Pages

Sunday, July 13, 2008

றேடியோஸ்புதிர் 12: யாரந்த இயக்குனர்?


இந்த இயக்குனரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஏற்கனவே நன்கு அறியப்பட்ட இயக்குனராக தமிழ் சினிமாவில் இருந்தவர், இப்போதும் படங்களை அவ்வப்போது இயக்கி வருகின்றார். இன்னொரு குடும்ப உறுப்பினர் கூட சினிமா உலகில் பரபரப்பான ஒருவர்.

இங்கே நான் சொல்லும் இயக்குனர் நட்போடு ஒரு திரைப்படத்தை எடுத்திருந்தார். படம் எதிர்பார்த்ததை விட பெரும் பெயர் கொடுத்தது. அந்த வெற்றிக் களிப்பில் முதல்படத்தில் நாயகனாக நடித்தவரை மீண்டும் நாயகனாக்கி இசையை மையப்படுத்திய படத்தை எடுத்தார். இளையராஜாவும் மனம் வைத்து நிறையப் பாடல்களைப் போட்டுக் கொடுத்தார். ஆனால் பாடல்களுக்குக் கிடைத்த வெற்றி அந்தப் படத்துக்குக் கிடைக்கவில்லை. அந்த இயக்குனரும் மெல்லத் தன் இயக்கும் பணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். நாயகனும் அந்த இரண்டு படங்களோடு காணாமல் போய்விட்டார். கேள்வி இது தான், இந்த இயக்குனர் யார்?

27 comments:

thanjavurkaran said...

shobha Chandrasekaran

கயல்விழி முத்துலெட்சுமி said...

விஜய் அம்மா ஷோபா.. இன்னும் நிறைய க்ளூ இருக்கு அதெல்லாம் சொல்லாமலெ நட்புன்ன வுடனே எனக்கு நியாப்கம் வந்துடுச்சு.. ஹீரோ ஹீரோயின் பொம்மையாட்டம் போட்டா எப்படிங்க படம் ஓடும்..

கானா பிரபா said...

இதுவரைக்கும் இரண்டு பேர் சரியா சொல்லியிருக்கிறீர்கலள், கேள்வி மிகவும் சுலபம் போல ;)

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
இதுவரைக்கும் இரண்டு பேர் சரியா சொல்லியிருக்கிறீர்கலள், கேள்வி மிகவும் சுலபம் போல ;)
///

ஆமாம் ஆமாம் அந்த ரெண்டு பேருல

நாந்தானே மீ த பர்ஸ்ட்டூ :))))))))

G.Ragavan said...

இன்னிசை மழை - ஷோபா

இவங்க பாடகியும் கூட. இவங்க தம்பிதான் எஸ்.என்.சுரேந்தர்.

இன்னிசை மழையில் கதாநாயகி யாரு? யாரோ புதுமுகம்னு நெனைக்கிறேன்.

கானா பிரபா said...

ஆயில்யன்

அந்த ரெண்டு பேரில் நீங்க இல்லை.

இப்ப இன்னொருவர் சரியாகச் சொல்லியிருக்கிறார். ஆக மூன்று.

வல்லிசிம்ஹன் said...

சாய்ஸ்?
1, செல்வராகவன்
2,நாயகன் காணாமப் போயிட்டாரா.... யாரது

ஓ.ராதாமோகன்?

கானா பிரபா said...

வாங்க வல்லியம்மா

செல்வராகவன் தப்பு
அந்த நாயகன் அவ்வளவாக பேசப்படாதவர், பேர் சொன்னாலும் கஷ்டம் தான் ;)
ராதாமோகன் தவறு, அவர் 4 படங்கள் முடிச்சிட்டார்.

thanjavurkaran said...

தூரி தூரி மனதில் ஒரு தூரி
மங்கை நீ மாங்கனி

இந்த க்ளு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

கானா பிரபா said...

தஞ்சாவூர்க்காரரே

பாடல்களைச் சரியா சொன்னீங்க, கேட்ட கேள்விக்கான இயக்குனரும் சொல்லி விடுங்களேன்.

thanjavurkaran said...

ஷோபா சந்திரசேகர்னா

கானா பிரபா said...

தஞ்சாவூர்க்காரரே

இப்ப சரி செஞ்சுட்டீங்க ;-)

கோபிநாத் said...

உள்ளேன் தல ;))

சயந்தன் said...

இளையாராஜாக்கும் கங்கை அமரனுக்கும் அண்ணனா அவர்?

தமிழ்ப்பறவை said...

director shoba chandrasekar

தங்ஸ் said...

ஷோபா சந்திரசேகர்...நண்பர்கள்,இன்னிசை மழை..

சென்ஷி said...

திருமதி. ஷோபா சந்திரசேகர்..

முதல்படம் : நண்பர்கள்..
இரண்டாவது: இன்னிசை மழை

:))

தமிழ்ப்பறவை said...

director shoba chandrasekar..

madhu said...

வணக்கம் திரு கானாபிரபா !

இந்தப் புதிரின் விடை திருமதி ஷோபா சந்திரசேகர்.

அவர் நண்பர்கள் படத்தை அடுத்து எடுத்த இளையராஜாவின் இன்னிசை மழையின் க்தாநாயகன் நீரஜ் அதன் பின் மழை மறைவுப் பிரதேசமாகி விட்டார்...

( அருமையான தங்கள் வலைப்பக்கங்களுக்கு நன்றி.. )

கானா பிரபா said...

ஜி.ராகவன், கயல்விழி முத்துலெட்சுமி, தஞ்சாவூர்காரன், தமிழ்ப்பறவை, தங்க்ஸ், சென்ஷி, மது உங்கள் அனைவரின் பதிலும் சரியானவை.

சயந்தன்

இளையராஜாவும் , கங்கை அமரனுக்கும் அண்ணன் இந்தப் பதிலாக அமையாது,

இன்னும் 12 மணி நேரத்துக்கு இப்போட்டி இருக்கும். பதிலை இன்னும் அளிக்கலாம்.

நிஜமா நல்லவன் said...

ஷோபா சந்திரசேகர்(இன்னிசை மழை இரண்டாவது படம்)

கானா பிரபா said...

நிஜமா நல்லவன்

பின்னீட்டீங்க

நிஜமா நல்லவன் said...

//கானா பிரபா said...
நிஜமா நல்லவன்

பின்னீட்டீங்க//


நீங்க ரொம்ப சுலபமான புதிர் போட்டதால சொல்லிட்டேன். அந்தப் படத்தின் பாடல்களை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். இணையத்தில் எங்கும் காணுமே? உங்களிடம் இருக்கிறதா?

நிஜமா நல்லவன் said...

ஆஹா உங்க பதிவு பக்கம் வந்த ராசின்னு நினைக்கிறேன். பாடல்கள் கிடைத்துவிட்டன. தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறேன்:)

Anonymous said...

innisai mazai - shoba chandrasekar

sariyaa?

N Chokkan,
Bangalore.

கானா பிரபா said...

N.Chokkan

That's the right answer, well done.

கானா பிரபா said...

ஷோபா சந்திரசேகர் என்ற பதிலோடு வந்த அனைத்து நேயர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மீண்டும் இன்னொரு போட்டியில் சந்திக்கும் வரை நன்றி நன்றி நன்றி ;)