Pages

Saturday, June 15, 2024

மனசில் நிறைஞ்ச மதுரக் குரலோன் மலேசியா வாசுதேவன் முத்தான ஐம்பது செய்திகள்

மனசில் நிறைஞ்ச மதுரக் குரலோன்

மலேசியா வாசுதேவன் 

முத்தான ஐம்பது செய்திகள்


எம் வாழ்வியலின் அங்கமாகிப் போனவர்களில் ஒருவர் மலேசியா வாசுதேவன் அண்ணன் இன்று அகவை எண்பதுக்குள் செல்கிறார்.

அவருடைய வாழ்வியலின் ஐம்பது செய்திகளைத் தரலாம் என்று தீர்மானித்து உழைத்ததை இங்கே பகிர்கிறேன்.

1. மலேசியா வாசுதேவன் பாடிய முதற் திரையிசை “பாலு விக்கிற பத்மா” பாடல் வி.குமார் இசையில் டெல்லி to மெட்ராஸ் (1972). புகழ்பூத்த கவிஞர் மாயவநாதன் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். மாயவநாதன்  இறந்த பின் அஞ்சலிக் குறிப்போடு படம் வெளியானது. மலேசியா வாசுதேவ் என்ற பெயரில் அறிமுகமானார்

2. இவரின் இசைக்கச்சேரி ஒன்றைப் பார்த்து விட்டு அங்கேயே வைத்து, "பாடல் வாய்ப்புக் கொடுக்கிறேன்" என்று சொன்ன மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறந்து போகாமல் மூன்றாம் நாளே பாட அழைத்தார். பாரத விலாஸ் (1973) படத்துக்காக “இந்திய நாடு” பாடலில் கூட்டுப் பாடகராகப் (பாடகர் மலேசியா வாசு) பாடினார். 

3. குன்னக்குடி வைத்திய நாதன் இசையில் “காலம் செய்யும் விளையாட்டு” பாடலை “அருட் செல்வர்”  ஏ.பி.நாகராஜன் இயக்கிய குமாஸ்தாவின் மகள் படத்துக்காகப் பாடிய போது மலேசியா வாசு என்று பெயர் போட்டார்.

4. இளையராஜாவின் இசையில் பாடுவதற்கு முன்பே பாவலர் பிரதர்ஸ் இசைக்குழு, நாடக மேடையில் பாடகராக இருந்திருக்கிறார். அந்த நாடக மேடைப் பாடல்களில் அவர் பாடிய ஒன்று தான் பின்னாளில் அன்னக்கிளி கண்ட “மச்சானைப் பார்த்தீங்களா” பாடல்.

5. பெரும் திருப்புமுனையாக “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா” (16 வயதினிலே) வாய்ப்பு இசைஞானி இளையராஜா இசையில் கிடைத்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் கெட்டுப் போனதால் பூஜைக்குப் பாடிய ட்ராக் பாடலே இவரின் தலையெழுத்தை மாற்றியது. கானாபிரபா

6. இயக்குநர் ஃபாசிலுக்கு கே.ஜே.ஜேசுதாஸ் போல, இயக்குநர்கள் பாரதிராஜா, கங்கை அமரன் ஆகியோரின் அதிகப்படியான படங்களின் ராசியான பாடகர் மலேசியா வாசுதேவன்.

7. “ஏ ராசாத்தி ரோசாப்பூ” (என் உயிர்த் தோழன்) பாடலில் மலேசியா வாசுதேவன் குரல் இருக்க வேண்டும் என்று பாரதிராஜா வேண்டிக் கொண்டதால் பின்னர் சேர்க்கப்பட்டுப் பாடல் முழுமையானது.

8. “பொதுவாக என் மனசு தங்கம்” (முரட்டுக்காளை) ரஜினிகாந்துக்கான நாயகத் துதிப் பாடல்களில் இன்று வரை கொண்டாடப்படுவது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் ரஜினிகாந்தை உயர்த்திய ஆரம்பங்களில் மலேசியா வாசுதேவனே அணி செய்தார்.

9. “நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” (பொன்மனச் செல்வன்) விஜயகாந்துக்கான முத்திரைப் பாடலாக இன்றளவும் விளங்குகிறது. விஜய்காந்த் மட்டுமன்றி ராமராஜன் பிரபு மோகன், முரளி, அர்ஜுன், பாண்டியன், சத்யராஜ் ஆகியோரின் வெற்றிப் படங்களின் குரலாளனாக இருந்திருக்கிறார்.

10. “வான் மேகங்களே” (புதிய வார்ப்புகள்) வழியாக கே.பாக்யராஜ் என்ற நாயகனின் அறிமுகக் குரலாய் விளங்கியவர் பின்னர் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாக்யராஜ் இணைந்த போதும் நாயகக் குரலாக அதிக படங்களில் இடம்பிடித்தார்.

11. கங்கை அமரன் “மலர்களிலே அவள் மல்லிகை” படத்தின் வழியாக இசையமைப்பாளராக வருவதற்கு மலேசியா வாசுதேவனும் ஒரு தூண்டுதலாக இருந்து வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார். அந்தப் படத்தின் கதை, வசனம் மலேசியா வாசுதேவன். அதன் பின் 170 படங்களுக்கு மேல் கங்கை அமரன் இசையமைத்தார்

12. மலேசியா வாசுதேவன் ஒரு இசையமைப்பாளராக கொலுசு, சாமந்திப்பூ , 6வது குறுக்குத்தெரு, பாக்கு வெத்தலை, ஆயிரம் கைகள்,  உள்ளிட்ட நிறையப் படங்களுக்கு இசையமைத்தார்.

13. இவரின் பூர்வீகம் இந்தியா என்றாலும் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் மலேசியத் தமிழர்களின் முதற்படமான “ரத்தப்பேய்” படத்தின் தயாரிப்பு வேலைகளுக்காக அவர் தமிழகம் வந்து கலை உலகில் நிரந்தரமானார். 

இந்தப் படத்தின் பின்னணி இசை வழங்கியவர் இளையராஜாவின் குருவான ஜி.கே.வெங்கடேஷ்.

14. மலேசியா வாசுதேவனை “கொலுசு” திரைப்படம் வழியாக கே.எஸ்.மாதங்கன் நடிகராக அறிமுகப்படுத்தினார்.

15. பாடகராக ஒரு திருப்பு முனை கொடுத்த அதே பாரதிராஜாவே ஒரு கைதியின் டைரி வழியாக மலேசியா வாசுதேவன் என்ற நடிகர் தொடர்ந்து புகழ்பூத்த நடிகராக விளங்கத் திருப்புமுனை கொடுத்தார்.

16. உஷா வாசுதேவன் இவரின் மனைவி, யுகேந்திரன், பிரசாந்தினி, பவித்ரா ஆகிய பிள்ளைகளில் முதல் இருவரும் திரையிசையிலும் கோலோச்சினார்கள்.

17.  நகைச்சுவை நடிகர் சுருளிராஜனுக்காக “உப்புமாவைக் கிண்டி வையடி (கீதா ஒரு செண்பகப்பூ), அது மாத்திரம் இப்ப கூடாது (அச்சாணி), மற்றும் அவரோடு இணைந்து "பூப்பறிச்சு மாலைகட்டி (ஹிட்லர் உமாநாத்) வில்லுப்பாட்டு போன்ற பாடல்கள் பாடினார்

18. நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்திக்காக “எங்கெங்கும் கண்டேனம்மா” எஸ்பிபியும், சுருளிராஜனுக்காக மலேசியா வாசுதேவனுமாகப் ( உல்லாசப் பறவைகள்) பாடியளித்தார். கானாபிரபா

19. கவுண்டமணிக்காக “ஊரு விட்டு ஊரு வந்து” உட்பட ஏராளம் பாடல்கள் பாடினார்.

20. “அட வஞ்சிரம் வவ்வாலு மீனு தானா” என்ற குறும் பாடலை மன்சூரலிகானுக்காகப் பாடிச் சிறப்பித்தார்.

21.  நடிகை ஷோபா நடித்த இறுதித் திரைப்படமான “சாமந்திப்பூ” இசை மலேசியா வாசுதேவனே. அதில் “ஆகாயம் பூமி” என்ற புகழ்பூத்த பாடலை இசையமைத்துப் பாடினார்

22.  Folk Songs of Tamilnadu என்ற திரையிசை சாராப் பாடல் தொகுப்பில் பாவலர் சகோதரர்கள் இசையில் (1973) முன்பே பாடியிருக்கிறார். இசையாற்றுகை வழங்கியவர் இளையராஜா

23. ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே Disco Disco என்ற திரையிசை சாரா இசைத் தொகுப்பில் மலேசியா பாடியிருக்கிறார்.

24. தேவாவின் “கண்ணன் பாமாலை” உள்ளிட்ட திரையிசை சாராப் பக்திப் பாடல்கள் பாடியிருக்கிறார்.

25. “தென்கிழக்குச் சீமையிலே” ( கிழக்குச் சீமையிலே) ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மலேசியா வாசுதேவனுக்குப் பேர் சொல்லும் பாட்டு

26. “காதல் வைபோகமே” (சுவர் இல்லாச் சித்திரங்கள்), “டாடி டாடி” ( மெளன கீதங்கள்) போன்ற முத்திரைப் பாடல்களை கங்கை அமரன் இசையில் பாடினார்.

27. மலேசியா வாசுதேவன் இயக்கிய திரைப்படம் “நீ சிரித்தால் தீபாவளி”

28. “திவ்யா ஐ லவ் யூ” என்ற டெலிஃபிலிம் ஐ மலேசியாவில் இயக்கினார்.

29. “பட்டு வண்ண ரோசாவாம்” (கன்னிப் பருவத்திலே),  நான் ஒரு கோயில் (நெல்லிக்கனி) சங்கர் – கணேஷ் கொடுத்த முத்திரைப் பாடல்கள்

30. “காக்கிச்சட்டை போட்ட மச்சான்” சந்திரபோஸ் இசையில் ஏவிஎம் இன் “சங்கர் குரு” படத்துக்காகப் பாடிய புகழ் பூத்த பாடல்.

31. “நிமிர்ந்த நன்னடை” என்ற சுப்ரமணிய பாரதியார் பாடலை  “எத்தனை கோணம் எத்தனை பார்வை” (வெளிவரவில்லை) படத்துக்காகப் பாடியுள்ளார்.

32. “என்னம்மா கண்ணு செளக்யமா” (மிஸ்டர் பாரத்),” நண்பனே எனது உயிர் நண்பனே” (சட்டம்) உள்ளிட்ட ஏராளம் பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு கூட்டாகப் பாடியிருக்கிறார்

33. “சும்மா தொடவும் மாட்டேன்” (முதல் வசந்தம்) பாடலை எஸ்பிபியோடு இணைந்து பாடியதோடு அந்தப் பாடல் காட்சியில் சத்யராஜோடு ஆட்டம் போட்டு வாயசைத்திருக்கிறார்.கானாபிரபா

34. சிவாஜி கணேசனுக்கான பாடகக் குரலாக இளையராஜாவுக்கு முன்பே சங்கர் - கணேஷ் இசையில் “துணை” படத்துக்காக “அன்பே துணை” பாடல் பாடியுள்ளார்

35. தன் அண்ணனுக்கு முன்பே தம்பி கங்கை அமரன், சிவாஜி கணேசனின் “இமைகள்” படத்தின் அனைத்துப் பாடல்களையும் மலேசியா வாசுதேவனைப் பாட வைத்திருக்கிறார்.

36. “பூங்காற்று திரும்புமா” (முதல் மரியாதை) பாடல் ஒன்றே போதும்பா நீ பாடகனாக இருந்ததற்கு அடையாளமாக எத்தனை காலமும் ஆனாலும் பேர் சொல்லும்” என்று சிவாஜி கணேசன் இவரைப் பாராட்டியிருக்கிறார்.

37. “பூப்பறிக்க வருகிறோம்” படத்தில் சிவாஜி கணேசனின் மகனாகவே நடித்தார்.

38. வெள்ளை ரோஜா படத்தில் சாந்தமான பாதிரியார் சிவாஜிக்காக “தேவனின் கோயிலிலே”, முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரிக்காக “நாகூரு பக்கத்துல” என்று இரண்டு பரிமாணங்களில் மிளிர்ந்திருப்பார்.

39. எழுத்தாளர் ஜெயகாந்தன் பாடல் எழுத இளையராஜா இசையில் “எத்தனை கோணம் எத்தனை பார்வை” படத்துக்காக “புகழ் சேர்க்கும்” , “எத்தனை கோணம் எத்தனை பார்வை” , “என்ன வித்தியாசம்” ஆகிய பாடல்களைப் பாடியிருக்கிறார்.

40. “பஞ்சு மிட்டாய் சேலை கட்டி” (எட்டுப்பட்டி ராசா) தேவா இசையில் தொண்ணூறுகளிலும் மலேசியா வாசுதேவனால் தன்னால் கலக்க முடியும் என்பதை நிரூபித்தது. இந்த 2K யுகத்திலும் கொண்டாடப்படுவது.

41. “தண்ணி கருத்திருச்சு” (இளமை ஊஞ்சலாடுகிறது) என்ற மலேசியா வாசுதேவனின் புகழ் பூத்த பாடலே அன்றைய காலகட்டத்தில் அவரின் யாழ்ப்பாண இசைக் கச்சேரியின் தலைப்பாக விளங்கியது.

42. “சுராங்கனி” என்ற இலங்கையின் புகழ்பூத்த பைலா பாடலை இளையராஜா இசையில் “அவர் எனக்கே சொந்தம்” படத்தில் திரை வடிவமாகப் பாடினார். 

43. திரையிசைப் பாடல்கள் தவிர ஏராளம் பக்திப் பாடல்களைத் தமிழகத்து ஆலயங்கள் மட்டுமன்றி ஈழத்து ஆலயங்கள் மீதும் மலேசியா வாசுதேவன் பாடியிருக்கிறார். “மணியோசை கேட்குதம்மா” முப்பது ஆண்டுகளாக ஈழத்து இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் கோயிலின் முகப்புப் பாடலாக விளங்குகிறது.

44. தெருக்கூத்துக் கலைஞர் புரசை கண்ணப்பதம்பிரான் எழுதிப் பாடிய “ நந்தன் என்பவன் நானே” பாடலில் இவரும், பாடகர் சாய்பாபாவும் இணைந்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைத்த கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் இடம்பெற்றது.

45. மலேசியாவில் நடிகராக மட்டுமன்றி இளவயதில் ஜிக்கி குரலில் மேடைப் பாடகராகவும் விளங்கியிருக்கிறார்.

46. பழம்பெரும் பாடகர் சி.எஸ்.ஜெயராமன் குரலில் “ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே” (மணிப்பூர் மாமியார்), “இந்த அழகு தீபம்” ( திறமை) , சுகராகமே (கன்னிராசி), அழகான மனைவி (புதுப்புது அர்த்தங்கள்) ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

47. பிறப்பால் கேரளத்தவர் என்றாலும் வெகு அரிதாகவே மலையாளப் பாடல்கள் பாடியுள்ளார். நேரடிப் பாடல்களில் ஒன்று “கல்லெல்லாம்” (அனஸ்வரம்) படத்துக்காக இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆண்டோவுடன் பாடியுள்ளார்

48. திரைக்கு வராத போதிலும் “ஒரு மூடன் கதை சொன்னான்” (நெஞ்சில் ஆடும் பூ ஒன்று), “மலர்களே நாதஸ்வரங்கள்” (கிழக்கே போகும் ரயில்), “ஆழக்கடலில் தேடிய முத்து” (சட்டம் என் கையில்), “ஆனந்தத் தேன்காற்று” (மணிப்பூர் மாமியார்) ஆகியவை மலேசியா வாசுதேவன் பாடிய வகையில் புகழ் பூத்தவை

49. நடிகருக்காகப் பாடாமல், நடிக்கும் பாத்திரத்துக்காகப் பாடுவது எனக்குப் பிடிக்கும் என்பவர் அப்படியாக அமைந்த “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” (16 வயதினிலே), “ஆகா வந்திருச்சு” (கல்யாண ராமன்) ஆகிய பாடல்களை உதாரணம் காட்டுவார்.

50. மலேசியா வாசுதேவனுக்காக அவரின் வாழ்நாளின் இறுதியில் 2010 ஆம் ஆண்டு மலேசியாவில் “கலைமாமணி மலேசியா வாசுதேவனுக்கு ஒரு பாராட்டு விழா” நிகழ்வை மலேசியத் தமிழர்கள் நடத்திய போது எஸ்.பி.பாலசுப்ரமணியமும், கங்கை அமரனும் இணைந்து சென்று கெளரவித்துத் தம் தோழனின் கன்னத்தில் முத்தம் வைத்துப் பிரியாவிடை கொடுத்தனர்.

கானா பிரபா

15.06.2024

ஒளிப்படம் நன்றி: கே.பிச்சுமணி

இந்தப் பதிவைத் தொகுத்து எழுத மூன்று மணி நேரம் பிடித்தது. ஆகையால் தயவு செய்து என் பெயரை நீக்கி விட்டு வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பகிர வேண்டாம்.

மிக்க நன்றி.


Saturday, June 8, 2024

நடிகர் மோகன் ❤️ சக இசையமைப்பாளர்கள் 🎸


இளையராஜாவின் பாடல்களால் தான் மோகனின் படங்கள் ஓடிச்சு என்ற கருத்தை எப்படி நீங்கள் மனதளவில் ஏற்றுக் கொண்டீர்கள்,

ஏனெனில் கிளிஞ்சல்கள், சரணாலயம், உயிரே உனக்காக போன்ற படங்களின் பாடல்களைக் கூட மற்றைய இசையமைப்பாளர்கள் அற்புதமாக்

கொடுத்தார்களே? 

என்ற பரத்வாஜ் ரங்கனின் கேள்விக்கு நடிகர் இரண்டு பதில்களைக் கொடுத்திருந்தார்.

அந்தப் பிரமையை ஏற்படுத்தியது மீடியாக்காரங்க தான் என்ற மோகனின் பதிலை ஏற்க முடியாது,

கூடவே அவர் சொன்ன இன்னொரு கருத்து வெகு நியாயமானது.

“மற்றைய இசையமைப்பாளர்களோடு இணைஞ்ச இயக்குநர்களே அவர்களைப் பற்றிப் பேசுவதே இல்லையே? 

என்ற அப்பட்டமான உண்மையைப் போட்டுடைத்தார்.

எண்பதுகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனில் இருந்து 

T.ராஜேந்தர் ஈறாக மிக அற்புதமான பாடல்களைக் கொடுத்தாலும் அந்தப் பாடல்களை மேடையில் எடுத்துப் பாடுவதற்கே பாடகர்கள் அதிகம் முன்வருவதில்லை.

“கண்ணம்மா” (விஸ்வதுளசி) பாடல் வந்த நேரம் யாரும் சீண்டவே இல்லை. விஜய் டிவி புண்ணியத்தால் அதற்குப் பின் ஆயிரம் மேடைகளை அது கண்டிருக்கும்.

இன்று நெருப்பு விடும் தேவாவைக் கூட அவர் பரபரப்பாக இயங்கிய காலத்தில் இன்றளவு கொண்டாடியதில்லை.

ஒரு படத்தின் ஓட்டத்துக்குப் பாடல்கள் பெருந்தேவை. அதை இளையராஜா பரிபூரணமாகச் செய்த அதே வேளை மோகனுக்கு மற்றைய இசையமைப்பாளர்கள் கொடுத்த லட்டு மாதிரியான பாடல்களை இந்த வேளை சொல்லிக் கொள்ள இந்தத் தொகுப்பைக் கொடுக்கிறேன். கானா பிரபா

விழிகள் மேடையாம் (கிளிஞ்சல்கள்) - T.ராஜேந்தர்

https://youtu.be/OCP6Jxiqouw?si=-ZAdqb3eLYxB8mJQ

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம் (தூங்காத கண்ணின்று ஒன்று) - கே.வி.மகாதேவன்

https://youtu.be/iX1aRuxECoY?si=euds3uOgDsFaL9pI

நெடு நாள் ஆசை ஒன்று (சரணாலயம்) - எம்.எஸ்.விஸ்வநாதன் 

https://youtu.be/jFBpB9zO7mw?si=lVBEBs4YjeuoO5jq

மலர்களே இதோ இதோ (தீராத விளையாட்டுப் பிள்ளை) - சங்கர் - கணேஷ்

https://youtu.be/nOQPlvfd3Tw?si=OaGkQMy6H6y21502

உதயமே உயிரே (ஒரு பொண்ணு நெனச்சா) - எஸ்.ஏ.ராஜ்குமார்

https://youtu.be/1AwrUFWc_fw?si=plDFZ_JO82QsgrUK

கவிதைகள் விரியும் (உயிரே உனக்காக) - லஷ்மிகாந்த் பியாரிலால்

https://youtu.be/KrThGItFHP8?si=0k3MS2QHNXzwSrsW

பூமேடையோ ( ஆயிரம் பூக்கள் மலரட்டும்) - வி.எஸ்.நரசிம்மன்

https://youtu.be/Of3QP_4uJRY?si=Mav7vmxNJZ0LnKhy்

ஏ வெண்ணிலா (இது ஒரு தொடர்கதை) - கங்கை அமரன்

https://youtu.be/izQF58hxUXM?si=y-5a23P6ZVsa9Eds

சின்னச் சின்ன மேகம் (காற்றுக்கென்ன வேலி) - சிவாஜி ராஜா

https://youtu.be/JCHYxpUTgmE?si=5Hx2ML0jkcSI1Ck1

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ (எம்.எஸ்.விஸ்வநாதன்) - தாம்பத்யம் ஒரு சங்கீதம்

https://youtu.be/sL2d19nxAIc?si=Xpk05gk_TFj9voZp

கண்ணில் வந்தாய் (லாட்டரி டிக்கெட்) - எல்.வைத்திலஷ்மணன்

https://youtu.be/2tAsLrjDLrE?si=WZBT4yMmiYjNfwqw

யாரது சொல்லாமல் (நெஞ்சமெல்லாம் நீயே) - சங்கர் - கணேஷ்

https://youtu.be/9ZWPFqm-Ap8?si=S-55nf1okje2pDhf

என் இதய ராணி ( நாலு பேருக்கு நன்றி) - எம்.எஸ்.விஸ்வநாதன்

https://youtu.be/roVKKNZz4H4?si=k1H3_CLrwSrE5niU

L O V E லவ் தான் (விதி) - சங்கர் - கணேஷ்

https://youtu.be/lvfZr74qD88?si=0LMYu8gwlGmLetOA

பூமேகம் சூடும் (இனியவளே வா) - ஷியாம்

https://youtu.be/wfpuGSpDD4E?si=1eNi2mpozupS89GI

நீரில் ஒரு தாமரை (நெஞ்சத்தை அள்ளித்தா) - எம்.எஸ்.விஸ்வநாதன்

https://youtu.be/dmLrC59yFA4?si=7S2pNr5MAuKe1gH3

கோபம் ஏனோ கண்ணே (நலம் நலமறிய ஆவல்) - ஷியாம்

ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி (சகாதேவன் மகாதேவன்) - கே.பாக்யராஜ் இந்தப் பாடல் மட்டும்

https://youtu.be/RDyVh71Cry4?si=A8_za7aJJi7JXElM

மெளனம் என்னும் ராகம் (தெய்வப் பிறவி) - சங்கர் - கணேஷ்

https://youtu.be/KWJFTgMkDA4?si=zzhqfTsK0DB50h-w

ஒரு தேவதை (நான் உங்கள் ரசிகன்) - கங்கை அமரன்

https://youtu.be/lYgkj4kLR_k?si=S0s7kGrZZvbSkSdA

மலரே மலரே (உன்னை ஒன்று கேட்பேன்) - வி.எஸ்.நரசிம்மன்

https://youtu.be/uWDx_dy6vI8?si=NACuCcqaARy9CH8i

காலம் இனிய பருவத்து (ஆனந்த ஆராதனை) - மனோஜ் - கியான்

https://youtu.be/Dk4R3b85wfQ?si=MbZqf5kRjfOpK3d-

ரவிவர்மன் எழுதாத (வசந்தி) - சந்திரபோஸ்

https://youtu.be/vIiMgLZHH7k?si=9RP3QTN3P36ukhAK

அம்மன் கோயில் தேரழகு (சொந்தம் 16) சங்கர் - கணேஷ்

https://youtu.be/Cpg_BLgNFHs?si=TCb9_4Dtje-EcZUZ

சின்னவளே சின்னவளே (இதய தீபம்) - சந்திரபோஸ்

https://youtu.be/mYJjCG1BC5o?si=4NLKU-mcG1GGgAOG

ஞாபகம் இருக்குதா? (அன்புள்ள காதலுக்கு) - தேவா

https://youtu.be/KWve-tG2c38?si=SSn_M3lneDDzEYow

கானா பிரபா

08.06.2024

Thursday, June 6, 2024

ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்https://youtu.be/3gNEWIe-Zxk?si=-nbuoPMWp6vf46DS


இந்தப் பாடலைக் கொண்டாடும் அளவுக்கு, இடம்பெற்ற “ஒரே ஒரு கிராமத்திலே” படத்துக்குப் பின்னால் எழுந்த பெரும் சர்ச்சையை இன்று காலம் மறந்து விட்டது.


சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை விமர்சித்த முதற்படைப்பு என்று கொள்ளப்படும் இப்படம் வெளிவந்த காலத்தில் நீதிமன்றத் தடை வரை போய்த் தான் மீண்டு வந்தது.


காயத்ரி (லட்சுமி) என்ற பிராமணப் பெண், கருப்பாயி  என்ற பெயரை மாற்றி, இட ஒதுக்கீட்டில் அடங்கும் சாதி அமைப்பைச் சேர்ந்தவர் என்று பிறப்புச் சான்றிதழை மாற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மாறி அந்த ஒரே ஒரு கிராமத்திலே மக்களுக்காக உழைக்கும் சூழலில் ஒரு சந்தர்ப்பத்தில் வினுச்சக்கரவர்த்தியின் சவாலில் நீதிமன்ற வழக்கைச் சந்திப்பது தான் கதை.


ஒரே ஒரு கிராமத்திலே படத்தின் முடிவு போலவே, வெளியிட முடியாத தடையாக உயர் நீதிமன்ற வழக்கைச் சந்தித்தது.

முடிவில் பொய்ச் சான்றிதழ் தயாரித்த குற்றத்துக்காக காயத்ரியையும் அவரது தந்தையையும் மூன்றாண்டு சிறைத்தண்டனை அனுபவிப்பது போலக் கதையின் முடிவு மாற்றப்பட்டதால் படமும் வெளியானது.

கூடவே சமுதாயச் சிக்கல்களைப் பேசும் படம் என்ற தேசிய விருதையும் தட்டிக் கொண்டது.உண்மையில் இது ஒரு அபத்தமான கதைப் பின்னணி. இப்படியான படைப்புகள் மோசடிகளை நியாயப்படுத்தும்.


பொருளாதார இட ஒதுக்கீட்டை மிக வலுவாக வெளிப்படுத்தாத ஒரு படைப்பு இது. இன்னும் ஆழமாகப் போயிருக்க வேண்டும்.


இப்பேர்ப்பட்ட சர்ச்சையோடு உருவான இந்தப் படத்தின் 

கதையை எழுதியது சாட்சாத் கவிஞர் வாலி தான். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என்று பல பொறுப்புகளை இந்தப் படத்தில் அவர் எடுத்துக் கொண்டார்.


இந்த மாதிரியான கதையை இப்போது படமாக்க வேண்டும் என்ற நினைப்பே எழாத அளவுக்கு சமூக விழிப்புணர்வு வந்து விட்டது தான் கால மாற்றம்.

ஒரு சமயம் “ரெட்டை கிளிகள்” பாடலை ராஜா புதிர்ப் போட்டியில் நான் பகிர்ந்த போது இந்தப் படத்தையெல்லாம் நினைப்பூட்ட வேண்டுமா என்று போட்டியாளர் ஒருவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


ஒரே ஒரு கிராமத்திலே படத்தின் கதைப் பின்னணியே தெரியாத அளவுக்கு “ரெட்டைக் கிளிகள்” பாடலும் மூடி மறைத்து விட்டது.

இந்தப் படத்தில் மற்றைய பாடல்களிலும் சாதி ஒழிப்பு, சமதர்மம் பேசப்பட்டாலும் வெகுஜன மட்டத்தில் பரவலாகப் போய்ச் சேரவில்லை.

ஏன் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் “நல்லதோர் வீணை செய்தே” 


https://youtu.be/5BzS2uArmeY?si=bOHLO1Hfs7NfaOIl


பாடலை இன்னொரு வடிவமாகவும் இசைஞானி இளையராஜா கொடுத்திருந்தார். அது கூடப் பரவலாகப் போய்ச் சேரவில்லை.


சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

இந்தப் பதிவை இன்று காலை சிட்னி ரயில் பயணத்தில் எழுதி விட்டு வேலைத்தளத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன்.

ஒரு பழமையான கடை வளாகத்தின் மூலையில் ஒரு மெத்தை அமைப்பில் இருவர் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டே காலை நீட்டுகிறார்கள்.

ஒருவரின் பாதணியை (shoe) துடைத்துக் கொண்டிருக்கிறார் ஒரு பணியாளர். இன்னுமாடா என்று மனதுக்குள் நொந்து கொண்டே வந்தேன்.


கானா பிரபா

Sunday, June 2, 2024

இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியர்கள் ❤️


எங்கள் இசைஞானியின் 81 வது பிறந்த நாள் சிறப்புப் படையலாக அவரின் இசையூற்றை வரிகளால் அணை போட்ட பாடலாசிரியர்ளைத் திரட்டும் நீண்ட காலத் திட்டத்தின் ஒரு அம்சமாக, தமிழில் வெளியான படங்களில் பயன்படுத்தப்பட்ட பாடலாசிரியர்களைத் தொகுத்துக் கொடுக்கிறேன். கா.பி

தமிழைத் தாண்டியும் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, இதை விடத் திரையிசை சாராப் பாடல்கள் என்று திரட்டினால் இசைராஜா இளையராஜாவால் பயன்படுத்தப்பட்ட பாடலாசிரியர்கள் இருநூறைத் தாண்டும். அவற்றைப் பின்னாளில் பாகங்களாகத் தருகிறேன். 

அது தான் என் அடுத்த பணி. அதையும் தாண்டிப் புனிதமான மிகப்பெரிய பணி ஒன்றுள்ளது. இந்தப் பாடலாசிரியர்கள் கொடுத்து இளையராஜாவின் இசை வடிவம் கண்ட அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் வகை கொண்டு திரட்டுவது, அது என் பேராசை கூட. அதனால் தான் இந்தப் பகிர்வில் ஒவ்வொரு பாடலாசிரியரின் மாதிரிப் பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளேன். கா.பி இந்த முயற்சிக்கு எனக்கு உறுதுணையாக இருந்த சகோதரர் அன்புவுக்கும் இந்தவேளை என் நன்றியறிதல்கள்.

ஆயிரம் படங்களைத் தாண்டுவது மட்டுமல்ல சாதனை. இம்மாதிரி எண்ணற்ற பாடலாசிரியர்களையும் ஆவாகித்துத் தன் படைப்பில் அணியாக்கிய வகையிலும் எம் இளையராஜா நிகழ்த்திக் காட்டிய சாதனைக்காரர். பதிவு:கானா.பிரபா

இசைஞானி இளையராஜா இசைத்த ஒளவையார் உள்ளிட்ட பெரும் புலவர்கள், தியாகையர் உள்ளிட்ட சங்கீத மகானுபவர்கள், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட இயக்குநர்கள், புலமைப்பித்தன் உள்ளிட்ட தற்காலத்துப் புலவர்கள், கமல்ஹாசன் என்ற பன்முகப் படைப்பாளி, பஞ்சு அருணாசலம் ஐயா போன்ற திரைத்துறைச் சாதனையாளர்கள், நா.முத்துக்குமார் போன்ற இளம் பாடலாசிரியர்கள் என்று எவ்வளவு வகை தொகையாக இந்தப் பாடலாசிரியர்களைப் பிரித்துப் பார்த்து அழகு செய்யலாம்.

ஜெயகாந்தன் போன்ற இலக்கியப்படைப்பாளிகளையும் தன் பாடல்களின் வழியே உள்வாங்கியவர்.

இயக்குநர் சுகா தன்னுடைய “படித்துறை” படத்துக்காக நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரையும் இசைஞானி இளையராஜாவின் பாடலாசியராக்க எடுத்த முயற்சியில் நாஞ்சில் நாடனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பாடல்கள் எழுதி அவை வெளிவராதது நமக்குத் தான் இழப்பு.

இதோ எங்கள் இசைராஜாவின் பிறந்த நாளுக்கு குசேலனாகச் சுமந்து தரும் அவல் பொட்டலம் இது.

பதிவை எழுதியவர் கானா.பிரபா

1. இளையராஜா

மணியே மணிக்குயிலே (நாடோடித் தென்றல்)

https://www.youtube.com/watch?v=ego0GwnHRxk

2. கண்ணதாசன்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும்)

https://www.youtube.com/watch?v=90tcV_A60wI

3.  பஞ்சு அருணாசலம்

கண்மணியே காதல் என்பது (ஆறில் இருந்து அறுபது வரை)

https://www.youtube.com/watch?v=wzhG3nk7TsE

4.  கலைஞர் கருணாநிதி

காவலுக்குக் கெட்டிக்காரன் (காவலுக்குக் கெட்டிக்காரன்)

https://www.youtube.com/watch?v=TePft4JQUdM

5. புலமைப் பித்தன்

நீயொரு காதல் சங்கீதம் (நாயகன்)

https://www.youtube.com/watch?v=4syapxpznD8

6. வாலி

கண்ணன் ஒரு கைக்குழந்தை (பத்ரகாளி)

https://www.youtube.com/watch?v=zgwpnuwdQlU

7. காமராசன்

கண்ணன் வந்து பாடுகிறான் (ரெட்டை வால் குருவி)

https://www.youtube.com/watch?v=A__OOVNknqs

8. பொன்னடியான்

மலையோரம் மயிலே (ஒருவர் வாழும் ஆலயம்)

https://www.youtube.com/watch?v=bjqwVXBLREA

9. பிறைசூடன்

மீனம்மா மீனம்மா (ராஜாதி ராஜா)

https://www.youtube.com/watch?v=xsSRBeOVh_g

10 கங்கை அமரன்

இந்த மான் எந்தன் சொந்த மான் (கரகாட்டக்காரன்)

https://www.youtube.com/watch?v=Usr-aqaqsHQ

11. வைரமுத்து

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் (நினைவெல்லாம் நித்யா)

https://www.youtube.com/watch?v=W80v_UYSChg

12. மதுக்கூர் கண்ணன் (யார் கண்ணன்)

அள்ளித் தந்த பூமி (நண்டு)

https://www.youtube.com/watch?v=N8k4_EvO5hY

13. P.B.ஶ்ரீனிவாஸ் 

கேய்சே கஹூன் என்ற ஹிந்திப் பாட்டு (நண்டு)

https://www.youtube.com/watch?v=I8btjaXIaUY

14.  வாசன்

வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன் (பூந்தோட்டம்)

https://www.youtube.com/watch?v=C8N4t4ByTKA

15. பழநி பாரதி 

என்னைத் தாலாட்ட வருவாளோ (காதலுக்கு மரியாதை)

https://www.youtube.com/watch?v=22z0vPE7o0A

16. அறிவுமதி

செம்பூவே பூவே (சிறைச்சாலை)

https://www.youtube.com/watch?v=WYiCwPL4Sx8

17. எம்.ஜி.வல்லபன்

ஆகாய கங்கை (தர்ம யுத்தம்)

https://www.youtube.com/watch?v=YRSTKevNYp0

18.  முத்துலிங்கம்

பூபாளம் இசைக்கும் (தூறல் நின்னு போச்சு)

https://www.youtube.com/watch?v=4XPvUOPYp24

19. சி.என்.முத்து

அலங்காரப் பொன்னூஞ்சலே (சொன்னது நீ தானா)

https://www.youtube.com/watch?v=D6pY6p_O2Ls

20. சிற்பி பாலசுப்ரமணியம்

மலர்களே நாதஸ்வரங்கள் (கிழக்கே போகும் ரயில்) 

https://www.youtube.com/watch?v=oNQClquDTlk

21. ஆலங்குடி சோமு

மஞ்சக் குளிச்சு ( பதினாறு வயதினிலே)

https://www.youtube.com/watch?v=eNL69g00z_U

22. புலவர் சிதம்பர நாதன்

ஏரிக்கரைப் பூங்காத்தே (தூறல் நின்னு போச்சு)

https://www.youtube.com/watch?v=hWIHK7K-dpo

23. புரட்சி தாசன்

சுகம் சுகமே (நான் போட்ட சவால்)

https://www.youtube.com/watch?v=_foItGOeo-M

24. விஜி மேனுவேல் 

ஸ்விங் ஸ்விங் (மூடு பனி)

https://www.youtube.com/watch?v=ogC2z5hVXhA

25. இளைய பாரதி

சோலை இளங்குயில் (காவலுக்குக் கெட்டிக்காரன்)

https://www.youtube.com/watch?v=nz98XYOd9oI

26. ஜெயகாந்தன்

எத்தனை கோணம் (எத்தனை கோணம் எத்தனை பார்வை) https://www.youtube.com/watch?v=sqKKG6Mojio

27. முத்துக்கூத்தன் 

தொன்று தொட்டு (அவதாரம்)

https://www.youtube.com/watch?v=EI7-nzEGM5E

28. அவிநாசி மணி 

பூப்போட்ட தாவணி (காக்கிச் சட்டை)

https://www.youtube.com/watch?v=n0hsTOu5ZvU

29. கலைவாணன் கண்ணதாசன் 

ஒரு நாள் நினைவிது (திருப்பு முனை)

https://www.youtube.com/watch?v=fK3TsgLVEl4

30. குருவிக்கரம்பை சண்முகம் 

இங்கே இறைவன் (சார் ஐ லவ் யூ)

https://www.youtube.com/watch?v=rsP2LNL3zzU

31. கஸ்தூரி ராஜா

மாமரத்துல (கரிசக்காட்டுப் பூவே)

https://www.youtube.com/watch?v=dUNqVwzlWSw

32. கே.காளிமுத்து

அன்பு மலர்களின் (கண்ணுக்கு மை எழுது)

https://www.youtube.com/watch?v=RpYKftQuBIo

33. காமகோடியன்

மல்லிகை மொட்டு (சக்தி வேல்)

https://www.youtube.com/watch?v=9eW5Bmj8KWk

34. கமல்ஹாசன்

உன்னை விட (விருமாண்டி)

https://www.youtube.com/watch?v=jQrPdHJQxLo

35. ஆர்.வி.உதயகுமார்

முத்து மணி மாலை (சின்ன கவுண்டர்)

https://www.youtube.com/watch?v=5XXYRAmaZLo

36. தாமரை

அண்ணே அண்ணே (ஆண்டான் அடிமை

https://www.youtube.com/watch?v=8fdCgZjHwPk

37. மோகன்ராஜ்

வதன வதன (தாரை தப்பட்டை)

https://www.youtube.com/watch?v=0gNf6O-GkZI

38. பார்த்தி பாஸ்கர்

பாப்பா ரூபா (பூஞ்சோலை)

https://www.youtube.com/watch?v=AVRKsZU80kQ

39. நா.முத்துக்குமார்

வானம் மெல்ல (நீதானே என் பொன் வசந்தம்)

https://www.youtube.com/watch?v=hBjUlQQADPo

40. மு.மேத்தா

வா வா வா கண்ணா வா (வேலைக்காரன்)

https://www.youtube.com/watch?v=KEEq8RUyD6Q

41. சினேகன்

அழகி வர்ரா (உளியின் ஓசை )

https://www.youtube.com/watch?v=fapiFwAVsTY

42. ஜீவன்

மயிலு படப் பாடல்கள்

43. கபிலன்

ஒரு வாண்டுக் கூட்டமே (நந்தலாலா)

https://www.youtube.com/watch?v=eml6Jxqu5R8

44. உஷா (உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்)

பாரிஜாதப் பூவே (என் ராசாவின் மனசிலே)

https://www.youtube.com/watch?v=-m-M6yTaolI

45. பரத் ஆச்சார்யா

மா கங்கா (நான் கடவுள்)

https://www.youtube.com/watch?v=NoVc2fbhMKk

46. கதாக திருமாவளன் 

தூரிகை இன்றி (அஜந்தா) 

https://www.youtube.com/watch?v=PUWF5uvs14M

47. சு.செந்தில்குமாரன் 

யாருக்கு யாரென்று (அஜந்தா)

https://www.youtube.com/watch?v=-VkqxitChbk

48. விசாலி கண்ணதாசன்

கண்ணனுக்கு (தனம்)

https://www.youtube.com/watch?v=jzrbTq4N0Mc

49. பா.விஜய்

கொஞ்சம் கொஞ்சம் (மாயக் கண்ணாடி)

https://www.youtube.com/watch?v=hPwQ24uurCE

50. நந்தலாலா

வெள்ளிமணி (தலைமுறை)

https://youtu.be/fkqTttIAaUk?si=WP87Hd_hAjWMFTOv 51. 

51. அகத்தியன்

வாசமிக்க மலர்களை (காதல் கவிதை)

https://www.youtube.com/watch?v=9LvAcVXijb0

52. தேன் மொழியான் 

  டப்பாங்குத்து (தலைமுறை)

53. பாரதி கண்ணன் 

முந்தி முந்தி விநாயகரே ( கண்ணாத்தாள்)

https://www.youtube.com/watch?v=XUFpPcn3wOE

54. அபிராமிப்பட்டர்

இடங்கொண்டு விம்மி (பார்த்த விழி (குணா)

https://www.youtube.com/watch?v=oO2Bm2vwKCI

55. யுகபாரதி

பூவக் கேளு (அழகர்சாமியின் குதிரை)

https://www.youtube.com/watch?v=JuxRhf1raHU

56. ஜெ.ப்ரான்சிஸ் கிருபா

குதிக்கிற (அழகர்சாமியின் குதிரை)

https://www.youtube.com/watch?v=M-NShvwtt_U

57.  ஒளவையார் 

கல்லானே ஆனாலும் (எத்தனை கோணம் எத்தனை பார்வை) 

https://www.youtube.com/watch?v=4AlhHSq85YY

58. ஆண்டாள்

வாரணம் ஆயிரம் (கேளடி கண்மணி)

https://www.youtube.com/watch?v=rv7t0ubd0Zc

59. பாரதியார்

நிற்பதுவே நடப்பதுவே (பாரதி)

https://www.youtube.com/watch?v=LaBYTFM3_HE

60. பாரதிதாசன்

காலை இளம் பருதியிலே (கண்ணன் ஒரு கைக்குழந்தை)

https://www.youtube.com/watch?v=THF7TElmD5g

61.முத்துஸ்வாமி தீக்‌ஷதர்

மகா கணபதிம் (சிந்து பைரவி)

https://www.youtube.com/watch?v=RS3RWUNhpxA

62. தியாகராஜர்

மரி மரி நின்னே (சிந்து பைரவி)

https://www.youtube.com/watch?v=gxW1t61Cae8

63. ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் 

அலைபாயுதே (எத்தனை கோணம் எத்தனை பார்வை)

https://www.youtube.com/watch?v=Bcw09gq0hgY

64. மாணிக்க வாசகர்

பாருருவாய (தாரை தப்பட்டை)

https://www.youtube.com/watch?v=klRiP_T7N4A

65. எஸ்.ஜானகி

கண்ணா நீ எங்கே

https://www.youtube.com/watch?v=UJzSLNC1vd8

‪66. கண்மணி சுப்பு‬‬‬‬

‪நான் தேடும் செவ்வந்திப் பூவிது‬‬‬‬

‪ https://www.youtube.com/watch?v=NFQo5cXyroU‬‬‬

‪‬‬‬

67. சிவகாம சுந்தரி‬

‪எங்கும் நிறைந்தொளிரும் (கோழி கூவுது)‬‬‬‬

‪68. திருப்பத்தூரான்‬‬‬‬

‪தக்காளிப் பழம் போலே (கரிமேடு கருவாயன்)‬‬‬‬

‪ https://www.youtube.com/watch?v=vVzEVU1OfV8‬‬‬

‪‬‬‬

69 எஸ்.என்.ரவி‬ (பொன்னியின் செல்வன்)

‪என்ன சொல்லி நான் எழுத (ராணி தேனி)‬‬‬‬

‪ https://www.youtube.com/watch?v=dTfkL5R2cOY‬‬‬

‪‬‬‬

70. ரவிபாரதி ‬

‪ஆசை அதிகம் வச்சு (மறுபடியும்)‬‬‬‬

‪ https://www.youtube.com/watch?v=p3mHQgwZYIM‬‬‬

71. ‪பாவலர் வரதாஜன்‬‬‬‬

‪வானுயர்ந்த சோலையிலே‬‬‬‬

‪ https://www.youtube.com/watch?v=0WaS7-SgqTg‬‬‬

72. ஹரி

டிஸ்கோ (தர்மயுத்தம்)

https://www.youtube.com/watch?v=yhUYWEYy3tI

‪73. ARP ஜெயராம்‬‬‬‬

‪தமிழனோட வீரமெல்லாம் (தமிழரசன்)‬‬‬‬

‪ https://www.youtube.com/watch?v=MW76NhaBd_g‬‬‬

‪74. விவேக்‬‬‬‬

‪நாளும் நாளும் (60 வயது மாநிறம்)‬‬‬‬

‪ https://www.youtube.com/watch?v=rAcc3uwGbwg‬‬‬

‪75. சண்முகம் முத்துராஜ் ‬‬‬‬

‪மணப்பாறை சந்தையிலே‬‬‬‬

‪(இதயத்தில் ஓர் இடம்)‬‬‬‬

‪ https://www.youtube.com/watch?v=Ew7N1LZYtd8‬‬‬

‪76. தணிகைச் செல்வன்‬‬‬‬

‪ஏழைப்பூ உன்னை (புதிய அடிமைகள்)‬‬‬‬

‪ https://www.youtube.com/watch?v=QRZp-rVorV0‬‬‬

77. பொன்னருவி

இதயமே நாளும் நாளும் (அடுத்தாத்து ஆல்பர்ட்)

https://www.youtube.com/watch?v=dB2ZNkVD1B0

78. மிஷ்கின்

தாயின் மடியில் (சைக்கோ)

https://www.youtube.com/watch?v=5krSubVMV7w

79. சுகா 

ஒன்னோட நடந்தா (விடுதலை)

https://www.youtube.com/watch?v=TeB3Vw7rEMU

80. கவி வெளி சரவணன்

என் மனசு (உலகம்மை)

https://www.youtube.com/watch?v=tlrAhm-0Jvc

81. இராமலிங்க அடிகளார் 

அருட்பெரும் ஜோதி (விடுதலை)

https://www.youtube.com/watch?v=bgVyPf30Zb8

இசைஞானி இளையராஜாவுக்கு முன்னும், பின்னும் இனி ஒருக்காலும் இப்படியொரு மலையளவு சாதனை அவர் பயன்படுத்திக் கொண்ட பாடலாசிரியர்கள் விஷயத்திலும் இனி வரப்போவதில்லை. அதனால் தான் அவர் காலம் கடந்தவர்.

கானா பிரபா

02.06.2024