இந்த றேடியோஸ்பதியில் உங்கள் விருப்பப் பாடல்களையும் கூடவே ஒரு சில என் விருப்பப் பாடல்களையும் கொடுத்து வந்த நான் இந்தப் பதிவின் மூலம் எனக்குப் பிடித்த சில அரிய தேர்வுப் பாடல்களைத் தரலாம் என்றிருக்கின்றேன்.
அந்த வகையில் இந்தப் பதிவில் "என் அருகில் நீ இருந்தால்" திரைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்களத் தருகின்றேன். என் பள்ளிக்காலத்தில் ரசித்த பாடல்களில் என்றும் நீறு பூத்த நெருப்பாய் இருப்பவற்றில் இவையும் ஒன்று. ஆனால் பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. இப்போது சின்னத்திரையில் பிரபலமாக விளங்கும் சுந்தர் கே. விஜயன், ஆரம்பத்தில் படம் இயக்கவந்த போது எடுத்துக் கெடுத்த படம் இது. இந்தப் பாடல்களைக் கேட்டு பத்து வருடங்களின் பின் போன வருஷம் ஏதோ ஒரு வீடியோ கடையில் பழைய வீடியோ காசெட்டுக்களுக்குள் புதைந்து கிடந்த இந்தப் படத்தை எடுத்து வந்து பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு எடுத்த ஒரு சொதப்பல் படத்துக்கு இளையராஜாவின் இசை வீணடிக்கப்பட்டிருந்தது.
இங்கே நான் தரும் பாடல்களில் முதலில் மனோ, உமா ரமணன் பாடும் "ஓ உன்னாலே நான் பெண்ணாகினேன்" என்ற பாடல் வருகின்றது. இருவருமே கருத்தொருமித்து ராஜாவின் இசையை உணர்ந்து ஜீவன் கொடுத்திருக்கின்றார்கள். சென்னை வானொலி தான் 90 களில் இந்தப் பாடலை எனக்கு அறிமுகப்படுத்தியது. இதைக் கேட்காதவர்களுக்கும், நீண்ட நாள் கழித்துக் கேட்பவர்களுக்கும் இது ஒரு சந்தர்ப்பம். இதோ
அடுத்து நான் தருவது இளையராஜாவே இசையமைத்துப் பாடும் " நிலவே நீ வரவேண்டும்" என்ற பாடல். பாடல் முழுக்க உறுத்தல் இல்லாத கிற்றார் இசை தவழ வரும் பாடல் எப்போதும் கேட்க இதமானது. பாடலில் வித விதமான சங்கதிகள் கொடுத்து அவற்றைத் தானே பாடி எம்மை ரசிக்க வைத்திருக்கின்றார் ராஜா.
9 comments:
இந்த இரண்டு பாடல்களும் கேட்டதில்லை. தொண்ணூறுகளில் இளையராஜா இசைக் கேட்புக் குறைந்திட்ட காலம். பல படங்களும் பாடல்களும் கேட்டதில்லை.
உமாரமணன் மிக அழகாகப் பாடியிருக்கிறார். அவருக்குத் திருஷ்டி வேண்டாமா... கூடவே மனோ அழுகின்றாரே...
என்னைக் கவர்ந்தது ரெண்டாவது பாடல் தான் அண்ணாச்சி! இளையராஜாவின் அந்த "ஓ..ஓ..ஓ" குரலில் வெறும் தபேலாவும் கிட்டாரும் சூப்பர்!
மொத பாட்டில் மனோ ஏனோ...:-(
வாங்க ராகவன்
இப்படி அதிகம் கேள்விப்படாத பாடல்களில் ஏனோ எனக்கு தனி ஈர்ப்பு.
ஆனாலும் நீங்க மனோவ அழ வச்சிருக்க வேண்டாம் ;-)
\\kannabiran, RAVI SHANKAR (KRS) said...
என்னைக் கவர்ந்தது ரெண்டாவது பாடல் தான் அண்ணாச்சி! இளையராஜாவின் அந்த "ஓ..ஓ..ஓ" குரலில் வெறும் தபேலாவும் கிட்டாரும் சூப்பர்!\\
தல KRSக்கு ஒரு ரீப்பிட்டேய்ய்ய்...
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
என்னைக் கவர்ந்தது ரெண்டாவது பாடல் தான் அண்ணாச்சி! இளையராஜாவின் அந்த "ஓ..ஓ..ஓ" குரலில் வெறும் தபேலாவும் கிட்டாரும் சூப்பர்!//
வாங்க ரவிஷங்கர்
அவர் எப்பவுமே ராஜா தான் ;-)
இப்பொழுது தான் முதல் முறை கேட்கிறேன்,இந்த இரண்டு பாடல்களையும்.அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணாச்சி!! :-)
//கோபிநாத் said...
\இளையராஜாவின் அந்த "ஓ..ஓ..ஓ" குரலில் வெறும் தபேலாவும் கிட்டாரும் சூப்பர்!\\
தல KRSக்கு ஒரு ரீப்பிட்டேய்ய்ய்...
தல
ரிப்பீட்டு போட்டு உங்க ஹார்ட் பீட்டை சொல்லீட்டிங்க
//CVR said...
இப்பொழுது தான் முதல் முறை கேட்கிறேன்,இந்த இரண்டு பாடல்களையும்.அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணாச்சி!! :-)//
வருகைக்கு நன்றி தல, இன்னும் வரும்
என்னுடைய பிரதானமான ஆல்பங்களில் ஒன்று இது பிரபா. இதில் வரும் ’பாடு பாட்டெடுத்து’ என்ற பாடாவதி பாடலைத்தவிர மற்ற அனைத்துமே எனக்குப் பிடித்தது. ’ஒரு கணமாயினும்’ என்று அருண்மொழி பாடும் பாடலும், ஹீரோயின் அறிமுகப்பாடலாக இருக்கும் ‘உதயம் நீயே’ பாடலும், இ.ரா., ஜானகியின் ‘இந்திரசுந்தரியே’ பாடலும் ஆகிய மூன்றும் மற்ற மூன்ற மறக்க முடியாத பாடல்கள். பகிர்ந்து மகிழ்ந்தமைக்கு நன்றி.
Post a Comment