Pages

Monday, July 24, 2017

மலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி

ஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா

கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன்னிற்கும் ஒரு விடயம் ஊடகப் பண்பு. தான் பேட்டி காண்பவர் தன்மை உணர்ந்து அந்தப் பேட்டியை நெறிப்படுத்தும் பண்பை கேரள ஊடகர்களிடம் கண்டிருக்கிறேன். தமிழ் ஊடகப் பரப்பில் தொழில் நுட்பம் வளர்ந்த அளவுக்கு ஊடகத்தைக் கையாளும் நுட்பம் அதிகம் வாய்க்கவில்லை என்பேன். இன்று நான் பார்த்த மலையாள மனோரமா தொலைகாட்சி இசைஞானி இளையராஜாவுடன் நேர் கண்ட பேட்டி இன்னொரு சிறு உதாரணம். இந்தப் பேட்டி ஆரம்பிக்கும் போது வழங்கப்படும் அறிமுகத்தைப் பாருங்கள் கச்சிதமாக நச்சென்று முடிந்து விடும். 

பேட்டியில் இசைஞானி இளையராஜா குறித்த கருத்துகளில் முக்கியமானவையை ஆவணப்படுத்தத் தோன்றியது அதனால் பேட்டியை உள்வாங்கித் தமிழில் தருகிறேன். இது வரிக்கு வரியான மொழி பெயர்ப்பு அல்ல, அவரின் மன உணர்வைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ததன் ஒரு காற்பங்கு.

ஒரு படத்தில் தேவைப்படும் பாடலை உடனேயே மெட்டமைத்து இசை கட்டி விடுகிறீர்களே காட்சியின் சந்தர்ப்ப சூழலைப் பற்றிக் கலந்து பேசுவது அவசியமில்லையா?

ஆலோசிக்கவே தேவையில்லை. 
பாடுற பாட்டுக்கு எதுக்கு ஆலோசனை?
காட்சிச் சூழலை எனக்குச் சொன்னதுமே 
அதுக்குப் பாடணும் எந்த மெட்டும் அது சார்ந்த இசையும் வருகிறதோ அதுதான் பாட்டு. அது தானாக வரணும் நாமாக உருவாக்கக் கூடாது. நாமாக உருவாக்கினால் நம்முடைய அந்த நேரத்து மன வெளிப்பாடு அந்த இசைக் கோப்பில் பிரதிபலித்து விடும். 

ஒரு மணி நேரத்தில் அஞ்சு பாட்டெல்லாம் உருவாக்கியிருக்கிறீர்களே?
ஒரு மணி நேரத்தில் ஐந்து பாட்டு இல்லை ஆறு படம் ஆறு படத்துக்குத் தலா ஆறு பாட்டு ஆக மொத்தம் முப்பத்தாறு பாட்டு கொடுத்திருக்கிறேன்.

இசையமைப்பாளர்கள் பலர் இந்தக் காட்சிச் சூழலுக்கு இந்த மெட்டுப் பொருந்துமா இந்த இசைக் கோப்பு சரிப்படுமா என்றெல்லாம் பல்வேறு தெரிவுகளை வைத்து அலசி ஆராய்ந்து தான் ஒரு தீர்மானத்துக்கு வருவார்களே?

எனக்கே தெரியாது எப்படி இது சாத்தியப்படுகிறதென்று. இதை விளக்குவது மிகவும் கடினம். எனக்கு எவ்வளவு தூரம் இசை ஞானம் இருக்கிறது என்பது பிரச்சனையல்ல. இசைக்கு தெரியும் என்னைப் பற்றி. அதைக் கொண்டே இத்தனையும் நடக்கிறது.

ஆயிரம் படங்கள் ஐயாயிரம் பாடல்கள் கொடுத்திருக்கிறீர்கள் ஒரு பாட்டின் சாயல் இல்லாமல் இன்னொரு பாடலை உருவாக்கும் போது எழும் அனுபவம்?

ஒரு பாட்டை மெட்டுக் கட்டும் போதே அது தோன்றி விடும் உடனேயே அந்தச் சமயத்தில் புது மெட்டைக் கட்டி விடுவேன்.

அப்படியானால் கம்ப்யூட்டர் போல அத்தனை பாடல்களும் மூளையில் தேங்கி இருக்கணும் இல்லையா?

கம்ப்யூட்டருக்கு இத்தனை வேகத்தோடு செயற்படச் சாத்தியப்படாது. கம்ப்யூட்டர் எங்கள் மூளையின் வேகத்தோடு வராது. 
எனக்கோ உங்களுக்கோ அல்லது இன்றைய மாணவருக்கோ கம்ப்யூட்டரின் வேகத்தை விட மூளையின் வினைத்திறன் அதிகம்.கம்ப்யூட்டரை நம்ம கையில் எடுக்க வேண்டும்.

நீங்கள் உருவாக்கும் பாடலை எதிர்பார்த்த அளவுக்கு பாடியிருக்கிறார்களா?

ஆக்கக்காரன் எதிர்பார்க்கும் அளவுக்கு முழுமையாக யாருமே பாடிவிட முடியாது ஆனால் உச்ச பட்சமான திருப்தியைக் கொடுக்கும் வகை வரை சென்று பாடியிருக்கிறார்கள். தான் எதிர்பார்த்த அளவுக்கு முழு அளவிலான திருப்தியைப் பாடகர் கொடுத்திருக்கிறாரா என்பது பாடலை ஆக்குபவனுக்கே தெரிந்த விடயம்

தேவராஜன் மாஸ்டர் போல நீங்களும் பாடலைத் திருப்திகரமாகப் பாடாதவரையில் விடாப் பிடியாகப் பாடகரை அந்த இலக்கு எட்டும் வரை பாட வைக்கும் முயற்சி எடுப்பீர்கள் ஆனால் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் இந்த விஷயத்தில் நெகிழ்வுப் போக்குடன் இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அப்படி ஏன் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அதைப் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை
ஒரு துளி கூட இல்லை 😀

கேரள தேசத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் இலிருந்து ஜெயச்சந்திரன், ஜென்சி, சுஜாதா, மதுபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பாடகர்களுக்குப் திருப்புமுனையாக அமைந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறிர்கள் அது பற்றி?

இந்தப் பாடல் இன்னார் பாடினால் தான் சிறப்பாக வரும் என்று மனதளவில் செய்யும் தீர்மானத்தை வைத்துத் தான் இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு குரலும் தனித்துவம் வாய்ந்தவை.


இளையராஜா உருவமைத்த பாட்டு என்றால் அதில் இளையராஜாவின் முத்திரை மட்டுமே இருக்க வேண்டும் ஒரு பாடகனோ பாடகியோ தன்னுடைய மனோ தர்மங்களில் எழும் சாதகங்களை, ஆலாபனைகாலஒ பாட்டில் கூடுதலாகச் சேர்க்க அனுமதிப்பதில்லையே நீங்கள்?

மனசு போகிற போக்கில் எல்லாம் பாடி விட்டு அதை  மனோ தர்மம்னு சொல்லலாமா அது மனோ தர்மமா 😀
அதை நான் பாட விடுவதில்லை காரணம் பாடலின் ஜீவன் என் இசையில் இருக்கிறது. அதன் தூய்மையும், வலுவும் அதற்குள் இருக்கிறது. 
எப்படி அவர்களால் அதற்குள் போய் கற்பிதம் செய்து மாற்றக் கூடிய வல்லமை இருக்கும்?
அவர்களால் கற்பனை செய்தும் பார்க்க முடியாத காரியம் அது.
அவர்கள் இசையைப் பிரதிபலிப்பவர்கள் அவர்கள் ஆக்க கர்த்தாக்கள் அல்லர் அவர்கள் நான் என்ன கொடுத்தேனோ அதை நிகழ்த்திக் காட்ட வேண்டும். இது சரி பிழை பார்த்துத் திருத்தும் காரியமல்ல இதுவொரு கலை வடிவம். நான் ஒரு படைப்பாளி, என்னால் ஆக்கப்பட்ட படைப்பு அது.
அவர்கள் செய்ய வேண்டியது என்னவெனில் அவர்களின் சுயமான குரலில் எனக்கு வேண்டியதை மெய்ப்பிக்க வேண்டும். நான் கேட்டதைத் தன்னுடைய குரலில் எப்படிக் கொடுக்க வேண்டுமென்பதிலேயே அந்த உழைப்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் ஜீவன் போய் விடும்.

ஒரு படைப்பாளிக்கான ஒத்தாசையாக ஏன் இந்த இடைச் செருகல்களை எடுத்துக் கொள்ளக் கூடாது?

இது ஒத்துழைப்பு அல்ல கூட்டு முயற்சி என்பது

நீங்கள் உங்கள் படைப்புகளை கடவுளின் செயலாகக் குறிப்பிடுவீர்கள் ஆனால் அது தவிர உங்களின் திறமையை முன் வைக்காதது ஏன்?

இன்று நீங்கள் உலகின் இசை மேதைகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் இசையைத் துறை போகக் கற்றவர்கள் ஆனால் நான் யார்?
சாதாரணமாக கிராமத்தில் இருந்து வந்தவன் இவ்வளவு தூரம் சாதிக்க முடிந்ததென்றால் அது முன் ஜென்மத்தில் இசையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்திருக்கணும் அதுதான் இப்போது விளைகிறது அதுவே கடவுளின் கிருபை.

சிறுமியாக இருந்த சுஜாதாவுக்கு இனிப்பு வாங்கிக் கொடுத்துப் பாட வைத்தது, அப்போது அறிமுகப் பாடகியாக இருந்த சித்ராவுக்கு தியாகராஜ கீர்த்தனையைக் கொடுத்துப் பாட வைத்தது இதெல்லாம்?
தீர்மானம் எடுத்து வருவதல்ல இவை எனக்கு அந்தச் சமயத்தில் எது தோன்றியதோ அதைச் செய்தேன்.

நன்றி : மலையாள மனோரமா மற்றும் இந்தக் காணொளியைப் பகிர்ந்த Promod கானா பிரபா
24.07.17

Wednesday, June 7, 2017

🍁 இசைஞானி இளையராஜா இசையில் 🍁 💚 மெளனம் சம்மதம் ❤️ 🎼 பின்னணி இசைத் தொகுப்பு🌷
மெளனம் சம்மதம் படம் ஞாபகமிருக்குதா என்று கேட்டாலேயே "ஓ தெரியுமே" என்று விட்டுக் "கல்யாணத் தேனிலாஆஆஆ" என்று ஆலாபனை எடுத்துப் பாட ஆரம்பித்து விடுவார்கள் படத்தைப் பார்த்தவர்களும் சரி பார்க்காதவர்களும் சரி.
இந்தப் படத்தில் இன்னொரு மெட்டு சின்னக்குயில் சித்ரா குரலில் "ஒரு ராஜா வந்தானாம்" ஏக பிரபலம்.
தயாரிப்பாளர் கோவை செழியன் மம்முட்டையைத் தமிழுக்கு அழைத்து வந்து முறையே அழகன், மெளனம் சம்மதம், புதையல் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மெளனம் சம்மதம் பக்கா மலையாளத் துப்பறியும் கதைப் பின்னணி கொண்டது. மம்முட்டியின் இம்மாதிரிக் கதைகளின் துப்பறியும் கூட்டணி எஸ்.என்.ஸ்வாமி கதை எழுத, பிரபல இயக்குநர் கே.மது இயக்கிய படமிது.
மெளனம் சம்மதம் ஒரு சுவாரஸ்யம் கலந்த விறு விறுப்பான துப்பறியும் கதைப் பின்னணி கொண்டிருந்தாலும், காட்சி அமைப்பில் மலையாள சினிமாவுக்குண்டான அம்சத்தோடு இருக்கும். இந்தப் படத்தைப் பிரமாண்டம் ஆக்கியதே இதன் பின்னணி இசை தான் என்னுமளவுக்கு இசைஞானி இளையராஜா பின்னி எடுத்திருக்கிறார். அதை நீங்கள் இந்த முழு நீள இசைக் கோப்பில் உணர முடியும்.
இதே பின்னணி இசைக் கோப்பை வைத்துத் திகிலூட்டும் பெரும் பிரம்மாண்டத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாகப் படத்தில் இடம் பெறும் கொலை நிகழும் காட்சியில் கொடுக்கப்பட்ட பின்னணி இசை ஒரு சோறு பதம்.
https://soundcloud.com/kanapraba/ms10
மெளனம் சம்மதம் படத்தின் முகப்பு இசை "சிக் சிக் சா" பாட்டின் வாத்திய வடிவமாகவும் இறுதிக் காட்சியில் கல்யாணத் தேனிலாவுமாக நிறைக்கிறது. மம்முட்டி அமலா மேல் காதல் கொண்டு அதைச் சொல்லுமிடத்தும் கல்யாணத் தேனிலாவின் இசைக் கீற்று ஒலிக்கிறது.
இந்தப் படத்தை இத்தகு இசை நுட்பத்தோடு அனுபவித்துக் கேட்க இன்னொரு முறை திரையிடப்படாதா என்ற ஆசையும் ஊறுகிறது.
முழு இசையோட்டத்தையும் அனுபவித்துப் பாருங்கள் பின்னணி இசையின் நாயகன் இசைஞானி இளையராஜா என்று மீண்டும் நிரூபித்து நிற்கின்றது.

Friday, June 2, 2017

இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியர்கள்ஒவ்வொரு ஆண்டும் எங்கள் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் வரும் போதும் அவர் இசை படைத்த ஆயிரத்துச் சொச்சம் படங்களில் இருந்தே எடுத்துக் குளிப்பாட்டிக் கொண்டாடும் ஆத்மார்த்தமான ரசிகர்களுள் நானும் இணைந்து இந்த ஆண்டு என்ன கொடுக்கலாம் என்ற தேடலில் இறங்கி விடுவேன். 

அந்த வகையில் இந்த ஆண்டின் பிறந்த நாள் சிறப்புத் தின்பண்டமாக அவரின் இசையூற்றை வரிகளால் அணை போட்ட பாடலாசிரியர்ளைத் திரட்டும் நீண்ட காலத் திட்டத்தின் ஒரு அம்சமாக, தமிழில் வெளியான படங்களில் பயன்படுத்தப்பட்ட பாடலாசிரியர்களைத் தொகுத்துக் கொடுக்கிறேன்.

தமிழில் மட்டும் அறுபதைத் தொடும் இந்தப் பட்டியலில் இன்னும் விடுபட்டவர்கள் இருக்கலாம். காரணம் முறையான உறுதிப்படுத்தப்பட்ட ஆதார நகல்களைத் தேடியெடுக்கும் சவால் நிறைந்த பணியிது. தமிழைத் தாண்டியும் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, இதை விடத் திரையிசை சாராப் பாடல்கள் என்று திரட்டினால் இசைராஜா இளையராஜாவால் பயன்படுத்தப்பட்ட பாடலாசிரியர்கள் நூறைத் தாண்டும்.
அது தான் என் அடுத்த பணி. அதையும் தாண்டிப் புனிதமான மிகப்பெரிய பணி ஒன்றுள்ளது. இந்தப் பாடலாசிரியர்கள் கொடுத்து இளையராஜாவின் இசை வடிவம் கண்ட அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் வகை கொண்டு திரட்டுவது, அது என் பேராசை கூட. அதனால் தான் இந்தப் பகிர்வில் ஒவ்வொரு பாடலாசிரியரின் மாதிரிப் பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளேன். 

ஆயிரம் படங்களைத் தாண்டுவது மட்டுமல்ல சாதனை. இம்மாதிரி எண்ணற்ற பாடலாசிரியர்களையும் ஆவாகித்துத் தன் படைப்பில் அணியாக்கிய வகையிலும் எம் இளையராஜா நிகழ்த்திக் காட்டிய சாதனைக்காரர்.

இசைஞானி இளையராஜா இசைத்த 
ஒளைவையார் உள்ளிட்ட பெரும் புலவர்கள், தியாகையர் உள்ளிட்ட சங்கீத மகானுபவர்கள், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட இயக்குநர்கள், புலமைப்பித்தன் உள்ளிட்ட தற்காலத்துப் புலவர்கள், கமல்ஹாசன் என்ற பன்முகப் படைப்பாளி, பஞ்சு அருணாசலம் ஐயா போன்ற திரைத்துறைச் சாதனையாளர்கள், நா.முத்துக்குமார் போன்ற இளம் பாடலாசிரியர்கள் என்று எவ்வளவு வகை தொகையாக இந்தப் பாடலாசிரியர்களைப் பிரித்துப் பார்த்து அழகு செய்யலாம்.

இதோ எங்கள் இசைராஜாவின் பிறந்த நாளுக்கு குசேலனாகச் சுமந்து தரும் அவல் பொட்டலம் இது.

1. இளையராஜா
மணியே மணிக்குயிலே (நாடோடித் தென்றல்)
https://youtu.be/o2RE-Lbfo7U

2. கண்ணதாசன்
இளமையெனும் பூங்காற்று (பகலில் ஒரு இரவு)
https://youtu.be/yej6UCRLvuk

3.  பஞ்சு அருணாசலம்
கண்மணியே காதல் என்பது (ஆறில் இருந்து அறுபது வரை)
https://youtu.be/29eI9Fy56go

4.  கலைஞர் கருணாநிதி
காவலுக்குக் கெட்டிக்காரன் (காவலுக்குக் கெட்டிக்காரன்)

5. புலமைப் பித்தன்
நீயொரு காதல் சங்கீதம் (நாயகன்)
https://youtu.be/NyV0JPXCAg4

6. வாலி
கண்ணன் ஒரு கைக்குழந்தை (பத்ரகாளி)
https://youtu.be/-8kKvL_x9Ow

7. காமராசன்
கண்ணன் வந்து பாடுகிறான் (ரெட்டை வால் குருவி)
https://youtu.be/51QcM2eHg7c

8. பொன்னடியான்
மலையோரம் மயிலே (ஒருவர் வாழும் ஆலயம்)
https://youtu.be/2ToJgtb2ODQ

9. பிறைசூடன்
மீனம்மா மீனம்மா (ராஜாதி ராஜா)
https://youtu.be/6dbtMuLNPIw

10 கங்கை அமரன்
இந்த மான் எந்தன் சொந்த மான் (கரகாட்டக்காரன்)
https://youtu.be/pjHy60xg7P0

11. வைரமுத்து
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் (நினைவெல்லாம் நித்யா)
https://youtu.be/6sxvlUDNt8k

12. மதுக்கூர் கண்ணன் (யார் கண்ணன்)
அள்ளித் தந்த பூமி (நண்டு)
https://youtu.be/NuPEiQMQnUw

13. P.B.ஶ்ரீனிவாஸ் 
கேய்சே கஹூன் என்ற ஹிந்திப் பாட்டு (நண்டு)
https://youtu.be/yUI1FLexJrY

14.  வாசன்
வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன் (பூந்தோட்டம்)
https://youtu.be/DUvfgRgTShg

15. பழநி பாரதி 
என்னைத் தாலாட்ட வருவாளோ (காதலுக்கு மரியாதை)
https://youtu.be/N8Ea4jhszlg

16. அறிவுமதி
செம்பூவே பூவே (சிறைச்சாலை)
https://youtu.be/hqzQ9Q1ez9g

17. எம்.ஜி.வல்லபன்
ஆகாய கங்கை (தர்ம யுத்தம்)
https://youtu.be/t1lRlbdl4EE

18.  முத்துலிங்கம்
பூபாளம் இசைக்கும் (தூறல் நின்னு போச்சு)
https://youtu.be/RX7AxOPGtOM

19. சி.என்.முத்து
அலங்காரப் பொன்னூஞ்சலே (சொன்னது நீ தானா)
https://youtu.be/k8WnGxNA39w

20. சிற்பி பாலசுப்ரமணியம்
மலர்களே நாதஸ்வரங்கள் (கிழக்கே போகும் ரயில்)
https://youtu.be/wS-UY1wa4wk

21. ஆலங்குடி சோமு
மஞ்சக் குளிச்சு ( பதினாறு வயதினிலே)
https://youtu.be/eNL69g00z_U

22. புலவர் சிதம்பர நாதன்
ஏரிக்கரைப் பூங்காத்தே (தூறல் நின்னு போச்சு)
https://youtu.be/QjJc98fOFcg

23. புரட்சி தாசன்
சுகம் சுகமே (நான் போட்ட சவால்)
https://youtu.be/6jEHiBaI36s

24. விஜி மேனுவேல் 
ஸ்விங் ஸ்விங் (மூடு பனி)
https://youtu.be/rnQDQkRIwDQ

25. இளைய பாரதி
சோலை இளங்குயில் (காவலுக்குக் கெட்டிக்காரன்)
https://youtu.be/yuTHKeSz_Fs

26. ஜெயகாந்தன்
எத்தனை கோணம் (எத்தனை கோணம் எத்தனை பார்வை) https://youtu.be/vJhvaQlbX5g

27. முத்துக்கூத்தன் 
தொன்று தொட்டு (அவதாரம்)
https://youtu.be/ZZsGJHJyeLQ

28. அவிநாசி மணி 
பூப்போட்ட தாவணி (காக்கிச் சட்டை)
https://youtu.be/0lI48Y1ig60

29. கலைவாணன் கண்ணதாசன் 
ஒரு நாள் நினைவிது (திருப்பு முனை)
https://youtu.be/c1z8oqaA-S4

30. குருவிக்கரம்பை சண்முகம் 
இங்கே இறைவன் (சார் ஐ லவ் யூ)
https://youtu.be/VGXl3Ujjh60

31. கஸ்தூரி ராஜா
மாமரத்துல (கரிசக்காட்டுப் பூவே)
https://youtu.be/F0crA7Qdhao

32. கே.காளிமுத்து
அன்பு மலர்களின் (கண்ணுக்கு மை எழுது)
https://youtu.be/sRqdmSdNHhg

33. காமகோடியன்
மல்லிகை மொட்டு (சக்தி வேல்)
https://youtu.be/JhWcC7805TE

34. கமல்ஹாசன்
உன்னை விட (விருமாண்டி)
https://youtu.be/IreAy25aMyo

35. ஆர்.வி.உதயகுமார்
முத்து மணி மாலை (சின்ன கவுண்டர்)
https://youtu.be/lXvzgbb4ZTM

36. தாமரை
ஆண்டான் அடிமை படப் பாடல் உறுதிப்படுத்த வேண்டும்

37. மோகன்ராஜ்
வதன வதன (தாரை தப்பட்டை)
https://youtu.be/MZ3Lb4cmSio

38. பார்த்தி பாஸ்கர்
பூஞ்சோலை படப் பாடல் உறுதிப்படுத்த வேண்டும்

39. நா.முத்துக்குமார்
வானம் மெல்ல (நீதானே என் பொன் வசந்தம்)
https://youtu.be/PzBrCSiwYGM

40. மு.மேத்தா
வா வா வா கண்ணா வா (வேலைக்காரன்)
https://youtu.be/zHiYtT59Tvo

41. சினேகன்
உளியின் ஓசை பாடல் உறுதிப்படுத்த வேண்டும்

42. ஜீவன்
மயிலு படப் பாடல்கள்

43. கபிலன்
ஒரு வாண்டுக் கூட்டமே (நந்தலாலா)

44. உஷா
என் ராசாவின் மனசிலே படப் பாடல் உறுதிப்படுத்த வேண்டும்

45. பரத் ஆச்சார்யா
மா கங்கா (நான் கடவுள்)
https://youtu.be/Zex2KONl_8I

46. திருமாவளன் 
அஜந்தா 

47. சு.செந்தில்குமார் 
அஜந்தா

48. விசாலி கண்ணதாசன்
கண்ணனுக்கு (தனம்)
https://youtu.be/yjNtSSTY_No

49. பா.விஜய்
மாயக் கண்ணாடி பாடல் உறுதிப்படுத்த வேண்டும்

50. நந்தலாலா
 இளவேனில் கால (மனம் விரும்புதே உன்னை)
https://youtu.be/GZkEp31CDac

51. அகத்தியன்
வாசமிக்க மலர்களை (காதல் கவிதை)
https://youtu.be/Efzzhd0PgQk

52. தேன் மொழியான் 
  டப்பாங்குத்து (தலைமுறை)

53. பாரதி கண்ணன் 
முந்தி முந்தி விநாயகரே ( கண்ணாத்தாள்)
https://youtu.be/Hy4AmxJ4meE

54. பொன்னியின் செல்வன் 
தேவதை 

55. யுகபாரதி
பூவக் கேளு (அழகர்சாமியின் குதிரை)
https://youtu.be/kTAm3TltwrE

56. ஜெ.ப்ரான்சிஸ் கிருபா
குதிக்கிற (அழகர்சாமியின் குதிரை)
https://youtu.be/I6E0ktl4Gws

57. ஒளைவையார்
கல்லானே ஆனாலும் (எத்தனை கோணம் எத்தனை பார்வை) 
https://youtu.be/LLnWgBqSKw0

58. ஆண்டாள்
வாரணம் ஆயிரம் (கேளடி கண்மணி)
https://youtu.be/zf-M2vfXwwI

59. பாரதியார்
நிற்பதுவே நடப்பதுவே (பாரதி)
https://youtu.be/UDGs5ivsrhc

60. பாரதிதாசன்
காலை இளம் பருதியிலே (கண்ணன் ஒரு கைக்குழந்தை)
https://youtu.be/qfnY4WkGrRs

61.முத்துஸ்வாமி தீக்ஷதர்
மகா கணபதிம் (சிந்து பைரவி)
https://youtu.be/KvlMmGOqwkI

62. தியாகராஜர்
மரி மரி நின்னே (சிந்து பைரவி)
https://youtu.be/vckxvmjy30E

63. ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் 
அலைபாயுதே (எத்தனை கோணம் எத்தனை பார்வை)
https://youtu.be/bFlo-sZahZ0

64. மாணிக்க வாசகர்
பாருருவாய (தாரை தப்பட்டை)
https://youtu.be/klRiP_T7N4A

கானா பிரபா
02.06.17

http://www.radiospathy.com/2017/06/blog-post_2.html

இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியர்கள்ஒவ்வொரு ஆண்டும் எங்கள் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் வரும் போதும் அவர் இசை படைத்த ஆயிரத்துச் சொச்சம் படங்களில் இருந்தே எடுத்துக் குளிப்பாட்டிக் கொண்டாடும் ஆத்மார்த்தமான ரசிகர்களுள் நானும் இணைந்து இந்த ஆண்டு என்ன கொடுக்கலாம் என்ற தேடலில் இறங்கி விடுவேன். 

அந்த வகையில் இந்த ஆண்டின் பிறந்த நாள் சிறப்புத் தின்பண்டமாக அவரின் இசையூற்றை வரிகளால் அணை போட்ட பாடலாசிரியர்ளைத் திரட்டும் நீண்ட காலத் திட்டத்தின் ஒரு அம்சமாக, தமிழில் வெளியான படங்களில் பயன்படுத்தப்பட்ட பாடலாசிரியர்களைத் தொகுத்துக் கொடுக்கிறேன்.

தமிழில் மட்டும் அறுபதைத் தொடும் இந்தப் பட்டியலில் இன்னும் விடுபட்டவர்கள் இருக்கலாம். காரணம் முறையான உறுதிப்படுத்தப்பட்ட ஆதார நகல்களைத் தேடியெடுக்கும் சவால் நிறைந்த பணியிது. தமிழைத் தாண்டியும் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, இதை விடத் திரையிசை சாராப் பாடல்கள் என்று திரட்டினால் இசைராஜா இளையராஜாவால் பயன்படுத்தப்பட்ட பாடலாசிரியர்கள் நூறைத் தாண்டும்.
அது தான் என் அடுத்த பணி. அதையும் தாண்டிப் புனிதமான மிகப்பெரிய பணி ஒன்றுள்ளது. இந்தப் பாடலாசிரியர்கள் கொடுத்து இளையராஜாவின் இசை வடிவம் கண்ட அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் வகை கொண்டு திரட்டுவது, அது என் பேராசை கூட. அதனால் தான் இந்தப் பகிர்வில் ஒவ்வொரு பாடலாசிரியரின் மாதிரிப் பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளேன். 

ஆயிரம் படங்களைத் தாண்டுவது மட்டுமல்ல சாதனை. இம்மாதிரி எண்ணற்ற பாடலாசிரியர்களையும் ஆவாகித்துத் தன் படைப்பில் அணியாக்கிய வகையிலும் எம் இளையராஜா நிகழ்த்திக் காட்டிய சாதனைக்காரர்.

இசைஞானி இளையராஜா இசைத்த 
ஒளைவையார் உள்ளிட்ட பெரும் புலவர்கள், தியாகையர் உள்ளிட்ட சங்கீத மகானுபவர்கள், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட இயக்குநர்கள், புலமைப்பித்தன் உள்ளிட்ட தற்காலத்துப் புலவர்கள், கமல்ஹாசன் என்ற பன்முகப் படைப்பாளி, பஞ்சு அருணாசலம் ஐயா போன்ற திரைத்துறைச் சாதனையாளர்கள், நா.முத்துக்குமார் போன்ற இளம் பாடலாசிரியர்கள் என்று எவ்வளவு வகை தொகையாக இந்தப் பாடலாசிரியர்களைப் பிரித்துப் பார்த்து அழகு செய்யலாம்.

இதோ எங்கள் இசைராஜாவின் பிறந்த நாளுக்கு குசேலனாகச் சுமந்து தரும் அவல் பொட்டலம் இது.


1. இளையராஜா
மணியே மணிக்குயிலே (நாடோடித் தென்றல்)

2. கண்ணதாசன்
இளமையெனும் பூங்காற்று (பகலில் ஒரு இரவு)

3.  பஞ்சு அருணாசலம்

4.  கலைஞர் கருணாநிதி5. புலமைப் பித்தன்
நீயொரு காதல் சங்கீதம் (நாயகன்)

6. வாலி
கண்ணன் ஒரு கைக்குழந்தை (பத்ரகாளி)

7. காமராசன்
கண்ணன் வந்து பாடுகிறான் (ரெட்டை வால் குருவி)

8. பொன்னடியான்
மலையோரம் மயிலே (ஒருவர் வாழும் ஆலயம்)

9. பிறைசூடன்
மீனம்மா மீனம்மா (ராஜாதி ராஜா)

10 கங்கை அமரன்
இந்த மான் எந்தன் சொந்த மான் (கரகாட்டக்காரன்)

11. வைரமுத்து
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் (நினைவெல்லாம் நித்யா)

12. மதுக்கூர் கண்ணன் (யார் கண்ணன்)
அள்ளித் தந்த பூமி (நண்டு)

13. P.B.ஶ்ரீனிவாஸ் 
கேய்சே கஹூன் என்ற ஹிந்திப் பாட்டு (நண்டு)

14.  வாசன்
வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன் (பூந்தோட்டம்)

15. பழநி பாரதி 
என்னைத் தாலாட்ட வருவாளோ (காதலுக்கு மரியாதை)

16. அறிவுமதி
செம்பூவே பூவே (சிறைச்சாலை)

17. எம்.ஜி.வல்லபன்
ஆகாய கங்கை (தர்ம யுத்தம்)

18.  முத்துலிங்கம்
பூபாளம் இசைக்கும் (தூறல் நின்னு போச்சு)

19. சி.என்.முத்து
அலங்காரப் பொன்னூஞ்சலே (சொன்னது நீ தானா)

20. சிற்பி பாலசுப்ரமணியம்
மலர்களே நாதஸ்வரங்கள் (கிழக்கே போகும் ரயில்)

21. ஆலங்குடி சோமு
மஞ்சக் குளிச்சு ( பதினாறு வயதினிலே)

22. புலவர் சிதம்பர நாதன்
ஏரிக்கரைப் பூங்காத்தே (தூறல் நின்னு போச்சு)

23. புரட்சி தாசன்
சுகம் சுகமே (நான் போட்ட சவால்)

24. விஜி மேனுவேல் 
ஸ்விங் ஸ்விங் (மூடு பனி)

25. இளைய பாரதி
சோலை இளங்குயில் (காவலுக்குக் கெட்டிக்காரன்)


26. ஜெயகாந்தன்
எத்தனை கோணம் (எத்தனை கோணம் எத்தனை பார்வை) https://youtu.be/vJhvaQlbX5g


27. முத்துக்கூத்தன் 
தொன்று தொட்டு


28. அவிநாசி மணி 
பூப்போட்ட தாவணி 


29. கலைவாணன் கண்ணதாசன் 

30. குருவிக்கரம்பை சண்முகம் 
இங்கே இறைவன் (சார் ஐ லவ் யூ)


31. கஸ்தூரி ராஜா32. கே.காளிமுத்து33. காமகோடியான்34. கமல்ஹாசன்35. ஆர்.வி.உதயகுமார்36. தாமரை


37. மோகன்ராஜ்


38. பார்த்தி பாஸ்கர்


39. நா.முத்துக்குமார்


40. சரோஜா அம்மாள்


41. சினேகன்

42. ஜீவன்


43. கபிலன்


44. உஷா


45. பரத் ஆச்சார்யா

46. திருமாவளன் 
அஜந்தா 

47. சு.செந்தில்குமார் அஜந்தா


48. விசாலி கண்ணதாசன்

49. தாமரை


50. நந்தலாலா
 - மனம் விரும்புதே உன்னை

51. அகத்தியன்

52. தேன் மொழியான் 
  தலைமுறை

53. பாரதி கண்ணன் 
- கண்ணாத்தாள்

54. பொன்னியின் செல்வன் - தேவதை


55. பா.விஜய்56. ஒளைவையார்
கல்லானே ஆனாலும் (எத்தனை கோணம் எத்தனை பார்வை) 

57. ஆண்டாள்
வாரணம் ஆயிரம் 

58. பாரதியார்
நிற்பதுவே நடப்பதுவே (பாரதி)

59. பாரதிதாசன்
காலம் இளம் பருதியிலே (கண்ணன் ஒரு கைக்குழந்தை)60. முத்துஸ்வாமி தீக்‌ஷதர்

61. தியாகராஜர்


62. ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் 
அலைபாயுதே (எத்தனை கோணம் எத்தனை பார்வை)
Thursday, May 25, 2017

கவிஞர் காமராசனுக்கு அஞ்சலிகவி வானின் நட்சத்திரம் ஐயா காமராசன் அவர்கள் காலமான செய்தியை இன்றைய காலை துயிர் பகிர்ந்தது. கவிஞர் முத்துலிங்கம் அவர்களோடு ஒரு நீண்ட வானொலிப் பேட்டியை எடுத்த பின் காமராசன் அவர்களையே மனதில் நினைத்து வைத்திருந்தேன். ஆனால் சந்தர்ப்பங்கள் தடையாக இருக்க, சமீபத்தில் குமுதம் இதழில் அவர் கொடுத்த பேட்டி மீண்டும் என்னுள் அவரோடு பேச வேண்டும், ஒலிப் பேட்டி கண்டு ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. ஆனால் அது மீளா இருப்பாக இன்று முற்றுப்புள்ளி வைத்தது. 
கவிஞர் காமராசன் அவர்களின் பாடல்களில் ஐயா வாழ்ந்து கொண்டிருப்பார்.

நக்கீரன் இதழுக்காக செப்டெம்பர் 1, 2013 இல் காமராசன் அவர்கள் வழங்கிய பேட்டியை நன்றியோடு இங்கு மறு பதிப்புச் செய்கிறேன்.

புதுக்கவிதை உலகின் பிதாமகன்களில் தலையாயவர் கவியரசர் நா. காமராசன். இவர் வசீகர வார்த்தைகளால் கவிவானை அளந்த ராஜாளிப் பறவை. மாணவப் பருவத்திலேயே மரபுக்கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர், அறுபதுகளின் இறுதியில் புதுக்கவிதையின் காதலர் ஆனார். இவரது பிரவேசத்திற்குப் பிறகு புதுக்கவிதை உலகம் கம்பீரம் அடைந்தது. 

1971-ல் நூல் வடிவம் தரித்த "கருப்பு மலர்கள்' 
கவிதை நூல் தொடங்கி, "கிறுக்கன்', "நாவல்பழம்', 

"மகா காவியம்', "சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி', "தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும்', "சூரியகாந்தி', "சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்', "ஆப்பிள் கனவு' உள்ளிட்ட முப்பதுக்கும் அதிகமான தொகுப்புகள் இவரது விரல்களில் இருந்து வீரியமாய் மலர்ந்திருக் கின்றன. 

1965-களில் தீவிரம் கொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், முக்கியமான மாணவத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்து, சட்ட எரிப்புக்காகச் சிறை சென்றவர். சாதனைச் சிகரங்கள் பல கண்ட கவியரசர் நா. காமராசனை, "இனிய உதயத்'திற்காக சந்தித்தபோது, நமது கேள்விகளை உற்சாகமாகவே எதிர்கொண்டார். நா.கா.வால் பேச முடியவில்லை. முன்புபோல் அவரால் எழுத முடியவில்லை என்பது போன்ற வதந்திகளை குப்பைக் கூடைக்கு அனுப்பியது அவரது நேர்காணல். எல்லாவற்றையும்விட "இனிய உதயம்' வாசகர்களுக்காக அவர் சுடச்சுட மரபில் ஒரு விருத்தக் கவிதை யையும் கொடுத்து, தனக்கு இன்னும் முதுமை வரவில்லை என்று நிரூபித்து நெகிழவைத்தார். கவியரசர் நா. காமராசனுடனான இலக்கிய நேர்காணல் இதோ... 

நீங்கள் கடந்துவந்த பாதை மனநிறைவைத் தருகிறதா?

ஆம்; இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பல சோதனைகளைக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறேன். யாருடைய உதவியும் இல்லாமல் மிகச்சிறிய வயதிலேயே தனியாக உழைத்து அரசியல், இலக்கியப் பணிகளை ஆரம்பித்தேன்; அதில் வெற்றியும் பெற்றேன். என் வாழ்க்கை மிகத் திருப்தியாக இருக்கிறது. நான் மனநிறைவோடுதான் இருக்கிறேன்.

உங்கள் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்? 

என் இளமைக்காலம் உழைக்கும் வர்க்கத்தின் செயல்களின்மீது காதல் கொண்டதாக இருந்தது. "தமிழ், தமிழ்' என்ற உணர்வே மேலோங்கி நின்றது. 

அதோடு உலகப் பார்வையும் பெற்றேன். வாழ்க்கையை அனுபவித்து ஆராய்ந்து ஏற்றுக்கொண்டேன். பல கவிதை நூல்களைப் படித்தபோது நானே கவிஞனாக உருவானேன். எப்படியும் முதல் இடத்தைப் பெறவேண்டுமென்று உழைத்தேன்.

கல்லூரிக் காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றதை நினைத்தால் எப்படி இருக்கிறது? 

அது ஒரு பொற்காலம். என் நாட்டின் தலை யெழுத்தை உருவாக்குகின்ற தலைவனாக உருவாக வேண்டுமென்ற எண்ணம் என்னுள் மிக ஆழமாக ஏற்பட்டது. அடிப்படையை பலமாக்கிக்கொண்டு படிப்படியாக லட்சிய மாளிகையை எழுப்பினேன். 

மிகப்பெரிய தமிழ் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்திய ஒருவன் என்கிற ஆழ்ந்த மனமகிழ்ச்சி இப்போது நினைத்தாலும் எனக்குள் உண்டு.

கவிதை எழுதவேண்டுமென்ற தாக்கம் உங்களுக்கு யாரால் ஏற்பட்டது?

உண்மையைச் சொன்னால் லா.ச. ராமமிர்தம் என்கிற மிகப்பெரிய எழுத்தாளரால் ஏற்பட்டது. தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கவிக்கோலங்களை வரைந்தவர் அவர் என்பதில் பலருக்கு ஐயமில்லை. ஆகவே அவருடைய எழுத்துகளும் கவிதை எழுத ஒரு தூண்டுகோலாக இருந்தது.

உங்களை அதிகம் பாதித்த கவிஞர்கள் யார்?

இளங்கோ அடிகளும் கம்பரும்தான். இளங்கோ அடிகள்மீது மரியாதையும், கம்பன்மீது பிரியமும் ஏற்பட்டது. தமிழ் தேசியத்தை உருவாக்கியவர் இளங்கோ; கவிதைத் தாக்கத்தை உருவாக்கியவர் கம்பன். 20-ஆம் நூற்றாண்டில் என்னை பாதித்த கவிஞர்களுள் உவமைக் கவிஞர் சுரதாவும் ஒருவர். அவர் சிந்தித்து எழுதுவார். அவருடைய உவமைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் ஒளியின் கவிதைகள் சந்தத்தில் என்னை பாதித்து இருக்கின்றது.

நீங்கள் தமிழில் சிகரம் தொடும் கவிஞர்களில் ஒருவராக வருவீர்கள் என்று சின்ன வயதில் நினைத்துப் பார்த்ததுண்டா?

நிச்சயமாக உண்டு. உலக அளவில் பெயர் வரவேண்டும் என்று ஆரம்பத்திலேயே விரும்ப ஆரம்பித்தேன். கல்லூரிக் காலங்களில் "கலில் ஜிப்ரான்' கவிதைகள் மட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவரின் "முறிந்த சிறகுகள்'  (BROKEN WINGS)   என்கிற புத்தகம் எனது வேதப்புத்தகம். தமிழை உயர்த்திய பல சான்றோர்களில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும் என்று என் சின்ன வயதிலேயே பொன்கனவு கண்டவன் நான்.

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?

அறிஞர், தமிழ் உணர்வை ஊட்டியவர் அண்ணா. அதைச் செயல்படுத்தியவர் கலைஞர்தான். எதிலும் முதல்வராக வரவேண்டுமென்ற தகுதி உள்ளவர். எம்.ஜி.ஆர். நல்ல மனிதர், பலருக்கு உதவி செய்தவர். ஏழைகள் உயரவேண்டுமென்று மனதார நினைத் தவர். ஜெயலலிதா அறிவாற்றல்மிக்கவர்; துணிச்சல் நிறைந்தவர்.

உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையில் மறக்க முடியாத அனுபவம் உண்டா? 

எம்.ஜி.ஆரின் நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. நேரு, தாகூர் எழுதிய புத்தகங்களோடு எனது "கறுப்பு மலர்கள்' புத்தகத்தையும் வைத்திருந்தார். அதை என்னால் மறக்கமுடியாது. எனது புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு என்னை அழைத்து பாடல் எழுதச் சொன்னவர். எல்லாக் கவிஞர்கள் எழுதும் பாடல்களையும் அவர் பார்த்து சில திருத்தங்கள் செய்வார் என்று கூறுவார்கள். ஆனால் என்னுடைய பாடல்களை அவர் பார்த்துவிட்டு எம்.எஸ்.வி அண்ணனிடம் மெட்டு அமைக்கச் சொல்லுவார். "ஊருக்கு உழைப்பவன்' படத்தில் வரும் "இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்' என்ற என்னுடைய பாடலை எம்.எஸ்.வி ஏற்றுக்கொள்ள மறுத்தார். உடனே எம்.ஜி.ஆர் தலையிட்டு "காமராசன் எழுதியதை நீங்கள் மெட்டுப்போட வேண்டும்' என்று கட்டளையிட்டார். அதை இன்றும் என்னால் மறக்கவே முடியாது.

உங்கள் திரையுலகப் பயணம் எப்படி? யாரால் நடந்தது?

என்னுடைய திரையுலகப் பயணம் எம்.ஜி.ஆரால் தான் நடந்தது. அது எனது பாக்கியம். அதோடு ஆர்.எம். வீரப்பன் அண்ணன் பெயரையும் குறிப்பிடவேண்டும். எனது "கறுப்பு மலர்கள்' புத்தகத்தை எம்.ஜி.ஆரிடம் படிக்கக் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு திடீரென்று ஒருநாள் பாடல் எழுதச் சொன்னார். "கனவுகளே, ஆயிரம் கனவுகளே' என்ற எனது முதல் பாடல் எம்.ஜி.ஆருக்கு எழுதினேன். அதேபோல அண்ணன் ஆர்.எம். வீரப்பன் சத்யா மூவிஸின் எல்லா படங்களிலும் எனக்கு பாடல் எழுத வாய்ப்பளித்தார். அதை என்னால் என்றும் மறக்கமுடியாது.

நீங்கள் எழுதிய திரைப்பாடல்களில் உங்கள் மனதை அதிகம் கவர்ந்த பாடல்கள் எவை?

"இரவு பாடகன் ஒருவன் வந்தான்' என்ற  பாடலும், "போய்வா நதி அலையே' என்ற பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். வெள்ளை ரோஜாவில் "ஓ! மானே, மானே' என்ற பாடலும், "உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது' என்ற "தங்க ரங்கன்' படத்தில் வரும் பாடலும் மிகவும் பிடித்த பாடல்களாகும்.

"சந்ததிப் பிழைகள்' என்று திருநங்கைகளுக்காக முதன்முதலில் அக்கறையோடு குரல்கொடுத்த கவிஞர் நீங்கள். அவர்கள் இப்போது தங்கள் உரிமைகளை சமூகத்தில் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 

நான் திருநங்கைகளுக்காக எழுபதுகளில் குரல் கொடுத்தேன். என்னுடைய எழுத்துக்களில் எழுதியது இன்று ஓரளவு நடந்துவிட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசு நினைத்தால் சமூகத்தில் திருநங்கைகளுக்கு இன்னும் சிறந்த இடமும், மரியாதையும் அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய முடியும்.

உங்கள் கவிதைகளில் அழகியல் சார்ந்த உருவகங்கள் கொடிகட்டிப் பறக்கிறதே?

உருவகம் என்பது இன்றைக்கும் புதுக்கவிதையில் தவிர்க்க முடியாத ஒரு கூறு. உருவகங்களின்மீது கட்டி எழுப்பப்படும் ஒரு கவிதையை வாசித்து அனுபவம் பெறும்போது, அது நம் மனதில் போய் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொள்கிறது. எனக்கு உருவகங்கள்மீது காதல் ஏற்படுவதற்கு ஒரே காரணம் கேரளக்கவி வயலார் ராமவர்மாதான். அவர் ஒரு சிறந்த திரைப்பாடலாசிரியரும்கூட. அவரைப்போல உருவகங்களைக் கையாளுவதிலும், அவற்றை உருவாக்குவதிலும் தனித்துவம் கொண்டவர்கள் என்று இந்தியாவிலேயே யாருமில்லை. கம்யூனிஸக் கருத்துக்களை மாபெரும் உருவக வரைபடத்தில் அவர் ஏற்றிச் சொன்னதை இப்போது நினைத்தாலும் சிலிலிர்க்கிறது.

நான் உருவகங்களை அதிகம் பயன்படுத்தியதற்கு ராமவர்மா முக்கிய பாதிப்பாக அமைந்துபோனார். 

அதேபோல எங்களுக்கு தமிழண்ணல் என்றொரு ஆசிரியர் இருந்தார். தமிழ் மரபுச்சொற்கள், பழ மொழிகள் போன்றவற்றில் கொட்டிக் கிடக்கும் உருவகங்களைப் பற்றி எங்களுக்கு பாடப் பகுதி என்றில்லாமல், தனிப்பட்ட முறையில் சொல்லிலிக் கொடுத்தார். எனது கவிதை மொழியின் வளர்ச்சியில் அவருக்கும் பங்குண்டு.

புதுக்கவிதையில் சிலேடையை முயன்று பார்த்தவர் நீங்கள். ஆனால் இன்று நவீன புதுக் கவிதையில் சிலேடையின் இடத்தை படிமம் எடுத்துக்கொண்டு விட்டது. உண்மையில் சிலேடை புதுக்கவிதையோடு அல்லது நவீன கவிதையோடு ஒட்டாத ஒரு விஷயமா?

சிலேடை என்பது கவித்துவத்தின் உச்சத்தில் தோன்றும் ஓர் உத்தி. சிலேடை எனும் இலக்கிய அலங்காரத்தை நகைச்சுவையின் ராணி என்றே சொல்லிலிவிடலாம். அதே நேரம் சிலேடையை மட்டும் இன்னொரு மொழிக்கு மொழிபெயர்த்துவிட முடியாது. இதுதான் சிலேடையின் தனிச்சிறப்பு.இடைக்கால இலக்கியத்தில் கவி காளமேகத்தின் பங்களிப்பு இன்று வரை பிரமிப்பானது. பிறகு பல்வேறு கவிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். இன்றைய நவீனயுகத்தில் எனக்குத் தெரிந்து அப்துல் ரகுமான் சிலேடைக்கு முயன்றிருக்கிறார். இவருக்கு முன்பு எழுதிய கி.வா. ஜகந்நாதனும் எழுதியிருக்கிறார். எனது பங்கு என்பது மிகச் சிறியது. இன்றைய இளைய தலைமுறைக்கு சுட்டுப் போட்டாலும் சிலேடை புனைவது சாத்தியமில்லை.

உங்களால் மறக்கமுடியாத நபர் யார்? ஏன்?

என்னால் மறக்க முடியாத நண்பர்கள் என்றால் என்னுடன் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த எனது நண்பர்- முன்னாள் சபாநாயகர் மறைந்த கா. காளிமுத்துவும், எனது அன்புத்தம்பி பா. தங்கவேலு (பி.ஈ.)யும்தான். டி.என்.ஹெச்.பி.யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டார். இப்போதும் என்கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை. இவர்களைத் தான் அண்ணன், தம்பிகளாக நினைப்பேன். 
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவான் என் தம்பி தங்கவேலு. 

என் நண்பர் காளிமுத்து, "சென்னையில் நமக்கென்று ஒரு பெரிய இடம், வாய்ப்பு கிடைத்தால் இருப்போம். இல்லையென்றால் மதுரைக்கு ஓடிவிடுவோம்' என்று அடிக்கடி சென்னைக்கு வந்த ஆரம்பத்தில் கூறுவார்.

நீங்கள் எழுத நினைத்து, எழுதமுடியாமல் இருக்கும் படைப்பு எது?

நான் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளேன். கவிதை, கட்டுரை, நாடகங்கள் என 32 புத்தகங்கள்  எழுதி யுள்ளேன். ரொம்ப வருடங்களாகவே ஒரு காவியம் எழுதவேண்டுமென்ற ஆசை எனக்குள் இருக்கிறது. ஆனால் ஏனோ எழுத முடியாமல் தள்ளிப்போகிறது. நான் எழுத நினைக்கும் காவியத்துக்கு "மூன்றாவது உலகம்' என்று எப்போதோ பெயர் வைத்துவிட்டேன். எழுத வேண்டும்; எழுதுவேன்.

உங்கள் கவிதைக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. அவர்களைப் பற்றி சொல்லுங்கள்?

அவர்கள் அனைவரும் நல்ல கருத்து உள்ளவர்கள். சிலர் கம்யூனிசக் கருத்து உள்ளவர்கள். அவர்களுக்கெல்லாம் தமிழ்ப்பற்றும் நிறைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் கைதி என்று அழைக்கப்படுகின்ற எனது நண்பர் கவிஞர் கை. திருநாவுக்கரசுவைத்தான் குறிப்பிட வேண்டும். ஒருநாள் முழுக்க விடிய, விடிய என் கவிதைகளைப்பற்றி ரசித்து, ரசித்துப் பேசியவர். இதேபோல கவிஞர் மயிலாடுதுறை இனியன் என்ற நண்பர் கடிதம் மூலம் எனது கவிதைகள் பற்றி அவ்வப்போது அக்கறையோடு எழுதுவார்.  ஆதிவேலு என்ற நண்பர் அடிக்கடி தொடர்புகொண்டு விமர்சிப்பார். உசிலம்பட்டி கவிஞர் தமிழ்தாசன் என்ற நண்பர் தொலைபேசியில்  அடிக்கடி இன்றுவரை என் எழுத்துக்களையும் நலத்தையும் விசாரிப்பார். இப்படி பல பேர்கள் உள்ளனர்.  தண்டையார் பேட்டை ரமணன் என்கிற நண்பர் என் பாடல்களை எல்லாம் விமர்சித்துக் கொண்டுதானிருக்கிறார். பி. மீனாட்சிபுரம் ராஜா என்ற மகாராஜன்- என் இளவல் மிகச்சிறிய வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்து, என்னோடு போனவருடம்வரை கூட இருந்துவிட்டு இப்போது இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். அது எனக்கு மிகுந்த கவலையையும், துக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. அவன் ஆத்மா என்னையே நினைத்து இருக்கும். இப்படி என் பாட்டையும், என் கவிதைகளையும் ரசித்த கூட்டம் நான் என்ன செய்து கொண்டுள்ளேன் என்று ஒவ்வொரு நாளும் அக்கறையோடும் அன்போடும் விசாரித்துக்கொண்டும் இருக்கிறது. என்மீது அன்புகொண்ட என் அன்பு ரசிகர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாகவே இருப்பேன்.

கவிதை எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது?

கவிதை என்பது மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் சரிசமமாக கலந்து இருக்கவேண்டும். காலமாற்றங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரே வரியில் சொன்னால் கம்பனின் கற்பனையும், பாரதிதாசனின் உணர்ச்சியும் சேர்ந்து இருக்கவேண்டும். வெறும் ஏட்டுச் சுரைக் காயாக இருக்கக்கூடாது. கருத்து இல்லாமல் இருக்கக் கூடாது. சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சுட்டிக்காட்டி, உண்மையான நீதியையும் குறிப்பிட வேண்டும். 

மொத்தத்தில் வாசகர்களைக் கவர்ந்து இழுக்க வேண்டும். 

நீங்கள் நேசிப்பது? 

திராவிடத்தை மிகவும் நேசிக்கிறேன். 

நீங்கள் வெறுப்பது? 

செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகளை.

நீங்கள் ரசிப்பது? 

தமிழை மட்டும். என் உயிர் உள்ளவரை ரசிப்பேன். ஏனென்றால் என் உயிரே தமிழ்தான்.

உங்கள் உடலுக்கு என்ன பிரச்சினை? என்ன மருத்துவம் எடுத்துக் கொள்கிறீர்கள்?

என் உடலுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாருக்கும் ஏற்படும் வயதுக்கோளாறுதான். எனக்கு ரொம்ப வருடங்களாக ஆஸ்துமா தொந்தரவு உண்டு. அவ்வப்போது அவதிப்படுகின்றேன். சர்க்கரையும் உண்டு. அதற்குரிய மருந்தை மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக்கொண்டு, வீட்டில் எழுதிக்கொண்டும் ஓய்வு எடுத்தபடியும் இருக்கிறேன். எங்கேயும் அதிகம் செல்வதில்லை. முக்கியமான விழாக்களில் கலந்து கொள்வேன்.

இன்றைய நவீனத் தமிழ்க் கவிதையில் யாரை அறிந்திருக்கிறீர்கள்? புதிய கவிஞர்களின் கவிதை களை வாசிப்பதுண்டா?

அப்துல்ரகுமான், இன்குலாப் இரண்டுபேரையும் ஆளுமையான கவிஞர்கள் என்று ஏற்றுக்கொள்வேன். இன்று எழுதிக்கொண்டிருக்கிற இளம் கவிஞர்கள் பலரும் அரை வேக்காடுகள். இரண்டாயிரமாண்டு தமிழ்க் கவிதை நெடுங்கணக்கில் எத்தனை நூல்கள் இருக்கின்றன என்பதைக்கூட அறியாத அரிச்சுவடிக் கவிஞர்கள்.

இவர்கள் எழுதுகிற கவிதைகளால் அச்சகம் நடத்துகிறவர்களுக்குத்தான் லாபமே தவிர, தமிழ் மொழிக்கோ கவிதையை நேசித்து வாசிக்கத் துடிப்பவனுக்கோ லாபமல்ல. குறிப்பாக நவீன கவிதை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. குழப்பம்தான் நவீன கவிதை. நவீன கவிதைகளுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒருபோதும் இடம் கிடைக்காது என்பது என் கணிப்பு. காலம் இதை உறுதி செய்யும். காமராசன் சரியாகச் சொன்னான் என்று வரும் தலைமுறையினர் என்னைப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அப்படியானால் இன்றைய தமிழ்க்கவிதைத் துறைக்குத் தேவைப்படும் மாற்றம் என்று எதைச் சொல்வீர்கள்?

நாம் அடுத்துவரும் ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மரபுக் கவிதையின் பக்கம் திரும்பிவிடுவதன் மூலம் தமிழ்க் கவிதைக்கு மீண்டும் உயிரூட்ட முடியும் என்று நினைக்கிறேன். காரணம் கம்பனின் ஆளுமை இன்னும் உயிர்ப்புடன் இருப்பது அவன் படைத்த மரபில்தான். நானும் இப்போது மரபுக்குத் திரும்பியிருக்கிறேன். பெரியாரின் வாழ்க்கையை "பெரியார் காவிய'மாக மரபுக்கவிதையில் புனைந்து முடித்துவிட்டேன். 

இந்த தமிழ்ச் சமூகத்திடமிருந்து நீங்கள் எதிர் பார்ப்பது என்ன?

நம் தமிழ்ச் சமூகம் உலகில் முதலிடம் பெறவேண்டும்; இழந்த பெருமையை மீட்க வேண்டும். 

புதிய பெருமைகளை ஏற்றவேண்டும்; ஏற்றுக்கொள்ள வும் வேண்டும். தமிழ் என்றால் தமிழ்தான், அதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை. உலகமெல்லாம் பொதுவுடைமை ஆகவேண்டும். உள்ளத்தை தமிழ்தான் ஆளவேண்டும் என்பதை எதிர்பார்க்கிறேன்.

தமிழ்க் கவிதையுலகின் முன்னோடிக் கவிஞர்களில் முக்கியமானவர் நீங்கள். "இனிய உதயம்' வாசகர்களுக்காக ஒரு சின்னக் கவிதை தர முடியுமா? 

என்றென்றும் இங்கேதான் மாற்றம் வேண்டும் 
என்னாலும் இந்நாட்டில் வெளிச்சம் வேண்டும் 
விவசாயம் தலைமைதாங்கி வளர வேண்டும் 
விண்வெளியை இந்தியாவே ஆள வேண்டும்.
எழுத்தாளர் அனைவருமே உள்ள மட்டும் 
எந்நாளும் உண்மைகளைச் சொல்ல வேண்டும் 
பழுத்ததமிழ் முதல்இடத்தை வகிக்க வேண்டும் 
பலமொழிகள் அதற்கிணையாய் இருக்கவேண்டும்.
உலகங்கள் எல்லாமே ஒன்றே என்று 
உரத்த குரல் எழுப்புகிற நாடு ஒன்று 
நம் நாடு அதுதானே தமிழ்நாடாகும்! 
நாடெல்லாம் பொதுவுடைமை பரவவேண்டும் 
அறிவெல்லாம் வளரட்டும், பசி ஒழியட்டும். 
நாடெல்லாம் வீடெல்லாம், ஊரெல்லாமும் 
நல் உதயம் வாசகர்கள் பெருக வேண்டும்.

Tuesday, May 2, 2017

K.பாலாஜி அளிக்கும் 🎬

ஒரு நல்ல படத்தை எதிர்பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உத்தரவாதம் கொண்ட தயாரிப்பு முத்திரையை கே.பாலாஜி பெற்றிருந்தார். காரணம் அவர் தமிழில் எடுத்த படங்கள் ஏற்கனவே வெவ்வேறு மொழிகளில் வெற்றி வாகை சூடியவை.
அவரது தயாரிப்பில் வெளிவந்த படங்கள் தான் தமிழில் அதிகமாக மீள் தயாரிப்பு (remake) செய்த படங்களாக இருக்கக் கூடும்.
எம்.ஜி.ஆர் VS சிவாஜி காலத்தில் இவர் சிவாஜி அணியில் இருந்ததால் தன்னுடைய தயாரிப்புகளில் சிவாஜிக்கே நாயக வாய்ப்பளித்தவர்.
கே.பாலாஜி வில்லனாக, குணச்சித்திர நடிகராக வலம் வந்த காலத்திலும் கவனத்தை ஈர்த்த நடிகர். குறிப்பாக பலே பாண்டியா அவரின் முத்திரைப் படங்களில் ஒன்று.
இவர் தயாரித்த ஆரம்ப காலப் படங்களில் "நீதி" படம் எனக்குப் பிடித்தமானது.
படத்தின் ஆரம்பத்தில் எழுத்தோட்டத்துக்கு முன்னர் வந்து அழகோடு சிரிக்கும் இவரின் முத்திரை சிறப்பாக இருக்கும்.

"சுஜாதா சினி ஆட்ஸ்" என்ற தயாரிப்பு முத்திரையோடு எண்பதுகளின் இறுதி வரை மிக முக்கியமான தயாரிப்பாளராக இருந்தார்.
குறிப்பாக எண்பதுகளில் ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் பிரபலமான படங்களின் தயாரிப்பாளர். ஒரு பக்கம் முன்னணி நாயகர்களோடு மசாலா இன்னொரு பக்கம் கதையை முன்னுறுத்தும் குடும்பச் சித்திரங்கள் என்று எடுத்துத் தள்ளிவர்.
ஹிந்தியில் அமிதாப் நடித்த Don படத்தை பில்லா ஆகவும் குர்பானியை விடுதலை ஆகவும் ஆக்கியவர் இன்னொரு பக்கம் விதி,நிரபராதி என்று வித்தியாசமான கதைக்களன்களையும் மீள் தயாரித்தார்.
இலங்கையின் உச்ச வர்த்தக நிறுவனம் மகாராஜாவோடு கை கோர்த்து இலங்கை இந்தியன் கூட்டுத் தயாரிப்பாக "தீ" படத்தை எடுத்தார்.
பெரும்பாலும் இவரின் படத் தலைப்புகள் ஒற்றைச் சொல்லாகவே இருக்கும். அதை வைத்தே இது பாலாஜி படம் என்று கண்டு பிடிக்கலாம்.
தயாரிப்பாளர் ஜி.வி முதலில் திரைப்பட விநியோகத்தை ஆரம்பித்த போது "சுஜாதா" என்றே ஆரம்பித்தார். பின்னர் கண்டிப்பாக இவர்களுக்குள் பேச்சு வார்த்தை இருந்திருக்கும் அதன் பின்னரேயே "ஜி.வி.பிலிம்ஸ்" ஆனது.

கே.விஜயன் மற்றும் பில்லா கிருஷ்ணமூர்த்தியை அதிக படங்கள் இயக்க வைத்தார்.
பாலாஜி தயாரித்து மாதவி முக்கிய வேடமேற்ற "நிரபராதி" படம் மலையாளத்தின் 23 Female Kottayam படத்துக்கு முன்னோடி.

இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் அரவணைத்த பெரும் தயாரிப்பாளர் என்ற சிறப்பும் பாலாஜிக்கு உண்டு. இவர் தயாரித்த தீபம் படம் இளையராஜா ஒப்பந்தமான இரண்டாவது படம் என்று சொல்லக் கேள்வி. ஆனால் ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளர் என்ற வட்டத்தில் இருந்து விலகி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன், சங்கர் கணேஷ், சந்திரப்போஸ் என்று அரவணைத்தவர். இசையமைப்பாளராகக் கங்கை அமரனுக்கு மகுடம் சேர்த்த வாழ்வே மாயம், சட்டம், நீதிபதி போன்றவற்றோடு சந்திரபோஸ் இற்கு மறு வாழ்வு அளித்த விடுதலை படம் என்று சேர்க்க முடியும்.

"விதி" படம் வந்த போது அந்தப் படத்தின் பாடல்களை விட படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற விவாதக் காட்சிகளை அப்போது Recording Bar களில் ஒலி நாடாக்களில் பிரதியெடுத்துக் கேட்டுக் கேட்டு அனுபவித்த தலைமுறை உண்டு. அவ்வளவுகு அட்டகாசமான வசனங்களை ஆரூர்தாஸ் எழுதிக் கொடுத்திருப்பார். இந்தப் படத்தின் ஒலிப்பதிவுத் தரம் எண்பதுகளில் வெளிவந்த மற்றைய படங்களோடு ஒப்பிடும் போது வெகு சிறப்பாக இருக்கும்.

கே.பாக்யராஜ் :
யாராவது ஒரு பத்தினி பேர் சொல்லுங்க?

ஊர்ப் பெருசுகள் : சீதை, நளாயினி, சாவித்திரி

கே.பாக்யராஜ் : பத்தினின்னு கேட்டப்ப உங்கம்மா பேரு உங்க சம்சாரம் பேரு சொன்னீங்களா?

மேற் சொன்ன உரையாடல் "விதி" படத்தில் வரும். இந்தக் காட்சியை விசிலடித்துப் பார்த்தார்கள் அப்போது. கே.பாலாஜியின் விதி படத்தில் கெளரவ வேடத்தில் நடித்த கே.பாக்யராஜ் இன் நட்பு அப்போது இன்னொரு விதியை எழுதியது சற்றே பலமாக.

தொடர்ந்து கே.பாலாஜி தயாரிக்க கே.விஜயன் மற்றும் அவரின் புதல்வர் சுந்தர் கே.விஜயன் இயக்க கே.பாக்யராஜ் நடித்த படம் "என் ரத்தத்தின் ரத்தமே" இந்தப் படம் ஹிந்தியில் அனில்கபூர் மற்றும் ஶ்ரீதேவி நடித்த வசூலில் சாதனை படைத்த Mr India படத்தின் தமிழாக்கம். கே.பாக்யராஜ் மற்றும் மீனாட்சி சேஷாத்ரி அறிமுகமாக நடித்த படம். சங்கர் கணேஷ் இசைமைத்தார்கள். படத் தயாரிப்பு நடக்கும் போது கே.பாலாஜிக்கும் கே.பாக்யராஜ்ஜுக்கும் முட்டிக் கொண்டது. தயாரிப்புச் செலவை எகிற வைக்கிறார், தலையீடு அதிகம் என்று கே.பாக்யராஜ் மீது விசனம் கொண்டு அப்போது பத்திரிகைகளில் மனம் திறந்து பேட்டி கொடுத்தார் கே.பாலாஜி. என் ரத்தத்தின் ரத்தமே என்று எம்.ஜி.ஆரின் தாரக வாக்கியத்தைப் பாக்யராஜ் வைக்கும் போதே சுதாகரித்திருக்க வேண்டும். படத்திலும் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர் குறியீடுகள்.
"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" பாடலைப் போலவே "இந்த ராகமும்" https://youtu.be/_WPWqF9zhL் என்ற பாட்டெல்லாம் உண்டு. "ஓராயிரம் பெளர்ணமி நிலவு போல்" https://youtu.be/D4aM8rU2D5c அப்போது வானொலிகளில் கொடி கட்டிப் பறந்த பாட்டு.
அதுவரை நல்ல நண்பர்களாக இருந்தவர்களைப் பிரித்த பாவம் இந்தப் படத்துக்குக் கிட்டியது. தொடர்ந்து

சத்தியராஜ் ஐ வைத்து திராவிடன் (மலையாளத்தில் பாலாஜியின் மருமகன் மோகன்லால் நடித்த ஆர்யன் படத்தின் தமிழாக்கம்) என்று எடுத்த கே.பாலாஜிக்கு அந்தப் படம் கை கொடுக்காமல் ஓய வைத்தது.

இன்று கே.பாலாஜி மறைந்து எட்டு வருடங்கள்.