Pages

Friday, August 24, 2012

கவிஞர் பொன்னடியானும் இசைஞானி இளையராஜாவும்

"இன்று வந்த இன்பம் என்னவோ அதைக் கண்டு கண்டு அன்பு பொங்கவோ, குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" சுந்தரக்குரல் சொர்ணலதா பாடிய இந்தப் பாடலை எத்தனை தடவை அலுக்காமல் கேட்டிருப்போம். அதுவும் "என் ராசாவின் மனசிலே" படம் வந்த காலத்தில் இந்திய வானொலி வர்த்தக ஒலிபரப்பு விவித்பாரதியில் மிஞ்சிப்போனால் அரை நிமிடமோ அதற்குச் சில நொடிகளோ மட்டுமே கஞ்சத்தனமாக அறிமுகமான நாள் முதல் இந்தப் பாடலின் மீதான காதல் குறையவில்லை, படம் வெளிவந்து 21 ஆண்டுகள் கழிந்தும்.


இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலக் கவிஞர் பஞ்சு அருணாசலத்தில் இருந்து பின்னாளில் கங்கை அமரன், வாலி, வைரமுத்து போன்ற பரவலாக அறியப்பட்ட பாடலாசிரியர்கள் வரை ஒரு குழாம் இருக்க, இன்னொரு வரிசையில் புலமைப்பித்தன், பிறைசூடன், மு.மேத்தா, முத்துலிங்கம் என்ற வகையில் கவிஞர் பொன்னடியானும் இருந்திருக்கின்றார். ஆனால் திரையிசைப்பாடல்களின் நீண்டகாலத்துரதிஷ்டமாக, பாடலாசிரியர்கள் குறித்த அறிமுகமில்லாமல் பாடல்களைக் கேட்டு ரசிக்கப் பழகிவிட்டோம். வானொலிகளும் நைச்சியமாக அவற்றைத் தவிர்த்துவிட்டன. இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை முப்பதுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்களைப் பட்டியலிடலாம். ஆனால் நமக்கு அதிகம் அறிமுகமான பாடல்களில் வைரமுத்து, வாலி போன்றவர்களே ஓரளவு இனங்காணப்பட்ட பாடலாசிரியர்களாக அந்தந்தப் பாடல்களுக்கு உரித்துடையவர்களாகின்றார்கள்.


எண்பதுகளிலே இவ்வாறு இளையராஜாவின் கடைக்கண் பார்வையில் அருமையான பாடல்கள் பலவற்றைக் கொடுத்த கவிஞர் பொன்னடியானைச் சிறப்பிக்கும் வகையில் இந்தப் பதிவைக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். கவிஞர் பொன்னடியான், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜி.கே.வெங்கடேஷ், சந்திரபோஸ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கும் பாடல்களை எழுதியிருந்தாலும், இசைஞானி இளையராஜா உச்சத்தில் இருந்த போது ஜோடி கட்டிய பாடல்கள் அளவுக்கு மற்றைய இசையமைப்பாளர்களின் இசையில் வந்த இவரது பாடல்கள் அதிகம் அறியப்படவில்லை.

கவிஞர் பொன்னடியான் இசைஞானி இளையராஜா கூட்டணியில் வந்த ஒரு சில நன்முத்துக்களை இங்கே பகிர்கின்றேன்.

சொல்லத்துடிக்குது மனசு, எடிட்டர் லெனின் இயக்கத்தில் வந்த படம். இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் படங்கள் எடுத்துக் கெடுத்த பாவம் லெனினையும் சேரும். சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வந்த பாடல்கள் அத்தனையும் முத்துக்கள். இந்தப் படத்தில் வந்த "குயிலுக்கொரு நிறம் இருக்கு" என்ற மலேசியா வாசுதேவன் பாடலைப் பாடுகின்றார்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கவிஞர் பொன்னடியானுக்கு ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் எழுதவைத்துக் கெளரவம் கொடுத்த பாடம் "ஒருவர் வாழும் ஆலயம்". இந்தப் படத்தின் கதைக்களனும் இசை சார்ந்தது. "உயிரே உயிரே", "மலையோரம் மயிலே", "சிங்காரப் பெண் ஒருத்தி" போன்ற இந்தப் படத்தின் பாடல்கள் வரிசையிலே கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "நீ பெளர்ணமி என்றும் என் நெஞ்சிலே" பாடலும் சிறப்பானது. 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 இசைஞானி இளையராஜாவின் குடும்ப நிறுவனம் "பாவலர் கிரியேஷன்ஸ்" தயாரிப்பில் வந்த படம் "ராஜாதி ராஜா". இருந்தாலும் கங்கை அமரன் தவிர, பிறைசூடனும், பொன்னடியானும் பாடல்களிலே தம் பங்களிப்பை வெளிப்படுத்தினர், குறிப்பாக "எங்கிட்ட மோதாதே" பாடல் அன்றைய எதிராளி சந்திரபோஸ் இற்கு குட்டு வைக்கவும் பயன்பட்டிருக்கலாம் என்று நண்பர்களிடையே அப்போது பேசிக்கொண்டோம். சந்திரபோஸ் தன் பங்கிற்கு "வில்லாதி வில்லனையும் தோற்கடிப்பேன் நான் ராஜாதிராஜனையும் ஜெயிச்சிடுவேன்" என்று பதிலுக்கு பாட்டைப் போட்டார். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 தொண்ணூறுகளிலே முக்கியமான தயாரிப்பாளராக விளங்கி ஏ.ஜி.சுப்ரமணியம் தயாரிப்பில் வந்த படம் "தங்கக்கிளி". வழக்கம்போல அவரது தோல்விப்படங்களில் இதுவும் ஒன்று. காரணம் என்ற இயக்குனராக ஆசைப்பட்ட ராஜவர்மனின் மாமூல் கதை. நடிகர் முரளி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சேர்ந்த கூட்டணி என்றளவில் மட்டுமே இன்றுவரை நினைப்பிருக்கும். இந்தப் படத்திலே வரும் "நினைக்காத நேரமில்லை" பாடல் இலங்கை வானொலிகளில் இன்றளவும் நேசிக்கப்படும் பாட்டு. பொன்னடியான் வரிகளுக்கு மனோ, எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்கள். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ராமராஜனின் இறங்குமுகம் ஆரம்பிக்கும் வேளை வந்த படங்களில் ஒன்று "பாட்டுக்கு நான் அடிமை" இந்தப் படத்தில் வரும் "தாலாட்டு கேட்காத பேர் இங்கு யாரு" ரயில் சத்தம் சந்தம் போட பொன்னடியான் வரிகள் இசைஞானியின் இசையில் மயிலிறகாய். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 எஸ்.பி.பாலசுப்ரமணியம், விஜய்காந்த் அண்ணன் தம்பியாக நடித்த பரதன் படத்தில் வரும் "அழகே அமுதே" பாடல் பொன்னடியானுக்குக் கிடைத்த இன்னொரு முத்து. 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
"என் ராசாவின் மனசிலே" தொண்ணூறுகளில் கொடுத்த பிரமாண்டமான வெற்றி இன்றளவும் மறக்கமுடியாது. வெற்றியில் சம அளவு பங்குபோட்டன இசைஞானி இளையராஜாவின் இனிய பாடல்கள். முரட்டு சுபாவம் உள்ள தன் கணவனை வெறுத்து ஒதுக்கும் அவள், தன் கணவனின் நேசம் உணர்ந்து பாடும் பாட்டு. தம் திருமண பந்தத்தின் அறுவடையாய் தம் வயிற்றில் சுமக்கும் குழந்தையோடு பாடும் இந்தப் பாடலை பொன்னடியான் களம் உணர்ந்து பொருள் கொடுத்து எழுதியிருக்கிறார். பாடலின் வரிகளோடு சீராகப் பயணிக்கும் இசை, சொர்ணலதாவின் குரல் என்று எல்லாமே சரிசமமாக அமைந்த பெருஞ்சுவை. இதே பாடல் இந்தப் படத்தில் மூன்று பாடல்களாக (சோகம் உட்பட) பொன்னடியான் அவர்களால் எழுதப்பட்டிருக்கின்து. அடுத்த தடவை "குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே" பாடலைக் கேட்கும் போது கண்டிப்பாகக் கவிஞர் பொன்னடியானும் உங்கள் நினைப்பில் வருவார். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



Tuesday, August 7, 2012

தமிழ்த்திரையிசையில் "கெளரவ"ப்பாடகர்கள்

தமிழ்த் திரையிசைப்பாடல்களில் வாத்திய இசையோடு கூட்டுக் குரல்களும் வரிகளை உச்சரிக்காது ஆலாபனை செய்யும் வண்ணம் பல பாடல்கள் தொன்று தொட்டு வந்திருக்கின்றன. இன்னும் விசேஷமாக பிரபல பாடகர்களை இந்த இடைக் குரலுக்குப் பயன்படுத்தியது எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்துப் பாணி. எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோரின் பாடல்கள் சில உதாரணமாக விளங்கி நிற்கின்றன. உதாரணமாக பாலிருக்கும் பழமிருக்கும் பாடலை P.சுசீலா பாட, பின்னாலே "ம்ஹும்" என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்பாடல் முழுக்கக் குரல் கொடுத்திருப்பார்.
இன்னும் சொல்லப்போனால் எண்பதுகளில் பிரபல பாடகியாக விளங்கிய எஸ்.பி.சைலஜாவின் அறிமுகமே இப்படியான ஒரு இடைக்குரலாக "மழை தருமோ என் மேகம்" என்ற பாடல் மூலமே ஆரம்பித்தது. இசைஞானி இளையாராஜாவின் இசையில் மலர்ந்த பல பாடல்கள் தான் இவ்வாறான பிரபல பாடகர்களின் இடைக்குரல்களோடு அதிகம் காதுக்கு எட்டுகின்றன. பின்னாளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களில் கோரஸ் பாடியவர்கள் முன்னணிப் பாடகர்களாகவும், அதே குரல்கள் இடைக்குரல்களாகவும் பாடல்களில் விளங்கியிருக்கக் காணலாம்.

இவ்வாறு அமைந்த ஐந்து பாடல்களை கடந்த றேடியோஸ்புதிரில் கொடுத்திருந்தேன். அவற்றோடு இன்னும் சேர்த்து இங்கே பகிரும் இந்த பிரபல பாடகர்களின் கெளரவ இடைக்குரல்களோடு அமையும் பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.
இதே பாங்கில் வந்த பாடல்கள் உங்களுக்கும் தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள்.

பாடல் ஒன்று : மெளனமேன் மெளனமே திரைப்படம்: என் ஜீவன் பாடுது இடைக்குரல்: சித்ரா, முன்னணிக் குரல் மனோ: இசை: இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் இரண்டு : நாரினில் பூத்தொடுத்து மாலை ஆக்கினேன் திரைப்படம்: இரண்டில் ஒன்று இடைக்குரல்: சித்ரா இசையமைத்துப் பாடுகின்றார் இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் மூன்று: அதோ மேக ஊர்வலம் திரைப்படம்: ஈரமான ரோஜாவே இடைக்குரல்: சுனந்தா முன்னணிக்குரல்: மனோ இசை: இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் நான்கு : தீர்த்தக்கரை தனிலே திரைப்படம்: தைப்பொங்கல் இடைக்குரல் ஜென்சி முன்னணிக்குரல்: கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் இசை: இசைஞானி இளையராஜா. இதே பாடலை ஜென்ஸி முழுமையாகப் பாடும் இன்னொரு வடிவமும் உண்டு 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் ஐந்து : மழை தருமோ என் மேகம் திரைப்படம்: மனிதரில் இத்தனை நிறங்களா இடைக்குரல்: சைலஜா முன்னணிக்குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: ஷியாம் 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் ஆறு: சின்னப்புறா ஒன்று திரைப்படம்: அன்பே சங்கீதா இடைக்குரல்: எஸ்.பி.சைலஜா முன்னணிக்குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல்: வானுயர்ந்த சோலையிலே திரைப்படம்: இதயக்கோவில் இடைக்குரல்: எஸ்.ஜானகி முன்னணிக்குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: இசைஞானி இளையராஜா

Sunday, August 5, 2012

றேடியோஸ்புதிர் 66 - லால லாலா லா லா

தமிழ்த் திரையிசைப்பாடல்களில் வாத்திய இசையோடு கூட்டுக் குரல்களும் வரிகளை உச்சரிக்காது ஆலாபனை செய்யும் வண்ணம் பல பாடல்கள் தொன்று தொட்டு வந்திருக்கின்றன. இன்னும் விசேஷமாக பிரபல பாடகர்களை இந்த இடைக் குரலுக்குப் பயன்படுத்தியது எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்துப் பாணி. எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோரின் பாடல்கள் சில உதாரணமாக விளங்கி நிற்கின்றன.
இங்கே நான் தந்திருக்கும் றேடியோஸ்புதிர் பாடல் துளிகளும் அவ்வமயமே, எழுபதுக்குப் பின் வெளிவந்த பிரபல பாடகர்களை இடைக்குரல் ஆலாபனைக்குப் பயன்படுத்திய பாடல்கள். உங்கள் வேலை, இங்கே தரப்பட்ட பாடல்கள் என்ன என்ன, அவற்றில் வந்து கலக்கும் இடைக்குரல் பாடகர்கள் யார் என்பது. எங்கே ஆரம்பிக்கட்டும் போட்டி ;-)



பாடல் ஒன்று பாடல் இரண்டு பாடல் மூன்று பாடல் நான்கு பாடல் ஐந்து


ஓகே மக்கள்ஸ் போட்டி முடிந்தது இதோ பதில்கள்

பாடல் ஒன்று : மெளனமேன் மெளனமே - இடைக்குரல் சித்ரா

பாடல் இரண்டு : நாரினில் பூத்தொடுத்து மாலை ஆக்கினேன்
இடைக்குரல் சித்ரா

பாடல் மூன்று: அதோ மேக ஊர்வலம்
இடைக்குரல் சுனந்தா

பாடல் நான்கு : தீர்த்தக்கரை தனிலே
இடைக்குரல் ஜென்சி

பாடல் ஐந்து : மழை தருமோ என் மேகம்
இடைக்குரல் சைலஜா