
"உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே" என்ற பாடலினை இயக்குனர் வி.சி.குகநாதன் தன் படமொன்றுக்கு வைரமுத்து பாடலை எழுத இளையராஜா இசையில் உருவாக்கியிருந்தார். ஆனால் அந்தக் குறித்த படத்தில் பயன்படுத்த முடியவில்லை. ஜேசுதாசின் பாடல்களை விரும்பி ரசிக்கும் ஏ.வி.எம்.சரவணன் இப்பாடலைப் பயன்படுத்தும் நோ அப்ஜெக்க்ஷன் ரிப்போர்ட்டை வி.சி.குகநாதனிடம் இருந்து பெற்றுப் பயன்படுத்தினார். கூடவே இப்பாடலின் மெட்டை வைத்தே இன்னொரு சிறு சோகப் பாடலும் அமைக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தை வைத்து இதுவரை எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் இது என்று மேலே சொன்ன செய்திகளோடு தனது "ஏ.வி.எம் 60 - சினிமா" என்ற தனது நூலில் குறிப்பிட்டிருக்கின்றார் தயாரிப்பாளர் சரவணன்.
கடந்த ரேடியோஸ்புதிரில் நான் தந்த உபகுறிப்புக்களின் விளக்கம் இதுதான்.
இந்தப் படத்தின் ஒரு பாதி இன்னொரு நடிகரின் படமொன்றின் தலைப்பு என்று கூறியிருந்தேன். அந்தப் படம் நல்லவன், நாயகனாக நடித்தவர் விஜய்காந்த். இந்த இரு படங்களின் இயக்குனருமே எஸ்.பி.முத்துராமன் தான்.
இப்பாடலினை கே.ஜே.ஜேசுதாசோடு இணைந்து பாடகி மஞ்சுளா தமிழில் அவ்வளவு பிரபலமாகாத கன்னடத்துப் பாடகி.
இப்படத்தில் நடித்த வாரிசு நடிகர் கார்த்திக்.
"உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்" சந்தோஷ மெட்டு.
"என்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய்" சோக மெட்டு