Pages

Sunday, August 31, 2008

றேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்?

இப்பவெல்லாம் மலையாளத்தில் வந்த நல்ல படங்களை மீண்டும் தமிழில் எடுத்துப் பழிக்குப் பழிவாங்கும் சீசன். எனவே இந்தப் போட்டி ஒரு மலையாளப்படத்திலிருந்து வருகின்றது.

ஹலோ ஹலோ, மலையாளம் என்றதும் ஓடிடாதீங்கப்பா.

இந்தப் மலையாளப்படத்தின் கதை ஒரு வரலாற்றுப் பின்னணியோடு அமைக்கப்பட்டது. ஒரு பிரபல நடிகரின் தயாரிப்பில் வந்தது. மீண்டும் தமிழில் எடுத்துக் காயப்படுத்தாமல் அப்படியே மொழிமாற்றிவிட்டார்கள். இந்தப் படத்தின் இயக்குனரை இப்போது ஹிந்தி பீல்டில் தான் தேடவேண்டியிருக்கு.தமிழில் ஒரு பாடலாசிரியரை வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்திய திரைப்படமும் கூட. இங்கே கங்கை அமரன் பாடும் ஒரு பாட்டுத் துண்டத்தைக் கொடுத்திருக்கின்றேன். நல்ல பிள்ளையாட்டம் தமிழில் மொழிமாற்றப்பட்ட இந்தப் படம் என்னவென்று சொல்லுங்க பார்ப்போமே.

தமிழில் கங்கை அமரன் பாடும் பாட்டுத் துண்டம்



மலையாளத்தில் இளையராஜா பாடும் பாட்டுத் துண்டம்

Saturday, August 30, 2008

நிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008

கடந்த இருபத்து நான்கு நாட்கள் நிகழ்ந்த ஈழத்திரு நாட்டின் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மகோற்சவ நிகழ்வுகளில் இன்று தீர்த்தத் திருவிழா. கடந்த ஆண்டு மடத்து வாசல் பிள்ளையாரடியில் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பு, அடியார்களின் மகிமைகளைக் கொடுத்திருந்தேன். அந்த முழுத்தொகுப்பினையும் பார்க்க "நிறைவான நல்லூர்ப்பயணம்".

இந்த ஆண்டு நண்பர் ஆயில்யனின் ஆலோசனைப்படி இருபத்தைந்து நாட்கள் ஒலியிலும், இசையிலும் இவ்வாலயத்தின் மகோற்சவ காலத்தை நினைவில் நிறுத்த வாய்ப்பாக அமைந்தது.

இந்தவேளை நண்பர் விசாகனின் "நல்லைக்கந்தனின் தேர்த்திருவிழா" என்னும் பதிவு நேற்று வெளியாகி எம் பழைய அந்த நினைவுகளை மீட்கவும் அமைந்த நற்பதிவாக இருக்கின்றது. அப்பதிவிற்குச் சென்று பார்த்து உங்கள் அபிப்பிராயத்தையும் அவருக்குச் சொல்லுங்கள்.

நம் தாயகத்தில் இருந்து வரும் "நல்லூர் கந்தசுவாமி கோயில்" என்னும் புகைப்படப் பதிவும் தொடர்ச்சியாக இந்த மகோற்சவத்தின் ஒவ்வொரு நாட் புகைப்படப் பதிவுப் பெட்டகமாக இருக்கின்றது.


நேற்று எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் திரு டோனி.செபரட்ணம் அவர்கள் ஒருங்கிணைப்பில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளில்

"சிவனருட் செல்வர்" திரு ஆறு. திருமுருகன் அவர்கள் ஆலயத்தில் இருந்து அதிகாலை வழங்கிய சிறப்புரை



தேர்த்திருவிழாவின் நேரடி வர்ணனையை வானொலி மாமா மகேசன் அவர்களோடு திரு.ஆறு திருமுருகன் அவர்கள் பகிரும் ஒலிப்பகுதி

Friday, August 29, 2008

நல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று

ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இந்த ஆண்டு கொடியேறி கடந்த இருபத்து மூன்று நாட்கள் தொடர்ந்த மகோற்சவ நிகழ்வில் இன்று எம்பெருமான் ஆறுமுகக் கந்தன், வள்ளி தெய்வயானை சமேதராக ரதோற்சவத்தில் பவனி வரப்போகும் காட்சி நம் மனக் கண் முன் விரிகின்றது. எல்லாம் வல்ல ஆண்டவனின் பெருங்கருணை நம் எல்லோர் மீதும் பரவட்டும். அநீதிகள் ஒழிந்து, இன்னல்கள் அகன்று, சுபீட்சமானதொரு யுகத்தை நம் உறவுகள் பெறட்டும்.

கடந்த ஆண்டு நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் வழங்கிய ரதோற்சவ நாள் ஒலிப்படையல்கள் இதோ:

காலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு
Get this widget
Share
Track details



ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது
Get this widget
Share
Track details



தமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய "தேர்த் திருவிழாவின் சிறப்பு" என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு



அல்லது இங்கே சொடுக்கவும்

Thursday, August 28, 2008

சப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (ஒலிவடிவில்)


நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் இன்று சப்பரத்திருவிழாவில் எம்பெருமான எழுந்தருள இருக்கும் இவ்வேளை, கடந்த ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நல்லைக் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நாளன்று அதிகாலையில் படைத்த சிறப்பு வானொலிப்படைப்பைப் பேணிப் பாதுகாத்து இங்கே தருகின்றேன் உங்களுக்கு.



Wednesday, August 27, 2008

இருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்!


இன்றைய நல்லூர் கந்தன் மகோற்சவ காலச் சிறப்புப் பதிவாக சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடலான "ஞானதேசிகனே சரணம்" என்ற பாடலை ஈழத்துச் சங்கீத மேதை பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம்.

Tuesday, August 26, 2008

இருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்

Monday, August 25, 2008

கவிஞர் மு.மேத்தாவின் "தென்றல் வரும் தெரு"

தன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுகின்றார்."இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.

நான் தயாரித்த "தென்றல் வரும் தெரு" திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.

இரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. "தென்றல் வரும் தெரு அது நீ தானே" என்ற பாடல் வரிகளை முதல் அடியாகக் கொண்டு "சிறையில் சில ராகங்கள்" திரைப்படம் 1990 இல் வெளியானது. அது நடிகர் முரளி, பல்லவி நடிப்பில் வெளியானது.அடிகள் பயன்பட்ட மு.மேத்தாவின் தயாரிப்பில் வந்த "தென்றல் வரும் தெரு" ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடிப்பில் வெளியானது. நான்கு ஆண்டுகள் கழித்து 1994 இல் வந்து படம் வெளிவந்த சுவடே தெரியாமல் வந்த வேகத்தில் ஓடிய படம் அது.

கடந்த றேடியோஸ்புதிரில் பலருக்கு தாவு தீர வைத்த கேள்வியின் விளக்கம் தான் மேலே சொன்னது.

"தென்றல் வரும் தெரு" திரைக்காக மனோ, மின்மினி பாடும் "தென்றல் வரும் தெரு அது நீ தானே"



"சிறையில் சில ராகங்கள்" திரைக்காக கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "தென்றல் வரும் தெரு அது நீ தானே"

இருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி...!


நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவ காலச் சிறப்புப் பதிவுகளில் இன்று கும்மியடி பெண்ணே கும்மியடி குருநாதனைப் பாடியே கும்மியடி என்னும் நற்சிந்தனைப் பாடல் இடம்பெறுகின்றது.

Sunday, August 24, 2008

பத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்!


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்

Saturday, August 23, 2008

பதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம், முருகா !


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்

Friday, August 22, 2008

றேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவிஞர் யார்?

தன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் இந்தக் கவிஞர் இப்படிக் கூறுகின்றார்."இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.

நான் தயாரித்த திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.

இரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா."
இந்த இரண்டு படங்களில் ஒன்றைத் தயாரித்த அந்தக் கவிஞர் யார்?

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு புகைப்படங்களில் இருக்கும் முரளி ஒரு படத்திலும், மற்றைய படத்தில் ரமேஷ் அரவிந்தும் நடித்திருந்தார்கள். இங்கே சொன்ன கவிஞர் வைரமுத்து கிடையாது. இந்தக் கவிஞர் தயாரித்த படத்தின் தலைப்பின் ஒரு பகுதியை ஒரு வலைப்பதிவர் தன் ஊர்ப்பெயருடன் இணைத்து தன் பெயராக வைத்திருக்கின்றார். இவை தான் உதவிக் குறிப்புக்கள்.

எங்கே...Ready....Start

பதினேழாந் திருவிழா - "சும்மா இரு"


இன்றைய நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பதினேழாந் திருவிழாப் பதிவாக சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த மகாவாக்கியங்களில் ஒன்றான "சும்மா இரு" என்பதன் தத்துவ விளக்கத்தை ஒலிவடிவில் தருகின்றேன். கடந்த ஆண்டு நல்லைக் கந்தன் ஆலயப் பதிவுகளுக்காக அன்பர் ஒருவரால் எழுத்து வடிவில் தந்த ஆக்கத்தை இப்போது குரல் வழி பகிர்கின்றேன்.

Thursday, August 21, 2008

பதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அலங்காரம்


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்.

Wednesday, August 20, 2008

பதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச் சிறப்பு


நல்லைக் கந்தன் ஆலயத்தின் பதினைந்தாம் திருவிழாவான இன்று முன்னை நாள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரும், சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் தமிழறிஞருமான, திரு.திருநந்தகுமார் அவர்கள் கடந்த ஆண்டு எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேர் உற்சவ நாளன்று வழங்கிய "நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம்" குறித்த சிறப்பு ஒலிப்பகிர்வு

Tuesday, August 19, 2008

பதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு


இன்றைய பதின்னான்காம் திருவிழாப் பதிவில் கடந்த ஆண்டு நல்லைக்கந்தன் தேர்த் திருவிழா நாளான்று நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேரடி வர்ணனை வழங்கியபோது எமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய "முருக வழிபாட்டின் சிறப்பு" குறித்த கருத்துப் பகிர்வு
Get this widget
Share
Track details

Monday, August 18, 2008

"ஆண்பாவம்" பின்னணி இசைத்தொகுப்பு

கடந்த றேடியோஸ்புதிரில் இடம்பெற்ற புதிராக ஆண்பாவம் திரைப்படக் கேள்வி அமைந்திருந்தது. இயக்குனர் ஆர் பாண்டியராஜனின் "கன்னி ராசி" என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, இரண்டாவதாக இயக்கிய படமே ஆண்பாவம். 1985 வெளியாகி வெள்ளி விழாக் கண்ட படம் இது. படத்தில் பெரும்பாலான நடிகர்களுக்கு அவர்களின் பெயரிலேயே இப்படத்தின் கதாபாத்திரப் பெயரும் அமைந்திருக்கும். பாண்டியனுடன் சீதா அறிமுக நாயகியாகவும், பாண்டியராஜன், ரேவதி போன்றோரும் நடித்திருக்கும் இப்படம் யதார்த்தமான நகைச்சுவை கலந்த திரைக்கதையைப் பலமாகக் கொண்டது. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் போன்றோரின் நடிப்பும் விலக்கமுடியாத சிறப்பைக் கொடுத்தது.

ஆண்பாவம் திரைப்படத்தின் பெரும்பலங்களில் ஒன்று இசை. இசைஞானி இளையாராஜா இசையில் முத்தான பாடல்களும், அழகான பின்னணி இசையும் இப்படத்துக்கு மேலும் மெருகூட்டியது. இன்றுவரை இப்படத்தின் பின்னணி இசையைப் பல ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதே இப்பின்னணி இசையின் சிறப்பாக இருக்கின்றது.


தொடர்ந்து ஆண்பாவம் திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.

றேடியோஸ்புதிரில் வந்த பின்னணி இசை முழுவடிவம்



ராமசாமி அண்ணனின் தியேட்டர் திறப்பை கரகாட்டத்துடன் வரவேற்றல்



கனகராஜ் கபே திறப்பும் ஆட்கள் வராததும்



சண்டைக்காட்சியில் வரும் பின்னணி இசை



சீதா அறிமுகக் காட்சி



சீதாவை பாண்டியன் பெண் பார்க்கும் காட்சி



மாப்பிளையை புடிச்சிருக்கு


பாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை



கள்ள கவுண்டர் திறக்கும் சின்ன பாண்டி



சீதாவின் மனதில் பாண்டியன் நிரந்தரமாக இடம்பிடித்தல்



பாண்டியனை தேடிப் போய் காணாமல் தவிக்கும் சீதா



சீதாவை தேடி புதுமாப்பிளை வரும் நேரம்



ரேவதி தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்படுதல்


பதின்மூன்றாந் திருவிழா - "தாயான இறைவன்"

இன்றைய நல்லைக் கந்தன் ஆலயத் திருவிழாப் பதிவிலே சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் சொற்பொழிவுப் பேழையில் இருந்து "தாயான இறைவன்" என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.

Sunday, August 17, 2008

பன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்




இன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த "நல்லூரான் திருவடியை என்ற பாடலை" இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம்.



அடுத்து வருகின்றது "நில்லடா நிலையிலென்று சொல்லுது" என்னும் தலைப்பில் அமைந்த நற்சிந்தனைப் பாடல்.

ஓம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது

நமக்கு நாமே துணையென்று விழிக்குது
நாதாந்த முடியிலேறிக் குளிக்குது

வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது

மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது
சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது

நில்லடா நிலையிலென்று சொல்லுது
நீயேநான் என்று சொல்லி வெல்லுது

உல்லாச மாயெங்குஞ் செல்லுது
உண்மை முழுதுமென்று சொல்லுது

நல்லூரில் செல்லப்பன் என்னப்பன்
நானவரைக் கேட்கும் விண்ணப்பம்

நன்றி: சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்கள்

Saturday, August 16, 2008

பதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்

"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்

பாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்
பத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு
வாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு
இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு

நீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது
நல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது
வாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்
வாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்
வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்"

பாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: வர்ணராமேஸ்வரன்
இசை: இசைவாணர் கண்ணன்

Get this widget | Share | Track details

Friday, August 15, 2008

றேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்?

மேலே இருக்கும் படக்காட்சியுடன் தான் இந்தப் படம் ஆரம்பமாகும். இந்தப் பட இயக்குனரும் ஒரு பிரபல இயக்குனரிடம் உதவியாளராக இருந்து தான் பின்னர் இயக்குனர் ஆனவர். பின்னர் கதாநாயகனாகவும் நடித்தவர் ;-))) (ஏன் சிரிக்கிறேன் என்பதுக்கு பதில் போடும் போது கண்டு கொள்ளுங்க)

இந்த இயக்குனரின் முதல் படத்தின் ஒரு பாதி பெண்ணின் ஒரு பருவத்தைக் குறிக்கும். ஆனால் முழுப் படத்தலைப்பு சிலரின் எதிர்காலத்தைக் கணிக்கும். இங்கே நான் கொடுத்திருக்கும் பின்னணி இசை இந்த இயக்குனரின் இன்னொரு படமாகும். முதல் படத்தை விட பயங்கர வெற்றியைக் கொடுத்தது. ஒரு அழகான நாயகியை அறிமுகப்படுத்தியது.இந்தப் படத்தை ஹிந்தியில் தானே நடிச்சு ஜீகிசாவ்லாவை ஹீரோயினாகப் போடும் விபரீத ஆசை கூட இந்த இயக்குனருக்கு ஏற்பட்டு கடனில் மூழ்கியது தான் மிச்சம் இவருக்கு. இன்றும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நிறைய சொல்லிவிட்டேன், முழிக்காம பதிலை சொல்லுங்கப்பா.

திருமஞ்சத் திருவிழா -"நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்"


நல்லைக் கந்தன் ஆலயத் திருமஞ்சத் திருவிழாவான இன்று "நல்லூர் முருகன் சிறப்பியல்புகள்" என்னும் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெறுகின்றது. இச் சொற்பொழிவை கடந்த ஆண்டு தேர்த் திருவிழாவினை ஒட்டி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேரடி அஞ்சலில் எடுத்திருந்தேன். முகப்பு படம் கடந்த ஆண்டு நல்லூர் மஞ்சத் திருவிழாவின் போது சகோதரர் பகீயினால் எடுக்கப்பட்டது. அவருக்கு இந்த வேளை என் நன்றிகள் உரித்தாகுக.

அகில இலங்கை கம்பன் கழக சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரசாந்தன் "நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்" என்னும் விடயத்தில் வழங்கிய சிறப்புப் பேச்சு





அல்லது இங்கே சொடுக்கவும்

Thursday, August 14, 2008

ஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 3


ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஒன்பதாந் திருவிழாப் பதிவாக "முருகோதயம்" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் பாகம் 3 இப்பதிவில் இடம் பெறுகின்றது.

பாகம் 3 ஒலியளவு: 19 நிமி 23 செக்



பாகம் 3
Get this widget | Share | Track details

Wednesday, August 13, 2008

எட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 2

நல்லூர் கந்தப்பெருமான் ஆலயத்தின் எட்டாம் திருவிழா நன்னாளிலே "முருகோதயம்" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் பாகம் 2 இப்பதிவில் இடம் பெறுகின்றது.

பாகம் 2 ஒலியளவு: 20 நிமி 02 செக்

Tuesday, August 12, 2008

ஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 1


நல்லை நகர் முருகன் ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் "முருகோதயம்" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் அடுத்த பாகம் நாளை இடம்பெறும்.

பாகம் 1 ஒலியளவு: 19 நிமி 58 செக்




Monday, August 11, 2008

"சுப்ரமணியபுரம்" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப்பேட்டி

கடந்த றேடியோஸ்புதிர் 16 இல் ஒரு பின்னணி இசை கொடுத்து அந்த இசை நினைவுபடுத்தும் பாட்டு எது என்று கேட்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் "கண்கள் இரண்டால்" என்ற பாடலைக் கண்டுபிடித்துச் சொல்லியிருந்தீர்கள்.

இன்றைய பதிவில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ஒலிப்பேட்டி இடம்பெறுகின்றது. இந்தப் பேட்டியை கடந்த ஆகஸ்ட் 8, 2008 இல் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் வழங்கியிருந்த நிகழ்ச்சியின் போது எடுத்திருந்தேன்.

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை காலத்துக்கு காலம் இளைய தலைமுறையினர் புதுப் புது சிந்தனைகளோடு தம் திறமையை நிலை நாட்டி தமக்கென்று தனியிடத்தைப் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் திறமைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அதுவே எந்தக் காலத்திலும் ஒரு திறமைசாலியை அடையாளப்
படுத்தி விடும். அதற்கு உதாரணம் தான் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சுப்ரமணிய புரம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள்.

கிட்டத்தட்ட 14 வருஷங்கள் செய்த தவம், இந்த திரைப்பட இசையமைப்பாளர் என்ற கனவு அது நிறைவேறியிருக்கு, அத்தோடு எடுத்த எடுப்பிலேயே உங்களின் முதல் படத்தின் பாடல்கள் வேறு பெரும் பிரபலம் பெற்று விட்டன.

ஒரு சம்பிரதாயபூர்வமான கேள்வியோடே ஆரம்பிக்கின்றேன், இசைஞானத்தை நீங்கள் தேடிப் பெற்றது எப்படி அதாவது உங்கள் ஆரம்ப கால வாழ்வியலை சொல்லுங்களேன்.

சென்னைக்கு வந்தீர்கள் கிட்டத்தட்ட 14 வருஷங்கள் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படைப்பாளியாக இருந்தீர்கள். அவையெல்லாம் எவ்வளவு தூரம் உங்களுக்கு திருப்தியைக் கொடுத்தன?

இடைப்பட்ட இந்த 14 வருஷங்களில் நீங்கள் இசையமைப்பாளராக வரவேண்டும் என்று முயற்சி செய்யவில்லையா?

சுப்ரமணியபுரம் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

நீண்ட நாள் இசைக்கனவோடு வாழ்ந்து வந்த நீங்க இந்தப் படத்துக்காக போட்ட மெட்டுக்கள் ஏற்கனவே உங்கள் மனதில் கருக்கட்டி இருந்தவையா அல்லது இயக்குனர் கதைச் சூழலைச் சொன்னபோது உருவானவையா?

இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு சில நடிகர்களைத் தவிர மற்ற எல்லோரும் புதுமுகங்கள், அதைப் போல உங்கள் பாடல்களிலும் சங்கர் மகாதேவன் தவிர்ந்த அனைவருமே இப்போது தான் வந்த பாடகர்கள், இது எதிர்பாராமல் அமைந்த விடயமா?

முதல் படம் பெருத்த வெற்றியையும் ஒரு எதிர்பார்ப்பையும் உங்களுக்கு கொடுத்திருக்கு இதை எப்படி உணர்கின்றீர்கள்

ரீதிகெளளா ராகத்தில் அமைந்த கண்கள் இரண்டால் பாடல் மிகவும் சிறப்பா அமைஞ்சிருக்கு, இந்த ராகத்தில் பாடல் போடவேண்டும் என்ற ஆசை இருந்ததால் தான் இது அமைந்ததா?

இப்படியான கேள்விகளுக்கு சுப்ரமணிய புரம் திரைப்படத்தின் பாடல்கள் பிறந்த கதையோடு திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் கொடுத்திருந்த 28 நிமிட ஒலிப்பேட்டி இது



தரவிறக்கிக் கேட்க

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் பின்னணி இசை ஒன்று





ஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..!

இன்றைய திருவிழாப் பதிவில் "ஈசனே நல்லூர் வாசனே" என்ற பாடல் இசைவடிவிலும் மறைந்த திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா அவர்கள் பாடக் கேட்கலாம். பல வருடங்களுக்கு வெளிவந்த இப்பாடலைப் பாடிய திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா, அவர் காலத்தில் "ஈழத்தின் சுப்புலஷ்மி" என்று சிறப்பிக்கப்பட்டாராம்.

Get this widget | Share | Track details


ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே

பண்ணினேர் மொழியாய்
பாலசுப்ரமண்யா
என்னுடலம் எல்லாம்
நண்ணும் வண்ணம் வா வா

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் வா வா

தாசனான யோகசுவாமி
சாற்றும் பாவை
கேட்டுக் கிருபை கூர்ந்து
வாட்டம் தீர்க்க வா வா

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே

Sunday, August 10, 2008

ஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா

நல்லைக் கந்தன் திருவிழாக் காலத்தில் இன்று நான் தருவது, நல்லூர்க் கந்தன் புகழ் பாடும் பொப்பிசைப் பாடல். ஈழத்தின் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் அவர்கள், அரவிந்தன் இசையில் பாடும் இப்பாடல் வழக்கமான பக்திப் பாடல்களில் இருந்து விலகிப் மெல்லிய இசை கலந்த பொப்பிசைப் பாடலாக மலர்ந்திருக்கின்றது. தொடர்ந்து பாடல் வரிகளையும் கீழே தந்திருக்கின்றேன்.


Get this widget | Share | Track details

மால் மருகா எழில் வேல் முருகா நீயே
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே
மால் முருகா எழில் வேல்முருகா நீயே
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே

முருகா வடிவேலா...........
தருவாய் அருள் குமரா.....
முருகா வடிவேலா.......
தருவாய் அருள் குமரா......

நல்லூர் நாயகனே....! நல்வழி காட்டுமைய்யா
நம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா
நல்லூர் நாயகனே....! நல்வழி காட்டுமைய்யா
நம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா

நல்லூர் எம்பதியே
நம்பிக்கையின் ஒளியே
நல்லூர் எம்பதியே
நம்பிக்கையின் ஒளியே

கனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா
கதியே நீயென்றால் பதியே சரணமய்யா
கனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா
கதியே நீயென்றால் பதியே சரணமய்யா
கந்தா கதிவேலா...வருவாய் சிவபாலா....
கந்தா கதிவேலா...வருவாய் சிவபாலா....

ஏழுமலை இறையினிலே எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா
ஏழுமலைப் இறையினிலே எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா
குமரா எழில் முருகா......
குறுகுறு நகை அழகா......
குமரா எழில் முருகா........
குறுகுறு நகை அழகா........

தோகைமயில் ஏறிவரும் சேவல் கொடியழகா
பழமுதிர்ச்சோலைகளில் பவனி வரும் வடிவழகா
தோகைமயில் ஏறிவரும் சேவல் கொடியழகா
பழமுதிர்ச்சோலைகளில் பவனி வரும் வடிவழகா
அரகர ஆறுமுகா..........
அருளீர் திருக்குமரா.....
அரகர ஆறுமுகா..........
அருளீர் திருக்குமரா.....

லண்டன், பாரிஸ், சுவிஸ், ஜேர்மனி, நேர்வே, ஒஸி
கனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா
லண்டன், பாரிஸ், சுவிஸ், ஜேர்மனி, நேர்வே, ஒஸி
கனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா
உலகாள் தமிழ்த் தலைவா.......
உமையாள் திருக்குமரா............
உலகாள் தமிழ்த் தலைவா.......
உமையாள் திருக்குமரா.............

சிவனின் மைந்தனய்யா சிங்கார வேலனய்யா
தகப்பனுக்குபதேசம் செய்த சுவாமி நீயய்யா
சிவனின் மைந்தனய்யா சிங்கார வேலனய்யா
தகப்பனுக்குபதேசம் செய்த சுவாமி நீயய்யா

தவறுகள் பொறுத்திடுவாய்.....
தமிழரைக் காத்திடுவாய்..........
தவறுகள் பொறுத்திடுவாய்.....
தமிழரைக் காத்திடுவாய்..........

அரகர ஆறுமுகா..........
அருளீர் திருக்குமரா.....
அரகர ஆறுமுகா..........
அருளீர் திருக்குமரா.....

Saturday, August 9, 2008

நாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா


இன்றைய நல்லைக் கந்தன் ஆலய நாலாந்திருவிழாப் பதிவில் நல்லை முருகன் பாடல் ஒன்று ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றது.
பாடலாசிரியர்: தாயகக் கவி புதுவை இரத்தினதுரை,
இசை வழங்கியவர்: இசைவாணர் கண்ணன்,
பாடலைப் பாடுகின்றார்: இசைக்கலைமணி ஸ்ரீ வர்ணராமேஸ்வரன்.




Get this widget | Share | Track details



வானமரர் துயர் தீர்க்க வண்ண மயில் ஏறி நின்றாய்
தேனமுத வள்ளி தெய்வயானையுடன் கூடி நின்றாய்
நானழுத கண் மழையால் நல்லையெங்கும் வெள்ளமடா
நாயகனே எங்களுக்கு நல்ல வழி சொல்லனடா

வேல் முருகா...அருள் தா முருகா....
வேல் முருகா...அருள் தா முருகா........
மால் மருகா....நல்லை வாழ் முருகா...
மால் மருகா....நல்லை வாழ் முருகா...
வா முருகா....துயர் தீர் முருகா........
மால் மருகா....நல்லை வாழ் முருகா...

நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா.......
எல்லையில் இருந்தினியும் எறிகணையால்
எம்மைக் கொல்லுதல் அரங்கேறுமா.......
நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா.......

(வேல் முருகா...அருள் தா முருகா....)

அசுரர் நிலைகள் முன்னர் எரியும் வரையில் நின்று
மலையில் சிரித்திட்ட வேலவா
அதர்மப் படைகள் இன்று எறியும் கணைகள் வென்று
புலிகள் உலவுகின்ற வேளை வா

தமிழைப் பிறப்பித்த வேலவா
விழிகள் திறந்திட்டு ஓடிவா
தமிழைப் பிறப்பித்த வேலவா
விழிகள் திறந்திட்டு ஓடிவா

வேலவா நீ ஓடிவா
வேலவா நீ ஓடிவா

இருவிழி கலங்குது அருள் ஒளி பரவுது
புலிகளின் தலைமையில்
தமிழர்கள் துயர்கெட வரமெடு

நன்றி:
நல்லை முருகன் பாடல்கள் : தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்

Friday, August 8, 2008

றேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்டு?

இந்த வாரம் றேடியோஸ்புதிரும் ஒரு பின்னணி இசையோடு மலர்கின்றது. பெரும்பாலும் மிகவும் சுலபமாக யாராலும் கண்டுபிடிக்கக் கூடிய இசை என்று தான் நினைக்கின்றேன். காரணம் போன வாரம் கஷ்டமான கேள்வி கேட்டு காய்ச்சி எடுத்ததால் "மானாட மயிலாட" பாணியில் இந்த வாரம் யாரும் எலிமினேட் ஆகக் கூடாது என்ற பாசத்துக்காக கொடுக்கிறேன் ;) வழக்கம் போல் வரும் திங்கள் வரை இப்போட்டி இருக்கும்.

போட்டி மிகவும் சுலபம் என்பதால் உபகுறிப்புக்களை இயன்றவரை தவிர்த்து விடுகின்றேன்.
இந்தப் பின்னணி இசையில் வரும் புல்லாங்குழல் இசை இதே படத்தில் ஒரு பாடலினை நினைவு படுத்துகின்றது. அந்தப் பாடல் எது என்பதே கேள்வி.

மூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா


நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவ காலப் பதிவுகளில் இன்று நல்லை முருகன் பாடல் ஒன்று ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றது.

பாடலாசிரியர்: தாயகக் கவி புதுவை இரத்தினதுரை
இசை வழங்கியவர்: இசைவாணர் கண்ணன்
பாடலைப் பாடுகின்றார்: இசைக்கலைமணி ஸ்ரீ வர்ணராமேஸ்வரன்.


Get this widget | Share | Track details


தேரடியில் காலையிலே நானழுத வேளையிலே
நீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்
காலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே
கண்டு மனமிரங்கவில்லை முருகா

கண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை
கண்டு மனமிரங்கவில்லை முருகா

நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு
தொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்
வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்
துள்ளி வந்து சேரலையே முருகா

வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே
வேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா - நீ
ஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு
எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா

செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்
உந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ
வந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்
வல்ல புலி வெல்லுமடா முருகா

Thursday, August 7, 2008

இரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து

நல்லூர் விழாக் காலப் பதிவுகளில் இன்றைய படையலாக வருவது சிவயோக சுவாமிகளின் இரண்டு நற்சிந்தனைப் பாடல்களின் ஒலி வடிவமும், அவற்றின் எழுத்து வடிவமும். "எந்நாளும் நல்லூரை" என்ற பாடலைத் தாங்கிய இசைப் பேழை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சிவதொண்டன் நிலையத்தினரால் வெளியிடப்பட்டது. இப்பாடலை உருவாக்கியதோடு தகுந்த சங்கீத இலட்சணமும் கொடுத்தவர் சிவயோக சுவாமிகள். எளிமையான வரிகளில் வலிமையான பக்தியுணர்வைத் தூண்டும் இப்பாடல் நல்லூர் நாயகன் திருவிழாக் காலத்தில் உங்களுக்கும் அவன் பால் சித்தத்தைக் கொண்டு செல்ல உறுதுணையாக அமையும்.



Get this widget
Share
Track details


ராகம்: பிலஹரி
தாளம்: ரூபகம்

பல்லவி

எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே

அனுபல்லவி

அந்நாளில் ஆசான் அருந்தவஞ் செய்த இடம்
அது ஆதலாலே அதிசயம் மெத்தவுண்டு
(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)

சரணம்

வேதாந்தம் சித்தாந்தம் கற்றதனால் என்ன
வேடிக்கைக் கதைகள் பேசினால் என்ன
வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்
வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே
(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)

சத்தியம், பொறுமை, சாந்தம், அடக்கம்
நித்தியா நித்தியம் பெறினும் - நிபுண
பக்தி செய் உத்தமர் பரவும் நல்லூரில்
நித்தியம் வந்து பார்த்தால் முத்தி நிச்சயமே

(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)

0000000000000000000000000000000000000000000000000000000000000000

நன்றி:
பதிவில் இடம்பெற்ற "எந்நாளும் நல்லூரை", மற்றும் "நல்லூரான் திருவடியை" பாடல்களின் ஒலிப்பதிவைத் தந்துதவிய திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள்.
.

நல்லூர் முருகன் உள் ஆலயப் புகைப்படம்: http://www.tamilshots.com/

Wednesday, August 6, 2008

நல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்

ஈழ நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோறசவ நிகழ்வுகள் இன்றிலிருந்து அடுத்த 25 நாட்கள் இடம்பெற இருக்கின்றன. எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள் கிடைத்து நம் எல்லோர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டிப் பிரார்த்தித்து தினம் ஒரு கந்தப் பெருமான் பாடலை வழங்கலாம் என்றிருக்கின்றேன். எல்லாம் ஆண்டவன் சித்தம்.


பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த "நல்லை முருகன்" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.





நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி நல்லூர் நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
கீதம் ஒலிக்குதடி.....கீதம் ஒலிக்குதடி.....
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
நாதம் கேட்குதடி ..........
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி

ஒலியின் அலைகள் விரவிச் செவியில்.......
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா.........ஓம் முருகா.......ஓம் முருகா
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா என ஒலிக்குதடி

கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி
கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி

மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மால் மருகன் அருள் இருக்குதடி
மால் மருகன் அருள் இருக்குதடி

வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்

நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....

Sunday, August 3, 2008

"கடலோரக் கவிதைகள்" - பின்னணி இசைத்தொகுப்பு

கடந்த றேடியோஸ்புதிரில் கடலோரக் கவிதைகள் திரைப்படத்தின் பின்னணி இசை கொடுத்து அப்படத்தின் கதாசிரியர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடை இயக்குனர் ராஜேஷ்வர். கடலோரக் கவிதைகள் திரைப்படத்திற்காக என்ற கே.சோமசுந்தரேஷ்வர் என்ற பெயரில் அவர் கதாசிரியராக இருந்தார். இப்படத்திற்கு வசனம்: ஆர்.செல்வராஜ். இயக்கம்: பாரதிராஜா.

இயக்குனர் ராஜேஷ்வர் அவள் அப்படித் தான், பன்னீர் புஷ்பங்கள், கடலோரக் கவிதைகள், இது ஒரு காதல் கதை போன்ற திரைப்படங்களுக்கு கதாசிரியராக இருந்திருக்கின்றார். பின்னர் கார்த்திக் நடிப்பில் இதயத் தாமரை, அமரன் போன்ற படங்களையும் நியாயத்தராசு, துறைமுகம் போன்ற படங்களையும் அளித்திருக்கின்றார்.

கடலோரக் கவிதைகள் திரைப்படம் அதுவரை வில்லனாக நடித்து வந்த நடிகர் சத்யராஜ்ஜுக்கு வில்லத்தனம் இல்லாத நாயகன் அந்தஸ்தைக் கொடுத்தது. இப்படத்தில் ரேகா, ராஜா, ரஞ்சினி போன்றவர்கள் அறிமுகமாகியிருந்தார்கள். எனது புதிரில் சொன்ன சகவலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் தான் இந்தப் படம் உருவாகியிருந்த முட்டம் பகுதி குறித்த நூலை எழுதியிருப்பவர்.

பாரதிராஜா, இளையராஜா,வைரமுத்து ஆகியோர் இணைந்து படைத்த சகாப்தம் முடிவுக்கு வந்த திரைப்படம் இது என்பது ஒரு சோகம். பாரதிராஜாவின் சிறப்பான இயக்கம், வைரமுத்துவின் முத்தான கவிவரிகள், ராஜாவின் நிகரற்ற இசை போன்றவை இப்படத்திற்கு முடி சூட்டியவை என்றால் மிகையில்லை. இங்கே நான் கொடுத்திருக்கும் பின்னணி இசை, இளையராஜா எவ்வளவு ஈடுபாட்டோடு இப்படத்தின் கதைக்கு இசையால் உயிர் கொடுத்திருக்கின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது.

படத்தின் முகப்பு இசை



ஜெனிபர் டீச்சர் முட்டம் கிராமத்துக்கு வருதல்



சின்னப்பதாஸுக்கு ஜெனிபர் டீச்சர் மேல் மரியாதை ஏற்படுதல் (அடி ஆத்தாடி பாடலின் மெட்டிசை பல வயலின்களோடு இசைக்கப்படுகின்றது)


சின்னப்பதாஸ் தன் தாயிடன் மன்னிப்புக் கேட்டல் உருக்கமான இசையோடு


ஜெனிபர் டீச்சரிடம் நட்பு பாராட்டும் சின்னப்பதாஸ் (புல்லாங்குழல் இசையில் அடி ஆத்தாடி)


ஜெனிபர் டீச்சர் கோபம் கொண்டு பள்ளிக்கு போகாமல் திரும்பல்


ஜெனிபர் டீச்சர் சின்னப்பதாஸுக்காக பிரார்த்தனை (அடி ஆத்தாடி இசையோடு அருமையான கலவை)


ஜெனிபர் டீச்சர் காதலில் மனம் தடுமாறல் (கீபோர்டில் அடி ஆத்தாடி பாடலின் மெட்டிசை)


சின்னப்பதாஸ் மலை உச்சியில் இருக்கும் ஜெனிபர் டீச்சரை தெய்வமாகப் போற்றும் காட்சி


மேய்ப்பானின் விளக்கத்தோடு காதலைச் சொல்லும் ஜெனிபர்


ஜெனிபர் டீச்சரைத் தான் இழக்கப் போகின்றோமோ என்று சஞ்சலப்படும் சின்னப்பதாஸ்
(புல்லாங்குழலில் அடி ஆத்தாடி பாடலின் சோக இசையும் கலக்கின்றது)



சின்னப்பதாஸ் ஜெனிபர் டீச்சரிடம் கவலையோடு பேசுதல் (அடி ஆத்தாடி பாடலின் ஆரம்ப துள்ளிசையோடு)


ஜெனிபர் டீச்சர் சின்னப்பதாஸிடம் தனக்கு குருதட்சணை கேட்டல்


காதலனைப் பிரிந்த ஏக்கத்தோடு அவன் தந்த வலம்புரிச் சங்கைப் பார்க்கும் ஜெனிபர் டீச்சர்

இந்தப் படத்தின் இறுதிக் காட்சி இசை என்னை வியக்க வைக்கின்றது. கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக எந்தவிதமான வசனங்களும் இல்லாமல் வெறும் இசைக்கலவையோடு மட்டுமே பின்னப்பட்டு, வாத்தியக் கலவைகளின் நர்த்தனம் அழகிய பிரவாகமாகப் பெருக்கெடுக்கின்றது. அடி ஆத்தாடி பாடலின் இன்னொரு வாத்தியக் கோர்வையும் கலந்து இங்கே வயலின் உட்பட பல வாத்தியங்களில் அந்த மெட்டு இசைக்கப்படுகின்றது.