Pages

Monday, July 7, 2008

எம்.எஸ்.வி- இளையராஜா இணைந்த "என் இனிய பொன் நிலாவே"

நேற்று றேடியோஸ்புதிர் 11 இல் கேட்ட கேள்விக்கான பதிலாக வருவது "என் இனிய பொன் நிலாவே" என்ற திரைப்படம்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா கூட்டணியில் இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் பாண்டியராஜன், மெளனிகா ஆகியோர் நடித்தது இந்தப் படம். ஏற்கனவே பாலுமகேந்திரா தெலுங்கில் எடுத்த நிரீக்க்ஷணா (பின்னர் கண்ணே கலைமானே என்று தமிழில் மொழி மாற்றப்பட்டது), பின்னாளில் வந்த அது ஒரு கனாக்காலம் போன்ற படங்களின் சாயலினை ஓரளவு ஒத்திருக்கும் இந்தப் படம். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பத்து வருடங்களுக்கு மேல் பரணில் இருந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தான் வெளியானது. படம் தொடங்கிய காலத்தில் பாண்டியராஜன் மிகப் பெரும் ஹீரோ. படம் வெளியான போது அவரைக் கடந்து ஒரு நடிகர் பட்டாளமே முந்தி விட்டது. பாலுமகேந்திராவைப் பொறுத்தவரை அவரின் அழியாத கோலங்கள், சந்தியாராகம் போன்ற படங்களைத் தவிர வேறு எந்தப் படத்திற்கும் இளையராஜா இல்லாமல் இசை வைத்ததில்லை.

இந்தப் படத்தின் பாடல்களைத் தேடித் தருமாறு கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு முன்னரே நண்பர் ஜீரா அன்புக் கட்டளை இட்டிருந்தார். இப்படப் பாடல்களைத் தேடுவது மகா சிரமமாய் இருந்தது. அண்மையில் ஒரு வீடியோகடையில் இப்படத்தின் விசிடி கிடைத்தது. அதிலிருந்து பாடல்களையும், பாடல்களின் வீடியோக்களையும் பிரித்தெடுத்து விட்டேன். வீடியோக்கள் பின்னர் வீடியோஸ்பதியில் வரும்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா கூட்டணியில் இன்னும் சில படங்கள் இசையமைத்து இந்தக் கூட்டணியின் பேர் சொல்லுமளவுக்கு இருந்தாலும் இந்த "என் இனிய பொன் நிலாவே" படப்பாடல்கள் என் கணிப்பில் சுமார் ரகம் தான். முதலில் கொடுத்திருக்கும் பாடல் மட்டும் ஓரளவு பரவாயில்லை. ஆனாலும் இந்த இருமேதைகளின் சங்கமத்தில் வந்த திரைப்படம். அதுவும் ஓசைபடாமலேயே போய்ச் சேர்ந்து விட்ட இந்தப் படத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில் இப்படப் பாடல்களைத் தருகின்றேன்.

கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "தளிர்களில் பூக்கும்"கே.எஸ்.சித்ரா பாடும் "சில்லென்ற மலரே"எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் "பூ வேண்டுமே"கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "காதல் நினைவே"எல்.ஆர்.ஈஸ்வரி, மனோ பாடும் "புது கடலையின்னா கடலை"

27 comments:

ஆ.கோகுலன் said...

//ஓசைபடாமலேயே போய்ச் சேர்ந்து விட்ட இந்தப் படத்தை ஞாபகப்படுத்தும் //

இப்படி ஓசைப்படாமலே போன படத்தை கேள்வியாகக்கேட்டதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை... :)

ஆயில்யன் said...

அட இந்த பாட்டும் கூட இந்த படத்துலதானா

கடலையின்ன கடலை இது கரிச காட்டு கடலை விடலையின்னா விடலை

நான் சிறுவயதில் முணு முணுத்த பாடல்களில் கூட இதுவும் உண்டு!

தேங்க்ஸ்ண்ணா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்படி ஒரு படம் வந்ததே தெரியாதே... கொஞ்சமும் எதிர்பார்க்கல.. ஆனாலும் இது எக்ஸ்ட்ரீம் .. ஜுஜிபியாவும் இருக்கக்கூடாது கொஞ்சம் யோசிச்சா தெரியறமாதிரி கேளுங்க.. போனத்டவை போட்டது யோசிக்கவே தேவையில்லாம இருந்ததேன்னு சொன்னேன்.. பழிவாங்கிட்டீங்க.. :(

ஆயில்யன் said...

கானா அண்ணா!

கானா அண்ணா!

உங்க காலத்து பாடல்களே போட்டு புதிர் போடறீங்களே????
பாருங்க நாங்கலெல்லாம் இந்த காலத்து ஆளுங்க!

எவ்ளோ பெரிய தலைமுறை இடைவெளி இருக்கு! :)))))

ILA (a) இளா said...

படம் என் ஞாபகத்துக்கே வரலீங்க. ஷ்ஷ். இந்தப் பாட்டுக்காக மெனக்கெட்டத்துக்கு நன்றி.

இன்னிசை மழைன்னு ஒரு படம் இருக்கு. பாடல்களும் அருமை. மொட்டை போட்ட பாட்டுங்கதான், கிடைச்சா கேட்டு சொல்லுங்க, வந்து வாங்கிக்கிறேன்.

கானா பிரபா said...

இளா

படம் ஞாபகத்துக்கு வரலைன்னா பரவாயில்ல. சிலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாதாமெ ;)

இன்னிசை மழை படப்பாடல்கள் வந்த காலத்திலேயே எனக்கு உயிர். இந்தப் படத்தின் பாடல்களை மட்டும் இரண்டு சீடியில் (ஒன்று ஆரம்பத்தில் ஒலித்தரம் குன்றியதாக எடுத்தது) வச்சிருக்கேன். விரைவில் வரும் இன்னிசை மழை.

கானா பிரபா said...

இளா

படம் ஞாபகத்துக்கு வரலைன்னா பரவாயில்ல. சிலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாதாமே ;)

இன்னிசை மழை படப்பாடல்கள் வந்த காலத்திலேயே எனக்கு உயிர். இந்தப் படத்தின் பாடல்களை மட்டும் இரண்டு சீடியில் (ஒன்று ஆரம்பத்தில் ஒலித்தரம் குன்றியதாக எடுத்தது) வச்சிருக்கேன். விரைவில் வரும் இன்னிசை மழை.

கானா பிரபா said...

// ஆயில்யன் said...

கடலையின்ன கடலை இது கரிச காட்டு கடலை விடலையின்னா விடலை
நான் சிறுவயதில் முணு முணுத்த பாடல்களில் கூட இதுவும் உண்டு!//

ஆயில்ஸ்

தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் ;-)

உங்க காலத்து பாட்டுக்கள்னா ரோபோ படப்பாட்டுக்களா?

கானா பிரபா said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
இப்படி ஒரு படம் வந்ததே தெரியாதே... கொஞ்சமும் எதிர்பார்க்கல.. ஆனாலும் இது எக்ஸ்ட்ரீம் .. ஜுஜிபியாவும் இருக்கக்கூடாது கொஞ்சம் யோசிச்சா தெரியறமாதிரி கேளுங்க..//

அடுத்தமுறை ஒரு நடுத்தரமான கேள்வி கொடுக்கிறேன் பாருங்க.

pudugaithendral said...

இப்படி ஓசைப்படாமலே போன படத்தை கேள்வியாகக்கேட்டதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை...

அதானே என்ன ஒரு வில்லத்தனம்.

:)))))))))))))))))))

pudugaithendral said...

இப்படி ஒரு படம் வந்ததே தெரியாதே... கொஞ்சமும் எதிர்பார்க்கல.. ஆனாலும் இது எக்ஸ்ட்ரீம் .. ஜுஜிபியாவும் இருக்கக்கூடாது கொஞ்சம் யோசிச்சா தெரியறமாதிரி கேளுங்க.. போனத்டவை போட்டது யோசிக்கவே தேவையில்லாம இருந்ததேன்னு சொன்னேன்.. பழிவாங்கிட்டீங்க.. :(

இதுக்கு ரிப்பீஈஈஈஈஈஇட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ

கோபிநாத் said...

தலைவா...நீ வாழ்க..;))

இராம்/Raam said...

தெய்வமே,

ஜிரா கேட்டாரு'கிறதுக்காக மதுரையிலே இருக்கிற எல்லா மீயூசிக்-சென்டர்'லே பூராவும் தேடி பார்த்தேன்... இப்பிடியொரு படம் வந்துச்சான்னு என்கிட்டே கேட்டாங்க... :))


நீங்க எப்பிடியோ புடிச்சிட்டிங்க போலே..... :))

இந்த பதிவிலே கூட வந்து கேட்டாரு..... :)


பாட்டெல்லாமே எல்லாமே கலக்கலா இருக்கு... :)

MyFriend said...

//இப்படி ஓசைப்படாமலே போன படத்தை கேள்வியாகக்கேட்டதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை... :)//

ரிப்பீட்டேய்..

//உங்க காலத்து பாடல்களே போட்டு புதிர் போடறீங்களே????
பாருங்க நாங்கலெல்லாம் இந்த காலத்து ஆளுங்க! //

ரிப்பீட்டேய்

//இன்னிசை மழைன்னு ஒரு படம் இருக்கு. பாடல்களும் அருமை. //

ரிப்பீட்டேய்.. எனக்கும் இந்த பட பாடல்கள் பிடிக்கும். ;-))

//படம் ஞாபகத்துக்கு வரலைன்னா பரவாயில்ல. சிலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாதாமெ ;)//

ரிப்பீட்டேய்

//தலைவா...நீ வாழ்க..;))//

ரிப்பீட்டேய்.. (இது கோபி அண்ணனுக்காக..)

:-) அடுத்த கேள்விகளும் இந்த அளவு கஷ்டமா இருக்கனும். அப்பத்தான் ட்ரில்லா இருக்கும். ஹீஹீ

ஹேமா said...

பிரபா அருமை.உங்கள் தேடலுக்கு என் அப்ளாஸ். கேக்குதா. K.J.பாடல்கள் அருமை.கேட்டதாய் ஞாபகமே இல்லை.அது சரி வாணி ஜெயராம் அவர்கள் எங்கே?எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் காணவேயில்லையே.

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

அட இந்த பாட்டும் கூட இந்த படத்துலதானா

கடலையின்ன கடலை இது கரிச காட்டு கடலை விடலையின்னா விடலை

நான் சிறுவயதில் முணு முணுத்த பாடல்களில் கூட இதுவும் உண்டு!///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

கானா அண்ணா!

கானா அண்ணா!

உங்க காலத்து பாடல்களே போட்டு புதிர் போடறீங்களே????
பாருங்க நாங்கலெல்லாம் இந்த காலத்து ஆளுங்க! ///0
ஆயில்யன் அண்ணே! இந்த படம் வந்தது 2001 ல் தானாமே.... அது கூட உங்களுக்கு பழைய காலமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சிநேகிதன்.. said...

இப்படி ஒரு படம் வந்ததே தெரியாதே... கொஞ்சமும் எதிர்பார்க்கல.. ஆனாலும் இது எக்ஸ்ட்ரீம் .. ஜுஜிபியாவும் இருக்கக்கூடாது கொஞ்சம் யோசிச்சா தெரியறமாதிரி கேளுங்க.. போனத்டவை போட்டது யோசிக்கவே தேவையில்லாம இருந்ததேன்னு சொன்னேன்.. பழிவாங்கிட்டீங்க.. :(

இதுக்கு ரிப்பீஈஈஈஈஈஇட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ\\


ரிப்பீஈஈஈஈஈஇட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூக்கு ரிப்பீஈஈஈஈஈஇட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே!!!!

Anonymous said...

காபி அண்ணா, நெசமாலுமே இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. கயல் சொன்னதை வழிமொழிகிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

அடச்சே தொண்டை வரைக்கும் வந்து வெளில வரமாட்டன் எண்டு போட்டுது இன்னிசைமழை பாடல்களை சீக்கிரம் போடுங்க...

தமிழன்-கறுப்பி... said...

உண்மைல அண்ணன் உங்கள் தேடும் முயற்சிகளுக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு...:)

கலக்ககுங்க...

கானா பிரபா said...

//ஆ.கோகுலன் said...

இப்படி ஓசைப்படாமலே போன படத்தை கேள்வியாகக்கேட்டதில் என்ன நியாயம் இருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை... :)//

நோ ரென்ஷன் ;) ஜீஜீபி சொன்னவங்களுக்கு ஆப்பு வச்சிட்டோம்ல

//புதுகைத் தென்றல் said...
அதானே என்ன ஒரு வில்லத்தனம்.//

ஆஹா நீங்க வில்லனாக்கிட்டீங்களா
:(

//கோபிநாத் said...
தலைவா...நீ வாழ்க..;))//

தல

நீங்களும் வாழணும் ;-)

//இராம்/Raam said...
தெய்வமே,

ஜிரா கேட்டாரு'கிறதுக்காக மதுரையிலே இருக்கிற எல்லா மீயூசிக்-சென்டர்'லே பூராவும் தேடி பார்த்தேன்... இப்பிடியொரு படம் வந்துச்சான்னு என்கிட்டே கேட்டாங்க... :))


நீங்க எப்பிடியோ புடிச்சிட்டிங்க போலே..... :))//

பார்த்தீங்களா, மதுரையில் கிடைக்காதது சிட்னியில் கிடைக்குமாம் ;)

அதென்ன பாட்டெல்லாம் எல்லாம் நல்லாயிருக்கு. நுண்ணரசியல் இருக்கா.

கானா பிரபா said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

:-) அடுத்த கேள்விகளும் இந்த அளவு கஷ்டமா இருக்கனும். அப்பத்தான் ட்ரில்லா இருக்கும். ஹீஹீ//

அதுக்காக மத்தவங்களை தூக்கத்தில எழுப்பியா பதில் கேட்கிறது ;)

// ஹேமா said...
பிரபா அருமை.உங்கள் தேடலுக்கு என் அப்ளாஸ். கேக்குதா.//

ஓமோம் கேட்குது ;) வாணி ஜெயராம் இன்னமும் மேடையில் பாடி வருகிறார். கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் போனவருசத்துக்கு முதல் வருசம் போயிருக்கிறா.

கானா பிரபா said...

தமிழ்பிரியன்

இந்தப் போட்டியில் நீங்களும் ஜீராவும் தான் ஹீரோஸ், சும்மாவா பின்ன , விடை சொல்லி அசத்திட்டீங்களே

சினேகிதன்

நீங்களும் ஜிஜிபி சொன்ன ஆளு, உங்களையும் பழிவாங்கியாச்சு ;)

சின்ன அம்மணி

இந்தப் படத்தை தேடிப்பார்த்தாலும் அப்படி ஒண்ணும் விஷேசமில்லை.

தமிழன்

தொண்டை வரைக்கும் வந்ததா ;) இன்னிசை மழை வரும்.

G.Ragavan said...

இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்பதற்காக ரொம்பக் காலம் காத்திருந்தது இன்றுதான் கைகூடியிருக்கிறது. நன்றி பிரபா. :) இதற்காக தம்பி ராமும் மதுரையில் கடைகடையாக ஏறியிறங்கியிருக்கிறார்.

ரெண்டு பேரும் தூங்கிக் கிட்டே இசையமைச்சிருப்பாங்க போல. :) சித்ரா பாடுற பாட்டும் வாணி ஜெயராம் பாடுற பாட்டும் அப்படியே மெல்லிசை மன்னரின் இசைச்சாயல். ஆனால் அந்தக் கரிசக்காட்டுக் கடலை பாட்டு இரண்டு பேரின் சாயலும் இல்லாமல் இருக்கிறது. ஒருவேளை மொத்தப் பாடல்களுக்கு மெட்டும் இசையும் போட்டுக் கொடுத்திருந்திருப்பார்கள். பிற்காலத்தில் யாராவது அவைகளைப் பயன்படுத்தி இசைக்கோர்த்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கானா பிரபா said...

ஜிரா

சரியா சொன்னீங்க இந்த இசையமைப்பாளர்களின் பினாமிகள் கூட இவ்வளவு மோசமா பண்ணியிருக்கமாட்டாங்க. எங்கே ஒரு கோளாறு நடந்திருக்கு.

தங்ஸ் said...

எல்.ஆர்.ஈஸ்வரியின் கடைசிப்பாடலா ராஜாவின் இசையில்?