கடந்த வாரம் ஷைலஜாவின் சிறப்பு வாரம் வந்து போனது. இந்த வாரம் வலம் வர இருப்பது குழந்தைகள் சிறப்பு பதிவு. இவர்களின் பெற்றோரும் கூட முந்திய சிறப்பு நேயர்களாக வந்து சிறப்பித்தவர்களே. புதுகைத் தென்றல் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர்களின் அம்மா மற்றும் தந்தை ஸ்ரீராம் ஆகியோரே அவர்களாவர். வலைப்பதிவில் பல குட்டிப் பதிவுகள் வலம் வரத்தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த வார சிறப்பு நேயர்களாக வரும் ஆஷிஷ் அம்ருதாவும் கூட ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள் என்ற பெயரில் சொந்த வலைப்பதிவு வைத்திருக்கின்றார்கள். ஆனால் பாருங்க பொதுவா குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் ஹோம் வேர்க் செய்ய சொன்னா அவங்க அப்பா/அம்மாவே செய்து கொடுத்து அனுப்புவது போல இந்தப் பதிவுகளின் பின்னணியில் இருக்கும் அந்த உதவிக்கரம் அம்மாவா, அப்பாவா? ஆஷிஷ் அம்ருதாவுக்கே வெளிச்சம் ;-)
ஆனாலும் என்ன குழந்தைகளுக்கான நல்ல வாசிப்புத் தீனி கொடுக்கும் பதிவுகள் பல இங்கே களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சரி, இனி ஆஷிஷ் அம்ருதா சொல்வதைக் கேட்போமா.
வணக்கம் மாமா,
நலமா?
எங்களுக்கு பிடித்தமான பாடல்களை இங்கே கொடுத்திருக்கோம்.
அதை சிறப்பு நேயர் விருப்பத்தில் கொடுக்க முடியுமா மாமா?
1. ராஜா சின்ன ரோஜா படம்
ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் போனானாம் - பாடல்
இந்தப் பாட்டு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். பாடலில் வரும் கதை,
தரும் மெசெஜ் அருமை.
"நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விளைந்தது.
தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது"
கார்ட்டுன் வடிவங்களுடன் ரஜினி அங்கிள்
நடித்திருப்பாங்க நல்லா இருக்கும்.எங்களுக்கு மிகவும்
பிடிக்கும்.
வீடியோவில் பார்க்க
2. சங்கர் குரு படத்திலிருந்து "சின்னச்சின்னப்பூவே கண்ணால் பாரு போதும்"
இந்தப்பாட்டை ஜானகி ஆண்ட்டி பாடி இருக்காங்களாமே.
சின்னக்குழந்தை மாதிரி ரொம்ப நல்லா இருக்கு.
இந்தப் பாட்டை யூட்யூபில் பாத்திருக்கோம். ரொம்ப பிடிக்கும்னு சொன்னது
அம்ருதா.
வீடியோவில் பார்க்க
3.கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்ருந்து
இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும்.
ஆஷிஷ், அம்ருதா ரெண்டு பேருக்கும் பிடிச்ச பாட்டு.
ஒரே குறும்பு... லூட்டி நல்லா இருக்கும்.
வீடியோவில் பார்க்க
4.அன்னை ஒர் ஆலயம் படத்தில்
"அப்பனே எங்கப்பனே பிள்ளையாரப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா"
பிடிக்கும்னு சொன்னது அஷிஷ்.
பாட்டு ரொம்ப பிடிக்கும்.
ரஜினி அங்கிள் யானையைப் பார்த்துவிடக்
கூடாதுன்னு
செய்யற கலாட்டா பார்க்க நல்லா இருக்கும்.
"அன்பு எனக்கு ரொம்ப இருக்கு,
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு"
இந்த வரி நல்லா இருக்கும்.
வீடியோவில் பார்க்க
5.அஞ்சலி படத்திலிருந்து "அஞ்சலி அஞ்சலி"
குட்டி பாப்பா சோ ஸ்வீட்.
இந்தப் படத்தில வர்ற பாட்டு எல்லாமே
சூப்பர் என்றாலும், இந்தப் பாட்டு சூப்பரோ
சூப்பர். அஞ்சலி பாப்பாக்கூட எல்லோரும்
டான்ஸ் ஆடறது நல்லா இருக்கும்.
வீடியோவில் பார்க்க
இது எங்க ரெண்டு பேருக்கும் பிடிக்கும்.
இவைதான் எங்களுக்கு பிடிச்ச பாடல்கள் மாமா.
மீண்டும் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
ஆஷிஷ், அம்ருதா
Monday, May 12, 2008
றேடியோஸ்புதிர் 6 - இந்த முகப்பு இசை எந்தப் படம்?
கடந்த வாரம் ஒரு பாடலின் இடை இசையோடு புதிர் போட்டேன். இந்த வாரம் ஒரு படத்தின் முகப்பு இசையைத் தந்து அப்படம் எதுவென்று புதிர் போடுகின்றேன். காரணம் தமிழ்த் திரையுலகில் பாடல்களை விதந்து சிலாகிக்கும் அளவுக்கு அப்படத்தில் சிறப்பாக இருக்கும் பின்னணி இசை பேசப்படுவதில்லை. குறிப்பாக இசைஞானி இளையராஜா இசையமைத்த எழுநூற்றுச் சொச்சம் திரைப்படங்களில் அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே ரசிகர்களால் கவனிக்கப்பட்டு நேசிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த வாரம் போடும் புதிர் ஒரு பின்னணி இசையாகவே கொடுக்கப்பட்டு எவ்வளவு தூரம் அந்த இசையை நீங்கள் கவனித்திருக்கின்றீர்கள் என்பதை அறியும் ஒரு முயற்சியாக இருக்கின்றது. எனவே கஷ்டப்பட்டு இந்த இசையை படத்தின் காட்சியில் இருந்து பிரித்தெடுத்து இங்கே தந்திருக்கின்றேன்.
இங்கே நான் தரும் இந்த இசை எண்பதுகளில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் முகப்பு இசையாக (Title music) இருக்கின்றது. இது வேற்று மொழியில் வந்து பின்னர் மீளவும் தமிழில் புதிதாக எடுக்கப்பட்ட படமாகும். படத்தின் தலைப்பில் இலக்கம் (number) இருக்கும். இப்பட நாயகன் எண்பதுகளில் அறிமுகமாகிப் பிரபலமான நாயகன். நாயகிக்கு இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இன்று வரை இந்த நாயகி அதே புகழோடு இருக்கின்றார். இப்படத்தின் பாடல் ஒன்று பண்டிகை நாள் ஒன்றை நினைவுபடுத்தும். இப்படத்தில் தோன்றிய முக்கிய பாத்திரங்களில் ஒருவரான பூர்ணம் விஸ்வநாதனை இங்கே படமாகக் கொடுத்திருக்கின்றேன். சரி இனி இந்தப் பின்னணி இசையைக் கேட்டு இப்படம் எதுவென்று கண்டுபிடியுங்களேன்.
இங்கே நான் தரும் இந்த இசை எண்பதுகளில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் முகப்பு இசையாக (Title music) இருக்கின்றது. இது வேற்று மொழியில் வந்து பின்னர் மீளவும் தமிழில் புதிதாக எடுக்கப்பட்ட படமாகும். படத்தின் தலைப்பில் இலக்கம் (number) இருக்கும். இப்பட நாயகன் எண்பதுகளில் அறிமுகமாகிப் பிரபலமான நாயகன். நாயகிக்கு இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இன்று வரை இந்த நாயகி அதே புகழோடு இருக்கின்றார். இப்படத்தின் பாடல் ஒன்று பண்டிகை நாள் ஒன்றை நினைவுபடுத்தும். இப்படத்தில் தோன்றிய முக்கிய பாத்திரங்களில் ஒருவரான பூர்ணம் விஸ்வநாதனை இங்கே படமாகக் கொடுத்திருக்கின்றேன். சரி இனி இந்தப் பின்னணி இசையைக் கேட்டு இப்படம் எதுவென்று கண்டுபிடியுங்களேன்.
Thursday, May 8, 2008
சிறப்பு நேயர் "கயல்விழி முத்துலெட்சுமி"
கடந்த வாரம் கண்ண(னின்) தாசன் கண்ணபிரான் ரவி சங்கர் கலவையாக ஐந்து பாட்டுக் கேட்டுவிட்டுப் போனார். அவர் பக்திமார்க்கமாகத் தான் பாடலுக்குப் போவார்னு நினைச்சவங்க வாயில் மண் மன்னிக்கவும் அவல் ;-) தொடர்ந்து உங்கள் விருப்பத் தேர்வுகள் ஐந்தைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றி உங்கள் பாணியில் எழுதி kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் உங்கள் விருப்பத் தேர்வுகளும் இடம்பெறக்காத்திருக்கின்றன. நீங்கள் பதிவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, பதிவுலக வாசகராகவும் இருக்கலாம்.
இதோ இந்த வாரச்சுற்றுக்குப் போவோம். இந்த வார றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வலம் வருபவர் "கயல்விழி முத்துலட்சுமி". கடந்த 2006 இல் தான் பதிவுலகிற்கு வந்தாலும் வகை வகையான பதிவு விருந்து கொடுத்து தொடர்ந்தும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றார்.
சிறு முயற்சி என்பது இவரின் தனித்துவமான வலைப்திவாகும். கூடவே தேன் கிண்ணம், சாப்பிட வாங்க போன்ற கூட்டு வலைப்பதிவுகளிலும் இடம்பிடித்தாலும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய இவரின் இன்னொரு பங்கு வலைச்சரத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி.
வலைச்சரம் என்னும் கூட்டு வலைப்பதிவில் ஒரு தேக்கம் களைந்து சமீப காலமாக தொடர்ந்து தேர்ந்தெடுத்த சகவலைப்பதிவர்களை ஒழுங்கமைத்து இப்பதிவில் எழுத வைப்பது இவரின் சிறப்பான பணிகளில் ஒன்று. இவரின் பதிவுகளிலேயே மிகவும் பிடித்தது "எம்.பி.த்ரி மை எம்.பி.த்ரி" காரணம் தொழில்நுட்ப விஷயங்களை இலாகவமாக இவர் தந்திருந்த விதம்.
தொடர்ந்து கயல்விழி முத்துலட்சுமி தன் முத்தான ஐந்து தேர்வுகள் குறித்து என்ன சொல்கிறார், கேட்போமா?
பாட்டு பாட்டு ன்னு படிப்பைக்கூட கவனிக்காம பாட்டு கேட்கும் பழக்கம் சின்னவயசில் இருந்தே இருக்கிறது.
ரேடியோவை அணைக்காம ராத்திரி பாட்டை கேட்டுகிட்டே தூங்கி அப்பா வந்து பாத்து அணைப்பது கூட உண்டு. டிவியில் கூட படங்களை விட பாட்டு நிகழ்ச்சி வரும் நிகழ்ச்சிகள் தான் பிடிக்கும்.. முன்பு etc ஒரு சேனல் வந்துது இந்தி பாட்டு மட்டும் பாடும் .. அதே ஓடும் சில நேரம். தமிழ்நாடு வந்தா டிவியில் எப்ஃஎம் போடறாங்களே அதுவோ இல்லாட்டி சன்ம்யூசிக்கோ தான் போட்டுப்பாப்பேன் அந்த அளவு பாட்டு தான் பிடிக்கும். இப்படி இருக்கும் போது அஞ்சு பாட்டுன்னா எதை சொல்றது எதை விடறது கஷ்டம் தான் இருந்தாலும் முயற்சி செய்யறேன்..
"அன்புள்ள மான்விழியே"
" மெதுவான இசை , அழகான அந்த கண்களோடு ஜமுனா உதட்டை சுழித்து " ஆசையில் ஒர் கடிதம் அதை கைகளில் எழுதவில்லை இரு கண்களில் எழுதி வந்தேன் " பெரிய கண்ணை அங்கயும் இங்கயும் உருட்டி பாட்டை கண்களால் நாட்டியம் ஆடி பாடுவதும் என்று தனி அழகு..
"
நலம் நலம் தானே நீ இருந்தால் சுகம் சுகம் தானே நினைவிருந்தால் " ரசித்து கேட்கலாம் ரசித்து பார்க்கலாம்
"அழகிய கண்ணே உறவுகள் நீயே"
.. அஸ்வினி ...சாந்தமான அந்த முகமும் சரி அந்த பாட்டின் இசையும் சரி மனசை கொள்ளை யடிக்கும்..
"
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே" ஆகா சிறுமி அஞ்சு வின் சிரிப்பை விட்டுட்டேனே... அதையும் சேர்த்துக்கோங்க..
"பூவிலே மேடை நான் போடவா"
... ஜெயச்சந்திரன் எனக்குபிடித்த பாடகர் அந்த குரலில் ஒரு மென்மை இருப்பது போல தோன்றும் ..".பூவிதழ் போல முல்லை என் கிள்ளை " சின்ன தாலாட்டு ..
"பூங்கதவே தாள் திறவாய்"
ஒன்னும் சொல்றதுக்கில்ல இசை தான் கிறக்குமே... என்ன பாட்டு என்ன பாட்டு.. அதுல தீபனும் உமாவும் வேற உருகி இருப்பாங்க பாட்டுல .... ""ஆஹா ஹா ஆனந்தம் '' பாட்டுலயே சொல்றாங்க பாருங்க...
"உலவும் தென்றல் காற்றினிலே"
இந்தப்பாட்டு கேட்கும் போதே நாமும் படகுல உக்காந்து போற மாதிரியே இருக்கும்...
"அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே .." நாயகன் பாட
"உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே"
.. நாயகி புகழ...
பதிலுக்கு அவரு
"இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே " ன்னு மடக்க
"தெளிந்த நீரைப்போல தூயக்காதல் கொண்டோம் நாம்" ன்னு நாயகி பாட
"களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார் "ன்னு மடக்க
"குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ" ன்னு .. கதாநாயகி மயங்க
உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே
... என்ன ஐஸ் பாருங்களேன்..
எத்தனை பேரு இந்த பாட்டை இந்த காலத்துலயும் ரசிப்பாங்கன்னு தெரியாது
..
இன்னும் எத்தனையோ பாட்டு ஹ்ம்
.. இன்னொரு முறை வாய்ப்பளிக்குமாறு கானாப்பிரபாவை கேட்டுக்கிறேன்..
--
கயல்விழி முத்துலெட்சுமி
Tuesday, May 6, 2008
அந்தப் பாட்டு: பாரிஜாதப் பூவே அந்த தேவலோக தேனே
நேற்றுக் கேட்டிருந்த பாடல் புதிருக்குப் பல நேயர்கள் சரியான விடையளித்திருக்கின்றீர்கள்.
இதோ விளக்கத்துடன் கூட விடை.
அந்தப் பாடல் "பாரிஜாதப் பூவே அந்த தேவலோகத் தேனே"
பாடல் இடம்பெற்ற திரைப்படம்: என் ராசாவின் மனசிலே
வெளிவந்த ஆண்டு: 1991
இப்பாடலைப் பாடியவர்கள் சுரேந்தர் மற்றும் சித்ரா.
பாடகர் சுரேந்தர் பாடகராகப் புகழடைந்ததை விட பின்னணிக் குரல் மூலம் அதிகம் பேசப்படுகின்றார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் சக கதாநாயகன் ராஜ்கிரண் முன்னர் பல படங்களின் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக மற்றும் சிறு சிறு வேடங்களில் நடிப்பு என்று பல அவதாரம் எடுத்தவர். இயக்கியிருந்தவர் கஸ்தூரி ராஜா. இப்படம் எடுத்து முடித்துப் பின்னணி இசை சேர்க்கும் போது இசைஞானியே அசந்து போய் மேலதிகமாக ஒரு பாட்டை அமைத்துக் கொடுத்தாராம். இந்தப் படம் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தது. படம் வெற்றியடையும் போது வரும் சர்ச்சை போல இந்தப் பட நாயகன் ராஜ்கிரணுக்கும் இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கும் டூ விட்டுக் கொண்டு போய்விட்டார்கள். அண்மையில் கூட ஒரு பேட்டியில் இன்றைய காலகட்டத்துக்கு "என் ராசாவின் மனசிலே" படத்தை எடுத்தால் ஊத்திக் கொண்டுவிடும் என்று பேட்டி கொடுத்து வெறுப்பேற்றினார் கஸ்தூரிராஜா
இங்கே தரும் பாடலைப் பாடுவது படத்தின் முன்னணிக் கதாநாயகன் கிடையாது. இப்படத்தின் அறிமுக நடிகர் ராஜ்சந்தரும், இரண்டாவது நாயகியாக நடித்த சாரதா ப்ரீதாவும் படத்தில் பாடி ஆடியிருக்கின்றார்கள். (பாரதிய நவீன இளவரசே விளக்கம் தந்தாச்சு).
கைப்புள்ள சொன்னது போல் இந்த ராஜ்சந்தர் வால்டர் வெற்றிவேலில் சத்யராஜ் தம்பியாக நடித்திருப்பார். போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றிகள் ;-)
பாடலைக் கேட்க
பாடலை கூமுட்டையின் யூடிபில் பார்க்க
Monday, May 5, 2008
றேடியோஸ்புதிர் 5 - இந்தப் பாட்டு எந்தப் பாட்டு?
கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு பாட்டுப் புதிரோடு வந்திருக்கின்றேன். இங்கே ஒரு பாடலின் இடையே வரும் இசைத் துண்டைத் தருகின்றேன். இது எந்தப் பாட்டு என்று கண்டு பிடியுங்களேன்.
இதோ சில உதவிக்குறிப்புக்கள்.
இப்பாடலைப் பாடியவர்கள் ஆணும் பெண்ணுமாக ஜோடிப் பாடல் பாடியிருக்கின்றார்கள். ஆண் பாடகர், பாடகர் என்பதை விட பின்னணிக் குரல் மூலம் அதிகம் பேசப்படுகின்றார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் சக கதாநாயகன் முன்னர் பல படங்களின் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக மற்றும் சிறு சிறு வேடங்களில் நடிப்பு என்று பல அவதாரம் எடுத்தவர். இப்படம் எடுத்து முடித்துப் பின்னணி இசை சேர்க்கும் போது இசைஞானியே அசந்து போய் மேலதிகமாக ஒரு பாட்டை அமைத்துக் கொடுத்தாராம். இந்தப் படம் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தது.
இங்கே தரும் பாடலைப் பாடுவது படத்தின் முன்னணிக் கதாநாயகன் கிடையாது. அறிமுக நடிகர் ஒருவரும், இரண்டாவது நாயகியும் பாடியிருக்கின்றார்கள். கண்டு பிடியுங்களேன்.
பி.கு: இந்தப் பதிவு புதுத் தமிழ்மணத்தில் சோதனையோட்டம் ;-)
இதோ சில உதவிக்குறிப்புக்கள்.
இப்பாடலைப் பாடியவர்கள் ஆணும் பெண்ணுமாக ஜோடிப் பாடல் பாடியிருக்கின்றார்கள். ஆண் பாடகர், பாடகர் என்பதை விட பின்னணிக் குரல் மூலம் அதிகம் பேசப்படுகின்றார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் சக கதாநாயகன் முன்னர் பல படங்களின் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக மற்றும் சிறு சிறு வேடங்களில் நடிப்பு என்று பல அவதாரம் எடுத்தவர். இப்படம் எடுத்து முடித்துப் பின்னணி இசை சேர்க்கும் போது இசைஞானியே அசந்து போய் மேலதிகமாக ஒரு பாட்டை அமைத்துக் கொடுத்தாராம். இந்தப் படம் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தது.
இங்கே தரும் பாடலைப் பாடுவது படத்தின் முன்னணிக் கதாநாயகன் கிடையாது. அறிமுக நடிகர் ஒருவரும், இரண்டாவது நாயகியும் பாடியிருக்கின்றார்கள். கண்டு பிடியுங்களேன்.
பி.கு: இந்தப் பதிவு புதுத் தமிழ்மணத்தில் சோதனையோட்டம் ;-)
Friday, May 2, 2008
சிறப்பு நேயர் "கண்ணபிரான் ரவிசங்கர் (KRS)"
கண்ணபிரான் ரவிசங்கர், பெயரிலேயே கண்ணனின் திருநாமத்தை முகவரியாக்கிக் கொண்ட இவர் வலைப்பதிவுலகில் கண்ணன் பெருமையைச் சுவைபடக் கூறும் பதிவர். ஆனால் வெறும் ஆன்மீகப் பதிவுகள் மட்டுமே இவரின் அடையாளம் இல்லை என்று சொல்லுமளவுக்கு இசை, இலக்கியச் சுவை, நகைச்சுவை என்று தன் எழுத்தெல்லைகளை பரவலாக்கிக் கொண்டவர். ஏனோ தானோவென்று பதிவைப் போட்டால் போச்சு, பின்னூட்டம் வந்தால் பார்ப்போம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை.
முன்பு நண்பர் ஜீ.ராகவனைப் பற்றிச் சொல்லும் போது தோன்றிய எண்ணங்களே கே.ஆர்.எஸ் ஐப் பற்றி எழுத ஆரம்பித்த போதும் வந்து முளைத்தன.தான் எழுத எடுத்துக் கொண்ட எந்த விடயம் என்றாலும் விரிவான நடைகொடுத்து, நல்ல தமிழ் சொற்கோர்த்து இவர் எழுதும் பாணியே சிறப்பானது. எதையும் ஆராய்ந்து பொருத்தமான வேளையில் கொடுக்கும் இவர் பதிவுகள் பலரின் தேடல்களுக்கு விடைகள் ஆகின்றன.
ஒவ்வொரு பதிவுக்கும் கொடுக்கும் தலைப்பே KRS தான் இந்தப் பதிவின் சொந்தக்காரர் என்று காட்டிக்கொடுத்துவிடும் அளவிற்கு அதிலும் தனித்துவம் காட்டுவார். குறிப்பாக இன்னது தான் சிறப்பானது என்று பொறுக்கி எடுத்துச் சிலாகிக்க முடியவில்லை. காரணம் எழுத முன்னரேயே இவை தான் பதிவுலக வாசகரைப் போய்ச் சேரவேண்டும் என்று அவரே முடிவெடுத்துவிட்டது போலத் தனித்துவமான பதிவுகள் பலவற்றைக் கொடுத்திருக்கின்றார்.
மாதவிப்பந்தல் என்பது இவரின் தனித்துவமான வலைப்பதிவு, கூடவே ஒரு கூடை கூட்டு வலைப்பதிவுகளிலும் எழுதிவருகின்றார் கே.ஆர்.எஸ். இதோ KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர் தான் தேர்ந்தெடுத்த முத்தான ஐந்து பாடல்கள் குறித்து என்ன சொல்கின்றார் என்று கேட்போம், பார்போம்.
நான் காபி அண்ணாச்சி என்று அழைக்கும் நம்ம கானா பிரபா அண்ணாச்சியைக் கண்மூடித்தனமா கண்டிச்சிட்டு இந்த றேடியோஸ்பதி கச்சேரியைத் துவங்குகிறேன்! பின்னே என்னவாம்?
ஒரு ரொமாண்டிக் பவுர்ணமி இரவில், வீட்டு மொட்டை மாடியில், காதலியுடன் அழகாய்க் கதைத்துக் கொண்டிருந்தேன்! அப்போ, கண் முன்னே தோன்றியது காதல் தேவதை! நீலவானில் கொட்டிக் கிடக்கும் தாரகைகளை எல்லாம் ஒரு பூக்கூடையில் நிரப்பிக் கொண்டு வந்திருந்தது.
கூடையில் உள்ளதில், ஐந்து பூக்களை மட்டும் எடுத்துக் கொள்ள உனக்கு வரம் தருகிறேன் என்று தேவதை கூறியது! இப்படியெல்லாம் கொக்கி போட்டு வரம் கொடுத்தா கோபம் வருமா? வராதா? நீங்களே சொல்லுங்க!
அந்தக் கூடையில் மின்னி மினுக்கும் நட்சத்திரங்களை எல்லாம் அப்படியே அள்ளி அள்ளிக், காதலியின் மேல் பொழிய மனசு துடிக்குது! ஆனால் தேவதையோ "லிமிட் ஃபைவ்" என்கிறது!
அது போல இருக்கு காபி அண்ணாச்சி சொல்லும் றேடியோஸ்பதி "லிமிட் ஃபைவ்" கணக்கு! சரி, கொடுத்த வரத்தை இப்போதைக்கு வாங்கிக் கொள்வோம்! அமிழ்தினும் இனிய தமிழ்த் திரையிசையில் இதோ...எனக்குப் பிடித்த ஐந்து நட்சத்திரங்கள்!
--------------------------------------------------------------------------------
1. நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்!
படம்: டிஷ்யூம்
குரல்: ஜெயதேவ், ராஜலக்ஷ்மி
இசை: விஜய் ஆன்டனி
வரி: புவன சந்திரா
என்னை வழிக்கு கொண்டு வருவது எப்படி என்று என் நெருங்கிய நண்பர்களுக்கு நல்லாத் தெரியும்! இந்தப் பாட்டு தான்! :-)
மனம் கனமாக இருக்கும் போது, சட்டென்று இந்தப் பாட்டு நினைவுக்கு வந்துருச்சின்னா போதும், உடனே லைட்டாகி விடுவேன்! ஏன் என்றால் இந்தப் பாட்டில் சோகமும் இருக்காது! சந்தோஷமும் பிச்சிக்கிட்டு கொட்டாது! "நிறைவு" என்று சொல்கிறோமே, அது!
"எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன் - இன்னும் பூமுகம் மறக்கவில்லை" என்று காதலன் பாடுவான்! எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!
பாட்டில் ஜீவாவும் சந்தியாவும் தோன்றும் காட்சிகள், அதிலும் அந்தப் படகுவீட்டில் முதலிரவு நடப்பதாய் வரும் கனவு, எனக்கு மிகவும் பிடித்த ஒன்று :-)
விஜய் ஆன்டனி சில ஹிட்களே கொடுத்த இளம் இசையமைப்பாளர். அதுக்கு அப்புறம் இவரை ரொம்பக் காணவில்லையே! இதில் பாடுபவர்களும் புதுமுகங்கள் தான்! ஆனாலும் பாட்டு செம ஹிட். பாட்டின் மெட்டு கொஞ்சம் க்ளாசிக்கல் என்றாலும், மெலடி பாடல்களில் இது ஒரு மகுடம் தான்!
இந்தப் பாட்டோட ராகம் பிருந்தாவன சாரங்கா என்று பிற்பாடு ஒரு நண்பர் சொன்னார்! நமக்கு எங்க அதெல்லாம் தெரியப் போகுது? பிருந்தாவனம் கண்ணனுக்குப் பிடிச்சதாச்சே! அதான் என் கூடவே ஒட்டிக்கிச்சி போல! :-)
பாட்டின் ஹை-லைட் வரிகளே...நட்சத்திரத்தை எல்லாம் கூப்பிட்டுக் காதலைச் சொல்ல முடியுது, ஆனா அவளிடம் மட்டும் சொல்ல முடியலையே என்ற ஏக்கம்!
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிட்டு
பட்டினியா கிடப்பாளே அது போலே...
பாடலைப் பார்க்க
படிக்க
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பாட்டே
நெஞ்சாங்கூட்டில் முதலில் நிற்கிறாய்!!
--------------------------------------------------------------------------------
2. உச்சி வகிந்தெடுத்து
படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
குரல்: SPB
இசை: இளையராஜா
வரி: புலமைப்பித்தன்
காலத்தால் அழியாத பாடல்-னு சொல்லுவாங்களே (Evergreen Song)! அதில் இது ஒன்னு!
பொதுவா எனக்கு நாட்டுப்புறப் பாடல்கள்-னா ரொம்பவே உசுரு! (கானா ஊர்ஸ்ல நாட்டார் பாடல்-ன்னு சொல்லுவாய்ங்களாம்). இதுல பெருசா தாம் தூம்-னு இசை இருக்காது. அலங்காரமாச் சொற்களும் இருக்காது! இசைக் கருவிகளும் சாதாரண டொய்ங்க் டொய்ங்க் கருவிகள் தான்! ஆனா எந்த வேஷமோ முகமறைப்போ பாசாங்குகளோ இல்லாம, இதயத்தோடு நேரடியாப் பேசும் பாடல்கள் இவை.
என் கொஞ்ச நாள் வாழைப்பந்தல் கிராம வாசம் இன்னும் எனக்குள்ளாற வீசிக்கிட்டே தான் இருக்கு! அதுவும் எங்க ஆயா பாடிய நாட்டுப் பாடல்கள்! அதுலயும் தாலாட்டுப் பாட்டுங்கனா ரொம்பவும் பிடிக்கும். (சரியான கும்பகர்ணன் என்பதை எப்படி எல்லாம் டீஜன்டா சொல்லுறான்-ன்னு அங்க யாருப்பா சவுண்டு வுடறது? :-)
நான் தான் தூங்கிட்டனே-ன்னு நெனச்சி பாட்டைப் பாதியில் நிறுத்திருவாங்களாம்! ஆயா மறந்துட்டாங்க போல-ன்னு மீதியை நான் அப்பவே எடுத்துக் கொடுப்பே-ன்னு இப்பவும் வூட்ல சொல்லிச் சிரிப்பாய்ங்க!
பிச்சிப்பூ, ராக்கொடி, சித்தகத்தி, வட்டக்கருப்பட்டி-ன்னு கிராமச் சொற்களா இந்தப் பாட்டில் வரும்! சிவகுமார் தன் மனைவியைப் பத்தி ஊரு என்னென்னமோ சொல்லும் போது, நம்பவும் முடியாம, தள்ளவும் முடியாமப் பாடுவாரு! எப்பமே ஸ்டைலாப் பாடும் SPBயா இதப் பாடுறாரு-ன்னு நமக்கே சந்தேகம் வந்துரும்! பாட்டுல கிராம வாத்தியங்களும் ஒலிக்கும். என்னென்ன-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
நம்ம மேல யாராச்சும் அபாண்டமாச் சொல்லிட்டாங்கன்னா...இல்லை ஆபீஸ் அரசியல்...இல்லை பதிவு அரசியல்...எதுவா இருந்தாலும்.....இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்க!
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
ஆரீராரோ! ஆரீராரோ! ஆரீரா-ரீராரி-ஆரீராரோ!
அப்படியே தட்டித் தட்டித் தூங்க வைப்பது போல்! ராஜா என்னிக்குமே ராஜா தான்!
பாடலைப் பார்க்க
படிக்க
--------------------------------------------------------------------------------
3. அற்றைத் திங்கள் வானிடம்
படம்: சிவப்பதிகாரம்
குரல்: மது பாலகிருஷ்ணன், சுஜாதா
இசை: வித்யாசாகர்
வரி: யுகபாரதி
இந்தப் பாடலைக் கேட்ட பிறகு கல்லுக்குக் கூட காதல் ரசம் சொட்டும்! Husky Voice என்பார்களே, அதுக்கு இந்தப் பாடல் நல்ல எடுத்துக்காட்டு! சுஜாதா மிக அழகாகப் பாடி இருப்பார்கள். நான் அடிக்கடி இரவில் கேட்கும் பாட்டு! Yeah, this is absolutely a night song! :-)
அற்றைத்திங்கள் வானிடம், அல்லிச்செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம், சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல் என்னிடம், நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
இந்தப் பாட்டைக் கொஞ்சம் உன்னிப்பாக் கேளுங்க! அந்த "ம்" சத்தம் ஒவ்வொரு வரியிலும் கேட்கும்! காதலன்-காதலி பேச்செல்லாம் கொஞ்சம் கொஞ்சமா எப்படி அடங்கும்-னு நினைக்கறீங்க? அந்த "ம்" சத்தத்தில் தானே? அதைப் பாட்டில் அழகா கொண்டு வந்திருப்பாரு கவிஞர்! தூய தமிழ்ச் சொற்கள் புழங்கும் பாட்டு இது!
நடுங்கலாம் குளிர் வாடையில், அடங்கலாம் ஒரு ஆடையில்
தயங்கலாம் இடைவேளையில், உறங்கலாம் அதிகாலையில்
-ன்னு ரசம் கொஞ்சம் ஸ்ட்ராங்காத் தான் இருக்கும்! ஆனா ராங்கா இருக்காது! :-)
பாடலைப் பார்க்க
படிக்க
--------------------------------------------------------------------------------
4. மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
படம்: ஷாஜகான்
குரல்: உன்னி மேனன்
இசை: மணிசர்மா
வரி: வைரமுத்து
இந்தப் படத்தைப் பார்த்ததில்லை! ஆனா இந்தப் பாட்டை எத்தனை வாட்டி கேட்டிருக்கேன்னு எனக்கே தெரியாது! இளையராஜாவாக்கும் தான் முதல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன். அப்பறம் தான் தெரிஞ்சிச்சி, மணிசர்மாவாம்! உன்னியும் நல்லாவே பாடி இருப்பாரு!
பாட்டு முழுக்க தட்டல் ஓசை, பாட்டுக்கே ஒரு ஜீவ களை சேர்க்கும்! அதை விட சிறப்பம்சம், பாட்டில் வரும் வயலின் இசை! ஏக்தார்-ன்னு ஒரு ஒற்றைத் தந்தி கருவி! அதில் வரும் இசையை அப்படியே வயலினில் போட்டிருப்பார் மணிசர்மா! It's just awesome!
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா-ன்னு வரும் வரிகளை அழுத்தி அழுத்திப் பாடி, நண்பர்கள் என்னை அடிக்கவும் வந்திருக்கிறார்கள்!
தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜன்மம் மரணம் ரெண்டும் தருபவளே - நிஜமாலுமே வைரமுத்துவின் வைர வரிகள் தான்!:-)
பாடலைப் பார்க்க
படிக்க
--------------------------------------------------------------------------------
5. ஆயர்பாடி மாளிகையில், தாய் மடியில் கன்றினைப் போல்
இசைவட்டு: கிருஷ்ண கானம்
குரல்: SPB
இசை: MSV
வரி: கண்ணதாசன்
மீண்டும் இன்னொரு தாலாட்டா-ன்னு கேக்குறீங்களா? ஹிஹி! நான் தான் முன்னமே சொன்னேனே என்னைப் பத்தி!
மெல்லிசை மன்னர் பல அருமையான பக்திப் பாடல்களைத் தந்திருக்காரு! ஆனா இது பக்திப் பாடல்-ன்னே சொல்ல முடியாது அளவுக்கு, தாலாட்டும் தாய்மையும் மட்டுமே மிஞ்சி நிற்கும்! SPB குரலின் மென்மையில் கிறங்கி உறங்கி விடலாம்.
வீட்டில் பெருசா ஏதாச்சும் சண்டை வந்தா, சாப்பிடாமல் தூங்கிருவேன். நள்ளிரவில், தட்டில் ரசம் சாதம் போட்டு எடுத்துக்கிட்டு வருவாங்க! ரோஷத்துல கொஞ்சமா சாப்பிட்டு விட்டு, மீண்டும் தூங்கப் போயிருவேன்! யார் கூடவும் பேச மாட்டேன்!
அவங்களும் தரையிலேயே படுத்துப்பாங்க! கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இந்தப் பாட்டு சன்னமா, ஹம்மிங் டோன்ல கேக்க ஆரம்பிக்கும்!
பேசாத ரோஷக்காரன்..."அம்மா"ன்னு கூப்பிட.....அட, இதுக்கு மேல சொல்ற சக்தி இல்லீங்க!
பாடலைப் படிக்க
பார்க்க
இனிய நினைவுகளை எல்லாம் அசை போட வைத்த காபி அண்ணாச்சிக்கு நன்றி!:-)
anbudan, krs