Pages

Friday, February 27, 2009

அமரர் சுஜாதா ஒலிப்பேட்டி ‍ மீள் நினைவில்


என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா மறைந்து இன்னும் ஒரு நாள் எச்சத்தில் இருக்கும் ஓராண்டில் அவர் நினைவாக, சுஜாதா குறித்த மீள் பதிவுடன் அவர் தந்த ஒலிப்பேட்டியையும் தருகின்றேன். நாளை வானொலியில் சிறப்பு அஞ்சலிப் பகிர்வையும் கொடுக்கவிருக்கின்றேன்.


எங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது "பிரிவோம் சந்திப்போம்" பாகம் 1. அது தான் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் புதினம். விறுவிறுவென்று வாசித்து முடித்த பின்னர் தான் அவரை அசை போடத்தொடங்கினேன். அட இது வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவமாக இருக்கிறதே என்று என்ற் வியந்தவாறே, பிரிவோம் சந்திப்போம் இரண்டிலிருந்து, விடாமல் சுஜாதாவை தொடர்ந்தேன். கரையெல்லாம் செண்பகப்பூ, அனிதா இளம் மனைவி, காகிதச் சங்கிலிகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கனவுத் தொழிற்சாலை, "ஆ" என்று கிட்டத்தட்ட முக்கால்வாசி நாவல்களை ஏப்பம் விட்டும் அடங்கவில்லை. இவரின் எழுத்துக்கள் வரும் சஞ்சிகைகளில், சினிமாப் பகுதிக்கு முன்னர் படிக்கும் பக்கங்கள் இவருடையதாக மாறி விட்டது.

சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்", எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் போன்றவை தான் நனவிடை தோய்த்தலில் என்னை அதிகம் ஈடுபடுத்தி என் ஊர் நினைவுகளை எழுத வைத்தவை.

2002 ஆம் ஆண்டு "கன்னத்தில் முத்தமிட்டால்" படம் வந்த கையோடு நான் அப்போது பணிபுரிந்த வானொலிக்காக என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பேட்டி காணத் தொடர்பு கொள்ள விழைத்தேன். எழுத்துலகில் உச்சத்தில் இருக்கும் இவர் நமக்கெல்லாம் பேட்டி கொடுப்பாரா என்ற அவநம்பிக்கை வேறு மனசின் ஓரத்தில் இருந்தது. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத மனிதரைத் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் உணர்ந்தேன். வானொலிப் பேட்டிக்கு வந்து கலந்துகொண்டு கொட்டமடிக்கும் சில வித்துவச் செருக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஆனால் சுஜாதாவின் உரையாடல் என்னை அவர்பால் இன்னும் நேசிக்க வைத்தது.

தான் எழுத்துலகில் நிறைவேற்ற நினைக்கும் கனவு குறித்தும் சொல்கின்றார் இந்த ஒலிப்பதிவில்.ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது " நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்" என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

இயன்றவரை சாதாரணமான கேள்விகள் கொடுத்து வானொலி கேட்கும் அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்த முயன்றிருக்கின்றேன். காரணம் சுஜாதாவே ஒருமுறை சொன்னது போல் " நீங்க அவள் ஒரு தொடர்கதையில் நல்லா நடிச்சிருக்கீங்க" என்று அவரைப் பார்த்து யாரோ கேட்டது போல் கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

போய் வாருங்கள் சுஜாதா!
மீண்டும் வானலையில் சந்திபோம்
உங்களோடு நேருக்கு நேராக.......




Thursday, February 26, 2009

உருவங்கள் மாறலாம்


கடந்த றேடியோஸ்புதிருக்கான பதிலாக வந்தவர், வானொலி, தொலைக்காட்சி கலைஞர் எஸ்.வி.ரமணன்.

வானொலி விளம்பரங்கள் மற்றும் வானொலி தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் பிரபலமான எஸ்.வி.ரமணன். இவர் பழம்பெரும் இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் மகன். எஸ்.வி.ரமணனின் சகோதரி பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், மற்றும் சகோதரன் ராம்ஜி, அபஸ்வரம் இசைக்குழு நடத்திப் பிரபலமானவர்.

எஸ்.வி.ரமணன் இயக்கத்தில் "உருவங்கள் மாறலாம்" திரைப்படம் வை.ஜி.மகேந்திரா, சுஹாசினி முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க சிறப்பு வேடங்களில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிக்க வெளிவந்திருந்தது. கடவுள் எந்த ரூபத்திலும் வரலாம் என்ற கோணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ரஜினிகாந்த் ராகவேந்திரராகவே நடித்திருப்பார். கமலுக்கேற்ற ஆட்டத்தோடு "காமனுக்கு காமன் பாடல் உண்டு. இப்பாடலின் ஆரம்ப குரலாக எஸ்.வி.ரமணனின் குரல் அமைந்திருக்கும்.

அத்தோடு எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் ஆண்டவனே உன்னை வந்து சந்திக்க வேண்டும் என்ற இனிமையான பாடலும் இருக்கும்.


இந்தப் படத்தின் இசையும் படத்தை இயக்கிய எஸ்.வி.ரமணனே வழங்கியிருந்தார். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிமையான பாடல்களை இங்கே தருகின்றேன். "வானில் வாழும் தேவதை" என்ற அந்தப் பாடலைப் பாடுகின்றார்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்.

VaanilVaazhum. - SPB, Vani Jeyaram

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.வி.ரமணன் பாடும் "காமனுக்கு காமன்"


Kamannaku Kaman - - SPB


எஸ்.வி.ரமணன் குறித்த மேலதிக செய்திகளுக்கு http://jaishreepictures.com

Tuesday, February 24, 2009

றேடியோஸ்புதிர் 35 - மூன்று பெரும் கலைஞர்களை ஒரே படத்தில் இயக்கிவர்?

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர்.

வானொலி, தொலைக்காட்சி மூலம் நன்கு அறியப்பட்டவர் இவர். இவரின் சகோதரர் கூட சப்தஸ்வரங்களை அபஸ்வரமாக்காது தருபவர். உடன் பிறந்த சகோதரி நாட்டியத்தில் கொடி கட்டியவர். எல்லாவற்றுக்கும் மேல் இவரின் தந்தை கூட ஒரு காலத்தில் சிறந்த இயக்குனராக இருந்தவர்.

இந்த வானொலி, தொலைக்காட்சிப் படைப்பாளி ஒரு படத்தைத் தானே இசையமைத்து, இயக்கியிருந்தார். கூடவே சிவாஜி, கமல், ரஜினி போன்ற பெரும் தலைகளை ஒரே படத்தில் நடிக்கவும் வைத்திருந்தார். இவர் யார் என்பதே இந்தபுதிரின் கேள்வி, படத்தின் பேர் சொன்னால் மேலதிகமான புள்ளி ;)
கீழே துக்கடாவாக ஒரு பாடல் இடையிசை தருகின்றேன். மேலே சொன்ன உருவங்களை கற்பனை செய்து கண்டு பிடியுங்களேன்.


puthir25.mp3 -

மேற்கண்ட கேள்விக்கான சரியான பதில்.

வானொலி விளம்பரங்கள் மற்றும் வானொலி தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் பிரபலமான எஸ்.வி.ரமணன். இவர் பழம்பெரும் இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் மகன். எஸ்.வி.ரமணனின் சகோதரி பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், மற்றும் சகோதரன் ராம்ஜி, அபஸ்வரம் இசைக்குழு நடத்திப் பிரபலமானவர்,

எஸ்.வி.ரமணன் இயக்கத்தில் "உருவங்கள் மாறலாம்" திரைப்படம் வை.ஜி.மகேந்திரா, சுஹாசினி முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க சிறப்பு வேடங்களில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிக்க வெளிவந்திருந்தது.

Saturday, February 21, 2009

"மெல்லத் திறந்தது கதவு" பின்னணிஇசைத்தொகுப்பு

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்புதிரில் வந்திருந்த கேள்விக்கான பதிலாக அமைந்த மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை இங்கே நான் தருகின்றேன்.

இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற தமிழ் சினிமாவின் இரு சகாப்தங்கள் சந்தித்த முதல் படமே மெல்லத் திறந்தது கதவு என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். இவர்கள் இருவரும் பின்னாளில் இரும்பு பூக்கள், என் இனிய பொன் நிலாவே, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன் என்று சில படங்களில் இணைந்திருந்தாலும் இந்த இசைக் கூட்டணியின் உச்ச பட்ச சிறப்புமே மெல்லத் திறந்த கதவு திரைப்படத்தில் தான் வெளிப்பட்டது என்பேன்.

ஏவிஎம்மின் தயாரிப்பில் 1986 ஆம் ஆண்டில் அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் மோகன், ராதா, அமலா போன்றவர்கள் நடிக்க வெளியானது இப்படம். மோகனின் தந்தையாக பிரபல இசையமைப்பாளர் ஜி.கே வெங்கடேஷ் நடித்திருக்கின்றார். பின்னர் இளையராஜாவின் தயாரிப்பில் வெளியான சிங்காரவேலனிலும் ஜி.கே.வெங்கடேஷ் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் பாடல்கள் சிறப்பாக இருந்த அளவுக்கு சிறந்த கதை, மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் அமையாதது பெருங்குறை. இரு இசை மாமேதைகளை வைத்துப் பண்ணும் படத்தினை முழுமையான இசையைப் பின்னணியாகக் கொண்ட கதையாகவே பின்னியிருக்கலாம். இந்த குழப்பங்களால் மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் வெற்றி மிகப் பிரமாதம் என்று அமையவில்லை.

பாடல்களை வாலி மற்றும் கங்கை அமரன் எழுத, குழலூதும் கண்ணனுக்கு பாடல் தவிர்ந்த மற்றைய பாடல்களுக்கு எம்.எஸ்.வி மெட்டுப் போட இளையராஜா இசையமைத்திருக்கின்றார். குழலூதும் கண்ணனுக்கு பாடலுக்கு மெட்டும் இசையும் ராஜாவே.

இப்படத்தின் பின்னணி இசையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் எம்.எஸ்.விஸ்வநாதனின் கைவரிசையும் இருந்திருக்கிறது. அதைக் கேட்கும் போது அவதானித்துக் கீழே தந்திருக்கிறேன். தொடர்ந்து மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தின் பின்னணி இசையை அனுபவியுங்கள்.



படத்தின் ஆரம்ப இசை



ராதா-மோகன் முதல் சந்திப்பு, புல்லாங்குழலில் குழலூதும் கண்ணனுக்கு இழையோட



"அழகுராணி பொண்ணு" நாட்டுப்புறப்பாடலைப் பாடும் கிராமத்துப் பெரிசு



"மரிக்கொழுந்து வாசக்காரி" நாட்டுப்புறப்பாடலைப் பாடும் கிராமத்து ஆள்



மோகன் நினைப்பில் ராதா பின்னணியில் ஊருசனம் தூங்கிருச்சு பாடலின் இசை கீபோர்டில் பரவ



ராதா, மோகன் சந்திப்பும் ராதா தன் தங்கை மேல் கொள்ளும் பொறாமையும், இதிலும் குழலூதும் கண்ணனுக்கு பாட்டின் இசை பரவி இன்னொரு தடத்துக்கு மாறுகின்றது



"ஒரு ஆம்பளப்பையன் பாத்து சிரிச்சானாம்" படத்திற்காக மேலதிகமாகப் போட்ட மெட்டு



மோகன் குணமடைய வேண்டி ராதாவின் வேண்டுதல் கிராமிய மேளதாளம், உறுமி மேளம் கலக்க



மோகன் பிரிவில் ராதா, வயலின் இசையில் ஊரு சனம் தூங்கிருச்சு



ராதாவின் தாய் மரணம் , இந்தப் பின்னணி இசை எம்.எஸ்.வியின் உடையது என்பதை கேட்கும் போதே உணர முடிகின்றது



ராதா வாண்டுகளைப் பிரிந்து பட்டணம் புறப்படுதல், பின்னணியில் கிட்டாரில் சக்கரக்கட்டிக்கு பாடலின் இசை



"பாவன குரு" பாடல் படத்துக்காக மேலதிகமாகப் போடப்பட்ட மெட்டு



மோகன், அமலா சந்திப்பு பின்னணியில் வா வெண்ணிலா பாட்டினை இசையாக்கி மட்டும்



மோகன் தன் காதலை அமலா வீட்டில் ஹிந்திப் பாடம் மூலம் வெளிப்படுத்த, வா வெண்ணிலா பாட்டிசை இன்னொரு வடிவில்



காதலி அமலாவுக்காக மோகன் மழையில் நனைந்து நடந்து போதல், வயலினும் புல்லாங்குழலும் ஆர்ப்பரிக்க மெல்ல வா வெண்ணிலா மெதுவாகக் கலக்கின்றது



அமலாவின் காதல் நினைப்பில் வா வெண்ணிலா பாட்டிசையோடு மோகன் சந்திக்க "சிறகை விரித்து பறக்க பறக்க" பாடல் படத்துக்காக மேலதிகமாகப் போட்ட மெட்டு, பாட்டு முடிவில் வா வெண்ணிலா வயலினிசையில்



அமலா, மோகனின் காதலை ஏற்றல், காதலர்கள் மனமகிழ்வில் வா வெண்ணிலா பாட்டிசை இன்னொரு வடிவில்



அமலா மோகன் இறுதிச் சந்திப்பு நாள் காதல் பிரவாகம் இசையில் கலக்க



அமலா புதைகுழிக்குள் விழுந்து சாகும் அவல ஓசை



ராதாவின் தற்கொலை முடிவில் மோகனின் மனக் கதவு மெல்லத் திறக்க ஜோடி சேரும் இறுதிக் காட்சி