Pages

Showing posts with label நல்லைக் கந்தன். Show all posts
Showing posts with label நல்லைக் கந்தன். Show all posts

Saturday, August 30, 2008

நிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008

கடந்த இருபத்து நான்கு நாட்கள் நிகழ்ந்த ஈழத்திரு நாட்டின் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மகோற்சவ நிகழ்வுகளில் இன்று தீர்த்தத் திருவிழா. கடந்த ஆண்டு மடத்து வாசல் பிள்ளையாரடியில் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பு, அடியார்களின் மகிமைகளைக் கொடுத்திருந்தேன். அந்த முழுத்தொகுப்பினையும் பார்க்க "நிறைவான நல்லூர்ப்பயணம்".

இந்த ஆண்டு நண்பர் ஆயில்யனின் ஆலோசனைப்படி இருபத்தைந்து நாட்கள் ஒலியிலும், இசையிலும் இவ்வாலயத்தின் மகோற்சவ காலத்தை நினைவில் நிறுத்த வாய்ப்பாக அமைந்தது.

இந்தவேளை நண்பர் விசாகனின் "நல்லைக்கந்தனின் தேர்த்திருவிழா" என்னும் பதிவு நேற்று வெளியாகி எம் பழைய அந்த நினைவுகளை மீட்கவும் அமைந்த நற்பதிவாக இருக்கின்றது. அப்பதிவிற்குச் சென்று பார்த்து உங்கள் அபிப்பிராயத்தையும் அவருக்குச் சொல்லுங்கள்.

நம் தாயகத்தில் இருந்து வரும் "நல்லூர் கந்தசுவாமி கோயில்" என்னும் புகைப்படப் பதிவும் தொடர்ச்சியாக இந்த மகோற்சவத்தின் ஒவ்வொரு நாட் புகைப்படப் பதிவுப் பெட்டகமாக இருக்கின்றது.


நேற்று எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் திரு டோனி.செபரட்ணம் அவர்கள் ஒருங்கிணைப்பில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளில்

"சிவனருட் செல்வர்" திரு ஆறு. திருமுருகன் அவர்கள் ஆலயத்தில் இருந்து அதிகாலை வழங்கிய சிறப்புரை



தேர்த்திருவிழாவின் நேரடி வர்ணனையை வானொலி மாமா மகேசன் அவர்களோடு திரு.ஆறு திருமுருகன் அவர்கள் பகிரும் ஒலிப்பகுதி

Friday, August 29, 2008

நல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று

ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இந்த ஆண்டு கொடியேறி கடந்த இருபத்து மூன்று நாட்கள் தொடர்ந்த மகோற்சவ நிகழ்வில் இன்று எம்பெருமான் ஆறுமுகக் கந்தன், வள்ளி தெய்வயானை சமேதராக ரதோற்சவத்தில் பவனி வரப்போகும் காட்சி நம் மனக் கண் முன் விரிகின்றது. எல்லாம் வல்ல ஆண்டவனின் பெருங்கருணை நம் எல்லோர் மீதும் பரவட்டும். அநீதிகள் ஒழிந்து, இன்னல்கள் அகன்று, சுபீட்சமானதொரு யுகத்தை நம் உறவுகள் பெறட்டும்.

கடந்த ஆண்டு நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் வழங்கிய ரதோற்சவ நாள் ஒலிப்படையல்கள் இதோ:

காலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு
Get this widget
Share
Track details



ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது
Get this widget
Share
Track details



தமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய "தேர்த் திருவிழாவின் சிறப்பு" என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு



அல்லது இங்கே சொடுக்கவும்

Thursday, August 28, 2008

சப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (ஒலிவடிவில்)


நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் இன்று சப்பரத்திருவிழாவில் எம்பெருமான எழுந்தருள இருக்கும் இவ்வேளை, கடந்த ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நல்லைக் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நாளன்று அதிகாலையில் படைத்த சிறப்பு வானொலிப்படைப்பைப் பேணிப் பாதுகாத்து இங்கே தருகின்றேன் உங்களுக்கு.



Wednesday, August 27, 2008

இருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்!


இன்றைய நல்லூர் கந்தன் மகோற்சவ காலச் சிறப்புப் பதிவாக சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடலான "ஞானதேசிகனே சரணம்" என்ற பாடலை ஈழத்துச் சங்கீத மேதை பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம்.

Tuesday, August 26, 2008

இருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்

Monday, August 25, 2008

இருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி...!


நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவ காலச் சிறப்புப் பதிவுகளில் இன்று கும்மியடி பெண்ணே கும்மியடி குருநாதனைப் பாடியே கும்மியடி என்னும் நற்சிந்தனைப் பாடல் இடம்பெறுகின்றது.

Sunday, August 24, 2008

பத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்!


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்

Saturday, August 23, 2008

பதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம், முருகா !


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்

Friday, August 22, 2008

பதினேழாந் திருவிழா - "சும்மா இரு"


இன்றைய நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பதினேழாந் திருவிழாப் பதிவாக சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த மகாவாக்கியங்களில் ஒன்றான "சும்மா இரு" என்பதன் தத்துவ விளக்கத்தை ஒலிவடிவில் தருகின்றேன். கடந்த ஆண்டு நல்லைக் கந்தன் ஆலயப் பதிவுகளுக்காக அன்பர் ஒருவரால் எழுத்து வடிவில் தந்த ஆக்கத்தை இப்போது குரல் வழி பகிர்கின்றேன்.

Thursday, August 21, 2008

பதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அலங்காரம்


இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்.

Wednesday, August 20, 2008

பதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச் சிறப்பு


நல்லைக் கந்தன் ஆலயத்தின் பதினைந்தாம் திருவிழாவான இன்று முன்னை நாள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரும், சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் தமிழறிஞருமான, திரு.திருநந்தகுமார் அவர்கள் கடந்த ஆண்டு எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேர் உற்சவ நாளன்று வழங்கிய "நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம்" குறித்த சிறப்பு ஒலிப்பகிர்வு

Tuesday, August 19, 2008

பதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு


இன்றைய பதின்னான்காம் திருவிழாப் பதிவில் கடந்த ஆண்டு நல்லைக்கந்தன் தேர்த் திருவிழா நாளான்று நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேரடி வர்ணனை வழங்கியபோது எமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய "முருக வழிபாட்டின் சிறப்பு" குறித்த கருத்துப் பகிர்வு
Get this widget
Share
Track details

Monday, August 18, 2008

பதின்மூன்றாந் திருவிழா - "தாயான இறைவன்"

இன்றைய நல்லைக் கந்தன் ஆலயத் திருவிழாப் பதிவிலே சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் சொற்பொழிவுப் பேழையில் இருந்து "தாயான இறைவன்" என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.

Sunday, August 17, 2008

பன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்




இன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த "நல்லூரான் திருவடியை என்ற பாடலை" இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம்.



அடுத்து வருகின்றது "நில்லடா நிலையிலென்று சொல்லுது" என்னும் தலைப்பில் அமைந்த நற்சிந்தனைப் பாடல்.

ஓம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது

நமக்கு நாமே துணையென்று விழிக்குது
நாதாந்த முடியிலேறிக் குளிக்குது

வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது

மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது
சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது

நில்லடா நிலையிலென்று சொல்லுது
நீயேநான் என்று சொல்லி வெல்லுது

உல்லாச மாயெங்குஞ் செல்லுது
உண்மை முழுதுமென்று சொல்லுது

நல்லூரில் செல்லப்பன் என்னப்பன்
நானவரைக் கேட்கும் விண்ணப்பம்

நன்றி: சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்கள்

Saturday, August 16, 2008

பதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்

"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்

பாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்
பத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு
வாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு
இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு

நீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது
நல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது
வாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்
வாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்
வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்"

பாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: வர்ணராமேஸ்வரன்
இசை: இசைவாணர் கண்ணன்

Get this widget | Share | Track details

Friday, August 15, 2008

திருமஞ்சத் திருவிழா -"நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்"


நல்லைக் கந்தன் ஆலயத் திருமஞ்சத் திருவிழாவான இன்று "நல்லூர் முருகன் சிறப்பியல்புகள்" என்னும் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெறுகின்றது. இச் சொற்பொழிவை கடந்த ஆண்டு தேர்த் திருவிழாவினை ஒட்டி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேரடி அஞ்சலில் எடுத்திருந்தேன். முகப்பு படம் கடந்த ஆண்டு நல்லூர் மஞ்சத் திருவிழாவின் போது சகோதரர் பகீயினால் எடுக்கப்பட்டது. அவருக்கு இந்த வேளை என் நன்றிகள் உரித்தாகுக.

அகில இலங்கை கம்பன் கழக சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரசாந்தன் "நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்" என்னும் விடயத்தில் வழங்கிய சிறப்புப் பேச்சு





அல்லது இங்கே சொடுக்கவும்

Thursday, August 14, 2008

ஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 3


ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஒன்பதாந் திருவிழாப் பதிவாக "முருகோதயம்" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் பாகம் 3 இப்பதிவில் இடம் பெறுகின்றது.

பாகம் 3 ஒலியளவு: 19 நிமி 23 செக்



பாகம் 3
Get this widget | Share | Track details

Wednesday, August 13, 2008

எட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 2

நல்லூர் கந்தப்பெருமான் ஆலயத்தின் எட்டாம் திருவிழா நன்னாளிலே "முருகோதயம்" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் பாகம் 2 இப்பதிவில் இடம் பெறுகின்றது.

பாகம் 2 ஒலியளவு: 20 நிமி 02 செக்

Tuesday, August 12, 2008

ஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 1


நல்லை நகர் முருகன் ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் "முருகோதயம்" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் அடுத்த பாகம் நாளை இடம்பெறும்.

பாகம் 1 ஒலியளவு: 19 நிமி 58 செக்




Monday, August 11, 2008

ஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..!

இன்றைய திருவிழாப் பதிவில் "ஈசனே நல்லூர் வாசனே" என்ற பாடல் இசைவடிவிலும் மறைந்த திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா அவர்கள் பாடக் கேட்கலாம். பல வருடங்களுக்கு வெளிவந்த இப்பாடலைப் பாடிய திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா, அவர் காலத்தில் "ஈழத்தின் சுப்புலஷ்மி" என்று சிறப்பிக்கப்பட்டாராம்.

Get this widget | Share | Track details


ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே

பண்ணினேர் மொழியாய்
பாலசுப்ரமண்யா
என்னுடலம் எல்லாம்
நண்ணும் வண்ணம் வா வா

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் வா வா

தாசனான யோகசுவாமி
சாற்றும் பாவை
கேட்டுக் கிருபை கூர்ந்து
வாட்டம் தீர்க்க வா வா

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே