Pages

Friday, April 27, 2007

நீங்கள் கேட்டவை - 3



வணக்கம் நண்பர்களே

வாராந்த நீங்கள் கேட்டவை பகுதியின் மூன்றாவது பதிவு இதுவாகும். ஏற்கனவே மின்னஞ்சல் மற்றும் பின்னூட்டம் மூலமாகப் பாடல்களைக் கேட்ட அன்பர்களின் விருப்பங்கள் இன்றைய பதிவில் இடம்பெறுகின்றன. பாடல் கேட்ட ஒழுங்கில் சில பாடல்கள் இல்லாமைக்குக் காரணம், குறிப்பிட்ட சில பாடல்கள் இன்னும் கைவசம் வந்து சேரவில்லை. நிச்சயமாக இடம்பெறாத மற்றைய பாடல்கள் அடுத்தடுத்த நீங்கள் கேட்டவை பதிவுகளில் இடம்பெறும். அந்த வகையில் இன்றைய விருப்பத்தேர்வுகள் இதோ

1. ஜெய்சங்கர் என்ற நேயரின் விருப்பத் தேர்வாக " தர்மபத்தினி" திரைப்படத்தில் இருந்து இளையராஜா இசையில், இளையராஜா, ஜானகி குரல்களில் " நான் தேடும் செவ்வந்திப் பூவிது" என்ற பாடல்

2. மாசிலா என்ற நேயரின் விருப்பத் தேர்வாக " மதனமாளிகை" திரைப்படத்தில் இருந்து எம்.பி.சிறீனிவாசன் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் " ஒரு சின்னப்பறவை" என்ற பாடல்

3. இந்துமகேஷ் என்ற நேயரின் மின்னஞ்சல் விருப்பத் தேர்வாக " இரவும் பகலும்" திரைப்படத்தில் இருந்து கே.வி.மகாதேவன் இசையில், நடிகர் அசோகன் பாடிய " இறந்தவனை" என்ற பாடல்

4. திலகன் என்ற நேயரின் விருப்பத் தேர்வாக " செம்மீன்" திரைப்படத்தில் இருந்து சலீல் செளத்ரி இசையில், கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் " கடலினக்கரை போனேரே" என்ற பாடல்

5. கோபிநாத் என்ற நேயரின் விருப்பத் தேர்வாக " நீங்கள் கேட்டவை" திரைப்படத்தில் இருந்து இளையராஜா இசையில் ஜானகி குரலில் "பிள்ளை நிலா இரண்டும்" என்ற பாடல்

6. சிவா என்ற நேயரின் மின்னஞ்சல் விருப்பத் தேர்வாக " ஒரு விடுகதை ஒரு தொடர்கதை" திரைப்படத்தில் இருந்து கங்கை அமரன் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் ஜானகி குரல்களில் "நாயகன் அவன் ஒரு புறம்" என்ற பாடல்


பாடல்களைக் கேளுங்கள், உங்கள் விருப்பங்களையும் தொடர்ந்தும் அறியத் தாருங்கள்.
நீங்கள் கேட்டவை 3 என் குரற்பதிவில் அறிமுகம்


பாடல்களைக் கேட்க
Powered by eSnips.com

Wednesday, April 25, 2007

காதலர் கீதங்கள் - மெளனமான நேரம்


காதலர் கீதங்களாக மெளனமான நேரம் என்ற தலைப்பில் முத்தான மூன்று காதல் ரசம் சொட்டும் பாடல்கள் இன்றைய சிறப்புப் படையலாக இடம்பெறுகின்றன.
இதில் மு.மேத்தாவின் காதற் கவிதைகளோடு, வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களான "மெளனமான நேரம்" (சலங்கை ஒலி), "ஊரு சனம் தூங்கிடிச்சு" (மெல்லத் திறந்தது கதவு), காதல் மயக்கம் ( புதுமைப்பெண்) ஆகிய பாடல்கள் வலம் வருகின்றன.

Sunday, April 22, 2007

இசைக்கோலம்: யாழ் சீலனின் கிற்றார் இசை


இசைக்கோலம் என்ற புதிய பகுதியில் முதன்முதலாக அரங்கேறுகிறது, யாழ் சீலனின் கிற்றார் இசை. 80 களின் ஆரம்பத்தில் தொழில்நுட்ப வசதி சொற்பமாக இருந்த வேளையில் யாழ்ப்பாணம் நியூ விக்டேர்ஸ் என்ற ஒலிப்பதிவுக் கலையகத்தில் வைத்து யாழ் சீலனால் தமிழ் சினிமாப்பாடல்களைக் கிற்றார் இசையில் மீள் இசையமைத்ததை இங்கே கேட்கப்போகிறீர்கள். இந்த அரிய ஒலிப்பதிவைத் தந்த, இசையில் தணியாத தாகம் கொண்ட என் சகோதரர் ஜேர்மனியில் வாழும் துளசி அண்ணாவுக்கும் (அவரும் ஒரு கிற்றார் வாத்தியக்காரர்), இந்த முனைப்பை ஞாபகப்படுத்திய சாதாரணன் என்ற வலையொலி நேயருக்கும் என் நன்றிகள்.

இந்தப் பகுதியில்
1. இசைஞானி இளையராஜா இசையில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்பாடலான "உச்சி வகுந்தெடுத்து"
2. இசைஞானி இளையராஜா இசையில் காற்றினிலே வரும் கீதம் திரைப்பாடலான "ஒரு வானவில் போலே"
3. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாலும் பழமும் திரைப்பாடலான "ஆலய மணியின் ஓசையை"

ஆகிய பாடல்கள் இடம்பெறுகின்றன. மற்றைய பாடல்கள் தொடர்ந்த இசைக்கோலம் பகுதிகளில் இடம்பெறும்.

Thursday, April 19, 2007

நீங்கள் கேட்டவை - பாகம் 2


வணக்கம் நண்பர்களே

பரீட்சார்த்த முறைப்படி அறிமுகப்படுத்திய நீங்கள் கேட்டவை பகுதிக்குப் பின்னூட்டலிலும் தனிமடலிலும் தொடர்ந்து உங்கள் விருப்பப்பாடல்களை அளித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. இயன்றவரை தேடற்கரிய, தேடிக்கொண்டிருக்கும் பாடல்களுக்கு முன்னுரிமை கொடுத்து உங்கள் தெரிவுகளைத் தொடர்ந்தும் அனுப்புங்கள்.

இந்த வாரப்பகுதியில் தேர்ந்தெடுத்த ஆறுபாடல்களும், தொடர்ந்த பகுதிகளில் ஏற்கனவே பாடல்களைக் கேட்ட நேயர்களின் விருப்பத்தேர்வும் அணிசெய்ய இருக்கின்றன.

நீங்கள் கேட்டவை 2 பகுதியில் இடம்பெறும் பாடல்கள்


1. தமிழ்ப்பித்தனின் விருப்பத்தேர்வில் காயல் ஷேக் முகமட் பாடிய "ஈச்சை மரத்து" என்ற இஸ்லாமிய கீதம் முதற்பாடலாக வருகின்றது.

2. வசந்தனின் விருப்பத்தேர்வில் பி.சுசீலா பாடிய " அன்பில் மலர்ந்த" என்ற பாடல்"கணவனே கண்கண்ட தெய்வம்" திரைப்படத்திற்காக ஆதி நாராயணராவ் இசையில் மலர்கின்றது.

3. வெற்றியின் விருப்பத்தேர்வில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய " அவள் ஒரு மேனகை" என்ற பாடல் "நட்சத்திரம்" திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையமைப்பில் கலக்குகின்றது.

4. சர்வேசனின் விருப்பத்தேர்வில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் குரல்களில் "என் காதலி" என்ற பாடல் "தங்கத்திலே வைரம்" திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையில் மலர்கின்றது.

5. தெய்வாவின் விருப்பத்தேர்வில் எஸ்.ஜானகி் பாடிய " காற்றுக்கென்ன வேலி" என்ற பாடல் அவர்கள் திரைப்படத்திற்காக கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மலர்கின்றது.

6. மங்கையின் விருப்பத்தேர்வில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய " அங்குமிங்கும் பாதை உண்டு" என்ற பாடல் அவர்கள் திரைப்படத்திற்காக கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வருகின்றது.

என் குரற்பதிவில் நீங்கள் கேட்டவை 2 அறிமுகம்



நீங்கள் கேட்டவை 2 பாடற்தொகுப்பு

Powered by eSnips.com

Wednesday, April 18, 2007

ஒரு படப்பாடல் - மூன்று முடிச்சு


இன்றைய ஒரு படப்பாடல் பகுதியிலே வடுவூர் குமார் என்ற நேயர், நீங்கள் கேட்டவை பகுதியில் கேட்டிருந்த மூன்று முடிச்சு திரைப்படப்பாடல்கள், அப்பாடல்களின் அறிமுகத்தோடு இடம்பெறுகின்றன.

இத்திரைப்படத்தில் இருந்து ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் ஜோடிக்குரலில் வசந்தகால நதிகளிலே, ஆடிவெள்ளி தேடியுன்னை ஆகிய பாடல்களும், எல்.ஆர்.ஈஸ்வரி பி.சுசீலா குரல்களில் நானொரு கதாநாயகி என்ற பாடலும் அணிசெய்கின்றன.


என் குரற்பதிவில் மூன்று முடிச்சு பாடல்கள் குறித்த அறிமுகம்


பாடல்களைக் கேட்க

Tuesday, April 17, 2007

எதிர்காலச் செயற்பாடுகள்




என்னுடைய எண்ணத்தில் உதித்த, செயல்வடிவம் பெற இருக்கும் றேடியோஸ்பதியின் எதிர்கால செயற்பாடுகளைக் குறித்த முன்னோட்டம் இது.

நீங்கள் கேட்டவை
பரீட்சார்த்தமாக இடம்பெற்ற நீங்கள் கேட்டவை பாடல் தெரிவுப்பகுதிக்குத் தொடர்ந்தும் அமோக ஆதரவுடன் பாடல்கள் குவிகின்றன. எனவே மே மாதத்திலிருந்து இப்பகுதி, வாரம் இரண்டாக இடம் பெறும். முன்னர் குறிப்பிட்டது போல அரிய பாடல்களுக்கு முன்னுரிமை.

விவரண ஒலிச்சித்திரம்
உலக நடப்புக்கள், சாதனையாளர் குறித்த விவரண ஒலிச்சித்திரம்.

இந்த வார நேயர்
இணைய நேயர்களுடன் குரல்வழி சம்பாஷணையோடு அவர்களின் ரசனைகளின் பகிர்வு

சிறப்புப் பேட்டி
பல்துறைக் கலைஞர்களின் சிறப்புச் செவ்வி

அக்கரை கீதம்
பல்வேறு மொழிகளில் வந்த பாடல்கள், அவை தமிழ்த்திரையில் புகுந்த சுவையான செய்திகளோடு இடம்பெறும்.

இசைக்கோலம்
திரைப்படங்களில் இடம்பெறும் பின்னணி இசை, பாடல்களின் வாத்திய விருந்து.
சாதாரணன் என்ற நேயர் தேடிய 80 களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் தொழில்நுட்ப வசதி அற்ற காலத்தில் யாழ் சீலன் என்ற கலைஞர் கிற்றார் இசையில் வழங்கிய பாடல் இசைத் தொகுப்பு பிரத்தியோகமாக விசேட படையலாக வர இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கின்றேன்.

ஈழத்து முற்றம்
ஈழத்துக் கலைஞர்கள், படைப்பாளிகள் குறித்த ஒலிப்பகிர்வு, மெல்லிசைப்பாடல்கள் தாங்கிய பெட்டக நிகழ்ச்சி.

சிறப்புக் கலந்துரையாடல்
வலையில் உலாவரும் பல்துறைக் கலைஞர்களுடனான அனுபவ, நடப்புப் பகிர்வு.

இன்னும் தொடரும்.

Saturday, April 14, 2007

அமுத மழை பொழியும் முழு நிலவிலே...!



நீங்கள் கேட்டவை தெரிவில் நேயர் சயந்தன் இப்படிக் கேட்டிருந்தார்.
" கானாண்ணை.. எனக்கு அவசரமாக அமுத மழை பொழியும் ஒரு இரவிலே.. ஒரு அழகுச் சிலை.. என்ற பாடல் (எந்த படம் யார் பாடியது என்று எதுவும் தெரியாது வேண்டுமென்றால் பாடிக் காட்டலாம்) தேவைப்படுகிறது. ஓர்டரில கியுவில வந்தா தான் தருவன் எண்டு சொல்லாமல் கெதியா தர முடியுமோ..? //

நான் பாடி விஷப்பரீட்சை செய்யாமல், பாட்டு கியூவில இடையில புகுந்து பாட்டுக் கேட்ட சயந்தனின் தெரிவு, அவர் கேட்ட 20 நிமிடத்தில் வலையேறி வலைப்பதிவுலகில் முதல் "சுடச் சுட நீங்கள் கேட்டவை" என்ற பெருமையைத் தட்டிச் செல்கின்றது. ( எது எதுக்கெல்லாம் பெருமை தேடுறாங்கள்). நேரம் இப்போது அவுஸ்திரேலியாவில் அதிகாலை 2.51 மணி ( என்னே தொழில் பக்தி)

இந்தத் திடீர் நீங்கள் கேட்டவை பாடலாக வரும் "அமுத மழை பொழியும் முழு நிலவிலே...!"
பாடலைப் பாடியவர்: டி.எல்.தியாகராஜன்
படம் பொம்பள மனசு

எல்லா அன்பு உறவுகளுக்கும் சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமுத மழை பொழியும் முழு நிலவிலே

Thursday, April 12, 2007

நீங்கள் கேட்டவை 1 - காற்றினிலே வரும் கீதம்

கடந்த பதிவில் அறிவித்தது போன்று, உங்கள் விருப்பப்பாடல்களைப் பூர்த்தி செய்யும் நீங்கள் கேட்டவை பகுதியில் உங்கள் தெரிவுகளைப் பின்னூட்டமாக அனுப்பி வைத்தால் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தேர்ந்தெடுத்த ஐந்து பாடல்கள் உங்கள் விருப்பமாக இடம்பெறும் என்ற அறிவித்தலுக்கு அமைய முதலாவது பதிவு அமைகின்றது.

இந்த வாரம் பாடல் கேட்ட நேயர்களில், யோகன், மலைநாடான், ஜி.ராகவனுடைய தெரிவுகள் கிடைக்கும் பட்சத்தில் காலக்கிரமத்தில் எதிர்வரும் நீங்கள் கேட்டவை பகுதிகளில் இடம் பெறும். தமிழ்ப்பித்தன், மங்கை கேட்ட பாடல்கள் வரும் வெள்ளிக்கிழமை வலம் வர இருக்கும் நீங்கள் கேட்டவை 2 பகுதியில் இடம்பெறும். அன்பர்கள் தொடர்ந்தும் உங்கள் பாடற் தெரிவுகளை அனுப்பி வைக்கலாம். தேடற்கரிய பாடல்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவை என் பாடல் களஞ்சியத்திலிருந்து இடம்பெறவிருக்கின்றன.

இந்த வாரம் சாதாரணன் என்ற நேயரின் விருப்பத் தேர்வாக இசைஞானி இளையராஜா இசையில் "காற்றினிலே வரும் கீதம்" படப் பாடல்கள் ஒருபடப்பாடல்களாக அரங்கேறுகின்றன. கேட்டு மகிழுங்கள்

இந்த வார நீங்கள் கேட்டவை அறிமுகம்



பாடல்களைக் கேட்க

Tuesday, April 10, 2007

நீங்கள் கேட்டவை



எனது ஒலித்தொகுப்பின் அடுத்த படிநிலையாக, உங்கள் பாடல் தேர்வு விருப்பங்களைத் திருப்தி செய்யும் முகமாக, பிரதி வெள்ளி தோறும் தேர்ந்தெடுத்த ஐந்து நேயர்களின் பாடல்கள் " நீங்கள் கேட்டவை" யாக இடம் பெற இருக்கின்றன. பரீட்சார்த்த முறைப்படி இடம்பெறும் இந்தப் பதிவுகள் உங்கள் ஆதரவைப் பொறுத்து நிரந்தரமாக்கப்படும்.

திரையிசை அன்றும் இன்றும், ஈழத்து மெல்லிசைப் பாடல்கள், எழுச்சி கானங்கள் என்று உங்கள் ரசனைக்கேற்ற பாடலையும் விரும்பிக் கேட்பவர் பெயர்களையும், பிரதி வெள்ளிக்கிழமை காலைக்குள் கிடைக்கக்கூடியதாகப் பின்னூட்டமிடுங்கள். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் அரிய பாடல் பொக்கிஷங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

Sunday, April 8, 2007

உதிரிப்பூக்கள் உருவான கதை


தமிழ் சினிமாவின் போக்கில், நல் விதையாய் அமைந்த , இயக்குனர் மகேந்திரனின் கைவண்ணத்தில் உருவான உதிரிப்பூக்கள் படம் உருவான கதை, மகேந்திரனின் "சினிமாவும் நானும்" என்ற நூலில் இடம்பெற்றிருந்தது. அதில் தேர்ந்தெடுத்த சில பகுதிகளோடு, கவியரசு கண்ணதாசன் வரிகளில், இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடிய "அழகிய கண்ணே... உறவுகள்" நீயே பாடலும் கலந்து வருகின்றது என் குரற்பதிவோடு.

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை


"வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே
நாமும் இணையலாம்"

நீ கண்டதோ துன்பம்

இனி வாழ்வெலாம் இன்பம்
சுக ராகமாய் ஆனந்தம்

"நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது,
நம் சொந்தமோ இன்று
இணைந்தது இனிமை பிறந்தது"

என்ன அழகான வரிகள், வரிகளைச் சேதப்படுத்தாமல் ஜேசுதாஸின் கனிவான குரலும், இளையராஜாவின் ஆர்ப்பாட்டமற்ற ஒத்தடமாய் இசையும். அவள் அப்படித்தான் திரைப்படப்பாடலான " உறவுகள் தொடர்கதை" பற்றிய என் ஒலிச்சிலாகிப்பும்,
தொடர்ந்து அப்பாடலும் அரங்கேறுகின்றது.

Wednesday, April 4, 2007

இசையமைப்பாளர் நெளஷத் அலி நினைவில்

ஹிந்தித் திரையுலகில் 1940 இல் தொடங்கி தன் மூச்சு ஓயும் வரை இசைப்பணியாற்றிய நெளஷத் அலி என்னும் திரையிசைச் சக்கரவர்த்தி, கடந்த மே, 5, 2006 இல் இவ்வுலகை விட்டு ஒய்ந்த போது வானொலிப் படைப்பொன்றை வழங்கியிருந்தேன்.
அப்படையலை நெளஷத்தின் நினைவு மீட்டலாக் கொடுத்திருந்தேன்.
இப்படைப்பில் "Mughal-e-Azam" என்ற ஹிந்திப்படப் பாடல் தமிழில் அக்பர் திரைப்படப் பாடலாக பி.சுசீலா குரலில் காலம் மறக்கடிக்காத பாடலான "கனவு கண்ட காதல்" என்று மாறிய பாங்கையும் பாடல்களோடு தொட்டுச் செல்கின்றது.இந்திய சினிமா வரலாற்றில் நெளஷத்தின் தடம் ஆழமானதும் அகலமானதுமாகும்.