நடிகர் விக்னேஷின் பேட்டி Chat with Chithra வில் போய்க் கொண்டிருக்கிறது.
பல நாட்களுக்குப் பின்னர் கூடப் பழகிய கூட்டாளியைப் பார்த்தது போலவொரு உணர்வு.
விக்னேஷ் போன்ற நாயகர்கள் வந்த காலத்தில் தான் சொந்தமாகப் பாட்டு கேட்கவும், படம் பார்க்கவும் மாறிய காலம் அது.
சிறு வயதிலேயே விக்னேஷின் தாய், தகப்பன் இறந்து போனதும், முட்டி மோதி வாய்ப்புத் தேடிய கதை எல்லாம் அந்தக் காலத்து சினிமாத் துணுக்குகளாக வந்ததால் இவர் மேல் ஒரு அனுதாபப் பார்வை இருக்கும்.
நடிகர் பிரேம் போலவே ஒரு படத்தில் ஒப்பந்தமாகிப் பின்னர் நீக்கப்பட்ட கதையும் நடந்தது.
வண்ண வண்ணப் பூக்கள் படத்தின் இரண்டாவது நாயகனாக ஒப்பந்தமாகி நீக்கப்பட்ட விக்னேஷ், இதே மாதிரி கிழக்குச் சீமையிலே படத்தில் நீக்கப்பட்ட பிரேமுக்குப் பதிலாக நடித்ததும் முரண்.
அது போலவே பாலாவின் அகிலன் படத்தில் (பின்னாளில் சேது) நடிக்கக் கைகூடாமல் போனது இவருக்கு.
அற்புதமான பாடல்கள் கிடைத்த வகையில் நடிகர் விக்னேஷ் உண்மையில் பெரிய அதிஷ்டக் கட்டை என்று தான் சொல்ல வேண்டும்.
பாரதிராஜாவின் “கிழக்குச் சீமையிலே” படத்தில் “ஆத்தங்கரை மரமே” பாடலும், “பசும்பொன்” படத்தில் “தாமரைப் பூவுக்கும்” என்று
இரண்டு படங்களிலேயே அப்படியொரு நல்வாய்ப்பு.
“ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம் என்னைப் பொறுத்தவரை காவியம்”
இன்று ஜென்ஸீயும் வைப் பண்ணும் “சின்னத்தாயி” நாயகன்,
“நான் ஏரிக்கரை மேலிருந்து” எல்லாம் இவருக்கு வாழ் நாள் வரம்.
விக்னேஷுக்குக் கிடைத்த புது இசையமைப்பாளர்கள் கூட அவருக்கு அருமையான பாடல்களை அளித்தார்கள்.
“அம்மா பொண்ணு” பாடல்களில்
“சுதியோட ஒண்ணா சேருடா”
https://www.youtube.com/watch?v=JFim27Kbmqk
ஏகாந்தன் இசையில் ஒரு மகுடிப்பாட்டு.
இளைய கங்கை இசையில் “மனதிலே ஒரு பாட்டு” படத்தில்
கண்ணே அழகிய கண்ணே
https://www.youtube.com/watch?v=F3WcYVVBPGg
இவற்றில் பெரும்பாலும் எஸ்பிபி பாடியதும் குறிப்பிடத்தக்கது.
இசைஞானி கொடுத்த “ராமன் அப்துல்லா” பாட்டு
“என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே”
https://www.youtube.com/watch?v=QodNZpcNYVg
என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் “காதலி” படத்தில்
“மும்பை காற்றே மும்பை காற்றே”
https://www.youtube.com/watch?v=M8AFpflpp4s
கேட்டுப் பாருங்கள் தேனிசைத் தென்றல் தேவாவும் நிகராக அள்ளித் தெளித்திருப்பார்.
ஹரிஷ் ராகவேந்திரா போன்ற இளையவர்களும் கூட விக்னேஷுக்கு அருமையான பாடல்களைப் பாடியளித்திருக்கிறார்கள் என்பதற்கு
“பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா”
https://www.youtube.com/watch?v=32IH3ELsK-U
உதாரணம் பறையும்.
இதற்கெல்லாம் உச்சமாக ஒரு பாட்டு உண்டு. அந்தப் பாட்டு இடம்பெற்ற திரைப்படம் “செல்லக்கண்ணு”.
விக்னேஷ் பேட்டி என்றால் கண்டிப்பாக இந்தப் படம் பற்றி யாரும் பேசுவார்கள் என்றே எதிர்பார்த்தேன்.
செல்லக்கண்ணு படத்தின் சேலம் உரிமையை வாங்கி அந்தப் படம் பெரு வெற்றி பெற்று 20 லட்சம் லாபம் பார்த்ததாக (இன்றைய கணக்கில் கோடி தாண்டும்) இந்தப் பேட்டியில் விக்னேஷ் குறிப்பிட்டிருந்தார்.
செல்லக்கண்ணு படத்தில் நான் குறிப்பிட்ட அந்தப் பாடல்
“வண்டியில மாமன் பொண்ணு
ஓட்டுறவன் செல்லக்கண்ணு
எங்க வீட்டு ராணி வாரா
எல்லாம் வந்து பாத்துக்குங்க
https://www.youtube.com/watch?v=BZsC-RiejL4
இந்தப் பாடலைப் பொறுத்தவரை எஸ்பிபி & ஸ்வர்ணலதா என்ற இரட்டைக் குதிரைகளை வைத்து தேவா அதகளம் பண்ணியிருப்பார்.
ஒரு மாட்டு வண்டியின் குலுங்கல் சந்தத்தைப் பின் தாளக் கட்டுடன் கொண்டு வருவார். வண்டியின் அடியில் தொங்கும் அந்தக் கட்டை மேலும் கீழுமாக அசைந்து ஒலிக்கும் ஓசை போல.மாட்டு ஆண் பாடகர் வண்டியை ஓட்டிக் கொண்டு, மாடுகளை அரவணைத்து ஒலியெழுப்பி கூடவே ஜோடிப் பாடலாகப் கொடுப்பது ஒரு புதுமை.
தேனிசைத் தென்றல் தேவாவின் உச்சங்களில் இதுவுமொன்று.
எஸ்பிபி & ஸ்வர்ணாவின் ரகளை சொல்லவே வேண்டாம்.
இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் கூடக் கொள்ளை அழகு. விக்னேஷ் & யுவராணி ஜோடியின் அந்த கிராமத்து உடைகள் மாற்றி மாறிப் பாடலோடு அழகுணர்வைக் காட்டும்.
https://www.youtube.com/watch?v=tEVHFiKmsUw
இப்படியான பாடல்களை மீண்டும் பார்க்கும் போது நம் கிராமத்து அந்த அழகிய வாழ்வின் நினைவுகள் தான் மிதந்து வரும்.
கானா பிரபா


