Pages

Wednesday, April 18, 2007

ஒரு படப்பாடல் - மூன்று முடிச்சு


இன்றைய ஒரு படப்பாடல் பகுதியிலே வடுவூர் குமார் என்ற நேயர், நீங்கள் கேட்டவை பகுதியில் கேட்டிருந்த மூன்று முடிச்சு திரைப்படப்பாடல்கள், அப்பாடல்களின் அறிமுகத்தோடு இடம்பெறுகின்றன.

இத்திரைப்படத்தில் இருந்து ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் ஜோடிக்குரலில் வசந்தகால நதிகளிலே, ஆடிவெள்ளி தேடியுன்னை ஆகிய பாடல்களும், எல்.ஆர்.ஈஸ்வரி பி.சுசீலா குரல்களில் நானொரு கதாநாயகி என்ற பாடலும் அணிசெய்கின்றன.


என் குரற்பதிவில் மூன்று முடிச்சு பாடல்கள் குறித்த அறிமுகம்


பாடல்களைக் கேட்க

11 comments:

மாசிலா said...

அருமையான சேவை கானா பிரபா.
தொடரவும்.

கானா பிரபா said...

மிக்க நன்றி மாசிலா

G.Ragavan said...

மிகவும் அருமையான படம். அருமையான பாடல்கள். மூன்று பாடல்களுமே முத்துகள். அதிலும் வசந்தகால நதிகளிலே என்ற பாடல். முதலில் ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் அந்தாதியாகப் பாடிக்கொண்டு வர...மென்மையாகச் செல்லும் பாடல். கமல் தண்ணீரில் வீழ்ந்ததும் மெல்லிசை மன்னரின் குரலில் மனவினைகள் யாருடனோ என்று பாடுகையில் புதுப்பரிமாணம் பெறும். அதே போல ஆடிவெள்ளி பாடலும் மிக இனிமையானது. அவளொரு கதாநாயகியும் என்னுடைய விருப்பப் பாடல்களில் ஒன்று.

இதுதான் கதாநாயகியாக ஸ்ரீதேவிக்கு முதற் படம். இதற்குப் பிறகு வந்ததுதான் 16 வயதினிலே.

பாரதிய நவீன இளவரசன் said...

நன்றி. நன்றி. நன்றி.

70களில் அருமையான படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்த பாலச்சந்தரரது அற்புதமான படைப்பு இந்தப் படம். நாயகன் கமல் சற்று நேரமே வந்தாலும் (இடைவேளை வரை) பல பெண் ரசிகர்களை அந்த காலகட்டத்தில் கவர்ந்தார் என்பது உண்மை. நம் ரஜினி இயல்பாக நடித்த ஒருசில படங்களில் இதுவும் ஒன்று. படத்தின் மிகப் பெரிய சிறப்பம்சமாக நான் கருதுவது, ஸ்ரீதேவியின் நடிப்புதான். ஜெயச்சந்திரன் இரண்டு பாடல்களில் நம் மனதில் நிற்கிறார்.

இது ஒரு கருப்பு வெள்ளைக் காவியம்.

கானா பிரபா said...

வணக்கம் நண்பரே

ஒரு காலத்தில் காதல் மன்னன் என்று ஜெமினி இருக்க, காதல் இளவரசனாக கமல் இருந்ததும் நினைவில் நிறுத்தத் தக்கது.

ரஜினியோடு மனச்சாட்சியாக வரும் நட்ராஜ் பாத்திரமும் சிறப்பானது இப்படத்தில்.

உண்மை தான் கறுப்பு வெள்ளைக் காவியம்.

ஷைலஜா said...

எனக்குப்பிடிச்ச படம் இது. கமல் ரஜனி ஸ்ரீதேவி கலக்கிருப்பாங்க, டீக்ஹை?! நல்ல சேவை ப்ரபா நீங்க செய்வது நன்றி சொல்ல வார்த்தைஇல்ல.
ஷைலஜா

கானா பிரபா said...

வாங்க ஷைலஜா

என்னது நன்றின்னு பெரிய வார்த்தையெலாம்,
பாட்டுக் கேளுங்க கொடுக்கிறோம் ;-)

கானா பிரபா said...

//G.Ragavan said...
மிகவும் அருமையான படம். அருமையான பாடல்கள். மூன்று பாடல்களுமே முத்துகள்.கமல் தண்ணீரில் வீழ்ந்ததும் மெல்லிசை மன்னரின் குரலில் மனவினைகள் யாருடனோ என்று பாடுகையில் புதுப்பரிமாணம் பெறும். //

வணக்கம் ராகவன்

என்ன காரணமோ தெரியவில்லை, உங்கள் பின்னூட்டம் பிந்தித்தான் வந்தது :-(

சொல்லப்போனால் ரஜினி வாயசைத்த முதல் பாட்டுக்கு குரல் கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.வி.
அதாவது "மணவினைகள் யாருடனோ" என்ற வரியைக் குறிப்பிட்டேன்.

G.Ragavan said...

// வணக்கம் ராகவன்

என்ன காரணமோ தெரியவில்லை, உங்கள் பின்னூட்டம் பிந்தித்தான் வந்தது :-( //

இருக்கட்டும் ப்ரபா. பிந்தி வந்தாலும் பின்னூட்ட வரிசையில் முந்தி இருப்பதைப் பாருங்கள். :-)

// சொல்லப்போனால் ரஜினி வாயசைத்த முதல் பாட்டுக்கு குரல் கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.வி.
அதாவது "மணவினைகள் யாருடனோ" என்ற வரியைக் குறிப்பிட்டேன். //

ஆமாம். ரஜினிக்கு முதலில் பாடியவர் மெல்லிசை மன்னர்தான். இந்தப் படத்திற்குப் பிறகுதான் பதினாறு வயதினிலே எல்லாம் வந்தது.

வடுவூர் குமார் said...

எப்படி இந்த பதிவு கண்ணில் படாமல் போனது என்று தெரியவில்லை.
ஊருக்கு போய் கொண்டிருக்கும் கனவில் இருந்திருப்பேன் போலும்.
என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றியதற்கு நன்றி பல.

கானா பிரபா said...

வாங்க வடுவூர்க்காரரே

இப்பவாவது இந்தப்பதிவு உங்க கண்ணில் பட்டுதே அதுவே எனக்குப் போதும் ;-)