Pages

Monday, March 30, 2009

றேடியோஸ்புதிர் 39 - இதுவும் ஒரு பூ

மீண்டும் ராகதேவனின் பின்னணி இசையோடு மலரும் புதிர் இது.

மெல்லிய மயிலிறகாய் வரும் அற்புதமான இந்த இசையோடு ஆரம்பிக்கிறது இப்படம். சாதாரண பாமரத்தனமான காதல் கதை தான் ஆனால் எடுத்த விதம் அழகு. இந்த இயக்குனர் மலையாளத்தில் பெரும் இயக்குனர்களில் ஒருவர். இவரின் இன்னொரு படம் இரண்டு பெரும் தலைகள் நடித்த பிரமாண்டமான படம். இரண்டுக்குக்குமே ராஜா தான் இசை. இந்தப் படத்தின் தயாரிப்பாளரை இரட்டை எழுத்தாலேயே கூப்பிட்டால் போதும், இந்தத் தயாரிப்பாளரும் பின்னாளில் இயக்குனர் ஆனவர்.
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முகப்பு இசையைக் கேட்டு அது என்ன படம் என்று கண்டுபிடியுங்களேன்.

விடையை கண்டுபிடித்தால் பூ என்று ஊதித்தள்ளி விடுவீர்கள் ;)


39.mp3 - Kana Praba

Thursday, March 19, 2009

ஒலியோடு கலக்கும் திரையிசைப் பாடல்கள்

கடந்த றேடியோஸ்புதிரில் கடிகாரம் திருகும் ஓசையோடு ஆரம்பிக்கும் பாடலைப் புதிராகத் தந்திருந்தேன். இன்றைய இசைப் படையலில் புற ஒலிகளை வைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் நான்கைத் தருகின்றேன். இவற்றை விட ஏராளம் பாடல்கள் தமிழ் சினிமாவில் கொட்டிக்கிடந்தாலும் இன்றைய பதிவில் நான்கு வித்தியாசமான களங்களில் இருந்து இந்தப் பாடல்கள் வருகின்றன.

முதலில் வரும் பாடல் பணக்காரன் திரையில் இருந்து "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது" என்ற பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் காதற் பாடலாக அமைகின்றது. கடிகாரத் திருகல் சத்தத்தோடு ஆரம்பிக்கும் இப்பாடற் காட்சியும் மணிக்கூடு ஒன்றிலே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கும். இசைஞானி இளையராஜாவின் சாகித்யங்களில் இதுவும் ஒன்று என்பதை பாடலை உன்னிப்பாகக் கவனிக்கும் போது உணர்ந்து கொள்ளலாம். கடிகாரத்தின் நுணுக்கமான ஒலியில் ஆரம்பிப்பதாகட்டும், பின்னர் சாக்ஸபோனின் ஆரம்பத்தோடு கிட்டார்களின் ஆவர்த்தனம் ஒலிக்கும் போது இணையும் வயலின்களின் ஆலிங்கனம் இடையில் வந்து கலக்கும். கேட்டுப்பாருங்களேன் மீண்டும் அதை உணர்ந்து கொள்வீர்கள்.



ஊர்ப்பெரிய மனுஷர் தம்பியின் தலையில் எண்ணை வைத்து நன்றாகப் பிசைந்து தலையை கொஞ்சம் அதிகமாகவே அடித்து மசாஜ் செய்தவாறே சின்னத்தம்பி பாடும் "அட உச்சாந்தலை உச்சியிலே உள்ளிருக்கும் புத்தியிலே பாட்டு". அப்பாவி சின்னத்தம்பி் மனம் போன போக்கில் பாடும் எசப்பாட்டுக்கு புல்லாங்குழல் ஆமோதிப்போடு, ஜன்னலோரத்தில் ஒளித்திருந்து வளைய வரும் காதலியின் ஏக்கமும் சேர்ந்து கொள்ள அமர்க்களமான மனோ பாடும் இசைஞானியின் மெட்டு இது.



மகேஷ் என்ற அற்புதமான இசைக்கலைஞனை பொறாமை கொண்டு காலன் கான்சரை ஏவி விட்டு நம்மிடம் இருந்து பிரித்துக் கொண்டான். ஒரு சில படங்கள் என்றாலும் மகேஷின் நினைவை மட்டும் காலனால் இசை ரசிகர்களிடம் இருந்து பிரித்து விட முடியாது என்பதற்கு நல்லுதாரணம் "நம்மவர்" திரைப்படம். இப்படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி விழாவில் இசைக்கருவிகள் திருட்டுப் போகவே, பேராசிரியர் கமலும் , மாணவர்களும் வாய் வழி இசை மழை பொழிந்து வழங்கும் புதுமையான பாடல் இது. பின்னணிக் குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



தட் தட் தட் என்று மெதுவாக காலடி ஓசைச் சத்தங்கள் இரண்டு ஜோடி, விடிந்தும் விடியாத பனிக்காலையில் கேட்கிறதா? அது வேறொன்றுமில்லை பருவம் எழுதும் புதிய பாடல் அது. கிட்டாரும், வயலினும் அடக்கி வாசிக்க காதலன் குரலாக எஸ்.பி.பாலசுப்ரமணியமும், காதலி மனசாக எஸ்,ஜானகி ஓசையும் இணைந்து சங்கமிக்கும் "பருவமே புதிய பாடல் பாடு" நெஞ்சத்தைக் கிள்ளாதே திரையில் இருந்து இசைஞானி இளையராஜா இசையில் மலர்கின்றது.


Tuesday, March 17, 2009

றேடியோஸ்புதிர் 38 - கடிகாரக் காதல் பாட்டு்?

தொடர்ந்து இரண்டு புதிர் கொஞ்சம் தாவு தீர வைத்ததால் இந்த முறை கொஞ்சம் இலகுவான புதிரோடு வந்திருக்கின்றேன். பொதுவாக பாடல்காட்சிகளுக்கு பின்னணி ஒலிச்சத்தங்களை இலாவகமாகப் புகுத்தி கலக்கியிருப்பார் இசைஞானி இளையராஜா. இங்கே நான் தந்திருக்கும் ஒலிச்சத்தம் கடிகாரத்தை சாவி கொடுப்பதோடு ஆரம்பிக்கிறது இந்தக் காதல் பாட்டு. சின்ன முள் காதலியாம், பெரிய முள் காதலனாம், காட்சி கூடக் கலக்கல் தான், பாடலைக் கண்டு பிடியுங்களேன் டிங்டாண்டாங்:)


38.mp3 -

ஒகே புதிர் இத்தோடு முடிவடைந்து விட்டது, ஏகப்பட்ட க்ளூக்கள் கொடுத்தும் ஆர்வக் கோளாறினால் முண்டியடித்துக் கொண்டு சில நண்பர்கள் தவறான விடையும் கொடுத்திருந்தீர்கள். சரியான பதில், பணக்காரன் திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது"

Wednesday, March 11, 2009

"பிரேமா - அன்புச்சின்னம்" பின்னணிஇசைத்தொகுப்பு

றேடியோஸ்பதியில் இடம்பெறும் முதல் தெலுங்கு மொழித் திரைப்படமாக இசைஞானி இளையராஜவின் "பிரேமா" இடம்பெறுகின்றது. 1989 இல் வெளிவந்த பிரேமா தமிழில் அன்புச் சின்னம் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.

20 வருஷங்களுக்குப் பின்னர் இந்தப் படம் கைக்கு வந்தது. எவ்வளவோ நல்ல படங்கள் என்றாலும் கால ஓட்டத்தின் பின் அவற்றை மீண்டும் பார்க்கும் போது ரசிக்கும் வண்ணம் இருக்காது ஆனால் இப்படத்தை இப்போது தான் பார்த்தபோது அதே புத்துணர்ச்சியைக் கொடுத்திருந்தது.

தமிழிலும் பெயர் வாங்கிய இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவின் இயக்கத்தில் நடித்த இந்தத் திரைப்படத்தில் அளவுக்கு அதிகமான தமிழ் திரையில் பிரபலமான நடிகர்களின் ஆக்கிரமிப்பினால் தெலுங்குப் படச் சுவடு மொழியில் மட்டுமே தெரிந்தது. வெங்கடேஷ், ரேவதி, மஞ்சுளா, வைஷ்ணவி, சுரேஷ் சக்கரவர்த்தி (அழகன் படத்தில் அதிராம் பட்டினத்தில் இருந்து வந்து ரகளை பண்ணிய உறவுக்காரர்) இவர்களோடு குணச்சித்திர வேடத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்திருப்பார்.

ஒரு இசைக்கலைஞனாக வரவவேண்டும் என்ற இலட்சியத்தோடு அ‍நாதையாய் வாழும் வெங்கடேஷக்கு பணக்காரப் பெண் ரேவதியின் நட்பு கிடைக்கின்றது. இருவரின் நட்பு காதலாக மாறும்போது ரேவதியின் தாய் மஞ்சுளா ரூபத்தில் தொல்லை வருக்கின்றது காதலருக்கு. தம் தடைகளை மீறி இவர்கள் சேர்ந்தார்களா அல்லது வெங்கடேஷின் இசைக்கனவு மட்டும் பலிக்கின்றதா என்பதே கதை. மிகவும் சிம்பிளான கதைக்கு சுவாரஸ்யம் ஊட்டுவது கவர்ச்சியற்ற ரேவதி வெங்கடேஷ் ஊடல்களும், பாடல்களும் தான். ஆனால் தெலுங்கு இலக்கணப்படி ஒரு குத்து டான்ஸ் போடவேண்டும் என்ற இலட்சியத்தோடு இளவரசியை நுழைத்திருப்பது கரும்புள்ளி. எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிக்கொண்டே நடிக்கும் காட்சிகள் வெகு இயல்பு. தங்கையாக சோடாப்புட்டிக் கண்ணாடியோடு வரும் வைஷ்ணவியும், வில்லி மஞ்சுளாவும் கூட அலட்டல் இல்லாத நடிப்பில் கலக்கியிருக்கின்றார்கள்.

ஆர்ப்பாட்டமான படங்கள் எடுக்கும் சுரேஷ் கிருஷ்ணாவின் அறிமுகம் அவரது குரு‍ நாதர் கே.பாலசந்தரின் "ஏக் துஜே கேலியே"வில் ஆரம்பித்தது. அதே பாணியிலான ஒரு இனிய காதல் சித்திரமாக இதையே வெங்கடேஷ் முதலும் கடைசியுமாகக் கொடுத்திருக்கின்றார் போல. வெங்கடேஷ் - ரேவதி ஜோடி கனகச்சிதமான தெரிவு. வழுக்கி விழுந்ததும் காதல், மோதலில் வரும் காதல் போன்ற வகையறாக்கள் இல்லாமல் காதல் அரும்பும் விதத்தை அழகான காட்சிப்படுத்தலில் காட்டி சபாஷ் வாங்குகின்றார் இயக்குனர்.

இந்தப் படத்திற்காக 1989 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் என்ற ஆந்திர அரசின் நந்தி அவார்டையும், பிலிம்பேர் அவார்டையும் வாங்கியிருக்கிறார் வெங்கடேஷ்.

இந்தப்படம் ஹிந்தியில் லவ் என்று சல்மான்கான் -ரேவதி ஜோடியில் வந்திருந்தது. அதற்கு இசை ஆனந்த் மிலிந்த். தெலுங்கிலும் தமிழிலும் ராஜா கலக்கிய "ஈ நாடே (ஆத்தாடி ஏதோ ஆசைகள்)" பாட்டை காப்பியடித்ததோடு சொதப்பியும் இருக்கிறார் ஹிந்தியில்.

முன்னர் இந்த மூன்று படங்களையும் வைத்துப் போட்ட பதிவு இதோ

ஒரு சுகமான காதல் பயணம், கூடவே இசைப்பின்னணி இதுக்கு மேல் என்ன வேண்டும் இசைஞானிக்கு. ஒரு குறிப்பிட்ட இசை மெட்டை வைத்து காதல், சோகம், நகைச்சுவை, ஊடல், அழுகை என்று விதவிதமாக வித்தியாசமான வாத்தியங்களில் வேறுபடுத்திக் காட்டுவதில் ஆகட்டும் ஈ நாடே (தமிழில் ஆத்தாடி ஏதோ ஆசைகள்), யூ ஆர் மை ஹீரோ என்று பாடல்களில் ராஜ தர்ப்பாரைக் கிளப்புவதில் ஆகட்டும் ராஜா ராஜா தான்.


இந்தப் படத்துக்கான இசைப்பிரிப்பை ஆரம்பித்த போது வேண்டாம் என்று ஒதுக்கவே முடியாத அளவுக்கு கலக்கலான 26 இசைத்துண்டங்களை சேகரிக்க முடிந்தது, அந்தத் தேன் வந்து உங்கள் காதில் பாயட்டும் இதோ :)

ரேவதி வெங்கடேஷ் முதல் சந்திப்பு


000000000000000000000000000000000000000000000000000000000000000000 ரேவதி ,வைஷ்ணவி, வெங்கடேஷ் சந்திப்பில்  000000000000000000000000000000000000000000000000000000000000000000 தன்னைக் கண்டும் காணாமல் ஒதுங்கிப் போகும் வெங்கடேஷை நினைத்துக் கவலை கொள்ளும் ரேவதி, பின்னர் தன்னை அவன் தேடிக் கொண்டிருப்பதை அடுத்த நாள் ஒழிந்திருந்து காணும் போது கலக்கும் மகிழ்ச்சிப் பிரவாகம், இந்த இசை மூலமே பின்னர் ஒவ்வொரு காட்சியில் வித்தியாசமாக, வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வாத்தியங்களில் காட்டப்படுகின்றது. இங்கே வருவது கீபோர்ட்டில் அமையும் கிட்டார் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 இசைக்கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீட்டுக்கு வெங்கடேஷ் வருகை. எஸ்.பி.பி பியானோவில் வாசிப்பதை வெங்கடேஷ் கிட்டாரில் வாசித்துக் காட்டுகிறார்.   000000000000000000000000000000000000000000000000000000000000000000 மழை இரவில் தனக்காக கல்லறைப் பகுதியில் காத்திருக்கும் ரேவதியைத் தேடிப் போகும் வெங்கடேஷ், இங்கே அந்த மூல இசை ஹோரஸோடு பயன்படுத்தப்படுகின்றது. கூடவே மழைத்துளிகள் ஒவ்வொன்றாய் விழுமாற்போல இசை கலக்க 000000000000000000000000000000000000000000000000000000000000000000 வெங்கடேஷ் தன் காதலை ரேவதிக்கு தொலைபேசி மூலம் சொல்லும் காட்சி, ஹோரஸோடு இசை கலக்க, இந்த காட்சி எடுத்த விதமும் அழகு, இசையும் கொள்ளை அழகு, டயலாக்கோடு கேட்டுப் பாருங்கள் இதோ 000000000000000000000000000000000000000000000000000000000000000000 மாதர் சங்கத்தில் கிடைக்கும் முதல் பாடும் வாய்ப்பில் கிடைத்த கசப்பான அனுபவத்தில் பாட்டு நிகழ்ச்சியை நடத்தாமல் "ஜனகணமண" பாடும் வெங்கடேஷ். முழுமையாக எஸ்.பி.பி பின்னணி குரலில் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 நிகழ்ச்சியைக் குழப்பிய வெங்கடேஷ் மேல் மாதர் சங்கத் தலைவி மஞ்சுளா (ரேவதி அம்மா) கொள்ளும் கோபம், ரேவதி வெங்கடேஷ் ஊடல், கிட்டாரில் மூல இசை சோகமாக 000000000000000000000000000000000000000000000000000000000000000000 படத்தில் இருக்கும் மிக நீண்ட வயலின் சங்கதி, காதலர்களின் பிரிவைக் காட்டுகின்றது. பஸ் ஸ்டாண்டில் தேடி வரும் வெங்கடேஷைப் புறக்கணிக்கும் ரேவதி, இந்த இசைத் துண்ட முடிவில் ஊடல் கலைந்து சேரும் காதலர்களை விசில் இசையோடு சேர்த்து வைக்கும் இசைஞானி 000000000000000000000000000000000000000000000000000000000000000000 சாக்ஸபோன் இசையோடு காதலர்கள் மனமகிழ்வு மூல இசையின் இன்னொரு வடிவம் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 வெங்கடேஷின் முன் கோபத்தை கட்டுப்படுத்த பத்து எண்ண வேண்டும் என்று பழக்கும் ரேவதி, வெறும் இசையாலே அந்த பத்திலக்கமும் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 ரேவதி வீட்டுக்கு வந்து மாதர் சங்க நிகழ்ச்சியில் அவமதித்ததற்காக மன்னிப்புக் கேட்கவரும் வெங்கடேஷ், மஞ்சுளா அவமதித்தும், ரேவதியின் காதலுக்காக அடக்கமாகப் போகும் காட்சி 000000000000000000000000000000000000000000000000000000000000000000 திருட்டுத் தனமாக ரேவதி அறைக்குள் வெங்கடேஷ் வருதல், ஈ நாடே பாடலை சித்ரா, எஸ்.பி.பி பின்னணி இசை இல்லாமல் பாடும் ஒரு சில வரிகளோடு 000000000000000000000000000000000000000000000000000000000000000000 ரேவதி அறையில் வெங்கடேஷைக் காணும் மஞ்சுளா போலீசை வரவழைத்து கைது செய்யும் காட்சி, ஆர்ப்பாட்டமான இசையில் ஆரம்பித்து அழும் வயலினோடு ஓய்கின்றது 000000000000000000000000000000000000000000000000000000000000000000 காதலர்களின் பிரிவுத்துயரை வெறும் சோக இசையால் காட்டும் காட்சி, ரேவதி தன் ரத்தத்தால் சுவரில் வெங்கடேஷ் பெயரை எழுதுதல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 தாயின் கண்காணிப்பில் கல்லூரிக்கு வரும் ரேவதி காரில் இருந்து இறங்கி கையில் வெங்கடேஷ் பெயரைப் பச்சை குத்திக் கொள்ளும் காட்சிப் பின்னணி 000000000000000000000000000000000000000000000000000000000000000000 வெங்கடேஷின் கையெழுத்துக் கிறுக்கல்களோடு இருக்கும் மேசை விரிப்பைப் போர்த்திக் கொண்டு ரேவதி வீட்டுக்குள் நடத்தும் உள்ளிருப்பு போராட்டம் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 நீண்ட இடைவெளிக்குப் பின் காதலர்கள் காணும் காட்சி, சோக வயலினில் ஆரம்பித்து சந்தோஷ ரீங்காரமாய் வெங்கடேஷ் ரேவதிக்கு கட்ட வரும் தாலியை சேற்றுக்குள் எறியும் மஞ்சுளாவை மிரட்டி அந்த தாலியை சுத்தம் செய்து வாங்கும் காட்சி, கலகக் குரலாய் இசை 000000000000000000000000000000000000000000000000000000000000000000 மஞ்சுளாவை காரில் கடத்தும் வெங்கடேஷ் தேவாலயத்தில் வெங்கடேஷ், ரேவதி திருமணம் முடிக்கும் நிகழ்வில் ரேவதி மயங்கிச் சாய்தல் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 தேவாலயத்துக்கு வரும் வெங்கடேஷ் 000000000000000000000000000000000000000000000000000000000000000000 மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ரேவதி 000000000000000000000000000000000000000000000000000000000000000000 படத்தின் நிறைவுக்காட்சி மனதைக் கனக்க வைக்கும் இசையோடு நிரந்தரப் பிரிவின் சோக வாத்தியம்

Monday, March 9, 2009

றேடியோஸ்புதிர் 37 - தெலுங்கு டப்பிங் பொற்காலம்

றேடியோஸ்புதிரில் முதல்முறையாக தெலுங்குப் படமொன்றின் பின்னணி இசையோடு புதிர் அமைகின்றது.

1989 ஆம் ஆண்டு தெலுங்குப் படங்கள் பல ஒரே சமயத்தில் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெற்றி வாகை சூடிய காலம். காதல் படங்களில் இருந்து அதிரடிப் படங்கள் என்று மொழிமாற்றப்பட்ட பெரும்பான்மைப் படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்தன. கீதாஞ்சலி, இதுதாண்டா போலீஸ், நான்தாண்டா எம்.எல்.ஏ, இதோ இன்னொரு தேவதாஸ், உதயம், அன்புச் சின்னம், மன்னிக்க வேண்டுகிறேன், ஆம்பள, வைஜெயந்தி ஐ.பி.எஸ், இந்திரன் சந்திரன் போன்ற படங்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களாக அமைந்திருந்தன. இங்கே கொடுத்திருக்கும் புதிரின் விடையாக அமையும் படம் கூட இந்தப் பட்டியலில் இருந்து வருவது தான்.

இசைஞானி இளையராஜாவின் இரண்டு இசைத்துண்டங்களைக் கொடுக்கின்றேன். படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன். இப்பட இயக்குனர் தமிழிலும் பல அதிரடிப் படங்களைத் தந்தவர். ஆனால் இந்தப் படமோ சுகமான ஒரு காதல் காவியம். இதே படம் ஹிந்திக்குப் போன போது இப்பட நாயகியே நடித்தார். புதிரின் விடையினை தெலுங்குப் படத் தலைப்பாகவோ, அல்லது தமிழ் மொழிமாற்றுத் தலைப்பாகத் தரலாம்.

இசைத்துண்டம் ஒன்று இப்படத்தில் வரும் இனிமையான காதல் காட்சி ஒன்றின் பின்னணி இசை

p11.mp3 - IR

இசைத்துண்டம் இரண்டு இப்படத்தில் வரும் பாடலின் இடையிசை

puthir37.mp3 -

Monday, March 2, 2009

றேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா

றேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப்பு படத்தில் சேர்த்துட்டேன் ;-)

முதலில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கிப் பெருமை சேர்த்த ரஹ்மானுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு ( அதான் ராஜாவே சொல்லிட்டாரே , வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி)போட்டிக்குச் செல்வோம்.

கீழே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் மிளிர்ந்த ஐந்து படங்களில் இருந்து பின்னணி இசைத் துண்டங்களைப் புதிராகக் கொடுக்கின்றேன். ஐந்துக்கும் சரியான விடை அளிப்பவர் யாரென்று பார்ப்போம்.

இசைத்துண்டம் ஒன்று


க்ளூ : 3D படமெடுத்தவர் படமெடுக்க வந்தால் திருடிய கதையோடு படம் எடுக்கிறார்கள் என்று கோர்ட் கேஸ் வேறு. இந்த நாயகனும் இசைப்புயலும் சேர்ந்த இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பில்லாதது ஆச்சரியம். ஹோரஸ் குரல் கொடுக்க வந்தவருக்கு இரண்டு பாட்டுக்கள் பாடக்கிடைச்சுதே தெரியுமா?

puthir36a.mp3 -

இசைத்துண்டம் இரண்டு

க்ளூ : ஆள் பாதி ஆடை பாதி, 50 KG

puthir36b.mp3 -


இசைத்துண்டம் மூன்று

க்ளூ : வி.சி.குகநாதன் திரைக்கதை, வசனத்துக்கு உதவியிருக்கிறாராம், அந்த ஆட்டம் மறக்க முடியுமா ? மலேசியா வாசுதேவனை ஹோரஸ் குரலுக்கு மட்டுமே ரஹ்மான் பயன்படுத்தியிருக்கிறாரே

puthir36c.mp3 -


இசைத்துண்டம் நான்கு
க்ளூ: பேரைச் சொன்னா ராம சேனை நினைவில் வந்து தொலைக்குது

puthir36d.mp3 -


இசைத்துண்டம் ஐந்து
க்ளூ: ஒரு சொல்லை இரண்டு தரம் சொல்லிய இன்னொரு ரஹ்மான் படம், பிரசாந்த் இன்னொரு முறை இந்த நடிகையோடு நடிக்க ஆசைப்பட்டுக் கிட்டாத படம். பிரசாந்தை தூக்கிட்டாங்க, அவருக்கு பதில் இன்னொருத்தர்.


puthir36e.mp3 -

ஒகே போட்டி இத்தோடு ஓவர்

பதில்கள் இதோ

இசைத்துண்டம் ஒன்று


சரியான பதில்: அழகிய தமிழ் மகன்

3டி படம் எடுத்த அப்பச்சன் தமிழில் படமெடுக்க வந்தால் திருட்டுக் கதையோடு பரதன் இயக்க வந்து கோர்ட், கேஸ் என்று அலைச்சல். நடிகர் விஜய்யும், ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்த உதயா, மற்றும் அழகிய தமிழ்மகன் பெரிய வெற்றி இல்லை என்பது ஆச்சரியம்

ஹோரஸ் பாட வந்த பென்னி தயாளுக்கு கிடைச்ச பாட்டுக்கள் மதுரைக்கு போகாதடி, சாட்டடே நைட் பார்ட்டிக்கு போகலாம் வரியா

இசைத்துண்டம் இரண்டு

சரியான பதில்: ஜீன்ஸ்

ஆள் பாதி ஆடை பாதியை வச்சே ஜீன்ஸ் தான்னு காற்சட்டை போட்ட பிள்ளையே சொல்லுமே, கூடவே 50 KG தாஜ்மகால் எனக்கே எனக்கா

இசைத்துண்டம் மூன்று

சரியான பதில்: மின்சாரக் கனவு

ஏ.வி.எம் த‌யாரிப்பில் வி.சி.குக‌‍‍னாத‌னின் க‌தை, வ‌ச‌ன‌ ஒத்துழைப்பில் உருவான‌ ப‌ட‌ம். ம‌லேசியா வாசுதேவ‌னை ஹில்தோரே ஹில்தோரே அப்ப‌டி "பூப்பூக்கும் ஓசை" பாட்டில் பாட‌ விட்டாரே ர‌ஹ்மான்.

இசைத்துண்டம் நான்கு:

சரியான பதில்: காதலர் தினம்

ஏம்பா இராம சேனை சொல்லியும் காதலர் தினம் பேர் நினைவுக்கு வரலையா? இங்கே கொடுத்த இசையிலும் கூட "ரோஜா ரோஜா" பாட்டு ஹம்மிங் வந்துச்சே

இசைத்துண்டம் ஐந்து:


சரியான பதில்: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

தபு ஜோடியாக பிரசாந்தை நடிக்க சொன்னால், ஐஸ்வர்யா ராய் ஜோடியாத் தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சதால் அவருக்கு கல்தா. நான் கொடுத்த க்ளூ உபயோகப்படாவிட்டாலும் அந்த இசையில் பக்காவா சொல்லுதே படம் பேரை.