Pages

Monday, December 31, 2018

🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 🎤 நிறைவுப் பகுதி 🎤


Attachment.png

சமூக வலைத்தளங்களில் நம்முடையே இயங்கிய பதிவர்கள் மற்றும் கலைஞர்கள் திரைத்துறையில் சாதிப்பது சமீப ஆண்டுகளில் மகிழ்ச்சிக்குரிய விடயம். அந்த வகையில் நம்முடைய நண்பர் ஜிரா எனும் கோ.ராகவன் 15 ஆண்டுகளாக வலைப்பதிவு உலகில் செழுமையான, ஆழமான படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருபவர். அவர் தொடும் இலக்கியமாகட்டும், திரையிசையாகட்டும் அதில் ஆராய்ச்சி பூர்வமான அணுகுமுறையும், படிப்போருக்குப் புதிய பல விடயங்களைக் காட்டும் பாங்கிலும் எழுதி வருபவர்.

நாலு வரி நோட்டுஎன்ற திரையிசைப் பாடல்கள் பற்றிய தொடர் ஒன்றை சக எழுத்தாளர்கள் என்.சொக்கன், மோகன கிருஷ்ணன் உடன் இணைந்து தனித்தனியாகப் பகிர்ந்து பின்னர் மூவரின் எழுத்துகளும் நூல் வடிவில் வந்திருந்தது.


நம்ம ஜிராவுக்கு 2018 ஆம் ஆண்டு முக்கியமானதொரு ஆண்டாக அமைந்திருக்கிறது.

ஏற்கனவே ஷான் ரால்டன் இசையில் ஒரு பெட்டக நிகழ்ச்சிகான பாடலை எழுதியவர் இந்த ஆண்டுஅமுதாஎன்ற திரைப்படத்துக்காக மூன்று பாடல்களை எழுதி, அருண் கோபன் இசை வழியாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் திரையிசையின் முக்கிய ஆளுமைகளான ஜெயச்சந்திரன், சித்ரா இவர்களோடு வினீத் ஶ்ரீனிவாசன் ஆகிய மூன்று பாடகர்களின் குரலும் தன்னுடைய முதல் படத்திலேயே கிட்டிய பெருமையும் ஜிராவுக்கு. தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் துறை தேர்ந்த நம்ம ஜிரா தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பது வரவேற்க வேண்டியதொரு செயற்பாடு.

தொடர்ந்து பாடலாசிரியர் மதன் கார்க்கி ஒருங்கமையில் இயங்கும் DooPaaDoo தளத்துக்காக ஹரிச்சரண் இசையில் இளம் இசையமைப்பாளர் ப்ரித்விக் இசையில்கனவேஎன்ற புதுமையான உரையாடல் பாணி பாடலையும் எழுதியிருக்கிறார் ஜிரா.


பாடலாசிரியராக அடியெடுத்து வைத்திருக்கும் ஜிராவின் அனுபவப் பகிர்வை உரையாடல் பாணியில் பேசியிருந்தோம். அதனைக் கேட்க


https://www.mixcloud.com/kana-praba/gira_interview/


அமுதா படப் பாடல்களைக் கேட்க

https://youtu.be/1Q-O_EbPDHY


சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகி 2018 இல் திரையிசைப் பாடகி என்ற அறிமுகத்தை எட்டியியிருக்கிறார் ஷாலினி JKA. தன்னுடைய கல்லூரிப் பருவத்திலும், பின்னர் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் பாடிய அனுபவம் கொண்டவர், இந்த ஆண்டு சாம் C.S இசையில் வெளியானகருபின்னர்தியாஎன்று பெயர் மாற்றப்பட்ட படத்தில்கொஞ்சாளிhttps://youtu.be/gGBQUO_FBBI என்ற பாடலை சத்ய பிரகாஷ் மற்றும் நேகா வேணுகோபாலுடன் இணைந்து பாடியிருக்கிறார் ஷாலினி. ஒரு கல்யாணப் பாடலுடன் அமர்க்களமாகத் தொடங்கியிருக்கும் அவரின் திரைப் பயணம் தொடரும் ஆண்டுகளிலும் நல்ல பல படைப்புகளை வழங்க வேண்டும்.


இதில் புதுமை என்னவெனில் திரையிசைப் பாடகிக்குண்டான சிறப்பான குரல் வளம் கொண்ட ஷாலினி தன்னுடைய தாய் நாட்டில் இருக்கும் போது எட்டாத திரையுலக வாபு இன்று அவர் புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் சூழலில் எட்டியிருக்கிறது.


பாடகி ஷாலினி JKA உடன் நான் நிகழ்த்திய ஒரு குறும் பேட்டியின் ஒலி வடிவம் இதோ.


https://www.mixcloud.com/kana-praba/interview-with-singer-shalini-jka/


2018 ஆம் ஆண்டியின் திரையிசையில் இன்னும் சொல்ல வேண்டிய பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் முதலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனைத் தொட வேண்டும். இந்த ஆண்டுகாலாபடம் வழியாக மீண்டும் இன்னொரு ரஜினி படம் என்ற மாபெரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. ஆனாலும் கபாலி, காலா போன்ற படங்களில் ரஜினியின் முத்திரை இல்லாது பா.இரஞ்சித் படங்களாக அமைந்திருந்ததால் பாடல்களிலும் பெரிய வேறுபாடில்லாத மீள் கலவைகளாகவே அமைந்திருந்தன.

ஆனால்பரியேறும் பெருமாள்படம் சந்தோஷ் நாராயணனுக்குச் சரியான தீனி கொடுத்தது. “கருப்பி கருப்பி” 

https://youtu.be/5IXdCWhQG78 பாடல் மலேசியாவில் தமிழர் படைக்கும் ரெகே போன்ற வடிவில் எழுந்த அட்டகாசமான பாடல்

பொட்டக் காட்டில் பூவாசம்https://youtu.be/zRnPYVDIiJY பாடலிலும் பழையமெட்ராஸ்சந்தோஷ் நாராயணனைப் பார்க்க முடிகிறது

பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்தவட சென்னைமுதன் முதலாக வெற்றி மாறன் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரிடமிருந்து வெளியேறி சந்தோஷ் நாராயணன் கூட்டில் இணைந்த படம். வட சென்னை பாடல்களிலும் வெற்றி மாறனோடு இணைந்த கூட்டுக்கு நியாயம் கற்பித்தது சந்தோஷ் நாராயணன் இசை.


பாடல்கள் முன்பே வெளியாகி விட்டாலும் 2018 இல் வெளி வந்த படம் என்ற ரீதியில்மேற்குத் தொடர்ச்சி மலைபடத்தில்கேட்காத வாத்தியம்”, “அந்தரத்தில் தொங்குதம்மாபாடல்கள் படத்தோடு ஒன்றி இயங்கிய இசைப் பாடல்களாக ரசிகர் மனதை ஆட் கொண்டன.


மகா நதி....மகா நதிஎன்ற தலைப்பிசைப் பாடலிலேயே ஈர்த்தவர் இசையமைப்பாள்ர் மைக்கி ஜே. மேயர் அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் படத்தின் மையவோட்டத்தோடு இணைந்து கொடுத்திருந்தது சிறப்பு. மகா நதி படப் பாடல்கள் https://youtu.be/Oh6-QVX-CZQ 2018 இன் திரையிசைப் பாடல்களில் தவிர்க்க முடியாது குறிப்பிட வேண்டியவை.


சிவகார்த்திகேயன் வீட்டில் இருந்து இரண்டு புது வரவுகள்ஒன்று சிவகார்த்திகேயன் பாடலாசிரியராகி அனிருத் இசையில்  “கோலமாவு கோகிலாபடத்துக்காககல்யாண வயசுhttps://youtu.be/qNW9MLk4lF4 பாடலை எழுத, சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாகனாதிரைப்படத்துக்காகவாயாடி பெத்த புள்ளhttps://youtu.be/00fWlZnZAo0 பாடலை திபு நினான் தாமஸ் இசையில் பாடிக் கலக்கி விட்டார். இரண்டு பாடல்களுமே 2018 இன் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் அமர்ந்து கொண்டன.

நீயும் நானும் வந்தேhttps://youtu.be/dImiR3Sr8Wo  இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழாவைஇமைக்கா நொடிகள்வழியாக மீட்டெடுத்தது.


இவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிட்ட வேண்டும் என்றதொரு எதிர்பார்ப்பைத் தன் பாடல்கள் வழியாகவும், பின்னணி இசை மூலமும் கிளப்புவர் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

இந்த ஆண்டு விஸ்வரூபம் 2 படம் அவருக்குக் கை கொடுக்கா விட்டாலும் ராட்சஷனில் தன்னை நிரூபித்தார். ஜிப்ரானின் இசை என்று அதிகம் அடையாளப்படாமல் போனஆண் தேவதைபடப் பாடல்களிலும் சிறப்பாகப் பங்களித்திருந்தார்.


2018 ஆம் ஆண்டில் வெளி வந்த படங்களின் பாடல்களில் பரவலான கவனத்தை ஈர்த்த பாடல்களை ஓரளவு தொட்டுச் சென்றிருக்கிறேன். இவற்றை விடத் தனிப்பட்ட ரீதியில் ரசிகர் மனதைக் கவர்ந்தவை என்ற தொகையில் இன்னும் பல இருக்கும். அவற்றை நீங்கள் பின்னூட்டம் வழியாகவும் அறியத் தரலாம்.


Sunday, December 30, 2018

🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 பாகம் ஐந்து 🎹 D.இம்மானுக்கு 100, யுவனுக்கு பத்தோடு பதினொன்று 🎸

🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁

பாகம் ஐந்து

🎹 D.இம்மானுக்கு 100, யுவனுக்கு பத்தோடு பதினொன்று 🎸

Attachment.png

பாடலையும் கேட்க வேண்டும் அதே நேரம் அந்தப் பாடல் அதிகம் மெனக்கெடாமல் சட்டென்று மனதில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு வகை ரசிகர் கூட்டம் உண்டு. இம்மாதிரி ரசிகர்களுக்காகவே தொண்ணூறுகளில் தேவா வரமளித்தார். ஏற்கனவே கேட்ட பாடலின் சாயலிலேயே பாடல்களைத் திரும்பத் திரும்பக் கொடுப்பதால் கேட்பவருக்கும் அந்த டியூனைப் பழகவெல்லாம் அதிக காலம் பிடிக்காது. இதே நூலைப் பிடித்து இன்றைய யுகத்தில் இசையமைப்பவர் D.இம்மான். உதாரணத்துக்கு 2018 இல் ஜனங்களைத் தியேட்டர் பக்கம்

அள்ளியகடைக்குட்டி சிங்கம்பாடல்கள் உதாரணத்துக்கு

அட வெள்ளக்கார வேலாயி https://youtu.be/ay92dzwAHZc

சண்டைக்காரி வாடி வாடி https://youtu.be/XtD3KDmstzg

தண்டோரா கண்ணால

https://youtu.be/J1QMVBGuhZs

சான்று பகிரும்.

அது போலவே சிவகார்த்தியேன் படங்களுக்கு இசையமைக்கும் போதும் சிவகார்த்திகேயனின் முந்திய படங்களில் கொடுத்ததையே மறு சுழற்சி செய்து போட்டு விடுங்கள் என்று இயக்குநர் கேட்பார் போல. “வர்ரும் ஆனா வர்ராது”, “ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல”, “மச்சக்காரிஎன்று சீமராஜாவுக்குக் கொடுத்ததெல்லாம் சூடாக்கிய பழைய பலகாரங்கள். இந்த நெடியேபஞ்சு மிட்டாய்பாடல்களிலும் அடித்தது. “My wife ரொம்ப beautiful லுபாடல் பஞ்சு மிட்டாய் படம் வழியாக பண்பலை வானொலிகளுக்குக் கிட்டிய ஒரு மாமூல் பாட்டு.

இருப்பினும் D.இம்மானுக்குக் கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தால் விண்வெளியைத் தொடும் இசையைக் கொடுப்பார் என்பதற்கு உதாரணமாக அமைந்ததுடிக் டிக் டிக்பாடல்கள். அவரது நூறாவது படம் என்பதால் சொல்லி அடித்திருக்கிறார். “குறும்பாபாடல் வெளியான நாளில் இருந்தே ஹிட்டடித்தது. அது போல யுவன், சுனிதா சாரதி, யோகி B இன் டிக் டிக் டிக் முகப்பிசைப் பாடலும் சுதி ஏற்றும்.

பாடலாசிரியராக மதன் கார்க்கிக்கும், இசையமைப்பாளர் D.இம்மானுக்கும் இவர்களின் திரையிசைப் பயணத்தில்குறும்பாபாடல் (சித் ஶ்ரீராம் இன் குரல் வடிவம்) மிக முக்கியமானது என்பேன்.

டிக் டிக் டிக் படப் பாடல்கள்

https://www.youtube.com/playlist?list=PLqXIK460qsCeZPC3P7z9G3UJhN-pKCbt8

இந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்திருக்கும்விஸ்வாசம்பாடல்களும் D.இமானின் மாமூல் இசையில் வந்திருப்பது ஏமாற்றம். படத்தில் சொல்லக் கூடிய ஒரே மெலடியானகண்ணான கண்ணேபாடல்கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலையைக் கொஞ்சம் தட்டி நெட்டிப் போடப்பட்டிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா காலம் என்றொன்று இருந்தது என்று சொல்லுமளவுக்கு யுவனின் நிலை. அவருக்குத் தோதான இயக்குநர்களும் இல்லாதது அல்லது தோதான இயக்கு நர்களுடன் சேர்ந்ததும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லாதது 2018 இலும் தொடர்ந்தது.

பெண்ணே” https://youtu.be/IGI4jnKn6IU

என்ற பியார் பிரேமா காதல் தான் யுவனின் பாடல்களில் இந்த ஆண்டு அதிக வெளிச்சம் பட்டது.

பேரன்பு, பலூன், செம போதை ஆகாதே, சண்டக் கோழி 2, ராஜா ரங்குஸ்கி, இருமபுத் திரை ஆகிய படங்களில்

வான் தூறல்” (பேரன்பு)

https://youtu.be/tAOu6n4ygHY

உயிரிலே உயிரிலே (பலூன்)

https://youtu.be/0nTu7Ih8r_k

அழகே (இரும்புத் திரை)

https://youtu.be/Ut8FGRsCZI8

ஆகிய பாடல்களில் யுவன் தெரிகிறார்.

தாவணி போட்ட தீபாவளி காலத்துச்சண்டக் கோழியோடு ஒப்பிடும் போது சண்டக் கோழி 2 இன்னொரு ஏமாற்றமே.

Zee தமிழ் சரிகமப இசை போட்டியில் வெற்றி கண்ட ரமணியம்மாவுடன், செந்தில் தாஸ் பாடியசெங்கரத்தான் பாறையிலேபாடலைப் பண்பலை வானொலிகள் கடனே என்று தள்ளிக் கொண்டிருக்கின்றன.

மாரி 2 பாடல்கள் வந்த எடுப்பிலேயேரவுடி பேபி

https://youtu.be/3nauk_scj9U பாட்டுஇந்தாடி கப்பக்கிழங்கே” (தூள்) படப் பாடலின் தழுவல் என்று கலாய்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இளையராஜா மீண்டும் யுவன் இசையில் பாடியிருக்கிறார் என்ற செய்தி மட்டும் மாரி 2 பாடல்களில் ஒரு செய்தி. மற்றப்படி 2019 இலும் பழைய யுவனுக்காகக் காத்திருக்க வேண்டியது தான்.

இளையராஜாவின் பாடல்களை நகல் எடுத்துத்தான் பாடல் போட்டிருக்கிறேன் என்று வெள்ளாந்தியாக வாக்கு மூலம் கொடுத்த பிரேம்ஜி அமரனின் இசையில் பார்டி படப் பாட்டுகொடி மாங்கனி” https://youtu.be/RRaPCY7drqc

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா குரல்களில் கேட்டுப் பழகிய ராஜாவின் தொண்ணூறுகள் போலவே இனிக்கிறது.

நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ் கணேஷ் நோகாமல் நொங்கு எடுத்த கதையாக சின்னப் புள்ள” https://youtu.be/O3tnbbUvFpE என்ற செந்தில் & ராஜலட்சுமி சூப்பர் சிங்கர் (நிஜ) ஜோடியின் பாடலையே உருவி கொஞ்சம் மிளகாய்த் தூள் போட்டுக் கொடுத்த சார்லி சாப்ளின் 2 பாடலும் வானொலிகளின் சம்பிரதாய ஹிட் ஆகி விட்டது.

தொடர்ர்ர்ர்ரும்