Pages

Friday, February 22, 2008

சிறப்பு நேயர் - "அப்பாவி சிறுமி" துர்காபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல "கோபி" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப்பு நேயராக வந்து கலக்க இருப்பவர் எங்கள் பதிவுலகத்தின் பாசத்துக்குரிய தங்கை அப்பாவி சிறுமி "துர்கா".

இந்தத் தங்கை அப்பாவி போல இருப்பார், ஆனால் சமயத்தில் "ஆப்பாவி" யாக மாறி பின்னூட்ட ஆப்பும் வைப்பார். பதிவர்கள் பலர் இவர் பின்னூட்ட வரும் போது குலை நடுக்கத்தோடு நகம் கடித்தபடி இருப்பார்கள். பதிவைப்பற்றி நாலைந்து நல்ல விஷயம் சொல்லி விட்டு சுருக்கென்று ஊசி ஏற்றி விட்டுப் போய் விடுவார். பல அண்ணன்களுக்கு அன்ணி தேடிக் கொடுப்பார் (இந்த வாக்கியம் மட்டும் உதவி: தல கோபி).
போன ஜென்மத்தில் நடிகர் சத்யராஜின் தங்கையாய் பிறந்திருப்பார் போல. அவ்வளவு லொள்ளு பார்ட்டி ;-) சந்தேகம் இருந்தால் அவரின் புளாக்கர் புரொபைல் போய் பாருங்க. தானே தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கா.

சரி, நம்ம தங்கச்சி துர்காவின் தனித்துவமான வலைத்தளம் பற்றிச் சில வரிகள்.
தனக்கென்று அரிச்சுவடி என்ற சொந்த வீட்டை வைத்திருக்கின்றார். தான் சந்தித்த அனுபவங்களை தனக்கேயுரிய நகைச்சுவையோடு சொல்வதற்கு துர்காவிற்கு நிகர் துர்கா தான். வலையுலகில் நான் அரிதாகப் படித்த பெண் பதிவர்களின் நகைச்சுவைப் பதிவுகளில் இவருக்கு தனித்துவம் உண்டு. தனது அண்ணன் பையனோடு நடத்திய குறும்புப் பதிவுகள் சில உதாரணங்கள். இப்போது தொடர்கதை எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்.
முயற்சி திருவினையாக்கட்டும்.

கூடவே "ஜில்லென்று ஒரு மலேசியா" என்ற கூட்டுப்பதிவிலும் தன் பங்களிப்பை இவர் வழங்கி வருகின்றார்.

சரி இனி துர்கா தரும் ஐந்து பாடல்களையும் கேளுங்கள். ( இவர் கேட்ட ஐந்து பாடல்களையும் வீடியோவில் இருந்து ஒலிப்பதிவு செய்து வலையேற்றி எனக்கு தாவு தீர்ந்து விட்டது ;-)

வேறும் 5 பாடல்கள் மட்டும்தான் வேண்டும் என்று அண்ணன் கையைக் கட்டிப் போட்டு விட்டார்.எனக்குத் தமிழ் பாடல்கள் மட்டும் பிடிக்கும் என்று இல்லை.எல்லாம் வகையை இசையையும் விரும்பி கேட்கும் பெரிய மனது J
எனக்கு பிடித்த பாடல்கள் இவைகள் தான்.

1. பாடல்: மார்கழி பூவே
படம்: மே மாதம்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
பாடலாசிரியர் :வைரமுத்து
பாடியவர்:
ஷோபா சேகர்

"காவேரிக் கரையில் நடந்ததுமில்லைகடற்கறை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லைசுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லைசாலையில் நானாகப் போனதுமில்லைசமயத்தில் நானாக ஆனதுமில்லை"

கேட்ட முதல் கணத்திலேயே என்னை கவர்ந்து இழுத்த பாடல் இதுதான்.பாடல் வரிகளும் சரி இசையும் சரி அற்புதம்.எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இவைதான்.சுந்திரமில்லாத வாழ்க்கையை வாழும் ஒரு மனிதனின் உணர்வுகளை இந்த வரிகள் மிக அற்புதமாக பிரதிபலித்தது.
Get this widget Track details eSnips Social DNA


இப்பாடலின் வீடியோ

2. பாடல்: மஹாகணபதிம்
பாடம் :morning raga
இசை:மணி ஷர்மா, Amit Heri
ராகம்: நாட்டை
பாடியவர்:Bombay ஜெயஸ்ரீ


சிந்து பைரவியில் கேட்ட மஹாகணபதிம் நினைவு இருக்கின்றதா?இது மார்னிங் ராகா என்ற படத்தில் fusion music(கலப்பு இசை)யின் வழி புதுமையாக கேட்டு பாருங்கள்.இந்த பாடலை நாட்டை இசையில் கேட்ட பொழுதே இதன் மீது காதல் வந்தது.ஆனால், எனது நண்பர்கள் பலர் கர்நாடக இசை என்றாலே தலை தெறிக்க ஓடுவார்கள்.இப்படி fusion music கர்நாடக பாடலைக் கேட்க சொன்னால் இப்படி ஓடுவது இல்லை.கர்நாடக இசையை இப்படி கொலை பண்ணலாமா என்று சிலர் கோபபடலாம்.ஆனால் இப்படியாவது இசை மற்றவர்களை போய் சேர்கின்றது என்று மகிழ்ச்சி அடையலாமே.
Get this widget Track details eSnips Social DNA


இப்பாடலின் வீடியோ

3. பாடல்:habibi ya noor-el ain
பாடியவர்: Amr Diab


இந்த பாடல் ஏதோ ஒரு தமிழ் பாடல் போல இருந்ததாக சில நண்பர்கள் சொன்னர்கள்.எந்த பாடல் என்று எனக்கும் தெரியவில்லை.உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.
JAMR DIAB 1983 இல் இருந்து இப்பொழுது வரை கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரு எகிப்திய பாடகர்.மத்திய கிழக்கு நாடுகளில் இவர் மிகவும் பிரபலம்.அவர் பாடிய பாடல்களின் எனக்குப் பிடித்த பாடல் இதுதான்.
Get this widget Track details eSnips Social DNA


இப்பாடலின் வீடியோ


4. பாடல்: ra ra rasputing
பாடியவர்கள்; Boney M

இந்த பாடலின் இசைதான் என்னை முதலில் கவர்ந்தது,ஏனென்றால் இந்த பாடல் கேட்ட பொழுது எனக்கு 3 வயது மட்டுமே.தமிழைத் தவிர வேறு மொழிகள் புரியாத வயது.இப்பொழுது கூட எனக்கு மிகவும் பிடித்த பாடல் குழுவினர் Boney M தான்.இசையை ரசிக்க வயது மொழி என்று ஒன்றும் தேவை இல்லை என்பது எனது கருத்து.இந்த பாடல் Rasputin எனப்படும் ஒரு ரஷ்யரை பற்றி பாடியுள்ளார்கள்.யார் இவர் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் google உதவியை நாடவும்.
Get this widget Track details eSnips Social DNA


இப்பாடலின் வீடியோ

5. பாடல்:அக்கா மக..அக்கா மக
பாடியவர்கள்:The Keys


"அக்கா மக அக்கா மக எனக்கு ஒருத்தி இருந்தாளே.
காதலுக்கு redy சொல்லி காதல் முத்தம் தந்தாளே
காதலிச்ச சந்தோசத்தில் ஆகயத்துல பறந்தேண்டா
வில்லன் ஒருத்தன் இருந்தாண்டா மாமன் காரன் அவந்தாண்டா

The Keys மலேசியவிலேயே முதல் தமிழ் பாடல் குழுவினர்கள்.இவர்களின் முதல் ஆல்பம் பாடலே ஒரு புயலை உருவாக்கியது.அதுதான் இந்த பாடல்.ஒரு அத்தை மகனின் குறும்பு பாடல் இதுதான்.இந்த பாடலை கேட்டால் இன்னும் ஆ ட தோன்றும்.இப்பொழுது இவர்கள் என்ன ஆனர்கள் என்றுதான் தெரியவில்லை.எப்படி இருந்தாலும் இந்த பாடலை பல மலேசியர்கள் மறந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

Get this widget Track details eSnips Social DNA


இப்பாடலின் வீடியோ

-- From,durga


56 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அடிப்பாவி தங்கச்சி...ச்சே..."டி" சைலன்ட்டு-ல்ல!
அப்பாவி தங்கச்சி துக்காவுக்கு மொதல்ல வாழ்த்துக்கள்!

எனக்குப் பிடிச்ச மார்கழிப் பூவேக்கும், மார்னிங் ராகா பாட்டுக்கும்!
ஒவ்வொரு பாட்டுக்கும் பின்னால தனித்தனியா வரேன்!
இப்ப பசிக்குது! கொட்டிக்கிட்டுத் தெம்பா வாரேன்! :-)

நிலா said...

என்னாது துர்காக்கா "அப்பாவி" "சிறுமி" யா? என்ன கொடுமை கானாபிரபா மாமா?

அப்போ நானெல்லாம் யாரு? :P

ரசிகன் said...

//அப்பாவி போல இருப்பார், ஆனால் சமயத்தில் "ஆப்பாவி" யாக மாறி //
என்னது ஆப்பு ஆவியா?.. பிரபா மாம்ஸ் என்னன்னெவ்வோ சொல்லி பயம்புறுத்துறிங்களே?..

ரசிகன் said...

//பதிவைப்பற்றி நாலைந்து நல்ல விஷயம் சொல்லி விட்டு சுருக்கென்று ஊசி ஏற்றி விட்டுப் போய் விடுவார்.//

எத்தனை பொட்டி கெடைச்சது இதை சொல்ல.. ஆமா ஊசி ஏற்றிட்டு போறாங்களா?..அவ்வ்வ்வ். ஒருவேளை போலி டாக்டரா இருக்குமோ?..:))

ரசிகன் said...

//பல அண்ணன்களுக்கு அன்ணி தேடிக் கொடுப்பார்//
இதுவேறயா?.. தெய்வமே...அப்பாவி சிறுமி பண்ணற காரியமா இது ?..
அடிப்பாவி ..(நன்றி.:ரவி ஷங்கர் மாம்ஸ்..)

ரசிகன் said...

//தனது அண்ணன் பையனோடு நடத்திய குறும்புப் பதிவுகள் சில உதாரணங்கள்.//
ஓ.. அண்ணன் பையன் கிட்ட அடிவாங்கன பதிவை சொல்லறிங்களா?.. அடிவாங்கனத கூட எம்புட்டு ஸ்டெயிலா சொல்லியிருக்கா பாருங்க...:)))))))

ரசிகன் said...

// நிலா said...
என்னாது துர்காக்கா "அப்பாவி" "சிறுமி" யா? என்ன கொடுமை கானாபிரபா மாமா?

அப்போ நானெல்லாம் யாரு? :P
//

நல்லா கேளுமா நிலா செல்லம்..... இப்டிதான் சொல்லிஊரை ஏமாற்றிக்கிட்டு திரியறாங்க:P :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்தா வாரம் தங்கச்சியா.. :-) அண்ணனை எல்லா பாடலையும் ரீரிக்கோர்ட் பண்ண வச்சி பிண்ணிட்டம்மா. ;-)

ரசிகன் said...
This comment has been removed by the author.
.:: மை ஃபிரண்ட் ::. said...

//மார்கழி பூவே //

இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் எனக்குள் ஓடும் இன்னொரு பாட்ட்டு "சின்ன சின்ன ஆசை".. ரெண்டிலும் பல ஆசைகள் ஒளிந்திருக்கு. ;-)

//பாடல்: மஹாகணபதிம்
பாடம் :morning raga//

மார்னீங் ராக ஆல்பம்தான் தேடிட்டு இருக்கேன். கானா அண்ணன் அந்த ஆல்பத்துல உள்ள எல்லா பாடலையும் ஒளிப்பரப்புவாராக.. ;-)

//பாடல்:habibi ya noor-el ain
பாடியவர்: Amr Diab //

2-3 தடவை எங்கேயோ கேட்டிருக்கேன்

//பாடல்: ra ra rasputing
பாடியவர்கள்; Boney M //

கேள்விப்பட்டது இல்லை. இதோ கேட்கிறேன். :-)

//பாடல்:அக்கா மக..அக்கா மக
பாடியவர்கள்:The Keys //

சூப்பர் பாட்டு..

அக்கா மக அக்கா மக எனக்கொருத்தி இருந்தாளே..
காதலுக்கு ரெடி சொல்லி ஆசை முத்தம் தந்தாளே
காதலிச்ச சந்தோஷத்தில் ஆகாயத்தில் பறந்தேண்டா
வில்லன் ஒருத்தன் இருந்தாண்டா மாமன் காரன் அவந்தாண்ட
அழகிட கொடியே நீ என்னோடு வாம்மா
உன் அவனை நம்பாதே என் பின்னாடி வாம்மா
நான் காதலுக்கு காவல்காரன் சண்டை வந்தால் வேட்டைகாரன்..

பாடலை கேட்காமலேயே டக் டக்ன்னு வருது லீரிக்ஸ். மறக்க முடியுமா இந்த பாடலை. ;-)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் துர்கா...;))))))

\\ இந்தத் தங்கை அப்பாவி போல இருப்பார், ஆனால் சமயத்தில் "ஆப்பாவி" யாக மாறி பின்னூட்ட ஆப்பும் வைப்பார்.\\

உண்மை....உண்மை ;))

\\பதிவர்கள் பலர் இவர் பின்னூட்ட வரும் போது குலை நடுக்கத்தோடு நகம் கடித்தபடி இருப்பார்கள். பதிவைப்பற்றி நாலைந்து நல்ல விஷயம் சொல்லி விட்டு சுருக்கென்று ஊசி ஏற்றி விட்டுப் போய் விடுவார். பல அண்ணன்களுக்கு அன்ணி தேடிக் கொடுப்பார் (இந்த வாக்கியம் மட்டும் உதவி: தல கோபி).\\

அய்யோ...தல இது நியமா...இது சரியா....இதுக்கு எத்தனை ஆப்பு எந்த உருவத்துல வரபோகுதே...கடவுளே!!! ;)

\\சரி, நம்ம தங்கச்சி துர்காவின் தனித்துவமான வலைத்தளம் பற்றிச் சில வரிகள்.
தனக்கென்று அரிச்சுவடி என்ற சொந்த வீட்டை வைத்திருக்கின்றார். தான் சந்தித்த அனுபவங்களை தனக்கேயுரிய நகைச்சுவையோடு சொல்வதற்கு துர்காவிற்கு நிகர் துர்கா தான்.\\

துர்காவின் சிறப்பே அவர் இடம் இருக்கும் அந்த நகைச்சுவை தான்....;))

\\வலையுலகில் நான் அரிதாகப் படித்த பெண் பதிவர்களின் நகைச்சுவைப் பதிவுகளில் இவருக்கு தனித்துவம் உண்டு. தனது அண்ணன் பையனோடு நடத்திய குறும்புப் பதிவுகள் சில உதாரணங்கள். இப்போது தொடர்கதை எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்.
முயற்சி திருவினையாக்கட்டும்.\\

தல இந்த தொடர்கதை விஷயத்தையும் நீங்க நகைச்சுவையில சேர்த்துட்டிங்கன்னு வெளியில சொல்லிக்கிறாங்க...;))

கோபிநாத் said...

\\1. பாடல்: மார்கழி பூவே \\

அருமையான பாடல்...நல்ல காட்சி அமைப்புகள் கொண்ட பாடல்..;)

\\ 2. பாடல்: மஹாகணபதிம் \\

இந்த படத்தை தான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன்...ரொம்ப நல்லாயிருக்கு இந்த பாடல் ;)

\\3. பாடல்:habibi ya noor-el ain
பாடியவர்: Amr Diab

இந்த பாடல் ஏதோ ஒரு தமிழ் பாடல் போல இருந்ததாக சில நண்பர்கள் சொன்னர்கள்.எந்த பாடல் என்று எனக்கும் தெரியவில்லை.உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன். \\

இந்த பாடல் தமிழில் வந்திருக்கிறதா என்று சரியாக தெரியவில்லை...ஆனால் மலையாளத்தில் இந்த பாடல் வந்திருக்கிறது. நடிகர் சீனிவாசன் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன். தல உங்களுக்கு நினைவு இருக்கா!?

\\பாடல்: ra ra rasputing \\

ஆரம்ப இசை அருமை...;)

\\5. பாடல்:அக்கா மக..அக்கா மக \\

இந்த பாடலை கேட்கும் போது என்னோட கல்லூரி நினைவுதான் ஞாபகத்துக்கு வருது...பஸ்சுல போகும் போது இந்த மாதிரி தான் படிக்கிட்டு போவோம்....

எல்லா பாடல்களும்....சொம பாட்டு ;))

கலக்கிட்டிங்க ;)

கானா பிரபா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அடிப்பாவி தங்கச்சி...ச்சே..."டி" சைலன்ட்டு-ல்ல!
அப்பாவி தங்கச்சி துக்காவுக்கு மொதல்ல வாழ்த்துக்கள்!//

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களுக்கு வலைப்பதிவு பொறுப்பேற்க மாட்டாது ;-)


// நிலா said...
என்னாது துர்காக்கா "அப்பாவி" "சிறுமி" யா? என்ன கொடுமை கானாபிரபா மாமா?

அப்போ நானெல்லாம் யாரு? :P//


கூல் டவுண் கண்ணு

அவங்க எழுதிக் கொடுத்ததைத் தானே போட முடியும். (ஐய்யய்யோ உண்மையைச் சொல்லீட்டேனே)

துர்கா said...

@KRS
வணக்கம் அப்பாவி சிறுமியின் அடப்பாவி அண்ணா :)
மத்த பாட்டுகளும் எப்படின்னு சொல்லிட்டு போங்க :D

வினையூக்கி said...

நல்ல பாடல் தேர்வுகள். மலேசியா அக்கா மகப்பாட்டும் நல்லா இருக்கு. முதன் முறையாக கேட்கும்பொழுதே துள்ளலா இருக்கு. நன்றி துர்கா.

நன்றி கானாபிரபா

துர்கா said...

@நிலா அக்கா
அக்கா நாங்க உங்க தங்கை :)
நீங்களும் அப்பாவி,நானும் ஒரு அப்பாவி

துர்கா said...

@ரசிகன்
வந்தா பாட்டு எப்படி இருக்குன்னு சொல்லனும் இல்ல

துர்கா said...

@மை ஃபிரண்ட்
வாங்கோ அக்கா,
rasputing பாட்டு எப்படி இருந்தது?

துர்கா said...

@கோபி
என் மேல உங்களுக்கு இவ்வளவு பாசமா?morning raaga படம் கிடைத்தால் சொல்லுங்க கோபி.நானும் 2 மாசமா அந்த படத்தை தேடிகிட்டு இருக்கேன்

துர்கா said...

@கானா பிரபா
அண்ணா நீங்க மனுசனே இல்லை.நீங்க ஒரு நடமாடும் MP3 நூலகம் :P

//பல அண்ணன்களுக்கு அன்ணி தேடிக் கொடுப்பார் (இந்த வாக்கியம் மட்டும் உதவி: தல கோபி).
///

அடப்பாவிகளா.எனக்கு வேற வேலை இல்லையா?நிஜத்துல அண்ணியை வைச்சுகிட்டு சொல்லாம போறாங்க இல்ல,அவங்களைப் பத்திதான் சொன்னேன்.உண்மையைச் சொன்னால் இப்படியா ஆப்பு வைக்குறது?


//போன ஜென்மத்தில் நடிகர் சத்யராஜின் தங்கையாய் பிறந்திருப்பார் போல. அவ்வளவு லொள்ளு பார்ட்டி ;-) //

இந்தஜென்மத்தில் கானா அண்ணா தங்கைதானே ;)
அப்போ உங்க லொள்ளு எங்கிட்ட் இருக்க கூடாதா?


//இவர் கேட்ட ஐந்து பாடல்களையும் வீடியோவில் இருந்து ஒலிப்பதிவு செய்து வலையேற்றி எனக்கு தாவு தீர்ந்து விட்டது ;-)
//

இது எல்லாம் உங்க rangeக்கு ஜுஜுபி ;)
கானா அண்ணாவா சும்மாவா :P
walking mp3 libraryக்கு இது எல்லாம் எந்த மூலை?

துர்கா said...

@வினையூக்கி
நன்றி :)

U.P.Tharsan said...

அடடா இந்த தடவை சிறுமி(!) துர்காவா? இருந்திட்டுபோகட்டும்.

இந்தப்பதிவு எனக்கு மிக பிடித்திருக்கிறது. காரணம், கானா அர்களின் இந்த வார சிறப்பு நேயருக்கான அறிமுகமும்.. துர்காவினுடைய தெரிவுப்பாடல்களும்.
தமிழ் பாடல்கள் என்ற எல்லைக்குள் நில்லாமல்... Amr Diab , Boney M போன்றோருடைய பாடல்களையும் தனது விருப்பத் தேர்வாக தேர்வு செய்தது நன்றாகவேயிருந்தது.

அக்கா மக.. என்ற பாடலுக்கு.. இதுவரை நான் மைக்கல் ஜக்ஸன் நடனமாடிய கிளிப்புகள்தான் பார்த்திருக்கிறேன். தற்போதுதான் தெரிந்து கொண்டேன் இது The Keys குழுவினுடைய பாடல் என்று.தகவலுக்கும் நன்றி.

பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

துர்கா said...

@தர்ஷன்
நன்றி :)

Dreamzz said...

//அடிப்பாவி தங்கச்சி...ச்சே..."டி" சைலன்ட்டு-ல்ல!
அப்பாவி தங்கச்சி துக்காவுக்கு மொதல்ல வாழ்த்துக்கள்!
//
LOL!!!!

//எனக்குப் பிடிச்ச மார்கழிப் பூவேக்கும், மார்னிங் ராகா பாட்டுக்கும்!// repeatu :)

துர்கா said...

வாங்கோ கனவு நாயகன் அவர்களே,
Lol க்கும் repeatuக்கும் நன்றி

ஜெகதீசன் said...

//
thurgah: hai anna
kummi adikama enna pannuringa
see the link in my status
bfn
//
எச்சுக் கிச்சு மீ... துர்கா என்ன இங்க கும்மி அடிக்கச் சொல்லுறாங்க... அடிக்கலாமா?
:)

ஜெகதீசன் said...

//
சிறப்பு நேயர் - "அப்பாவி சிறுமி" துர்கா
//

போச்சா... நீங்க வேற சொல்லீட்டீங்களா.. இனி அவங்க அலும்பு தாங்கவே முடியாது...

"சிறுமி"ன்னு சொல்லுறதையாவது கொஞ்சம் ஒத்துக்கிறலாம்...

ஆனா "அப்பாவி"ன்னுறதெல்லாம் ரெம்ப ஓவர்...
:P

காட்டாறு said...

புது சிறுமிய அறிமுகப்படுத்துறீங்கன்னு வந்தா.... க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ என்னது துர்கா அப்பாவியா?

காட்டாறு said...

எத்தனை மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் ஆளாகியிருந்தீங்கன்னா... இது மாதிரி (அப்பாவி மாதிரி) பொய்யெல்லாம் பப்ளிக்கா சொல்லியிருப்பீங்க. உங்களுக்காக வருத்தப் படுகிறேன் ப்ரபா. அடி ஒன்னும் பலமா இல்லையே?

தமிழ் பிரியன் said...

துர்கா 'அக்கா' ஏதோ அழகா 5 பாட்டு போட்ருக்காங்கனு சந்தோசப்படுறதை விட்டுட்டு இப்படியா எல்லாரும் கலாய்க்கிறது. துர்காக்கா வருத்தப்படப் போறாங்க! :)

தமிழ் பிரியன் said...

கடைசிப்பாட்டு வித்தியாசமாக இருக்கு. நன்றி....

காட்டாறு said...

பாட்டைப் பத்தி ஒன்னும் சொல்லலைன்னு கோச்சுக்கப் படாது.

மார்கழிப் பூவேலே ஒரு சின்ன வருத்தம் இழையோடி இருக்கும். அப்படியே ஆழ்மனசுல போய் ஒரு நரம்பை மட்டும் சுண்டி இழுத்து வலி கொடுக்கும்.

மத்த பாடல்கள் இனி தான் கேக்கனும்.

CVR said...

"அப்பாவி சிறுமி" துர்கா

:O
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வேற என்னத்த சொல்ல???
இந்த் ஒலகத்துல நியாயம் நேர்மை நீதி எல்லாம் கிடையாதுன்னு இப்போதான் தெளிவாத்தெரியுது!!

கடைசி பாட்டு தவிர மத்த பாட்டு எல்லாம் முன்னமே கேட்டு ரசித்திருக்கிறேன்.
முதல் இரண்டு பாடல்கள் நான் பெரிதும் விரும்பிக்கேட்கும் பாடல்கள்,3ஆம் மற்றும் 4ஆம் பாடல்கள் துர்கா அக்கா எனக்கு அறிமுகப்படுத்தியவை!!

கடைசி பாடல் இப்பொழுதுதான் கேட்கிறேன்!!!அருமையான பாடல் தேர்வுகள்!! "உங்கள் விருப்பம்" தொடரை அகில உலக ரேஞ்சுக்கு எடுத்துச்சென்றதற்கு துர்கா அக்காவிற்கு பாராட்டுக்கள்!!
வாழ்த்துக்கள் யக்கோவ்!! B-)

கானா பிரபா said...

//ஜெகதீசன் said...

எச்சுக் கிச்சு மீ... துர்கா என்ன இங்க கும்மி அடிக்கச் சொல்லுறாங்க... அடிக்கலாமா?
:)//

இதெல்லாம் அனுமதி கேட்டா செய்யிறது. பூந்து விளையாடுங்க தல.


//காட்டாறு said...
புது சிறுமிய அறிமுகப்படுத்துறீங்கன்னு வந்தா.... க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ என்னது துர்கா அப்பாவியா?//

நிலாவுக்கு சொல்லீட்டேனே,

//அவங்க எழுதிக் கொடுத்ததைத் தானே போட முடியும். (ஐய்யய்யோ உண்மையைச் சொல்லீட்டேனே)//

மங்களூர் சிவா said...

எச்சூஸ் மீ!

மே ஐ கம் இன்சைடு?

மங்களூர் சிவா said...

காலைல இருந்து மண்டைய உடைச்சிகிட்டு இருக்கேன்
இந்த ஹபிபி பாட்டு கேட்டிட்டு

மங்களூர் சிவா said...

///
நிலா said...
என்னாது துர்காக்கா "அப்பாவி" "சிறுமி" யா? என்ன கொடுமை கானாபிரபா மாமா?

அப்போ நானெல்லாம் யாரு? :P
//
செல்லம் துர்கா உனக்கு அத்தைடா!!

மங்களூர் சிவா said...

//
ரசிகன் said...
//பல அண்ணன்களுக்கு அன்ணி தேடிக் கொடுப்பார்//
இதுவேறயா?.. தெய்வமே...அப்பாவி சிறுமி பண்ணற காரியமா இது ?..
அடிப்பாவி ..(நன்றி.:ரவி ஷங்கர் மாம்ஸ்..)
//
அவ்வ்
வழிமொழிகிறேன்

(நன்றி டிபிசிடிஇஎஃப்ஜி....)

கானா பிரபா said...

//மங்களூர் சிவா said...
எச்சூஸ் மீ!

மே ஐ கம் இன்சைடு?//

யெஸ் பிளீஸ்,
வெல்கம் டு கம்பங்காடு ;-)

ரசிகன் said...

//துர்கா said...
@ரசிகன்
வந்தா பாட்டு எப்படி இருக்குன்னு சொல்லனும் இல்ல
//

நான் ஏற்கனவே பாட்டு பத்தி பாராட்டி சொன்னதா ஞாபகம்.. அது மட்டும் காக்கா தூக்கிக்கிட்டு போச்சோ என்னவோ:P
அதிலும் அந்த " ஹபிபி" பாட்டெல்லாம் கலக்கல்... (ஹபிபி ன்னா அரபில காதல் அல்லது அன்பு ன்னு அர்த்தமாம்./. இதெல்லாம் எல்லா பாழையிலயும் தெரிஞ்சு வைச்சிருப்போம்ல்ல...:))))))) ).
" மஹா கணபதிம்"... இந்தகால பசங்களையும் கவந்து இழுத்து நிறுத்தும் வலிமை,பாலமுரளி கிருஷ்ணாவின் கம்பீர தேனிசைக் குரலுக்கு இருக்கும் போது,அதையே போட்டிருக்கலாம். ஆனா இந்த ரீமிக்ஸ் இசையும் ,வித்தியாசமா ரசிக்கும்படியா இருந்துச்சு..
"மார்கழிப்பூவே பாட்டு" ,வீடியோ இல்லாம கேட்டா கேற்பவரையும் ஏக்கம் கொள்ளச் செய்யும்.படத்துல ஹீரோயின் சரியில்லைப்பா.. பேசாம நம்ம குட்டிப் பொண்ணு துர்காவை விட்டு பாடச் சொல்லியிருக்கலாம்.. :P (இதுக்கும் கும்மிய ஆரம்பிச்சுடாதிங்க மக்கா..,வாங்குன பொட்டிக்கு ஏதாவது சொல்ல வேணாமா?.. நம்ம பிரபா மாம்ஸ் மாதிரி..:P)
"ரா ரா ரெப்பியுட்டிங்” ஒன்னுமே புரியலை உலகத்துல..: ரகம்.இந்த பாட்டை கேற்க்கும் போது அப்பாவி சிறுமிக்கு மூனு வயசுன்னு ஒரு க்ளு கொடுத்திருக்காங்க..., எல்லாரும் கூகுள்ல தேடி பாட்டு எப்போ வந்துச்சுன்னு தேடிப்பார்க்க வேற சொல்லறாங்க..:)))))))))))))))
நல்லவேளை சிவாஜி (ரஜினி )பாட்டை போட்டுப்புட்டு இதைக் கேற்க்கும்போது எனக்கு 2 வயசுன்னு சொல்லாம விட்டாங்களே:

//அக்கா மக அக்கா மக எனக்கு ஒருத்தி இருந்தாளே.
காதலுக்கு redy சொல்லி காதல் முத்தம் தந்தாளே
காதலிச்ச சந்தோசத்தில் ஆகயத்துல பறந்தேண்டா
வில்லன் ஒருத்தன் இருந்தாண்டா மாமன் காரன் அவந்தாண்டா//

அக்கா மக பாட்டு கலக்கல்.... இப்போ கூட மைபிரண்டு ஞாபகமா பாட முடியுதுன்னா.. மலேஷியாவுல தமிழர் மனம் கொள்ளைக் கொண்ட பாட்டுன்னு புரியுது.அதை மறக்கடிக்கும் வகையில இன்னும் வேற பாடல் குழுக்கள் அங்கே உருவாகலைன்னு புரியுது.. கேற்க்காத புதிய பாடலை அறிமுகப் படுத்திய துர்காவுக்கு நன்றி...

மொத்தத்துல அப்பாவி சிறுமி,அருமையா கலக்கியிருக்காங்க.. (பொட்டி,பொட்டி,,ஹிஹி.,..)

Anonymous said...

அப்பாவி கூட ஒத்துக்களாம் ஆனா இந்த சிறுமினு சொல்லுறது தான்

முடியல

Anonymous said...

கொட்டிக்க போனவரு போனவரு தான்

ரொம்ப பசியோ..:)

மின்னுது மின்னல் said...

habibi பாட்டுக்கு ஆங்கில அர்த்தம்

இங்கே

:)

/Habibi ya nour el-ain/
My darling, you are the glow in my eyes

Ya sakin khayali/
You live in my imagination.

A’ashek bakali sneen wala ghayrak bibali -
I adored you for years. No one else is in my mind


முடியல :)

கானா பிரபா said...

//இந்த பாடல் தமிழில் வந்திருக்கிறதா என்று சரியாக தெரியவில்லை...ஆனால் மலையாளத்தில் இந்த பாடல் வந்திருக்கிறது. நடிகர் சீனிவாசன் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன். தல உங்களுக்கு நினைவு இருக்கா!?//


தல

நான் அந்தப் படத்தைப் பார்க்கல.

துர்கா said...

@ஜெகதீசன்
நான் ஒரு அப்பாவி சிறுமிதான் & பொது வாழ்க்கையில எதுவுமே ஒவர் இல்லைன்னு நம்ப கானா அண்ணா சொல்லி இருக்கார்

துர்கா said...

@காட்டாறு அக்கா
//த்தனை மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் ஆளாகியிருந்தீங்கன்னா... இது மாதிரி (அப்பாவி மாதிரி) பொய்யெல்லாம் பப்ளிக்கா சொல்லியிருப்பீங்க. உங்களுக்காக வருத்தப் படுகிறேன் ப்ரபா. அடி ஒன்னும் பலமா இல்லையே?//

அக்கா ஏன் என் மேல இவ்வளவு கொல வெறி.கானாபிரபா அண்ணா என்மேல உள்ள கொல வெறிய தீத்துக்க என்னை வைச்சு நல்லா காமெடி பண்ணி வைச்சு இருக்கார்.அடி எனக்குதான் பலமா விழுந்து இருக்கு

துர்கா said...

@தமிழ்ப்பிரியன்
பெரியப்பா நான் உங்க அக்கா இல்லை :)
என்னை அக்கான்னு கூப்பிட்டு உங்க வயசை குறைக்க பாக்குறீங்களா :))
வருகைக்கு நன்றி தமிழ் பிரியன்

துர்கா said...

@சிவிஆர் அண்ணா
என்னை நீங்க அக்கான்னு சொல்லுற அப்போ,உங்களை நீங்க பால் மனம் மாறாத பாலகன்னு சொல்லுற அப்போ ஒலகத்துல நியாயம் நேர்மை நீதி எல்லாம் கிடையாதுன்னு தெரியவில்லையா?நாங்க அப்பாவி சிறுமி என்றவுடனே ஒவர் சவுண்ட் ஏன் அண்ணா :)
/// "உங்கள் விருப்பம்" தொடரை அகில உலக ரேஞ்சுக்கு எடுத்துச்சென்றதற்கு துர்கா அக்காவிற்கு பாராட்டுக்கள்!!
வாழ்த்துக்கள் யக்கோவ்!! B-)///

நன்றி "அண்ணா" ;)

துர்கா said...

@மங்களுர் சிவா
நிலா எனக்கு அக்கா,நீங்க நிலா குட்டிக்கும் எனக்கும் சித்தப்பா.புரியுதா?இப்படி எல்லாம் போட்டு குழப்பிக்க கூடாது.அண்ணன்களுக்கு அண்ணி நான் தேடி தரவில்லை.அதுக்கு பதில் ஏற்கனவே சொல்லிட்டேன் ;)

துர்கா said...

@ரசிகன்
அடப்பாவி என்ன பெட்டி கொடுத்தேன்?நான் அப்பாவி சிறுமியாக்கும்.

//மஹா கணபதிம்"... இந்தகால பசங்களையும் கவந்து இழுத்து நிறுத்தும் வலிமை,பாலமுரளி கிருஷ்ணாவின் கம்பீர தேனிசைக் குரலுக்கு இருக்கும் போது,அதையே போட்டிருக்கலாம்.//

ஹிஹி.வித்தியாசமா இருக்கனும்ன்னு அந்த பாடலை தேர்வு செய்தேன்.fusion இசையோடு கர்நாடக இசை கலக்கும் போது எப்படி இருக்கும் என்று காட்ட நினைத்தேன் :)

//ரோயின் சரியில்லைப்பா.. பேசாம நம்ம குட்டிப் பொண்ணு துர்காவை விட்டு பாடச் சொல்லியிருக்கலாம்//

ஏன் இம்புட்டு கொல வெறி?எல்லாரும் என் மேல கல் எறிய planning போல ;)


//நல்லவேளை சிவாஜி (ரஜினி )பாட்டை போட்டுப்புட்டு இதைக் கேற்க்கும்போது எனக்கு 2 வயசுன்னு சொல்லாம விட்டாங்களே: ..

எனக்கு அப்போ 4 வயசு :P

வருகைக்கும்,நீண்ட மறுமொழிக்கும் நன்றி ரசிகன் :)

மங்களூர் சிவா said...

//
துர்கா said...
@மங்களுர் சிவா
நிலா எனக்கு அக்கா
//
நாடு உருப்புட்டா மாதிரிதான்.

துர்கா said...

@மின்னல்
http://www.shira.net/nourelain.htm
இதுலதானே மொத்த அர்த்தமும் இருக்கு :)
என்ன மின்னல் கும்மி அடிக்க முடியவில்லையா?ஐயகோ

மங்களூர் சிவா said...

//
துர்கா said...
@மங்களுர் சிவா
நிலா எனக்கு அக்கா,நீங்க நிலா குட்டிக்கும் எனக்கும் சித்தப்பா.புரியுதா
//
நிலா என்னைய மாமான்னு கூப்பிடுதே அப்ப உனக்கும் நான் மாமாவா!?

:D

மங்களூர் சிவா said...

//
Anonymous said...
அப்பாவி கூட ஒத்துக்களாம் ஆனா இந்த சிறுமினு சொல்லுறது தான்

முடியல
//
அனானி வாழ்க

துர்கா said...

//நிலா என்னைய மாமான்னு கூப்பிடுதே அப்ப உனக்கும் நான் மாமாவா!?//

அதான் சொல்லிட்டேனே நீங்க சித்தப்பான்னு.இன்னும் கஷ்டமா இருந்தது என்றால் பெரியப்பாவாக ஆகிடலாம் :P

துர்கா said...

@மங்களுர் சிவா
//நாடு உருப்புட்டா மாதிரிதான்.//
சிங்கப்பூர் உருப்பட்ட நாடுதானே :P
நான் அப்பாவி சிறுமிதானுங்கோ