சினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்களாகியது. இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, வங்காளத்தில் சத்யஜித் ரே மலையாளத்தில் பாலசந்திர மேனன் போன்றோரே இசையமைப்பாளர்களாக வந்திருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் நல்லதொரு படைப்பாளிகளாகவும் மற்றைய தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்து தம் படைப்புக்கு எது தேவை என்று தீர்மானித்து அளவோடு கேட்டு வாங்கி வெற்றிகரமானதொரு படைப்பாக ஆக்கியது போல தாமும் இசையமைப்பாளராக மாறித் தம் படைப்பில் கொடுத்திருக்கின்றார்களா என்பதை ரசிகர்களின் இசை ரசனையும் காலமும் தீர்மானித்தது. டி.ராஜேந்தரைப் பொறுத்தவரை ஒரு தலை ராகம் முதல் என் தங்கை கல்யாணி வரையான காலப்பகுதி வரை இசையமைப்பாளராகவும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்து வந்திருக்கின்றார்.
அவரைப் பற்றி இன்னொரு தொகுப்பில் கவனிக்கலாம்.
இவர்கள் எல்லோரையும் விட மரியாதையாக இசை உதவி என்று போட்டுக் கொண்டு தனக்குப் பிடித்த மெட்டுக்களைக் கொடுத்து மனோஜ் கியான் இரட்டையர்கள், கியான் வர்மா (மனோஜ் தவிர்த்து) போன்றவர்களிடம் பாட்டு வாங்கியவர் ஆபாவாணன்.
கே.பாக்யராஜ், தமிழ் சினிமாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசியர் என்ற பெருமையை சக இயக்குனர்களாலேயே வாயாரப் பெற்றவர். தன் குரு பாரதிராஜா போன்று இளையராஜாவின் இசையோடு இணைந்து தன் வெற்றியைப் பங்கு போட்டுக் கொள்ளாமல் தன்னுடைய சுவர் இல்லாத சித்திரங்கள் முதல் கங்கை அமரன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தீபக் என்று பல்வேறு இசையமைப்பாளர்களோடு இணைந்து சிறந்த பாடல்களைக் கொண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். கூடவே ஆராரோ ஆரிரரோ, அவசரப் போலீஸ் 100, பவுனு பவுனு தான் போன்ற தன் இயக்கத்தில் வந்த படங்கள், இது நம்ம ஆளு (பாலகுமாரன்) ,ஞானப் பழம் (விஸ்வம்) போன்ற பிற இயக்குனர் இயக்கத்தில் தான் நடித்த படங்கள், தென் பாண்டி சீமையிலே, பொண்ணு பாக்கப் போறேன் போன்ற பிறர் இயக்கத்தில் வந்த இவர் நடிக்காத திரைப்படங்கள் போன்றவற்றில் இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர் கே.பாக்யராஜ்.
வெற்றிகரமான கதாசிரியர், இயக்குனர் என்ற வரிசையில் வெற்றிகரமான இசையமைப்பாளராக கே.பாக்யராஜ் இருந்தாரா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும். இவரது இசையில் பெரும் புதுமைகள் இருந்ததாகத் தெரியவில்லை. பச்சமலை சாமி ஒண்ணு என்று தானே இசையமைத்துப் பாடியும், சல சலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே போன்ற இனிமையான பாடல்களையும் கொடுத்தாலும் அவை பத்தோடு பதினைந்து என்ற பட்டியலிலேயே இருக்கும். 80 களில் டி.ராஜேந்தர் கொடுத்த சிறப்பான, மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்தித் தனித்துவமாக இருந்த இசைமைப்பு அளவிற்கு கே.பாக்யராஜின் இசை அமையவில்லை. இருப்பினும் கே.பாக்யராஜ் என்ற இசைமைப்பாளரின் இசையில் மலர்ந்த, கேட்கக் கூடிய பாடல்கள் என்ற வகையறாக்களை இன்றைய தொகுப்பில் தருகின்றேன்.
"இது நம்ம ஆளு" திரைப்படம் பாலகுமாரனின் இயக்கத்தில் வந்த போது கே.பாக்யராஜ் இசையமைத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடிய "சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் தேவை"
பொண்ணு பாக்கப் போறேன் திரைப்படம் பிரபு, சீதா, மனோ (சிவாஜியின் தம்பி பையன்) நடிப்பில் வந்தபோது அந்தப் படத்தில் பாக்கியராஜ் இசையமைத்த "நான் உப்பு விக்கப் போனா மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது" பாடல் வெகு பிரபலம் அப்போது. இந்தப் படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "சலசலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே"
"ஆராரோ ஆரிரரோ" திரைப்படம் கே.பாக்யராஜ் இயக்கத்தில் மீண்டும் பானுபிரியாவை தமிழுக்கு இழுத்து வந்த படம். இப்படத்தில் வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "ஓடப் பக்கம் ஒரு குருவி வா வாங்குது"
"பவுனு பவுனு தான்" படத்தின் மூலம் நடிகை ரோகிணியின் நடிப்பும், நல்ல கதையம்சமும் பேசப்பட்டது, ஆனால் படம் பெட்டிக்குள் சீக்கிரமே சுருண்டது. இந்தப் படத்தில் இருந்து எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "தென் மதுரை சீமையிலே சாமி ஆளாகி நா வாடுறேன்" என்னும் இனிமையான பாடல்.
"ஞானப் பழம்" ஆர்.பி.விஸ்வம் என்னும் அதுவரை வில்லத்தனங்கள் பண்ணிய கே.பாக்யராஜ் சீடரை இயக்குனராக்கியது. படமும் தோல்வி, ஆர்.பி.விஸ்வமும் வெற்றியை ருசிக்காமல் காலமாகிவிட்டார். ஞானப்பழம் திரைப்படம் தான் கே.பாக்யராஜ் இசையமைப்பில் இதுவரை இறுதியாக வந்த திரைப்படம்.
அந்தப் படத்தில் இருந்து சுஜாதா, உன்னிகிருஷ்ணன் பாடும் "யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்".
கடந்த றேடியோஸ்புதிரில் கேட்ட கேள்வியின் பதிலாக வருவது "காவடி சிந்து" திரைப்படம். எண்பதுகளில் பிரபலமாக இருந்த அமலாவோடு, தானே இயக்கி, நடித்து,இசையமைத்து கே.பாக்யராஜ் எடுக்கவிருந்த படம். ஆனால் ஏதோ காரணத்தினால் அப்படம் வெளிவராமலே போய் பின்னர் ரகுமான், ராதிகா நடித்து வெளிவந்த பட்டணந்தான் போகலாமடி திரைப்படத்தில், பாக்யராஜ், அமலா நடித்த "காவடி சிந்து" பாடற் காட்சி ஒன்று பயன்படுத்தப்பட்டது. இந்த காவடி சிந்து திரைப்படத்திற்காக எடுத்த புகைப்படத்தை முதற்படமாகத் தந்திருக்கின்றேன்.
இந்த வெளிவராத "காவடி சிந்து திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "யாரோ சொன்னாங்க, என்னன்னு"
காவடி சிந்து திரைப்படத்தில் இருந்து மேலும் ஒரு பாடல், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "என்ன குறை ராசாவே"
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
இசையமைப்பாளர் என்றால் என்ன?
பாக்கியராஜா ஒரு பேட்டியில் தனக்கு கீபோர்ட் வாசிக்கத் தெரியாதென்றும் ஆனால் மெட்டுப் போடுவேன். அவற்றை இசை வல்லுனர்களைக் கொண்டு இசையாக்குவது என்றும் சொன்னார்.
அப்பிடி பார்த்தால் நானும் இசையமைப்பாளர்தான்.
me the first?
oru nimidathil poiduchche...:)
அட இதான் நான் நினைச்சேன் சொன்னேன் :)
இந்த தடவ ஒன்னும் கண்டு பிடிக்க முடியல. :-))))
ஆமா. ஆமா.. ஞானபழம் படத்துல வர்ற யாருமில்லாத தீவு ஒன்று வேணும் வேணும் ரொம்ப பிடிச்ச பாட்டு எனக்கு. அதுக்கு காரணம்தான் உங்களுக்கு தெரியுமே. ;-)
:((
:))
பாக்யராஜ் இசையில் வந்த பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் அவர் தனித்துவமான இசையமைப்பாளாரா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.
காவடிச் சிந்து பாடல்கள் வெளி வந்தன. ஆனால் படம் வரவில்லை.
சகாதேவன், மகாதேவன்? ராமநாராயணன் இயக்கத்தில் வந்த படம்தானே? அந்தப் படத்துக்கு இசை சங்கர் - கணேஷ் என்று ஞாபகம் :-S சரியாகத் தெரியவில்லை!
- என். சொக்கன்,
பெங்களூர்.
கலக்கிட்டீங்க!
பாக்யராஜே நினைச்சாலும்
இவ்வளவு கோர்வையா
சிந்திக்கமுடியாது.
வாழ்த்துக்கள்!
//Naga Chokkanathan said...
சகாதேவன், மகாதேவன்? ராமநாராயணன் இயக்கத்தில் வந்த படம்தானே? அந்தப் படத்துக்கு இசை சங்கர் - கணேஷ் என்று ஞாபகம் :-S சரியாகத் தெரியவில்லை!
- என். சொக்கன்,
பெங்களூர்.//
வாங்க சொக்கன்
விஜய்காந்த் நடித்து இராமநாராயணன் இயக்கிய தென்பாண்டி சீமையிலே இசை பாக்யராஜ், ஆனா சகாதேவன் மகாதேவன் படத்துக்கு அவர் இசையில்லை, இதோ திருத்தி விட்டேன், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி
//சயந்தன் said...
அவற்றை இசை வல்லுனர்களைக் கொண்டு இசையாக்குவது என்றும் சொன்னார்.
அப்பிடி பார்த்தால் நானும் இசையமைப்பாளர்தான்.//
அப்ப நானும் தான் ;-) சுந்தர காண்டம் படத்துக்கு இசையமைத்துக் காணாமல் போன தீபக் தான் பாக்யராஜின் இசைக்கு தோள் கொடுத்ததாகவும் பேச்சு
நிஜம்ஸ்
ஒரு நிமிஷத்தில் அவர் முந்திட்டார் ;-)
பிரபா.... எங்கே இருந்து இத்தனை பாடல்களையும் திரட்டுகிறீர்களோ தெரியாது. வியக்க வைஇகிறது உங்களாது இசை ரசனையும் ஈடுபாடும்.
கஸ்தூரிராஜா இசையமைத்தது நல்ல காமெடி. அவரிடம் இசையனுபவம் பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது "இளையராஜா இசையமைப்பதை கண்ணால் பார்த்ததே போதுமான இசையனுபவம்" என்றார்.
அருமையான பதிவு தல.. இன்னும் பாடல்களைக் கேக்கலை.. கேட்டுட்டு சொல்றேன்.
இதில் 'யாரும் இல்லாத் தீவொன்று' பாடல் பள்ளி நாட்களில் கேட்டது.எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நல்ல மெலடி பாடல்.
//காவடி சிந்து திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "யாரோ சொன்னாங்க, என்னன்னு"//
இந்தப் பாடல் இசை யாரென்று ரொம்ப நாள் தெரியாமலிருந்தேன். தெரிவித்தமைக்கு நன்றி.
//"பவுனு பவுனு தான்" படத்தின் மூலம் நடிகை ரோகிணியின் நடிப்பும், நல்ல கதையம்சமும் பேசப்பட்டது, //
சிறந்த கதைக்காக தேசியவிருது கிடைத்தது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்..
தல
மொத்த பாக்கியராஜ் படமும் இருக்கும் போல!!!...
நன்றி தல ;)
பாக்யராஜ் அவர்களின் இசை சங்கர் கணேஷின் தாக்கம் இருக்கிறது அல்லது உதவி இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.
எனினும், இது நம்ம ஆளு படத்தில் காம தேவன் ஆலயம் அருமையான காதல் பாடல்
- இந்த பதிவிற்கு சம்மந்தமில்லாத ஒரு செய்தி
காவடி சிந்து படத்தை போலவே வெளிவராமல் போன படங்களின் பாடல்கள் என்று ஒரு தலைப்பு கொடுத்து பாடல்களை வரிசை படுத்தலாம்.
அந்த வரிசையில் வி.எஸ். நரசிம்மன் இசை அமைத்து கார்த்திக், ரேகா நடிப்பதாக இருந்து பாதியில் நின்று போன ஒரு படம் உள்ளது. அந்த படத்தின் பெயர் நினைவிலில்லை, ஆனால் பாடல், "அழகிய கல்யாண பூமாலை தான்..' என்ற பாடல் மிகவும் அற்புதமான பாடல்.
வாங்க நாஹூர் இஸ்மாயில்
நீங்கள் சொல்லுவது போல் பாக்யராஜின் இசையில் சங்கர் கணேஷ் தாக்கம் இருந்ததை உணரமுடிகின்றது. அவர்களின் உதவியாளர்களில் ஒருவர் கூட உதவி செய்திருக்கலாம்.
நீங்கள் சொன்ன கார்த்திக், ரேகா நடித்து நரசிம்மன் இசையில் வெளிவராத "அழகிய கல்யாணப் பூமாலை தான்" பாட்டு இடம்பெற்ற திரைப்படம் "சின்ன மணிக்குயிலே". என்னிடம் அந்தப் பாட்டு நீண்ட நாள் தேடலுக்குப் பின் மலேசியாவில் ஒரு ஆடியோ கடையில் போன 2 வருஷம் முன் பெற்றேன். இப்படியான வகையறாக்களைக் கொண்ட ஒரு தொகுப்பும் நிச்சயம் தருவேன்.
// ஆயில்யன் said...
அட இதான் நான் நினைச்சேன் சொன்னேன் :)//
சொல்லுவீங்கப்பூ ;-)
//மை ஃபிரண்ட் ::. said...
இந்த தடவ ஒன்னும் கண்டு பிடிக்க முடியல. :-))))//
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ;-)
சுஜா பாட்டுன்னா யாரும் இல்லாத தீவு கேட்பீங்களே, உலகறிந்த விசயமாச்சே.
வாங்க சஞ்சய்
பாதி தெரியும் பாதி தெரியாதா ;-)
அமலா எவ்வளவு அழகா இருக்காங்க.. ஹ்ம்.. அப்பறம் ஒல்லிப்பிச்சானா ஆகியாச்சுல்ல...
அருமையான ஆய்வு.. இசைக் கலைஞாக மறக்கப்பட்ட ஒரு சகலதுறை(!) வல்லுனரை மீண்டும் ஞாபகப் படுத்தி இருக்கிறீர்கள்.
இப்போதைய இளையவர்களுக்கு இவரை முருங்கைக்காய் என்றால் தான் ஞாபகம் வரும்;)
அன்பு கானா பிரபா,
அந்த படம் சின்னமணிக்குயிலே என்றதும் நான் அசந்து போய் விட்டேன். அதே போல் இன்னொரு பாடல் இருக்கிறது, 'அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒரு அழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே' - ஒரு மாதிரி சி எஸ் ஜெயராமன் குரலில் மலேசியா வாசுதேவன் பாடியது என்று நினைக்கிறேன்.
படத்தின் பெயர், "பொம்பள மனசு"
- சின்னமணிக்குயிலே படத்தில் இன்னொரு காதல் பாடலும் ரம்மியமாக இருக்கும்
வாங்க ராகவன்
கே.பாக்யராஜ் தன்னுடைய துறையுடன் மட்டும் கவனம் செலுத்தி, அந்த பின்னணி இசையமைப்பாளருக்கு இன்னும் வாய்ப்புக் கொடுத்திருக்கலாம்.
//சுரேகா.. said...
கலக்கிட்டீங்க!
பாக்யராஜே நினைச்சாலும்
இவ்வளவு கோர்வையா
சிந்திக்கமுடியாது.//
மிக்க நன்றி சுரேகா, எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறு தான், நீங்க படம் இயக்கும் போது உங்களைப் பற்றியும் வலையில் எழுதுவேன் ;-)
//அருண்மொழிவர்மன் said...
பிரபா.... எங்கே இருந்து இத்தனை பாடல்களையும் திரட்டுகிறீர்களோ தெரியாது. வியக்க வைஇகிறது உங்களாது இசை ரசனையும் ஈடுபாடும்.//
மிக்க நன்றி நண்பா, பாடல்களைத் தேடுவதும், பொக்கிஷப்படுத்துவதும் என் பொழுதுபோக்கு/வாழ்க்கை
// தமிழ்ப்பறவை said...
//"பவுனு பவுனு தான்" படத்தின் மூலம் நடிகை ரோகிணியின் நடிப்பும், நல்ல கதையம்சமும் பேசப்பட்டது, //
சிறந்த கதைக்காக தேசியவிருது கிடைத்தது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்//
வாங்க தல
நடிகை ரோகிணியை மலையாளத்திலிருந்து தமிழுக்கு அழைத்து வந்த படம் அது. வசூலில் பெரிதாகப் போகவில்லை, ஆனால் சத்தான படம்.
//கோபிநாத் said...
தல
மொத்த பாக்கியராஜ் படமும் இருக்கும் போல!!!...//
வாங்க தல ;-)
நல்ல தொகுப்பு!! :-)
அமுத மழை பாடலை பாடியது டி. எல். தியாகராஜன். திருச்சி லோகநாதனின் மகன். மஹராஜன், தீபன் சக்கரவர்த்தியின் சகோதரன்
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
அமலா எவ்வளவு அழகா இருக்காங்க.. ஹ்ம்.. அப்பறம் ஒல்லிப்பிச்சானா ஆகியாச்சுல்ல...//
ஆஹா அமலாவை இவ்வளவு தூரம் கவனிச்சிருக்கீங்களா
//LOSHAN said...
அருமையான ஆய்வு.. இசைக் கலைஞாக மறக்கப்பட்ட ஒரு சகலதுறை(!) வல்லுனரை மீண்டும் ஞாபகப் படுத்தி இருக்கிறீர்கள்.//
மிக்க நன்றி லோஷன், இப்ப முருங்கைக்காய் எல்லாம் ஜிஜிபி தானே ;-)
//சந்தனமுல்லை said...
நல்ல தொகுப்பு!! :-)//
மிக்க நன்றி சந்தனமுல்லை
// nagoreismail said...
அன்பு கானா பிரபா,
அதே போல் இன்னொரு பாடல் இருக்கிறது, 'அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒரு அழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே'//
வணக்கம் நண்பரே
அருண்மொழி வர்மன் சொன்னது போல் அந்தப் பாடல் பாடியது தியாகராஜன், அந்தப் பாடலை முன்னர் இட்டிருந்தேன். இதோ அந்தத் தொடுப்பு
http://radiospathy.blogspot.com/2007/04/blog-post_13.html
'Domesticated Onion' venkat has mentioned abt Bhakyraj music secret in one of his post. Tamil Font intha system-la missing..Sorry thalaiva!
Post a Comment