Pages

Saturday, December 23, 2023

🎸தமிழ்த் திரையிசை 2023 🎸 ❤️என் விருப்பத் தேர்வுகள் ❤️

இந்த ஆண்டு என்னை மிகவும் ஆக்கிரமித்த பாடல் என்றால் அது இசைஞானியின் “வழி நெடுக காட்டுமல்லி” பாடல் தான். எங்காவது வானொலி வழியாக இந்தப் பாடல் எழும் போது அந்தக் காலத்து 80கள், 90கள் காலத்து இன்பப் பரவசத்தில் தள்ளி விடும் இந்தப் பாட்டு.

ஆகவே அதிகம் கேட்ட புதுப்பாட்டு என்ற தெரிவில் இதையே நான் என் பங்கில் பரிந்துரைப்பேன்.

அத்தோடு இந்த ஆண்டின் சிறந்த ஜோடிக் குரல் பாடலாக இதற்கே அதிக ஓட்டு கொடுப்பேன். 81 வயசு இளைஞரோடு ஈடு கட்டிப் பாடுவதும், நுணுக்கமான சங்கதிகளில் பெப்பர்மிண்ட் குரலாய் மின்னும் அனன்யா பட் அழகுக் குரல் வெகு காலத்துக்குப் பின் இளையராஜாவுக்குக் கிடைத்தது என்று சொன்னாலும் மிகையில்லை.


சித் ஶ்ரீராம் அலை அதிகம் அடிக்காத ஆண்டு இதுவென்று சொல்லலாம் போல. அந்த இடத்தில் ஷான் ரால்டன் பிடித்து விட்டார். எனக்கு அவரின் நாசிக் குரல் மிகவும் பிடித்துப் போனதால் “நான் காலி” கேட்கும் போதெல்லாம் “நானும் காலி”.

இந்தப் பாடலோடு அதிகம் கேட்ட அவரின் “ஜிங்க்ர டங்கா” வும் என் பெரு விருப்பங்கள். ஆகவே 2023 இல் சிறந்த பாடகர் என்ற வகையில் ஷான் ரால்டனையே முன்மொழிவேன்.


வள்ளலார் இராமலிங்க அடிகளின் “அருட்பெருஞ்சோதி” 


https://youtu.be/bgVyPf30Zb8?si=vvlKjuun45lIKLpQ


இளையராஜாவின் கை வண்ணத்திலும் (விடுதலை 1),


பட்டினத்தாரின் “ஐயிரண்டு திங்களாய்” https://youtu.be/JSdVFmTs_BE?si=BLqnyoKZo4v2Sv2D


கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் “தண்டட்டி” படத்துக்காக இந்த 2K kids யுகத்திலும் வந்திருப்பது இன்ப அதிர்ச்சி என்றால்,

நாடி நரம்பை முறுக்கேற்றும் 

“சிவ சிவாயம்”


https://youtu.be/HCS71yTNDMo?si=0joJVGfQ_H8F3mGT


பாப நாசம் சிவனின் “என்னப்பன் அல்லவா” பாடலோடு இழைத்து சாம் C.S Sam C S கொடுத்தது ஆகச் சிறப்பு.

இந்த 2023 இசையமைப்பாளர் சாம் C.S இற்கு அதிக படங்களை வாரி வழங்கியுள்ளது.


ஒரு படத்தின் உணர்வோட்டத்துக்குப் பாடல்களின் தேவை எவ்வளவு தூரம் பொருந்த வேண்டும் என்பதற்கு “அயோத்தி” இசையமைப்பாளர் ரகுநந்தன் கச்சிதமாகத் தன் பொறுப்பை வழங்கியிருக்கிறார்.


“ஒத்தையில நின்னதென்ன” என்று வெகுளிப் பெண் ஊர்வசிக்குப் பாடிய சித்ரா,  30 வருடங்கள் கழித்து “அப்பத்தா” ஊர்வசிக்கும் 

“எங்கூரு காத்தாயி”க்கும்


https://youtu.be/jR3vaIMWONY?si=nkdcCwkMby4erqCd


குரல் கொடுத்தது காலம் சேர்ப்பித்த பொக்கிஷம்.


Modern Love Chennai தவிர்க்க முடியாத இசைப் பெட்டகம் என்பதால் அதுவும் இந்த ஆட்டத்தில் சேர்ந்து கொள்கின்றது.


தொடர்ந்து என் மனதைத் தொட்ட 2023 பாடல் பட்டியல். இது எந்த விதத் தரவரிசையில் அமைந்தது அல்ல.


1. வழி நெடுக காட்டுமல்லி - விடுதலை

2. ஒன்னோட நடந்தா -   விடுதலை 

3. அருட்பெரும்ஜோதி - விடுதலை

4. ஆராரிரரோ கேட்குதம்மா - வாரிசு

5. கடற்கரை காத்து வீசுதே - பொம்மை நாயகி

6. அவள் ஒரு வரம் - ரன் பேபி ரன்

7. கேசக் காதலா - டாடா

8. தங்கமணிப் பொன்னாரம் போல் - டாடா

9. சிவ சிவாயம் - பகாசுரன்

10. ஒருதலைக் காதலைத் தந்தே - வாத்தி

11. கண்ணான கண்ணே நீ - Thugs

12. காற்றோடு பட்டம் போல - அயோத்தி

13. நல்லவர்கள் கூடும் போது - அயோத்தி

14. ராவடி - பத்து தல

15. நர நர நகர - பத்து தல

16. நினைவிருக்கா - பத்து தல

17. அக நக - பொன்னியின் செல்வன் 2

18. ஆழிமழைக் கண்ணா - பொன்னியின் செல்வன் 2

19. சின்னஞ்சிறு நிலவே - பொன்னியின் செல்வன் 2

20. வா தாரகையே - திருவின் குரல்

21. ஓர் காதல் கனா - பர்ஹானா

22. ஸாரா வா முன்னாலே - பர்ஹானா

23. நான் காலி - குட் நைட்

24. ஐயிரண்டு திங்களாய் - தண்டட்டி

25. நெஞ்சமே நெஞ்சமே - மாமன்னன்

26.  நெஞ்சமே நெஞ்சமே (தேவா) - மாமன்னன்

27. ராசாக்கண்ணு - மாமன்னன்

28. ஜிகு ஜிகு ரயில் - மாமன்னன்

29. மலர்தான் விழுந்தது - அநீதி

30. எங்கூரு காத்தாயி - அப்பத்தா

31. வா நு காவாலயா - ஜெய்லர்

32. எதுதான் இங்க சந்தோஷம் - லக்கி மேன்

33. அன்னை தந்தை - Are you ok baby?

34. ஜிங்க்ர டங்கா - Modern Love Chennai

35. நெஞ்சில் ஒரு மின்னல் - Modern Love Chennai


கானா பிரபா 

21.12.2023