வீட்டில் ஒரு பிள்ளையை பெரிதும் நம்பிக் கொண்டிருக்க, இன்னொரு பிள்ளை சத்தமில்லாமல் ஜெயித்துக் காட்டுவது தமிழ் சினிமாவின் மாமூல் கதைகளன் மட்டுமல்ல ராஜா வீட்டிலும் இதுதான் கதை.
அம்மா கிரியேஷன்ஸ் சிவாவே இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவின் வருகையை அரவிந்தன் படம் மூலமாக வழியேற்படுத்திக் கொடுத்தார்.
ஆனால் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களின் பரவலான அறிமுகத்தைப் பெற வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார் படம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து செல்வராகவனும் சினிமாவுக்கு வந்து சேர துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என்று தொடர்ந்த இசை வெற்றிகளையும் கொடுத்தார் யுவன்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களில் ஒட்டுமொத்தமாக எல்லாப்பாடலும் சிறந்து விளங்கிய மிகச் சிறந்த இசைப்படைப்பு எது என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்வார்கள். அதில் 7ஜி ரெயின்போ காலனி பெருவாரியான வாக்குகளைப் பெறும். ஆனால் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் தீனா படத்தின் பாடல்கள் மீது தான் கொள்ளை ஆசை. யுவனோடு ஜோடி கட்டிய ஏ.ஆர்.முருகதாஸ் இற்கு இன்று வரை அதற்குப் பின்னால் ஒட்டுமொத்தப் பாடல்களும் சிறந்து விளங்கிய படம் வரவில்லை என்பேன்.
யுவனின் இசையுலக வெற்றிக்கு வஸந்த், செல்வராகவன் போன்ற இயக்குனர்களின் கையைப் பிடித்து இழுப்பார்கள். ஆனால் முன்னர் நான் ட்விட்டரில் சொன்னது போன்று யுவன் ஷங்கர் ராஜா பிரபலமாகப் பேசப்படும் படங்களை விட அதிக கவனத்தை ஈர்க்காத படங்களிலேயே அதிகம் சாதித்திருக்கிறார். ஆனால் அந்தப் பாடல்களைத் தேடிக் கேட்கும் பொறுமை அநேகருக்கு இல்லை.
இளையராஜா காலத்துக்குப் பின்னர் கூட்டணி ஆட்சி தான் இசைத்துறையில். அதிலும் தனித்து நின்று ஜெயிப்பதும், ( தகப்பனின் நிழல் படாமல் ) அவ்வளவு சுலபமில்லை. யுவனுக்கு அரவிந்தன் படம் எவ்வளவு முதல் சரிவைக் கொடுத்ததோ அது போலவே அவரின் இசைப்பயணத்தில் வெற்றியும் சறுக்கலும் மாறி வருகிறது. ஆனால் தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும் போது அடித்து ஆடுவார். இன்றைய சூழலில் யுவனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இசையமைப்பாளருக்குமே சீரான சகாசங்கள் கிடைப்பதில்லை.
யுவன் இசையமைத்த சில பாடல்களைக் கேட்கும் போது நம்பவே முடியாத அளவுக்கு மெட்டமைப்பும், இசைக்கோர்ப்பும் இருக்கும். இசை சம்பந்தமாக யுவனிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவரின் பதில்களைப் படித்துப் பாருங்கள் நிறையவே தெளிவிருக்கும்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களில் என்னைக் கவர்ந்த ஐம்பது பாடல்களை இன்று அவரின் பிறந்த நாளில் கொடுக்கும் வாய்ப்புக்கிட்டியிருக்கிறது. இந்தப் பதிவே அஜித் மாதிரி எழுதினேன். ஹிஹி அதாவது நடந்து கொண்டே.
இந்தப் பட்டியல் எந்தத் தரவரிசையும் கொண்டிராது என் ஞாபக அடுக்குகளின் வெளிப்பாடு மட்டுமே.
1. நினைத்து நினைத்துப் பார்த்தேன் - 7G ரெயின்போ காலணி
2. சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் - தீனா
3. யாரோ யாருக்கு - சென்னை 28
4. சின்னஞ்சிறுசுக மனசு - குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
5. ஆனந்த யாழை மீட்டுகிறாள் - தங்க மீன்கள்
6. இரவா பகலா - பூவெல்லாம் கேட்டுப்பார்
7. வயது வா வா என்கிறது - துள்ளுவதோ இளமை
8. தொட்டு தொட்டு - காதல் கொண்டேன்
9. இதயம் இதயம் - பில்லா 2
10. தீப்பிடிக்க தீப்பிடிக்க - அறிந்தும் அறியாமலும்
11. மேற்கே மேற்கே - கண்ட நாள் முதல்
12. தாவணி போட்ட தீபாவளி - சண்டக்கோழி
13. காதல் வைத்து - தீபாவளி
14. இதுவரை இல்லாத - கோவா
15. ஐய்யய்யோ - பருத்தி வீரன்
16. என் ஃபியூசும் போச்சு - ஆரம்பம்
17. துளி துளி மழையாய் - பையா
18. என் அன்பே - மெளனம் பேசியதே
19. என் ஜன்னல் வந்த காற்று - தீராத விளையாட்டுப் பிள்ளை
20. இறகைப் போல - நான் மகான் அல்ல
21. பேசுகிறேன் - சத்தம் போடாதே
22. அடடா என் மீது - பதினாறு
23. என்ன என்ன ஆகிறேன் - காதல் சொல்ல வந்தேன்
24. சொல் பேச்சு - தில்லாலங்கடி
25. ஏதோ செய்கிறாய் - வாமனன்
26. மஞ்சக்காட்டு மைனா - மனதை திருடி விட்டாய்
27. முன்பனியா - நந்தா
28. ஈர நிலா - அரவிந்தன்
29. கொங்கு நாட்டு - வானவராயனும் வல்லவராயனும்
30. வானம் தூவும் - புன்னகை பூவே
31. ஏ நெஞ்சே - ஏப்ரல் மாதத்தில்
32. தீண்டி தீண்டி - பாலா
33. காதல் வளர்த்தேன் - மன்மதன்
34. தாஜ்மஹால் - கள்வனின் காதலி
35. எங்க ஏரியா - புதுப்பேட்டை
36. அரபி நாடே - தொட்டால் பூ மலரும்
37. ஆத்தாடி மனசு தான் - கழுகு
38. மெர்க்குரி பூவே - புதிய கீதை
39. காதல் என்பது - ஒரு கல்லூரியின் கதை
40. ஒரு கல் ஒரு கண்ணாடி - சிவா மனசுல சக்தி
41. கோடானு கோடி - சரோஜா
42. அலைபாயும் நெஞ்சிலே - ஆதலால் காதல் செய்வீர்
43. ராசாத்தி போல - அவன் இவன்
44. நீ நான் - மங்காத்தா
45. வெண்மேகம் - யாரடி நீ மோகினி
46. மச்சான் மச்சான் - சிலம்பாட்டம்
47. இரு கண்கள் சொல்லும் - காதல் சாம்ராஜ்யம்
48. வானத்தையும் மேகத்தையும் - மச்சக்காரன்
49. பறவையே பறவையே - கற்றது தமிழ்
50. நட்பின் கதைகளை - காதல் 2 கல்யாணம்