Pages

Friday, August 22, 2008

பதினேழாந் திருவிழா - "சும்மா இரு"


இன்றைய நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பதினேழாந் திருவிழாப் பதிவாக சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த மகாவாக்கியங்களில் ஒன்றான "சும்மா இரு" என்பதன் தத்துவ விளக்கத்தை ஒலிவடிவில் தருகின்றேன். கடந்த ஆண்டு நல்லைக் கந்தன் ஆலயப் பதிவுகளுக்காக அன்பர் ஒருவரால் எழுத்து வடிவில் தந்த ஆக்கத்தை இப்போது குரல் வழி பகிர்கின்றேன்.

4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த மகாவாக்கியங்களில் ஒன்றான "சும்மா இரு//

மிக அருமை..சிவயோகர் பற்றி வேறு ஏதேனும் பதிவிட்டிருக்கிறீர்களா?..ஆம் எனில் அதன் லிங்க் தர முடியுமா?

அகந்தை, அவா, வெகுளி பற்றி நன்றாக சொல்லியிருக்கிறார்.

உங்கள் குரலையும் இதில்தான் முதன் முதலாக கேட்டேன்...அருமை. :)

நன்றி கானா அண்ணா..

கானா பிரபா said...

வணக்கம் மதுரையம்பதி

யோகர் சுவாமிகள் குறித்தும், ஈழத்துச் சித்தர்கள் குறித்தும் நான் கடந்த ஆண்டு நல்லூர்த் திருவிழாக் காலத்தில் பதிந்தவை.

எங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா
http://kanapraba.blogspot.com/2007/09/blog-post_06.html

"சும்மா இரு" - இருபத்தியிரண்டாந் திருவிழா

http://kanapraba.blogspot.com/2007/09/blog-post_08.html

தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்

தங்க முகுந்தன் said...

படத்தில் நடுவிலிருக்கும் செல்லப்பா சுவாமிகளுடைய முகத்தில் ஒளி தெறிப்பதால் படம் விளங்கவில்லை. தயவுசெய்து மீண்டும் அதை தெளிவாகப் பிரசுரித்தால் நன்றி. கடையிற் சுவாமிகளுடையதும் யோகர்சுவாமியினுடையதும் படங்களைப் பிரசுரித்து ஈழுத்துச் சித்தர் பரம்பரையை தத்ரூபமாகக் காண்பித்தமைக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள் நண்பர் கானா பிரபா அவர்களே.

கானா பிரபா said...

வணக்கம் தங்கமுகுந்தன்

இந்த புகைப்படம் 2005 இல் ஊரிற்கு போனபோது எடுத்தது. மிங்குமிழின் பிரதிபலிப்பு தெறித்தபடி படத்தில் வந்திட்டுது, ஒரேயொரு படம் தான் என்பதால் மாற்றுப்படங்களை உபயோகிக்கமுடியாமைக்கு வருந்துகின்றேன். மேலேயுள்ள பதிவுச் சுட்டிகளில் செல்லப்பா சுவாமிகளின் படம் இருக்கின்றது.