இசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணியின் நகர்ப்புறம் சார்ந்த கதைக்களனில் வந்து, அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்று ஒரு கைதியின் டைரி. 1985 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை உண்டு பண்ண இன்னொரு காரணம், இயக்குனர் கே.பாக்யராஜ், தன் குருநாதர் பாரதிராஜாவுக்காக "சிகப்பு ரோஜாக்கள்" படத்தின் கதை, வசனம் பொறுப்பை ஏற்று கமல்ஹாசனுக்கான இன்னொரு பெரு வெற்றிப் படம் ஆக்கிய பின்னர் இணைந்த படமாக இந்த நால்வர் கூட்டணியில் "ஒரு கைதியின் டைரி" அமைந்தது. பின்னர் இதே படத்தை கே.பாக்யராஜ் ஹிந்தியில் "ஆக்ரி ராஸ்தா" என்ற பெயரில் மீளவும் அமிதாப் பச்சானை நாயகனாக்கி இயக்கி, அமிதாப்பின் திரையுலக வாழ்வில் இன்னொரு பெரும் வெற்றிப்படத்தைக் கொடுக்கக் காரணமாகியது இந்த டைரி.
ஒரு கைதியின் டைரி படத்தில் கமல்ஹாசனுடன், ராதா, ரேவதி, ஜனகராஜும் முக்கிய வில்லன் பாத்திரத்தில் பாடகர் மலேசியா வாசுதேவனும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்று சொல்லும் போது சட்டென்று நினைவுக்கு வரும் படங்கள் அளவுக்கு இந்தப் படம் என் கவன எல்லைக்கு அப்பால் இருந்திருந்தது. ஆனால் ட்விட்டர் வழியாக நண்பர் சரவணன் தான் இந்தப் படத்தின் பின்னணி இசையைக் கொடுக்குமாறு ஒரு நேயர் விருப்பத்தை அளித்திருந்தார்.
கிட்டத்தட்ட இரண்டு நாள் பணியாக, படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஓடவிட்டு பின்னணி இசையின் வாத்திய ஜாலங்கள் எனும் உறுமீன் வருமளவுக்குக் காத்திருக்கும் கொக்காகக் கவனித்து எடுத்த இசைக்குளிகைகளை மிகவும் திருப்தியோடு இங்கே பகிர்கின்றேன். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இசையை வெட்டி ஒட்டிக் கல்லா கட்டும் இன்றைய யுகத்தில, இங்கே நான் கொடுத்திருக்கும் இசைக்குளிகைகளின் வாயிலாக இசைஞானி இளையராஜா அவர்கள், படத்தின் மூல ஓட்டத்தை உணர்ந்து பின்னணி இசை என்ற ரத்தம் பாய்ச்சியிருப்பதை உணர்வீர்கள். இந்த இசைத்துளிகள் அவர் ஒரு படத்தின் பாடல்கள் மட்டுமன்றி மைய இசையாக அமையும் பின்னணி இசையில் எவ்வளவு தூரம் ஈடுபாட்டோடு பயணித்திருக்கிறார் என்பது புரியும்.
இப்படி எண்ணற்ற படங்கள் மலையாகக் குவிந்திருக்கின்றன, நம் வாழும் காலத்தில் இயன்றவரை கைப்பிடி நெல்மணிகள் ஆதல் சேர்த்து உங்களிடம் அதைச் சிந்தாமல் சிதறாமல் கொடுத்துவிட்டுப் போய்விடவேண்டும் என்ற ஒரு கடைக்கோடி ரசிகன் என் ஆதங்கத்தின் இன்னொரு வெளிப்பாடே இந்த "ஒரு கைதியின் டைரி" பின்னணி இசைத்தொகுப்பு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தயாரிப்பு நிறுவனத்தின் பூஜைப்பாடலைப் பாடும் இளையராஜா
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
எழுத்தோட்ட இசை
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சிறையில் இருந்து வெளிவரும் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தேவாலயம் தேடிப்போய் தன் பழைய நினைவுகளில் மூழ்கும் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பழைய நண்பர் ஜனகராஜை சந்திக்கும் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கமலை அடையாளம் காணும் ஜனகராஜ்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கமல் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடையும் ஜனகராஜ்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கமல் மனைவி ராதா மலேசியா வாசுதேவனால் பலாத்காரம் செய்யப்படும்போது
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஜனகராஜிடமிருந்து துப்பாக்கியைக் கைப்பற்றும் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
போலீஸ் கமல் அறிமுகக் காட்சி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஜனகராஜிடம் ஆத்திரம் கொள்ளும் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மகன் கமலை முதன்முதலில் காணும் தந்தை கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கமல்,ரேவதி சந்திப்பு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தேவாலயத்தில் நினைவுகளின் இளைப்பாறலில் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கொலை செய்யப்போகும் மர்ம நபர் (தந்தை கமல்)ஐத் தேட வலைவிரிக்கும் போலீஸ் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
போலீஸ் அதிகாரி வினுச்சக்கரவத்தியைப் பழிவாங்கும் காட்சி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வினுச்சக்கரவர்த்தியைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடும் நேரம்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
போலீஸ் கமல், கொலையாளி கமலைத் துரத்தும் வேளை
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தன் தந்தை குறித்த உண்மையை அறிந்துகொள்ளும் போலீஸ் கமல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
படத்தின் இறுதிக்காட்சி,முக்கிய வில்லனை வீரசிவாஜி சிலையாக வேஷம் தரித்த கமல் வேட்டையாடுதல்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தமிழ் சினிமாவுலகில் மிகப்பெரும் இயக்குனர்களாக உச்சத்தில் இருப்பவர்களின் படங்களோடு ஒப்பிடும்போது எனக்கு எப்போதும் அதிகம் ஆர்ப்பாட்டமில்லாது சிறுமுதலீட்டில் எடுக்கப்படுகின்ற படங்களை எடுக்கும் இயக்குனர்களின் படைப்புக்களிலேயே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் சமீப வருடங்களில் இராசு மதுரவன் படங்கள் வரும்போதெல்லாம் இந்த எதிர்பார்ப்பு தொடர்ந்தது. பூமகள் ஊர்வலம் என்ற நல்லதொரு திரைப்படத்தைக் கொடுத்துத் தன்னைத் திரையுலகில் அறிமுகப்படுத்திக் கொண்டாலும் பாண்டி படம் மூலம் மீண்டும் திரையுலகில் மறுவாழ்வு பெற்று, மாயாண்டி குடும்பத்தார் மூலமே பரவலான அறிமுகத்தைப் பெற்றிருந்தார்.
குடும்ப உறவுகளைக் கொண்டு உணர்வுபூர்வமான, எளிமையான கிராமியக் கதைக்களனைக் கொண்ட படங்கள் தான் இவரது அடுத்த சுற்றில் கைகொடுத்த சூத்திரம். இவருக்கெல்லாம் முன்னோடிகள் வி.சேகர் காலம் வரை இந்தச் சூத்திரத்தால் வெற்றி கண்டவர்கள். ஆனால் இப்படியான படங்களுக்கு ஒப்பீட்டளவில் பெண் ரசிகர்களே அதிகம் என்பதால் சின்னத்திரை தன் பங்கிற்கு அவர்களை உள்வாங்கிக்கொண்டது.
ஆனாலும் திட்டமிட்ட குறைந்த செலவில், அதிகம் பிரபலமில்லாத நடிகர்களைத் தேர்வு செய்து சபேஷ் முரளி போன்ற மாமூல் இசையமைப்பாளர்களை வைத்து தன்னால் மீண்டும் இதே பாங்கான படங்களைக் கொடுத்து வெற்றியைக் காட்டமுடியும் என்று நிரூபித்தார் இராசு மதுரவன். இதனாலேயே இவரை வைத்து ஒரு வானொலிப்பேட்டி செய்யவேண்டுமென்று நினைத்து இவரின் பேஸ்புக் முகவரியைத் தேடிப்பிடித்து நண்பராக்கிக் கொண்டேன். பரபரப்பாக இயங்கும் இவரை சமயம் வாய்க்கும்போது பேட்டி எடுத்துக்கொள்ளலாம் என நானும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அதே பரபரப்போடு புற்று நோய் இவரக் ஆட்கொள்ள போய்ச் சேர்ந்து விட்டார் நிரந்தரமாக. அந்த ஏமாற்றம் கலந்த வருத்தம் இன்னும் அதிகப்படியாக எனக்குள்.இதே போன்றதொரு நிலைதான் சின்னதாயி இயக்குனர் கணேசராஜ் இற்கும் நிகழ்ந்தது.
சினிமா ஊடகத்தில் அறிவுசாலிகளாகக் காட்டிக்கொள்ள முனைபவர்களை ரசிகர்கள் தாமாகவே புறங்கையால் ஒதுக்கியிருக்கிறார்கள். மக்களுக்கு எது பிடிக்கும் அல்லது பிடிக்க வைக்கும் படைப்புக்களைக் கொடுத்த சாதாரண இயக்குனர்கள் அசாதாரணமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இராசு மதுரவனை அறியாத தமிழகத்தின் கடைக்கோடி ரசிகன் கூட அவர் படைப்புக்களைப் பார்க்கும் போது உளமார நேசிப்பான், இதைவிட வேறென்ன கெளரவமும் அங்கீகாரமும் வேண்டும் ஒரு படைப்பாளிக்கு!