Pages

Friday, March 28, 2008

சிறப்பு நேயர் "ஸ்ரீராம்"

கடந்த வாரம் சினேகிதியின் வாரமாக அமைந்து இனிய பாடல்களோடு மகிழ்வித்தது. தொடர்ந்தும் உங்கள் ஆதரவுக்கு நன்றி கூறி இந்த வார சிறப்பு நேயர் விருந்துக்குச் செல்வோம்.

முத்தான ஐந்து பாடல்களுக்கு சுருக்கமான விளக்கம் தந்து இந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்கின்றார் பதிவர் ஸ்ரீராம். இவர் பொதுவாகவே பதிவுகள் எழுதுவது அரிது, ஆனால் என்ன? வட்டியும் முதலுமாக இவரின் துணைவி புதுகைத் தென்றலே தொடர்ந்து பதிவுகளை அள்ளி விடுகின்றாரே.

Triplicane என்பது இவரின் தனித்துவமான தளமாகும். தொடர்ந்து ஸ்ரீராம் தரும் ஐந்து முத்தான பாடல்கள் குறித்த விளக்கங்களோடு பாடல்களைக் கேட்டு ரசிப்போம்.

தங்களுடைய சிறப்பு நேயர் விருப்பத்திற்கு எனது பாடல் தெரிவுகள்.

1. மன்னன் படத்திலிருந்து " அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே".
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்


பாடல் ஏன் விருப்பம்: பாடலின் வரிகளே சொல்லும். அன்னையைப் போல் வேறு தெய்வமில்லை. பாடலைக் கேட்கும் போதெல்லாம் அன்னையின் அருகாமை தந்த சுகம் தென்றலாய் வீசும்.



2. தர்மத்தின் தலைவன் படத்திலிருந்து "தென்மதுரை வைகைநதி தினம் பாடும் தமிழ் பாட்டு"
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன்


விருப்பம் ஏன்: இந்தப் பாடல் என் குடும்பத்தை பார்ததது போலிருக்கும். எனக்கும் தகப்பன் போன்ற அண்ணனும், தாயாய் அண்ணியும் இருக்கிறார்கள்.. அதனாலேயெ இந்தப் பாடல் என் மனம் கவர்ந்த பாடல்.



3.கிழக்கு வாசல் படத்திலிருந்து " பச்சைமலைப் பூவு, நீ உச்சி மலைத் தேனு, குத்தம் குறையேது, நீ நந்தவனத் தேரு"
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


விருப்பம் ஏன்: நான் விரும்பும் நடிகை ரேவதி. கார்த்திக்- ரேவதி ஜோடிப் பொருத்தம் மிக அருமை. தாலாட்டும் இந்தப் பாடல் எனக்கு மிக மிக விருப்பம்.



4. பொன்னுமணி திரைப்படத்திலிருந்து "நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னாத் தெரியுமா?"
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி


செளந்தர்யா - எனக்கு மிகவும் பிடிக்கும். தவிர இந்தப் பாடலின் வரிகள் தன் மனதிலிருக்கும் காதலை அருமையாக வெளிப் படுத்தும் ஒரு பாடல். அதனால் மிக மிக விருப்பம்.



5. நல்லவனுக்கு நல்லவன் என்ற படத்திலிருந்து "உன்னனத் தானே தஞ்சம் என்று நம்பிவந்தாள் மானே".
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், மஞ்சுளா


திருமணம் ஒருவனுக்கு ஏன் அவசியம் என்பதை நான் நிஜத்தில் உணர்ந்தேன். என் மனதில் இருக்கும் வரிகள், பாடலாகவும், காட்சியாகவும் பார்க்கும்போது, மனம் ஆனந்தம அடையும்.



நன்றி.
அன்புடன்
ஸ்ரீராம்.

Sunday, March 23, 2008

சிறப்பு நேயர் "சினேகிதி"


கடந்த வாரம் ரிஷான் ஷெரிப்பின் தேர்வுகளோடு வந்த சிறப்பான நேயர் விருந்து பலரைத் திக்குமுக்காட வைத்துவிட்டது போல, அரைச்செஞ்சரி பின்னூட்டங்கள் வரை வந்து அவரைக் கெளரவித்தது. போதாதற்கு அவரின் தனிமடல் விபரம் கேட்டு விண்ணப்பங்கள் வேறு ;-)

இந்த வாரம் வந்திருக்கும் சிறப்பு நேயர், எங்கட யாழ்ப்பாணத்துத் தங்கச்சி, உளவியல் நிபுணி "சினேகிதி". நான் வலைபதிய வந்த காலத்தில் எங்கட ஊர்த்தமிழிலேயே ஊர் நினைவுகள், மற்றும் மண் சார்ந்த இடுகைகளைச் சிறப்பாக அளிக்கமுடியும் என்பதற்கு சினேகிதி போன்றோரின் பதிவுகளையே உதாரணமாக எடுத்துக் கொண்டேன். பல்கலைக்கழகத்தில் உளவியல் சார்ந்த பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் இருக்கும் இவர் இடுகைகள் இன்னவை தான் என்று வகைப்படுத்த முடியாதவை. நட்சத்திர வாரத்தில் கூடத் தன் தனித்துவமான உளவியல் சார்ந்த படைப்புக்களைக் கொடுத்துச் சிறப்பித்தவர். சேதுவா இருந்தவையை சாதுவா ஆக்கினவ இவ ;-)

தத்தக்க பித்தக்க என்பது இவரின் பிரத்தியோக தளமாகும். கூடவே தேன் கிண்ணம் என்ற கூட்டு இடுகையிலும் இணைந்திருக்கின்றார். இனி சினேகிதியின்ர பாட்டுத் தெரிவுகளை உவ என்ன மாதிரிக் கொடுத்திருக்கிறா எண்டு பாப்பம்.

பிரபாண்ணா 5 பாட்டு தெரிவு செய்து தரச்சொன்னதும் ஓம் ஓம் என்று மண்டைய ஆட்டிட்டன் ஆனால் ஏன் அந்த 5 பாடல்களும் பிடிக்கும் என்றும் சொல்லோணும் என்று சொன்னதும் அடடா காரணம் வச்சுக்கொண்டா பாட்டெல்லாம் பிடிச்சுப்போகுது என்று கேக்கத் தோணிச்சு. சில பாடல்கள் முதல் தரம் கேட்கும்போது என்ன லூசுப்பாட்டெண்டு நினைப்பன் ஆனால் திரும்ப திரும்ப அந்தப் பாடலைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது புதுசா புதுசா அர்த்தம் விளங்குற மாதிரியிருக்கும் :-)

“நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலை கோதி”


படம் : கிரீடம்
பாடியவர் : சாதனா சர்க்கம்
இசை : ஜீ.வி.பிரகாஷ்


கிரீடம் படம் பார்க்கும்போது வழமைபோல பாட்டை fwd பண்ணிப்பார்த்திட்டன். ஒருநாள் தோழியொருத்தி பாடி record பண்ணி வைத்திருந்ததைக் கேட்டதும் பாடலின் வரிகள் பிடித்தது. அதன்பிறகுதான் இந்தப்பாடலை முழுமையாகக் கேட்டேன் பிறகு பார்த்தேன். சாதனா சர்க்கமின் குரல் எனக்கும் பிடிக்கும். இசை நன்றாக இருந்தால்தான் பாடலின் வரிகளைக் கவனிக்கத்தோணும் என்று நான் நினைக்கிறேன் அந்த வகையில் ஜீவி பிராகாஷ் இசை நன்றாக வந்துள்ளது. இந்தப்பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரன்/காரி யாரென்று தெரியவில்லை. (ஆனால் எனக்கு ரொம்பநாளாவே இந்த சந்தேகம்...தெரிஞ்சாக்கள் பதில் சொல்லுங்கோ. இந்த தலை கோதிறதில அப்பிடி என்ன கிக் இருக்கு?? அநேகமான பெடியங்களுக்கு தங்கள் காதலி மனைவி அம்மா சகோதரம் இப்பிடி யாரோ ஒரு பெண் தங்கள் தலை கோத வேண்டும் என்ற ஆசை இருக்கு...ஏன் என்று அல்லது இந்த ஆசைக்கு ஏதாவது காரணம் இருக்கா? )



புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி


படம் : அலைபாயுதே
பாடியவர் : ஸ்வர்ணலதா
இசை : AR.Rahman
வரிகள் : வைரமுத்து


இந்தப் பாட்டு எனக்கு மட்டுமில்ல என்ர நிறைய நண்பர்களுக்கும் பிடிக்கும். High school ல படிக்கேக்க நண்பி ஒருத்தி வைரமுத்துவின் கவிதைகள் அடங்கிய ஒரு குண்டுப் புத்தகம் கொண்டுவந்தா .கொஞ்ச நாளா அந்த புத்தகம்தான் எங்கட இடைவேளை நேர பொழுதுபோக்கு. இந்தப்பாடலும் அந்தப் பெயர் மறந்த புத்தகத்திலொரு கவிதை ; ஆனால் பாடலில் இடம்பெறாத வரிகளும் இருக்கு அந்த கவிதையில். யாரிடமாவது அந்தக் கவிதை அல்லது அந்தப் புத்தகத்தின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.



“‘புகைப்படம் எடுக்கையில் திமிறும் புன்னகை அன்பே அன்பே நீதானே” எழுதும் கவிதையில் எழுத்துப்பிழைகளை ரசிக்கம் வாசகன் நீதானே ”

படம் : பொறி
பாடியவர்கள் : மதுஸ்ரீ , மது பாலகிருஷ்ணன்
இசை : தீனா


பொதுவாவே பாடல்வரிகள் நல்லாயிருப்பதால் பாடல் பிடிக்கிறதா அல்லது இசை நன்றாக இருப்பதால் பாடல்வரிகள் மனதில் பதிந்துவிடுகிறதா என்ற சந்தேகம் எனக்கிருக்கு. ஆனால் இந்தப்பாடலின் மென்மையான இசையும் பூஜாவின் அழகும் பாடல் எடுக்கப்பட்ட பசுமையான இடங்களும் தான் இந்தப்பாடலைத் திரும்ப திரும்ப பார்க்க வைத்தது. பின்னர் பாடல் வரிகளும் பிடித்துவிட்டது.



“கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற மரங்கள் இல்லை
தயங்காமலே கண்டம் தாண்டுமே”


படம்: சத்தம் போடாதே
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : நேஹா பேசின்



இந்தப்பாடல் முதல்முறை கேட்கும்போது பிடிக்கவேயில்லை. படம் பார்த்தபோதும் பாடல் எடுத்த விதமும் பிடிக்கவில்லை. ஆனால் நான் நினைக்கிறன் மனசுடைந்ததொரு நாளில் நா. முத்துக்குமாரின் வரிகள் என்னைக் கவர்ந்திருக்கிறது. நம்பிக்கை தரும் பாடல்கள் தமிழில் குறைவென்றுதான் நான் சொல்லுவேன். ஆனால் “காட்டிலுள்ள மரங்களுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை தன்னைக்காக்கவே தானே வளருமே” என்று இந்தப்பாடலில் ஒரு வரி வரும் கேட்டுப்பாருங்கள். அதுக்குப் பிறகு நீங்கள் தண்ணியடிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை. (bonus : சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது என்ற பாடலையும் கேட்டுப்பாருங்கள்.



“ உதிக்கின்ற சூரியனில்
விடியலின் களைப்பில்லை
உதிர்கின்ற இலையதனில்
மரணத்தின் பயமில்லை ”


இசைவட்டு: மூங்கில் நிலா
இசை : நிரு
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ் + சுஜாதா
வரிகள் : சுதன்ராஜ்


மூங்கில் நிலா என்ற இசை அல்பத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் எனக்கு எப்படி அறிமுகமானது என்று ஞாபகமில்லை. இந்த அல்பத்தில் இடம்பெற்ற அநேகமான பாடல்கள் எனக்குப் பிடிக்கும் ஆனாலும் இந்தப்பாடல் மிகவும் பிடிக்கும்.


Tuesday, March 11, 2008

சிறப்பு நேயர் "எம்.ரிஷான் ஷெரிப்

போன வாரம் பாலைவன தேசத்துப் பதிவர் "பாசமலர்" வந்து ஐந்து விதமான ரசனைகளை அழகாகக் கொடுத்திருந்தார். தொடர்ந்தும் நீங்கள் இந்தத் தொடருக்கான ஆக்கங்களை அனுப்பி வைப்பது உண்மையில் இந்த முயற்சிக்கான வெற்றியாகவே கொள்கின்றேன். அரங்கேறாத உங்கள் படைப்புக்களையும் தொடர்ந்தும் நீங்கள் அனுப்பிவைக்கலாம்.அடுத்த சில நாட்களில் பயண அலுவல்கள் இருப்பதால் இந்த வாரம் சீக்கிரமாகவே இப்பதிவைத் தருகின்றேன்.

சரி இந்த வாரம் அரங்கேறும் சிறப்புப் பதிவர் யாரென்று பார்ப்போம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கை வாழ் பதிவர்கள் பலரை வலைப்பதிவுலகம் வசீகரித்து உள்வாங்கிக் கொண்டது. அப்படி வந்த ஒரு பதிவர் தான் எங்கள் அன்புக்குரிய எம்.ரிஷான் ஷெரிப். தன்னுடைய ஒவ்வொரு படைப்புக்கும் தனித்தனியான வலைத்தளம் வைத்து, சிறுகதை, கவிதை, உலக நடப்புக்கள், சிந்திக்கச் சில படங்கள், எண்ணச் சிதறல்கள் என்று வகை வகையான விருந்து படைக்கின்றார். எல்லாமே விலத்தி வைக்கமுடியாத சிறப்பான தொகுப்புக்கள். இவரின் வலைப்பதிவுகளைப் பார்வையிட எம்.ரிஷான் ஷெரிப்

ரிஷான் பாடல்களை அனுப்பி வைத்தபோது முழுதும் படித்து வியந்து போனேன். சாதாரணமாக எல்லோரும் கேட்காத, ஆனால் விலக்கி வைக்க முடியாத தெரிவுகள் இவை. காதலை ஐந்து முத்தான பாடல்கள் ஒவ்வொன்றுமே மயிலிறகாய் வரும் மெல்லிசை கலந்து வருகின்றன. தெரிந்தோ தெரியாமலோ இவர் எடுத்த ஐந்துமே ஐந்து வேறுபட்ட இசையமைப்பாளர்கள். இந்தப் பாடல்களுக்கு இவர் கொடுக்கும் விளக்கமே ஒரு காதல் கடிதத்தைப் படித்த ரசனையை ஏற்படுத்துகின்றது. தொடர்ந்து ரிஷான் சொல்வதைக் கேளுங்கள். பாடல்களை அனுபவியுங்கள்.

நண்பர் கானாபிரபா கேட்டுக்கொண்டதற்கிணங்க ஏராளமான பாடல்கள் விருப்பத்திற்குரிய பாடல்களாக இருந்தும் 5 பாடல்களை மட்டும் இங்கு தருகிறேன்.'காதல் மாதம்' என்பதால் எல்லாப்பாடல்களுமே காதல் பாடல்களாக இருக்கின்றன. (ரிஷான் இப்பதிவை அனுப்பியது பெப்ரவரி காதலர் தின வாரத்தில்) மற்றப் படி வேறெதுவும் விஷேசமில்லை... :)

1. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்...

படம் : இதயத் தாமரை.
பாடியவர்கள் : எஸ்.பி.பி, சித்ரா.
இசை : சங்கர் கணேஷ்


ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...(2)

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா........
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நானில்லயா...
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா?
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நானில்லயா ?
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சில் அல்லவா என்முச்சும் உள்ளது...
ஒன்றானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலைவேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யார் உறவு யாரரிவாரோ......
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ..
பொன் மகள் மூச்சுவிட்டால் பூமலராதோ....
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ...
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது....
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...

மிக அழகிய காதல் பாடல்.
மழைத்தூறல் விழும் அல்லது இதமான மஞ்சள் வெயிலடிக்கும் மாலை வேளைகளிலும்,
யாருமற்ற நள்ளிரவிலும் மெல்லிசையாய் இப்பாடலைக் கேட்க மிக மகிழ்வாய் உணர்வேன்.
எஸ்.பி.பி கம்பீரக்குரல் காதலுக்காய்க் குழைகிறது இங்கு.
சித்ராவும் உணர்ந்து பாடி பாடலை அழகாக்கியிருக்கிறார்.
இசையும் அருமை.அதிகளவு ஆர்ப்பாட்டமில்லை.
இப்பாடல்காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதமும் அழகு.
சில பாடல்கள் கேட்க இதமாயிருக்கும்.ஆனால் காட்சிப்பதிவின் போது வீணடித்திருப்பார்கள் (உதாரணம் வசீகரா பாடல்).
இங்கு அப்படியில்லை.
இளமைக்கால ரேவதி மற்றும் கார்த்திக் காதல் ஜோடி மிகப்பொருத்தம்.
பின்புலக் காட்சிகளும் ஒளிப்பதிவு இடம்பெற்றுள்ள இடங்களும் பேரழகு.



2.மாலையில் யாரோ மனதோடு பேச...

படம் : சத்ரியன்
பாடியவர் : சுவர்ணலதா
இசை: இளையராஜா


மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)


கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப்பார்க்க
அடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)

எனக்கு மிகப்பிடித்த பாடல்.
அழகான மெல்லிசை சுவர்ணலதாவின் மிக அழகிய குரலோடு ஒன்றி பாடலை மிக அழகாக்கியிருக்கிறது.
சுவர்ணலதாவைத்தவிர வேறு யாராலும் இப்பாடலை இவ்வளவு சிறப்பாகப் பாட முடியாது என எண்ணவைக்கும் அளவுக்கு மிக நன்றாகப் பாடியிருக்கிறார்.(இப்படி எண்ணத்தோன்றிய இவரது அடுத்த பாடல் -எவனோ ஒருவன் வாசிக்கிறான்- அலை பாயுதே).
இப்பொழுதெல்லாம் தமிழ்சினிமாவில் இவரை குத்துப்பாடல்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது வேதனையைத் தருகிறது.



3.உடையாத வெண்ணிலா...
படம் : ப்ரியம்
பாடியவர்கள் : ஹரிஹரன்,சித்ரா.
இசை: வித்யாசாகர்


உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஓருமுடி
களைகின்ற சிறுநகம்
சிருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்

(உடையாத)

அந்தி மஞ்சள் மாலை
ஆளிலாத சாலை
தலைக்கு மேலே போகும்
சாயங்கால மேகம்
முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
எச்சில் வைத்த பின்னும்
மிச்சமுள்ள பானம்
கன்னம் என்னும் பூவில்
கைகள் செய்த காயம்

ப்ரியம் ப்ரியம் (4)

(உடையாத)

கண்கள் செய்யும் ஜாடை
கழுத்தில் கோர்த்த வேர்வை
அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சிநேகம்
முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம்
இரண்டு பெயரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்

ப்ரியம் ப்ரியம் (4)

(உடையாத)

இதுவும் இன்னொரு அழகிய காதல்பாடல்.
ஒவ்வொரு வரியாய் உள்வாங்கிக் காட்சிகளைக் கற்பனை செய்து பாருங்கள்.
மிக அற்புதமாக உணர்வீர்கள்.
சக்ஸபோன் இசைக்கருவி பாடல்முழுதும் இழையோடுகிறது.
பாட்டின் அழகியவரிகளோடு பாடலை உணர்ந்து பாடியிருக்கிறார்கள்.



4. விழிகளின் அருகினில் வானம்...

படம் : அழகிய தீயே
பாடியவர் : ரமேஷ் விநாயகம்.
இசை : ரமேஷ் விநாயகம்


விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

என்னை எப்பொழுதும் தன்னிலை மறக்கச் செய்யும் பாடல் என்றால் இதுதான்.
ரமேஷ்விநாயகத்தின் மென்மையான குரல் பாடலை மேலும் அழகூட்டுகிறது.இப்பாடலைப்பாட ஒரு பிரபல பாடகர் வராத காரணத்தால் இப்பாடலை இவர் பாடநேர்ந்த்தாகக் கேள்விப்படுகிறேன்.ஆனாலும் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.இவரது இசையும் மிக ரம்மியம்.
அடுத்து வரிகள்..
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!
காதல் கொண்ட ஒரு இளைஞனின் அத்தனை மன உணர்வுகளையும் மிக அழகாகச் சிலவரிகளில் எடுத்துரைக்கிறது வரிகள்.வரிகளுக்குச் சொந்தக்காரர் யாரெனத் தெரியவில்லை.அவருக்கும் ஒரு கை குலுக்கல்.
அத்துடன் பாடல் காட்சிகளில் நடித்திருக்கும் பிரசன்னா,புதுமுகம் நவ்யா நாயருக்கும்.



5.சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா...?

படம் : அழகன்
பாடியவர்கள் : எஸ்.பி.பி,சந்தியா
இசை: மரகதமணி

சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லே பகலா, எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்,
நானும் தான் நினைத்தேன்
ஞாபகம் வரல,
யோசிச்சா தெரியும்,
யோசனை வரல
தூங்கினா விளங்கும்,
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு.

என்னென்ன இடங்கள்,
தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லி தா
சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல்கடிதம் இன்றுதான் வந்தது
சொர்கம் வெண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய, பூவுடல் நனைய
காமனின் சபையில் காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்

காதலன்,காதலி காதலில் மூழ்கித் தனிமையில் கிடந்து தவிக்கும் அத்தனை ஏக்கங்களையும் அழகாய்ச் சொல்லுகிறது பாடல்.பாடல்காட்சி முழுவதும் காதலன் (மம்மூட்டி),காதலி (பானுப்ரியா) விடியும்வரை தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி பாடலும் ஒருவரின் கேள்விக்கு மற்றவரின் பதிலாய் அமைகிறது.இரவு விடிவதும் அழகாய் தொலைக்காட்சி,ஜன்னல்,காலைத் தேனீரெனக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.



எனது பாடல்களெல்லாம் இடைக்காலப்பாடல்களாக அமைந்ததற்கு மிக முக்கிய காரணங்கள் அழகிய தமிழில் அமைந்த பாடல்வரிகள்,இரைச்சலில்லாத இசை மற்றும் வார்த்தைகளை விழுங்கிப் பாடாமல் தெளிவாகப் பாடும் பாடகர்களின் குரல்கள்.என்வேதான் எனக்கிவை என்றும் பிடித்த பாடல்கள்.
இப்பாடல்களை ரேடியோஸ்பதி ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கிய நண்பர் கானாபிரபாவுக்கும்,பொறுமையாய் எனது பாடல்களைக் கேட்ட உங்களுக்கும் எனது இனிய நன்றிகள்.

Friday, March 7, 2008

சிறப்பு நேயர் "பாசமலர்"

கடந்த வாரம் றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வந்து தனக்கே உரித்தான ரசனையோடு சிறப்பித்திருந்தார் ஜீ.ரா என்னும் நம்ம ஜி.ராகவன். தொடர்ந்தும் இந்தத் தொடருக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்.

இந்த வாரம் முத்தான ஐந்து பாடல்களோடு சிறப்பு நேயராக வந்திருக்கின்றார் "பாச மலர்".
வளைகுடாவில் இருந்து சுனாமியாகப் படையெடுக்கும் பதிவர் வரிசையில் புதிதாக வந்திருக்கும் இவர் ரியாத், சவுதியில் இருந்து தன் பதிவுகளைக் கொடுக்கின்றார்.
இந்த வாரம் வலைச்சரம் வாயிலாக தனக்கே உரித்தான பாணியில் ரசனை மிகு வலைச்சரம் தொடுத்துக் கொண்டிருப்பது இன்னொரு சிறப்பு.

குறிப்பிட்ட ஒரு துறையில் இல்லாது எல்லா வகையான பதிவாகவும் கலந்து கட்டித்தரும் இவர் கூடவே சக பதிவர்களையும் உற்சாகத்தோடு பின்னூட்டி வருகின்றார்.

பெட்டகம் என்பது இவரின் தனித்தளமாகும். கூடவே மதுரை மாநகரம், பேரண்ட்ஸ் கிளப் ஆகிய கூட்டுப் பதிவுகளிலும் எழுதி வருகின்றார்.


இவரின் முத்தான ஐந்து தேர்வுகளை எழுதியிருக்கும் வரி வடிவங்களிலேயே எவ்வளவு நேசித்திருக்கின்றார் என்று காட்டியிருக்கின்றார். இதோ தொடர்ந்து பதிவைப் படித்தவாறே பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.


1. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..(எஸ்.பி.பி.) (புதுப்புது அர்த்தங்கள்)

எஸ்.பி.பியின் பரமரசிகை நான். திருமண வாழ்வின் சாராம்சத்தைப் பாலுவின்குரலில் கேட்கையில் என்ன ஒரு இதம் மனதுக்கு...தன் சோகம் மறைத்துப் பிறர்க்காகப் பாடும் நாயகனின் மனதிலும் குரலிலும் இழையோடும் சோகம் ..பாலுவின் குரலில் இயல்பாக
வெளிப்படும் நேர்த்தி..

"நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே.."

இப்பாடலை நான் விரும்புவது பாலுவின் குரலுக்காக, பாடல் தரும் செய்திக்காக..
Get this widget | Track details | eSnips Social DNA


2. காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி (எஸ்.ஜானகி) (அவர்கள்)

ஜானகி, என் அபிமானப் பாடகி. ஜானகியின் குரலில் பட்டுத் தெறிக்கும் உணர்ச்சித்துளிகள் , பாடும் கதாநாயகி முகத்தில் கூட இருக்குமா என்பது சந்தேகமே. இந்தப் பாடல் மட்டுமின்றி அவரின் பல பாடல்களுக்குப் பொருந்தும் இந்த வரிகள். கதாநாயகியின் உள்ளத்தில் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வார்த்தைப்பின்னலும், குரலின் செழிப்பும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டும்.

"கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?"

இப்பாடலை நான் விரும்புவது ஜானகியின் குரலுக்காக, மனதைத் துள்ளச் செய்து மகிழ்ச்சியில் திளைப்பதற்காக..
Get this widget | Track details | eSnips Social DNA


3. அந்தி மழை பொழிகிறது (எஸ்.பி.பி,ஜானகி) (ராஜபார்வை)

வைரமுத்துவின் வைரவரிகளில் இசைக்கும் காதல் காவியம். காதலை அணுஅணுவாக ரசிக்கும் காதலர்களின் மனநிலை இந்தப் பாடலில் வெளிப்படும் அழகு..அடடா!! என்ன வர்ணனனகள்...காதலனும் காதலியும் சளைக்காமல் வெளிப்படுத்தும் காதல் உணர்வுகள், அடிக்குரலில் பாடும் அபிமானப் பாடகர்கள்..இந்தப் பாடல் அந்தி மழை பொழியும் நேரம், சூடான காபிக் கோப்பையைக் கையிலேந்திப் பருகியபடி சன்னலோரம் அமர்ந்து மழையை ரசிக்கும் சுகத்திற்குச் சமம்...

குறிப்பிட்டுச் சொல்லமுடியாதபடி அனைத்து வரிகளும் அருமை...

இப்பாடலை நான் விரும்புவது வைரமுத்துவின் வரிகளுக்காக, கமலின் பாவங்களைக் கண்முன் கொணரும் பாலுவின் குரலுக்காக.
Get this widget | Track details | eSnips Social DNA


4. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் (சுசீலா) (பாகப்பிரிவினை)

சுசிலாவின் குரலில் குழையும் கம்பீரம் கலந்த சோகம், ஆறுதல் கலந்த நிறைவு..ஒரு பெண்ணுக்கு நல்ல மனம் படைத்த கணவனைத் தவிர வாழ்வில் வேறு எதுவும் வேண்டாம் என்று அடித்துச் சொல்லும் பாடல்..எந்தக் குறையையும் பொருட்படுத்தாத
காதல் மனைவி பாடுகையில் சுற்றுச் சூழல் அறியாது பாடலில் லயிக்கும் மனது...

"சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே மாற்றம் காண்பதுண்டோ."

இப்பாடலை நான் விரும்புவது, ஒரு நல்ல கணவன்-மனைவியின் கம்பீரக் காதலின் அடையாள வெளிப்பாட்டுக்காக..



5. புத்தம் புது மலரே (எஸ்.பி.பி) (அமராவதி)

மீண்டும் பாலுவுக்காக..இந்தப் பாடலைக் கேட்டு நீண்ட நாட்களாயிற்று..காதலியிடம் காதலன் எதிர்பார்க்கும் சின்னச் சின்ன சுகங்கள்...ஒரு தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு பாடுவது போன்ற தொனியில் ஒலிக்கும் குரல்..சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் வரிசையாய் அடுக்கி ரசிக்க வைக்கும்... மெல்லிய வாத்தியப் பின்னனியில் இதமான ரிதம்....என் தோழியின் கணவர் பாலபாரதிதான் இசையமைப்பாளர்.


"புத்தம்புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திரந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்.."

இப்பாடலை நான் விரும்புவது சின்னச் சின்ன ரசனைக்காக, என் தோழிக்காக, பாலுவுக்காக.


இன்னும் எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் சட்டென்று நினைவில் வந்த பாடல்கள் இவை...

பிரபாவுக்கு நன்றி.

அன்புடன்,
பாசமலர்