
இசைக்கோலம் என்ற புதிய பகுதியில் முதன்முதலாக அரங்கேறுகிறது, யாழ் சீலனின் கிற்றார் இசை. 80 களின் ஆரம்பத்தில் தொழில்நுட்ப வசதி சொற்பமாக இருந்த வேளையில் யாழ்ப்பாணம் நியூ விக்டேர்ஸ் என்ற ஒலிப்பதிவுக் கலையகத்தில் வைத்து யாழ் சீலனால் தமிழ் சினிமாப்பாடல்களைக் கிற்றார் இசையில் மீள் இசையமைத்ததை இங்கே கேட்கப்போகிறீர்கள். இந்த அரிய ஒலிப்பதிவைத் தந்த, இசையில் தணியாத தாகம் கொண்ட என் சகோதரர் ஜேர்மனியில் வாழும் துளசி அண்ணாவுக்கும் (அவரும் ஒரு கிற்றார் வாத்தியக்காரர்), இந்த முனைப்பை ஞாபகப்படுத்திய சாதாரணன் என்ற வலையொலி நேயருக்கும் என் நன்றிகள்.
இந்தப் பகுதியில்
1. இசைஞானி இளையராஜா இசையில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்பாடலான "உச்சி வகுந்தெடுத்து"
2. இசைஞானி இளையராஜா இசையில் காற்றினிலே வரும் கீதம் திரைப்பாடலான "ஒரு வானவில் போலே"
3. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாலும் பழமும் திரைப்பாடலான "ஆலய மணியின் ஓசையை"
ஆகிய பாடல்கள் இடம்பெறுகின்றன. மற்றைய பாடல்கள் தொடர்ந்த இசைக்கோலம் பகுதிகளில் இடம்பெறும்.
5 comments:
wow..! thanks for these songs.Amazed to see these kinds of blogs.I am a first time visitor :) thanks
வாங்க செளமியா
வரவேற்கிறேன் :)
பிரபா!
யாழ்சீலன், யாழ் ரமணன், ஆகியோரின் கிட்டார் இசைக்காகவே, அவர்கள் கலந்துகொண்ட இசைநிகழ்ச்சிகளை தேடித் தேடிப் பாத்ிருக்கின்றோம். " என் தேவனே உன்னிடம் ஒன்றுறு கேட்பேன்.." எனும் பாடல் ஒன்றில் கிட்டார் இசை மிக நன்றாக வரும். அவ்விசைக் கோப்பை ரசிப்பதற்காகவே, இசைக்குழுக்களிடம் நேயர் விருப்பமாக இப்பாடல் பலராலும் கேட்கப்படும்.
மேலதிக தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிகள் மலைநாடான், இவர்கள் என்னுடைய சிறு பிராயத்து நாட்களில் கோலோச்சியவர்கள் என்பதால் எனக்கு அதிக விபரம் தெரியவில்லை. யாழ் சீலன் தற்போது லண்டனில் இருப்பதாக அறிகின்றேன்.
மலைநாடான்,
நீங்கள் சொல்வதுபோல 'என் தேவனே உன்னிடம்...' மிக மிக பிரபலம். அதில் 'என்பிள்ளை கூட என் சொந்தம் இல்லை...' வரிகள் மிக நன்றாக இருக்கும்.
Post a Comment