தன்னன்னன
தானன்னன்னா
தானனன தானனனா….
தான தானன
தான தானனன
தானன்னன்னா…..
தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி விட்டார் சுசீலாம்மா தன் அசரீரிக் குரலோடு இன்று காலை.
முன் தினம் இசையரசி பிறந்த நாளை ஞாபகப்படுத்தியதோடு படுக்கைச் சென்றவன் உறங்கா நிலையில் இருந்த என் இசைவியக்கத்தின் பிரதிபலிப்பாக இந்தப் பாட்டு இருந்தது.
“என்னவொரு பாசாங்கு இல்லாத குரலடா” என்று என் மனச்சாட்சி அக்கணம் என்னோடு பேசிக் கொண்டது.
முதன் முதலாக சோறு ஊட்டிய நாள்
முதன் முதலாகப் பள்ளிக்கூடம் போன நாள்
இதெல்லாம் கூட நரைத்துப் போன காலத்தில் மறந்து போயிருக்கலாம்.
ஆனால்
அ த் தான்…..
என் அத்த்த்தான்ன்ன்
அவர் என்னைத்தான்….
எப்படிச் சொல்வேனடி…..
என்று இருளைக் கிழித்து அந்த ஏகாந்த இரவில் பக்கத்து வீட்டு இலங்கை வானொலியில் இரவின் மடியில் பாடிய ஞாபகம் எல்லாம்
தொட்டிலில் இருந்து கூட வரும் குரல்.
இன்று காலை என்னைத் தட்டியெழுப்பியதும் அப்படி ஒன்று தான்.
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
https://youtu.be/xBXHnvfFifg?si=ற்ப்20ஏசாஅ1இட்ன்
இதெல்லாம் கேட்டு வளர்ந்ததாலோ என்னமோ வானொலிப் பிரியனான என்னை இசை வெறியனாக்கி வானொலியாளனாக ஆக்கி விட்டிருக்கிறது காலம்.
வைதேகி காத்திருந்தாளோ
தேவி
வைதேகி காத்திருந்தாளோ….?
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை
ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
https://youtu.be/xiGvwzk_DVk?si=Ppc55YGMACbVL_2q
இந்த ஒழுங்கில் பாடலை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.
ஒரு பிரமாண்டமான கல்யாண வீட்டில் தனி ஆளாக நின்று எல்லாவற்றையும் ஆளுமைப்படுத்தும் ஒரு பிரதிமை அங்கே நிற்பது போல இருக்கும்.
தமிழ்த் திரையிசையின் நீண்ட நெடுங்கலத்துக் குரல்களில் ஒன்று,
ஒரு காலகட்டத்தில் பட்டத்து ராணி போலத் தனி ஆளாக நின்றும் ராஜ்ஜியம் படைத்தவர், அடுத்த யுகம் என்று வரும் போது தம் முன்னோர்கள் வழி தமக்கும் இசையரசி பாட வேண்டும் என்று ஆசைப்பட்ட இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவருமே இசையரசிக்கு கெளரவ விருந்து கொடுத்திருக்கிறார்கள்.
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்
சொந்தம் இல்லை
பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை….
https://youtu.be/ef1uMbeknuY?si=_zwsEtXo3_7ZLOVg
தொட்டு இசைஞானியும்
“இளமாறன் கண்ணுக்கு
எப்போதும் நான் அழகு
கண்ணுக்கு மை அழகு”
என்று இசைப்புயல் ரஹ்மான் காலம் ஈறாக.
உறங்காமத் தான் உம்மைப் பாத்தேன்
உமக்காகத் கன்னி காத்தேன்
உம் மடியா நெனச்சு தல சாய்ச்சேன்
ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நான் போகும் பாதையில் காத்திருக்கு
https://youtu.be/yuiTe1ZMPUE?si=InapmW_3qLQVwBq7
சுசீலா சரிதா ஆகி விடுவார்
சரிதா சுசீலா ஆகி விடுவார்
இந்த இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மனை மட்டும் ஒரு சுசீலா வெறியர் என்று சொல்லி விடலாம்.
தன் முதல் படமான “அச்சமில்லை அச்சமில்லை” தொட்டு
“ஆயிரம் பூக்கள் மலரட்டும்”
https://youtu.be/_Zs01bfoRKc?si=Vd09kFizmjmWJT39
“தங்க நிலவு தரையில் இறங்கி” (சித்திரம் பேசுதடி)
https://youtu.be/j8Y-uGa6qWQ?si=ocXEEuqvuZBN1YPC
தானே பாடுதே (கண் சிமிட்டும் நேரம்)
https://youtu.be/NXuCYIZX-D0?si=pB_9wS1wiBXXVEah
“மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்” (கல்யாண அகதிகள்)
https://youtu.be/JtudS9Rv7Ms?si=m95UPMQbd58eMbd6
என்று தனக்குக் கிடைத்த சொற்ப வாய்ப்புகளிலும் இயன்றவரை ஒரு கெளரவ ஆசனம் கொடுத்து விடுவார் இசையரசிக்கு.
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்
இசையரசி வாழ்க வாழ்கவே
❤️
கானா பிரபா
13.11.2024
ஒளிப்படம் நன்றி : P.Suseela தளம்
0 comments:
Post a Comment