Pages

Monday, August 25, 2008

கவிஞர் மு.மேத்தாவின் "தென்றல் வரும் தெரு"

தன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுகின்றார்."இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.

நான் தயாரித்த "தென்றல் வரும் தெரு" திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.

இரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. "தென்றல் வரும் தெரு அது நீ தானே" என்ற பாடல் வரிகளை முதல் அடியாகக் கொண்டு "சிறையில் சில ராகங்கள்" திரைப்படம் 1990 இல் வெளியானது. அது நடிகர் முரளி, பல்லவி நடிப்பில் வெளியானது.அடிகள் பயன்பட்ட மு.மேத்தாவின் தயாரிப்பில் வந்த "தென்றல் வரும் தெரு" ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடிப்பில் வெளியானது. நான்கு ஆண்டுகள் கழித்து 1994 இல் வந்து படம் வெளிவந்த சுவடே தெரியாமல் வந்த வேகத்தில் ஓடிய படம் அது.

கடந்த றேடியோஸ்புதிரில் பலருக்கு தாவு தீர வைத்த கேள்வியின் விளக்கம் தான் மேலே சொன்னது.

"தென்றல் வரும் தெரு" திரைக்காக மனோ, மின்மினி பாடும் "தென்றல் வரும் தெரு அது நீ தானே""சிறையில் சில ராகங்கள்" திரைக்காக கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "தென்றல் வரும் தெரு அது நீ தானே"

11 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கேட்டிருக்கேன் ஆனா நியாபகத்துல இல்லாத பாட்டுஇதெல்லாம்..
எப்படியோ ஒரு போட்டியில் நாங்க ஜெயிச்சா .. ஒரு போட்டியில் நீங்க ஜெயிக்கிறீங்க.. நல்லா போயிட்டிருக்கு.. :)

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ஆயில்யன்

முத்துலெட்சுமி

இதுக்கு எல்லோரும் சுலபமா சொல்லுவாங்கன்னு தான் நான் நினைச்சிருந்தேன் ;)

உண்மைத்தமிழன் said...

தான் சேமித்து வைத்திருந்த அத்தனை செல்வங்களையும் இந்த ஒரே திரைப்படத்தில் தொலைத்தார் கவிஞர். கூடவே நண்பர்களையும்தான்..

பட்ட பின்பு தெளிந்து இப்போது வரையிலும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.. கவிஞர்களின் வாழ்க்கையே அலையின் மீது மிதக்கும் படகு போலத்தான்.. அதனால்தான் அவர்களது படைப்புகள் சாதாரண மக்களால் பேசப்படாதவைகளாகவே இருக்கின்றன.

நிஜமா நல்லவன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

கேட்டிருக்கேன் ஆனா நியாபகத்துல இல்லாத பாட்டுஇதெல்லாம்..
எப்படியோ ஒரு போட்டியில் நாங்க ஜெயிச்சா .. ஒரு போட்டியில் நீங்க ஜெயிக்கிறீங்க.. நல்லா போயிட்டிருக்கு.. :)//


மறுக்கா சொல்லிக்கிறேன்...!

கானா பிரபா said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தான் சேமித்து வைத்திருந்த அத்தனை செல்வங்களையும் இந்த ஒரே திரைப்படத்தில் தொலைத்தார் கவிஞர். கூடவே நண்பர்களையும்தான்..//

வாங்க நண்பா

உண்மை தான், இருந்த அளவில் அப்படியே இருந்திருக்கலாம், படம் கூட சொல்லும் படி இல்லாத சொதப்பல் வேறு.

கோபிநாத் said...

என்ன தல ரெண்டே பாட்டு தானா!!??

இரண்டு பாடல்களும் அருமை தல...இது போல எல்லாம் பழைய பாடல்கள் கேட்டது இல்லை...உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி தல ;)

thamizhparavai said...

தலை ஊருக்குப் போயிட்டு வர்றதுக்குள்ள போட்டிய முடிச்சிட்டீங்களே...
நான் 'தென்றல் வரும் தெரு' வரைக்கும் கண்டு பிடிச்சேன்... மேத்தாவைக் காண முடியல...

கானா பிரபா said...

நிஜமா நல்லவரே

வருகைக்கு நன்றி ;)

தல கோபி

ரெண்டு பாட்டை வச்சுத் தானே புதிர்.

தமிழ்ப்பறவை

நீங்க ஊருக்கு போகும் போதே போகுதே போகுதேன்னு பாடினேனே கேட்கலயா ;)

Anonymous said...

தென்றல் வரும் தெரு- படத்தின் பெயர்.படமோ ரம்பம். திரைக்கதை
சரியாக இல்லாத போது, கதையை
இயக்குனருக்கு ஒழுங்காக கையாளத்
தெரியாத போது இழுத்துக் கொண்டே போகும்,
அறுவைப் படமாகத்தான் முடியும்.

கானா பிரபா said...

உண்மைதான் நண்பரே

கவிஞரின் பணச்சேமிப்பு முறையான இயக்குனர் கையில் சேர்ந்திருந்தால் காலம் மறக்காத படமாய் வந்திருக்கும்.