Pages

Thursday, May 25, 2023

பாடலாசிரியர் நா.காமராசன் ❤️ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ


தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடி இயக்கக்காரர், மரபுக் கவிதையில் வளர்ந்து வந்தவர் புது மரபையும் உள்வாங்கிக் கவி படித்தவர் நா.காமராசன் அவர்களின் ஐந்தாண்டு நினைவு தினம் 24.05.2023 ஆகும்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடலாசிரியர் என்ற சிறப்பையும் தாங்கியவர் நா.காமராசன் அவர்கள்.

கனவுகளே ஆயிரம் கனவுகளே

கனவுகளே ஆயிரம் கனவுகளே

காதல் தேவனின் தூதர்களே

என் கண்மணியை இங்கு வரச் சொல்லுங்கள்

கொஞ்சம் வரச் சொல்லுங்கள்

https://www.youtube.com/watch?v=SnIlQowzIa4

இப்படியாக “நீதிக்குத் தலைவணங்கு” படத்தில் தொடங்கி, “போய் வா நதியலையே” (பல்லாண்டு வாழ்க), “தொட்ட இடமெல்லாம்” (இதயக்கனி),”இதயத்தில் இருந்து” (இன்று போல் என்றும் வாழ்க), “புரியாததைப் புரிய வைக்கும்” ( நவரத்தினம்), “தொட்ட இடமெல்லாம் “ ( இதயக் கனி) என்று எம்.ஜி.ஆரின் ஒரே படத்தில் இடம்பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவராக அமர்ந்தவர்.

இசைஞானி இளையராஜா தன் இசையில் சீராட்டிய பாடலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்பதோடு 2014 இல் “கவிஞர் வாலி” விருது நிகழ்வில் கலந்து சிறப்பித்து இவருக்கான அந்த விருதையும் அளித்துச் சிறப்பித்தார்.

இசைஞானி இளையராஜா இசையில் 58 பாடல்களை எழுதி அளித்திருக்கும் நா.காமராசன் வரிகளில் அமைந்த பாடல்களில் புகழ் பூத்தவையை பொறுக்க உதவியது சகோதரர் அன்பு தொகுத்த இசைஞானி பாடல் திரட்டு, அதிலிருந்து தேர்ந்தெடுத்தவை.

1. வெளக்கு வச்ச நேரத்துலே – முந்தானை முடிச்சு

https://www.youtube.com/watch?v=jKCdeWecKes

2. அடுக்கு மல்லிகை – தங்கமகன்

https://www.youtube.com/watch?v=cY_zHt4qWdM

3. ஓ மானே மானே – வெள்ளை ரோஜா

https://www.youtube.com/watch?v=KgOgyuIOUd0

4. முத்துமணிச் சுடரே வா – அன்புள்ள ரஜினிகாந்த்

https://www.youtube.com/watch?v=51N8_swDzLc

5. தெற்குத் தெரு மச்சானே – இங்கேயும் ஒரு கங்கை

https://www.youtube.com/watch?v=9mARPaSy5Ak

6. கண்ணுக்குள்ளே யாரோ – கை கொடுக்கும் கை

https://www.youtube.com/watch?v=RXXQM-g2sl0

7. வெண்ணிலா ஓடுது – நாளை உனது நாள்

https://www.youtube.com/watch?v=YNX2cOlBF_s

8. பாடும் வானம்பாடி – நான் பாடும் பாடல்

https://www.youtube.com/watch?v=ZJHjnYc8h2U

9. சிட்டுக்குச் செல்லச் சிட்டுக்கு – நல்லவனுக்கு நல்லவன்

https://www.youtube.com/watch?v=9IX3ps0Yob4

10. நானே ராஜா – நீங்கள் கேட்டவை

https://www.youtube.com/watch?v=fU3ae-huCIU

11. ஓ தேவன் கோவில் – ஓ மானே மானே

https://www.youtube.com/watch?v=bfarKJ_3vJA

12. வெள்ளி நிலா பதுமை – அமுத கானம்

https://www.youtube.com/watch?v=qcHOHLrqYro

13. பாட்டுத்தலைவன் பாடினால் – இதயக் கோவில்

https://www.youtube.com/watch?v=MLTUKKECcls

14. வானிலே தேனிலா – காக்கிச் சட்டை

https://www.youtube.com/watch?v=Qr_Lr4Dt-oo

15. மானே தேனே கட்டிப்புடி – உதய கீதம்

https://www.youtube.com/watch?v=JYz2Nbrvvd0

16. கானலுக்குள் மீன் பிடித்தேன் – காதல் பரிசு

https://www.youtube.com/watch?v=QiHZdSG_pFQ

17. துப்பாக்கி கையில் எடுத்து – கோடை மழை

https://www.youtube.com/watch?v=y-XB6mPgrg0

18. கண்ணனைக் காண்பாயா – மனிதனின் மறுபக்கம்

https://www.youtube.com/watch?v=S0WIpg-paBw

19. மந்திரப் புன்னகையோ – மந்திரப்புன்னகை

https://www.youtube.com/watch?v=XZo1pisb43w

20. பவள மல்லிகை – மந்திரப்புன்னகை

https://www.youtube.com/watch?v=aJ5qLjx82LU

21. நான் காதலில் புதுப்பாடகன் – மந்திரப்புன்னகை

https://www.youtube.com/watch?v=1CkpLyqyybE

22. கண்ணன் வந்து பாடுகின்றான் – ரெட்டை வால் குருவி

https://www.youtube.com/watch?v=9QKSaElfwQM

23. தேன்மொழி அன்புத் தேன்மொழி – சொல்லத் துடிக்குது மனசு

https://www.youtube.com/watch?v=DGBEFNPPtI8

24. தோப்போரம் தொட்டிக் கட்டி – எங்க ஊரு காவக்காரன்

https://www.youtube.com/watch?v=EzqK8QU6Q1c

25. ஒரு தேவதை வந்தது – நான் சொன்னதே சட்டம்

https://www.youtube.com/watch?v=1lhAlc3aJBw

26. சின்னஞ்சிறு கிளியே – படிச்ச புள்ள

https://www.youtube.com/watch?v=Mb2S36C_jfA

27. வாசமுள்ள வெட்டி வேரு – அம்மன் கோவில் திருவிழா

https://www.youtube.com/watch?v=WvWBvGOKK5k

28. இந்திர சுந்தரியே – என் அருகில் நீ இருந்தால்

https://www.youtube.com/watch?v=Uf3Ff4jjvTE

29. நிலவே நீ வர வேண்டும் – என் அருகில் நீ இருந்தால்

https://www.youtube.com/watch?v=zlzH2_K4X64

30. உதயம் நீயே – என் அருகில் நீ இருந்தால்

https://www.youtube.com/watch?v=0FeWUz7WvJM

31. ஓ உன்னாலே நான் – என் அருகில் நீ இருந்தால்

https://www.youtube.com/watch?v=HQka8qaX1Bg

32. சிங்காரச் செல்வங்களே – மருது பாண்டி

https://www.youtube.com/watch?v=TlAbvhfYNe4

33. மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ – பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

https://www.youtube.com/watch?v=XtPGd9adRQg

34. வானம்பாடி பாடும் நேரம் – சார் ஐ லவ் யூ

https://www.youtube.com/watch?v=TGZyt0C28cc

35. வானத்தில் இருந்து – வெள்ளையத் தேவன்

https://www.youtube.com/watch?v=gYYVP3X8o28

36. ஒரு மாலைச்சந்திரன் – உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்

https://www.youtube.com/watch?v=9ISU6tvioKI

37. சித்திரத்துத் தேரே வா – நாடோடிப் பாட்டுக்காரன்

https://www.youtube.com/watch?v=tivOmNNgNgU

கானா பிரபா

25.05.2023


Monday, May 22, 2023

ஓ தேவன் கோவில் வீணை பாடும் இசை கேட்கும் 💚❤️🧡🎸


ராஜா பாடல் க்விஸ் ஐ மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் இந்த வாரத்துக்கான பாடல்களை நேற்றுத் தொகுத்துக் கொண்டிருந்த போது அடடா இந்தப் பாடலைக் கேட்டு எவ்வளவு நாளாச்சு என்று உச்சுக் கொட்டியவாறே ரசித்தேன். என்னவொரு அற்புதமான ஆலாபனையோடு ஜானகிம்மா குரல் மிதந்து வர, அப்படியே ஏந்திப் பாடும் எஸ்.பி.பியும் இணைய, நீண்ட நாட்களுக்குப் பின் கேட்ட அந்த சுகம் ஆகா.

இனிமேல் தான் வேடிக்கை 😀
நேற்று மாலை பின்னணி விபரங்களைப் போட்டியின் க்ளூவாகத் திரட்டும் போதுதான் அவதானித்தேன், பாடல் இடம்பெற்ற “ஓ மானே மானே” படத்தைத் தயாரித்தது ஃபிலிம்கோ.

நேற்றுக் காலையில் தான் ஃபிலிம்கோவின் தயாரிப்பு நிர்வாகி கஃபாரின் பேட்டியை சாய் வித் சித்ராவில் https://www.youtube.com/watch?v=_lFei1PSXDs பார்த்திருந்தேன். அதில் அவர் பிலிம்கோ சார்பில் “வெள்ளை ரோஜா” படம் உருவான கதையைச் சொல்லியிருந்தார். ஆனால் “ஓ மானே மானே” படம் பற்றிய பேச்சு வரச் சம்பந்தம் வாய்க்கவில்லை.
இந்த இடத்தில் தான் ஒரு முடிச்சுப் போட்டுப் பார்த்தேன்.
“வெள்ளை ரோஜா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் ஏ.ஜகந்நாதன் அவர்களுக்கே இன்னொரு படத்தையும் கொடுத்திருக்கிறார்கள் இந்த ஃபிலிம்கோ நிறுவனத்தினர்.
அத்தோடு “வெள்ளை ரோஜா” படத்தில் இடம்பெற்ற புகழ் பூத்த பாடலான “ஓ மானே மானே உன்னைத்தானே” பாடலின் ஆரம்ப வரிகளையே அந்த இன்னொரு படத்தின் தலைப்பாக்கி இருக்கிறார்கள். அத்தோடு எப்படி வெள்ளை ரோஜா படத்துக்கு சிவாஜியை ஒப்பந்தம் செய்ய உறுதுணையாக இருந்தாரோ அதே வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் தான் “ஓ மானே மானே” படத்தின் வசனமும்.

அத்தோடு கஃபாரின் பேட்டியில் ஃபிலிம்கோ நிறுவனம் தமது தயாரிப்புப் பணியை நிறுத்தியது குறித்த நிறுவனத்தின் மதக் கொள்கைக்கு எதிராக இருந்ததால் என்று சொல்லியிருந்தார். அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அதுதான் முழுக்காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

தொடர்ந்து உயிருள்ளவரை உஷா, வெள்ளை ரோஜா, நீங்கள் கேட்டவை என்று வெற்றிப் படங்களை அளித்த இந்த நிறுவனத்தின் சறுக்கலில் ஒன்று “ஓ மானே மானே” படம், இது வெளிவந்த சுவடே பலருக்குத் தெரியாது. “பொன்மானைத் தேடுதே” பாடலை மோகனுக்காகக் கமல்ஹாசன் பாடியது என்ற புண்ணியத்தில் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
அதோடு பிலிம்கோவின் அனுசரணையில் கஃபாரும் இன்னொரு தயாரிப்பு நிர்வாகியும் தயாரித்து ரம்யா கிருஷ்ணன் அறிமுகமாகிய “வெள்ளை மனசு" தோல்வி. “ரெட்டை வால் குருவி" முதலுக்கு மோசமில்லை.
அதை விட ஆகப்பெரிய சறுக்கல் என்னவெனில் “மை டியர் குட்டிச்சாத்தான்" 3D படத்தைப் பார்த்துச் சூடு போட்டுக் கொண்ட கதையாக பிலிம்கோவின் 3D படமான “தங்க மாமா” கூட எடுபடவில்லை. அந்தக் காலத்தில் அது பெரும் பொருட்செலவு பிடித்த படமாக இருந்திருக்கும்.

அத்தோடு இன்னொரு முடிச்சு என்னவென்றால், “ஓ மானே மானே உன்னைத்தானே” பாடலை எழுதிய பாடலாசிரியர் நா.காமராசனையே “ஓ மானே மானே” படத்தின் இந்த “ஓ தேவன் கோவில்" பாடலையும் எழுத வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.
ஒரு பேட்டியில் சொல்லாத கதை எப்படி நம்முடைய எண்ண அலையை உரசிப் பார்த்திருக்கிறது என்று நினைத்து ஆச்சரியப்பட்டுப் போனேன்.

பாட்டைக் கேட்டுப் பாருங்கள் நீங்களும் சொக்கிப் போவீர்கள்

ஓ தேவன்
கோவில் வீணை
பாடும் இசை கேட்கும்
காதல் சுகம் தேடும்

https://www.youtube.com/watch?v=bfarKJ_3vJA 

கானா பிரபா

Saturday, May 20, 2023

ராசாக்கண்ணு ❤️

உச்சிக்குள்ளே 

கிடந்த சனம்

கோணிச் சாக்கிலே 

சுருண்ட சனம்

பஞ்சம் பசி 

பார்த்த சனம்

படையிருந்தும் 

பயந்த சனம்

💔

முன்னிரவை எட்டிப் பிடிக்கும் நேரத்தில் இந்தப் பாட்டு வந்து சேந்தது இந்த வாரத்தின் ஒட்டு மொத்த மனநிலையையும் நாடி பிடித்து, தோள் பற்றி விசாரிப்பது போல இருந்தது.

தோற்றுப் போன சனங்களின் குரல் எங்கு ஒலித்தாலும் அது நம்முடைய குரலாகவே மாறிப் போய் விடுகிறது.

இது வெறும் பாடலல்ல, ஒப்பாரிக் கூப்பாடும் அல்ல. அடி மனசு எழுந்து வந்து பேசும் சாட்சியம்.

என்னதான் மகிழ்ச்சிப் படுக்கைக்கு இழுத்து வர முயன்றாலும், அடி மன ஆளத்தில் மாறாப் புண் இலிருந்து எழும் வலி இது.

காலை எழுந்து வந்து காணொளியில் உற்றுப் பார்த்துக் கொண்டேன் இங்கே பதிவு செய்யப்பட்டோரின் அங்க அசைவுகளை.

சனங்களின் கலைஞன் எங்களைச் சிரிக்க வைத்தான். அவன் ஓயக் கூடாது. அவன் ஒரு சுயம்பு.

அந்த செப்பில் படிந்த உப்பு கழுவப்பட்டிருக்கிறது.

வடிவேலு என்ற கலைஞன் இனி ஒரு தலை சிறந்த குணச்சித்திரமாக அடையாளப்படுத்த, இன்னும் இரு தசாப்தமாவது சுற்ற இந்த மாமன்னன் ஒரு திறவு கோலாகட்டும்.

தன் உடல் மொழியில் மின்னிய பரிமாணங்கள் இன்று முன்னெப்போதுமில்லாத பாடகன் வடிவேலுவிலும் மிளிர்கிறது.

“மலையிலே தான் 

  தீப்பிடிக்குது

  ராசா

  என் மனசுக்குள்ளே 

  வெடிவெடிக்குது 

   ராசா”

வடிவேலுவைக் காணவில்லை அங்கே. கொண்டு வரப் போகும் அந்தப் படைப்பு எழுந்து நின்று பாடுமாற் போல.

தின்னேலிப் பாசையில திட்டித் தீர்த்து வேலை வாங்கும் கடும் உழைப்பாளி. தனக்குத் திருப்தி வரும் வரை விடவே மாட்டார் என்று “பரியேறும் பெருமாள்” வழியாக நடிகர் மாரிமுத்து, இயக்குநர் 

மாரி செல்வராஜ் ஐப் பற்றிச் சொல்லி இருப்பார். இந்தப் பாடல் காணொலியில் மாரி செல்வராஜைக் கண் வெட்டாது பார்த்தேன். பரீட்சை மண்டபத்தில் பதற்றமாக இருக்கும் மாணவன் தோரணை. அந்தக் காட்சியையும் சிறைப்பிடித்துக் கொண்டேன்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சமயம் ஏ.ஆர்.ரஹ்மான் வந்திருந்த போது போட்டிப் பாடகியிடம்

“கோயம்புத்தூர் பாசையில் ஒரு பாட்டு பாடுவிங்களா?”

என்று கேட்டபோது அந்த 2K kid பொத்தம் பொதுவாக ஒரு பாட்டைப் பாடவும்

“இது கோயம்புத்தூர் பாஷையா?” என்று ரஹ்மான் கலாய்த்து விட்டார்.

இந்த மாதிரி முற்பதிவு செய்யும் நிகழ்ச்சியில் ரஹ்மான் எதிர்பார்த்த பாட்டு

“ஈச்சம் பழம் நாவப்பழம்

 எ மாமா உன் ற கருப்பு”

https://youtu.be/bhqTjfnCydM

என்று அப்போது நினைத்துக் கொண்டேன். இதுவும் வடிவேலுவுக்கானது தான். அப்போதே புது முயற்சியாக கோவைக்கார சரளாவையும், மதுரைக்கார வடிவேலுவையும் பயன்படுத்தியிருந்தால் இதன் வீச்சு 2K ஐக் கடந்திருக்கக் கூடும்.

மலையுச்சியில் எங்கோ ஒரு மூலையில் எழும் ஒலி மெல்ல மெல்லப் பொங்கி வியாபிக்கும் பின்னணி கொடுத்த ரஹ்மானின் கிராமியத்தைக் கேட்ட நம் காதுகள் நம் மண் சார்ந்த இன்னுமொரு படைப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இம்மாதிரி முயற்சிகளின் வெற்றி அவருக்கு ஒரு பிடிமானமாக இங்கேயே இருத்தி விடட்டும்

யுகபாரதி 

என்ன சொல்ல?

பெருக்கெடுக்கும் காட்டாறு தேங்கிய வெள்ளத்தை அடித்து அலசித் தன் நன்னீரைப் பாய்ச்சும் இன்றைய யுகத்து எழுது கோலான்.

ஒரு இரண்டரை மணி நேரப் படத்தை முன்னோட்டம் போட்டு அசை போட வைத்து விடும் அந்தப் படைப்புக்குக் கொடுக்கப்பட்ட அடி நாதமாய் விளங்கும் பாடல்.  வணிக சமரசங்களுக்குக் கட்டுப்படாத எழுத்து.

மாரி செல்வராஜுக்கு முகவரி

எங்களின் “முக” வரி இது

பட்ட காயம் 

எத்தனையோ

அத சொல்லிப்புட்டா

ஆறிடுமோ ராசா…..

ஆறிடுமோ

ராசா ❤️

https://youtu.be/3AqeVDETiQA

கானா பிரபா

21.05.2023


Tuesday, May 9, 2023

இன்னொருவர் இயக்க 🎬 இசை கொடுத்த T.ராஜேந்தர் 🎸

"விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்" இப்படியான அழகான கவித்துவம் மிகுந்த வரிகளைக் கட்டிப்போட வைக்கும்இசை கலந்து கொடுத்து அந்தக் காலத்து ராஜாவின் ராஜ்ஜியத்தில்திரும்பிப்பார்க்கவைத்தவர் இந்த டி.ராஜேந்தர். தமிழ் சினிமாவில்இசையமைபாளரே பாடலாசிரியராகவும் அமர்ந்து எழுதி, அவரே எழுதி, சமயத்தில்அவரே கூடப்பாடி வருவது என்பது என்னமோ புதுமையான விஷயம் அல்லவே. இசைஞானி இளையராஜாவில் இருநது, ஆரம்ப காலத்துப் படங்களில்எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றோரும் அவ்வப்போது செய்து காட்டிய விஷயம். இந்தப்பாடலாசிரியர் - இசையமைப்பாளர் என்ற இரட்டைக்குதிரையை ஒரே நேரத்தில்கொண்டு சென்று இவையிரண்டையும் வெகுசிறப்பாகச் செய்து காட்டியவர்களில்டி.ராஜேந்தருக்கு நிகர் அவரே தான் என்பேன். 

இனிமேலும் இவரின் இடத்தை நிரப்ப இன்னொருவர் வரும் காலம் இல்லை என்றுநினைக்கிறேன் இப்போதெல்லாம் பாடல்களுக்கு வரிகளா முக்கியம், முக்கிமுனகத் தெரிந்தால் போதுமே.

டி.ராஜேந்தர் என்ற இசையமைப்பாளர் சக பாடலாசிரியரை எடுத்துக் கொண்டுபதிவு ஒன்று தரவேண்டும் என்ற எண்ணம் றேடியோஸ்பதியின் ஆரம்ப காலத்தில்இருந்தே இருந்தாலும் அவரின் ஒவ்வொரு பாடல்களிலும் உள்ள கவியாழத்தைத்தொட்டு எழுதுவது ஒரு ஆய்வாளனுக்குரிய வேலை. எனவே அந்த விஷயத்தைத்தலைமேற்கொள்ளாமல் தவிர்த்து வந்தேன். ஆனால் டி.ராஜேந்தர் தன்னுடையஇயக்கத்தில் வெளிவந்த படங்களில் மட்டுமன்றிப் பிற இயக்குநர்களின்இயக்கத்தில் வெளிவந்த படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்து, கூடவேபாடல்களையும் எழுதி முத்திரை பதித்திருக்கின்றார். அப்படியான படங்களில் சிலமுத்துக்களை எடுத்துக் கொடுக்கலாமே என்ற எண்ணத்தில்முக்குளித்திருக்கின்றேன்.

தமிழ் சினிமாவில் தங்க இசைத்தட்டு விருது பெற்றது "கிளிஞ்சல்கள்" படத்தின்இசை. பசி என்ற கலைப்படம் தந்த துரை இயக்கத்தில் வந்த மோகன் பூர்ணிமாஜெயராம் இணையில் வந்த அருமையான காதற்படம். இந்தப் படத்தில்ஜெயச்சந்திரன் பாடிய "காதல் ஒரு வழிப்பாதை பயணம்" பாடலோடு எஸ்.பி.பிபாடிய அழகினில் நனைந்தது, பி.சுசீலா பாடிய "சின்னச் சின்னக் கண்ணா" போன்ற பாடல்களோடு டாக்டர் கல்யாண், ஜானகி ஜோடிப்பாடலாக அமைந்த"விழிகள் மேடையாம்" என்று எல்லாப்பாடல்களுமே தங்க இசைத்தட்டுக்கானஅங்கீகாரத்தை நிரூபித்தவை. 

விழிகள் மேடையாம் பாடல் இந்த வேளையில்

https://www.youtube.com/watch?v=F75_LCOzjeA

எண்பதுகளிலே கச்சிதமான காதல் ஜோடிகள் என்றால் சுரேஷ் - நதியா ஜோடிதான் கண் முன் நிற்பார்கள். அந்தக் காலத்துக் காதலர்களுக்கு இவர்கள் தான்தேவதூதர்கள் போலவாம் 😉. 

அப்படி இந்த இருவரும் ஜோடி கட்டிக் கோடி குவித்த ஒரு வெற்றிப்படம்"பூக்களைப் பறிக்காதே" வி.அழகப்பன் இயக்கத்தில் வந்த இந்தப் படத்தில் வரும்"பூக்களைத் தான் பறிக்காதீங்க காதலைத் தான் முறிக்காதீங்க" பாடல் அந்தக்காலத்துக் காதலர்களின் தேவாரம், திருவாசகம் எனலாம்.

எஸ்.பி.பி , ஜானகி குரல்களில் "மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது" இந்தப் பாடலைக் கேட்டுக் கிறங்காதவர் நிச்சயம் காதலுக்கு எதிரியாகத் தான்இருப்பார்கள். இடையிலே வரும் "விழி வாசல் தேடி" என்று வரும் அடிகளுக்கு ஒருசங்கதி போட்டிருப்பார் டி.ஆர் அதை நான் சொல்லக்கூடாது நீங்கள் தான் கேட்டுஅனுபவிக்கணும்.

https://www.youtube.com/watch?v=71whh__t5ks

"மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்" ஒரு பாட்டைத் தேடிஇணையம் வராத காலத்தில் கொழும்பில் உள்ள ரெக்கோடிங் பார் எல்லாம்அலையவைத்ததென்றால் அது இந்தப் பாட்டுக்குத் தான், கடைசியில்வெள்ளவத்தையில் ஸ்ரூடியோ சாயாவுக்குப் பக்கத்தில் இருந்த Finaz Music Corner தான் அருள்பாலித்தது. ஆகாசவாணி எனக்கு அறிமுகப்படுத்தியபாடல்களில் "பூக்கள் விடும் தூது" படப்பாடல்கள் மறக்கமுடியாது. இந்தப்படத்தின் பாடல்கள் எப்பவாவது இருந்துவிட்டு ஏதோ ஒரு தருணத்தில்ஆசையாகக் கேட்கவென்று வைத்திருக்கும் பட்டியலில் இருப்பவை. ஒன்றல்லஇரண்டு பாடல்களை இப்போது உங்களுக்காகத் தருகின்றேன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான்கேட்கிறேன்"

https://www.youtube.com/watch?v=kgBoZ78ojM8

அதுவே சித்ராவோடு கூட்டணியில் இன்னொரு ரம்மியம்

https://www.youtube.com/watch?v=TKn9BVrtJ5Y

கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "கதிரவனைப் பார்த்து காலை விடும் தூது வண்டுகளைப்பார்த்து பூக்கள் விடும் தூது"

https://www.youtube.com/watch?v=TxLysTHzCvE

சிவாஜி, சத்யராஜ், பாண்டியராஜன் என்று அந்தக்காலத்தின் பெரும் நட்சத்திரங்கள்ஒன்று சேரும் படம். இந்தப் படத்தின் இயக்குநர் ஜகந்நாதன் ஏற்கனவேஇசைஞானியோடு வெள்ளை ரோஜாவில் இணைந்து அட்டகாசமான பாட்டுக்களைஅள்ளியவர். இருந்த போதும் இந்தப் பெரும் கூட்டணியில் இசைக்கு அவர் மனம்இசைந்தது டி.ராஜேந்தருக்குத் தான். "முத்துக்கள் மூன்று" இந்தப் படத்தில்கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் பாடும் "தேவன் கோயில் தீபமே" பாடல்சோர்ந்து போயிருக்கும் போது ஒத்தடமாகப் பலதடவை எனக்குப்பயன்பட்டிருக்கிறது, உங்களுக்கு?

https://www.youtube.com/watch?v=qlFd2BZoKhc

பூக்களைப் பறிக்காதீர்கள் வெற்றியில் அதே இயக்குனர் வி.அழகப்பன்"பூ" ராசியோடு தலைப்பு வைத்து எடுத்த படம் "பூப்பூவாப் பூத்திருக்கு" யாழ்ப்பாணத்தின் பெருமை மிகு சினிமா நினைவுகளைக் கொடுத்த குட்டிதியேட்டர் லிடோவில் ஓடிய கடைசிப்படம் இதுதான். அதற்குப் பின்னர் லிடோவின்நிலை கடந்த இருபது வருஷங்களில் அந்த நாளில் படம் பார்த்தவர்களில்மனங்களில் தான் வீற்றிருக்கின்றது. "வாசம் சிந்தும் வண்ணச்சோலை" என்றுவாணி ஜெயராம் பாடி வரும் அழகான பாட்டு ஒருபுறம், "எங்கப்பா வாங்கித் தந்தகுதிர அதில நானும் போகப்போறேன் மதுர" என்று குட்டீஸ் பாடும் பாட்டு என்றுஇன்னொரு புறம் இசைபரவ, "பூப்பூத்த செடியைக் காணோம் வித போட்ட நானோபாவம்" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாடல் படத்தின் அச்சாணி எனலாம்.

வாசம் சுந்தும் வண்ணச் சோலை

https://www.youtube.com/watch?v=4Sh1fRqXlrs

பூ பூத்த செடியைக் காணோம்

https://www.youtube.com/watch?v=h3nz2B8MZ6s

இசையமைப்பாளர் T.ராஜேந்தர் இன்னொரு நட்சத்திரத்துக்கு இசையமைத்துப்பெரும் புகழீட்டிய படங்களில் தலையாயது “கூலிக்காரன்”.

பாடல்கள் எல்லாமே அன்று பட்டையைக் கிளப்பின.

“குத்துவிளக்காக குலமகளாக 

நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்

என் வானிலே நீ வெண்ணிலா

நட்சத்திரம் உன் கண்ணிலா”

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடிய இந்தப் பாடலை இன்று கேட்டுப்பாருங்கள். அதே பொலிவோடு இசைப் பிரவாகம் கொட்டும் பாட்டு. 

T.ராஜேந்தரின் மிருதங்கப் பின்னணி முத்திரை இருந்தாலும் இசையில் ஒரு புதுப்பரிமாணம் கையளப்பட்டது, மெட்டிலும் கூட.

“சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்” என்று இந்தப் பாடல் கேட்டுமுடிந்தும் முணுமுணுக்க வைக்கும். பாடகர் இருவரது வழக்கமான குறும்புச் சிரிப்பு, மேலதிக சங்கதிகள் எல்லாம் இருக்கும்.

“வெச்ச குறி தப்பாது இந்தப் புலி தோற்காது” என்றொரு துள்ளிசைப் பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியக் பாடும் இந்தப் பாட்டும் கூலிக்காரன் வெற்றிப்பாடல்களில் பங்கு போட்டது.

“ஐய்யே ஐய்யே ஐய்யே தொட்டதும் துவண்டிடும் ரோசா” என்று போதையைத்தேக்கி வைத்த குரலோடு எஸ்.ஜானகி பாடும் இன்னொரு பாட்டு, மலேசியாவாசுதேவன் “வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி” (படத்தில் பாண்டியனுக்குக்கொடுக்கப்பட்டிருக்கும்), “பாழும் வயிறு தான்” என்னும் இன்னொரு தத்துவப்பாடலையும் அவரே பாடியிருக்கிறார். அந்தப் பாடல் கூலிக்காரர்களின் வேதனைசொல்லும் பாட்டு. 2017 இல் மதுரை சென்றிருந்த போது இன்னமும்கைவண்டிக்காரர் இயங்குவதைக் கண்டேன். இந்தப் படத்தில் விஜயகாந்த் நடித்தபோது மேலமாசி வீதியின் கைவண்டி ஓட்டும் கூலிக்காரர்களை மனதில்வைத்திருப்பார் என்பதை மறுக்க முடியுமா என்ன?

“போதையேற்றும் நேரம்” பாடலை எஸ்.ஜானகி & எஸ்.பி.பி பாடியிருந்தாலும்பெரிதாக வெகுஜன அபிமானம் பெறாத பாட்டு. 

கூலிக்காரன் பாடல்களைக் கேட்க

https://youtu.be/7wpWkgrItww

விஜயகாந்துக்கு ஒரு சூப்பர் ஹிட் இசை விருந்தை “கூலிக்காரன்” படத்துக்காகஅளித்த T.ராஜேந்தர் இதற்கு முன்பே “சட்டம் சிரிக்கிறது” என்ற படத்துக்காகஇசையமைத்திருக்கிறார். அந்தப் படத்தில் விஜயகாந்துடன் பிரதாப், ரயில்பயணங்களில் புகழ் ஜோதி, ஸ்வப்னா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சட்டம்சிரிக்கிறது படத்தின் பாடல்கள் அச்சொட்டான ஆரம்ப கால T.ராஜேந்தர்படங்களின் இசையின் வாடை கொண்டவை. இதனோடு ஒப்பிடும் போதுகூலிக்காரன் படத்திற்கு எவ்வளவு பிரமாண்டமும் புதுமையும் இசையில்காட்டப்பட்டிருக்கின்றது என்ற ஒப்பீட்டையும் செய்யலாம். 

சட்டம் சிரிக்கிறது படப் பாடல்களில் 

“மலரே மலரே உனக்கின்று மணம் வருமா” P.சுசீலா பாடியது

https://youtu.be/-9XHoeYt0YA

“மலை முகப்பினில் நடுக்காட்டினில்” எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிபாடியது. 

https://youtu.be/vktTd7Jry3A

மேலுமொரு பாட்டு எஸ்.பி.பி & ஜானகி கூட்டணியில்

“கண்கள் கள்ளானது” என்ற வரிகளோடு அமைந்திருக்கும்.

இந்தப் பாடலைக் கேட்கும் போது கிளிஞ்சல்கள் படத்தில் T.ராஜேந்தர்இசையமைத்த “விழிகள் மேடையாம்” பாடலும் நினைவுக்கு வந்து போகும்.

https://youtu.be/bMRI4Mkv3Og

“கனகாம்பரம் பூ வாங்கு” என்ற சாய்பாபா குழுவினர் பாடும் பாட்டு ஒருதலை ராகம் படத்தில் வரும் “கூடையில கருவாடு” காட்சியை நினைவுபடுத்தும் 

https://youtu.be/4mTtvr7NnpE

சி.வி.ராஜேந்திரன் இயக்கிய “உனக்காக ஒருரோஜா”, மோகன், அம்பிகா, சுரேஷ் ஆகியோர்நடித்தது. இந்தப் படம் எத்தனை பேருக்குநினைவில் இருக்கும்?

ஆனால் இதில் வந்த “ஒரு புல்லாங்குழல்ஊமையானது” https://youtu.be/UlJucvJZsxY

T.ராஜேந்தரின் அடையாளம் பேசும்.

“எங்க வீட்டு வேலன்” சிம்பு நடிப்பில் ராஜேந்தர் இசையோடு இயக்கம் கொடுத்துஒரு நல்ல வெற்றி பெற,

சசிமோகன் இயக்கிய “சபாஷ் பாபு”, மற்றும் சரவணன் நடித்த “பெற்றெடுத்தபிள்ளை” (இயக்கம் : பூர்ணசந்திரன்) ஆகியவற்றுக்கும் இசை கொடுத்தார்.

அது போல் ராம்கி நடிப்பில் “என் ஆசை தங்கச்சி” (K.சண்முகமணி இயக்கியது), எஸ்.எஸ்.சந்திரன் இயக்கிய “பொம்பள சிரிச்சாப் போச்சு”ஆகியவை அதிகம்பெயர் பெறா ராஜேந்தர் இசைத்தவை.

டி.ராஜேந்தர் இசையமைப்பாளராகப் பணியாற்றிய படங்கள் பிரபு நடித்த"இவர்கள் வருங்காலத்தூண்கள்" (வெங்கட் இயக்கம்), இராம நாராயணனின் 'எங்கள் குரல் "மற்றும் பாண்டியராஜன் நடித்த "ஆயுசு நூறு" (பொன்மணி ராஜன்), ஶ்ரீ பண்ணாரி அம்மன் ( பாரதி கண்ணன் இயக்கம்) என்று நீளும், 

ஆயுசு நூறு படத்தில் “பிரம்ம தேவன் அவன்”

https://www.youtube.com/watch?v=1aqKvJRfIY0

அந்தக் காலத்துச் சென்னை வானொலி உங்கள் விருப்ப காலத்தைநினைவுபடுத்தும்.

ஆனால் இந்தப் பதிவுக்கு இந்த முத்திரைகளே போதும் என்று நினைக்கிறேன், இன்னொரு பதிவில் கவிஞர் டி.ராஜேந்தரோடு.

சோலைக்கொரு 

வசந்தம் போல் நீ வந்தாய் காளைக்கென்றும் 

சொந்தம் என்று 

நீ ஆனாய்

https://youtu.be/S_D_5jQlaMg


கானா பிரபா