|
மால் மருகா எழில் வேல் முருகா நீயே
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே
மால் முருகா எழில் வேல்முருகா நீயே
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே
முருகா வடிவேலா...........
தருவாய் அருள் குமரா.....
முருகா வடிவேலா.......
தருவாய் அருள் குமரா......
நல்லூர் நாயகனே....! நல்வழி காட்டுமைய்யா
நம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா
நல்லூர் நாயகனே....! நல்வழி காட்டுமைய்யா
நம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா
நல்லூர் எம்பதியே
நம்பிக்கையின் ஒளியே
நல்லூர் எம்பதியே
நம்பிக்கையின் ஒளியே
கனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா
கதியே நீயென்றால் பதியே சரணமய்யா
கனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா
கதியே நீயென்றால் பதியே சரணமய்யா
கந்தா கதிவேலா...வருவாய் சிவபாலா....
கந்தா கதிவேலா...வருவாய் சிவபாலா....
ஏழுமலை இறையினிலே எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா
ஏழுமலைப் இறையினிலே எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா
குமரா எழில் முருகா......
குறுகுறு நகை அழகா......
குமரா எழில் முருகா........
குறுகுறு நகை அழகா........
தோகைமயில் ஏறிவரும் சேவல் கொடியழகா
பழமுதிர்ச்சோலைகளில் பவனி வரும் வடிவழகா
தோகைமயில் ஏறிவரும் சேவல் கொடியழகா
பழமுதிர்ச்சோலைகளில் பவனி வரும் வடிவழகா
அரகர ஆறுமுகா..........
அருளீர் திருக்குமரா.....
அரகர ஆறுமுகா..........
அருளீர் திருக்குமரா.....
லண்டன், பாரிஸ், சுவிஸ், ஜேர்மனி, நேர்வே, ஒஸி
கனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா
லண்டன், பாரிஸ், சுவிஸ், ஜேர்மனி, நேர்வே, ஒஸி
கனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா
உலகாள் தமிழ்த் தலைவா.......
உமையாள் திருக்குமரா............
உலகாள் தமிழ்த் தலைவா.......
உமையாள் திருக்குமரா.............
சிவனின் மைந்தனய்யா சிங்கார வேலனய்யா
தகப்பனுக்குபதேசம் செய்த சுவாமி நீயய்யா
சிவனின் மைந்தனய்யா சிங்கார வேலனய்யா
தகப்பனுக்குபதேசம் செய்த சுவாமி நீயய்யா
தவறுகள் பொறுத்திடுவாய்.....
தமிழரைக் காத்திடுவாய்..........
தவறுகள் பொறுத்திடுவாய்.....
தமிழரைக் காத்திடுவாய்..........
அரகர ஆறுமுகா..........
அருளீர் திருக்குமரா.....
அரகர ஆறுமுகா..........
அருளீர் திருக்குமரா.....
2 comments:
//பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் அவர்கள், அரவிந்தன் இசையில் பாடும் இப்பாடல் வழக்கமான பக்திப் பாடல்களில் இருந்து விலகிப் மெல்லிய இசை கலந்த பொப்பிசைப் பாடலாக மலர்ந்திருக்கின்றது//
அட...ஆமாம்....வித்தியாசமாக இருக்கிறது....நன்றி தல.
வருகைக்கு நன்றி நி.நல்லவரே
Post a Comment