Sunday, July 6, 2008
றேடியோஸ்புதிர் 11 - இந்தப் படம் எந்தப் படம்?
கடந்த சில றேடியோஸ்புதிர் போட்டிகளில் கேட்ட கேள்விகள் ஜீஜிபி என்றும் கஷ்டமான கேள்விகளைக் கேளுங்கள் என்றும் அன்புக்கட்டளை போட்டிருந்தார்கள் சில நேயர்கள். எனவே அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இதோ இந்த வாரக் கேள்வி.
மேலே புகைப்படத்தில் இருக்கும் காட்சி வரும் திரைப்படம் எது? இப்படிக் கேட்டு உங்களை நான் குழப்பத்தில் ஆழ்த்தவில்லை. இதோ சில உப குறிப்புக்கள் தருகின்றேன்.
இரண்டு இசைமேதைகள் இணைந்து இசையமைத்தது இந்தத் திரைப்படம். படத்தின் இயக்குனர் இந்த இரண்டு இசையமைப்பாளரில் ஒருவரை தன்னுடய நிறையப் படங்களில் இசையமைக்க வைத்திருக்கிறார் அப்படி நான் இந்த உபகுறிப்பை கொடுத்திருக்க வேண்டும் ஆனால்//படத்தின் இயக்குனர் இந்த இரண்டு இசையமைப்பாளரை தன்னுடய நிறையப் படங்களில் இசையமைக்க வைத்திருக்கிறார்.// என்று தவறுதலாகப் போட்டு விட்டேன். படத்தின் நாயகன் கூட ஒரு பிரபல இயக்குனரே. சரி இனி இந்தத் திரைப்படம் எது என்று கண்டுபிடியுங்களேன் ;-)
பலர் வருந்திக் கேட்டதால் மேலும் இரண்டு க்ளூக்கள்.
இந்தப் பட நாயகன் ஒரு இயக்குனர் கூட என்றேன் அல்லவா. அவர் 80 களில் தனது தனித்துவமான நடிப்பால் மிளிர்ந்தவர். பிரபல இயக்குனரின் உதவி இயக்குனராக இருந்தவர்.
இந்தப் படத்தின் தலைப்பு இந்தப் படத்தின் இயக்குனரின் வேறொரு படத்தின் பாடலின் முதல் அடியாக அமைந்திருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
எனக்குத் தெரியும் விடையை சொன்னால் சரியா இல்லையானு சொல்றேன்...
வ்ர்ட்டா...
என் இனிய பொன்னிலாவே....
பாலுமகேந்திரா, பாண்டியராஜன்..
மெல்லிசை மன்னர், இசைஞானி
சரிதானே? :-)
கானாப்ரபா..இதென்ன சோதனை?
கொடுத்தா ரொம்ப ஈசி இல்லேன்னா இவ்ளோ கஷ்டமாவா இதெல்லாம் நலலால்ல ஆமா:) சரி யோசித்து மறுபடி வரேன்
என்ன பிரபா அண்ணே அதுக்குன்னு இப்படியா கேள்வி கேட்ட்குறது?
ம்ம் அடுத்த பதிவிலயாவது ரொம்ப கஷ்டமான கேள்வியா இருக்குதான்னு பார்ப்போம் :)
தல
இதெல்லாம் ரொம்ப ஓவரு...அவ்fவ்வ்வ்வ்வ் ;(
ஆளையும் மூஞ்சியயும் பாருங்க. கொஞ்சம் சுலுவா கேட்கக்கூடாது. சரி சரி, நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்.
விக்னேஸ்வரன்
முதல்ல சொல்லுங்களேன் ;-)
ஷைலஜா
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ;-)
ஆயில்ஸ்
உங்களுக்கே இது ஓவரா தெரியல. சரி விடை சொல்லிப்பாருங்கண்ணே.
அண்ணா இதெல்லாம் ரொம்ப ஓவரூ!!
அண்ணா ப்ளீஸ் வேற க்ளூ கொடுங்க.
சரி ஒத்துக்கறேன் இது கஷ்டமான புதிர் தான் ..விடையைப் போடறதுக்குள்ள நினைவுக்கு வந்துட்டா சொல்றேன்..
இரண்டு பேரு இசைன்னா மெல்லத்திறந்தது கதவு.. ஆனா பார்த்தா மோகன் மாதிரியும் இல்ல.. அவ்ரு இயக்குனர் தான் ஆனா ப்ரபல இயக்குனர் இல்ல.. ஹ்ம்.. :(
//கோபிநாத் said...
தல
இதெல்லாம் ரொம்ப ஓவரு...அவ்fவ்வ்வ்வ்வ் ;(//
என்ன தல, நீங்களுமா, உங்களாலும் முடியாதா?
இளா
இன்னும் ஒரு நாள் அவகாசம் இருக்கு, இன்னும் முயற்சி செய்யுங்க
சினேகிதன்
இப்போது மேலதிகமாகவும் சில குறிப்பைக் கொடுத்துள்ளேன்.
டார்லிங் டார்லிங் டார்லிங் தவறு அதே பெயரில் பாடல் இருந்தாலும் இரு படங்களும் வேறு இயக்குனர்கள்.
முத்துலெட்சுமி
உங்க கணிப்பில் எங்கோ ஒரு இடத்தில் விடைக்காக நெருங்கி வரும் இடமும் இருக்கு. ஆனா இந்த விடை தவறு.
இதுவரை ஒரே ஒரு ஆள் சரியா சொல்லியிருக்கார். அவர் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னே கேட்ட பாடல் தான் இது.
அஸ்கு புஸ்கு, அவர் யாரென்று சொன்னா எல்லாரும் அவரின் வாயை பிறாண்டி விடுவீங்களே, மீ தி எஸ்கேப்பு ;-)
படம் : என் இனிய பொன் நிலாவே!
டைரக்டர் : பாலு மகேந்திரா
நடிப்பு : பாண்டியராஜன், மெளனிகா
இசை : இளையராஜா, MS விஸ்வநாதன்
///கானா பிரபா said...
இதுவரை ஒரே ஒரு ஆள் சரியா சொல்லியிருக்கார். அவர் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னே கேட்ட பாடல் தான் இது.
அஸ்கு புஸ்கு, அவர் யாரென்று சொன்னா எல்லாரும் அவரின் வாயை பிறாண்டி விடுவீங்களே, மீ தி எஸ்கேப்பு ;-)///
கானா அண்ணே! அவரு ஜி.'றா' வா?.... சும்மா ஜொல்லுங்கண்ணே! அவரை பிறாண்ட மாட்டோம்... ;))))
பன்னீர் புஷ்பங்கள்?
என்னால் சரியாக அனுமானிக்க இயலவில்லை. எனினும் எனது ஞாபகக்குறிப்புகளை கொண்டு பார்க்கும்போது....
படம்: ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன்
நடிகர்: திரு. ஆர். பாண்டியராஜன்
படம்: ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன்
நடிகர்: திரு. ஆர். பாண்டியராஜன்
தமிழ்பிரியன்
இப்போதைக்கு 2 பேர் சரியா சொல்லியிருக்காங்க, சொல்லமாட்டேனே ;-)
மைபிரண்ட்
பன்னீர்புஷ்பங்கள் படத்துக்கு ஒரு ஆள் தான் இசை, அது இளையராஜா
சென்ஷி
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் படத்தின் இசை கங்கை அமரன் மட்டுமே.
இந்தப் படத்துக்கு 2 பெரிய இசையமிப்பாளர்கள், அவர்கள் சேர்ந்தே இசையமைத்தபடங்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவை.
சம்சாரம் அது மின்சாரம்,சங்கர் கணேஷ் , இயக்குனர் விசு
சம்சாரம் அது மின்சாரம் தவறு. நான் குறிப்பிட்டது போன்று இந்த இரு இசையமைப்பாளர்களும் சேர்ந்த படங்கள் சில.
1. paattu padava
சென்ஷி
பாட்டு பாடவா படத்துக்கு ராஜா மட்டுமே இசை. படத்தின் நாயகர்கள் எஸ்.பி.பி, ரகுமான் இருவரும் இயக்குனர்கள் இல்லையே
தோல்வியை ஒத்துக்கிறேன்.. :( ஏன்னா இந்த அளவு சினிமா ஜிகே எனக்கு இல்ல..
1. படத்தின் இயக்குனர் இந்த இரண்டு இசையமைப்பாளரை தன்னுடய நிறையப் படங்களில் இசையமைக்க வைத்திருக்கிறார்.
2. இந்தப் படத்துக்கு 2 பெரிய இசையமிப்பாளர்கள், அவர்கள் சேர்ந்தே இசையமைத்தபடங்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவை
நிறைய Vs விரல்விட்டு எண்ணக் கூடியவை???
வணக்கம் ஞானராஜா
//படத்தின் இயக்குனர் இந்த இரண்டு இசையமைப்பாளரை தன்னுடய நிறையப் படங்களில் இசையமைக்க வைத்திருக்கிறார்.//
அது இந்த இரண்டு இசையமைப்பாளர்களில் ஒருவரை தன்னுடைய நிறையப் படங்களில் இசையமைக்க வைத்திருக்கிறார் அப்படி வந்திருக்கணும். அந்த உபகுறிப்பு மட்டும் தப்பா கொடுத்திட்டேன். :(
மற்ற எல்லாமே இந்தப் படத்தைக் கண்டு பிடிக்க உதவுமே.
போட்டியில் பங்கெடுத்தவர்களில் ஜி.ராகவனும் தமிழ் பிரியனும் மட்டுமே சரியான பதில் கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ;)
Post a Comment