Pages

Tuesday, February 24, 2009

றேடியோஸ்புதிர் 35 - மூன்று பெரும் கலைஞர்களை ஒரே படத்தில் இயக்கிவர்?

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர்.

வானொலி, தொலைக்காட்சி மூலம் நன்கு அறியப்பட்டவர் இவர். இவரின் சகோதரர் கூட சப்தஸ்வரங்களை அபஸ்வரமாக்காது தருபவர். உடன் பிறந்த சகோதரி நாட்டியத்தில் கொடி கட்டியவர். எல்லாவற்றுக்கும் மேல் இவரின் தந்தை கூட ஒரு காலத்தில் சிறந்த இயக்குனராக இருந்தவர்.

இந்த வானொலி, தொலைக்காட்சிப் படைப்பாளி ஒரு படத்தைத் தானே இசையமைத்து, இயக்கியிருந்தார். கூடவே சிவாஜி, கமல், ரஜினி போன்ற பெரும் தலைகளை ஒரே படத்தில் நடிக்கவும் வைத்திருந்தார். இவர் யார் என்பதே இந்தபுதிரின் கேள்வி, படத்தின் பேர் சொன்னால் மேலதிகமான புள்ளி ;)
கீழே துக்கடாவாக ஒரு பாடல் இடையிசை தருகின்றேன். மேலே சொன்ன உருவங்களை கற்பனை செய்து கண்டு பிடியுங்களேன்.


puthir25.mp3 -

மேற்கண்ட கேள்விக்கான சரியான பதில்.

வானொலி விளம்பரங்கள் மற்றும் வானொலி தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் பிரபலமான எஸ்.வி.ரமணன். இவர் பழம்பெரும் இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் மகன். எஸ்.வி.ரமணனின் சகோதரி பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், மற்றும் சகோதரன் ராம்ஜி, அபஸ்வரம் இசைக்குழு நடத்திப் பிரபலமானவர்,

எஸ்.வி.ரமணன் இயக்கத்தில் "உருவங்கள் மாறலாம்" திரைப்படம் வை.ஜி.மகேந்திரா, சுஹாசினி முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க சிறப்பு வேடங்களில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிக்க வெளிவந்திருந்தது.

30 comments:

Anonymous said...

எஸ்.வி.ரமணன் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் இயக்கிய படம் தெரியவில்லை.

sivaramang.

கானா பிரபா said...

சிவராமன்

நீங்க சொன்ன ஆள் தான் ஆனா படம் தெரியலயா?

பரத் said...

ரகுராம், உருவங்கள் மாறலாம் சரி தானே? :-)

கானா பிரபா said...

பரத்

படம் சரி, ஆள் பேர் பிழை :)

தமிழன்-கறுப்பி... said...

உடன நினைவுக்கு வரல்லை அண்ணன்..பிறகு யோசிச்சு சொல்லுறன்...

VASAVAN said...

He is brother of AV Ramanan

Anonymous said...

உருவங்கள் மாறலாம், எஸ். வி. ரமணன்?

- என். சொக்கன்

கானா பிரபா said...

வாசவன்

நீங்க சொன்ன ஆள் இல்லை, ஆனா பெயர் பொருத்தம் உண்டு :)

கானா பிரபா said...

சொக்கரே

நாலாவது ஆளா வந்து நீங்க தான் சரியா சொன்னீங்

ஸ்ஸ்ஸ் அப்பாடா ;)

Unknown said...

1S.V.ரமணன் 2.உருவங்கள் மாறலாம் 3. பத்மா சுப்ரமணியம்/ராம்ஜி(சிஸ்டர்/பிரதர்)4.பாட்டு: ”வானில் வாழும் தேவதை” 5.பாடியவர்கள் SPB/VJ 6.இவர்களின் அப்பா சுப்ரமணியம்.


இந்த பாட்டு ராஜாவின் “காதல் வானிலே காதல் வானிலே” ஜாடை அடிக்கும்.

தலைவா! அற்புதமான வீணை இசை.
சிம்பிள் MSV டைப் இசை.ராஜாவின்
சாயல்.SPBக்கு இதெல்லாம் வெல்லம்.
கொஞ்சல் பாட்டு.

G3 said...

Kandubidichitaenae..


S V Ramanan :)))


http://www.kalakendra.com/?p=152

G3 said...

oh padam perum sollanuma? uruvangal maaralaam :))

http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=714

T.V.ராதாகிருஷ்ணன் said...

ramanan

கலைக்கோவன் said...

அபஸ்வரம் ராம்ஜி...
உருவங்கள் மாறலாம்.

எல்லாம் ஒரு யூகம் தான்,
சட்டு புட்டுன்னு,
சரின்னு சொல்லுங்க.

குட்டிபிசாசு said...

சென்னை பனகல் பார்க், தி.நகர், எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை....

படம்: உர்ய்வங்கள் மாறலாம்
நபர்: எஸ்.வி.ரமணன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உருவங்கள் மாறலாம்னு ஒரு படம்.. நீங்க சொன்ன க்ளூக்களுக்கு ஒத்து போகுது....

அரவிந்த் said...

படம் உருவங்கள் மாறலாம்..

நபர் தெரியவில்லை..

கோபிநாத் said...

கி கி கி கி கி....;))

Anonymous said...

Movie -Uruvangal Maralam
Director -S.V.ramanan

Urumparai Letty
Surrey BC

கானா பிரபா said...

கே.ரவிஷங்கர்

க‌ல‌க்க‌ல்ஸ்

G3

‍அட‌ நீங்க‌ளுமா :)

டி.வி.ராதாகிருஷ்ண‌ன்

அவ‌ரே தான்

க‌லைக்கோவ‌ன்

;)ச‌ரியான‌ க‌ணிப்பு

கானா பிரபா said...

குட்டிப்பிசாசு

விளம்பரப்படுத்திட்டீங்களே ;)

சுரேஷ்

அதே தான், ஆனா ஆள் யாருன்னு சொல்ல

அரவிந்த்

படம் சரி, ஆள் தெரியலயா

லெற்றி

கலக்கல்

முரளிகண்ணன் said...

எஸ் வி ரமணன்

உருவங்கள் மாறலாம்

நாரத முனி said...

உருவத்த மாத்திக்கிட்டு தான் இதுக்கு நான் பதில் சொல்லணும் கரெக்டா???

Uruvangal maaralaam

நாரத முனி said...

aala sollanumaa abaswaram raamji s.v ramanan kareetaaa

கானா பிரபா said...

தமிழன்

இன்னும் கண்டுபிடிக்கேல்லையா

தல கோபி

சிரிக்காம பதில் சொல்லுங்க

முரளிக்கண்ணன்

சரியான பதில், உங்களுக்கு ஜீஜீபி ஆச்சே

நாரதமுனிவரே

பின்னீட்டிங் ;)

M.Rishan Shareef said...

அடடா..புதிர் போட்டுட்டீங்களா? ஒரு வார்த்தை சொல்லவேணாமா? பாருங்க லேட்டா வந்துட்டேன் :(

நீங்க சொல்றதைப்பார்த்தா எஸ்.சந்திரசேகரைச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.

ஏன்னா சகோதரி பத்மா சுப்ரமணியத்துக்கு எஸ்.பாலகிருஷ்ணன்,கிருஷ்ணசாமி,சந்திரசேகர், சப்தஸ்வரங்கள் தருபவர் என 4 சகோதரர்கள். அவர் இப்போ கனடால இருக்கிறார்னு நினைக்கிறேன்.

படம் பெயர் சரியாத் தெரியலை..

தர்ம ராஜா, மூன்று முத்துக்கள் , தராசு இல்லேன்னா பரீட்சைக்கு நேரமாச்சு.. இப்படி ஏதாச்சும் ஒண்ணாயிருக்கணும்..

புள்ளிகளப் பார்த்துப் போடுங்க தலைவா :)

Sinthu said...

பிரபா அண்ணா, ஆமா என்ன நடக்கிறது இங்க?

கானா பிரபா said...

//Blogger எம்.ரிஷான் ஷெரீப் said...

நீங்க சொல்றதைப்பார்த்தா எஸ்.சந்திரசேகரைச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். //

தல

இந்த வாட்டி ஏமாந்துட்டீங்க, தப்பு

//Blogger Sinthu said...

பிரபா அண்ணா, ஆமா என்ன நடக்கிறது இங்க?//

என்ன நடக்குது சிந்து, எனக்கும் ஒண்டும் தெரியேல்லை :)

Thanjavurkaran said...

அபஸ்வரம் ராம்ஜி


உருவங்கள் மாறலாம்

கானா பிரபா said...

தஞ்சாவூர்காரன்

அபஸ்வரம் ராம்ஜியின் சகோதரர் எஸ்.வி.ரமணன் தான் இப்படத்தை இயக்கியவர்.

பதில் போட்டாச்சு, புதிரில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி