கடந்த Zee TV சரிகமப வில் ஒரு ஆச்சரியமான நிகழ்வு அரங்கேறியது.
Track Singer எனப்படும் ஆதாரப் பாடகர் தினேஷ் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
1984 ஆம் வருஷம்
தான் ஒரு ஒலிக் கலைஞராக (Sound Engineer) வர வேண்டி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் ஐ சந்தித்ததாகவும், அவரின் தரங்கிணி ஒலிக்கூடத்துக்கு வந்த போது போட்டி நிறைந்த உலகில் என்ன செய்யப் போகிறோம் என்ற நிலையில் இசைஞானி இளையராஜாவிடமே Sound Engineer ஆக வாய்ப்பு கிடைக்கிறது.
ஒரு நாள் திடீரென்று இளையராஜாவின் அழைப்பு. எஸ்பிபிக்காக track பாட வேண்டுமென்று.
“பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான்”
என்ற இதயக்கோயில் பாடலைப் பாடியவருக்கு, நான் பாடும் மெளன ராகம், பனி விழும் இரவு என்று அடுக்கடுக்காக track பாடல்கள் கிடைக்கின்றன.
“நீ நல்லாத்தானே பாடுறே ஏன் அவர் மாதிரி (கே.ஜே.ஜேசுதாஸ்) மாதிரிப் பாடுறே”
என்று இளையராஜா சொன்னாராம்.
ஶ்ரீராகவேந்திரர் படத்தில் “அழைக்கிறான் மாதவன்”
https://youtu.be/nvvlDVjigio?si=kSB5mnlN4F24OS5J
பாடலுக்கும் அவ்விதமே பாடிச் சென்றார். அதைப் பாட வந்த ஜேசுதாஸ்
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா…
என்ற அடிகளைத் தானே பாடுவது பாடலின் மூலக் குரலுக்கு முரணாக இருக்குமே முதலில் பாடியது ராகவேந்திரர் ஸ்வாமிக்கு அல்லவா? சிஷ்யன் பாடும் அடுத்த அடிகளை அப்படியே அவர் குரலில் வச்சிடுங்க, எனவும்
தினேஷ் பாடிய அந்தப் பகுதி அப்படியே பயன்பட்டு அதுவே தினேஷின் முதல் பாடலாகவும் அமைந்து விடுகிறது. பதிவை எழுதியவர் கானாபிரபா
பாடகர் தினேஷ் நேரப் பாடல்களாக இளையராஜாவிடம் இன்னும் பாடியிருக்கலாம். கானாபிரபா
தனிப் பாடல்கள் மற்றும் மலையாளத் திரையுலகம் அவரைப் பயன்படுத்திக் கொண்டது.
இளையராஜா இசையில் தெலுங்கில் வெளியான தர்ம ஷேத்திரம் படம் தமிழில் போர்க்களம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்ட போது
பாலகிருஷ்ணாவே விரும்பி வாங்கிக் கொண்ட ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா பாடிய “மாசி மாசம் ஆளான பொண்ணு” எஸ்பிபி , சித்ரா குரலில்
என்னோ ராத்லு”
https://youtu.be/tLZmK8pJHHY?si=YH5PexQMyUBgvyF_
என்று ஹிட் அடிக்க அதை தினேஷ்
“ஆடை மூடும்” என்ற பாடலாக
https://youtu.be/l55W9NTUeyo?si=FaUf-ajAtLGR0iHB
ஸ்வர்ணலதா குழுவினருடனும்,
https://youtu.be/l55W9NTUeyo?si=FaUf-ajAtLGR0iHB
“மொத்தமாய் சிங்கார மேனி தொட்டு” ஆகிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில்
சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தில்
கண்ணே வா
https://www.youtube.com/watch?v=d1x6oGbhu0w
பறவைகள் பலவிதம் படத்தில்
மனம் பாடிட நினைக்கிறதே
https://www.youtube.com/watch?v=Hrh-8MSXN8o
Welcome 1990 என்ற இசைத்தொகுப்பு அவுசப்பச்சன் மெட்டமைக்க, ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை கொடுக்க வெளியானது. பின்னர் அதை Fantacy (அந்திமாலை) என்று தன் அனுமதியில்லாமல் ரஹ்மான் தமிழில் மீள வெளியிட்டதாகவும் அவுசப்பச்சன் சர்ச்சையை எழுப்பியிருந்தார். அதில்
இனிய கல்லூரி
https://www.youtube.com/watch?v=rw6Nosr_qO8
என்ற பாடலையும் தினேஷ் பாடியுள்ளார்.
பதிவை எழுதியவர் கானாபிரபா
வித்யாசாகர் இசையில் “பூமனம்” படத்தில் இவர் பாடிய
“என் அன்பே”
https://www.youtube.com/watch?v=4QEAtji8N-4
பாடல் பின்னாளில் பார்த்திபன் கனவு படத்தில் “பக் பக் பக் மாடப்புறா” வாக உரு மாறியது.
லஷ்மிகாந்த் பியாரியால் இசையில் நீராடி வா தென்றலே
https://www.youtube.com/watch?v=2RM_IR-0HLk
அவரின் குரலில் தான் ஒலித்தது.
பாடகர் தினேஷ் இளையராஜா இசையில் நிறையப் பாடியிருக்கலாம் என்று எண்ண வைக்கிறது அவரின் இந்த மேடைப் பாடல்
https://youtube.com/shorts/39JxR2Ybhxs?si=QKjEYWIAE9P6TETA
கானா பிரபா
26.02.2025