி கிருஷ்ணகுமார் சொன்ன "எண்டே சூர்ய புத்ரிக்கு" (கற்பூரமுல்லை) பின்னணி இசை குறித்த பகிர்வு வீடியோ இது.
கற்பூர முல்லை" திரைப்படத்தின் பின்னணி இசையைத் தொகுத்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சியோடு இழைந்த பின்னணி இசையில் அப்படியே கிறங்கிப் போய்விட்டேன். ஒரு படத்திற்கு இசையமைப்பாளர் எவ்வளவு தூரம் ஜீவ நாடியாக அமைகின்றார் என்பதற்கு, இங்கே நான் தரும் ஒரு சிறு பின்னணி இசைக்குளிகை ஒரு சான்று. முறை தவறிப் பிறந்த தன் மகளை ஏற்றுக் கொள்ள முடியாது மூடி மறைக்கும் சமூகத்தில் பிரபலமான தாயும், அதுவரை அவள் தான் தாய் என அறியாத மகளும் சந்தித்துக் கொள்கிறார்கள். தன்னை ஏற்கமறுக்கும் தாயைக் கண்டு மருகும் மகளின் மனக்குமுறலாக இங்கே இசை பிரவாகிக்கிறது, அதுவே மகள் பேச ஆரம்பிக்கும் போது தாயின் பக்கம் தாவி மிரட்சியோடு அலைபாய்கின்றது. https://soundcloud.com/kanapraba/katpoora-mullai-bgm இசைஞானி இளையராஜாவின் இத்தகு செல்வங்கள் எவ்வளவோ எண்ணற்ற படங்களில் பின்னணி இசையாக இறைந்து கிடக்கின்றன. தொடர்ந்து கற்பூர முல்லை திரைப்படத்தின் முழுமையான பின்னணி இசையைக் கேட்டு மகிழுங்கள். 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கற்பூர முல்லை திரைப்படத்தின் முகப்பு இசை 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா) தன் பெற்றோர் யாரென்று தெரியாத விரக்தியில், கல்லூரில் மேல் மாடியிலிருந்து தற்கொலை முயற்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா)வைக் காப்பாற்ற வைத்தியசாலையில் டாக்டர் ராஜா முயற்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா)வை முதன்முதலில் சந்திக்கும் தாய் ஶ்ரீவித்யா 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா) தொலைபேசியில் தாய் ஶ்ரீவித்யாவை அழைத்துத் தன்னை அறிமுகப்படுத்தும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 தன் தாய் தன்னை ஏற்க மறுத்த கவலையில் மாயா விநோதினி (அமலா) 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ஶ்ரீவித்யா, மாயா விநோதினியிடம் தன்னைத் தாயாக ஏற்க வேண்டாம் என்று மறுக்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ஶ்ரீவித்யா சதிகாரர்களால் கொல்லப்படுதல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 தன் தாய் ஶ்ரீவித்யாவைக் கொன்றவர்களை மாயா விநோதினி (அமலா) பழிவாங்கும் காட்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாயா விநோதினி (அமலா) இறுதிக்காட்சியில் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கற்பூரமுல்லை திரைப்படத்தின் பாடல்கள் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கற்பூர முல்லை ஒன்று < 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பூங்காவியம் பேசும் ஓவியம் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பூங்காவியம் பேசும் ஓவியம் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ஶ்ரீ சிவ சுத 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வாம்மா வா 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

Sunday, January 20, 2013

நாடோடி தென்றல் பின்னணி இசைத் தொகுப்பு

நாடோடி தென்றல் திரைப்படம் வெளிவந்து இந்த ஆண்டோடு 21 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படம் அப்போது தொடங்கப்பட்டபோது கிளம்பிய பரபரப்புக்கள் இன்னும் ஞாபக அடுக்குகளில் இருக்கின்றன. வழக்கமான பாரதிராஜாவின் படம் என்ற கணக்கில் இல்லாது இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகப்படப் பல அம்சங்கள் இருந்தன. அதில் தலையாயது, இசைஞானி இளையராஜாவே படத்தின் கதையை எழுதியிருந்ததோடு, ஆங்கிலப்பாடலை மட்டும் விஜி எழுத மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதி வழங்கியிருந்தார். கூடவே எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா அவர்கள் ராஜாக்களின் கூட்டணியோடு கைகோர்த்து வசனம் எழுதியிருந்தார். இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம், பிரபல ஓவியர் மணியம் செல்வன் அவர்களே கலை இயக்குனராக.
இந்த முக்கியமான விஷயங்களோடு, அப்போது வெற்றிகரமான நாயகனாக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக் நீண்ட இடைவேளைக்குப் பின் தன் குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் நடித்திருந்தார். கூடவே அவரின் இன்னொரு அறிமுகம் பாண்டியனுக்கு ஒரு குணச்சித்திர வேடம். பாரதிராஜாவின் ர வரிசை நாயகிகளில் "ரஞ்சிதா" இந்தப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். புது நெல்லு புது நாத்து மூலம் அறிமுகமாகி வில்லனாக, நாயகனாக மாறிய நெப்போலியன் தன் குருநாதருக்காக கெளரவ வேடத்தில் நடித்திருந்தார். ஜனகராஜும் வழக்கம் போல, இவர்களோடு கிருபா என்ற பிரான்ஸ் நாட்டு வெள்ளையினப் பெண்மணியும் அறிமுகமாக நடித்திருந்தார்.
 இன்றும் பிரபல பாடலாசிரியராகத் தனித்துவத்தோடு இயங்கும் அறிவுமதி அவர்கள் உதவி இயக்குனர்களில் ஒருவராக இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கின்றார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நகைத் தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், அவ்வூருக்கு வாத்து மேய்க்க வரும் கூட்டத்தின் இளமங்கை ரஞ்சிதா மேல் காதல் கொள்வதும், அந்த ஊரை நிர்வகிக்கும் துரையின் தங்கை கிருபா கார்த்திக் மேல் காதல் கொள்வதும், ரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன், வெள்ளைக்காரத் துரை ஆகியோர் கார்த்திக் இற்கு எதிராக எப்படி இயங்குகின்றார்கள் என்பதையும் வைத்து எழுதப்பட்ட கதை தான் இது. இசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணி சேர்ந்தாலே பாடல்கள் தனிச்சிறப்போடு விளங்கும், அந்த வகையில் இசைஞானி இளையராஜா, மலேசியா வாசுதேவன், ஜானகி, மனோ,சித்ரா,சுபா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். "ஒரு கணம் ஒரு யுகமாக" என்ற பாடலை இந்தப் படத்துக்காக இசையமைத்துப் பின்னர் படமாக்காமல் விட்டிருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசைப்பிரிப்பு வேலைகளில் நான் இறங்கியபோது, பாரதிராஜாவின் அறிமுகக்குரல் தவிர மொத்தம் 31 இசைத்துணுக்குகளைப் பிரித்தெடுத்திருக்கிறேன், இவை பாடல்கள் தவிர்ந்த பின்னணி இசை மட்டுமே. இதோ தொடர்ந்து கேட்டு, ரசித்து அனுபவியுங்கள்
 
 இயக்குனர் பாரதிராஜாவின் அறிமுக உரை
 

முகப்போட்ட இசை
 

இரவில் கள்ளத்தனமாக கார்த்திக் வாத்து மேய்ப்போர் கூடாரம் சென்று ரஞ்சிதாவைச் சந்திக்கும் நேரம்

கார்த்திக், ரஞ்சிதா காதல் அரும்பிய வேளை
 

 காதல் கவிதை பாடும் கார்த்திக்
 

குறும்பு செய்யும் கார்த்திக், வெள்ளைக்காரி கிருபாவை சந்திக்கும் போது

வெள்ளைக்காரரின் கோட்டையில் திருடிய எல்.பி இசைத்தட்டை ரஞ்சிதா தன் கைவிரலில் வைத்துச் சுழற்ற, மறைவாக இருந்து அந்த இசைத்தட்டிலிருந்து வருமாற்போல "மணியே மணிக்குயிலே" பாடலை கார்த்திக் தன் குரலில் பாடும்போது
 

ரஞ்சிதா கொண்டுவந்த சோற்றைப் பறித்துத் தின்னும் கார்த்திக், தொடரும் காதல் பரவசத்தில் இனிய இசை கலக்க
 

ரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன் கோபம்
 

வாத்துக்கூட்டத்தை வெள்ளைக்காரி கிருபா குறிவைத்துச் சுடும்போது வாத்து ஒன்று கொல்லப்படும் காட்சியும் தொடர்ந்த இசையும், கார்த்திக் தகராறு பண்ணுவதும்

வெள்ளைக்காரியின் வீட்டுக்கு இரவில் களவாக வரும் கார்த்திக்

கார்த்திக் மேல் அபிமானம் கொள்ளும் வெள்ளைக்காரி
 

வெள்ளைக்காரி தனக்கு ஆபரணம் செய்ய கார்த்திக் ஐ நாடும் போது

கார்த்திக் தன் கண்களால் வெள்ளைக்காரியின் உடல்வாகைப் பார்த்து ஆபரணத்துக்கு அளவு எடுத்தல்

ரஞ்சிதாவின் காதல் அறிந்து தண்டனை கொடுக்கும் முறைமாமன் பாண்டியன்

கார்த்திக் வீட்டுக்கு வந்து நகை செய்ய வரும் வெள்ளைக்காரி

கார்த்திக் மேல் காதல் கொள்ளும் வெள்ளைக்காரி
 

 காதல் சோகத்தில் ரஞ்சிதா
 

கார்த்திக் மேல் கொண்ட காதலால் வெள்ளைக்காரி முட்கள் கொண்ட மலையில் ஓடுதல்

காதலோடு பியானோ வாசிக்கும் வெள்ளைக்காரி
 

கோயில் திருவிழாவில் ரஞ்சிதாவைச் சந்திக்க வரும் கார்த்திக்கை வெள்ளைக்காரி காணும்போது, அதை மறைவாக இருந்து காணும் ரஞ்சிதா தவறாக எண்ணுதல்

 வெள்ளைக்கார துரையுடன் மோதும் கார்த்திக்
 

 காதல் சோகத்தில் ரஞ்சிதா, ஆறுதல் வார்த்தைகளோடு முறைமாமன் பாண்டியன், "யாரும் விளையாடும் தோட்டம்" பாடல் சித்ராவின் சோகக்குரலோடு
 

ரஞ்சிதாவின் சந்தேகத்தால் கவலை கொள்ளும் கார்த்திக் மலையிலிருந்து குதிக்கப் போதல்

 கார்த்திக்குடன் மோதும் பாண்டியன், தொடர்ந்து வெள்ளைக்காரத்துரையால் கொல்லப்படுதல், கொலைப்பழி கார்த்திக் மேல் விழுதல்
 

பாண்டியன் மரணச் சடங்கு ஆற்றில் மிதக்கும் சடலம்
 

பியானோ இசை மீட்கும் வெள்ளைக்காரி
 

நீதிமன்றில் சாட்சி சொல்ல ரஞ்சிதா வரும்போது, காதல் இசை சோக வடிவில் மாறி மீட்கப்படுகின்றது

வாத்துமேய்ப்போர் ஊரைக் காலி செய்தல்
 

நீதிமன்றத்தில் வெள்ளைக்காரி, கார்த்திக்கைக் காப்பாற்ற முனையும்போது

 சிறைச்சாலையில் இருந்து கார்த்திக் தப்பிக்கும்போது
 

மலர்ப்படுக்கையில் கிடத்தப்பட்டு ரஞ்சிதா ஆற்றில் இறக்கிவிடப்படுதல், தப்பி வரும் கார்த்திக் காணல், காதல் ஜோடி சேருகின்றனர், மணியே மணிக்குயிலே பாடல் இசையோடு 3.53 நிமிட இறுதி இசை வார்ப்பு
 

 

Thursday, November 8, 2012

"நாயகன்" பின்னணி இசைத்தொகுப்பு

இன்று நவம்பர் 7, 2012 கலைஞானி கமல்ஹாசன் 58ஆவது அகவையில் காலாடி வைத்திருக்கிறார். நாயகன் படத்தின் பின்னணி இசைத்தொகுப்பைக் கொடுக்கவேண்டும் என்ற பல நாட் கனவு இன்று மெய்ப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்தப் படத்தின் பின்னணி இசையை இதே ஆண்டு இந்தப் படம் வெள்ளி விழாக் கொண்டாடிய நாளில் கொடுக்கவெண்ணியிருந்தாலும் வேலைப்பழுக்களால் இழுபட்டு இன்று ஒப்பேறியிருக்கிறது. 0000000000000000000000000000000000000000000000000000
இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம், கல்கி இதழின் முகப்பு அட்டையில் நாயகன் படத்தில் கமல்ஹாசன், சரண்யா இருவரும் ஒரு பழைய காரில் உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு ஸ்டில்லோடு வெளிவந்திருந்தது. பள்ளிக்கூடத்திற்கு அருகே இருந்த கடையில் இருந்த அந்த ஒரேயொரு கல்கி இதழை வாங்கி வைத்துக் கொண்டேன். வித்தியாசமான அந்த ஸ்டில்லைப் பார்த்துக்கொண்டே இருப்போம் என்று. ஆனால் எப்படியோ சில நாட்களில் என் கை நழுவிப்போய்விட்டது அந்தப்புத்தகம். ஆசையாக வைத்திருந்த பொருள் தொலைந்த ஏக்கம் அப்போது பல நாட்கள் நீடித்தது. இப்போதும் மனதுக்குள் அதை நினைத்துச் சிரித்துக் கொள்வேன். 0000000000000000000000000000000000000000000000000000
நாயகன் படம் அக்டோபர் 21, 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது அந்தப்படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்ப முக்கிய காரணம் கமலின் வித்தியாசமான கெட்அப் ஐத் தாக்கிவந்த பேசும்படம், பொம்மை உள்ளிட்ட சஞ்சிகைகளில் வந்த விளம்பரம் கூட. சின்னத்திரையின் ஆக்கிரமிப்பே இல்லாத சூழலில் சினிமா சஞ்சிகைகள் தான் ரசிகர்களைத் தியேட்டருக்கு இழுக்கும் முக்கிய சக்திகளாக இருந்த நேரம். முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு என்று என்று வந்த விளம்பரங்கள் பின்னர் சுஜாதா பிலிம்ஸ் லிமிட்டெட் வெளியீடு என்று வந்தபோது ஒரு குழப்பம். ஏனென்றால் ஏற்கனவே பாலாஜியின் சுஜாதா சினி ஆட்ஸ் நிறுவனமும் படத்தயாரிப்பில் அப்போது மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்த நேரம். பின்னர் சுஜாதா பிலிம்ஸ் லிமிட்டெட் தன்னுடைய அக்னி நட்சத்திரம் படத்தயாரிப்போடு ஜி.வி பிலிம்ஸ் ஆனது இன்னொரு வரலாறு. மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஸ்வரனும் இந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் முன்னணித் தயாரிப்பாளர் ஆனார். நாயகன் படத்தின் உருவாக்கம், அது பின்னர் ஜி.வெங்கடேஸ்வரனுக்குக் கைமாறியதைப் பற்றி அண்மையில் கமல்ஹாசன் ஹிந்து பத்திரிகையில் கொடுத்த பகிர்வில் அறிந்திருப்பீர்கள்.
ஒரு படைப்பை நேர்மையாகக் கொடுக்கும் போது கிட்டும் அதீத கெளரவம் இந்தப் படத்துக்கும் கிட்டியிருக்கிறது. வெகுஜன அபிமானம் மட்டுமல்ல, Time சஞ்சிகையின் எல்லாக்காலத்திலும் கெளரவித்துக் கொண்டாடக்கூடிய 100 படங்களில் ஒன்று என்ற தனிச்சிறப்பையும் பெற்றிருக்கிறது. கமல்ஹாசன் இந்தப் படத்துக்கு முன்பே எத்தனையோ சோதனை முயற்சிகளின் மூலம் தன் பாத்திரப்படைப்பில் வித்தியாசத்தைக் காட்டமுனைந்திருந்தாலும், ஒரு பூரணத்துவம் என்பது இந்தப் படத்திலேயே கிட்டியிருக்கிறது. அதற்கு மணிரத்னம் என்ற சிறந்த நெறியாளரின் முக்கிய பங்கு கண்டிப்பாகப் பங்கு போட்டிருக்கிறது. கூடவே ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம். இவர்களோடு நம்ம இளையராஜா. பாத்திரங்க்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை முழுமையாக நிரப்பித் தன் பங்கை நிறைவாகச் செய்து, அந்த வெற்றிப் புளகாங்கிதத்தோடே நின்றுவிடாமல் அடுத்த படைப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இசைஞானியின் பங்கு இந்தப் படத்தின் ஆரம்ப நிமிடம் முதல் இறுதிச் சொட்டு வரை இசையால் இழைத்து இழைத்துப் பண்ணப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இதையெல்லாம் நுட்பமாகக் கேட்டிருந்திருக்க முடியாது. ஆனால் ராஜாவின் இசை காலம் கடந்தது என்பதற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஒவ்வொரு இசைத்துணுக்குகளாகக் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் கிட்டியதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கமல்-மணிரத்னம்-இளையராஜா இந்தப் படத்தில் இணைந்தது போன்ற இன்னொரு வாய்ப்பு வந்தாலும் இந்தப் படம் கொடுத்த சிறப்பிற்கு நிகராக இருக்குமா என்பது ஐயமே.
00000000000000000000000000000000000000000000000000000000 நாயகன் படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பிற்காகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத்தைப் போட்டுவிட்டு ஒவ்வொரு காட்சியாக உறுமீன் வருமளவுக்கும் வாடி நிற்கும் கொக்குப்போல இருப்போம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நினைத்ததற்கு மேலாக கைகொள்ளாத அளவு இசைக்குளிகைகளைப் பிரித்து எடுத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட மூன்று நாள் பகுதி நேர உழைப்பு. ஆனால் ராஜா இதையெல்லாம் ஒரே மூச்சில் கொடுத்திருப்பார். மொத்தம் 29 இசைக்குளிகைகள் கிட்டியிருக்கிறது இந்த இசைக்குளிகைகளில் தென்பாண்டிச் சீமையிலே மட்டுமே பாடல், மற்றயவை எல்லாமே இசை ஆலாபனைகள். இதைவிட இன்னும் காட்சியோட்டத்தோடு இழத்து இழைத்துக் கொடுத்த நுணுக்கமான இசையைப் பிரிக்கமுடியாத அளவுக்கு நேர்த்தியான, சவாலான படைப்பாக அதை எதிர்கொண்டேன். இதோ தொடர்ந்து "நாயகன்"பின்னணி இசை பேசட்டும் 000000000000000000000000000000000000000000 இந்தப்படத்தின் ஹைலைட்டான இசைத்துணுக்குகள் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாலியல் விடுதியில் வேலு கல்லூரி மாணவியான அவள் மீது நேசம் கொள்ளும்போது  
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கர் மனைவி துப்பாக்கிச் சூடுபட்டு இறக்கும் காட்சி, மேலே கொடுத்த அதே இசைத்துண்டம் சோகவடிவாக மாறும் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கர் மகன் இறந்த செய்தியைக் கேட்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலுநாயக்கர் புது அசிஸ்டெண்ட் கமிஷனர் வீடு தேடிப்போகும் காட்சி, ஆக்ரோஷத்தோடு போகும் அவர் தன் மகள் வீடு என்று அறியும் போது அடங்கியொடுங்கும் கணத்தை இசையால் காட்டும் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 நாயகன் படத்தின் முழு இசைப்பகிர்வு 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 சிறுவன் வேலு போலீசிடம் இருந்து தப்புவதற்காக காட்டில் மறைவாக இருக்கும் தன்னுடைய தந்தையைக் காணச் சொல்லும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 சிறுவன் வேலுவின் தந்தையைக் கொன்ற போலீஸ்காரை இடுகாட்டில் வைத்துக் கொன்றுவிட்டு வேலு ரயிலேறித் தப்புகிறான் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 சிறுவன் வேலு பம்பாய்க்குச் சென்று அடைக்கலம் தேடுதல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 நாலு பேருக்கு உதவணும்னா எதுவும் தப்பில்லை - வேலுவிடம் வளர்ப்புத் தந்தை 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலுவை போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்யது, அடிபட்ட காயங்களுடன் அவனைத் தெருவில் இறக்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 தன் குடியிருப்பில் இருக்கும் சிறுவர்களோடு தன் காயத்தை மறைத்துச் சந்தோஷம் கொண்டாடும் வேலு 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 நாலுபேருக்கு உதவணும்னா எதுவுமே பாவம் இல்லை தன் வளர்ப்புத்தந்தை சொன்னதையே மீளவும் வேலு சொல்லும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு முதன்முதலில் கள்ளக்கடத்தலில் இறங்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாலியல் விடுதியில் தன் வருங்காலத் துணையை வேலு முதன்முதலில் சந்திக்கும் காட்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலுவின் வளர்ப்புத்தந்தையைக் கொன்றபோலீஸ்காரரைத் தேடிப் பழிதீர்க்கும் போது, இதிலிருந்து வேலு நாயக்கர் தராவி குடியிருப்பு வாசிகளின் ஆபத்பாந்தவராக மாறுகிறார். 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கரின் மனைவியைக் கொன்றவர்களைத் தேடித் தேடிப் பழிதீர்த்தல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கரின் மகள் தன் தாய் இறந்த காரணத்தைக் கேட்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கரால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மனவளர்ச்சி குன்றிய மகனை அவர் சந்திக்கும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கரின் மகள் இவரின் தவறுகளுக்கு எதிராக வாதம் செய்யும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கருக்கு எதிராக அப்ரூவர் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கரின் மகன், அப்ரூவரை நீதிமன்றத்தில் வைத்துக் கொலை செய்யச் செல்லும் காட்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 போலீசிடமிருந்து தப்பி ஓடும் வேலு நாயக்கர் மகன் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கருக்கு எதிராக புதிய அசிஸ்டெண்ட் கமிஷனர் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 நீண்ட நாட்களுக்குப் பிறகு மகளைச் சந்திக்கும் வேலு நாயக்கர் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கருக்கு அரெஸ்ட் வாரண்ட் அதைத் தொடர்ந்து அவரைத் தேடும் போலீஸ் குழு 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 இன்ஸ்பெக்டரைக் கொன்றது வேலு நாயக்கர் என்று அவரின் மகன் அசிஸ்டெண்ட் கமிஷனர் மூலம் அறியும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கர் சரணடையும் போது 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கர் தன் பேரனுடன் உரையாடும் காட்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கரால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மகன் பழிதீர்க்கத்தயாராதல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 வேலு நாயக்கர் கொல்லப்படும் அந்த நிமிடங்கள் 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000