Pages

Thursday, April 23, 2020

இசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓


நேற்று முழுக்க "பாடும் வானம்பாடி ஹா" பாடலில் கரைந்து போயிருந்த எனக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது. கிட்டத்தத்த இதே பாடல் பாங்கில் இயற்கை சூழ, திகட்டத் திகட்டக் காதல் கொண்டு பாடும் பாடல்களைத் தொகுத்தால் என்ன என்று நினைத்தேன்.
ஆனால் மனசு படிப்படியாக விதிமுறை போட்டது.
இந்த கொரோனாக் காலத்தில் இன்னும் மனசை அழுத்தும் சோகப் பாடலாக இருக்கக் கூடாது,
இசைஞானி இளையராஜாவின் இசையாக இருக்க வேண்டும் (விதி விலக்கு மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன் ஆகிய படங்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டு இசை)
எஸ்.பி.பி மட்டுமே தனித்துப் பாடவேண்டும், கோரஸ் இருந்தாலும் பாதகமில்லை,
இந்தப் பாடல்களின் மைய நாதத்தில் இயற்கையும் பின்னிப் பிணைய வேண்டும்,
பொதுவான பாடலாகத் தொனித்தாலும் காதலுக்கும் பொருந்தும் வகையிலே இருக்க வேண்டும்,
ஒரு படத்துக்கு ஒரு பாட்டுத் தான்
இப்படியாக கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் உழைத்து மூளையைக் கசக்கிப் பிழிந்து 43 பாடல்களைத் திரட்டி விட்டேன்.
ஆனால் மனம் சொல்லுக் கேட்டால் தானே?
இன்னும் பத்துப் பாடல்கள் மேற் சொன்ன விதிமுறைக்குள் அடங்காவிட்டாலும் தவிர்க்க முடியாது என்று போட வைத்து விட்டது.
ஆக மொத்தம் (விஜயகாந்த் குரலில் படிக்கவும்) 54 பாடல்கள், சராசரியாக 270 நிமிடங்கள், அல்லது 4 மணி நேரம் 50 நிமிடங்கள் என்ற கணக்கில் ஒரு தொகுப்பை உருவாக்கி விட்டேன்.
இங்கே நான் சேமித்த அனைத்துப் பாடல்களையும் தேர்ந்தேடுத்த உச்ச ஒலித்தரத்திலேயே தேடித் தேடித் தொகுத்தேன். அப்படியும் தர்ம சீலன் படத்தின் "கிண்ணாரம் கிண்ணாரம்" பாடல் இணையத்தில் தனிப்பாடலாக இல்லாத காரணத்தால் சுடச் சுட அதையும் என் யூடியூப் தளத்தில் ஏற்றி விட்டுச் சேர்த்தேன்.
முழுத் தொகுப்பையும் கேட்க
https://www.youtube.com/playlist…
1. பாடும் வானபாடி ஹா - நான் பாடும் பாடல்
2. இளஞ்சோலை பூத்ததா - உனக்காகவே வாழ்கிறேன்
3. வா பொன்மயிலே - பூந்தளிர்
4. காதலில் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு
5. சன்யோரிட்டா I Love You - ஜானி
6. பனி விழும் மலர் வனம் - நினைவெல்லாம் நித்யா
7. விழியிலே மலர்ந்தது - புவனா ஒரு கேள்விக்குறி
8. பொன்னாரம் பூவாரம் - பகலில் ஓர் இரவு
9. ஹேய் ஓராயிரம் - மீண்டும் கோகிலா
10. ஒரு பூவனத்துல - கழுகு
11. தோகை இளமயில் - பயணங்கள் முடிவதில்லை
12. கீதம் சங்கீதம் - கொக்கரக்கோ
13. பூவில் வண்டு கூடும் - காதல் ஓவியம்
14. தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி - ஆனந்தக் கும்மி
15. விழிகள் மீனோ - ராகங்கள் மாறுவதில்லை
16. எங்கே எந்தன் காதலி - எனக்குள் ஒருவன்
17. ஜோடி நதிகள் பாதை விலகி - அன்பே ஓடி வா
18. தேன் சுமந்த - கைராசிக்காரன்
19. இதயம் ஒரு கோவில் - இதயக் கோயில்
20. வந்தாள் மகாலஷ்மியே - உயர்ந்த உள்ளம்
21. கவிதை பாடு குயிலே - தென்றலே என்னைத் தொடு
22. சின்ன மணிக்குயிலே - அம்மன் கோயில் கிழக்காலே
23. என்ன சத்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன்
24. வா வெண்ணிலா - மெல்லத் திறந்தது கதவு
25. மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே
26. மஞ்சப் பொடி தேய்க்கையிலே - ‪செண்பகமே செண்பகமே
27. பாதக் கொலுசு பாட்டு - திருமதி பழனிச்சாமி
28. பச்சமலைப் பூவு - கிழக்கு வாசல்
29. வனக்குயிலே - பிரியங்கா
30. கேளடி கண்மணி - புதுப்புது அர்த்தங்கள்
31. மண்ணில் இந்தக் காதலன்றி - கேளடி கண்மணி
32. அரைச்ச சந்தனம் - சின்ன தம்பி
33. எங்கிருந்தோ இளங்குயிலின் - பிரம்மா
34. பாக்கு வெத்தல - மை டியர் மார்த்தாண்டன்
35. தங்க நிலவுக்குள் - ரிக்‌ஷா மாமா
36. வைகாசி வெள்ளிக்கிழமை - ராசா மகன்
37. குயிலே இளமாங்குயிலே - செந்தமிழ்ச் செல்வன்
38. கலைவாணியோ ராணியோ - வில்லுப்பாட்டுக்காரன்
39. தெற்கே பிறந்த கிளி - இன்னிசை மழை
40. ஓ பட்டர் ஃப்ளை (தனி) - மீரா
41. ஒரு கோலக்கிளி - உழைப்பாளி
42. கொஞ்சிக் கொஞ்சி - வீரா
43. என்னவென்று சொல்வதம்மா - ராஜகுமாரன்
44. நந்தவனம் பூத்திருக்குது - இல்லம்
போனஸ்
1. நடந்தால் இரண்டடி - செம்பருத்தி
2. பூவுக்குப் பூவாலே - ஆனந்த்
3. வனமெல்லாம் செண்பகப்பூ - நாடோடிப் பாட்டுக்காரன்
4. நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன் - என்னுயிர் கண்ணம்மா
5. சின்னச் சின்னத் தூறல் என்ன - செந்தமிழ்ப் பாட்டு
6. கின்னாரம் கின்னாரம் கேக்குது - தர்மசீலன்
7. தேனே தென்பாண்டி மீனே - உதய கீதம்
8. இனிய கானம் - பாட்டு பாடவா
9. வானம் கீழே வந்தால் என்ன - தூங்காதே தம்பி தூங்காதே
10. என் வாழ்விலே - தம்பிக்கு எந்த ஊரு
11. இளமை எனும் பூங்காத்து - பகலில் ஓர் இரவு
12. பொன் மாலைப் பொழுது - நிழல்கள்
13. பொன்னி நதி - முதல் வசந்தம்
இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு தொகுப்பு தரும் அனுபவத்தை மறவாமல் சொல்லுங்கள்
இந்தக் கொடும் காலத்தை மறந்து நிம்மதியாக இசையோடு வாழுங்கள்.
கானா பிரபா

காதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️ ️எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு ஒரே படத்தில் ஒன்பது பாடல்கள் 💚

காதல் ஒரு கவிதை என்ற படத்தைப் பற்றித் தெரிந்திருக்கிறீர்களா? என்றால் பலருக்குத் தெரிந்திருக்காது ஆனால் Maine Pyar Kiya ஐக் கேட்டால் ஹிந்திவாலாக்களில் இருந்து தமிழ் வாலாக்கள்வரை தெரியாதவர்கள் மிகச் சொற்பம். எண்பதுகளின் இறுதியில் வெளிவந்த இந்தப்படம் அப்போதிருந்த அனைத்துச் சாதனைகளையும் அடித்துத் துவம்சம் செய்துவிட்டு வெற்றிக் கொடி நாட்டிய படம். சல்மான்கானின் ஆரம்ப காலப் படம். நாயகி பாக்யஶ்ரீக்கும் கோயில் கட்டாத குறை. இந்தப் படத்தின் இயக்குநர் சூரஜ் பர்ஜாட்ஜா ஒரு சூரன் தான் இல்லாவிட்டால் இந்த Maine Pyar Kiya படத்தைத் தொடர்ந்து ஒரு சிறு இடைவேளை விட்டு ஐந்து வருடம் கழித்துவந்து எடுத்த Hum Aapke Hain Koun..! படம்கூட அசுரத்தனமான வெற்றியைக் குவித்தது. அதிலும் சல்மான்கான் தான் நாயகன், இரண்டு படங்களிலும் ராம் லக்‌ஷ்மண் தான் இசையமைப்பாளர்.
Maine Pyar Kiya படத்தின் தெலுங்கு, மலையாளப் பதிப்புகளோடு அப்போது தமிழில் “காதல் ஒரு கவிதை” என்ற பெயரில் இந்தப் படம் வெளியானது.படத்தில் மொத்தம் 11 பாடல்கள்,அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலியே எழுதினார்.அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோ வானொலிப் பிரியர்கள் இந்த காதல் ஒரு கவிதை படப் பாடல்களில் குளிர் காய்ந்திருப்பார்கள். அந்த நேரம் இளையராஜா அலையிலும் ஓரமாக வந்த மென் புயல் இந்தப் பாடல்கள்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஹிந்தியில் ஏற்கனவே ஏக் துஜே கேலியேவில் பாடியதை எல்லாம் பாலசந்தர், கமலஹாசன் பந்தமாக வைத்துக் கொள்ளலாம் ஆனால் ஒரே படத்திலேயே மொத்தம் 9 பாடல்களை சுளையாக வாங்குவதெல்லாம் பெரிய சாதனை தான். இரண்டு பாடல்கள் ஒரே மெட்டில் இருந்தாலும் (சோகம், ஜோடிப் பாட்டு. என் சிற்றறிவுக்கு எட்டிய விதத்தில் சங்கராபரணத்தில் அதிக பட்சம் 9 பாடல்களைப் பாடிய எஸ்.பி.பிக்கு அடுத்த பாய்ச்சல் இது. ஹிந்தியில் பிலிம்பேர் விருதையும் இந்தப் பாடல்களுக்காகச் சுவீகரித்துக் கொண்டார். Maine Pyar Kiya படத்தின் ஓட்டத்தோடு போட்டி போட்டது அந்தப் படத்தின் பாடல்கள் விற்பனை வருவாய். இன்றும் மூக்கில் கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சும்மாவாமுதல் ஐந்து இடங்களில் பல்லாண்டுகளாக இருந்தது இந்தப் படப் பாடல்களின் சாதனை.
இந்த மாதிரி அரிய பாடல்களைச் சேகரிக்கும் எனக்கு 13 வருடங்களுக்கு முன் ஃபைனாஸ் Music Corner இல் காதல் ஒரு கவிதை படத்தின் இசைத் தட்டில் இருந்து குறு வட்டுக்குப் பதிய வைத்து வாங்கி வந்தேன். ரெக்கார்டிங் பார் காரர் கூட விநோதமாகப் பார்த்திருப்பார்.அந்தப் பாடல்களைச் சேதாரம் இல்லாமல் இங்கே தருகிறேன் அனுபவியுங்கள்.
காதல் பித்து பிடித்தது இன்று (தமிழில் சித்ரா பாடும் இந்தப் பாட்டு ஹிந்தியில் லதா மங்கேஷ்கர் பாடியது)
https://soundcloud.com/kanapra…/kaathal-pithu-female-version
காதல் பித்து பிடித்தது இன்று - எஸ்.பி.பி தனிக்குரலில்
காதல் பித்து பிடித்தது இன்று - எஸ்.பி.பி & சித்ரா ஜோடிப் பாட்டு
கானா பிரபா