Pages

Friday, February 1, 2008

சிறப்பு நேயர் - "காமிரா கவிஞர்" CVR

றேடியோஸ்பதியின் வாராந்தப் புதுத்தொடருக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு ஒரு நன்றியைக் கொடுத்துவிட்டு இந்த வாரச் சிறப்பு நேயருக்குச் செல்வோம்.

இந்த வாரம் சிறப்பு நேயராக வந்திருப்பவர், உங்கள் எல்லோருக்கும் அறிமுகமான, புகைப்படங்களால் கவிதை படைக்கும் "காமிரா கவிஞர்" CVR. இவரின் காமிரா தொட்டதெல்லாம் பொன் தான் என்பதை இவர் படைக்கும் தமிழில் புகைப்படக்கலை தொடர் நிரூபித்து வருகின்றது.
கூடவே தனித்துவமாக இவர் படைக்கும் பதிவுகள்:

என் எண்ணங்கள் எழுத்துக்களாய்
SimplyCVR

தான் எடுக்கும் புகைப்படங்கள் போலவே ஐந்து முத்தான பாடல்களோடு வந்திருக்கின்றார் CVR. அவற்றுக்கு இவர் தரும் விளக்கமும் அழகோ அழகு. அவற்றை ரசித்துப் பாருங்களேன்.

நான் முன்பே ஒரு முறை என் பதிவு ஒன்றில் குறிப்பிட்டது போல தமிழ் திரையிசை என்பது அள்ள அள்ள குறையாத அமுதச்சுரங்கம்.
அதில் என் மனதை கவர்ந்த பாடல்கள் பல்லாயிரம்,அதில் ஐந்து மட்டும் பிடித்தவை என்று சொன்னால்,சிதறிக்கிடக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் பிடித்தமான ஐந்தை தேர்ர்ந்தெடுப்பது போல்.
இருந்தாலும் என் மனதில் இன்னேரம் சட்டென தோன்றிய ஐந்து பாடல்களை தோன்றிய பொழுதில் பிடித்து இந்த மடலில் நிறப்பி அனுப்புகிறேன்.

1.)பாடல் : சொர்க்கத்தின் வாசப்படி
படம் : உன்னை சொல்லி குற்றமில்லை
இசை : இளையராஜா
பாடகர்கள் : யேசுதாஸ்,சித்ரா
பாடசாசிரியர் : வாலி

சில பாடல்கள் நாம் அமைதியாக இருக்கும் போது,குதூகலமாக இருக்கும் போது,சோகமாக இருக்கும் போது இப்படி பற்பல நேரங்களில் கேட்க பிடிக்கும்,ஆனால் இந்த பாட்டை நான் எப்பொழுது கேட்டாலும் என் மனதை மயக்கி விடும்.
தொடக்கத்தில் சாக்ஸ் தரும் கிறக்கம் கலையும் முன்னரே யேசுதாஸின் தெய்வீக குரல் மயக்கத்தை ஆழப்படுத்தி எனை ஒரு வித அமைதியான நிலைக்கு அழைத்து சென்றுவிடும்.சின்னக்குயில் சித்ராவின் இனிமையான குரலும் சேர்ந்துக்கொண்டு பாடல் முடியும் வரை என்னை பரவசத்தில் ஆழ்த்தி விடும்!!
இத்தனையும் சொல்லிவிட்டு இந்த பாடலின் வரிகளை பற்றி குறிப்பிடவில்லை என்றால் எனக்கு அடுத்த வேளை சோறு கிடைக்காது!!!
என்ன நளினம்,என்ன மென்மை,காதலின் கதகதப்பு இவையணைத்தையும் வாலியின் வைர வரிகள் நமக்கு அளித்து இந்த பாட்டை நீங்காத இடத்தை பிடிக்க செய்துவிட்டது.
நீங்களும் தான் கேட்டு பாருங்களேன்

பாடலின் வரிகளைப் பார்க்க

பாடலைக் காண

பாடலைக் கேட்க
Get this widget Track details eSnips Social DNA

2.) பாடல் : தாலாட்டும் காற்றே வா
படம் : பூவெல்லாம் உன் வாசம்
இசை : வித்யாசாகர்
பாடகர் : சங்கர் மஹாதேவன்
பாடலாசிரியர் : வைரமுத்து

பாடலில் என்னை மிகவும் கவர்ந்தது,பாடலின் வரிகள்

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

இப்படி ஒவ்வொரு வரியை பாடிக்கொண்டே போக ஒரு வரிக்கு அடுத்த வரி நம்மின் ஆர்வத்தை கூட்டிக்கொண்டே போகும்.பாடல் முழுதும் காதலன் தன் கனவுகளையும் ,தன் காதல் நிறைவேறாமல் போய் விடுமோ என்று தன் பயங்களையும் பட்டியலிடும் போது நம் மனம் நம்மையும் அறியாமல் அந்த காதல் வெற்றிபெற வாழ்த்து கூறும்.ஒரு ரயில் போகும் ஓசையை பிண்ணனியாக வைத்து வித்யாசாகர் அழகாக இசை அமைக்க,தனக்கே உரித்தான உணர்வு பூர்வமான குரலில் சங்கர் மஹாதேவன் பட்டையை கிளப்பியிருப்பார்.பாடலின் இரண்டாவது பகுதியில் ஜோதிகாவும்,அஜீத்தும் ரயில் தண்டவாளத்தில் படம் பிடித்திருக்கும் விதமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்!! :-)

பாடலின் வரிகளைப் பார்க்க

பாடலைக் கேட்க
Get this widget Track details eSnips Social DNA

3.)பாடல் : சொந்தம் வந்தது
படம் : புது பாட்டு
இசை : இளையராஜா
பாடகி : சித்ரா
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் (சரியா தெரியல)

இளையராஜாவின் கிராமிய பாடல்கள் மேல் எனக்கு என்றுமே ஒரு தனி மோகம் உண்டு!கிராமியப்பாடலுக்கு ஏற்ற எளிமையும் இனிமையும் சேர்ந்து கண நேரத்தில் என் உதடுகளில் புன்னகையை வரவழைத்து விடும்.எளிமையான பாட்டாக தோன்றினாலும் பாடலை பாடிய விதம் மற்றும் இசையமைப்பில் உள்ள நேர்த்தியை கவனிக்காமல் இருக்க முடியாது.
உதாரணமாக
கண்ணேன்னு சொல்ல வேண்டாம்,கிளியேன்னு கில்ல வேண்டாம்,
கண்ணாலே கொஞ்சம் பாரு போதும்

என்று சித்ரா பாடும் போது,அதில் காதல் சுவையோடு சேர்ந்த மிடுக்கும் பளிச்சிடும்.அந்த வரியின் முடிவில் அழகான புல்லாங்குழலின் இசையோடு முடித்திருக்கும் விதம் ,இந்த படோடாபமில்லா பாட்டுக்கு அவர்கள் எடுத்திருக்கும் நுணுக்கமான உழைப்புக்கு சான்று.
மேலே பார்த்த வரியை போல ஒரு கிராமத்து பெண்ணின் கலங்கமில்லா காதலை எடுத்து கூறும் வகையில் அற்புதமான பாடல் வரிகள்.
இப்படி பல விஷயங்களால் நாம் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்றாக இந்த பாட்டு அமைந்து விடுகிறது.

பாடலைக் காண

பாடலைக் கேட்க
Get this widget Track details eSnips Social DNA

4.)பாடல் : முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
படம் : ஆஹா
இசை : தேவா
பாடகர் : ஹரிஹரன்
பாடலாசிரியர் : வைரமுத்து

மிகவும் பிரபலமான பாடல்.பாடலின் காட்சியமைப்பும் இந்த பாடலின் மிகப்பெரிய பக்கபலம்.ஒரு இளைஞனின் துடிப்பும் ,காதலால் அவனுள் ஏற்படும் உற்சாகமும் மிக அழகாக வெளிக்கொணர்ந்திருப்பார் இயக்குனர்.பாடல் முழுக்க கதாநாயகன் ஆட்டம்,பாட்டம் என்று ஓடிக்கொண்டு இருந்தாலும் பாடல் முழுக்க காட்சி ஸ்லோ மோஷனில் தான் போகும்,ஆனாலும் பாடலின் உணரச்சியில் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல்,காதல் செய்தால் இவ்வளவு சந்தோஷமா என்று நம்மையும் யோசிக்க வைத்து விடும்.
இசை பாடல் பாடப்பட்ட விதம்,வரிகள் என மற்ற அம்சங்களும் கனக்கச்சிதமாக பொருந்தியிருக்கும் பாடல்.இளமையையும் காதலையும் கண்டு பார்த்து நாம் பொறாமை பட வைத்துவிடும் பாடல்!
http://www.youtube.com/watch?v=GgPKtSrDp58

Get this widget | Track details | eSnips Social DNA

5.)பாடல் : மலரே மௌனமா
படம்: கர்ணா
இசை : வித்யாசாகர்
பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,எஸ்.ஜானகி
பாடலாசிரியர் : வாலி
ஆகா!
என்ன ஒரு இனிமை,என்ன ஒரு இனிமை!!! ஹிந்துஸ்தானி இசையின் இதமும் பதமும் முழுமையாக இந்த தமிழ் பாடலில் கேட்டு ரசிக்கலாம்!!
அதுவும் எஸ்.பி.பி மற்றும் ஜானகி பற்றி சொல்லவும் வேண்டுமா??? தங்களின் தேனினும் இனிய குரலின் மூலம் பாடல் முழுவதும் இழைத்தார் போல் அப்படி ஒரு மென்மை!!
பாடலுக்கு வாலியின் வைரவரிகள் பாடலின் அழகுக்கு அழகு சேர்ப்பவை

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ?
மீதி ஜீவன் என்னை பார்த்த போது வந்ததோ..

போன்ற வரிகள் நம் இதயத்திற்கு ஒற்றடம் கொடுக்க வல்லவை!
அதனுடன் மலை பிரதேசத்தில் எடுக்கப்பட்ட கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சியமைப்பு இந்த பாட்டில் இன்னொரு ரசிக்கவைக்கும் அம்சம்.

பாடலைக் காண

பாடலைக் கேட்க
Get this widget Track details eSnips Social DNA

எனக்கு பிடித்த பாடல்கள் உங்கள் ரசனைக்கும் விருந்தாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்!!!
வாய்ப்பளித்த கானா பிரபா அண்ணாச்சிக்கு மிக்க நன்றி!!
:-)

17 comments:

கோபிநாத் said...

எங்கள் காதல் இளவரசன்..ச்சே..இல்லை..இல்லை அரசன் திரு. சீவிஆர்யின் காதல் தொகுப்பு பாடல் ஒவ்வொன்னும் சூப்பரே சூப்பர் ;))

\\ிதறிக்கிடக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் பிடித்தமான ஐந்தை தேர்ர்ந்தெடுப்பது போல்.\\

ஆஹா..ஆஹா..உவமை எல்லாம் பின்னுறிங்க தல ;))

எம்புட்டு அழக இருக்காரு பாருங்க எங்கள் அரசன்...;))

ராணிகளே விரைந்து வாருங்கள் (பாடலை கேட்டக) ;))

CVR said...

அண்ணாச்சி!!
அநியாயத்துக்கு இப்படி புகழ்ந்து போட்டுட்டீங்களே!!உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல?? :-))

உங்க அன்புக்கு மிக்க மிக்க நன்றி!!

வாய்ப்பளித்தமைக்கும்,தங்களின் அறிமுகத்திற்கும் என் பணிவான வணக்கங்கள் மற்றும் நன்றிகள்!! :-)
பாடல்கள் வாசகர்களுக்கு சுவையான விருந்தாக அமைந்தால் சந்தோஷம்!! :-)

CVR said...

@கோபிநாத்!!
இன்னைக்கு கும்மி இங்கிட்டு தானா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்!!

சின்ன பையன் கொஞ்சம் பாத்து கும்முங்க!! :-P
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

கோபிநாத் said...

1. \\சில பாடல்கள் நாம் அமைதியாக இருக்கும் போது,குதூகலமாக இருக்கும் போது,சோகமாக இருக்கும் போது இப்படி பற்பல நேரங்களில் கேட்க பிடிக்கும்,ஆனால் இந்த பாட்டை நான் எப்பொழுது கேட்டாலும் என் மனதை மயக்கி விடும்.\\

உண்மை தான் சீவிஆர்....ஜோசுதாஸ், சித்ரா குரல்களில் மிகவும் இனிமையாக இருக்கும் ;)

2. \\ஒரு ரயில் போகும் ஓசையை பிண்ணனியாக வைத்து வித்யாசாகர் அழகாக இசை அமைக்க,தனக்கே உரித்தான உணர்வு பூர்வமான குரலில் சங்கர் மஹாதேவன் பட்டையை கிளப்பியிருப்பார்.\\

அந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமையான பாடல்கள். பாடல் வரிகள், இசையின் வேகம், காட்சி அமைப்பு என்று எல்லாம் அழகாக பொறுந்தியிருக்கும் ;)

3. \\ அந்த வரியின் முடிவில் அழகான புல்லாங்குழலின் இசையோடு முடித்திருக்கும் விதம் ,இந்த படோடாபமில்லா பாட்டுக்கு அவர்கள் எடுத்திருக்கும் நுணுக்கமான உழைப்புக்கு சான்று.\\

எனக்கும் மிகவும் பிடித்த பாடல்....;))

4. \\ மிகவும் பிரபலமான பாடல்.பாடலின் காட்சியமைப்பும் இந்த பாடலின் மிகப்பெரிய பக்கபலம்.ஒரு இளைஞனின் துடிப்பும் ,காதலால் அவனுள் ஏற்படும் உற்சாகமும் மிக அழகாக வெளிக்கொணர்ந்திருப்பார் இயக்குனர்.பாடல்\\

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம்....மென்னையான பாடல் ;)

5. \\பாடல் : மலரே மௌனமா\\

பாடல் காட்சிகள், இசை, வரிகள், குரல் என்று அனைத்தும் இந்த பாடலிலும் பொறுந்தியிருக்கும். நீங்கள் குறிப்பிட்டு இருப்பதை போல மலைபிரதேசத்தில் எடுக்கப்பட்டது சிறப்பு ;)

ரசிக்கும் தொகுப்பை தந்தமைக்கு நன்றி சிவி ;)

கோபிநாத் said...

\\CVR said...
@கோபிநாத்!!
இன்னைக்கு கும்மி இங்கிட்டு தானா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்!!

சின்ன பையன் கொஞ்சம் பாத்து கும்முங்க!! :-P
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-\\

யாரு நீங்க சின்ன பையன்...இது உங்களுக்கே ஓவராக தெரியல...;))

Anonymous said...

//சின்ன பையன் கொஞ்சம் பாத்து கும்முங்க!! :-P
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-\\
//

அண்ணா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?

Anonymous said...

கண்ணு பட போகுது சிவிஆர்.அம்மா கிட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க.கோபி கண்ணு கொள்ளி கண்ணு வேற.ஹிஹி

//ராணிகளே விரைந்து வாருங்கள் (பாடலை கேட்டக) ;))
//

ராணிகளே அப்படியே எங்க அண்ணன் சிவிஆரையும் பார்கனும்:D

Anonymous said...

சிவிஆர் அண்ணா உங்களுக்குப் பிடித்த பாடல் எல்லாம் அருமை :D

TBCD said...

டவுசர் பாண்டி பாக்க வாங்கன்னு...தர்கா அழைப்பு விடுத்தா..பார்த்தா சீவிஆர்...என்ன கொடுமை ஐயா இது...

///aruntha: dont forget to see our hero sir
me: யாரு..
aruntha: see the link
u will know
Sent at 10:21 AM on Friday
me: எனக்கு வேற வேலை இல்லையா..
ஏதாவது டவுசர் பாண்டி..சித்தார்த் மாதிரி..
போட்டு வைச்சியிருக்கப் போறே..
நான் பாக்க மாட்டேன்..
//

துளசி கோபால் said...

ஆஹா............ ஆஹா.........

அந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அந்த க்ளாஸ் ஹவுஸ் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்.

ஷாலினி said...

ஐந்து பாடல்களும் அருமை!

சகலகலா வல்லவர் CVR வாழ்க!! :)

//இளமையையும் காதலையும் கண்டு பார்த்து நாம் பொறாமை பட வைத்துவிடும் பாடல்!//

ஏனுங்க உங்க ராணியோட இப்படி டூயட் பாட முடியலையா? ;)

MyFriend said...

சான்ஸே இல்ல.. பாடல்கள் தேர்வு கலக்க்கலோ கலக்கல். :-))))

விஞ்ஞானி விஞ்ஞானிதான்.. :-)

CVR said...

@கோபிநாத்
ஒவ்வொரு பாட்டுக்கும் பொறுமையா உங்க கருத்தை சொல்லியிருக்கீங்க!
நன்றி அண்ணாச்சி

@துர்கா
பாட்டுக்கள் உங்களுக்கும் பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி யக்கோவ்

@டிபிசிடி
ஹா ஹா!! :-))

@துளசி டீச்சர்
ஆமாம் டீச்சர்!! நல்லா அழகாக படமாக்கப்பட்ட பாட்டு அது

@ஷாலினி
வாழ்த்துக்களுக்கு நன்றி ஷாலினி!!
நீங்க கோயம்முத்தூர் பக்கமா???
குசும்பு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு!! ;)

@மை ஃபிரண்ட்
//விஞ்ஞானி விஞ்ஞானிதான்.. :-)//

விஞ்ஞானி விஞ்ஞானிதான்,கம்பவுண்டர் கம்பவுண்டர்தான்,போஸ்ட்மாஸ்டர் போஸ்ட்மாஸ்டர் தான்,டேமேஜர் டேமேஜர்தான்!!அதுல என்ன சந்தேகம் இப்போ!!

பாடல்கள் உங்களுக்கும் பிடிச்சிருந்துதா??
மிக்க மகிழ்ச்சி மை ஃபிரண்ட்!! :-)

G.Ragavan said...

காதல் கவிஞர் என்பவர் காதல் இளவரசர் என்பதையும் நினைவுபடுத்தும் வகையில் பாடலைக் கொடுத்துள்ளார். ஐந்து பாடல்கள்களுமே அருமை. நல்ல தேர்வுகள்.

கானா பிரபா said...

காமிரா கவிஞரின் பாடல் தேர்வைக் கேட்டு மொய் வச்சுப் போன அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ;-)

M.Rishan Shareef said...

அன்பின் CVR,

//புகைப்படங்களால் கவிதை படைக்கும் "காமிரா கவிஞர்" CVR. இவரின் காமிரா தொட்டதெல்லாம் பொன் தான் என்பதை இவர் படைக்கும் தமிழில் புகைப்படக்கலை தொடர் நிரூபித்து வருகின்றது.//

மிக‌ச் ச‌ரியாக‌ச் சொல்லியிருக்கிறார் ந‌ண்ப‌ர் கானாபிர‌பா :)

1.சொர்க்க‌த்தின் வாச‌ல்ப‌டி...

//சில பாடல்கள் நாம் அமைதியாக இருக்கும் போது,குதூகலமாக இருக்கும் போது,சோகமாக இருக்கும் போது இப்படி பற்பல நேரங்களில் கேட்க பிடிக்கும்,ஆனால் இந்த பாட்டை நான் எப்பொழுது கேட்டாலும் என் மனதை மயக்கி விடும்.//

என்னையும் ம‌ய‌க்கிய‌ பாட‌ல் இது.

//தொடக்கத்தில் சாக்ஸ் தரும் கிறக்கம் கலையும் முன்னரே யேசுதாஸின் தெய்வீக குரல் மயக்கத்தை ஆழப்படுத்தி எனை ஒரு வித அமைதியான நிலைக்கு அழைத்து சென்றுவிடும்.சின்னக்குயில் சித்ராவின் இனிமையான குரலும் சேர்ந்துக்கொண்டு பாடல் முடியும் வரை என்னை பரவசத்தில் ஆழ்த்தி விடும்!!//

நிச்ச‌ய‌மாக‌.சித்ராவின் குர‌ல் இதில் மிக‌ இள‌மையாக‌ இருக்கிற‌து அல்ல‌வா?

//இத்தனையும் சொல்லிவிட்டு இந்த பாடலின் வரிகளை பற்றி குறிப்பிடவில்லை என்றால் எனக்கு அடுத்த வேளை சோறு கிடைக்காது!!!//

வீட்டுக்கார‌ம்மா,ரொம்ப‌ ப‌ய‌முறுத்திட்டாங்க‌ளோ?

2.தாலாட்டும் காற்றே வா
இந்த‌ப் பாட‌ல் என‌க்கும் பிடிக்கும்.அருமையான‌ இசை ர‌யில் சப்த‌த்தோடு இசைந்து வ‌ர‌ ர‌யில் பாதையும்,வீதியும் ஒருசேர‌க் காட்சிப் ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கும்...அழ‌கு.3.சொந்தம் வந்தது

//இளையராஜாவின் கிராமிய பாடல்கள் மேல் எனக்கு என்றுமே ஒரு தனி மோகம் உண்டு!கிராமியப்பாடலுக்கு ஏற்ற எளிமையும் இனிமையும் சேர்ந்து கண நேரத்தில் என் உதடுகளில் புன்னகையை வரவழைத்து விடும்.எளிமையான பாட்டாக தோன்றினாலும் பாடலை பாடிய விதம் மற்றும் இசையமைப்பில் உள்ள நேர்த்தியை கவனிக்காமல் இருக்க முடியாது.
உதாரணமாக
கண்ணேன்னு சொல்ல வேண்டாம்,கிளியேன்னு கில்ல வேண்டாம்,
கண்ணாலே கொஞ்சம் பாரு போதும்

என்று சித்ரா பாடும் போது,அதில் காதல் சுவையோடு சேர்ந்த மிடுக்கும் பளிச்சிடும்.அந்த வரியின் முடிவில் அழகான புல்லாங்குழலின் இசையோடு முடித்திருக்கும் விதம் ,இந்த படோடாபமில்லா பாட்டுக்கு அவர்கள் எடுத்திருக்கும் நுணுக்கமான உழைப்புக்கு சான்று.
மேலே பார்த்த வரியை போல ஒரு கிராமத்து பெண்ணின் கலங்கமில்லா காதலை எடுத்து கூறும் வகையில் அற்புதமான பாடல் வரிகள்.//

என‌து ம‌ன‌திலிருந்த‌வ‌ற்றை அழ‌காக‌ச் சொல்லியிருக்கிறீர்க‌ள்.வேறென்ன‌ நான் சொல்ல‌?

4.முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
//இளமையையும் காதலையும் கண்டு பார்த்து நாம் பொறாமை பட வைத்துவிடும் பாடல்!//

ஆமாம்.ப‌ழைய‌ அனுப‌வ‌ங்க‌ள் எல்லாம் இப்பொழுது நினைவுக்கு வ‌ருகிற‌துதானே ந‌ண்ப‌ரே :P

5.மலரே மௌனமா
ஆஹா...எப்பொழுது
கேட்டாலும் ம‌ன‌தை ம‌ய‌க்கும் பாட‌லிது..

காட்சிய‌மைப்புக் கூட‌ அழ‌கான‌ ப‌னிம‌லையில் என்னை உருக‌வைத்துவிடுகிற‌து.

ந‌ண்ப‌ர் CVR இன் தெரிவுக‌ள் மிக‌ அருமை.
பாட‌ல்க‌ளுக்கு ந‌ன்றிக‌ள் ,கானாபிர‌பா.

ந‌ண்ப‌ர் இன் தெரிவுக‌ள் மிக‌ அருமை.
பாட‌ல்க‌ளுக்கு ந‌ன்றிக‌ள் ,கானாபிர‌பா.