Pages

Sunday, December 30, 2018

2018 தமிழ்த் திரை இசை அலசல் 🎧 பாகம் 2 🎸A.R.ரஹ்மான் குடும்பத்தில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர் 🥁

2018 தமிழ்த் திரை இசை அலசல் 🎧

பாகம் 2

🎸A.R.ரஹ்மான் குடும்பத்தில் இருந்து

இன்னொரு இசையமைப்பாளர் 🥁

Attachment.png

அரும்பே அரும்பே.....

என்னைக் கடத்தி போ கரும்பே....

அழும்பே தழும்பே.....

உள்ள கெடத்திப் போ குறும்பே.....

இந்தப் பாடலை எல்லாம் 2018 ஆம் ஆண்டின் திரையிசை அலசலில் குறிப்பிட மறந்தேனானால் ஏகப்பட்டோரின் சாபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். தான் இசையமைத்து நடக்கும் படம் ஹிட் அடிக்கிறதோ இல்லையோ ஒரு பாடலையாவது அந்தந்த ஆண்டுகளின் உச்சப் பாடல்களில் ஒன்றாக வைத்து விடுவார் விஜய் ஆன்டனி. பிச்சைக்காரன் படத்துக்குப் பின் தொடர்ந்து வெற்றிகரமான மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் அவர் நடித்து வெளிவந்த படங்கள் காளி மற்றும் திமிரு புடிச்சவன் இரண்டும் சுமார் ரகத்தில் சேர்ந்து விட்டன.

இருப்பினும் காளி படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியதில்அரும்பே கரும்பேபாடலுக்கு முக்கிய பங்குண்டு.

காளி படப் பாடல்களில்அரும்பே” https://youtu.be/xz5j7PyhYLw பாடல் தவிரநூறாய் யுகம் நூறாய்” https://youtu.be/UqIIpc1jIjg பாடலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. இந்தப் பாடல் தொண்ணூறுகளின் ஹிட் பாடல்களை நினைவுபடுத்தும்.

விஜய் ஆன்டனியின்திமிரு புடிச்சவன்படம் போலவே பாடல்களும் திருஷ்டி பட்டது போல மாயமாகக் கடந்து விட்டன.

காளி படத்தில் இருந்து அடுத்து நிமிர் படத்துக்குத் தாவுவோம். அதாவது இயக்குநர் கிருத்திகா உதயநிதியிடமிருந்து நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு.

நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை..

தந்து வானம் கூத்தாட..

கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை..

வந்து எங்கும் பூத்தாட...

2018 இல் அனேகர் மீளவும் தம் குரலில் பாடி YouTube, Dubsmash போன்ற தளங்களில் வலையேற்றிய பாட்டு. சொல்லப் போனால் 2018 இன் ஆகச் சிறந்த மெலடிப் பாடல் என்று ஒரு விருதுப் போட்டி வந்தால் இந்தப் பாடலும் https://youtu.be/k5xRIKbW2t4 கண்டிப்பாக இடம் பெற வேண்டும். “நிமிர்படத்தில் இந்தப் பாடலோடு மேலுமொரு பாடலானஎப்போதும் உன் மேல் ஞாபகம்” https://youtu.be/btgjtnhHWoE அஜனீஸ் லோக்நாத் இசையில் வெகு அருமையாக வந்திருக்கிறது. மீதி நான்கு பாடல்கள் தர்புகா இசையில் வந்திருக்கிறது. இந்தப் படம் மலையாளத்தில்மகேசிண்ட பிரதிகாரம்என்று வந்த போது அதில் பிரபலமானஇடுக்கிபாடல் தமிழ்நாடு வரை பாய்ந்தது. “பூவுக்குத் தாழ்ப்பா எதுக்கு” https://youtu.be/Bk-4AQIaQpw பாடல் இடுக்கி பாடலுக்கான காட்சியமைப்பில் வந்தாலும் மலையாளம் அளவுக்கு எடுபடவில்லை. இயக்குநர் பிரியதர்ஷன் படங்கள் என்றால் பாடல்களுக்குச் சொல்லவா வேண்டும்? “நிமிர்படம் வணிக ரீதியில் நிமிரா விட்டாலும் பாடல்கள் நிமிர்ந்து கேட்கும் அளவுக்கு நியாயம் செய்திருக்கின்றன.

இசையமைப்பாளர் ரஹ்மான் குடும்பத்தில் அவரின் தந்தை சேகரைத் தொடர்ந்து .ஆர்.ரஹ்மான், ரஹ்மானின் சகோதரி ரெஹானா, ரெஹானாவின் மகன் ஜி.வி.பிரகாஷ்குமார் என்று இசையமைப்பாளர்களாக வரிசை கட்ட 2018 இல் இந்தக் குடும்பத்திலிருந்து புது வரவு இசையமைப்பாளர் .ஆர்.ரஹ்மானின் தங்கை ஃபாத்திமாவின் மகன் A.H.காஷிஃப்காற்றின் மொழிதிரைப்படத்தின் மூலம் இசைமைப்பாளர் ஆனார்.

இருப்பினும் ரஹ்மானுக்கு ரோஜாவோ, ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு வெயிலோ கொடுத்த அளவு இசைத் தாக்கத்தை இவர் வரவு உண்டு பண்ணவில்லை. “போ உறவே” https://youtu.be/tmTsCVM9Wj0 பாடல் மட்டும் .ஆர்.ரஹ்மான் குடும்ப வரவை ஓரளவு நியாயம் செய்தது.

ஹிந்தியில் வந்த Tumhari Sulu படத்தைக்காற்றின் மொழிஆக்கியும், கன்னடத்தில் இருந்து Godhi Banna Sadharana Mykattu படத்தை “60 வயது மாநிறம்என்று தமிழில் எடுத்து இரண்டு படங்களை இந்த 2018 இல் வெளியிட்ட ராதா மோகன் இரண்டிலும் மூல இசையமைப்பாளர்களைப் பயன்படுத்தவில்லை.

“60 வயது மாநிறம்படத்தின் இசை இளையராஜா. இந்தப் பாடல்கள் ராஜா ரசிகர் வட்டத்தோடு நின்று விட்டன.

விக்ரம் பிரபு நடித்து வெளிவரப் போகும்துப்பாக்கி முனைபடத்தில் இடம் பெற்றபூவென்று சொன்னாலும் நீ” https://youtu.be/H8KkvR7XFYQ இனிக்கிறது. L.V.முத்து கணேஷ் இசை வழங்கியிருக்கிறார்.

2018 பொங்கலுக்கு வந்த ஸ்கெட்ச் திரைப்படம் தோல்வியைக் கண்டிருந்தாலும் தமன் இசையில்தென்றல்” https://youtu.be/xa8tHL8PmyY பாடல் இனித்தது. குலேபகாவலி படத்தில்குலேபா” https://youtu.be/QVgSyvzmbxw விவேக் மெர்வின் இசையில் இந்த ஆண்டுக்கான குத்தாட்டம் கொடுத்தது. சந்தோஷ் தயாநிதிமதுர வீரன்படத்துக்காக இசைத்தஉன் நெஞ்சுக்குள்ள் வாழணும்” https://youtu.be/06CgWrY5T7I ரசிக்கலாம்.

வானொலிகளிலும் வலைத்தளங்களிலும் இந்த ஆண்டு அதிகம் உச்சரிக்கப்பட்ட கலாய்ப்பு மொழிஒரு குச்சி ஒரு குல்பி” https://youtu.be/ldAcREbctWQ இதைப் பிரபலமாக்கிச் சொந்தம் கொண்டாடியது கலகலப்பு 2. இதே படத்தில்காரைக்குடி இளவரசி” https://youtu.be/aCDKULGwsps பாடலும் வானொலிகளின் நரம்பைச் சுண்டி இழுத்த பாட்டு. இயக்குநர் சுந்தர் C இன் சமீபத்திய ஆஸ்தான இசையமைப்பாளர் Hiphop தமிழா அரைத்த மாவை அரைத்து புதுசா தோசை ஆக்கியிருக்கிறார்.

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் வழியாக அறிமுகமாகி, 2016 ஆம் ஆண்டில் ஒரு நாள் கூத்து, ராஜா மந்திரி தொடர்ந்து உள்குத்து, காலக்கூத்து என்று அருமையான இசைப் பகிர்வுகளைக் கொடுத்தவர் ஜஸ்டின் பிரபாகரன். யார் கண் பட்டதோ இந்த ஆண்டு வெளியானஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்படத்தின் தலைப்புப் போலவே 2019 இல் ஒரு நல்ல நாளுக்காகக் காத்திருக்கிறார்.

படை வீரன் பாடல்களிலும் பழைய கார்த்திக் ராஜா இல்லை.

தொடர்ர்ர்ரும்

கானா பிரபா

12.12.2018


0 comments: