தன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் இந்தக் கவிஞர் இப்படிக் கூறுகின்றார்."இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.
நான் தயாரித்த திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.
இரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா."
இந்த இரண்டு படங்களில் ஒன்றைத் தயாரித்த அந்தக் கவிஞர் யார்?
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு புகைப்படங்களில் இருக்கும் முரளி ஒரு படத்திலும், மற்றைய படத்தில் ரமேஷ் அரவிந்தும் நடித்திருந்தார்கள். இங்கே சொன்ன கவிஞர் வைரமுத்து கிடையாது. இந்தக் கவிஞர் தயாரித்த படத்தின் தலைப்பின் ஒரு பகுதியை ஒரு வலைப்பதிவர் தன் ஊர்ப்பெயருடன் இணைத்து தன் பெயராக வைத்திருக்கின்றார். இவை தான் உதவிக் குறிப்புக்கள்.
எங்கே...Ready....Start
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
mu. metha ?
முரளிக்கண்ணன்
இரண்டு தடவை சரியான பதிலைச் சொல்லியிருக்கீங்க ;)
இந்த வாரம் எனக்கு உடம்பு சரியாயில்ல அதனால நான் லீவு!
:(
அந்தப்பாடலாசிரியர் மு.மேத்தா...!
மு. மேத்தா - தென்றல் வரும் தெரு ... சரியா? :)
N. Chokkan,
Bangalore.
Rishan & N.Chokkan
correct answer
அண்ணன் தெரியலை அண்ணன் அப்புறமா யோசிச்சு சொல்றேன்...:)
மு.மேத்தா
ரமேஷ் அர்விந்த நடிச்ச படம் - தென்றல் வரும் தெரு
பதிவர் நம்ம புதுகை தென்றல் அக்கா!
:)))
தல
கவிஞர் பெயர் மு.மேத்தா
இந்தமுறை கேள்வியில் ஆப்பு வச்சதால் இதுவரை 5 பேர் தான் தேறியிருக்கிறார்கள்.
பிரபா,சரியான பின்னூட்டத்தையும் வெளில விடுங்க.அப்போதானே நாங்களும் சொல்லிப் பாக்கலாம்.ஒரு தரமாவது நானும் சரியாச் சொல்ல வேணும்.ரமேஷ் அரவிந் படம் ஞாபகம் வந்து வந்து போகுது.சரியாக ஞாபகம் வராதாம்.
கவிஞர் வாலி, கேளடி கண்மணி
சின்ன அம்மணி
உங்கள் பதில் தவறு, வாலி கேளடி கண்மணியை தயாரிக்கவும் இல்லை.
Mu.Metha
நாகூர் இஸ்மாயில் சரியான கணிப்பு
நாகூர் இஸ்மாயில் சரியான கணிப்பு
கவிஞர்: மு.மேத்தா
பாடல்-1: தென்றல் வரும் தெரு
(படம்: சிறையில் சில ராகங்கள்,
நாயகன்: முரளி)
பாடல்-2: தென்றல் வரும் தெரு
(படம்: தென்றல் வரும் தெரு,
நாயகன்: ரமேஷ் அரவிந்த்)
படம் உன்னால் முடியும் தம்பின்னு யூகிக்க முடியுது. ஆனா கவிஞர் யாருன்னு தெரியலையே
ஒருவேளை கவிஞர் முத்துலிங்கமா இருக்குமோ
நிலாக்காலம்
நீங்க விபரமாவே சொல்லீட்டீங்க
சின்ன அம்மணி
மீண்டும் தவறு ;)
போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ;)
சரியான பதில் கவிஞர் மு.மேத்தா
Post a Comment