ஈழத்து இளம் பாடகன் சுஜித் ஜீ, ராப் இசையில் வழங்கும் விடுதலை பாடலை உங்களோடு பகிர்கின்றேன். நம் ஈழத்து நிலையினை வரிகளில் தோய்த்து இன்றைய காலகட்டத்து இளம் நெஞ்சங்களுக்கு வழங்கும் துள்ளிசைப் பகிர்வு இது.
பி.கு: இந்தப் பாடல் இந்த ஆண்டு வெளிவந்ததாக முன்னர் ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் ஏற்கனவே இது வந்துவிட்டதாக சில சகோதரங்கள் உறுதிப்படுத்தியதால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ;)
சயந்தன், மலைநாடான், கொழுவி, வசந்தன், டி சே, சினேகிதி என்று ஆளாளுக்கு "நாங்கள் பொம்பிளை பார்க்கும் முறை" என்று பதிவு மேல் பதிவு போட்டு ஓய்ந்த இந்த வேளை (மிச்சம் இருக்கிறவை மதி, சின்னக்குட்டி, யோகன் அண்ணை, மழை, செல்லி) நானும் என் பங்கிற்கு ஏதாவது தரலாம் என்று யோசித்தேன். கிடைத்தது கைவசம் வைத்திருந்த ஒலிநாடா ஒன்று.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இங்கிலாந்தின் லூசியம் தமிழ் நண்பர்கள் வெளியிட்ட பூபாளம் ஒலிநாடா.அதில் நகைச்சுவையாக வெளிநாட்டு அவலங்களைச் சொல்லும் பாடல்கள் உள்ளன. இங்கே நான் தருவது, வெளிநாடு சென்று ஊரில் இருக்கும் தன் குடும்பத்துக்காக ஓடாய் உழைக்கும் இளைஞர் கூட்டமும், அவர்களின் வயசுக்கோளாறைக் (?) கண்டும் காணாமல் இருக்கும் பெற்றோரின் பணம் குறித்த சிந்தனையும். இப்பாடல் வரிகளையும் தருகின்றேன். முழுமையான ஈழத்துப் பேச்சு வழக்கில் இப்பாடல் அமைந்திருக்கின்றது. இரண்டு வகையான இசையில் இவை இங்கே தரப்படுகின்றன.
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
முருகற்ற மூத்ததுக்கு மொன்றியல்ல பெடியன் கனகற்ற கடைசிக்கு ரண்டு மூண்டு போய்(boy) பிறண்ட் மயிலற்ற மகளுக்கு கியூவில பெடியள் ஒருத்தி கூட மிச்சமில்லை, இங்கு நானும் என்ன செய்ய பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
கந்தற்ற மகளின்ர குறிப்பைக் கொஞ்சம் பாருங்கோ கொழுந்தற்ற மச்சாளிற்ற கதையை மெல்லப் போடுங்கோ குருவற்ற கெளரிக்கு வயதென்ன கேளுங்கோ பிளீஸ்..பிளீஸ்..பிளீஸ்...பிளீஸேதுஞ்செய்யுங்கோ பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
காலமைல வேலை, கஷ்டப்பட்டுச் செய்யிறன் கண்டறியாப் படிப்பில கனகாலம் போக்கிப் போட்டன் கறி புளி சமைக்கத் துணையொண்டைத் தேடுறன் காத்திருந்து காத்திருந்து கோட்டை விட்டுட்டன் பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
கோயில், குளம், டிஸ்கோ குறிவைக்கப் போறன் கே றேஸ் காறில குட்டி பார்க்கப் போறன் கறுவலோ வெள்ளையோ கொண்டுவரப் போறன் கடைசியா உங்களுக்கு எச்சரிக்கை செய்யிறன்