ஈழ நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோறசவ நிகழ்வுகள் இன்றிலிருந்து அடுத்த 25 நாட்கள் இடம்பெற இருக்கின்றன. எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள் கிடைத்து நம் எல்லோர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டிப் பிரார்த்தித்து தினம் ஒரு கந்தப் பெருமான் பாடலை வழங்கலாம் என்றிருக்கின்றேன். எல்லாம் ஆண்டவன் சித்தம்.
பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த "நல்லை முருகன்" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.
நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி நல்லூர் நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
கீதம் ஒலிக்குதடி.....கீதம் ஒலிக்குதடி.....
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
அன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்
கீதம் ஒலிக்குதடி..........
நாதம் கேட்குதடி ..........
நல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்.......
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா.........ஓம் முருகா.......ஓம் முருகா
ஒலியின் அலைகள் விரவிச் செவியில்
ஓம் முருகா என ஒலிக்குதடி
கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி
கலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து
மெத்தாய் உருகுதடி
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்
மால் மருகன் அருள் இருக்குதடி
மால் மருகன் அருள் இருக்குதடி
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்
வலிவும் வனப்பும் வளமும் அருளும்
வடிவேலவன் புகழ் பாடியே
அடியார் தொழக் கவிபாடிடும்
நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....
நாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நல்லூர்க் கந்தனைக் காண நான் தான் முதலில் வந்தேன்.
சண்முகக் கடவுள் போற்றி
சரவணத்துதித்தாய் போற்றி
கண்மணி முருகா போற்றி
கார்த்திகை பாலா போற்றி
தன் மலர் கடம்ப மாலை தாங்கிய
தோளா போற்றி போற்றி
அப்படின்னு சொல்லி இங்கிருந்தே கும்பிட்டுக்கறேன்.
கடைசி வரி விட்டுப்போச்சு
விண்மதி வதனவள்ளி வேலவா போற்றி போற்றி
நல்லூர் முருகனை நாளும் வணங்கிட
வல்வினை யாவையும் ஓடிடும் நில்லாமல்
நல்வினை யாவையும் நாளும் பெருகிடும்
நில்வாய் மனமே நிலை.
வணக்கம், பிரபா, நல்லைக்கந்தனின் திருவிழா ஆரம்பிக்கும் போது எனது ஊர் குப்பிழான் கற்கரைப்பிள்ளையார் கோவில் திருவிழாவும் ஆரம்பிக்கும். நல்லூர் கந்தனின் திருவிழா 25 நாட்கள். எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா 12 நாட்கள். 12 நாட்களும் கோவிலில் உள்ள மணலில் இருந்து கடலைக் கொட்டை சாப்பிட்டு அரட்டை அடித்த சுகத்தை உலகில் எங்கிருந்தாலும், எவ்வளவு பணமிருந்தாலும் பெற முடியாது. சொர்க்கமே என்றாலும் நமது யாழ்ப்பாணத்தைப் போல வருமா
கந்தா காப்பாத்து...
முருகா காப்பாத்து...
எங்கடை நாட்டை காப்பாத்து...
கடந்த வருடம் 25 தினங்களும் தினசரி பதிவில் கிடைத்த செய்திகள் மீண்டும் மனதில் மலர்கின்றது!
நல்லூர் முருகன் அருளை வேண்டி நானும் பிரார்த்தித்துக்கொள்கிறேன் :))
வருகைக்கு நன்றி நண்பர்களே
வணக்கம் கானா பிரபா அவர்களே!
இன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன் - கண்ணபிரான் ரவிசங்கரின் உதவியால்!
அவர்தான் உங்களுடைய பதிவின் முகவரியைத் தந்தார்.
மிக அற்பதமாக நல்லார் முருகனுடைய பதிவை பதித்திருக்கிறீர்கள். மிகமிக மகிழ்ச்சி.
வீதியல் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமற்போமே! என்ற யோகர் சுவாமியினுடைய வாக்கு என் உயிரைக் காப்பாற்றி இன்று நான் மறுபிறவியெடுத்து அவனருளால் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
அவனுடைய புகழ்பாடும் - துதிக்கும் அனைத்து அடியவரையும் மனதார நன்றியுடன் நினைக்கிறேன். நீங்களும் அதில் ஒருவராகி விட்டீர்கள்.
தங்களின் தமிழ்ச் சைவப் பணி சிறக்க தமிழ்க் கடவுளான செந்தில் வேலனை மனமாரப் பிரார்த்தித்து இதை இப்போதைக்கு முடிக்கிறேன்.
இனி அடிக்கடி வருவேன்.
என்றும் நன்றியுடையவன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்க முகுந்தன்
அற்புதம்..........தெவிட்டாது இனிக்கும் பாடல் வரிகளில் கரைந்தேன். ஆனாலும் கேட்கும் பாக்கியம் கிட்டவில்லை என் இணைய இணைப்பு மெதுவாக இயங்குவதால் ஏற்படும் சிரமம் காரணமாக.மன்னிக்க. விரைவில் பாடலைக் கேட்டு இறையின்பம் அனுபவிக்கலாம் என நம்புகின்றேன்.
"உருகன் திருவடி நினை மனமே"
நன்றி
வருகைக்கு நன்றிகள் சிவத்தமிழோன், முருகன் அருள் உங்களுக்கும் பரிபூரணமாகக் கிட்டட்டும்.
Post a Comment