கடந்த றேடியோஸ்புதிர் 16 இல் ஒரு பின்னணி இசை கொடுத்து அந்த இசை நினைவுபடுத்தும் பாட்டு எது என்று கேட்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் "கண்கள் இரண்டால்" என்ற பாடலைக் கண்டுபிடித்துச் சொல்லியிருந்தீர்கள்.
இன்றைய பதிவில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ஒலிப்பேட்டி இடம்பெறுகின்றது. இந்தப் பேட்டியை கடந்த ஆகஸ்ட் 8, 2008 இல் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் வழங்கியிருந்த நிகழ்ச்சியின் போது எடுத்திருந்தேன்.
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை காலத்துக்கு காலம் இளைய தலைமுறையினர் புதுப் புது சிந்தனைகளோடு தம் திறமையை நிலை நாட்டி தமக்கென்று தனியிடத்தைப் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் திறமைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அதுவே எந்தக் காலத்திலும் ஒரு திறமைசாலியை அடையாளப்
படுத்தி விடும். அதற்கு உதாரணம் தான் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சுப்ரமணிய புரம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள்.
கிட்டத்தட்ட 14 வருஷங்கள் செய்த தவம், இந்த திரைப்பட இசையமைப்பாளர் என்ற கனவு அது நிறைவேறியிருக்கு, அத்தோடு எடுத்த எடுப்பிலேயே உங்களின் முதல் படத்தின் பாடல்கள் வேறு பெரும் பிரபலம் பெற்று விட்டன.
ஒரு சம்பிரதாயபூர்வமான கேள்வியோடே ஆரம்பிக்கின்றேன், இசைஞானத்தை நீங்கள் தேடிப் பெற்றது எப்படி அதாவது உங்கள் ஆரம்ப கால வாழ்வியலை சொல்லுங்களேன்.
சென்னைக்கு வந்தீர்கள் கிட்டத்தட்ட 14 வருஷங்கள் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படைப்பாளியாக இருந்தீர்கள். அவையெல்லாம் எவ்வளவு தூரம் உங்களுக்கு திருப்தியைக் கொடுத்தன?
இடைப்பட்ட இந்த 14 வருஷங்களில் நீங்கள் இசையமைப்பாளராக வரவேண்டும் என்று முயற்சி செய்யவில்லையா?
சுப்ரமணியபுரம் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
நீண்ட நாள் இசைக்கனவோடு வாழ்ந்து வந்த நீங்க இந்தப் படத்துக்காக போட்ட மெட்டுக்கள் ஏற்கனவே உங்கள் மனதில் கருக்கட்டி இருந்தவையா அல்லது இயக்குனர் கதைச் சூழலைச் சொன்னபோது உருவானவையா?
இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு சில நடிகர்களைத் தவிர மற்ற எல்லோரும் புதுமுகங்கள், அதைப் போல உங்கள் பாடல்களிலும் சங்கர் மகாதேவன் தவிர்ந்த அனைவருமே இப்போது தான் வந்த பாடகர்கள், இது எதிர்பாராமல் அமைந்த விடயமா?
முதல் படம் பெருத்த வெற்றியையும் ஒரு எதிர்பார்ப்பையும் உங்களுக்கு கொடுத்திருக்கு இதை எப்படி உணர்கின்றீர்கள்
ரீதிகெளளா ராகத்தில் அமைந்த கண்கள் இரண்டால் பாடல் மிகவும் சிறப்பா அமைஞ்சிருக்கு, இந்த ராகத்தில் பாடல் போடவேண்டும் என்ற ஆசை இருந்ததால் தான் இது அமைந்ததா?
இப்படியான கேள்விகளுக்கு சுப்ரமணிய புரம் திரைப்படத்தின் பாடல்கள் பிறந்த கதையோடு திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் கொடுத்திருந்த 28 நிமிட ஒலிப்பேட்டி இது
தரவிறக்கிக் கேட்க
சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் பின்னணி இசை ஒன்று
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
பேட்டியை நாங்களும் கேட்டோம்ல.
படமும் பார்த்துவிட்டேன்.
இசை கலக்கியிருக்கிறார்.
நீங்கள் பேட்டி கண்ட விதமும் அருமையா இருந்தது.
வாழ்த்துக்கள் உங்களுக்கு, ஜேம்ஸ் வசந்தனுக்கும்.
அருமையான இசை இவருடையது.
இசை உலகில் தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் !
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பர் கானாபிரபா :)
மிக்க நன்றி பிரபா!
அருமையான பேட்டி.
ஆனால் தரவிறக்கினால் பேட்டி பகுதி கேட்கவில்லை .ஏதும் கோளாறா?
நான் கேட்டேன்!
கேட்கிறேன்!
நன்றி!
கானா வானொலி மன்றம்
கத்தார்!
நானும் கேட்கிறேன். கேட்கிறேன். கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
கானா வானொலி மன்றம்
கத்தார்!
//ஜோ / Joe said...
மிக்க நன்றி பிரபா!
அருமையான பேட்டி.
ஆனால் தரவிறக்கினால் பேட்டி பகுதி கேட்கவில்லை .ஏதும் கோளாறா?//
கேட்டு தங்களின் கருத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி ஜோ
தரவிறக்க இணைப்பில் கோளாறு இருந்தது. இப்போது சரிசெய்து விட்டேன். இப்போது நீங்கள் இதை கணினிக்கு இறக்கலாம்.
பிரபா வானொலி மன்றம் ஹைதையில் தொடங்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம்.
(இணைந்து வழங்குவோர் இலக்கம்35, செட்டியார் தெரு, கொழும்புவைச் சேர்ந்த அம்பிகா ஜுவல்லர்ஸ்)
வாங்க புதுகைத் தென்றல்
கடந்த வெள்ளி நம்ம வானொலி நிகழ்ச்சியின் நேரடி அஞ்சலிக் கேட்டிருந்தீர்கள் இல்லையா?
மிக்க நன்றி
சங்கம் எல்லாம் வேண்டாம்லா ;)
வருகைக்கு நன்றி ரிஷான்
நீங்க சாட்டில் சொன்னதையும் செய்கிறேன் .
நல்ல பேட்டி. உங்கள் இருவரின் தமிழைக் கேட்கவே இன்பமாக இருந்தது. james vasanthan அளவுக்கு இனிய தமிழில் பேசக்கூடிய தமிழ் இசையமைப்பாளர் வேறு யாரும் இருக்கிறார்களா???
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பர் கானாபிரபா
இந்தப் பின்னணி இசை கேட்க கேட்க ரெம்ப நல்லாயிருக்கு
நான் இன்னமும் படம் பார்க்கவில்லை:(
பாடல்கள் கேட்டிருக்கிறேன்.....சூப்பர்!
பேட்டி நன்றாக வந்திருக்கிறது.....வாழ்த்துக்கள்!
மனசில் உங்களை ஒரு உயர்ந்த இடத்தில் வச்சிட்டதால....எல்லோர் மாதிரியும் மன்றம் வைக்கல!
// ஆயில்யன் said...
நான் கேட்டேன்!
கேட்கிறேன்!//
வாங்க ஆயில்யன்
கடந்த வெள்ளி வானொலியை கட்டாரில் இருந்து கேட்டதற்கும் நன்றி ;)
//ரவிசங்கர் said...
நல்ல பேட்டி. உங்கள் இருவரின் தமிழைக் கேட்கவே இன்பமாக இருந்தது. james vasanthan அளவுக்கு இனிய தமிழில் பேசக்கூடிய தமிழ் இசையமைப்பாளர் வேறு யாரும் இருக்கிறார்களா???//
மிக்க நன்றி ரவி சங்கர்
ஜேம்ஸ் வசந்தன் தமிழ் பேசு தங்க காசு நிகழ்ச்சி கூட படைத்தவராயிற்றே. என்னைப் பொறுத்தவரை ஒரு இசையமைப்பாளரை பேட்டி எடுப்பது இது தான் முதற்தடவை. இளையராஜா, மெல்லிசை மன்னர் அழகு தமிழில் கூட பேசுவார்களே.
//Anonymous Gnana Raja said...
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பர் கானாபிரபா//
மிக்க நன்றி ஞான ராஜா
//புகழன் said...
இந்தப் பின்னணி இசை கேட்க கேட்க ரெம்ப நல்லாயிருக்கு//
ஆமாம் கலக்கல் இசை அல்லவா
// நிஜமா நல்லவன் said...
நான் இன்னமும் படம் பார்க்கவில்லை:(//
மிக்க நன்றி நிஜமா நல்லவரே
திறமை இருப்பவரிடம் தலைக்கனம் இருக்கக்கூடாது.. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் பங்குபெறும் "ஹரியுடன் நான்.." என்ற ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா?.. அதில் பங்கு பெறுகிற போட்டியாளர்களை ஒருமையில் இழிவாகவும், கேவலமாகவும் விமர்சிக்கும் திரு.ஜேம்ஸ் வசந்தன் ஒரு நல்ல இசைஅமைப்பாளராக இருப்பதுடன் நல்ல மனிதராக இருக்க முயற்சி செய்யட்டும்.. திரு.எஸ்.பி.பி. அவர்கள் நடத்துகிற "என்னோடு பாட்டு பாடுங்கள்" நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. அவர்கள் போட்டியாளர்களை விமர்சிக்கும்போது போட்டியாளர்களை மிக மரியாதையுடன் அழைத்து தவருகையும் மிக நாகரிகமான முறையில் எடுத்துச் சொல்வார்.. திரு.ஜேம்ஸ் வசந்தனைப் போல "என்ன பாடற நீ?.." நீயெல்லாம் எதுக்கு இங்க வந்திருக்க?" "இதெல்லாம் ஒரு பாட்டா?.." என்றெல்லாம் விமர்சிக்க மாட்டார்.. அதனால் திரு.ஜேம்ஸ் வசந்தன் அவர்களே.. நீங்கள் இசை அமைப்பது இருக்கட்டும்.. முதலில் மரியாதையாக நாகரிகமாகப் பேசுவது எப்படி.. என்று கற்றுக் கொள்ளுங்கள்..
Post a Comment