Pages

Thursday, April 19, 2007

நீங்கள் கேட்டவை - பாகம் 2


வணக்கம் நண்பர்களே

பரீட்சார்த்த முறைப்படி அறிமுகப்படுத்திய நீங்கள் கேட்டவை பகுதிக்குப் பின்னூட்டலிலும் தனிமடலிலும் தொடர்ந்து உங்கள் விருப்பப்பாடல்களை அளித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. இயன்றவரை தேடற்கரிய, தேடிக்கொண்டிருக்கும் பாடல்களுக்கு முன்னுரிமை கொடுத்து உங்கள் தெரிவுகளைத் தொடர்ந்தும் அனுப்புங்கள்.

இந்த வாரப்பகுதியில் தேர்ந்தெடுத்த ஆறுபாடல்களும், தொடர்ந்த பகுதிகளில் ஏற்கனவே பாடல்களைக் கேட்ட நேயர்களின் விருப்பத்தேர்வும் அணிசெய்ய இருக்கின்றன.

நீங்கள் கேட்டவை 2 பகுதியில் இடம்பெறும் பாடல்கள்


1. தமிழ்ப்பித்தனின் விருப்பத்தேர்வில் காயல் ஷேக் முகமட் பாடிய "ஈச்சை மரத்து" என்ற இஸ்லாமிய கீதம் முதற்பாடலாக வருகின்றது.

2. வசந்தனின் விருப்பத்தேர்வில் பி.சுசீலா பாடிய " அன்பில் மலர்ந்த" என்ற பாடல்"கணவனே கண்கண்ட தெய்வம்" திரைப்படத்திற்காக ஆதி நாராயணராவ் இசையில் மலர்கின்றது.

3. வெற்றியின் விருப்பத்தேர்வில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய " அவள் ஒரு மேனகை" என்ற பாடல் "நட்சத்திரம்" திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையமைப்பில் கலக்குகின்றது.

4. சர்வேசனின் விருப்பத்தேர்வில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் குரல்களில் "என் காதலி" என்ற பாடல் "தங்கத்திலே வைரம்" திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையில் மலர்கின்றது.

5. தெய்வாவின் விருப்பத்தேர்வில் எஸ்.ஜானகி் பாடிய " காற்றுக்கென்ன வேலி" என்ற பாடல் அவர்கள் திரைப்படத்திற்காக கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மலர்கின்றது.

6. மங்கையின் விருப்பத்தேர்வில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய " அங்குமிங்கும் பாதை உண்டு" என்ற பாடல் அவர்கள் திரைப்படத்திற்காக கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வருகின்றது.

என் குரற்பதிவில் நீங்கள் கேட்டவை 2 அறிமுகம்நீங்கள் கேட்டவை 2 பாடற்தொகுப்பு

Powered by eSnips.com

33 comments:

வெற்றி said...

கானா பிரபா,
நான் விரும்பிக் கேட்ட பாடலைத் தந்தமைக்கு கோடி நன்றிகள்.
கன காலத்திற்குப் பிறகு உங்கள் புண்ணியத்தில் அப் பாடலைக் கேட்க முடிந்தது.

தமிழ்பித்தனின் விருப்பத்தில் வந்த பாடலான "ஈச்சை மரத்து" பாடலை இப்ப தான் முதல் முறையாகக் கேட்டேன். நல்ல அருமையான பாடல். நல்ல இசை. பாடகர் ஷேக் முகமட் அவர்களின் குரல் கணீரென்று கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது. தமிழ்ச் சொற்களை நல்ல வடிவாக உச்சரிக்கிறார்.

தெய்வாவின் விருப்பப் பாடலான "காற்றுக்கென்ன வேலி" பாடலும் மிகவும் அருமை. மனதை வருடிச் செல்லும் இசையைத் தரக் கூடியவர் மெல்லிசை மன்னர் என்பதற்கு இப் பாடல் ஒரு சான்று.

அதுசரி ,இந்தப்பாடலில் வரும் இரண்டாவது வரியான
"கடலுக்கென்ன ------- "
எனும் வரியில் கோடிட்ட இடத்தில் வரும் சொல் என்ன?
இரு முறை கேட்டும் அச் சொல் தெளிவாக விளங்கவில்லை.

பி.கு:- இன்னும் சில பாட்டுகள் உங்களிடம் கேட்க வேணும். இப்போது மற்றைய நேயர்களுக்கு இடம் கொடுத்துவிட்டு, பின்னர் 2 கிழமைகள் கழித்துக் கேட்கிறேன்.

மாசிலா said...

//அதுசரி ,இந்தப்பாடலில் வரும் இரண்டாவது வரியான
"கடலுக்கென்ன ------- "
எனும் வரியில் கோடிட்ட இடத்தில் வரும் சொல் என்ன?//

"மூடி"
இதுதான் அந்த வார்த்தை நண்பரே.

ஆருமையான சேவை கானா பிரபா.

என் பங்குக்கு நான் கேட்கும் பாடல் : SP.பாலா பாடிய "ஒரு சின்னப் பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது" என்ற பாடல். படம் தெரியவில்லை.

முயற்சிக்கு நன்றிகள்.

மங்கை said...

நன்றி கானா பிரபா..உங்கள் முடற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்...

கானா பிரபா said...

//வெற்றி said...
கானா பிரபா,
நான் விரும்பிக் கேட்ட பாடலைத் தந்தமைக்கு கோடி நன்றிகள்.
கன காலத்திற்குப் பிறகு உங்கள் புண்ணியத்தில் அப் பாடலைக் கேட்க முடிந்தது.//


வணக்கம் வெற்றி

நல்லதொரு பாடலை நீங்கள் கேட்க அதை ஒலிபரப்புவது ஒரு சுகம், நீங்கள் கேட்டவை பகுதியில் இன்னும் விலாவாரியாகப் பாடல்கள் குறித்த பகிர்வோடு அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லவிருக்கின்றேன். எல்லாவற்றுக்கும் நேரம் தான் பிரச்சனை.

வடுவூர் குமார் said...

நல்ல குரல் வளம்-உங்களுக்கு.

கானா பிரபா said...

கானா பிரபா said...
//மாசிலா said...
என் பங்குக்கு நான் கேட்கும் பாடல் : SP.பாலா பாடிய "ஒரு சின்னப் பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது"//


வணக்கம் மாசிலா

மிக்க நன்றிகள், நீங்கள் கேட்ட பாடல் மதன மாளிகை படத்தில் இருக்கிறது, கட்டாயம் வரும்.


மங்கை, வடுவூர் குமார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

பொன்ஸ்~~Poorna said...

ஹையா... எந்த வீடியோ, ரேடியோ வகையறாக்களையும் காட்டாமல் தடுக்கும் எங்கள் அலுவலகத்திலேயே இந்த ரேடியோ கேட்குது!!! பிரபா, தொடர்ந்து இதே வகையில் பாடல்கள் தாருங்கள்... என் விருப்பப் பாடல்கள் சீக்கிரம் பட்டியலிடுகிறேன்..

கானா பிரபா said...

வாங்க பொன்ஸ்

பாட்டுக்களை கேட்பதோட நின்றிடாமப் பட்டியலை
அனுப்புங்க ;-)

சினேகிதி said...

enta paadu ean innum varella ..sob sob :-)))

enaku antha 2 paadalgalum anupi vidungo prabanna piraku.

கானா பிரபா said...

தங்கச்சி

பாடல் கேட்ட ஒழுங்கில வரும், உங்கட பாட்டு அடுத்த பதிவில், சயந்தன் மாதிரி கியூவில நுளையக் கூடாது.

தமிழ்பித்தன் said...

நன்றி கான பிரபா மிக்க நன்றி அத்துடன் உங்களிடம் பாடலை அனுப்பிவிட்டு பாடலை எதிர்பார்த்திருப்பவர் விருப்பம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் அத்துடன் நான் இன்று கேட்கும் பாடல் ஈழத்து பொப்பிசைப் பாடல் வரிசையில் வந்து அனைவர்களினதும் மனங்களை வென்ற ஏ.இ மனோகரன் பாடிய
"யாழ்ப்பாணம் போக ரெடியா மாம்பழம் தின்ன ஆசையா............
என்ற பாடல் (((((நான் கீயூவில் காதத்திருக்கிறேன்ஆனாலும் இதை பலர் கேட்டக விரும்பினால் அல்லது நீங்கள் விரும்பினால் முன்பதாகவும் பதியலாம்)))

கானா பிரபா said...

வாங்கோ தமிழ்பித்தன், வரேக்கையே பிரச்சனையோட தான் வருவியள் போல.

நிறையப் பேர் ஒரு பாட்டைக் கேட்டாலும் முன்பு கேட்டவருக்கு முன்னுரிமை கொடுக்காவிட்டால் அவர் கோபிப்பார் அல்லவா?

ஏ.ஈ.மனோகரனின் 2 இசைத்தட்டுக்கள் என்னிடம் உள்ளன. நீங்கள் கேட்டது இருக்கிறதா என்று பார்க்கின்றேன்.

கொழுவி said...

தமிழ்நாட்டுக் கோவில்களில் இருப்பது போல விஐபி கியூவும் இருக்கிறதா.. இருந்தால் சொல்லுங்கள். அதனூடாக வருகிறேன்.

SurveySan said...

கோடானு கோடி ந்ன்றீஸ்.

புல்லரிக்க வெச்சுட்டீங்க.

என் காதலி, என் all-time favourite பாட்டு.
சங்கர் கணேஷ் இசை என்பது இதுநாள் வரை தெரியாது.

அடுத்த விரூப்பமாக, மாம்பூவே பாடலை எடுத்துக் கொள்ளவும்.

சூப்பர்!!!

We The People said...

கானா பிரபா,

நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கற ஒரு பாட்டு, என்னுடைய நீங்கள் கேட்டவை விருப்பமா வெளியிட முடியுமா?

பாடல்: நான் தேடும் செவ்வந்தி பூவிது!

படம்: தர்மபத்தினி

கார்த்திக் & ஜீவிதா நடித்தபடம் என்று நினைக்கிறேன்.

நன்றி,

நா.ஜெயசங்கர்

கானா பிரபா said...

//கொழுவி said...
தமிழ்நாட்டுக் கோவில்களில் இருப்பது போல விஐபி கியூவும் இருக்கிறதா.. இருந்தால் சொல்லுங்கள். அதனூடாக வருகிறேன். //

அப்பிடியான நடைமுறையெல்லாம் இங்கேயில்லை அண்ணை ;-)

//SurveySan said...
அடுத்த விரூப்பமாக, மாம்பூவே பாடலை எடுத்துக் கொள்ளவும்.

சூப்பர்!!!//

மிக்க நன்றிகள் சர்வேசன்
உங்க பாட்டு கட்டாயம் வரும்

கானா பிரபா said...

//பாடல்: நான் தேடும் செவ்வந்தி பூவிது!

படம்: தர்மபத்தினி

கார்த்திக் & ஜீவிதா நடித்தபடம் என்று நினைக்கிறேன்.

நன்றி,

நா.ஜெயசங்கர் //

வணக்கம் ஜெய்சங்கர்

நீங்கள் குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் சரி, ஒரிஜினல் தரத்தில் பாடல் என்னிடம் உள்ளது. பதிவு போடும் போது மடல் அனுப்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கானா பிரபா,
அருமையான இசை கேட்கிறது.

உங்களிடம் பழைய பாடல்களையும் கேட்கலாமா?

சீர்காழியின் பாடலகள் அனேகம்.
தமிழ்ச்சுவை குறையாமல் திருத்தமாகப் பாடுவார்.

'மணமுள்ள மறுதாரம்' என்ற படம்
பாடல் 'இன்பம் எங்கே'

எழுதியவர் யார் தெரியாது.
பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்
அவர்கள். நீங்கள் இந்தப் பாடலைப்
போடமுடிந்தால் அருமையாக இருக்கும்.நன்றி.
2, வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்னபூ
3,நாடோடி மன்னன் படத்தில் வரும்
சம்மதமா....
பானுமதி அம்மா பாடினது.
நன்றி.

கானா பிரபா said...

வணக்கம் வல்லி சிம்ஹன்

எல்லாக் காலத்துப் பாடல்களையும் கேட்கலாம். உங்கள் தெரிவுகள் நிச்சயம் வரும்

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் பிரபா...
பாலாவின் தீவிர ரசிகன் ஆன நான் பாலா - KJJ இணைந்து பாடிய பாடல்கள் என்று காட்டுக்குயிலு மனசுக்குள்ள (தளபதி), அருவி கூட (படம் தெரியாது) ஆகிய இரண்டு பாடல்களை மட்டும் நினைத்திருந்தேன். இப்போது புதியதாக ஒன்றை அறிமுகம் செய்துள்ளீர்கள். வேறும் ஏதாவது அவர்கள் இணைந்து பாடிஉள்ளனரா...... அப்படி இருப்பினி அவ்ற்றாஇ எல்லாம் ஒன்றாக , ஒரு பதிவாக போடுவீர்களா......

கானா பிரபா said...

வணக்கம் அருண்மொழி

நீங்கள் குறிப்பிட்ட அருவி கூட ஜதியில்லாமல் பாட்டு கெளரி மனோகரி படத்தில் வந்தது. கேஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பி இணைந்த பாடல்கள் இன்னும் பல இருக்கின்றன.

நல்ல யோசனை, தனிப்பதிவு தருகிறேன் பின்னர்.

✪சிந்தாநதி said...

நல்ல முயற்சி. கேட்கவும் இனிமை.

வாழ்த்துக்கள்.

நான் கேட்கும் பாடல்.

படம்: மல்லிகை மோகினி
இசை:ஜி.கே. வெங்கடேஷ்
பாடியவர்:பாலு

ஒன்று மேகங்களே வாருங்களே...

இன்னொன்றும் பாலு பாடியது பாடல் வரிகள் நினைவில்லை.

சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்டது. மாறுபட்ட குரலும் இசையும் காரணமாக அப்போது பிடித்த பாடல்கள். பின்னர் ஒரு போதும் கேட்க முடியவில்லை.

Radha Sriram said...

சர்வேசன் பதிவு மூலமா இங்கே வந்து சேந்தேன். இது நாள் வரை எப்படி மிஸ் பண்ணினேனு தெரியலை :):)
வித்யாசமான விருப்பங்கள்...எல்லா பாட்டையும் கேட்டேன்...

என்னோட விருப்பமா
" சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து" பாட்டு..எந்த படம்னு எல்லாம் தெரியலை...TMS and P. Susheela பாடியதுன்னு நினைக்கரேன்.....கிடைச்சா போடுங்க

அதே மாதிரி ஹிந்தில ஒரு பாட்டு
" சாவனுக்கா மஹீனா". எனக்கு பிடித்த பாட்டு. முகேஷ் லதா பாடினது...

கானா பிரபா said...

சிந்தாநதி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
உங்க பாட்டுக்கள் நிச்சயம் வரும்

Radha Sriram

வாங்க, வரவேற்கிறோம் ;-)

சந்தனத்தில் பாட்டு, பிராப்தம் படத்தில் வந்தது. கூடவே ஹிந்திப் பாட்டும் வரும். ஒரு பதிவில் தலா ஒரு பாடல் ஒரு நேயருக்காக வர இருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பிரபா.அருமையான சேவை.

Chandravathanaa said...

கானாபிரபா
உங்கள் சேவைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

மணமாலை படத்தில் இடம் பெற்ற
நெஞ்சம் அலை மோதவே
கண்கள் குளமாகவே
ராதை கண்ணனைப் பிரிந்தே...

என்ற பாடலைத் தேடுகிறேன்.
தருவீர்களா?

கானா பிரபா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா, உங்கள் பாடல் காலக்கிரமத்தில் வரும்.

கோழை said...

பிரபா நானும் வெகு நாட்களாக K.J.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் ஒன்றான "உன்னைக்கண்ட கண்களுக்கு எப்படித்தான் தூக்கம் வரும்??" என்ற பாடலை தேடி வருகிறேன் உங்களால் அப்பாடலை எனக்காக பதிவேற்ற முடியுமா??

Deiva said...

Prabha,
My previous comments didn't get posted in the blog. I am not sure whether it was successfully saved by blogger.Thanks for posting the song.

Deiva.

கானா பிரபா said...

//ஆதவன் said...
பிரபா நானும் வெகு நாட்களாக K.J.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் ஒன்றான "உன்னைக்கண்ட கண்களுக்கு எப்படித்தான் தூக்கம் வரும்??"//

வணக்கம் ஆதவன்,

நீங்கள் கேட்கும் பாடல் இடம்பெற்ற படம் அல்லது நடிகர் பெயர் குறிப்பிடமுடியுமா? மேலதிக தகவல் ஒன்று தந்தால் பாடலை எடுக்க இலகுவாக இருக்கும்.
வணக்கம் தெய்வா

மன்னிக்கவும், என்ன காரணமோ தெரியவில்லை, உங்கள் முன்னய பின்னூட்டு வரவேயில்லை. பாடல் கேட்டது குறித்து மகிழ்ச்சி.

கோழை said...

எனக்கு சரியா தெரியவில்லை கானா பிரபா... நானும் தேடி சலித்துவிட்டேன்

கானா பிரபா said...

சரி முயற்சிசெய்து தேடித்தருகிறேன்

We The People said...

நன்றி பிரபா.

அவலுடன் காத்திருக்கேன் :)

நான் பல நாட்களாக தேடிய பாட்டு! கிடைத்தான் மிகவும் சந்தோஷப்படுவேன்!

நன்றி

நா.ஜெயசங்கர்