Pages

Tuesday, April 17, 2007

எதிர்காலச் செயற்பாடுகள்
என்னுடைய எண்ணத்தில் உதித்த, செயல்வடிவம் பெற இருக்கும் றேடியோஸ்பதியின் எதிர்கால செயற்பாடுகளைக் குறித்த முன்னோட்டம் இது.

நீங்கள் கேட்டவை
பரீட்சார்த்தமாக இடம்பெற்ற நீங்கள் கேட்டவை பாடல் தெரிவுப்பகுதிக்குத் தொடர்ந்தும் அமோக ஆதரவுடன் பாடல்கள் குவிகின்றன. எனவே மே மாதத்திலிருந்து இப்பகுதி, வாரம் இரண்டாக இடம் பெறும். முன்னர் குறிப்பிட்டது போல அரிய பாடல்களுக்கு முன்னுரிமை.

விவரண ஒலிச்சித்திரம்
உலக நடப்புக்கள், சாதனையாளர் குறித்த விவரண ஒலிச்சித்திரம்.

இந்த வார நேயர்
இணைய நேயர்களுடன் குரல்வழி சம்பாஷணையோடு அவர்களின் ரசனைகளின் பகிர்வு

சிறப்புப் பேட்டி
பல்துறைக் கலைஞர்களின் சிறப்புச் செவ்வி

அக்கரை கீதம்
பல்வேறு மொழிகளில் வந்த பாடல்கள், அவை தமிழ்த்திரையில் புகுந்த சுவையான செய்திகளோடு இடம்பெறும்.

இசைக்கோலம்
திரைப்படங்களில் இடம்பெறும் பின்னணி இசை, பாடல்களின் வாத்திய விருந்து.
சாதாரணன் என்ற நேயர் தேடிய 80 களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் தொழில்நுட்ப வசதி அற்ற காலத்தில் யாழ் சீலன் என்ற கலைஞர் கிற்றார் இசையில் வழங்கிய பாடல் இசைத் தொகுப்பு பிரத்தியோகமாக விசேட படையலாக வர இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கின்றேன்.

ஈழத்து முற்றம்
ஈழத்துக் கலைஞர்கள், படைப்பாளிகள் குறித்த ஒலிப்பகிர்வு, மெல்லிசைப்பாடல்கள் தாங்கிய பெட்டக நிகழ்ச்சி.

சிறப்புக் கலந்துரையாடல்
வலையில் உலாவரும் பல்துறைக் கலைஞர்களுடனான அனுபவ, நடப்புப் பகிர்வு.

இன்னும் தொடரும்.

10 comments:

வி. ஜெ. சந்திரன் said...

நிறைய நல்ல திட்டாங்கள், ஆவலோடும், எதிர்பார்ப்போடும்.

தமிழ்பித்தன் said...

நல்ல விடயம் கானாபிரபா அங்கால ஒரு குழுவாக கலக்குகிறார்கள் (வசந்தன் சோமி சயந்தன் சினேகிதி என்று அனுபவம் மிக்க பட்டாளம்) பாட்டுக்குப்பாட்டாம் இங்காலே நீங்கள் இப்படி திடீர் அறிவிப்பு இடையிலே ஏதும் கொழுவலுக்காக ஏதும் நானும் போடுவன் நல்ல ஆரொக்கியமான போட்டி அதை இது வரை தன்னந் தனியாக எதிர்கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துகளுடன் கூடிய ஊக்குவிப்பு

கானா பிரபா said...

உற்சாகப்படுத்தலுக்கு நன்றி விஜே,

ஐ சே தமிழ்ப்பித்தன்

சும்மா கொழுவி வைக்காதையும் சொல்லிபோட்டன். நான் யாருக்கும் போட்டியில்லை , போட்டியின்னு வந்துட்டா விடமாட்டேன் என்றெல்லாம் டயலாக் பேசமாட்டன். எனக்கு கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாம். எல்லாரும் சேர்ந்தே இயங்குவோம், நீரும் கூட்டா இருக்கிறீர் ;-))))

வடுவூர் குமார் said...

நல்ல முன்மாதிரியாக அமைய வாழ்த்துக்கள்.

தமிழ்பித்தன் said...

ஏன் அண்ணா தப்புத்தப்பா பரிந்து கொள்கிறீர் என்னை சண்டைக் காரணாகவே பார்க்கிறதாக முடிவெடுத்திட்டியல் போல கிடக்கு அதாவது தனிய சன் ரீவி இருந்த போதுள்ளதை விட இப்ப போட்டியுள்ள பொது நல்ல தரமானதை தருகிறார்கள் இல்லையா கட்டாயம் போட்டி வேணும் ஆனால் அது ஆரோக்கியமனதாக இருக்க வேண்டும் என்பதே எனது (கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்)கருத்து எனக்கு சரியான கவலை நான் பிரதானமாக எழுதும் வலை அறிமுகத்துக்கு ஒருவரும் போட்டி இல்லையே என்று ஆனாலும் அப்பப் சில நாரதர் வேலை செ்யயாமல் விடமாட்டேன்

மலைநாடான் said...

பிரபா!
துறைசார்ந்த முழுமையான செயல்திட்டம். பாராட்டுக்கள். நல்ல தொடக்கம், தொடருங்கள்.

கொழுவி said...

//இந்த வார நேயர்
இணைய நேயர்களுடன் குரல்வழி சம்பாஷணையோடு அவர்களின் ரசனைகளின் பகிர்வு

சிறப்புப் பேட்டி
பல்துறைக் கலைஞர்களின் சிறப்புச் செவ்வி//

இதில் கலந்து கொள்ளுவதற்கு பெயர்களைப் பதிவு செய்ய நீங்கள் ஒரு பதிவு இட வேண்டும். அதில் நான் முதலாவது பின்னூட்டம் இட வேண்டும்.

//அதாவது தனிய சன் ரீவி இருந்த போதுள்ளதை விட இப்ப போட்டியுள்ள பொது நல்ல தரமானதை தருகிறார்கள்//

பித்தனுக்கு போட்டியாக இன்னும் ஒருவரும் வரவில்லைப் போல.. :)

கானா பிரபா said...

வடுவூர் குமார், மலைநாடான்

தங்கள் உற்சாகப்படுத்தல்களுக்கு மிக்க நன்றிகள்

தமிழ்ப்பித்தன்

வலையுலக நாரதர் கொழுவியோட நீர் போட்டி போட்டு வெல்வது அவ்வளவு எளிதல்ல, ஆனாலும் முயற்சி திருவினையக்கும்.

கொழுவி அண்ணை

உங்களைத் தான் முதலில் தெரிவு செய்யலாம் எண்டிருக்கிறன், முறைப்படி அறிவிப்பு வரும் ;-)

வெற்றி said...

கா.பி,
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

நன்றி வெற்றி