நேற்றைய றேடியோஸ்பதி புதிரில் கேட்ட கேள்விக்கான பதில் ஷோபா சந்திர சேகர். அவரின் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே நன்கு அறியப்பட்ட இயக்குனர் நீதியை வைத்து, நீதிதேவதையின் கண்ணைக் கட்டிக் காட்டும் காட்சி வந்த நிறையப் படங்களை இயக்கிவர் அவர். இன்னொரு குடும்ப உறுப்பினர் யாரென்று சொல்லவும் வேண்டுமா, கில்லி கில்லி, விஜய்;-)
ஷோபா சந்திரசேகர் தன் திருமணத்திற்கு முன் லலிதாஞ்சலி என்ற இசைக்குழுவினை, சகோதரர் பாடகர் எஸ்.என்.சுரேந்தர், சகோதரி ஷீலாவுடன் இணைந்து நடாத்தி வந்திருக்கிறார்.
எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் 1967 இல் வெளியான இருமலர்கள் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக , ரி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்து "மகராஜா ஒரு மகராணி என்ற பாடலைப் பாடியிருக்கிறார். (தகவல் உதவி:ஆறாந்திணை)
அந்தப் பாடலைக் கேட்க:
திருமணத்தின் பின்னர் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் நிறையப் படங்களுக்கு கதாசிரியர், தயாரிப்பாளராக இருந்திருக்கிறார் இவர். 90 களில் ஆரம்பத்தில் நிறைய புதுமுக இயக்குனர்கள், நடிக நடிகர்கள் என்ற ஒரு ஒரு ட்ரெண்ட் முளைத்தது. அப்போது தான்
தானே இயக்கி 1991 இல் நீரஜ், மம்தா குல்கர்னி நடித்த "நண்பர்கள்" என்ற படத்தை முதலில் இயக்கினார். படத்தின் இசை: பாபு போஸ். படத்தின் பாடல்கள் வடநாட்டு மெட்டிலும் இசையிலும் கலக்கி படம் பெரிய ஹிட்டானது.
அந்தப் படத்தில் வரும் "என்னுயிரே என்னுயிரே" பாடலைக் கேட்க
நண்பர்கள் படத்தின் வெற்றியால் மீண்டும் நீரஜை நாயகனாக வைத்து, பர்வீன் என்ற நாயகியோடு, இசைஞானி இளையராஜாவின் இசையில் "இன்னிசை மழை" என்னும் படத்தைக் கொடுத்தார். பொதுவாகவே இசை, பாட்டு என்று படத்தலைப்பு வந்தால் பின்னி பெடலெடுக்கும் இளையராஜா எட்டுப் பாடல்களைப் போட்டுக் கொடுத்து அசத்தினார். பாடல்கள் பெரும் வெற்றி. ஆனால் பாடல்கள் நன்றாக இருந்து என்ன பயன். படம் மகா சொதப்பல். அதை தோல்விப் படமாக்கி ரசிகர்கள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த, கஸல் பாணியில் வரும், சுரேந்தர், இளையராஜா பாடும் "மங்கை நீ மாங்கனி"
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "வா வா மன்னவா"
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "தெற்கே பிறந்த கிளி"
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
/அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த, கஸல் பாணியில் வரும், சுரேந்தர், இளையராஜா பாடும் "மங்கை நீ மாங்கனி"/
எனக்கும் மிக பிடித்த பாடல்.
தல
நேத்து ராத்திரியே கண்டுபிடிச்சுட்டோம்...நானும் சென்ஷியும்...;))
பாடல்களுக்கு நன்றி தல :)
நான்தான் முதல்.பிரபா நான் பாத்துக் கொண்டே இருந்தேன்.நீங்க புதிர் பதில் போடுற வரைக்கும்.ஏனென்றா எனக்கு பதில் தெரியாது.உங்கள் தேடல் அபாரம்.உங்களைச் சொல்லியே இங்கு உங்கள் நண்பர் ஒருவர் தினமும் என்னிடம் நல்ல திட்டு வாங்குவார்.யார் என்று தெரியுமா?(புதிர் போடுபவருக்கே புதிர்)மகராஜா ஒரு மகராணி எப்போ கேட்டாலும் முடியும்வரை கேட்கத் தூண்டும் பாடல்.
ஐயோ..யார் அது.இப்போ பாக்கிறப்போ யாருமில்லையே.எப்பிடி 2ஆசான்கள் இங்கே.3ஆவதா வந்திட்டேனே!!!அடுத்த முறை பாக்கலாம்.ம்ம்ம்ம்ம்
நிஜமா நல்லவன்
தொடர்ந்து போட்டிகளில் கலக்குறீங்களே ;)
தல கோபி
சென்ஷி சொன்னார் சரி, நீங்க உள்ளேன் ஐயா தானே போட்டீங்க
ஹேமா
உங்கட ஊரில் நம்ம ஆளா, யார் அவர்? புரியாத புதிரா இருக்கே.
நன்றிங்க பிரபா. இவ்வளவு சிரத்தை எடுத்து எனக்காக ....
வருகைக்கு நன்றி இளா
நல்ல பதிவு ப்ரபா. ஷோபா பற்றிய பதிவில் இன்னிசை மழை படத்தில அவுங்க பாடிய தூரி தூரி பாடல் பற்றியே எழுதலை, ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்?
Post a Comment