Pages

Saturday, April 14, 2007

அமுத மழை பொழியும் முழு நிலவிலே...!



நீங்கள் கேட்டவை தெரிவில் நேயர் சயந்தன் இப்படிக் கேட்டிருந்தார்.
" கானாண்ணை.. எனக்கு அவசரமாக அமுத மழை பொழியும் ஒரு இரவிலே.. ஒரு அழகுச் சிலை.. என்ற பாடல் (எந்த படம் யார் பாடியது என்று எதுவும் தெரியாது வேண்டுமென்றால் பாடிக் காட்டலாம்) தேவைப்படுகிறது. ஓர்டரில கியுவில வந்தா தான் தருவன் எண்டு சொல்லாமல் கெதியா தர முடியுமோ..? //

நான் பாடி விஷப்பரீட்சை செய்யாமல், பாட்டு கியூவில இடையில புகுந்து பாட்டுக் கேட்ட சயந்தனின் தெரிவு, அவர் கேட்ட 20 நிமிடத்தில் வலையேறி வலைப்பதிவுலகில் முதல் "சுடச் சுட நீங்கள் கேட்டவை" என்ற பெருமையைத் தட்டிச் செல்கின்றது. ( எது எதுக்கெல்லாம் பெருமை தேடுறாங்கள்). நேரம் இப்போது அவுஸ்திரேலியாவில் அதிகாலை 2.51 மணி ( என்னே தொழில் பக்தி)

இந்தத் திடீர் நீங்கள் கேட்டவை பாடலாக வரும் "அமுத மழை பொழியும் முழு நிலவிலே...!"
பாடலைப் பாடியவர்: டி.எல்.தியாகராஜன்
படம் பொம்பள மனசு

எல்லா அன்பு உறவுகளுக்கும் சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமுத மழை பொழியும் முழு நிலவிலே

28 comments:

சயந்தன் said...

நன்றி நன்றி நன்றி.. இத்தனை விரைவாகவா.. ? பாட்டினின் இடையிடையே ஒரு பெண்குரல் ம் ம் ம்.. என்று வருமே.. அது மீது எனக்கொரு தனிக்காதல். நன்றி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பிரபா & சயந்தன்,

அருமையான பாடலொன்றைக் கேட்க வழியமைத்த சயந்தனுக்கும். கொடுத்த பிரபாவுக்கும் நன்றி!

இதுவரை இந்தப் பாடலைக் கேட்டதில்லை. படத்தின் பெயரையும் கேட்டதில்லை.

எனக்கு இந்தப் பாட்டின்ற வரியைக் கேட்டதும் நினைவுக்கு வந்தது,

'அமுதைப் பொழியும் நிலவே'தான்..

உண்மையில் சயந்தனைக் கிண்டல் செய்யத்தான் வ்ந்தனான். பாட்டுக்கேக்கிறதெண்டோடன பிரபாண்ணையொ எண்டு... பாட்டைக் கேட்டுட்டு விட்டுட்டுப்போறன். சயந்தன், உங்களுக்கு ஒரு சேதி. பௌர்ணமி இண்டைக்கில்ல. வாற செவ்வாய்தான். சரியா? :)'

-Mathy

மலைநாடான் said...

பிரபா!

பாட்டை மட்டுமா தேடி எடுத்துத் தந்திருக்கிறீங்க..

ம்..ம்..:)

சயந்தன் said...

//சயந்தன், உங்களுக்கு ஒரு சேதி. பௌர்ணமி இண்டைக்கில்ல. வாற செவ்வாய்தான். சரியா? :)'//

அட.. அப்பிடியே.. அப்ப ஆறுதலா கியூவிலயே வந்து கேட்டிருக்கலாம். இப்பிடி அந்தரப்பட்டு அவசரப்பட்டு லைனை முறிச்சுக் கொண்டு வந்திருக்கத் தேவையில்லை.

மதி.. இடையில வாற அந்த ம்.. ம்.. ம்.. என்ற இசை, குரலா அல்லது வாத்திய இசையா என்றதில நான் இன்னும் சஞ்சலப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறன். நீங்க ஒருக்கா சொல்லுங்க பாப்பம்..

கானா பிரபா said...

சயந்தன்,

உங்கள் தேவையே எங்கள் சேவை ;-)
பாட்டுக்குள்ள வருவது நிச்சயம் பெண் குரல் தான். பெண் குரலையும் விட்டு வைக்க மாட்டியளே?

Vasanthan said...

சயந்தன்,
எனக்கும் இந்தப்பாட்டு மிகமிக பிடிக்கும்.

பிரபாண்ணை,
எனக்குமொரு பாட்டுப் போடுங்கோ
'அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண்வளராய் என் ராஜா'

சிறுவயதில் என் அம்மா பாடிக் கேட்டதுண்டு.
அம்மா பாடியதைத்தவிர்த்து இன்றுவரை வேறெங்கும் இதைக்கேட்டதில்லை.
படம் தெரியாது. (சினிமாப்பாடல் என்றுதான் நினைக்கிறேன்).
பாடல் முழுவதும் நல்ல மனனம். (ஓரிரு சொற்பிழைகள் இருக்கலாம்)
உங்களுக்குப் பாடல் பிடிபடவில்லையென்றால் அதன் மிச்ச வரிகளையும் தரத்தயார்.
இப்போது இரு பல்லவிகள்:

'திங்கள் மலர்மாலை சூட்டுமே -வண்டு
தேனை வாயில் ஊட்டுமே
வெண்ணிலா காட்டியே பாலன்னம் ஊட்டியே
கொஞ்சிடும் நாள் வந்திடுமோ'

'தங்கத் தொட்டிலில் தாலாட்டியே
சுகுமாரனே சீராட்டியே
மான்களின் கூட்டமே வேடிக்கை காட்டுமே
மன்னனுந்தன் பொன்னடியில்'

கிடைக்குமோண்ணை?
கிடைச்சால் இன்னும் ரெண்டொரு பாட்டுக் கேக்கலாமெண்டிருக்கிறன்.

சினேகிதி said...

hi prabanna,
neengal kedavai nigalchi la enakum 2 paadu venume :-))

1. Moongil ilai kaadukale muthu malai megangale (Female version)
2.Chinna chinna poove nee kannal paaru pothum ( Female version).

appuram ellarukum sithirai pongal vaalthukkal!!

Vassan said...

கானா பிரபா

இந்த பாடலைக் கேட்டவுடன் எனக்கு வேறொரு வெகு,வெகு பழைய பாடலொன்று ஞாபகத்திற்கு வந்தது. பொடியனாய் பெற்றோருடன் போய் பார்த்த படம், பெயர் மறந்துவிட்டது ! ஆனால் படத்தில் இடம் பெற்ற பாடல் " அமுதே பொழியும் நிலவே! அருகில் வராததேனோ " ..அற்புதமான பாடல். 'தாரா! தாரா" என்றொரு வாத்து பாட்டும் நன்றாக இருக்கும். இப்படத்தில் வரும் " ராஜா காது ! கழுதை காது !" நகைச்சுவையும் பெயர் பெற்றது.. படம் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். சிவாஜி காட்டானாக நடிப்பார்.

நீங்கள் எடுத்து போட்டுள்ள பாடலை பாடியவர் மகாராஜன் என நினைக்கிறேன். திருச்சி லோகநாதனின் மகன்; தீபனின் சகோதரர். பாடல் நன்றாக உள்ளது.

Vasanthan said...

வாசன்,
நீங்கள் குறிப்பிட்ட பாடலைத்தான் மதியும் குறிப்பிட்டிருக்கிறார்.

ரி.எல். மகாராஜனாக இருக்கலாமென்று சொல்கிறீர்கள்.
அந்தப் பேரில் ஈழத்துப் போராட்டப் பாடல்கள் பாடிய தமிழகப் பாடகர் ஒருவரும் உள்ளார்.
இருவரும் ஒருவராக இருக்குமோஃ

கானா பிரபா said...

//மதி கந்தசாமி (Mathy) said...

அருமையான பாடலொன்றைக் கேட்க வழியமைத்த சயந்தனுக்கும். கொடுத்த பிரபாவுக்கும் நன்றி!//

நல்ல பாடல், மலர்ந்தும் மலராதவை என்ற தலைப்பில் புது ஒலிப்பதிவு நிகழ்ச்சியும் செய்யலாம். நன்றி எண்டெல்லாம் பெரிய வார்த்தை சொல்லாதேங்கோ கிறடிட் கார்ட் அல்லது மணி ஓர்டரும் ஏற்றுக்கொள்ளப்படும் ;-)

//மலைநாடான் said...
பிரபா!

பாட்டை மட்டுமா தேடி எடுத்துத் தந்திருக்கிறீங்க..//

வாலிப வயசு பெடியன் கேட்கிறான், ஏதோ எங்களால முடிஞ்சது.

கானா பிரபா said...

//வசந்தன் said...
பிரபாண்ணை,
எனக்குமொரு பாட்டுப் போடுங்கோ
'அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண்வளராய் என் ராஜா'//

அடியடா படலேலை எண்டானாம், இப்ப எல்லாரும் அண்ணாவாக்கீட்டியளோ?

நீர் கேட்ட பாட்டு கணவனே கண் கண்ட தெய்வத்தில் உண்டு. நீங்கள் கேட்டவையாக கட்டாயம் வரும்.

ரி.எல் மகராஜனும் உண்டு ரி.எல் தியாகராஜனும் உண்டு. இருவருமே பாடகர்கள். இப்பாடலைப் பாடியது தியாகராஜன்.

நம் தாயகப் பாடல்களைப் பாடியவர் ரி.எல்.மகராஜன், அவரே நாயகனில் அந்தி மழை மேகம் பாட்டு பாடியவர்.

கொழுவி said...

//வசந்தன் said...
பிரபாண்ணை,
எனக்குமொரு பாட்டுப் போடுங்கோ
'அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண்வளராய் என் ராஜா'//

வசந்தன்.. போய் கியூவில வாரும். உமக்கு முன்னாலை கனக்கப் பேர் நிக்கினம். முதலில சோலை மரத்து பாடலை போடுங்கப்பா

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//முதலில சோலை மரத்து பாடலை போடுங்கப்பா
//

ஓமோம். முதல்ல அதைப்போடுங்கப்பா. தமிழனைத்தவிர வேற ஒருத்தருக்கும் அந்தப் பாட்டுத் தெரியாதெண்டு நினைக்கிறன். பிறகு 108 இங்கிலிஷ் புளொக்கருக்கு நாங்கயேன் ஆக்கினை கொடுப்பான்..

நாளைக்குள்ள பாட்டு ரெடியாயிருக்கோணும். சரியே..

கானா பிரபா said...

//சினேகிதி said...
hi prabanna,
neengal kedavai nigalchi la enakum 2 paadu venume :-))
//

தங்கச்சி

நீங்கள் கேட்ட இரண்டு பாட்டுமே நல்ல ஒலித்தரத்தில் என்னிடம் உள்ளன. கட்டாயம் வரும்.
உங்கள் குடும்பத்துக்கும் றினிஸ் குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்கள்.

Vasanthan said...

கொழுவி, மதி,
அது சோலைமரம் இல்லையப்பு.
'ஈச்ச மரத்து இன்பச் சோலையில்'.
இதுக்குள்ள தமிழ்பித்தனை நக்கலடிக்க வேற வெளிக்கிட்டியள்.

கானா பிரபா said...

//வாசன் said...
கானா பிரபா

இந்த பாடலைக் கேட்டவுடன் எனக்கு வேறொரு வெகு,வெகு பழைய பாடலொன்று ஞாபகத்திற்கு வந்தது. பொடியனாய் பெற்றோருடன் போய் பார்த்த படம், பெயர் மறந்துவிட்டது ! ஆனால் படத்தில் இடம் பெற்ற பாடல் " அமுதே பொழியும் நிலவே! அருகில் வராததேனோ " ..அற்புதமான பாடல். //

வாசன்

அமுதைப் பொழியும் நிலவே, தங்கமலை ரகசியம் படப்பாடல்.


//'தாரா! தாரா" என்றொரு வாத்து பாட்டும் நன்றாக இருக்கும். இப்படத்தில் வரும் " ராஜா காது ! கழுதை காது !" நகைச்சுவையும் பெயர் பெற்றது.. படம் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். //

தாரா தாரா பாட்டு எம்.எஸ் ராஜேஸ்வரி பாட தெய்வப்பிறவி படத்தில் வந்தது.

//நீங்கள் எடுத்து போட்டுள்ள பாடலை பாடியவர் மகாராஜன் என நினைக்கிறேன். திருச்சி லோகநாதனின் மகன்; தீபனின் சகோதரர். //

மகராஜன், தீபன் சக்ரவர்த்தி இருவரும் திருச்சி லோகநாதன் மகங்கள். தவிர இந்தப்பாடலைப் பாடிவர் தியாகராஜன். நிச்சயம் மகனாக இருக்கவேண்டும். இனிஷியல் பொருந்துகிறது.

கானா பிரபா said...

//கொழுவி said...

வசந்தன்.. போய் கியூவில வாரும். உமக்கு முன்னாலை கனக்கப் பேர் நிக்கினம். //

//மதி கந்தசாமி (Mathy) said...
ஓமோம். முதல்ல அதைப்போடுங்கப்பா. //

கொழுவி, மதி,

இரண்டு பேரும் கிளறியிருக்கிறியள், என்ன கலகம் நடக்கப்போகுதோ தெரியேல்லை

கொழுவி said...

//கொழுவி, மதி,
அது சோலைமரம் இல்லையப்பு.
'ஈச்ச மரத்து இன்பச் சோலையில்'.
இதுக்குள்ள தமிழ்பித்தனை நக்கலடிக்க வேற வெளிக்கிட்டியள//

நான் விளங்க கூடிய ஆக்களுக்கு மட்டும் விளங்கட்டும் என்று என்று கிசு கிசு பாணியில எழுதினால் இந்தாள் எடுத்துக் குடுக்கிறார். இனி என்ன இடி அங்காலை விழப்போகுதோ..
அச்சத்துடன்
கொழுவி

Anonymous said...

மலைநாடான் |

//ரி.எல். மகாராஜனாக இருக்கலாமென்று சொல்கிறீர்கள்.
அந்தப் பேரில் ஈழத்துப் போராட்டப் பாடல்கள் பாடிய தமிழகப் பாடகர் ஒருவரும் உள்ளார்.
இருவரும் ஒருவராக இருக்குமோ//

அவரே இவர்.இவரே அவர்.

மலைநாடான் said...

// இனி என்ன இடி அங்காலை விழப்போகுதோ..
அச்சத்துடன்
கொழுவி //

களம்பல கண்ட கொழுவியே நடுங்கிறார் என்டால்...:(

மருதநாயகம் said...

உங்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

மிக்க நன்றிகள் மருதநாயகம்

கொழுவி said...

//நிச்சயம் மகனாக இருக்கவேண்டும். இனிஷியல் பொருந்துகிறது.//

அருமையான விளக்கம்.

Vassan said...

நன்றி வசந்தன். என்னதச் சொல்றது.. மேலே மதி எழுதியள்ளதை படித்துவிட்டுதான் நான் பின்னூட்டம் எழுதினேன். அதற்குள்
நினைவுத்திறன் மங்கிவிட்டது ;( அருகிலிருந்த போத்தலின் மீதுதான் பழிபோட வேண்டும். போத்தலிலிருந்தது டயட் டொக்டர் பெப்பர்.
டி! எல் மகராஜன் தமிழ் உணர்வுள்ள குடும்பத்திலிருந்து வந்தவரல்லவா.. ஈழத்து போராளி பாடல்களை பாடுவதில் தயங்கி இருக்கமாட்டார்.


பிரபா: தங்கமலை ரகசியம் என்பதை சொல்லி தமிழர் பெருமையை காத்தமைக்கு நன்றி. தமிழனாய் பிறந்துவிட்டு சினிமா படப் பெயரை மறக்கலாமோ என மருகியிருந்தேன் !

Vasanthan said...

வாசன் said...
//போத்தலின் மீதுதான் பழிபோட வேண்டும். போத்தலிலிருந்தது டயட் டொக்டர் பெப்பர்.
//

வாசண்ணை,
வழமையாகவே இப்படித்தான் எழுதுவீர்களா?
அல்லது எங்களோடு உரையாடுவதால் இவ்விடுகையில் மட்டும் மாற்றிக்கொண்டீர்களா?

"டி.எல்" (ரி.எல்) மட்டும் மாறவில்லை. ;-)
____________________________
Praba said:
//அடியடா படலேலை எண்டானாம், இப்ப எல்லாரும் அண்ணாவாக்கீட்டியளோ?//


இதென்ன கோதாரி?
ஊர் முழுக்கப் பேக்காட்டி வச்சிருக்கிற மாதிரி என்னையும் சயந்தனையும் நிரந்தரமாகவே பேக்காட்டிக்கொண்டிருக்கலாம் எண்ட நினைப்போ?

கானா பிரபா said...

வயதுக்கு மூத்த ஆட்கள் இப்பிடிக்கூப்பிடேக்கை எனக்கு அது அடைமொழியாகிவிடும் சரி பரவாயில்லை, அண்ணா என்றே கூப்பிடுங்கோ ;-)

Anonymous said...

வசந்தன் said
வாசண்ணை, வழமையாகவே இப்படித்தான் எழுதுவீர்களா?
அல்லது எங்களோடு உரையாடுவதால் இவ்விடுகையில் மட்டும் மாற்றிக்கொண்டீர்களா?

"டி.எல்" (ரி.எல்) மட்டும் மாறவில்லை. ;-)


;)

Bottle என்பதற்கு போத்தல் சரியாகப்படுகிறது !

Doctor என்பது மருத்துவர் என்று யாராலும் அழைக்கப்படாத பட்சத்தில், டொக்டர் டாக்டரை விட 'உச்சரிப்பு அருகாமை' யிலுள்ளது.

a - o ல் இருக்கும் ஆங்கிலச்
சொற்களை அப்படியே தமிழில்/இந்திய மொழிகளில் உச்சரிப்பது பற்றி ஒரு பதிவே எழுதலாம். இதனால் வரும் குழப்பங்களுமுண்டு.


T.L என்பதற்கு டி,எல் சரியாகப்படுகிறது!

இது போலவே கதிரை கவிதையாகப் படுகிறது. நாற்காலி, சாய்வு நாற்காலி
வெறும் மரச்சட்டமாகப் படுகிறது.. என மேலும் சொல்லிக் கொண்டே போகலாம்.

நிற்க.

எப்போதாவது ரமணீதரனுடன் போனில் கதைப்பதுண்டு, இல்லை பேசுவதுண்டு. 10+ வருட நட்பு.

பேச்சின் இடையில் அவர் ஓரிரு தடவையாவது " விளங்கல" என்றும், அடியேன் " புரியலேயே"
என்றும் சொல்வது வழக்கம்.

நன்றி.

வலசு - வேலணை said...

உங்கள் பின்னூட்டத்தினைப் (http://radiospathy.blogspot.com/2007/04/blog-post_13.html) பார்த்தே இப்பதிவிற்கு வரமுடிந்தது.

இப்போதும் இப்பாடலைக் கேட்கக்கூடியதாய் இருப்பதற்கு மிக்க நன்றி கானா பிரபா.