Pages

Tuesday, April 10, 2007

நீங்கள் கேட்டவை



எனது ஒலித்தொகுப்பின் அடுத்த படிநிலையாக, உங்கள் பாடல் தேர்வு விருப்பங்களைத் திருப்தி செய்யும் முகமாக, பிரதி வெள்ளி தோறும் தேர்ந்தெடுத்த ஐந்து நேயர்களின் பாடல்கள் " நீங்கள் கேட்டவை" யாக இடம் பெற இருக்கின்றன. பரீட்சார்த்த முறைப்படி இடம்பெறும் இந்தப் பதிவுகள் உங்கள் ஆதரவைப் பொறுத்து நிரந்தரமாக்கப்படும்.

திரையிசை அன்றும் இன்றும், ஈழத்து மெல்லிசைப் பாடல்கள், எழுச்சி கானங்கள் என்று உங்கள் ரசனைக்கேற்ற பாடலையும் விரும்பிக் கேட்பவர் பெயர்களையும், பிரதி வெள்ளிக்கிழமை காலைக்குள் கிடைக்கக்கூடியதாகப் பின்னூட்டமிடுங்கள். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் அரிய பாடல் பொக்கிஷங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

32 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
"எங்கே சுமந்து போறீரே சிலுவையை நீர் எங்கே சுமந்து போறீரே?" இது ஒரு சீர்காழி பாடிய கிருஸ்தவப் பக்திப் பாடல் 70 க்கு முற்பட்டது. கிடைத்தால் தரவும். வெகுநாளாகத் தேடுகிறேன்.

ramachandranusha(உஷா) said...

பிரபா, ரகசியமாய் எதாவது எழுத இந்தப் பதிவா :-) ஐயா சாமி, இது வேற கணிணி, இதுலையாவது உம்ம ரேடியோ பிரகஸ்பதி தெரியுதான்னு பார்த்தா இதுவும் கருத்த பச்சை பிண்ணனியில், கருப்பு எழுத்துக்கள்.இதை மாற்றாவிட்டால்,
இன்னொரு முறை இந்த பக்கம் வர மாட்டேன்.

மலைநாடான் said...

பிரபா!
யோகன அண்ணையின் தேடலோடு எனக்கும் ஒருபாடல் சேர்த்துக் கொள்ளுங்கோ. இதுவும் ஒரு கிறீஸ்தவகீதம். பாடியது இசையமைத்தது யாரெனத் தெரியாது. பாடல்: "உன்னால் (அல்லது உம்மால்) முடியும் மன்னவரே.."

நேயர் விருப்பம். நல்ல யோசனை.
நன்றி.

கானா பிரபா said...

யோகன் அண்ணா, மலைநாடான்

எடுத்த எடுப்பிலேயே தேடக் கஷ்டமான பாட்டுகளைக் கேட்டிருக்கிறியள், முயற்சி செய்யிறன்.

உஷா

டெம்ப்ளேட் ஏற்கனவே செய்யப்பட்டிருந்ததைத் தான் பயன்படுத்தினேன். எழுத்துக்குப் பொருத்தமான நிறம் ஏதாவது பரிந்துரைத்தால் பரிசீலிக்கப்படும் ;-)

சாதாரணன் said...

பிரபா நான் கேட்கப்போறது ஒரு படப்பாட்டு போட்டால் கோடி புண்ணியம்.
இளையராஜாவின் ஆரம்பகால படங்களில் ஒன்றான "காற்றினிலே வரும் கீதம்"
படப்பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

நீர் றேடியோஸ்பதி என்று பெயர் வைச்சதாலை கேட்கிறன் இதே படப்பாடல்களை
யாழ்நகர் சீலன் கிட்டாரில் இசைத்து எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளியிட்டிருந்தார்
அதுவும் கிடைச்சாப் போடும்.

அன்புடன்
சாதாரணன்

கானா பிரபா said...

சாதாரணன்

இப்போதைக்கு காற்றினிலே வரும் கீதம் பாடல்கள் இந்த வெள்ளிக்கிழமை உங்கள் விருப்பமாகக் கட்டாயம் வரும், யாழ் சீலனது படைப்பைக் காலக்கிரமத்தில் எடுத்துத் தருகின்றேன்.

தமிழ்பித்தன் said...

என்க்கு கமிபா(சிலவேளை பெயரின் உச்சரிப்பு தவறாக இருக்கலாம்) பாடிய "ஈச்சமரத்து இன்பச் சோலையில் நபி நாதரை இறைவன் தந்தான் அந்த நாளை" என்கின்ற பாடல் வேண்டும் பதிவேற்றுவீரா?

கானா பிரபா said...

தமிழ்ப்பித்தன்

நீர் கேட்ட பாட்டுப் பாடியவர் காயல் ஷேக் முகமட்.
நாஹூர் ஹனீபா என்று சொல்ல வந்தீர் போல. இந்த வாரம் உங்கள் தெரிவு வராது, அடுத்த கிழமைக்கு வரும். நாளைய பதிவில் ஏற்கனவே சாதாரணன் கேட்ட பாடல்கள் ஒரு படப்பாடல்களாக வர இருக்கின்றன.

மங்கை said...

ஆஹா பிரபா

இருங்க லிஸ்ட் எடுத்துட்டு வர்ரேன்...

என்ன பாட்டு கேட்டாலும் முடிந்தவரை கிடைக்குமில்ல?...

சரி இப்ப உடனே நியாபகம் வர்ரது 'அவள் அப்படித்தான்' படத்தில

1)அங்குமிங்கும் பாதை உண்டு, இதில் நீ எந்தப்பக்கம்...

2)உறவுகள் தொடர்கதை ..

வாய்பிக்கு நன்றி பிரபா..:-)

G.Ragavan said...

பிரபா, நான் பல கதவுகளைத் தட்டி விட்டேன். ஆனால் உறுதியான பதில் கிடைக்கவில்லை. ஆகையால் இங்கும் கதவைத் தட்டுகிறேன்.

காற்றினிலே வரும் கீதம் திரப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் என்ற பாடல். அது படத்தில் வாணி ஜெயராம் குரலில் அமானுஷ்யமாகவும் ஜானகியின் குரலில் காதற்றுள்ளலோடும் வரும். அதே பாடலை பி.சுசீலாவின் குரலில் இளையராஜா பதிவு செய்ததாகவும்...அது திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்றும் சொன்னார்கள். அது உண்மையா? உண்மையென்றால் அந்தப் பாடலும் கேட்கக் கிடைக்குமா? அது உண்மையென்றால் ஒரே பாடலை மூன்று பிரபலபாடகிகள் மூன்று விதமாகப் பாடியிருப்பது என்பது ஒரு அபூர்வ நிகழ்ச்சியே.

கானா பிரபா said...

வாங்க மங்கை ;-)

பாடல் சேகரிப்பது, குறிப்பாக அரிய பாடல்கள் சேகரிப்பது என் பொழுதுபொக்கு, அதனால் தான் இந்த ஐடியாவே வந்தது. அவள் அப்படித்தான் முழுப்பாடல்களும் என்னிடம் உண்டு. உறவுகள் தொடர்கதை ஏற்கனவே ஒலியேற்றிவிட்டேன், பார்க்கவும்.

உங்கள் அடுத்த தெரிவு வரும் வெள்ளிக்கிழமை வரும்.

கானா பிரபா said...

வணக்கம் ராகவன்

என்னிடம் வாணி ஜெயராம், மற்றும் ஜானகி பாடியவை கைவசம் உண்டு, அவை நாளைய பதிவில் வரும். சுசீலா பாடியதாக நானும் அறிந்தேன், இந்த வாரம் வீ.சி.டி எடுத்துப் பார்த்து உறுதிப்படுத்திக் கிடைத்தால் அடுத்த வாரப்பதிவில் தருகின்றேன்.

கானா பிரபா said...

//மங்கை said...
சரி இப்ப உடனே நியாபகம் வர்ரது 'அவள் அப்படித்தான்' படத்தில 1)அங்குமிங்கும் பாதை உண்டு, இதில் நீ எந்தப்பக்கம்... //


இந்தப்பாடல் வந்தது அவர்கள் படத்தில், அவள் அப்படித் தான் படத்தில் அல்ல, அடுத்த வார நீங்கள் கேட்டவைத் தெரிவில் வரும்.

Deiva said...

I want the song "Katrukkenna veli" from Avargal.

கானா பிரபா said...

வணக்கம் தெய்வா

காற்றுக்கென்ன வேலி அருமையான பாடல். ஜானகியின் குரலில் வந்து. அடுத்த பதிவில் கட்டாயம் வரும்.

சயந்தன் said...

கானாண்ணை.. எனக்கு அவசரமாக அமுத மழை பொழியும் ஒரு இரவிலே.. ஒரு அழகுச் சிலை.. என்ற பாடல் (எந்த படம் யார் பாடியது என்று எதுவும் தெரியாது வேண்டுமென்றால் பாடிக் காட்டலாம்) தேவைப்படுகிறது. ஓர்டரில கியுவில வந்தா தான் தருவன் எண்டு சொல்லாமல் கெதியா தர முடியுமோ..?

கானா பிரபா said...

இப்ப இங்கை நேரம் அதிகாலை 2.44 மணி, சாமத்தில எல்லாம் பாட்டுக்கேட்குது சனம், சரி சரி போடுறன் ;-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

எனக்கும் நிறையப் பாட்டுக்கேக்க பட்டியல் இருக்கு. ஆனால், இந்தப் பாட்டைத் தேடியெடுத்துத் தந்திட்டீங்களெண்டால் நீங்கள்..

நீங்கள்... பெரியவர்! ஒத்துக்கொள்ளுவன். :)

சரிசரி, சகல மரியாதைகளோடயும் கேக்கிறன்.

பாரதியாரின்ர பாட்டொண்டை உன்னிக்கிருஷ்ணன் பாடியிருக்கிறேராம்.

பாரதியாரின்ர எந்தப் பாட்டைத்தான் உன்னி பாடேல்ல எண்டு சொல்லாமக் கொஞ்சம் தேடிப்பிடிச்சுக் குடுத்தா போற இடத்துக்குப் புண்ணியம் கிடைக்கும். பாட்டையே நான் இங்க முழுக்கத் தாறன். (எல்லாம் ஒரு சுயமோகந்தான். ;) )

---

பச்சைக் குழந்தை யடி கண்ணிற்
பாவை யடி சந்திரமதி
இச்சைக் கினிய மது; - என்றன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே - நல்ல
நாகமணி யுள்ள தென்பார்;
துச்சப்படு நெஞ்சிலே - நின்றன்
சோதி வளரு தடீ!

பேச்சுக் கிடமே தடி! - நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சரிய மாயை யடி! - என்றன்
ஆசைக் குமரி யடி!
நீச்சு நிலை கடந்த - வெள்ள
நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல்,
தீச்சுடரை வென்ற வொளி - கொண்ட
தேவி! நினை விழந்தே னடி!

நீலக் கடலினிலே - நின்றன்
நீண்ட குழல் தோன்று தடி!
கோல மதியினி லே - நின்றன்
குளிர்ந்த முகங் காணு தடி!
ஞால வெளியினி லே - நின்றன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே - நின்றன்
காதல் விளங்கு தடி!

---


பிரபா, உண்மையாவே இந்தப் பாட்டுக் கிடைச்சால் மதி. உன்னிக்கிருஷ்ணன் எனக்குப் பிடித்த பாடகர்வேற. கர்நாடக சங்கீதம் + திரையிசை இரண்டிலும்..

-மதி

வெற்றி said...

கா.பி,
நான் ஒரு பாடலை இணையத்தளம் முழுக்கத் தேடி அலுத்துவிட்டது. Musicindiaonline.com தான் நான் இசை கேட்கும் தளம். அங்கும் நான் தேடும் பாடல் இல்லை.

உங்களிடம் இருந்தால், தயவு செய்து அப் பாடலை எனக்காக இணைக்க முடியுமா?

பாடல் இது தான்:
"அவள் ஒரு மேனகை.
என் அபிமானத் தாரகை"

பாடியவர் பாலசுப்பிரமணியம் என நினைக்கிறேன். பாடல் இடம் பெற்ற படம் எனக்குத் தெரியாது.

மிக்க நன்றி.

கானா பிரபா said...

//மதி கந்தசாமி (Mathy) said...
நீங்கள்... பெரியவர்! ஒத்துக்கொள்ளுவன். :)//

உப்பிடிப் பப்பாவிலை ஏத்தி ஏத்தித் தான் என்ர நிலை ரணகளமா ஆயிட்டுது. எனக்கு சோதனை குடுத்து அருள வந்திருக்கிறள் போல. தேடிப்பார்த்துத் தருகிறேன்.
உன்னிகிருஷ்ணன் பாடிய பாரதி பாடல் தொகுப்பு என்னிடம் இசைத்தட்டாக இருக்கிறது.

கானா பிரபா said...

// வெற்றி said...
இல்லை.

உங்களிடம் இருந்தால், தயவு செய்து அப் பாடலை எனக்காக இணைக்க முடியுமா?

பாடல் இது தான்:
"அவள் ஒரு மேனகை.
என் அபிமானத் தாரகை"//

வெற்றி

உந்தப் பாட்டையே இவ்வளவு நாள் தேடினியள், ஜுஜுப்பி. என்னிடம் இருக்கிறது. படம் நட்சத்திரம் பாடியவர் எஸ்.பி.பாலா. இசை சங்கர் கணேஷ்.அடுத்தவாரப்பதிவில் கட்டாயம் வரும்.

Anonymous said...

பிரபா, நல்ல சேவை ஒன்றைத் தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

SurveySan said...

என் விருப்பமா "என் காதலி யார் சொல்லவா" SPBயின் பாட்டையும் சேத்துக்கோங்கோ.

Anonymous said...

கானாபிரபா அண்ணா...நல்ல சேவை...வாழ்த்துக்கள்...எனக்கும் பாட்டு வேணும்னா வந்து கேட்கின்றேன்..

//எந்த படம் யார் பாடியது என்று எதுவும் தெரியாது வேண்டுமென்றால் பாடிக் காட்டலாம்)//

அதை இங்க வேறு செய்யணுமா?? பாவம் கானாபிரபாண்ணா ஏதோ நல்லது செய்யணும்னு செய்றாங்க..ஏன் அவர பயமுறுத்துறிங்க..

கானா பிரபா said...

சிறீ அண்ணா வாழ்த்துக்கு நன்றி

சர்வேசன்

நீங்கள் கேட்ட பாட்டு தங்கத்திலே வைரம் படத்தில் ஜேசுதாஸ், எஸ்.பி.பி பாடியது. கட்டாயம் வரும்.

கானா பிரபா said...

//தூயா said...
கானாபிரபா அண்ணா...நல்ல சேவை...வாழ்த்துக்கள்...எனக்கும் பாட்டு வேணும்னா வந்து கேட்கின்றேன்..

//எந்த படம் யார் பாடியது என்று எதுவும் தெரியாது வேண்டுமென்றால் பாடிக் காட்டலாம்)//

அதை இங்க வேறு செய்யணுமா?? பாவம் கானாபிரபாண்ணா ஏதோ நல்லது செய்யணும்னு செய்றாங்க..ஏன் அவர பயமுறுத்துறிங்க.. //

தூயா தங்கச்சி

வாழ்த்துக்கு முதலில் நன்றிகள். உவை எல்லாருக்கும் அண்ணையோட ஒரு சேட்டை கண்டியளோ

கோபிநாத் said...

ஆஹா...தலைவா சூப்பர் மேட்டரு (இதை எப்படி இத்தனை நாளா பார்க்காம விட்டேன்)

ராசாவின் எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும். குறிப்பாக நீங்கள் வைத்திருக்கும் தலைப்பில் ஒரு படம் உள்ளது.
அதான் "நீங்கள் கேட்டவை" - பாலுமகேந்திராவின் இயக்கத்தில், தியாகராஜன் நடிப்பில் வந்த படம்.

அதில் ஒரு அருமையான பாடல் உள்ளது.
"பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா"ன்னு ஜோசுதாஸ்சும், ஜனாகி அம்மாவும் தனித்தனியாக பாடி இருப்பாங்க அந்த பாடல் எனக்கு வேண்டும்.

கானா பிரபா said...

//கோபிநாத் said...
குறிப்பாக நீங்கள் வைத்திருக்கும் தலைப்பில் ஒரு படம் உள்ளது.
அதான் "நீங்கள் கேட்டவை" - பாலுமகேந்திராவின் இயக்கத்தில், தியாகராஜன் நடிப்பில் வந்த படம்.//


வாங்க தல

பதிவின் தலைப்பிலேயே பாடல் கேட்கிறீங்களே. கட்டாயம் வரும்
;-)

Anonymous said...

"காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்"

இந்தப் பாட்டு இருக்கிறதா??
படம் தெரியவில்லை..

பட்டுக்கோட்டை பாடல் என்று மட்டும் தெரியும்!

மற்றது (...ஒன்றுதான் கேட்கலாமோ?!)
சரி மேலுள்ள பாட்டுக்
கிடைத்தால் போடுங்கள்.
மிக்க நன்றி

கானா பிரபா said...

வணக்கம் ஒரு பெடிச்சி

ஒன்றுக்கு மேல் பாடல் கேட்கலாம். ஒரு பதிவில் ஒரு நேயருக்கு ஒரு பாடல், மற்றையவை எதிர்வரும் பதிவுகளில் வரும். நீங்கள் கேட்ட பாடல் கட்டாயம் வரும். ஒரு வாரம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

Thillakan said...

எனக்கும் பாட்டு வேணும் ,

1. கடலினக்கரை போனோரே
2. வெள்ளி நிலா விளக்கே....
இப்ப ரண்டு பிறகு மிச்சம்

கானா பிரபா said...

திலகன்

நீங்கள் கேட்ட இரண்டு பாடல்களுமே கைவசம் இருக்கின்றன, ஒருவாரம் பொறுத்துக்கொள்ளுங்கள்.