Pages

Saturday, November 30, 2024

வாணி ஜெயராம் வசீகரித்த இளையராஜா பாடல்கள்


குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை

உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க

ஓடியதென்ன...

பூவிதழ் மூடியதென்ன,

என் மனம் வாடியதென்ன...

ஏழெட்டு முறை கேட்டுவிட்டுத்தான் நேற்றைய நாளை நிறைவு செய்தேன். இன்று காலை திரையிசையுலகின் கலைவாணி என்ற

வாணிம்மா பிறந்த தினம்.

“அழகே உன்னை ஆராதிக்கிறேன்” வாணி ஜெயராம் அவர்களுக்குக் கொடுத்த பெரு விரு(ந்)து என்று சொல்லலாம்.

“குறிஞ்சி மலரில்” 

பாடலில் தம் கட்டி எஸ்பிபியோடு பாடிக் களிப்பவர், 

“நானே நானா யாரோ தானா...” 

பாடலில் தனிக்காட்டு ராணியாகப் போதைக் குரலில் மயக்குவார். 

அப்படியே 

“ஹே மஸ்தானா” 

பாட்டுக் கூட்டணியில் கலந்து விட்டு மீண்டும் வந்து 

“என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்"

என்று தீர்க்க சுமங்கலியாகிவிடுவார்.

இதே படத்தில் வந்த “தனிமையில் யாரிவள்" போல இசைஞானி இளையராஜாவின் இசையில் குத்துப் பாடல்கள், கவர்ச்சி நடனப் பாடலுக்கும் வாணி ஜெயராமின் குரல் பயன்பட்டிருப்பது எனக்கு ஒவ்வாமை. அதை அவர் தவிர்த்திருக்கலாமோ என்று கூட நினைப்பேன்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் வாணி ஜெயராம் அவர்களுக்குக் கிடைத்த ஆகச் சிறந்த முத்துகளின் தொடக்கம்

“பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்"

https://www.youtube.com/watch?v=xoVMomdtW8w

பாடல் அதிமதுரம். அதற்காகத் தனிப்பதிவே எழுதியிருக்கிறேன்.

அதுவும் ஜெயச்சந்திரன் & வாணி ஜெயராம் கூட்டணி சேர்ந்தால் மெல்லிசை மன்னர் தொட்டு எல்லா இசையமைப்பாளர் இசையிலும் மிளிர்ந்திருக்கிறார்கள்.

அதுபோலத் தனிப்பாடல்களில் இளையராஜா கொடுத்ததில் “என்னுள்ளில் எங்கோ” எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாதவொரு சாகித்தியம்.

இப்படியாக இளையராஜா இசையில் வாணி ஜெயராம் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைத் தமிழ், தெலுங்கில் பாடியிருந்தாலும், எனக்கு மனசுக்கு நெருக்கமான அல்லது இளையராஜாவால் வாணிம்மாவுக்கு வழங்கப்பட்ட அதியற்புதமான தேர்வுகளாக ஒரு பட்டியலை இங்கே பகிர்கிறேன்.கானாபிரபா

உங்களுக்கும் கூட இது பிடித்துப் போகும்.

1. ஒரே நாள் உனை நான் (இளமை ஊஞ்சலாடுகிறது)

2. நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா (இளமை ஊஞ்சலாடுகிறது)

3. கண்டேன் எங்கும் (காற்றினிலே வரும் கீதம்)

4. கண்ணன் அருகே பாட வேண்டும் ( கண்ணன் ஒரு கைக்குழந்தை)

      https://www.youtube.com/watch?v=RMpL4l4nlT4

5. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு (முள்ளும் மலரும்)

6. சுகம் சுகமே (நான் போட்ட சவால்)

7. மருத மஞ்சக்கிழங்கே (நெஞ்சில் ஆடும் பூ ஒன்று)

8. என்னுள்ளில் எங்கோ (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)

9. சங்கீதம் என் தேகமன்றோ (பால நாகம்மா)

      https://www.youtube.com/watch?v=anUbaXDO9AM

10. பூமேலே வீசும் பூங்காற்றே (எச்சில் இரவுகள்)

11. மச்சானைப் பாருடி (தங்க மகன்)

12. வா வா பக்கம் வா (தங்க மகன்)

13. கன்னித்தேனே இவள் மானே (அம்பிகை நேரில் வந்தாள்)

இதழில் அமுதம் தினமும் (அன்பே ஓடி வா)

14. அலைமீது தடுமாறுதே (அன்புள்ள மலரே)

15. இளங்கிளியே (அன்புள்ள ரஜினிகாந்த்)கானாபிரபா

16. பொல்லாத ஆசை வந்து (குவா குவா வாத்துக்கள்)

      https://www.youtube.com/watch?v=Uea_iETc6vw

17. செல்லக் குழந்தைகளே ( மைடியர் குட்டிச்சாத்தான்)

18. வெண்ணிலா ஓடுது ( நாளை உனது நாள்)

19. உலகம் முழுதும் பழைய ராத்திரி (நூறாவது நாள்)

20. ஹேய் ஐ லவ் யூ (உன்னை நான் சந்தித்தேன்)

21. உனைக்காணும் நேரம் ( உன்னை நான் சந்தித்தேன்)

22. காலம் மாறலாம் (வாழ்க்கை)

23. இன்றைக்கு ஏனிந்த (வைதேகி காத்திருந்தாள்)

24. வெள்ளி நிலா பதுமை (அமுத கானம்)

25. ஏபிசி நீ வாசி (ஒரு கைதியின் டைரி)

26. இது ரோசாப்பூவு   (ஒரு கைதியின் டைரி)

27. சுகராகமே ( கன்னி ராசி)

28. ஆள அசத்தும் (கன்னி ராசி)

29. வச்சாளாம் நெத்திப் பொட்டு ( குங்குமச் சிமிழ்)

30. மான் கண்டேன் ( ராஜரிஷி)

31. எங்கே நான் காண்பேன் (சாதனை)

32. ஶ்ரீ ராம நாமம் (ஶ்ரீ ராகவேந்திரர்)

33. சின்னப் பொண்ணு சின்னப்பொண்ணு (அறுவடை நாள்)

34. கவிதை கேளுங்கள் (புன்னகை மன்னன்)

35. விழியே நலமா (தூரத்துப் பச்சை)

https://www.youtube.com/watch?v=5jKQayFLp04

36. பூவான ஏட்டைத் தொட்டு (பொன்மனச் செல்வன்)

கானா பிரபா

30.11.2024

#Vizhiye Nalama_ #Dhoorathu Pachai(1987)_ #Vanijayaram & Gangai Amaran_ #விழியே நலமா_ #தூரத்து பச்சை

youtube.com

#Vizhiye Nalama_ #D

Wednesday, November 13, 2024

சுசீலாம்மா 💜 அக்கக்கோ எனும் கீதம் 🩷



தன்னன்னன 

தானன்னன்னா

தானனன தானனனா….

தான தானன 

தான தானனன

தானன்னன்னா…..


தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி விட்டார் சுசீலாம்மா தன் அசரீரிக் குரலோடு இன்று காலை.


முன் தினம் இசையரசி பிறந்த நாளை ஞாபகப்படுத்தியதோடு படுக்கைச் சென்றவன் உறங்கா நிலையில் இருந்த என் இசைவியக்கத்தின் பிரதிபலிப்பாக இந்தப் பாட்டு இருந்தது.


“என்னவொரு பாசாங்கு இல்லாத குரலடா” என்று என் மனச்சாட்சி அக்கணம் என்னோடு பேசிக் கொண்டது.


முதன் முதலாக சோறு ஊட்டிய நாள்

முதன் முதலாகப் பள்ளிக்கூடம் போன நாள்

இதெல்லாம் கூட நரைத்துப் போன காலத்தில் மறந்து போயிருக்கலாம்.


ஆனால்


அ த் தான்…..

என் அத்த்த்தான்ன்ன்

அவர் என்னைத்தான்….

எப்படிச் சொல்வேனடி…..


என்று இருளைக் கிழித்து அந்த ஏகாந்த இரவில் பக்கத்து வீட்டு இலங்கை வானொலியில் இரவின் மடியில் பாடிய ஞாபகம் எல்லாம்

தொட்டிலில் இருந்து கூட வரும் குரல்.


இன்று காலை என்னைத் தட்டியெழுப்பியதும் அப்படி ஒன்று தான்.

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்


https://youtu.be/xBXHnvfFifg?si=ற்ப்20ஏசாஅ1இட்ன்


இதெல்லாம் கேட்டு வளர்ந்ததாலோ என்னமோ வானொலிப் பிரியனான என்னை இசை வெறியனாக்கி வானொலியாளனாக ஆக்கி விட்டிருக்கிறது காலம்.


வைதேகி காத்திருந்தாளோ

தேவி

வைதேகி காத்திருந்தாளோ….?

வசந்தத்தில் ஓர் நாள் மணவறை 

ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி


https://youtu.be/xiGvwzk_DVk?si=Ppc55YGMACbVL_2q


இந்த ஒழுங்கில் பாடலை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.

ஒரு பிரமாண்டமான கல்யாண வீட்டில் தனி ஆளாக நின்று எல்லாவற்றையும் ஆளுமைப்படுத்தும் ஒரு பிரதிமை அங்கே நிற்பது போல இருக்கும்.


தமிழ்த் திரையிசையின் நீண்ட நெடுங்கலத்துக் குரல்களில் ஒன்று,

ஒரு காலகட்டத்தில் பட்டத்து ராணி போலத் தனி ஆளாக நின்றும் ராஜ்ஜியம் படைத்தவர், அடுத்த யுகம் என்று வரும் போது தம் முன்னோர்கள் வழி தமக்கும் இசையரசி பாட வேண்டும் என்று ஆசைப்பட்ட இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவருமே இசையரசிக்கு கெளரவ விருந்து கொடுத்திருக்கிறார்கள்.


அக்கக்கோ எனும் கீதம்

அதுதானே அதன் வேதம்


சொந்தம் இல்லை 

பந்தம் இல்லை

வாடுது ஒரு பறவை

அது தேடுது தன் உறவை….


https://youtu.be/ef1uMbeknuY?si=_zwsEtXo3_7ZLOVg


தொட்டு இசைஞானியும்


“இளமாறன் கண்ணுக்கு

எப்போதும் நான் அழகு


கண்ணுக்கு மை அழகு”


என்று இசைப்புயல் ரஹ்மான் காலம் ஈறாக.


உறங்காமத் தான் உம்மைப் பாத்தேன்

உமக்காகத் கன்னி காத்தேன்

உம் மடியா நெனச்சு தல சாய்ச்சேன்

ஆவாரம் பூவு ஆறேழு நாளா

நான் போகும் பாதையில் காத்திருக்கு


https://youtu.be/yuiTe1ZMPUE?si=InapmW_3qLQVwBq7


சுசீலா சரிதா ஆகி விடுவார்

சரிதா சுசீலா ஆகி விடுவார்


இந்த இசையமைப்பாளர்  வி.எஸ்.நரசிம்மனை மட்டும் ஒரு சுசீலா வெறியர் என்று சொல்லி விடலாம்.

தன் முதல் படமான “அச்சமில்லை அச்சமில்லை” தொட்டு

“ஆயிரம் பூக்கள் மலரட்டும்” 


https://youtu.be/_Zs01bfoRKc?si=Vd09kFizmjmWJT39


“தங்க நிலவு தரையில் இறங்கி” (சித்திரம் பேசுதடி)


https://youtu.be/j8Y-uGa6qWQ?si=ocXEEuqvuZBN1YPC


தானே பாடுதே (கண் சிமிட்டும் நேரம்)


https://youtu.be/NXuCYIZX-D0?si=pB_9wS1wiBXXVEah


“மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்” (கல்யாண அகதிகள்)


https://youtu.be/JtudS9Rv7Ms?si=m95UPMQbd58eMbd6


என்று தனக்குக் கிடைத்த சொற்ப வாய்ப்புகளிலும் இயன்றவரை ஒரு கெளரவ ஆசனம் கொடுத்து விடுவார் இசையரசிக்கு.


ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்

இசையரசி வாழ்க வாழ்கவே

❤️


கானா பிரபா

13.11.2024


ஒளிப்படம் நன்றி : P.Suseela தளம்