Pages

Saturday, August 9, 2008

நாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா


இன்றைய நல்லைக் கந்தன் ஆலய நாலாந்திருவிழாப் பதிவில் நல்லை முருகன் பாடல் ஒன்று ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றது.
பாடலாசிரியர்: தாயகக் கவி புதுவை இரத்தினதுரை,
இசை வழங்கியவர்: இசைவாணர் கண்ணன்,
பாடலைப் பாடுகின்றார்: இசைக்கலைமணி ஸ்ரீ வர்ணராமேஸ்வரன்.




Get this widget | Share | Track details



வானமரர் துயர் தீர்க்க வண்ண மயில் ஏறி நின்றாய்
தேனமுத வள்ளி தெய்வயானையுடன் கூடி நின்றாய்
நானழுத கண் மழையால் நல்லையெங்கும் வெள்ளமடா
நாயகனே எங்களுக்கு நல்ல வழி சொல்லனடா

வேல் முருகா...அருள் தா முருகா....
வேல் முருகா...அருள் தா முருகா........
மால் மருகா....நல்லை வாழ் முருகா...
மால் மருகா....நல்லை வாழ் முருகா...
வா முருகா....துயர் தீர் முருகா........
மால் மருகா....நல்லை வாழ் முருகா...

நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா.......
எல்லையில் இருந்தினியும் எறிகணையால்
எம்மைக் கொல்லுதல் அரங்கேறுமா.......
நல்லையில் வாழ்கின்ற நாதனின் திருநாட்டில்
தொல்லைகள் குடியேறுமா.......

(வேல் முருகா...அருள் தா முருகா....)

அசுரர் நிலைகள் முன்னர் எரியும் வரையில் நின்று
மலையில் சிரித்திட்ட வேலவா
அதர்மப் படைகள் இன்று எறியும் கணைகள் வென்று
புலிகள் உலவுகின்ற வேளை வா

தமிழைப் பிறப்பித்த வேலவா
விழிகள் திறந்திட்டு ஓடிவா
தமிழைப் பிறப்பித்த வேலவா
விழிகள் திறந்திட்டு ஓடிவா

வேலவா நீ ஓடிவா
வேலவா நீ ஓடிவா

இருவிழி கலங்குது அருள் ஒளி பரவுது
புலிகளின் தலைமையில்
தமிழர்கள் துயர்கெட வரமெடு

நன்றி:
நல்லை முருகன் பாடல்கள் : தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாயகனே எங்களுக்கு நல்ல வழி சொல்லனடா//

அப்படியே ஆகட்டும் காபி அண்ணாச்சி!

//அசுரர் நிலைகள் முன்னர் எரியும் வரையில் நின்று
மலையில் சிரித்திட்ட வேலவா
அதர்மப் படைகள் இன்று எறியும் கணைகள் வென்று
புலிகள் உலவுகின்ற வேளை வா
//

கனல் தெறிக்கும் வரிகள் அண்ணாச்சி!
வேலவா-வேளை வா
என்று சிலேடையும் தெறிக்கிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காபி அண்ணாச்சி
கேள்வி:
நல்லூர் முருகன் கோயிலுக்குள் சட்டை போட்டுப் போகக்கூடாதா என்ன? புகைப்படத்தில் ஆண்கள் எல்லாம் அப்படித் தான் இருக்காங்க போல?

(உங்க கூட நல்லூர் வருவதற்கு முன்னாடியே கேட்டு வச்சிக்கிறேன்;
ஹிஹி! கொஞ்சம் கூச்சம்! திருச்செந்தூருக்கே மேல் துண்டு போத்திக்கிட்டு தான் போவேன் :)))

கானா பிரபா said...

நம்ம ஊர் ஆலயங்கள் பெரும்பாலவற்றில் ஆண்கள் மேலாடையுடன் போக முடியாது. உங்க ஊரில் கூட அப்படித் தான் என்று நினைச்சேன் இதுவரை நாளும்.

நிஜமா நல்லவன் said...

பாடல் நன்றாக இருக்கிறது!

நிஜமா நல்லவன் said...

வேலவா நீ ஓடி வான்னு சொன்ன உடனே கண்ணன் ஓடி வந்திருக்கார்......முதலில்:)

கானா பிரபா said...

நிஜமா நல்லவரே

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் ;)