மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையில் 80களில் வெளியான முத்தான தேர்ந்த ஜோடிக் குரல்களின் இசைப்பாடல்களின் பொட்டலம் ஆக்கியிருக்கிறேன். ரசித்து அனுபவியுங்கள்.
Showing posts with label எம்.எஸ்.வி. Show all posts
Showing posts with label எம்.எஸ்.வி. Show all posts
Wednesday, July 15, 2015
எண்பதுகளில் மெல்லிசை மன்னர் தந்த இருபது
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையில் 80களில் வெளியான முத்தான தேர்ந்த ஜோடிக் குரல்களின் இசைப்பாடல்களின் பொட்டலம் ஆக்கியிருக்கிறேன். ரசித்து அனுபவியுங்கள்.
Tuesday, July 14, 2015
"எரிகனல் காற்றில்" மெல்லிசை மாமன்னர் நினைவில்
மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது உற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்.
இன்று எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்வுகள் வருவது வெறுமனே கண் துடைப்பல்ல அந்த மாபெரும் கலைஞனுக்கான மானசீக அஞ்சலி என்பதை அதே உணர்வோடு பார்ப்பவர்கள் உய்த்துணர்வார்கள்.
மெல்லிசை மாமன்னர் குறித்த வரலாற்றுப் பகிர்வையோ அல்லது அவரின் பாடல்கள் குறித்த ஆழ அகலத்தையோ பேச இன்றொரு நாள் போதாது. அவர் தந்தது இசைப் பாற்கடல் அல்லவோ?
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்த இறப்புச் சேதி கேட்ட போது என் மனத்தில் இருந்த இசைத்தட்டு இந்த "எரிகனல் காற்றில் உள்ளம் கொள்ளும் போலே" பாடலைத் தான் மீட்டியது.
இசைஞானி இளையராஜா இசையில் "ஒரு யாத்ரா மொழி" படத்துக்காக மலையாளத்தின் மறைந்த பாடலாசிரியர் கிரிஷ் புத்தன்சேரி வரிகளில் ஒலித்த பாடல் இது.
https://soundcloud.com/raja4ever/yerikanalkaattil
இதே பாடலை இளையராஜா பாடும் இன்னொரு வடிவமும் உண்டு. அந்த வகையில் ஒரே பாடலை இரு வேறுபட்ட இசையமைப்பாளர் பாடிய புதுமையும் இந்தப் பாடலில் நிகழ்ந்திருக்கிறது.
தமிழ்த் திரையிசையில் அசரீரிப் பாடல்கள் என்று சொல்லக் கூடிய, கதையோட்டத்தின் பின்னணியில் ஒலிக்கும் பாடலாகவோ அல்லது கதை மாந்தரின் அவலத்தைப் பிரதிபலிக்கும் குரலாகவோ கொணர்ந்தளிக்கும் சிறப்பு எம்.எஸ்.விஸ்வநாதன் குரலுக்கு உண்டு.
"எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே" என்று சிவகாமியின் செல்வன் படத்தில் தன்னுடைய இசையிலாகட்டும், "உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா" என்று வெள்ளி விழா படத்தில் வி.குமாரின் இசையிலாகட்டும் "விடை கொடு எங்கள் நாடே" என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலாகட்டும் மெல்லிசை மன்னரின் குரல் தன்னிசையில் மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களின் இசையிலும் தனித்துவமாக மிளிர்ந்திருக்கிறது இம்மாதிரியான அசரீரி என்று நான் முன்மொழிந்த பாடல்களில். இங்கே நான் கொடுத்தது சில உதாரணங்கள் தான்.
இந்தப் பாடல்களின் எம்.எஸ்.வி அவர்களின் குரலைத் தாண்டிய உணர்வு ரீதியான பந்தம் தான் நெருக்கமாக இருக்கும். அந்தந்தப் பாடல்களை அவர் கொடுத்த விதத்தை மீளவும் மனத்திரையில் அசை போட்டு உணர முடியும் இதை.
பிற இசைமைப்பாளர் இசையில் நிறையப் பாடிய இசையமைப்பாளர் என்று புகழ் வாய்த்த எம்.எஸ்.வியின் குரல் இளையராஜாவின் இந்த "எரிகனல் காற்றில்" பாடலாக வெளிப்படும் போது இன்றைய அவரின் இன்மையைப் பிரதிபலிக்கும் அசரீரிப் பாடலாகவே என் மனம் உள்ளார்த்தம் கொள்கிறது.
மெல்லிசை மாமன்னருக்கு என் இதய அஞ்சலிகள்
அந்தப் பாடலைக் கேட்க
புகைப்படம் நன்றி : மாலைமலர்
இன்று எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்வுகள் வருவது வெறுமனே கண் துடைப்பல்ல அந்த மாபெரும் கலைஞனுக்கான மானசீக அஞ்சலி என்பதை அதே உணர்வோடு பார்ப்பவர்கள் உய்த்துணர்வார்கள்.
மெல்லிசை மாமன்னர் குறித்த வரலாற்றுப் பகிர்வையோ அல்லது அவரின் பாடல்கள் குறித்த ஆழ அகலத்தையோ பேச இன்றொரு நாள் போதாது. அவர் தந்தது இசைப் பாற்கடல் அல்லவோ?
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்த இறப்புச் சேதி கேட்ட போது என் மனத்தில் இருந்த இசைத்தட்டு இந்த "எரிகனல் காற்றில் உள்ளம் கொள்ளும் போலே" பாடலைத் தான் மீட்டியது.
இசைஞானி இளையராஜா இசையில் "ஒரு யாத்ரா மொழி" படத்துக்காக மலையாளத்தின் மறைந்த பாடலாசிரியர் கிரிஷ் புத்தன்சேரி வரிகளில் ஒலித்த பாடல் இது.
https://soundcloud.com/raja4ever/yerikanalkaattil
இதே பாடலை இளையராஜா பாடும் இன்னொரு வடிவமும் உண்டு. அந்த வகையில் ஒரே பாடலை இரு வேறுபட்ட இசையமைப்பாளர் பாடிய புதுமையும் இந்தப் பாடலில் நிகழ்ந்திருக்கிறது.
தமிழ்த் திரையிசையில் அசரீரிப் பாடல்கள் என்று சொல்லக் கூடிய, கதையோட்டத்தின் பின்னணியில் ஒலிக்கும் பாடலாகவோ அல்லது கதை மாந்தரின் அவலத்தைப் பிரதிபலிக்கும் குரலாகவோ கொணர்ந்தளிக்கும் சிறப்பு எம்.எஸ்.விஸ்வநாதன் குரலுக்கு உண்டு.
"எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே" என்று சிவகாமியின் செல்வன் படத்தில் தன்னுடைய இசையிலாகட்டும், "உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா" என்று வெள்ளி விழா படத்தில் வி.குமாரின் இசையிலாகட்டும் "விடை கொடு எங்கள் நாடே" என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலாகட்டும் மெல்லிசை மன்னரின் குரல் தன்னிசையில் மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களின் இசையிலும் தனித்துவமாக மிளிர்ந்திருக்கிறது இம்மாதிரியான அசரீரி என்று நான் முன்மொழிந்த பாடல்களில். இங்கே நான் கொடுத்தது சில உதாரணங்கள் தான்.
இந்தப் பாடல்களின் எம்.எஸ்.வி அவர்களின் குரலைத் தாண்டிய உணர்வு ரீதியான பந்தம் தான் நெருக்கமாக இருக்கும். அந்தந்தப் பாடல்களை அவர் கொடுத்த விதத்தை மீளவும் மனத்திரையில் அசை போட்டு உணர முடியும் இதை.
பிற இசைமைப்பாளர் இசையில் நிறையப் பாடிய இசையமைப்பாளர் என்று புகழ் வாய்த்த எம்.எஸ்.வியின் குரல் இளையராஜாவின் இந்த "எரிகனல் காற்றில்" பாடலாக வெளிப்படும் போது இன்றைய அவரின் இன்மையைப் பிரதிபலிக்கும் அசரீரிப் பாடலாகவே என் மனம் உள்ளார்த்தம் கொள்கிறது.
மெல்லிசை மாமன்னருக்கு என் இதய அஞ்சலிகள்
அந்தப் பாடலைக் கேட்க
புகைப்படம் நன்றி : மாலைமலர்
Monday, June 24, 2013
மெல்லிசை மாமன்னனுக்கு வயசு எண்பத்தைந்து
ஜூன் 24 இன்றைய தினம் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய எண்பத்தைந்தாவது வயதை எட்டியிருக்கின்றார். தமிழ்திரையிசைச் சாதனையாளர்களில் மூன்று முக்கியமான ஆளுமைகளான மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆ.ரஹ்மான் ஆகியோர் இயங்குகின்ற சூழலில் நாமும் இருக்கின்றோம் என்பதில் ஒரு பெருமை தானாக வந்து சேர்கின்றது. இன்றைக்கு கணினி யுகத்தில் ஏராளம் டெஸ்ட் டியூப் பேபிகள் இசையமைப்பாளர்களாகக் குவிந்து விட்டார்கள் ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசையுலக மாமன்னன் எவ்வளவு பெரிய சாதனையை தசாப்தங்களைக் கடந்து செய்து காட்டிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் பார்க்கின்றார் என்னும் போது சாதாரணர்களாகிய நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொன்றையும் அந்த அடக்கம் காட்டி நிற்கின்றது.
இன்றைக்குப் பன்மடங்கு பெருகிவிட்ட தொழில் நுட்ப முன்னேற்றத்தின் பல படிகள் பின்னோக்கிய காலகட்டத்தில் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏராளம் பாடல்களை விதவிதமான சூழலுக்கேற்ப விதையாக்கிக் கொடுத்தார், இன்றைக்கும் பட்டுப்போகாத நல் விரூட்சம் போல அந்தப் பாடல்கள் ரசிகர் மனதில் எழுந்து நிற்கின்றன. ராமமூர்த்தி அவர்களோடு இணைந்து கூட்டாகப் படங்கள் கொடுத்த போதும், தனித்து இயங்கிய போதும் தன் அடையாளத்தை மிகக் கச்சிதமாக நிறுவியவர். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்துப் பாடல்களைக் கேட்கும் போது எம்.எஸ்.வி தனம் இருக்குமளவுக்கு அடுத்த சகாப்தத்திலும் கொஞ்சப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டவர். மெல்லிசை மாமன்னர் விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்கள் லேசுப்பட்டவர்களல்ல, ஒவ்வொருவருக்கும் தனிப்பாணி, இவர்கள் எல்லோருக்கும் ஏற்ற பாடல்களைப் பண்ணுவதோடு மட்டுமல்ல கவியரசு கண்ணதாசனோடு போராடியும், சந்தோஷித்தும் மெட்டுக் கட்டிய கதைகளைப் புத்தகம் ஆக்குமளவுக்கு அந்தப் பாடல்களுக்குப் பின்னால் ஏராளம் கதைகள். இவையெல்லாம் ஒரு மாமூல் கலைஞனுக்கு கிட்டாத அனுபவங்கள். அந்த வகையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் முழுமையான வரலாறு எவ்வளவு தூரம் பதிவாகியிருக்கின்றது என்பது கேள்விக்குறி. படத்தின் கதையோட்டத்தோடு மாறுபடும் காட்சியமைப்பு வரும்போது ஒரு கட்டியக்காரனாகவும், அசரீரியாகவும் பல படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஒரு பாடகராகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுதவிர காதல் பாடல்கள் சிலவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் பாங்கே தனி. அதற்கு உதாரணமாக மூன்று பாடல்களை இங்கே பகிர்கின்றேன்.
"சொல்லத்தான் நினைக்கிறேன்" படத்தில் வரும் "சொல்லத்தான் நினைக்கிறேன்" பாடலை எஸ்.ஜானகியோடு பாடுகின்றார்.
"நிலவே நீ சாட்சி" பாடலில் "நீ நினைத்தால்" பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியோடு பாடும் பாங்கைக் கேளுங்கள், இவர்தான் பாடியிருக்கிறார் என்று ஊகிக்கமுடியாத அளவுக்கு மிகவும் கட்டையான சுருதியில் பாடுவார். "முத்தான முத்தல்லவோ" படத்தில் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு பாடும் போது எப்படி அநாயசமாக போட்டு வாங்குகிறார் பாருங்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் அளவுக்கு மற்றைய இசையமைப்பாளர்களோடு நேசம் கொண்டு, அவர்களின் படங்களிலும் கெளரவப்பாடகராக வந்துகாட்டும் போது அவரின் இன்னொரு பரிமாணம் வெளிப்படுகின்றது. இவர் அளவுக்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு தொகை இசையமைப்பாளர்கள் இசையில் பாடிய இன்னொரு இசையமைப்பாளரை அடையாளம் காட்டுவது மிகக்கடினம், இரண்டாவது இடத்தில் கங்கை அமரனைச் சேர்த்துக் கொள்ளலாம், அந்த வகையில் தமிழ்த்திரையுலக முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எம்.எஸ்.வி பாடிய பாடல்கள் சில இங்கே,
இளையராஜா - தாயே மூகாம்பிகையே (தாய் மூகாம்பிகை) நல்ல காலம் ( கருவேலம் பூக்கள்)
ஏ.ஆர்.ரஹ்மான் - ஆலாகண்டா (சங்கமம்), விடை கொடு எங்கள் நாடே (கன்னத்தில் முத்தமிட்டால்)
ஜி.வி.பிரகாஷ்குமார் - "மேகமே ஓ மேகமே ( மதராசப்பட்டணம்)
வி.குமார் - உனக்கென்ன குறைச்சல் (வெள்ளி விழா)
பரத்வாஜ் - மெட்டுத் தேடித் தவிக்குது (காதல் மன்னன்)
தேவா - கதிரவனை முத்தமிட்டு கடல் மேலே வித்தை செய்து (வைதேகி வந்தாச்சு)
சந்திரபோஸ் - எந்த வழி போவது (குற்றவாளி)
கங்கை அமரன் இசையில் இனி ஒரு சுதந்திரம் படத்தில் ஒரு பாடல்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் - நட்பு நட்பு (உன்னைச் சரணடைந்தேன்)
சினிமாத் தயாரிப்பாளராக கலைக்கோயில் படம் உட்படக் கையைச் சுட்டுக் கொண்டாலும், குணச்சித்திர நடிகராக ஏற்ற பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியவர் இவர்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இசைஞானி இளையராஜாவும் தனித்தே சாதித்துக் காட்டியவர்கள் ஆனாலும் இவர்கள் இருவரும் புதுமையான முயற்சியாக ஜோடி கட்டி இசையமைத்த படங்கள்
மெல்லத் திறந்தது கதவு ( சிறப்புத் தொகுப்பைப் பார்க்க)
என் இனிய பொன் நிலாவே ( சிறப்புத் தொகுப்பைப் பார்க்க)
செந்தமிழ்ப்பாட்டு
செந்தமிழ்ச் செல்வன்
இரும்புப்பூக்கள்
விஸ்வதுளசி
மெல்லிசை மாமன்னரின் பாடல்கள் ஒவ்வொன்றும், பயன்படுத்திய வாத்திய வகையறாவில் இருந்து பல்வேறு காட்சிமைப்புக்களுக்கேற்ப என்னவெல்லாம் புதுமையான மெட்டையும், குரல் அமைப்பையும் புகுத்தியிருக்கிறார் என்பதையும் ஒரு பெரிய ஆய்வுக்குட்படுத்திப் பார்க்கவேண்டும், ஆண்டுக்கணக்கில் எடுக்கும் ஆய்வாக இது அமைந்து விடும் அளவுக்கு அள்ள அள்ள ஏராளம் புதையல்கள் அவர்தம் பாடல்களுக்குள்ளே ஒளிந்திருக்கின்றன.
மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வாழிய பல்லாண்டு
Labels:
எம்.எஸ்.வி,
சிறப்புப் பாடகர்,
பிறஇசையமைப்பாளர்
Wednesday, September 7, 2011
பாடகர் ஜாலி ஏப்ரஹாம் பேசுகிறார்

கே.ஜே.ஜேசுதாஸில் இருந்து கேரளத்தில் இருந்து தமிழ்த்திரையுலகில் கோலோச்சிய பாடகர்கள் எழுபதுக்குப் பின்னாலும் எண்பதுகளிலும் கணிசமாகவே இயங்கிவந்தார்கள். இவர்களில் பாடகிகள் ஒருபக்கம் இருக்க, பாடகர்களை எடுத்துக் கொண்டால் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், உன்னிமேனன், கிருஷ்ணச்சந்தர் இவர்களோடு ஜாலி ஏப்ரஹாமின் பாடும் தொனி ஒரே அலைவரிசையில் இருப்பதை ஏனோ உணரமுடியும். அதிலும் "உறவுகள் தொடர்கதை" போன்ற பாடல்களில் ஜெயச்சந்திரனா, ஜேசுதாஸா என்ற குழப்பத்தில் ஒரு சில ரசிகர்கள் என்னோடு தர்க்கம் புரிந்தும் இருக்கிறார்கள்.
அதே குழப்பத்தின் ஒரு படியாக ஜாலி ஏப்ரஹாம் இசைஞானி இளையராஜாவுக்காக முதலில் பாடிய "அடடா அங்கு விளையாடும் புள்ளி மானே" (மாயாபஜார் 1995) பாடலை ஜேசுதாஸ் பாடியதாக இசைத்தட்டுக்களுமே வெளியிட்டுத் தம் ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜாலி ஏப்ரஹாம் சிட்னி வருகின்றார் அறிந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஜாலி ஏப்ரஹாமை வானொலிக் கலையகத்துக்கு அழைத்துவரக் கேட்டேன்.
என் சின்ன வயசில் இலங்கை வானொலியின் "பொங்கும் பூம்புனல்" நிகழ்ச்சியில் அடியேனைப் பாரம்மா என்று காலையில் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் பல வருஷங்கள் கழிந்த நிலையில் என் முன்னே வானொலிப் பேட்டிக்கு வந்திருக்கின்றார் என்ற பெருமிதத்தோடு ஜாலி ஏப்ரஹாமுடன் பேட்டியை ஆரம்பித்தேன். தான் பாட வந்த கதையில் இருந்து, தன் இறுதிப்பாடலான ஒரு சின்ன மணிக்குயிலு (கட்டப்பஞ்சாயத்து) பாடலோடு திரையிசைப்பாடலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கிறீஸ்தவ மதத் தொண்டுக்காகத் தன்னை அர்ப்பணித்தது வரையான தன் இசைவாழ்வில் மைல்கல்லாய் அமைந்த பாடல்களைப் பாடிக்கொண்டே தன் வாழ்வின் சுவையான அம்சங்களைப் பகிர்ந்து கொண்டே 30 நிமிடங்கள் கடந்து பயணித்தது அவர் பேட்டி.
பேட்டி முடிந்தபின் "காஷுவலாக பேட்டி அமைஞ்சிருக்கு, ரொம்ப நல்லா இருக்கு"என்று அவர் திருப்தியோடு சொல்லிக் கொண்டே ஆசையாகத் தன் காமராவிலும் எங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டார். கூடவே தன் இரண்டு பாடல் இசைத்தட்டுக்களை அன்பளித்தார்.
ஜாலி ஏப்ரஹாம், நான் வானொலிப் பேட்டி கண்ட கலைஞர்களில் இன்னொரு பண்பட்ட மனிதர்.
பேட்டியைக் கேட்க
Download பண்ணிக் கேட்க
ஜாலி ஏப்ரஹாம் பாடிய சில திரையிசைப்பாடல்கள்
அடியேனைப்பாரம்மா - படம்: வணக்கத்துக்குரிய காதலியே, இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
அடடா அங்கு விளையாடும் புள்ளிமானே - படம்: மாயாபஜார் 1995, இசை: இளையராஜா
அட மன்மதன் ரட்சிக்கணும் - படம்: ஒருதலை ராகம் இசை: டி.ராஜேந்தர்
ஒரு சின்னமணிக்குயிலு சிந்து படிக்குதடி (பவதாரணியோடு) - படம்: கட்டப்பஞ்சாயத்து இசை:இளையராஜா
Labels:
இளையராஜா,
எம்.எஸ்.வி,
சிறப்புப் பாடகர்
Monday, August 22, 2011
"ஏழுஸ்வரங்களுக்குள் இத்தனை பாடல் சிட்னியிலே"

இசை உலகில் நாற்பது ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கும் வாணி ஜெயராம் என்றதொரு பெரும் பாடகியை அவுஸ்திரேலிய மண்ணில் முதன் முதலில் கொண்டு வந்து அவருக்கான ஒரு சிறப்பானதொரு களத்தைக் கொடுப்பது என்பது வெறுமனே "வெறுங்கையால் முழம் போட முடியாது". இப்படியானதொரு இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்றதொரு கூட்டணியும் அதை அரவணித்துக் கொண்டு நடத்தக்கூடிய சிறப்பானதொரு ஒருங்கமைப்பாளர்களும் அமைய வேண்டும். இவையெல்லாம் சரியாக இயங்கினால் மற்றைய எல்லாவற்றையும் ரசிகர்கள் கவனித்துக்கொள்வார்கள். அதுதான் நேற்று சிட்னியில் நிகழ்ந்த இன்னிசை இரவு மூலம் வெளிப்பட்டது.
சிட்னியில் இயங்கும் Symphony Entertainers என்ற அமைப்பு முன்னர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைத்து வந்து ஒபரா ஹவுஸில் அவருக்கான உச்சபட்ச கெளரவத்தையும் நேர்த்தியானதொரு இசை நிகழ்ச்சியையும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியிருந்ததை இங்கே சொல்லியிருக்கின்றேன். அந்த நிகழ்வு கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுக்கு எப்படியொரு மணிமகுடமாக அமைந்ததோ அதேஅளவு கெளரவத்தை இசையுலகில் இத்தனை வருடங்களை ஊதித்தள்ளிய வாணி ஜெயராமுக்கும் நேற்றைய நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் இன்றைய தவிர்க்கமுடியாத பாடகர்களில் ஹரிச்சரண், சின்மயி, விஜய் ஜேசுதாஸ் கூட்டணியோடு வாணி ஜெயராமும் வருகின்றார் என்றபோது ஓடும் புளியம்பழமும் போட எட்ட நிற்குமே இந்தக் கூட்டணி என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பைப் பொய்க்க வைத்தது இந்த நிகழ்ச்சியை அமைக்கவேண்டும் என்று தயாரிப்புப் பணியில் முதன்மையாகச் செயற்பட்ட விஜய் ஜேசுதாஸின் சிறப்பான கூட்டணி.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சி என்றாலே கஷ்டப்பட்டுத் தான் காருக்குள் ஏறிப்போவேன். ஆனால் இது இஷ்டப்பட்ட நிகழ்ச்சி எனவே மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டே இசை நிகழ்வு நடந்த ஹில்ஸ் செண்டருக்குச் சென்றேன். நிகழ்ச்சி சம்பிரதாயப்படி 20 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. "கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்" என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலை கீபோர்ட்டும், சாக்ஸபோன், கிட்டார் சகிதம் சென்னை, கேரளா இசைக்குழுக் கூட்டணி இசைக்க ஆரம்பித்ததும் அந்த மூலப்பாடலில் மோகன் மனதில் நுழைந்த ராதிகா போல மனசு அப்படியே இசைக்கூட்டுக்குள் தாவித் தன்னைத் தயார்படுத்தியது. விஜயாள் என்ற குட்டிப்பிள்ளை வந்திருந்த பாடகர்களை தன் அளவில் குட்டியாக அழகு தமிழில் அறிமுகப்படுத்திவிட்டுப் போக சின்மயி அரங்கத்தில் நுழைந்தார். "ஈழத்தமிழர்களோட இசையுணர்வை நான் எப்பவுமே மெச்சுவேன்" என்ற தோரணையில் அவர் ஆரம்பிக்க "ஆஹா வழக்கமான பஞ்ச் டயலாக்கா" என்று நான் நினைக்க, "நான் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவள், எங்களுக்கும் இலங்கைக்கும் நிலத்தால் நெருக்கம் அதிகம், இலங்கையில் எங்க தமிழர்கள் கொல்லப்பட்டதையும், கஷ்டப்பட்டதையும் அறிந்து நாங்க வேதனைப்பட்டோம், பட்டுக்கிட்டிருக்கோம், என்னோட முதற்பாடலே இலங்கைத் தமிழர்களோட கதைக்கருவோடு வந்த "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தின் பாடல் என்று சொல்லியவாறே ஒரு நிமிட மெளன அஞ்சலியைப் பகிர்ந்தவாறே சின்மயி பாடியது நெகிழ வைத்தது. சின்மயி சிட்னிக்கு வருவது இது இரண்டாவது முறை, கடந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற தன்னுடைய முதற்பாடலைப் பாடாத ஆதங்கத்தில் இருந்தேன். அதை ஈடுகட்டவோ என்னமோ அவரை இரண்டாவது தடவை சிட்னி முருகன் இறக்கியிருக்கின்றான். வைரமுத்து நேசித்து இழைத்த வரிகளை சின்மயி வெறும் குரலைக் கொடுத்தா பாடினார் உணர்வைக் குழைத்தும் அல்லவோ.
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!
இந்த வரிகளைப் பாடும் போது சின்மயி கண்டிப்பாக உள்ளுக்குள் பொருளுணர்ந்து அழுதிருப்பார், பார்த்துக்கொண்டிருந்த நம்மைப் போல.
"என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்" என்று ஒரு குரல், அரங்கத்தின் இண்டு இடுக்கெங்கும் வந்திருந்த கூட்டம் அவரைத் தேட அரங்கத்தின் பின் வாயிலில் இருந்து "தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு" என்று பாடிக்கொண்டே வந்தார் விஜய் ஜேசுதாஸ். ஒபரா ஹவுசில் நடந்த இசை நிகழ்ச்சிக்குத் தந்தையோடு வந்து கொஞ்சம் அடக்கமாகவே இருந்த பையன் இந்த முறை தன்னோடு இரண்டு இளசுகளையும் கூட்டி வந்ததால் குஷி மூடில் இருந்ததை நிகழ்ச்சி தொடங்கி முடியும் வரை காண முடிந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளமைக்குரலின் எச்சம் எஸ்.பி.பி.சரணிடம் இருந்தாலும் அது மட்டுமே போதும் என்று அவர் இருந்து விட்டார். இதுக்கு இது போதும் என்றோ என்னமோ திரையிசையும் அவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பையே கொடுத்திருந்தது. ஆனால் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற மேதையின் மகன் என்பதை விட, கடுமையான விமர்சகரின் மகனாகப் பிறந்து விட்டுக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடமுடியாது என்பதை விஜய் ஜேசுதாஸ் உணர்ந்திருப்பார் என்பதை அவருக்கான பாடல்கள் மட்டுமல்ல, தந்தையின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவர் பாடிச் சிறப்பிப்பதிலும் உணரலாம். விஜய் ஜேசுதாஸுக்கு, சென்னை 28 இல் வந்த "உன் பார்வை மேலே பட்டால்" பாடலுடன் தனக்குக் கிடைத்த பாடல்கள் சிலவற்றைப் படித்தாலும் பெரும்பொறுப்புத் தன் தந்தை வராத வெற்றிடத்தை நிரப்புவது. அதை அவர் சிறப்பாகவே செய்தார்.
"ஹாய் சிட்னி" என்று ஆர்ப்பாட்டமாகக் களமிறங்கிய ஹரிச்சரண், சிட்னி என்றால் யுத்துக்கள் கொட்டிக் கிடக்கும் சீமை என்றோ என்னமோ முதலில் இளசுகளைக் குறிவைத்துத் தான் சிக்ஸர் அடித்தார், பின்னர் போகப் போக நிலமையை உணர்ந்திருப்பார். சிட்னிக்கு முதன்முதலில் வரும் பாடகர்கள் போடும் தப்புக்கணக்கு இதுதான், வெளிநாடு என்றால் ராப், பாப், பப்பரபப்ப வகையறாக ரசிகர்கள் தான் அதிகம் என்று (அல்லது எனக்குத்தான் வயசு போட்டுதோ ;-))
ஹரிச்சரணின் ஸ்பெஷாலிட்டி, கொடுத்த பாட்டை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிக்காமல், அந்தப் பாடலின் ஆரம்பத்தில் மெல்ல மெல்லத் தானே ஆலாபனைகளை இட்டுக்கட்டிப் பின்னர் மூலப்பாடலுக்குத் தாவி அங்கேயும் ஜாலம் செய்து பின்னர் செஞ்சரி அடித்து விட்டுக் களம் திரும்பும் ஆட்டக்காரன் போல நிதானமாகப் பாடலை இறக்கி முடிக்கும் வல்லமை கைவரப்பெற்றிருக்கின்றார்.
"கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்" என்று விஜய் ஜேசுதாஸ் பாட, அரங்கத்துக்கு வந்த வாணி ஜெயராம் கூப்பிய கரங்களுடன். வாணி ஜெயராமோடு ஜோடிகட்டிப் பாடியவர்களில் கே.ஜே.ஜேசுதாஸ் தான் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் என்பது என் கருத்துக்கணிப்பு. இன்னொரு அல்ல மேலும் இரண்டு ஒற்றுமையைக் கண்டேன். ஒன்று மனிதர்களை நேசியுங்கள் என்று மனித நேயக்கருத்தை அழகாக வெளிப்படுத்திவிட்டே தன் கச்சேரியை ஆரம்பித்தது, இன்னொன்று இப்படியானதொரு இசை நிகழ்ச்சி தன் நீண்ட நெடிய இசைவாழ்வில் பத்தோடு பதினொன்று என்று ஒப்புக்குப் பாட்டு நிகழ்ச்சி வைக்காமல், ஒரு அர்ப்பணிப்போடு பள்ளியில் கற்றதை வீடு வந்து ஆசையாகத் தன் பெற்றோரிடம் அழகாகப் ஒப்புவித்து முறுவலிக்குமே சின்னக்குழந்தை? அந்தப் பெரிய மனசு வாணி ஜெயராமிடம் இருந்ததை நிகழ்ச்சி முடியும் வரைக் காணமுடிந்தது. "இன்னும் வருவேன்" என்று சொல்லிக்கொண்டே ஐந்து மணி நேர இசை நிகழ்வில் இதைத் தொடர்ந்தார்.
"ஒரு காலத்தில் இலங்கை வானொலியைக் கேட்டுச் சங்கீதம் கற்றுக்கொண்டவள், Binaca Geet Maala என்ற ஹிந்தித் திரைப்பாடல் வரிசை நிகழ்ச்சியைப் பாடகியாக வருவதற்கு முன்னர் நேசித்துக் கேட்டவள், 1971 ஆம் ஆண்டு வஸந்த் தேசாயின் இசையில் Guddi என்ற ஹிந்தித் திரைப்படத்துக்காக முதலில் பாடி அந்தப் படத்தின் "Bole Re Papihara" என்ற பாடலை இதே Binaca Geet Maala திரைப்பாடல் நிகழ்ச்சியில் கேட்ட போது வாய்விட்டு அழுதேன்" என்று வாணி ஜெயராம் சொன்னபோது நெகிழ்வோடு உணர முடிந்தது. இந்தப் படத்தில் குல்ஸார் எழுதிய மொத்தம் மூன்று பாடல்கள் ஆனால் "Bole Re Papihara"மற்றும் Hum Ko Manki Shakti Dena ஆகிய பாடல்கள் தான் படத்தில் வந்தது என்று சொன்னதோடு நிகழ்ச்சியில் "Bole Re Papihara"பாடலையும் சேர்த்துக் கொண்டார். தென்னிந்தியாவில் இருந்து ஹிந்தித் திரையுலகம் போய்ப் பாடிய முதற்பாடகி வாணி ஜெயராம் என்று சின்மயி சொன்ன புகழாரத்தை ஏற்கிறோம், ஆனால் எனக்கென்னமோ முன்னரேயே தென்னகக் குயில்கள் சென்ற ஞாபகம்.
வாலி எழுதிய "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலோடு ஆரம்பித்தவர், "மேகமே மேகமே", "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" "நானே நானா" (வாலி எழுதியது) என்று அவரின் தனித்துவமான தனிப்பாடல்களை எல்லாம் அள்ளிச் சேர்த்த மகிழ்ச்சியை விட எதிர்பாராத பரிசு தானே எப்போதும் உச்சபச்ச சந்தோஷத்தைக் கொடுக்கும்? அப்படி அமைந்தது தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் அவர் பாடி "என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது" பாடலைப் பாடிய போது கிட்டியது. இப்படியான மேடைக்கு அந்நியமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடிய வகையில் கேளடி கண்மணி படத்தில் வந்த "தென்றல் தான் திங்கள் தான்" பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் முன்னர் ஒபரா ஹவுஸ் நிகழ்ச்சியில் பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
ஒவ்வொரு பாடல்களையும் எழுதியவர், இசையமைப்பாளர் என்று சொல்லி வாணி ஜெயராம் பாடியது இதுவரை நான் மேடை எதிலும் காணாதது. வாணி ஜெயராமே ஒரு நல்ல கவிஞர், அப்படி இருக்கையில் எப்படிப் பாடலாசிரியரைத் தவிர்ப்பார்? வாணி ஜெயராம் தான் கவிதை எழுதுவேன் என்றதோடு பகிர்ந்த கவிதைகளில் "கவிதை" இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் இப்படிக் கவிஞர் பெயர் சொல்லிப்பாடியவர் "என்னுள்ளில் எங்கோ" என்ற பாடலைக் கங்கை அமரன் எழுதினார் என்ற போது எனக்குப் பின் வரிசையில் இருந்தவர் உணர்ச்சிவசப்பட்டுப் பக்கத்தில் இருந்தவரிடம் "கங்கை அமரன் இளையராஜாவின்ர son" என்றபோது கங்கையைத் தேடினேன் குதிக்க.
ஒரு பாடகிக்கு ஏராளம் நல்ல நல்ல பாடல்கள் வாய்க்கலாம் ஆனால் பாடகி என்ற கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுக்கும் நல்வாய்ப்பு எத்தனை பாடகிகளுக்கு வரும்? அப்படி அமைந்த வாணி ஜெயராமின் முத்திரை "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" என்ற பாடலைப் பாடும் போது
"காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்"
என்ற வரிகளை அவர் அழுத்திப் பாடியபோது இத்தனை நாளும் இவ்வளவு தூரம் அனுபவிக்காமல் கற்பனை சந்தோஷத்தில் இருந்த உணர்வில் கண்ணதாசனை நினைக்க, வாணியோ கண்ணதாசனைப் பற்றிப் பேசினார்.
"நாளைக்கு உங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் நாளை பத்திரிகையில் வரும் "என்று குழந்தை உள்ளத்தோடு என்னிடம் சொன்ன கண்ணதாசன் பாடகிகள் என்றளவில் என்னைப் பற்றி மட்டுமே தனது "சந்தித்தேன் சிந்தித்தேன்" தொடர் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" இதை எங்கே கேட்டாலும் அங்கே நின்று முழுப்பாடலையும் கேட்டுத்தான் அங்கிருந்து விலகுவாராம் கண்ணதாசன். எனக்கு வாசிக்கப் பிடிக்கும் என்பதால் தான் எழுதிய 43 நூல்களைக் கொடுத்திருக்கின்றார் என்று கண்ணதாசனைப் புகழந்தார்.
"அபூர்வ ராகங்கள்" படத்தின் பாடல் ஒலிப்பதிவு நடக்கும் நாட்களில் காலையில் சீக்கிரமாகவே பாடற்பதிவு ஸ்டூடியோவுக்குப் போய் விட்டோம் என்று நினைத்தால் எங்களுக்கு முன்னார் வெகு சீக்கிரமாவே எம்.எஸ்.விஸ்வநாதன் வந்திருப்பார். அவ்வளவுக்கு பங்சுவாலிட்டி நிறைந்தவர்களோடு பணியாற்றியதெல்லாம் மறக்கமுடியாத காலங்கள், என்னோட முதல் இசையமைப்பாளர் வஸந்த் தேசாய் முதற்கொண்டு பணியாற்றிய இசையமைப்பாளர்கள் வெறும் இசையை மட்டுமே எனக்குப் போதிக்கல" என்று அந்தப் பொற்காலத்தை நினைவுபடுத்தினார் வாணி ஜெயராம்.
"அந்தமானைப் பாருங்கள் அழகு" என்று விஜய் ஜேசுதாஸோடு வாணி ஜெயராம், கொடுத்த ஜேசுதாஸ் - வாணி ஜெயராம் பாடல்கள் எல்லாமே முத்துக்கள். குறிப்பாக "சிவாஜி கணேசன் நினைவு நிகழ்வுக்காக வை.ஜி.மகேந்திரன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதன்முதலில் பாடிவிட்டு இப்போது படிக்கிறேன்" என்றவாறே விஜய் ஜேசுதாஸ் வாணியோடு பாடிய "கங்கை யமுனை இங்குதான் சங்கமம்" என்ற இமயம் படப்பாடல் சொர்க்கம். ஒருப்பக்கம் ஜேசுதாஸ் பாடல்களை தனயன் பாட, இன்னொரு பக்கம் "மழைக்கால மேகம் ஒன்று" (வாழ்வே மாயம்)," ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்" (நீயா) போன்ற பாடல்களை ஹரிச்சரணோடு பாடியதும் இணையாக ரசிக்க வைத்தது.
"உனக்கு கல்யாணம் ஆச்சா"என்று வாணி கேட்க
"இன்னும் இல்லை" என்று ஹரிச்சரண் சொல்ல
"இளமை ஊஞ்சலாடுகிறது" என்று சொல்லி நிறுத்தி விட்டு "அடுத்துப் பாடப்போற படம் பேர் சொன்னேன்" என்று குறும்பாகச் சொல்லி
"ஒரே நாள் உனை நான்" என்ற பாடலை வாணி ஜெயராம், ஹரிச்சரணோடு பாடியபோது அந்தச்
"சங்கமங்களில் இதம் இதம்" ஆக மனது இருந்தது.
"கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்" என்ற பாடலுக்கு ஹரிச்சரண் ஜதி சேர்க்க, வாணியின் வயதை மறைத்தது குரல்.
"மேகமே மேகமே பாடல் சிவாஜி கணேசன் சாருக்குப் பிடிச்ச பாட்டு, அந்தப் பாட்டு வந்த நாட்களில் இரவில் இந்தப் பாட்டைக் கண்டிப்பாகக் கேட்டுவிட்டுத் தான் தூங்குவார்" என்றார் வாணி.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, சங்கர்-கணேஷ், கங்கை அமரன் என்று தேடித் தேடி ஏறக்குறையத் தன்னுடைய எல்லாப்பாடல்களையும் பாடி அழகு சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்காகப் பாடிய "சுகம் சுகம்" (வண்டிச்சோலை சின்ராசு) பாடலையும் இணைத்திருக்கலாமோ?
விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் கூட்டணி சேர்ந்தால் அடிப்பொளி தான், கலகலப்பாகப் பேசும் கலையும் சபையோரோடு அந்நியப்படாத நிகழ்ச்சி வர்ணனையும் சின்மயி இன் சொத்து. ஹரிச்சரணுக்கு வரமாக அமைந்த யுவனின் பாடல்கள் சமீபத்திய "ராசாத்தி போல" பாடல்களில் இளசுகளோடு பழசுகளும் இணைந்து தாளம் தட்டி ரசித்தது.
"ஏ ஹே ஓ ஹோ லாலலா" என்று விஜய் ஜேசுதாஸ் பாட திடீரென்று சைக்கிளில் மேடையில் ஓடி வந்து "ஏ அது நான் பாடப்போகும் பாட்டு என்னோட பேஃவரிட்" என்று ஹரிச்சரண் விடாப்பிடியாக நிற்க விஜய் ஒதுங்க "பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்" பாடல் ஹரிச்சரணின் புது ப்ளேவரில். ஆனால் இந்தப் பாட்டை மட்டும் விஜய் ஜேசுதாசுக்கு இட ஒதுக்கீடு செய்திருந்தால் "பழமுதிர்ச்சோலை எங்களுக்கும் சேர்த்துத் தான்" என்று நானும் பாடியிருப்பேன் மனசுக்குள்.
"லேசாப்பறக்குது" என்ற வெண்ணிலா கபடிக்குழு பாடலின் ஹிட் ஐத் தொடர்ந்து கார்த்திக், சின்மயி காம்பினேஷன் இருக்கணும் என்று குள்ளநரிக்கூட்டம் படத்திலும்"விழிகளிலே விழிகளிலே" பாடலை கடம் புகழ்விக்கு விநாயக்ராம் மகன் செல்வகணேஷ் "விழிகளிலே விழிகளிலே" பாட்டுக்கொடுத்ததாகச் சொல்லி ஹரிச்சரணோடு பாடினார். "லேசாப்பறக்குது" பாடல் மேடையில் லேசாகப் பாடமுடியாத சங்கதி, சின்மயி அதை மூலப்பாடலில் மிகவும் சன்னமாகப் பாடிச் சிறப்பித்திருப்பார். அதை ஈராயிரம் பேர் கொண்ட சபையில் பாடுவது சவால், அதைச் சமாளித்துப் பாடினார்.
"சத்யம் தியேட்டரில் வைத்து எனக்கு ஒரு பாட்டு சான்ஸ் கொடுங்களேன்" என்று ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்க அவர் கொடுத்த "வாராயோ வாராயோ காதல் கொள்ள" ஆதவன் படப்பாடல் எனக்கு முதற்பாடல் கொடுத்த புகழுக்கு மேலாக விருதுகளைக் கொடுத்துப் புகழ் கொடுத்தது என்றவாறே ஹரிச்சரணோடு பாடினார், மேடையில் வைத்து இன்னொரு விருது கொடுத்திருக்க வேண்டும். அவ்வளவு அழகு, பாட்டைச் சொன்னேன் சார்.
விஜய் ஜேசுதாஸ் உடன் "சஹானா சாரல் தூவுதோ" பாடலைப் பாடுமுன் "நீங்க தலைவா என்று போடும் சத்தம் சென்னை வரை கேட்கணும்" என்று சின்மயி தன் தலைவர் பற்றை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கிளிமாஞ்சாரோ பாடலும் இதே கூட்டணியில். பெரியம்மா பையன் உதித் நாராயணணை விட விஜய் ஜேசுதாஸை வைத்தே அந்த சஹானா சாரல் தூவுதோ டூயட் பாடலையும் ரஹ்மான் கொடுத்திருக்கலாம் என்ற அளவுக்கு இருந்தது விஜய் ஜேசுதாஸின் குரலினிமை.
ஹரிச்சரண்-விஜய் ஜேசுதாஸ்- சின்மயி மூன்றுபேரும் சேர்ந்து அன்றிருந்து இன்றுவரை பாடல்களைக் கோர்த்துக் கொடுத்த unplugged என்ற தொகுப்பில் ஏதாவது ஒரு தீம் ஐ முன்னிலைப்படுத்தியிருக்கலாம். " தாய்க்கு நீ மகனில்லை"(உள்ளத்தில் நல்ல உள்ளம்) என்ற தியாகம் ததும்பும் பாடலோடு திடீரென முளைத்த "கனவில் வடித்து வைத்த சிலைகள்" (விழியே
கதையெழுது) பாடலும் "வாய்மொழிந்த வார்த்தை யாவும்" (சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என்ற கோர்வையும் பொருந்தாமல் தனித்துத் தெரிந்தன. அதிலும் "போறாளே பொன்னுத்தாயி" பாடல் ஸ்வர்ணலதாவுக்கு மட்டுமே எழுதி வைத்த ஆஸ்தி, சின்மயி இந்த unplugged தொகுப்பை அடுத்த மேடைக்குக் கொண்டு செல்லும் போது பாடல்களில் பரிசீலனை ப்ளீஸ்.
வழக்கமாக இந்தியாவில் இருந்து வரும் இசைக்குழு கையோடு நாலைந்து சீடிக்களையும் கொண்டு வரும். கீ போர்ட் வாசிப்பவரின் கையசைப்பு மட்டும் இருக்கும் ஆனால் என்ன அதிசயம் பின்னணியில் இசை இருக்கும். இப்படியான அற்புதங்கள் எதுவுமில்லாமல் தேர்ந்ததொரு இசைக்குழு கூடவே பயணித்தது சிறப்பு. குறிப்பாகப் புல்லாங்குழலையும் சாக்ஸபோனையும், இன்ன பிற குழல் வாத்தியங்களையும் நொடிக்கொரு தடவை மாற்றி மாற்றி வாசித்த அந்த சகலகலா இளைஞனுக்குப் பாராட்டுக்கள். இவ்வளவு இருக்கும் போது நாமும் நல்லா இயங்கணும் என்ற எண்ணத்தில் அரங்கத்தின் ஒலியமைப்பும் பங்கு போட்டுக்கொண்டது.
நிகழ்ச்சி இப்படிக் கலகலப்பாகப் போய்க்கொண்டிருக்கும் போது மேடையில் ஒரு சிறுமி மைக்குடன் தோன்றினாள். சின்மயி பாடும் போது பக்கத்தில் நின்று அவரைப் போலப் பாடுவது போலப் பாவனை, சின்மயி தன் குரலை மேலே உயர்த்தித் தலையை மேலே வானத்தை நோக்குமாற்போலப் பாட அதே மாதிரிப் பாவனையில் அவளும். குரு படத்தில் வந்த "மையா மையா"பாட்டை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே சின்மயியிடம் கேட்டு வைத்து விட்டாள் அவள். சின்மயி "மையா மையா" பாடலைப் பாட,
மைக்கை ஒருகையில் வைத்துக் கொண்டு மற்றக்கை அசைத்து தன் தந்தையை அழைக்கிறாள். அவரும் வருகிறார். தந்தை விஜய் ஜேசுதாஸ், அந்தக் குட்டி அவரின் மூன்று வயது மகள் அமயா. அந்தச் சுட்டிக் குழந்தைதான் இடைவேளைக்குப் பின்னான நிகழ்ச்சியின் ஹீரோயின். தன் தந்தையோடு "அன்னாரக்கண்ணா வா" பாடலைப்பாடுவதும் அவர் நிறுத்த தானும் நிறுத்துவதும், தந்தை பாட மகள் ஆடுவதுமாக ஒரே கொட்டம் தான். சும்மாவா புலிக்குப் பிறந்த பேத்தி ஆயிற்றே.
சிட்னியில் நடந்த இந்த நிகழ்ச்சி ஐந்து மணி நேரங்களைக் கடந்தது, வாணி ஜெயராம், விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் என்று வந்த பாடகர்கள் தம் முழுமைக்குமான வெளிப்பாட்டைக் காட்டிச் சிறப்பித்தது. அந்த வகையில் இது மறக்கவொண்ணா இசை விருந்து அவர்களுக்கும் எங்களுக்கும்.
Labels:
இளையராஜா,
எம்.எஸ்.வி,
நிகழ்வு,
பேட்டி
Monday, January 31, 2011
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" - பாடல் பிறந்த கதை
கவிஞர் முத்துலிங்கத்துடனான என் வானொலிப் பேட்டியின் ஒரு பகுதியை முன்னர் தந்திருந்தேன். தொடரின் அடுத்த பகுதியில் "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" பாடல் பிறந்த கதையைச் சொல்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.பொன்மனச் செம்மல் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது வழிகாட்டலிலே நல்லதொரு அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவருடைய ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்திருந்தீர்கள், எம்.ஜி.ஆர் அவர்களுடனான அறிமுகம் உங்களுக்கு எப்படி அமைந்திருந்தது?
நான் அப்போது அலையோசை பத்திரிகையில் இருந்தேன். நான் அடிப்படையிலேயே எம்.ஜி.ஆர் ரசிகன். அப்போது அவர் கட்சி ஆரம்பித்திருந்த நேரம் , பேச்சாளனாகவும் இருந்தேன். பத்திரிகைப் பேட்டிக்காக நான் அப்போது அவரைச் சந்திப்பேன். அதற்கு முன்னரேயே நான் சினிமாவில் பாட்டு எழுதிட்டேன். பின்னர் அலையோசை பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதால் அந்தப் பத்திரிகையில் இருந்து விலகினேன். அந்த நேரம் அவரின் அலுவலத்துக்குச் சென்றபோது,
"நீங்க பத்திரிகையை விட்டு விலகிட்டிங்களாமே, கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக்குங்க" என்று சொன்னார்.
"இல்லை பணம் வேண்டாம் தலைவரே அதுக்குப் பதிலா வேலை கொடுங்க" என்றேன்.
"வேலை கொடுக்கும் போது கொடுக்கிறேன், இப்போ வாங்கிக்க" என்றார்.
"இல்லை வேண்டாம்" என்று மறுத்திட்டேன். அதுக்கப்புறம் தான் அவர் தன்னோட படங்களுக்குத் தொடர்ந்து பாட்டு எழுத வாய்ப்புக் கொடுத்தார். அப்படி அவருக்காக எழுதிய முதற்படம் உழைக்கும் கரங்கள்.
உழைக்கும் கரங்கள் திரையில் எம்.ஜி.ஆருக்காக முத்துலிங்க எழுதிய முதற்பாட்டு
"கந்தனுக்கு மாலையிட்டாள்" - பாடியவர் வாணி ஜெயராம்
உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் என்று எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எழுதியிருக்கீங்க, ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் "பிள்ளைத் தமிழ் பாடுகின்றேன்" அந்த அருமையான பாடல் பிறந்ததற்குப் பின்னால் சுவாரஸ்யமான தகவல் உண்டா?
அப்போல்லாம் எனக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுத வராது, மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து தான் பாட்டு எழுதுவோம். இப்பல்லாம் கேசட் கொடுத்து எழுதச் சொல்லிடுவாங்க.
முதலில் அந்தப் பாட்டின் சிச்சுவேஷனைச் சொல்லிடுறேன். எம்.ஜி.ஆர் பெண்களுக்குக் கணவராக நடிப்பார். அதாவது ஒரு பெண்ணின் உண்மையான கணவன், இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட நேரத்தில் சொந்த மனைவிக்குப் பிறந்த குழந்தை இறந்து போகும். அந்தப் பிள்ளையை அடக்கம் பன்ணி விட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிப்பாரே அந்த வீட்டுக்கு வருவார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்த நாள். அந்தக் குழந்தையை வாழ்த்திப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. தன்னுடைய சொந்தக் குழந்தை இறந்து போனதை நினைத்துப் பாடுவாரா, இல்லை இந்தக் குழந்தைக்குப் பிறந்த நாள் என்று சொல்லி வாழ்த்திப் பாடுவாரா அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலை, அதை மனதில் வைத்துக் கொண்டு இரண்டும் கலந்து வருவது போல் பாடல் வரவேண்டும்.
அதனால நான் முதலில் எழுதினேன்,
"நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது
நினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது
என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது
என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது
எது நடக்கும் எது நடக்காது இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது இது இறைவனுக்கும் புரியாது"
அப்படி ஒரு பல்லவி எழுதினேன், மியூசிக் டைரக்டர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆனால் எம்.ஜி.ஆரிடம் கொண்டு போகும் போது மூணு நாலு பல்லவி எழுதி அதுக்குத் தொடர்பா வர்ர மாதிரி சரணம் எழுதியும் காட்டணும். அதனால இரண்டு மூன்று பல்லவி எழுதிட்டேன்.
"ஆட்டி வைத்த ஊஞ்சல் அது முன்னும் பின்னும் ஆடும்" அப்படின்னு இன்னொரு பல்லவி.
இன்னும் மூணு பல்லவி வேணும் என்று எழுதச் சொன்னாங்க. நான் அதே இடத்தில் இருந்தா கற்பனை வராது வெளியே கொஞ்சம் நடந்து போட்டு வரேன் என்று மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணரிடம் சொல்லிவிட்டு சிவாஜி கணேசன் வீடு இருக்கும் தெற்கு போக்கு ரோடு இருக்கும் பக்கமா நடந்து போயிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்பவும் எனக்குச் சரியா ஒண்ணும் வரல. அந்த நேரம் எனக்குப் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது சடன் பிரேக் போட்டு. காரின் உள்ளே மறைந்த கவர்ச்சி வில்லன் கண்ணன், நடிகர் ஐசரி வேலன் உள்ளே இருந்தாங்க.
"உங்க பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்தது என்று தலைவர் கிட்ட (எம்.ஜி.ஆர்) பாவலர் முத்துசாமி சொல்லிக்கிட்டிருந்தாரு. முத்துசாமி தி.மு.க காலத்தில் அமைச்சரா இருந்தவரு பின்னர் அண்ணா தி.மு.க வைச் சேர்ந்திருந்தார். அவர் இப்படி உங்கள் பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்ததாக தலைவரிடம் சொன்னதாக அவர் சொல்லவும் எனக்கு உடனே பொறி தட்டியது. நான் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாக வைத்துத் தான் எம்.ஜி.ஆர் பிள்ளைத் தமிழ்ன்னு ஒரு குறுங்காப்பியம் எழுதியிருந்தேன். இங்கேயும் எம்.ஜி.ஆர் ஒரு பிள்ளைக்காகத் தான் பாடுவார். அப்படிப் பிள்ளைக்காகப் பாடுவதாக
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
என்று பல்லவியை எழுதி விட்டு விஸ்வநாதன் அண்ணனுக்கு பாடிக்காண்பிக்க அதுக்கு ட்யூன் போட்டார்.அதுக்கு லிங்கா வரக்கூடியமாதிரி சரணமும் அமைத்துப் பாடலாக்கி அதை எம்.ஜி.ஆரிடம் காண்பித்தோம். அப்போ சத்யா ஸ்டூடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங் நடந்துக்கிருந்துச்சு. அப்போது டைரக்டர் ஏ.பி.நாகராஜன், டைரக்டர் நீலகண்டன், டைரக்டர் கே.சங்கர் எல்லாரும் இருந்தாங்க. அப்போது போட்டுக் காமிச்சோம். அப்போது ஏ.பி. நாகராஜன் இந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பாட்டு நல்லாயிருக்கேன்னு "நெஞ்சுக்குள்ளே அன்பு" என்று தொடங்குற பாட்டைச் சொன்னார். இன்னொருத்தர் "ஆட்டி வைத்த ஊஞ்சல்" அப்படித் தொடங்குற பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னார். எல்லாத்தையும் கேட்ட எம்.ஜி.ஆர் "நீங்க சொல்றதெல்லாம் நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத் தான் பாப்புலராகும் ரொம்ப கேட்சிங்கா இருக்கு" என்று சொன்னார். அதாவது சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் எம்ஜிஆர் புரிந்தவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.
"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" - ஊருக்கு உழைப்பவன் திரைக்காக கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல்
Labels:
எம்.எஸ்.வி,
பாடலாசிரியர்,
பேட்டி
Monday, January 24, 2011
கவிஞர் முத்துலிங்கத்தின் "பாடல் பிறந்த கதை" - தஞ்சாவூரு சீமையிலே
ஒரு காலத்தில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வருவதற்கு முன்னர் வானொலி உரையாடல் நிகழ்ச்சிகளில் நேயராக நான் பங்கு பெறும் போதெல்லாம் ஏதோ ஒரு பாட்டு எப்படி உருவானது என்று குறித்த பாட்டின் பின்புலம் குறித்து எனக்குத் தெரிந்த செய்திகளைப் பகிர்வேன். பின்னர் என் வானொலி நிகழ்ச்சியாக அமைந்ததும் "பாடல் பிறந்த கதை" தான்.கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் பாடல் பிறந்த கதை என்ற நூலை அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்த போது வாங்கி ஒரே மூச்சில் வாசித்திருந்தேன். அந்த நூலில் வெறுமனே அவரின் திரையுலக அனுபவங்கள் மாத்திரமன்றி அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரையான திரையிசைக் கவிஞர்களின் வாழ்வில் நடந்த சில சுவையான அனுபவங்களையும் அதில் சொல்லியிருந்தார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இந்த ஆண்டு "முத்து மணி மாலை" என்னும் புதிய நிகழ்ச்சியைப் படைக்கவெண்ணி அதில் ஒரு பகுதியாக பல வருஷங்களுக்குப் பின் "பாடல் பிறந்த கதை" என்ற அம்சத்தையும் சேர்த்தேன். அப்போது முதலில் நினைவுக்கு வந்தவர் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள். அவரை அழைத்தபோது மறுப்பேதும் இன்றி ஒரு சில நாட்களில் வானொலி நேர்காணலைச் செய்வதற்கு இணங்கினார். கவிஞர் முத்துலிங்கத்தில் தமிழ் மீதான காதல், திரையுலகிற்கு அவர் வந்த சூழ்நிலையில் ஆரம்பித்து 50 நிமிடங்களுக்கு மேல் ஒரு அழகிய தமிழ் விருந்தைத் தந்தார். அவற்றைத் தொடர் பகுதியாக வானொலியில் ஒலிபரப்பும் அதே வேளை றேடியோஸ்பதி வாயிலாகவும் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தொடர்ந்து பாடலாசிரியர் முத்துலிங்கம் பேசுவதைக் கேட்போம்.
வணக்கம் கவிஞர் முத்துலிங்கம் அவர்களே
வணக்கம் ஐயா
ஒரு பாடலாசிரியராக அன்றும் இன்றும் பிரபல்யத்தோடு விளங்கும் நீங்கள் சென்னையில் வந்து இந்த இடத்தைப் பிடிப்பதற்கு முன் உங்கள் இளமைப்பிராயம், குறிப்பாக தமிழ் மீதான காதல் உங்களுக்கு எப்படி வந்ததென்று சொல்லுங்களேன்.
தமிழ் நாட்டில் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கடம்பன்குடி என்கின்ற கிராமம். சொந்தத் தொழில் விவசாயம் தான். சிவகங்கை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். படிக்கும் போதே தமிழ் மீதான ஆர்வத்தினால் இலக்கண இலக்கியங்களை எல்லாம் கற்றுக்கொண்டேன். எனக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தியது பள்ளியிலே ஒன்பதாம் வகுப்பில் மனப்பாடச் செய்யுளாக இருந்த கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் தான். இந்த அளவுக்குப் படித்ததே சிறப்பாக இருக்கிறதே என்றெண்ணி நூலகங்களுக்குச் சென்று கம்பராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் முழுமையாகப் படித்தேன். அர்த்தம் தெரியாமல் ஓசை இன்பத்தால் ஈர்க்கப்பட்டு நான் படித்தேன். அதன் பிறகு தான் அவற்றின் பொருளுணர்ந்து படித்தேன். அதன் வழியாக எனக்குத் தமிழார்வம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் பத்திரிகைகளுக்குக் கதை கட்டுரை எல்லாம் அனுப்புவேன். கவிஞர் சுரதா அவர்கள் "இலக்கியம்" என்ற கவிதைப் பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகையில் தான் என் முதற் கவிதை வெளிவந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் என் கவிதை ஆர்வம் வளர்ந்தது. அதுபோக என் தாயார் தாலாட்டுப் பாடல்களை என் தம்பி தங்கைகளுக்குப் பாடும் போது இளவயதில் கேட்டவகையில் அதன் மூலமும் என்னுடைய கவிதை உணர்வு உள்ளத்திலே எழுந்தது.
அப்போது கண்ணதாசன் தென்றல் என்றொரு பத்திரிகை நடாத்தினார். அதில் வெண்பாப் போட்டி ஒன்று வைத்தார். அதே சமயம் கவிஞர் சுரதா இலக்கியம் என்ற பத்திரிகையில் குறள் வெண்பாப் போட்டி வைத்தார். அதில் கேள்வி ஒன்று கேட்டார்
"பறக்கும் நாவற்பழம் எது கூறுக?" என்ற அந்தக் கேள்விக்கு நாம் குறள் வெண்பாவில் எழுதணும்.
"பறக்கும் நாவற்பழம் எது கூறுக? இது அகவல், ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது
நான் எழுதினேன்,
"திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே
பறக்கின்ற நாவற்பழம்"
அப்படின்னு எழுதினேன்.
இதற்கு எனக்கு முதற்பரிசு கிடைத்தது.
அதன் பிறகு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த பிற்பாடு நான் பத்திரிகைத் துறையில் தான் முதலில் பணியாற்றினேன் முரசொலி, அலையோசை ஆகியவற்றில் எல்லாம். அப்போது ஊரில் இருக்கும் காலத்திலே எல்லாம் திரைப்பாடப் பாடல்களை நாமும் எழுத வேண்டும், அவை திரையில் வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் சென்னைக்கு வந்தபிறகு அதற்கான முயற்சி செய்தேன். கதாசிரியர் பாலமுருகன் என்பவரால் தான் திரைப்படத்தில் எனக்குப் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இயக்குனர் மாதவனிடம் எனக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். "பொண்ணுக்குத் தங்கமனசு என்ற திரைப்படத்தில் தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாடல்.
அந்தப்பாடலைப் பற்றிச் சொல்லும் போது இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக அங்கீகரிக்கப்பட முன்னர் அவர் இசையமைக்க நீங்கள் எழுதிய பாடல் என்ற பெருமையும் இருக்கின்றது என்று அறிந்துகொண்டேன் அப்படித்தானே?
இதோ அந்த "தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா" என்ற அந்தப் பாடலை எஸ்.ஜானகி.பி.எஸ்.சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடுகின்றார்கள். இந்தப் பாடல் எண்பதுகளின் பிரபலக் குயில்களில் ஒன்றாக விளங்கிய பி.எஸ்.சசிரேகாவின் முதற்பாட்டு என்பதும் கொசுறுத் தகவல்

முத்துலிங்கம் இன்னும் பல பாடல் பிறந்த கதைகளைச் சொல்லுவார்.....
Tuesday, November 16, 2010
பி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்
ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப்படித் தான் ஆரம்பித்தது இன்றைய நாளும். பியானோ இசைக்கிறது, மெல்ல மெல்ல அந்தப் பியானோ இசை தன் ஓட்டத்தை நிறுத்த முயலும் போது ஊடறுத்து வருகின்றது "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்" இசைக்குயிலின் குரலைக் கேட்டுப் புழகாங்கிதம் அடைந்த தோரணையில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆர்ப்பரிப்போடு பியானோ இசை சேர, இந்த முறை சாக்ஸபோனும், கூடவே மெல்லிசை மன்னரின் தனித்துவமான வாத்திய அணிகளான கொங்கோ தாள வாத்தியம் அமைக்க, மற்ற இசைக்கருவிகளும் அணி சேர்க்கின்றன.
உன்னை ஒன்று கேட்பேன் என்று சுசீலா வரிகளுக்கு இலக்கணம் அமைக்கையில் உற்றுக் கேட்டுப் பாருங்கள் கூடவே ஒரு வயலின் அதை ஆமோதிப்பதைப் போல மேலிழுத்துச் செல்லும்."தனிமையில் வானம்" "சபையிலே மெளனம்" என்று ஒவ்வொரு ஹைக்கூ வரிகளுக்கும் இடையில் கொங்கோ வாத்தியம் இட்டு நிரவியிருக்கும் அந்த இடைவெளியை.
இந்தப் பாடல் ஒன்றே போதும் மெல்லிசை மன்னர் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துக் காட்ட
இருள் சூழந்ததும் கொல்லையில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது கூடவே அண்ணனோ, அம்மாவோ துணைக்கு வரவேண்டிய சிறு பருவம் அது. அந்த நேரத்தில் நிகழ்ந்து நினைவில் ஒட்டாத நினைவுகள் ஏராளம். ஆனால் தசாப்தங்கள் பல கழிந்தும் இன்னும் மனதில் தார் போல ஒட்டிக் கொண்டிருக்கும் நினைவுகளில் அடிக்கடி மீண்டும் மழைக்குப் பூக்கும் காளான் போலத் துளிர்த்துப் போவது " அத்தா.....ன் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படி சொல்வேனடி" இலங்கை வானொலியின் இரவின் மடியில் நிகழ்ச்சியில் சுசீலா கிசுகிசுக்கிறார்.
அப்படியே வெட்கம் குழைத்த குரல் அதில் தொக்கி நிற்கும் சேதிகள் ஆயிரம் சொல்லாமல் சொல்லும். இங்கேயும் இசைக்குயில் சுசீலாவுக்கு மாற்றீடைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. "கிறுக்கா", "லூசுப்பையா" என்றெல்லாம் ஏகபோக உரிமை எடுத்துப் பாடும் இந்த நாள் அதிரடிப்பாடலுக்கு முழு நேர்மறை இலக்கணங்களோடு நாணம் கலந்து குழைத்த மெட்டு. குறிப்பா முதல் அடிகளைச் சுசீலா பாடிய ஒரு நிமிடம் கழித்து வரும் இடையிசையைக் கேளுங்கள் அப்படியே குறும்பு கொப்பளிக்குமாற்போலச் சீண்டிப்பார்க்கும் இசை. "அத்தான் என்னத்தான்" மாலை நேரத்து வீட்டு முற்றத்தில் ஈரும் பேனும் எடுக்கையில் நம்மூர்ப்பெண்கள் முணுமுணுத்துப் பாடியதை அரைக்காற்சட்டை காலத்தில் கேட்ட நினைவுகள் மங்கலாக.
பாடல்கள் மீது நான் கொண்ட நேசத்தை மட்டும் புரிந்து கொண்டவர்கள் தமது உறவினர்களின் வீட்டுத் திருமணங்களுக்கு அணி சேர்க்க என்னிடம் திருமணப்பாடல்களைச் சேகரித்துத் தருமாறு கேட்பார்கள். அப்போது நான் ஏதோ ஒரு இயக்குனர் இசையமைப்பாளர் ஒருவரிடம் சிச்சுவேஷன் சாங் போடுங்க என்று கேட்ட தோரணையில் அதீத ஆர்வம் மேலிடப் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துக் கொடுப்பேன். ஆனால் "இதெல்லாம் சரிவராது, நல்ல குத்துப்பாட்டு ரெக்கார்ட் பண்ணித் தாருங்கள்" என்று என் தொகுப்பை நிராகரிக்கும் போது அங்கீகரிக்கப்படாத புது இசையமைப்பாளரின் உணர்வோடு மனதைத் தொங்கப் போடுவேன். ஆனால் சிலபாடல்கள் நான் ரசிக்க மட்டுமே என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பதுண்டு. அந்த ரகமான பாடல் தான் இது."வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி" என்று நிதானித்து ஆரம்பிக்கும் இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பியுங்கள். அப்படியே பிரமாண்டமானதொரு மனம் ஒருமித்த கல்யாண வீட்டை உங்கள் மனம் மெல்ல மெல்லக் கட்டத் தொடங்கும். ஒவ்வொரு வரிகளும் அந்தக் காட்சிப்புலத்தை உணர்ந்து பாடும் வரிகளாக அழுத்தமாகப் பதித்திருப்பார் இசையரசி பி.சுசீலா.
இங்கும் வழக்கமான எம்.எஸ்.வியின் ஆவர்த்தனங்கள் தான், ஆனால் மணமேடையின் காட்சிப்புலத்துக்கு இயைவாக ஒலிக்கும் நாதஸ்வர மேள தாளங்கள் பொருந்திப் போகும் இசைக் கூட்டணி.
"காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லிச் சொல்லி " மல்லுவேட்டி மைனர் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றாலும் நீங்கள் அதிகம் கேட்டிராத பாடல் வகையறா இது என்பது எனக்குத் தெரியும், அதைப் போல நான் அடிக்கடி கேட்கும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாடலை அதிகம் கேட்டு நான் வளரக்காரணம் சென்னை வானொலியில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஞாயிறு தோறும் நான்கு மணி வாக்கில் வந்து போன "நேயர் விருப்பம்" நிகழ்ச்சி. ஷெனாய் வாத்தியத்தை சோகத்துக்குத் தான் சங்கதி சேர்த்து திரையில் கொடுப்பார்கள். விதிவிலக்காக பாவை விளக்கு படத்தில் வரும் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற சந்தோஷப் பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள். அதே வரிசையில் காதல் பூத்த யுவதியின் சந்தோஷக் கணங்களாய் வரும் "காத்திருந்த மல்லி மல்லி" என்ற பாடலில் அடியெடுத்துக் கொடுப்பதும் இந்தக் ஷெனாய் இசைதான். ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா? (அவர் பிறந்த ஆண்டு 1935, இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1990)
இந்தப் பாட்டின் இசையில் இப்படி ஒரு வரிகள் வரும்
"ராசா நீங்க வரம் கொடுத்தா படிப்பேன் ஆராரோ" (1.35 நிமிடத்தில்) அந்தக் கணம் பின்னால் முறுக்கிக் கொண்டு தபேலா இசையைக் கேட்டுப்பாருங்கள், இசைஞானி இந்த வாத்தியத்தை ஓடிக்கொண்டிருக்கும் இசையில் பெண் குரல் ஒலிக்கும் போது மட்டும் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திய இலாவகம் புரிந்து நீங்களும் ரசிப்பீர்கள் மீண்டும் மீண்டும்.
இந்த நான்கு முத்தான பாடல்களுமே போதும் என்று நினைக்கிறேன் பி.சுசீலாவின் குரல் ஏன் எனக்குப் பிடிக்கும் என்று.
Labels:
இளையராஜா,
எம்.எஸ்.வி,
சிறப்புப் பாடகர்
Thursday, May 20, 2010
அனுராதா ரமணனின் "சிறை" - ஒலிப்பகிர்வு
பிரபல தமிழ் இலக்கியப்படைப்பாளர் அனுராதா ரமணன் அவர்கள் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி மாரடைப்பால் அகால மரணமானது அவரது எழுத்துக்களை நேசித்தவர்களுக்கும் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்து விட்டது. சிறுகதை, நாவல் என்ற எல்லைகளைக்கடந்து தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளையும், வாசகர் கேள்வி பதிலுக்கு அவர் தந்த ஆறுதல் பகிர்வுகளுமாக இவரது எழுத்துப்பணி விசாலமடைந்திருந்தது எல்லோரும் அறிந்த ஒன்று.
இவரது நாவல்களில் ஒரு மலரின் பயணம், அம்மா, சிறை, கூட்டுப்புழுக்கள் போன்றவை திரைப்படங்களாகவும் பிறப்பெடுத்தன. சிறை திரைப்படத்தினை நாவலின் சாரம் கெடாமல் இயக்கியிருந்தார் ஆர்.சி. சக்தி. லட்சுமி, பிரசன்னா, ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்க இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துச் சிறப்பித்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.ஒலிபரப்புத்துறையில் 15 வருஷங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த எமது சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சிவாஜினி சச்சிதானந்தா அவர்கள் அனுராதா ரமணன் அவர்களது எழுத்துக்களை நேசிப்பவர். கடந்த மே 13 ஆம் திகதி தனது வானொலிப் படைப்பில் "திரையில் புகுந்த கதைகள்" என்ற பகுதியில் தான் நேசிக்கும் அனுராதா ரமணன் குறித்தும், அவரைச் சந்தித்த அந்தக் கணங்களை சுவாரஸ்யமான நனவிடை தோய்தலைத் தந்தவாறே, திரையில் காவியமான "சிறை" திரைப்படத்தின் பகிர்வையும் அந்தப் படத்தில் இடம்பெற்ற முத்தான இரண்டு பாடல்களோடு பகிர்ந்து கொண்டார். மூன்று நாட்களின் பின் தன்னுடைய ஆதர்ஷ எழுத்தாளர் இவ்வுலகை விட்டு நீங்குவார் என்று அப்போது நினைத்திருப்பாரா என்ன.
அந்த ஒலிப்பகிர்வை இங்கே உங்கள் செவிகளுக்கு விருந்தாகத் தருகின்றேன்.
ஒலிப்பகிர்வைத் தயாரித்துப் பகிர்ந்து கொண்ட திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவுக்கு எமது நன்றிகள்.
Labels:
எம்.எஸ்.வி,
நினைவுப்பதிவு,
பெட்டகம்
Saturday, February 13, 2010
காதலர் தினம் 2010
காதலர் தினம் என்பது காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள். இந்தத் தினத்தைக் கேட்டாலேயே பதின்ம வயது நினைவுகள் அப்படியே மீண்டும் ஒரு சுற்று வரும். ஹலோ ஹலோ ஓடாதீங்க, இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை ;)
வானொலியில் "காதலர் கீதங்கள்" என்ற நிகழ்ச்சியை 6 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்திருக்கின்றேன். குறிப்பாக மு.மேத்தா போன்றோரின் கவிதைகளை நறுக்கிச் சிலவரிகளை மட்டும் சொல்லி அதற்குப் பொருந்துமாற்போலப் பாடல்களைப் பகிர்வேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு தீம் வைத்துச் செய்திருப்பேன. எனவே காதலர் கீதங்களைப் பகிர்வது என்பது எனக்கு இன்னும் அலாதியான விருப்பு. அந்த வகையில் காதலர் தினம் 2010 சிறப்புப் படையலாக இங்கே வைரமுத்து எழுதிய காதல் கவிதைகளையும் எனக்குப் பிடித்த சில காதல் பாடல்களையும் பகிர்கின்றேன். காதலனாகவும் கவிஞனாகவும் இருந்ததால் வைரமுத்து அணு அணுவாகப் பிளந்து காதலைக் காதலித்து எழுதிய மணியான வரிகள் அவை.
காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!
டூயட் திரைப்படத்தில் இருந்து "கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?"
கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சத்தங்கள் நீயா?
என்னைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
என்னைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதற் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?
இரவோடு நான் காணுகின்ற ஒளிவட்டம் நீதான்!
என் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!
வார்த்தைக்குள் ஊடாடும் உள்ளர்த்தம் நீதான்!
என் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சு நீதான்!
தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய் சுட்டவளும் நீதான்!
காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்ததால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்
அடுத்து இருவர் படத்திற்காக வைரமுத்து குழைத்த காதல் வரிகள்
உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும்
மறக்காது கண்மணியே
தொன்னூறு நிமிடங்கள்
தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய்
இதயத்தில் கணக்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லாயிடங்களில் முத்தங்கள்
விதைத்த மோகத்தில் சில நிமிடம் (உன்னோடு)
எது ஞாயம் எது பாவம்
இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம்
இதுவரைக்கும் கேள்வியில்லை
அச்சம் கலைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன்
வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்டதிரு கோலம்
கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர்
கையிலின்னும் ஒட்டுதடி
உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும்
மறக்காது கண்மணியே
அடுத்து என்னை ஆட்கொண்ட சில காதல் பாடல்களைப் பகிர்கின்றேன்.
முதலில் வருவது "படித்தால் மட்டும் போதுமா" திரைப்படத்தில் இருந்து "பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை" (குரல்கள்: பி.பி சிறீனிவாஸ், டி.எம்.செளந்தரராஜன்)
அடுத்து வருவது "அலைகள் ஓய்வதில்லை" திரைப்படத்தில் இருந்து "காதல் ஓவியம் பாடும் காவியம்" (குரல்கள்: இளையராஜா, ஜென்சி)
"நலம் நலமறிய ஆவல்" ஒலிப்பது "காதல் கோட்டை" திரையில் இருந்து (குரல்கள்: கிருஷ்ணராஜ், அனுராதா சிறீராம்)
நிறைவாக "என்ன விலை அழகே" கேட்கும் "காதலர் தினம்" (குரல்: உன்னி மேனன்)
Labels:
இளையராஜா,
எம்.எஸ்.வி,
ஏ.ஆர்.ரஹ்மான்,
பிறஇசையமைப்பாளர்,
பெட்டகம்,
பொது
Saturday, December 12, 2009
ரஜினி 60 - சிறப்பு "பா"மாலை

ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இன்றோடு 60 அகவையை தொட்டிருக்கிறது. இன்னும் இடைவிடாது வாழ்க்கை என்னும் Test Match இல் ஆடிக்கொண்டு ரசிகர்களாகிய எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றான் இந்தக் கலைஞன்.
மலையாள சினிமாவுலகில் மோகன்லாலில் கலையம்சம் கொண்ட படங்களை எப்படி ரசிக்கின்றேனோ அந்த எல்லையில் வைத்து அவரின் பொழுது போக்குச் சித்திரங்களையும் ரசிக்கின்றேன். அதே போன்று தான் கமலை எவ்வளவு தூரம் ரசிக்கின்றேனோ அந்தளவுக்கு ரஜினியும்.
சினிமா என்ற கனவுத் தொழிற்சாலைக்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளும், ஏற்ற இறக்கங்களும் இருந்திருக்கின்றன. அதில் ரஜினி என்ற தனி மனிதனும் விதி விலக்கல்ல. ஆனால் தான் சினிமாவில் வகுத்துக் கொண்ட பாதையை சீராக வைத்துக் கொண்டு அதிலிருந்து இம்மியும் பிசகாமல்
பயணிக்கின்றான் இந்தக் கலைஞன். எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.
ஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் நானும்.
மன இறுக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வில் இருந்து எழுப்பி நின்று நிமிரவும் இவர் படங்கள் டாக்டர் கொடுக்காத மருந்து வகைகள்.
எஸ்.பி முத்துராமன் போன்ற இயக்குனர்களின் நடிகனாக இருந்த ரஜினி பின்னாளில் தனக்கான கதை, பாத்திரம் என்பதை வடிவமைக்கும் அளவுக்கு உரிமை எடுக்கக் காரணம் தன்னை நேசிக்கும் ரசிகனைப் பூரண திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.
இன்று இந்தியாவின் குமரி முதல் இமயம் வரை தெரிந்த பிரபலம் என்ற அந்தஸ்து இருந்தாலும், தன் தலையில் கர்வத்தை இமயம் வரை ஏற்றாத கலைஞர் இவர்.
ஆண்டுகள் அறுபதைத் தொட்டிருக்கும் இந்தக் கலைஞனுக்கு நான் தருகிறேன் "பா"மாலை. இவை ரஜினியோடு இது நாள் வரை பணியாற்றிய ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் இசையில் இருந்தும் கோர்த்த முத்துக்கள்.முதலில் வருவது இசைஞானி இளையராஜா இசையில் முரட்டுக் காளை படத்தில் இருந்து "பொதுவாக என் மனசு தங்கம்"
அடுத்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "போக்கிரி ராஜா" திரையில் இருந்து "போக்கிரிக்கு போக்கிரி ராஜா"
சந்திர போஸ் இசையில் வரும் இந்தப் பாடல் "ராஜா சின்ன ரோஜா" திரையில் இருந்து "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா"
இசைப்புயல் ரஹ்மானோடு "முத்து"வாக் கைகோர்த்து "ஒருவன் ஒருவன் முதலாளி
இந்த பால்காரனுக்கு பால் கறக்கவும் தெரியும் பாசம் கலந்து கொடுக்கவும் தெரியும், அண்ணாமலைக்கு இசை கொடுக்கிறார் தேவா. வந்தேண்டா பால்காரன்
"ஹலோ ரஜினி மாமா, உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா" , நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று தமிழ் மாறிய அம்சலோகா இசையில்
தேவுடா தேவுடா என்று இடைவேளைக்குக்குப் பின் வந்து ஒரு வருஷம் ஓட வைத்தார் சந்திரமுகியில். இசை வித்யாசாகர்.
"தேவாமிர்த"மாய் ஒலிக்கும் இந்தப் பாடல் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அலெக்ஸ் பாண்டியனைக் காட்டிய மூன்று முகம் திரையில் இருந்து
பாடும் நிலா பாலு சூப்பர் ஸ்டாருக்கு மெட்டுக் கட்டிய "துடிக்கும் கரங்கள்" படத்தில் இருந்து "சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்"
"தப்புத் தாளங்கள்" பாணியில் நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த அந்தப் படத்தில் இருந்து விஜயபாஸ்கர் பாட்டுக் கட்டிய "என்னடா பொல்லாத வாழ்க்கை"
விஜய் ஆனந்த் என்ற இசையமைப்பாளருக்கு முகவரி ரஜினியின் "நான் அடிமை இல்லை" படப் பாடல்கள், அதிலும் குறிப்பாக "ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் ஒலிக்கின்றது"
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜவை அறிமுகப்படுத்திய பாடல் "பாண்டியனின் ராஜ்ஜியத்தில்
ஜீ.வி.பிரகாஷ்குமார் போன்ற அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் குசேலன் மூலம் ஒரு வாய்ப்பு "போக்கிரி ராஜா நீயும் பொல்லாதவன்"
ரஜினி ரசிகர்களின் பெரு விருப்பத்துக்குரிய பாடல் "ஆசை நூறு வகை" அடுத்த வாரிசில் இருந்து போனஸ் பாடலாக.
"தேவர் மகனில்" சிவாஜியையும், எத்தனையோ படங்களில் கமலையும், ஏன் சமீபத்தில் "பா"வில் அமிதாப்பையும் பாட வைத்த இசைஞானி இளையராஜா, ரஜினியை மட்டும் விட்டு விடுவாரா என்ன.
"அடிக்குது குளிரு" அது சரி சரி ;-)
நிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கை பாடங்களை
நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலை இடு
இல்லை என்றால் ஆளை விடு
Labels:
இளையராஜா,
எம்.எஸ்.வி,
பிறஇசையமைப்பாளர்,
பொது
Saturday, February 21, 2009
"மெல்லத் திறந்தது கதவு" பின்னணிஇசைத்தொகுப்பு
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்புதிரில் வந்திருந்த கேள்விக்கான பதிலாக அமைந்த மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை இங்கே நான் தருகின்றேன்.இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற தமிழ் சினிமாவின் இரு சகாப்தங்கள் சந்தித்த முதல் படமே மெல்லத் திறந்தது கதவு என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். இவர்கள் இருவரும் பின்னாளில் இரும்பு பூக்கள், என் இனிய பொன் நிலாவே, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன் என்று சில படங்களில் இணைந்திருந்தாலும் இந்த இசைக் கூட்டணியின் உச்ச பட்ச சிறப்புமே மெல்லத் திறந்த கதவு திரைப்படத்தில் தான் வெளிப்பட்டது என்பேன்.
ஏவிஎம்மின் தயாரிப்பில் 1986 ஆம் ஆண்டில் அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் மோகன், ராதா, அமலா போன்றவர்கள் நடிக்க வெளியானது இப்படம். மோகனின் தந்தையாக பிரபல இசையமைப்பாளர் ஜி.கே வெங்கடேஷ் நடித்திருக்கின்றார். பின்னர் இளையராஜாவின் தயாரிப்பில் வெளியான சிங்காரவேலனிலும் ஜி.கே.வெங்கடேஷ் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார்.படத்தில் பாடல்கள் சிறப்பாக இருந்த அளவுக்கு சிறந்த கதை, மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் அமையாதது பெருங்குறை. இரு இசை மாமேதைகளை வைத்துப் பண்ணும் படத்தினை முழுமையான இசையைப் பின்னணியாகக் கொண்ட கதையாகவே பின்னியிருக்கலாம். இந்த குழப்பங்களால் மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் வெற்றி மிகப் பிரமாதம் என்று அமையவில்லை.
பாடல்களை வாலி மற்றும் கங்கை அமரன் எழுத, குழலூதும் கண்ணனுக்கு பாடல் தவிர்ந்த மற்றைய பாடல்களுக்கு எம்.எஸ்.வி மெட்டுப் போட இளையராஜா இசையமைத்திருக்கின்றார். குழலூதும் கண்ணனுக்கு பாடலுக்கு மெட்டும் இசையும் ராஜாவே.இப்படத்தின் பின்னணி இசையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் எம்.எஸ்.விஸ்வநாதனின் கைவரிசையும் இருந்திருக்கிறது. அதைக் கேட்கும் போது அவதானித்துக் கீழே தந்திருக்கிறேன். தொடர்ந்து மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தின் பின்னணி இசையை அனுபவியுங்கள்.

படத்தின் ஆரம்ப இசை
ராதா-மோகன் முதல் சந்திப்பு, புல்லாங்குழலில் குழலூதும் கண்ணனுக்கு இழையோட
"அழகுராணி பொண்ணு" நாட்டுப்புறப்பாடலைப் பாடும் கிராமத்துப் பெரிசு
"மரிக்கொழுந்து வாசக்காரி" நாட்டுப்புறப்பாடலைப் பாடும் கிராமத்து ஆள்
மோகன் நினைப்பில் ராதா பின்னணியில் ஊருசனம் தூங்கிருச்சு பாடலின் இசை கீபோர்டில் பரவ
ராதா, மோகன் சந்திப்பும் ராதா தன் தங்கை மேல் கொள்ளும் பொறாமையும், இதிலும் குழலூதும் கண்ணனுக்கு பாட்டின் இசை பரவி இன்னொரு தடத்துக்கு மாறுகின்றது
"ஒரு ஆம்பளப்பையன் பாத்து சிரிச்சானாம்" படத்திற்காக மேலதிகமாகப் போட்ட மெட்டு
மோகன் குணமடைய வேண்டி ராதாவின் வேண்டுதல் கிராமிய மேளதாளம், உறுமி மேளம் கலக்க
மோகன் பிரிவில் ராதா, வயலின் இசையில் ஊரு சனம் தூங்கிருச்சு
ராதாவின் தாய் மரணம் , இந்தப் பின்னணி இசை எம்.எஸ்.வியின் உடையது என்பதை கேட்கும் போதே உணர முடிகின்றது
ராதா வாண்டுகளைப் பிரிந்து பட்டணம் புறப்படுதல், பின்னணியில் கிட்டாரில் சக்கரக்கட்டிக்கு பாடலின் இசை
"பாவன குரு" பாடல் படத்துக்காக மேலதிகமாகப் போடப்பட்ட மெட்டு
மோகன், அமலா சந்திப்பு பின்னணியில் வா வெண்ணிலா பாட்டினை இசையாக்கி மட்டும்
மோகன் தன் காதலை அமலா வீட்டில் ஹிந்திப் பாடம் மூலம் வெளிப்படுத்த, வா வெண்ணிலா பாட்டிசை இன்னொரு வடிவில்
காதலி அமலாவுக்காக மோகன் மழையில் நனைந்து நடந்து போதல், வயலினும் புல்லாங்குழலும் ஆர்ப்பரிக்க மெல்ல வா வெண்ணிலா மெதுவாகக் கலக்கின்றது
அமலாவின் காதல் நினைப்பில் வா வெண்ணிலா பாட்டிசையோடு மோகன் சந்திக்க "சிறகை விரித்து பறக்க பறக்க" பாடல் படத்துக்காக மேலதிகமாகப் போட்ட மெட்டு, பாட்டு முடிவில் வா வெண்ணிலா வயலினிசையில்
அமலா, மோகனின் காதலை ஏற்றல், காதலர்கள் மனமகிழ்வில் வா வெண்ணிலா பாட்டிசை இன்னொரு வடிவில்
அமலா மோகன் இறுதிச் சந்திப்பு நாள் காதல் பிரவாகம் இசையில் கலக்க
அமலா புதைகுழிக்குள் விழுந்து சாகும் அவல ஓசை
ராதாவின் தற்கொலை முடிவில் மோகனின் மனக் கதவு மெல்லத் திறக்க ஜோடி சேரும் இறுதிக் காட்சி
Labels:
இளையராஜா,
எம்.எஸ்.வி,
பின்னணி இசை
Subscribe to:
Comments (Atom)




